“சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பழம் மற்றும் காய்கறிகள், பதப்படுத்தி, ஜாம், ஜெல்லி தயாரித்தல் குறித்த, ஒரு நாள் செயல்விளக்க பயிற்சி, வரும்,2015 ஜூன் 24ம் தேதி நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
பழங்கள் மற்றும் காய்கறிகளில், உயிர் சத்து, நீர் சத்து, ஊட்டச்சத்து, நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சத்துகள் நிறைந்துள்ளன. பழம், காய்கறிகள் ஒரு சில பருவ காலங்களில் மட்டும் அதிகம் விளைந்து, அழுகி வீணாகிவிடுகிறது.
பழம், காய்கறி ஆகியவற்றை பதப்படுத்தி, விற்பனை செய்தால், அதிக லாபம் ஈட்ட முடியும்.
இதிலிருந்து பானம், ஜாம், ஜெல்லி ஆகியவை தயாரிக்கலாம்.
இதுகுறித்து, நேரடி செயல் விளக்க பயிற்சி, வரும், 2015 ஜூன் 24ம் தேதி, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது. பயிற்சி கட்டணமாக, 300 ரூபாய் செலுத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்க, நேரில் அல்லது 04272422550 எண்ணில், தங்கள் பெயரை முன் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஐயா வணக்கம் எனக்குஉலவர்சந்தையின் அனைத்து காய்கறி விலை நிலவரங்களும் தேவை
9965500999