பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை

பஞ்சகாவ்யா தெளிக்கும் முறை

கரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் 3% கரைசல் மிகவும் பயன்பாடு உள்ளது. ஒவ்வொரு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை சேர்த்துப் பயன்படுத்தினால் அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது. 10 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் தெளிப்பிக்கு 300 மி.லி/நொடி அளவு தேவைப்படும்.
மின் தெளிப்பானில் தெளிக்கும் போது வண்டல்கள் கீழே தங்கிவிடும். கைகளால் இயக்கப்படும் தெளிப்பானில் பெரிய துளைமுனை உள்ள தெளிப்பானை பயன்படுத்தவும்.

பாய்வு முறை

பஞ்சகாவ்யா கரைசலை நீர்ப் பாசன முறையில் 50 லி/ஹெக்டர் என்ற அளவில் கலந்து சொட்டுப்பாசனம் அல்லது பாய்வுப் பாசன முறையில் இதனை பாய்ச்சவும்.

விதை நாற்று நேர்த்தி

நடவு செய்வதற்கு முன்பு விதைகளை முக்கி வைக்க அல்லது நாற்றுகளை அமுக்கி வைக்க 3% பஞ்சகாவ்யா கரைசல் பயன்படுத்தப்படுகின்றது.

20 நிமிடங்கள் முக்கி வைத்தால் போதும், மஞ்சள், பூண்டு மற்றும் கரும்பு வேர்த்துண்டுகளை நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் இந்தக் கரைசலில் முக்கி வைக்க வேண்டும்.

விதை சேமிப்பு

விதைகள் உலர்வதற்கு முன்பும், சேமித்து வைப்பதற்கு முன்பும் 3% பஞ்சகாவ்யா கரைசலில் முக்கி வைக்கவும்.

1.
முன் பூர்க்கும் பருவம் 15 நாட்களுக்கு ஒரு முறை, பயிரின் கால இடைவெளி பொருத்து 2 தெளிப்பு தெளிக்கவும்
2. பூக்கும் மற்றும் இரு புறமும் வெடிகனி பருவம் 10 நாட்களுக்கு 2 தெளிப்பு
3. பழம்/இருபுறமும் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அடையும் பருவம் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அமையும் போது ஒரு முறை தெளிக்கவும்

வெவ்வேறு பயிர்களில் பஞ்சகாவ்யாவை பயன்படுத்தப்படும் காலநிலை பின்வருமாறு

பயிர்
கால அட்டவணை
நெல் 10,15,30 மற்றும் 50வது நாட்களில் நாற்று நடுவதற்கு முன்பு பயன்படுத்தவும்
சூரியகாந்தி விதைத்தபின் 30, 45 மற்றும் 60 வது நாட்களில் தெளிக்கவும்
உளுத்தப்பருப்பு மானாவாரி: முதல் பூர்ப்பிற்கும், பூர்த்தி பின் 15 நாட்கள் கழித்தும் பயன்படுத்தவும்
நீர்ப்பாசனம்: விதைத்தலுக்கு பின் 15, 25 மற்றும் 40வது நாட்களில் தெளிக்கவும்
பச்சைப்பயிறு விதைத்தலுக்குப் பின் 15, 25, 30, 40 மற்றும் 50 வது நாட்களில் பயன்படுத்தவும்
ஆமணக்கு விதைத்தலுக்குப் பின் 30 மற்றும் 45வது நாட்களில் பயன்படுத்தவும்
நிலக்கடலை விதைத்தலுக்குப் பின் 25 மற்றும் 30வது நாட்களில் பயன்படுத்தவும்
வெண்டை விதைத்தலுக்குப் பின் 30,45, 60 மற்றும் 75வது நாட்களில் பயன்படுத்தவும்
முருங்கை பூர்ப்பதற்கு முன்பும் மற்றும் இரு புறமும் வெடிக்கனி உருவாகும் நேரத்திலும் பயன்படுத்தவும்
தக்காளி நாற்றங்காலில் இருக்கும் பொழுதும் விதைத்த பின் 40வது நாளிலும் பயன்படுத்தவும் 1% கரைசலில்12மணி நேரத்திற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும்
வெங்காயம் விதைத்தலுக்கு பின் 0,45 மற்றும் 60வது நாட்களில் பயன்படுத்தவும்
ரோஜா கவாத்து செய்யும் போதும், மொட்டுகள் வெளி வரும் போதும் பயன்படுத்தவும்
மல்லிகை மொட்டு அரும்பும் போது பயன்படுத்தவும்
வனிலா கரணைகளை விதைப்பதற்கு முன் பஞ்சகாவ்யாவில் முக்கி வைக்க வேண்டும்

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை

  1. ஷாஜத் says:

    IT A FANTASTIC INFORMATION, WE ARE GOING TO START A ORGANIC FARMING SURE THIS WILL HELP US

    SHAJATH
    9698816786

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *