திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தில் வழிமுறைகள்

திருத்திய நெல் சாகுபடியில் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்று சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் என்.மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

  • நடவு வயலை துல்லியமாக சமன் செய்து, தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • 14 நாள்கள் ஆன நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • 3 கிலோ விதைகளைக் கொண்டு ஒரு ஏக்கரில் நடவு செய்யலாம்.
  • ஒரு ஏக்கர் நடவு செய்ய 40 ச.மீ. நாற்றங்கால் தேவை.
  • நாற்றங்காலின் மீது பாலித்தீன் விரிப்புகளை பரப்பி மரச்சட்டங்களை வைத்து மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • அதில் மண் மற்றும் தொழு உரத்தினை நிரப்பி விதைக்க வேண்டும்.
  • 25 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
  • வயலில் நீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
  • 2.5 செ.மீ.க்கு அதிகமாக நீரை வயலில் நிறுத்தக் கூடாது.
  • நடவு செய்த 10-ம் நாள் முதல் 10 நாள்களுக்கு கோனோவீடர் கருவி மூலம் களையெடுக்க வேண்டும்.
  • இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தேவையான தழைச்சத்தினை மேல் உரமாக இட வேண்டும்.
  •  உயர் விளைச்சல் நெல் ரகங்கள் மற்றும் வெள்ளை பொன்னி ஆகியவற்றை வேளாண் விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *