பசுமை விகடன் – 25 Jun, 2015

வீட்டுக்குள் விவசாயம்: நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில்… வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன.

ஏக்கருக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம்… பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பப்பாளி: குறைவான தண்ணீர், வேலையாட்கள் பற்றாக்குறை, தொடர் அறுவடை… போன்ற காரணங்களால், பழ சாகுபடியில் விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரத்தில், வரத்துக்குறைவான காலங்களில், சந்தைக்கு வருவது போல திட்டமிட்டு பழ சாகுபடி செய்தால், நல்ல லாபம் பார்க்க முடியும். பல விவசாயிகள் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு லாபம் ஈட்டுகிறார்கள். அந்த வகையில், சீசன் இல்லாத காலங்களில் பப்பாளியைச் சந்தைப்படுத்தி நல்ல லாபம் பார்த்து வருகிறார், சக்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்…

‘சிறப்பான சிறுதானியங்கள் இருக்க, நூடுல்ஸ் எதற்கு?: 

நிமிடங்களில் தயாராகும் ‘மேகி’ நூடுல்ஸ் எனும் துரித உணவில் உடலுக்கு ஒவ்வாத ஈயம் அதிக அளவில் கலக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த உணவு படிப்படியாக பல்வேறு மாநிலங்களிலும் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஆனால், இந்தத் தடை இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பதுதான் கேள்விக்குறி.

அதிகமாகத் துன்பத்துக்கு ஆளாகும் மனிதன், ‘நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்’ என்று தன்னைத்தானே நொந்து கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், நூடுல்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிட்டாலே நம் உடலின் ஆரோக்கியம் நொந்துவிடும் என்பது நிதர்சனம் என்பது தற்போது தெள்ளத்தெளிவாகி விட்டது……

35 ஏக்கர்… ரூ.16 லட்சம்…பாரம்பர்ய நெல்லில் அபரிமிதமான மகசூல்…யற்கை விவசாயத்துக்கு மாறும் பலரும் பாரம்பர்ய ரகங்களைத்தான் தேடித்தேடி சாகுபடி செய்து வருகிறார்கள். இருந்தாலும், பலருக்கும் உள்ள ஒரு சந்தேகம்… ‘பாரம்பர்ய ரகங்களில் அதிக மகசூல் கிடைக்குமா?’ என்பதுதான். வீரிய ரகங்களுக்கு இணையாக பாரம்பர்ய ரகங்களிலும் மகசூல் கிடைக்கும் என்பதைப் பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். அது பற்றிய செய்திகளை அவ்வப்போது ‘பசுமை விகடன்’ தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இணைகிறார், தஞ்சாவூர்-நாகப்பட்டினம் மாவட்டங்களின் எல்லையில் குத்தாலம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீராம்….

மற்றும் ரெகுலர் தொடர்களும் 26-6-2015 பசுமை விகடன் .இதழில்…


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *