“”தாளடி நடவு பயிர் மழையால் பாதிக்கப்படாமல் இருக்க இயற்கை முறை தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்,” என ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
- திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை முடிந்து தற்போது தாளடி சாகுபடி பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
- கடந்த மாதம் 25ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. தாளடி நடவு செய்து வரும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கான நாற்றுக்கு ஐந்து லிட்டர் பஞ்சகவ்யா, ஒரு கிலோ சூடோமோனாஸ் 100 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.
- இதை ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருந்து நாற்றின் வேர் பகுதியை இந்த பஞ்சகவ்யா கலவையில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
- அப்போது வேர் அழுகல் நோய், அஸ்வினி தாக்குதல் போன்ற நோய்களுக்கு எதிர்ப்பு தியாகவும், கனமழையில் குறிப்பட்ட நாட்கள் வரை அழுகாமல் பயிர்களை பாதுகாக்க முடியும்.
- மேலும் தாளடி நாற்றில் தொடர் மழை காரணமாக பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
- தற்கு காலை பணி பதத்தில் நாற்று முழுவதும் நன்கு படும் வகையில் வசம்பு தூளை தெளிக்க வேண்டும். வசம்பு தூள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் கிடைக்கிறது.
- மேலும் பஞ்சகவ்யா செயல் விளக்கத்துக்காக ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணையில் ஒரு லிட்டர் பஞ்சகவ்யா இலவசமாக பெற்று கொள்ளலாம்.
மேலும் தகவலுக்கு 09443320954 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்