களைக்கொல்லியிலிருந்து பயிர்களை காத்திட பிளாஸ்டிக்

கச்சிராயபாளையம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயிர்களை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி களைக்கொல்லி மருந்து தெளிக்கும் புது உக்தியை விசாயிகள் கையாளுகின்றனர்.

  • தற்போது விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் ஆட்களின் கூலியும் உயர்ந்துள்ளது.
  • இதனால் விவசாயிகள் வயல்களில் உள்ள களைகளை கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
  • மரவள்ளி சாகுபடியில் ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
  • இதனால் விசாயிகள் பல புதிய வழிமுறைகளை கையாளுகின்றனர்.
  • பிளாஸ்டிக் மூடியை கொண்டு பயிர்களை மூடி பின்னர் களைக்கொல்லி பயன்படுத்தி வந்தனர்.
  • பிளாஸ்டிக் மூடிகளின் விலை அதிகம் என்பதால் சொந்தமாக வாங்காமல் ஒரு மூடிக்கு 50 பைசா வாடகை கொடுத்து பயன்படுத்தி வந்தனர்.
  • தற்போது விவசாயிகள் குறைந்த செலவில் பிளாஸ்டிக் கவர்களை கொண்டு மரவள்ளி செடிகளை மூடி ரசாயன மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
  • இதன் மூலம் பணம் மிச்சமாவதுடன் அதே கவர்களை இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும் என்கின்றனர்.
  • 150 ரூபாய்க்கு 1 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் வாங்கினால் போதுமானதாக இருப்பதால் இந்த முறை விவசாயிகளிடையே பெறுத்த வரவேற்பை பெற்றுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *