திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தில் வழிமுறைகள்

திருத்திய நெல் சாகுபடியில் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்று சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் என்.மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

  • நடவு வயலை துல்லியமாக சமன் செய்து, தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • 14 நாள்கள் ஆன நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • 3 கிலோ விதைகளைக் கொண்டு ஒரு ஏக்கரில் நடவு செய்யலாம்.
  • ஒரு ஏக்கர் நடவு செய்ய 40 ச.மீ. நாற்றங்கால் தேவை.
  • நாற்றங்காலின் மீது பாலித்தீன் விரிப்புகளை பரப்பி மரச்சட்டங்களை வைத்து மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • அதில் மண் மற்றும் தொழு உரத்தினை நிரப்பி விதைக்க வேண்டும்.
  • 25 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
  • வயலில் நீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
  • 2.5 செ.மீ.க்கு அதிகமாக நீரை வயலில் நிறுத்தக் கூடாது.
  • நடவு செய்த 10-ம் நாள் முதல் 10 நாள்களுக்கு கோனோவீடர் கருவி மூலம் களையெடுக்க வேண்டும்.
  • இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தேவையான தழைச்சத்தினை மேல் உரமாக இட வேண்டும்.
  •  உயர் விளைச்சல் நெல் ரகங்கள் மற்றும் வெள்ளை பொன்னி ஆகியவற்றை வேளாண் விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி: தினமணி

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

திருந்திய நெல் சாகுபடி போட்டி... திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் த...
திருந்திய நெல் சாகுபடி முறையில் கூடுதல் மகசூல்... திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்...
ராஜராஜன் 1000 சாகுபடி டிப்ஸ் "ராஜராஜன் 1000" என்ற செம்மை நெல் சாகுபடி விவசாயிகள...
நெல் சாகுபடியில் ஒற்றை நாற்று நடவு செயல் முறைகள்... நெல் சாகுபடியில் புதிய ஒற்றை நாற்று நடவு மூலம் செம...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *