மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள்

மா மர கவாத்து தொழிற்நுட்பங்கள்

  • சிறிய அளவிலான குச்சிகள் மற்றும் நுனித்தண்டை வெட்டுவதற்கு வெட்டு கத்தரியையும், ஒன்று முதல் இரண்டு அங்குலம் வரை அகலமுள்ள கிளைகளை வெட்டுவதற்கு கவாத்து ரம்பத்தையும், இரண்டு முதல் இரண்டரை அங்குலம் அகலமுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு கிளை வெட்டும் கத்தியையும் பயன்படுத்தலாம்.
  •  மா பெரிய மரக்கிளைகளை ரம்பம் மூலம் வெட்டும் போது அந்த கிளையின் அடிப்பகுதியில் இருந்து 20 முதல் 40 மி.மீ வரை மேல்நோக்கி வெட்ட வேண்டும்.
  • பிறகு மேலிருந்து வெட்ட வேண்டும். இவ்வாறு செய்யும் போது எளிதாகவும்,பிசிறுகள் இல்லாமலும் கிளைகளை வெட்ட முடியும்.
  •  சாய்வான கோணத்தில் கிளைகளை வெட்டும்போது வெட்டிய பகுதியில் நீர்த்துளிகள் தேங்காமலும், அழுகல் ஏற்படாமலும் இருக்கும்.
  • பெரிய கிளைகள் உள்ள மரத்தை வெட்டும் போது சிறு, சிறு பகுதிகளாக வெட்ட வேண்டும்.
  • சிறிய துண்டுகளாக கீழே விழும் போது மற்ற கிளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
  • கவாத்து செய்தபின் வெட்டப்பட்ட பாகத்தில் பூசணக்கொல்லிமருந்தை(போர்டோ கலவை) பசை போலத் தடவ வேண்டும்.
  • இல்லையென்றால் வெட்டுக்காயத்தின் வழியே பூசணங்கள் நுழைந்து நோய் உண்டாகும்.

நன்றி: ஜம்ஷெட்ஜி டாட்டா Virtual academy – M.S சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மாம்பழங்களை பாதுகாக்க பயோகோட்டிங் முறை!... முக்கனிகளில் ஒன்று மா. இது கோடைகாலத்தில் மட்டுமே க...
தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம்... தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் பங்கேற்று பயன்பெறலாம்...
மாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி?... மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. காய்கள் கடைகளுக்க...
மா தத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிகள்... நோய்க்கான அறிகுறிகள்மா தற்போது பூத்து உள்ளதா? ...

One thought on “மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *