திண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
பாகற்காய் சாகுபடி செய்ய பந்தல் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு 100 கல்தூண்கள் ஊன்றி குறுக்கும், நெடுக்குமாக கம்பி வலையை இணைத்து பந்தல் அமைக்க வேண்டும். இதற்கு செலவு அதிகமாகும்.
இதனை குறைக்க புதிய தொழில்நுட்பத்தில் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் கால் ஏக்கரில் பந்தல் இன்றி பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பாத்திக்கும் 2 இரும்பு குழாய்களை ஊன்றி கட்டு கம்பிகள் மூலம் இணைத்துள்ளனர்.
ஒவ்வொரு பாத்திக்கும் போதிய இடைவெளி இருப்பதால் காய்களை பறிப்பது எளிது. நீர் பாய்ச்சுவதும் எளிது.
மைய மேலாளர் பெருமாள் கூறியதாவது:
- இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் பாத்திகள் அமைக்கப்பட்டு ‘மல்சிங் சீட்’ (Mulching sheet) மூலம் மூடப்படும். ‘சீட்’ (Sheet) இடைவெளியில் விதைகள் ஊன்றப்படும். இதனால் களைகள் வளராது.
- இந்த தொழில்நுட்பத்தில் இதுவரை மிளகாய், தக்காளி, வெண்டை சாகுபடி செய்தோம்.முதல்முறையாக பாகற்காய் சாகுபடி செய்துள்ளோம்.
- மேலும் பந்தல் செலவை குறைக்க மற்றொரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். சாதாரணமாக ஏக்கருக்கு பந்தல் அமைக்க ரூ.1.2 லட்சம் செலவாகும். புதிய முறையில் ரூ.10 ஆயிரம் போதும். செடிகளுக்கு தேவையான நீரும், சத்துக்களும் சீராக கிடைப்பதால் காய்கள் பெரிதாக இருக்கும். ஏக்கருக்கு 12 டன்னுக்கு அதிகமாக கிடைக்கும், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
thanks sir
super nice sir i am folow up sir
thanks sir i am suriya age 20 i am like vivasayam