மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி!

கொடைக்கானல்:கொடைக்கானல் மேல்மலை கிராமமான குண்டுப்பட்டியில் ‘பல வண்ண கேரட்’ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இக்காலத்தில் இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ‘கேரட் உட்பட மலையில் விளையும் காய்கறிகளை இதே ரீதியில் சாகுபடி செய்ய விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.அதிலும் பல வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி என்பது இப்போது ‘ட்ரெண்ட்’ ஆகி வருகிறது.

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள கிராமம் குண்டுப்பட்டி. இங்கு ”கூக்கால் பார்ம்ஸ்” என்ற பண்ணை நிலத்தில் கேரட், பீட்ரூட்டை தற்போது மூன்று வண்ணங்களில் விளைய செய்யும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இங்கு ‘பர்பிள், மஞ்சள், ஆரஞ்சு’ ஆகிய வண்ணங்களில் தோட்டத்தில் விளைந்துள்ளது. இவை மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இதுதவிர 2 வண்ணங்களில் முட்டைக்கோஸ் விளைகிறது. மேலும் புரோக்கோலி, பீன்ஸ், காலிபிளவர் ஆகியவை இயற்கை விவசாயத்தில் பயிரிடப்பட்டுள்ளது.

Courtesy: Dinamalar

இயற்கை விவசாயம்

கூக்கால் பார்ம்ஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: குண்டுப்பட்டி பகுதியில் நல்ல சீதோஷ்ணநிலை நிலவுகிறது. ரசாயன மருந்தை பயன்படுத்தாமல் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறேன். மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் மற்றும் புரோக்கோலி, பீன்ஸ், காலிபிளவர், முட்டை கோஸ் பயிரிடுகிறேன்.

இவற்றுக்கு பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்ற இயற்கை உரங்களையும், சாணம், கோமியம் போன்றவற்றையும், பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்க பூண்டு, மிளகாய் அரைத்து பயிர்களில் ஸ்பிரே செய்கிறோம். இயற்கை சாகுபடி காய்கறிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது, என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *