“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 ஆகஸ்ட் 16ம் தேதி, இயற்கை வேளாண்மை குறித்து ஒரு இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
- நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 16ம் தேதி, இயற்கை வேளாண்மை எனும் தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்க உள்ளது.
- பயிற்சியில், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்கள், இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- பயிற்சியில், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
- விருப்பமுள்ளோர், நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் நிலைய வளாகத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 15ம் தேதிக்குள், நேரில் வந்தோ அல்லது, 04286266345 என்ற ஃபோன் எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்