இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி

இதுவரை நாம், இரண்டு வகையான இயற்கை பூச்சி கொல்லிகளை தெரிந்து கொண்டோம்.

போநீம் எனப்படும் பூச்சி கொல்லி, சென்னையில் உள்ள லயோலா காலேஜில் உள்ள பூச்சி ஆராய்ச்சி நிறுவனம் கண்டு பிடித்தது. இன்னொன்று, அரளி விதை மூலம் செய்ய படுவது.

இப்போது, இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி என்ற ஊரில் உள்ள ராசி இயற்கை பார்மில் வேலை செய்யும் ராஜரீகா என்பவர் புதிதாக “ஐந்து இலை மருந்து” கண்டு பிடித்து அவருடைய தோட்டத்தில் பயன் படுத்தி வருகிறார்.
எருக்கு,  காடு ஆமணக்கு, வேம்பு, நொச்சி, ஆடாதோடை, ஆகியவற்றில் இலைகளை ஒவோவோன்றும் ஒரு கிலோ எடுத்து அரைத்து அதனுடன், ஐந்து லிட்டர் பசு மாட்டு மூத்திரம் சேர்க்கவும். இதனுடன், ஐந்து லிட்டர் நீர் சேர்த்து, ஐந்து நாட்கள் ஒரு இடத்தில வைக்கவும். அதன் பின்பு, அந்த நீரை எடுத்து, அரை லிடேருடன் பத்து லிட்டர் நீர் சேர்த்து இலைகளுக்குதெளிக்கவும்.

திருமதி ராஜரீகா இந்த முறை நன்றாக பூசிகளை கட்டு படுத்துவதாக சொல்கிறார்.

மேலும் விவரங்களுக்கு,

அவரை அணுக வேண்டிய முகவரி: ராசி இயற்கை விவசாய பண்ணை, முத்துபட்டி, எ. சிறுவயல் போஸ்ட், சிவகங்கா மாவட்டம், தமிழ்நாடு. மொபைல்: 09865582142 தொலைபேசி: 04565284937

நன்றி: ஹிந்து நாளிதழ் (ஆங்கிலத்தில்)


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *