தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) செ.மதியழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
- விவசாயிகள் எந்த இடுபொருள் வாங்கினாலும் வாங்கும் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கான ரசீது கேட்டு வாங்க வேண்டும்.
- பொதுவாக உரத்துக்கு உர மூட்டைகளில் விற்பனை விலை அச்சிடப்பட்டு இருக்கும். அதனை விவசாயிகள் கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
- எல்லா உரங்களிலும் வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்தாலும் அதல் இருக்கும் சத்துக்கள் மாறாது.
- குறிப்பாக யூரியாவை எடுத்து கொண்டால் எந்த நிறுவனம் தயாரித்தாலும் அதில் தழைச்சத்து 46 சதவிகிதம்தான் இருக்கும் . அதனால் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட நிறுவன உரங்கள்தான் வாங்க வேண்டும் என நினைத்து வாங்க கூடாது.
- உரம் சம்பந்தமான ஏதாவது பிரச்னை விவசாயிகளுக்கு இருந்தால் உடனே 09443656811 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
- மேலும் உர விற்பனையாளர்கள் தாங்கள் வாங்கும் உரத்துக்கான கொள்முதல் ரசீதை விற்பனை நிலையத்தில் பராமரிக்க வேண்டும்.
- முறையான பதிவேடு , விற்பனை ரசீது பராமரிக்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயிகளின் முகவரியிட்டு கையொப்பம் வாங்க வேண்டும்.
- அறிமுகமில்லாத அல்லது அரசு அங்கீகாரம் இல்லாத உர உற்பத்தியாளர்களிடம் உரம் வாங்கி விற்பனை செய்யக்கூடாது.
- உரம் விற்பனை சம்பந்தமான விலை பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படி பராமரிக்க வேண்டும். உர உரிமம் இல்லாமல் உர விற்பனை செய்யக்கூடாது.
- உர மூட்டை வந்ததும் மூட்டை எடை பார்த்துதான் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
- இதனை மீறும் பட்சத்தில் உரக்கட்டுபாடு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பண்ட சட்டம் 1955 மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வாங்கி கொடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்