பிரவுன் மற்றும் பச்சை நிறங்களை 1:2 விகிதத்தில் சேர்க்க வேண்டும்.
பிரவுன் என்பது என்ன?
- காய்ந்த இலைகள்- Dried leaves
- மர போடி -Sawdust and woodchips (make sure these are from untreated wood)
- சிறுதுகள் ஆக்கப்பட்ட செய்தி தாள்கள், paper – Shredded black and white newspaper
- முட்டையின் package – Egg cartons
- அட்டை – Cardboard
- இறந்த காய்ந்த செடிகள் – Dead, dried-out plants (disease-free)
- மரத்தின் பட்டை – Tree bark
- வைக்கோல் – Straw
- நிலக்கடலை தோலி – Peanut shell
பச்சை என்றால் என்ன?
- காய்கறி, பழ மிச்சங்கள் – Fruit and vegetable kitchen scraps
- காபி, டீ பொடி – Coffee grounds and tea bags
- தோட்டத்தில் வெட்டப்பட்ட பச்சை பாகங்கள் – Green garden cuttings
- பிரெஷ் இலைகள் Fresh leaves and flowers
- வெட்டப்பட்ட புல் – Grass clippings
பிரவுன் – கார்பன் கொடுக்கிறது. பச்சை – நைட்ரோஜென் கொடுக்கிறது
இவற்றை முடிந்த வரை சிறு சிறு பாகங்களாக வெட்டி போடுவது நல்லது. இப்படி செய்தால் சீக்கிரம் கம்போஸ்ட் தயாராகும்.
கொம்போஸ்ட்டை திருப்பவது..
- 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை கொம்போஸ்ட்டை ஒரு குச்சி மூலம் கலந்து விடவும். புதிதாக போடப்பட்ட பொருட்கள் கீழே செல்ல வேண்டும்
- நீங்கள் ஒன்றும் சேர்க்கவிட்டாலும் கூட இந்த திருப்பதலை நிறுத்த கூடாது. இப்படி செய்வதால் கம்போஸ்ட் ஆக்ஸிஜன் பெற்று சீக்கிரம் உரமாகிறது
- கம்போஸ்ட் காய்ந்து போன மாதிரி தெரிந்தால் சிறிது நீரை தெளிக்கவும்
கம்போஸ்டில் நாற்றம் வந்தால் என்ன செய்வது?
கொம்போஸ்ட்டை அடிக்கடி திருப்பி வந்தால் நாற்றம் வராது. நாற்றம் வருவதற்கு காரணம் காற்றிலா பாக்டீரியா வளர்வதே. திருப்புவதால் இவை இறக்கின்றன. கம்போஸ்ட் அம்மோனியா மாதிரி நாற்றம் எடுத்தல் நீங்கள் பச்சை அதிகம் சேர்த்து இருக்கீர்கள் என்று அர்த்தம். அப்படி என்றால் சிறிது பிரவுன் சேருங்கள் .சிறிது மண்ணை மேலே தூவுவதால் நாற்றம் நிற்கும்.
நிச்சியம் கம்போஸ்டில் அசைவ பொருட்களையோ, எண்ணெய் பொருட்களையோ சேர்க்காதீர். எலி, பூச்சிகளை வரவேற்கும்
கம்போஸ்ட் கருப்பாக வாசனை எதுவும் இல்லாமல், ஒட்டிக்கொள்ளாமல் இருந்தால் உபயோகத்திற்கு ரெடி என்று அர்த்தம்!
மேலும் விவரம் அறிய.. Foodprint
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்