இயற்கை முறை நிலகடலை சாகுபடி டிப்ஸ்

 • நிலக்கடலையோடு தட்டைப்பயிர் வகையை ஊடுப்பயிராக பயிரிட்டால், சிவப்பு கம்பளி புழுவை கவரும் செடியாக தட்டைப்பயிறு இருக்கும்.
 • உலர் களத்தில் நிலக்கடலையை காயவைத்து, அதை, மரக்கட்டைக் கொண்டு அடிப்பதால் கடலையை பிரிக்கலாம்.
 • மணல் கலந்த மண்ணோ நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில், அங்கு குறைந்த அளவே பருப்புகளை கடலை உருவாகும்.
 • மணல் கலந்த மண்ணே  நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில்  அங்கு குறைந்த  அளவே பருப்பு இல்லா கடலை உருவாகும்.
 • வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், அது சிவப்பு கம்பளிப்புழு கவரும் செடியாகிவிடும்.
 • இரவு வேளையில் நிலக்கடலை வயலுக்கு அருகில் பல இடங்களில் வைக்கோல் எரித்தால், அதன் அருகில் வைத்திருக்கும் நீரிலோ ஆமணக்கு கலந்த நீரிலோ, தீ வெளிச்சத்தில் கவரப்பட்ட பூச்சிகள் விழும்.
 • சுண்ணாம்பு கரைசலைத் தெளிப்பதால், இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
 • தண்ணீரை தெளிப்பதால் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
 • புகையிலை வெட்டுப்புழுவின் தாக்குதலைக் குறைக்க ஆமணக்கு செடியை வரப்பு பயிராக பயிரிடவேண்டும்.
 • கோடை உழவு செய்வதால், சிவப்பு கம்பளிப்புழுவின் கூட்டுப்புழுவை வெளியேற்றி அழிக்கமுடியும்.
 • 10 கிலோ / சோற்றுக் கற்றாழையை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து தெளிப்பதால் சிவப்பு கம்பளிப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
 • நிலக்கடலையில் வட்ட ‘மொசைக்’ நோயைக் கட்டுப்படுத்த காய்ந்த சோளம் / தென்னை ஓலையை தூளாக்கி 600 செ வெப்பநிலையில் தண்ணீரில் ஒரு மணி நேரம் கொதிக்க வைத்துப்பின் வடிகட்டி அதில் நீர் கலந்து விதைத்த 10 ஆம் நாள்  20 நாள் என இருதடவைத் தெளிப்பது நல்லது.
 • இரண்டாவது அல்லது மூன்றாவது நீர்ப்பாசனம் செய்யும்போது பாசன நீருடன் வேப்பஎண்ணெயை கலந்து விடுவதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
 • ஏக்கருக்கு 6லி வேப்ப எண்ணெய் தெளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
 • 4 சதவீதம் வேப்பஎண்ணெய் கரைசல் அல்லது 6 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதால் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

நிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி... மயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் வெள...
நிலக்கடலையில் அதிக மகசூலுக்கு பயிர் எண்ணிக்கை அவசியம்... நிலக்கடலையில் கூடுதலான மகசூல் எடுக்க பயிர் எண்ணிக்...
நிலக்கடலையில் அதிக இலாபம் பெற வழிகள்... நிலக்கடலையில் அதிகம் இலாபம் பெற தருமபுரி விதைச்...
நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை... வேரழுகல் நோயானது 'மேக்ரோபோமினா பேசியோலினா' என்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *