வாழை சாகுபடி டிப்ஸ் – II

 • பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும்.
 • விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும்.
 • இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே.
 • 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்து கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6ம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும்.
 • இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, நீர்த்த புகையிலை கரைசலை தெளிக்கலாம்.
 • அரை அடி உயரமுள்ள இரண்டரை கிலோ எடையுள்ள கிழங்கை விதைக்க பயன்படுத்தவேண்டும்.
 • கிழங்கு அழுகல் நோயை தடுக்க, வாழைக் கிழங்கை 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்த கரைசலில் மூழ்கவைத்து பின் நடவு செய்யப்பயன்படுத்த வேண்டும்.
 • கடலை புண்ணாக்கு இட்டால் வாழையை அதிக மகசூல் கிடைக்கும்.
 • வாழைக் குலையைச் சேமிக்கும் போது, ஏற்படும் வாழைப்பழ அழுகலை கட்டுப்படுத்த, வாழைக் குலை காம்பை 10 % துளசி இலைச்சாறு கரைசலிலோ 1% வேப்ப எண்ணெய் கரைசலிலோ நனைத்து பின் சேமிக்கவேண்டும்.
 • செண்டு மல்லியை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானாக செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும்.
 • சித்தகத்தி மரத்தை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானால் செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தைத் தடுக்கும்.
 • வாழை சீப்பு உள்ள கலனில் வேப்பிலையை இட்டால், 4 நாட்களில் பழுத்துவிடும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில்நுட்பங்கள்... வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில் நுட்பங்களை...
அழுகும் வழைகன்றை என்ன செய்வது?... முதலில் அழுகிய வாழை கன்றின் குருத்தை வெட்டி எடுத்த...
வாழை சாகுபடியில் சொட்டு நீர் பாசனத்தில் பயன்கள்... சொட்டு நீர் பாசனத்தால் வாழையில் நல்ல பலன் பெறலாம் ...
ஈரமண்ணில் இளமஞ்சள் கிழங்கு! "மண்ணு மாதிரி இருக்கியே' என தப்பித் தவறி கூட யாரைய...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *