தினையால் கிடைத்தது இரண்டு மடங்கு லாபம்

சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆரம்பித்த பின் வாழ்க்கை நல்லதற்கு மாறி விட்டது என்கிறார் ஜானகி – இவர் மன்னடிபேட்டை அருகே உள்ளே வினாயகம்பேட்டை என்ற கிராமத்தில் வசிக்கிறார். இது புதுச்சேரி மாநிலத்தில் வருகிறது

“இப்போதேல்லாம் எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. முன்பு நெல் சாகுபடி செய்த போது வேலை அதிகம். ஆட்கள் கிடைப்பது கஷ்டம். சிறு தானியங்கள் சாகுபடியில் எனக்கு உடற் உழைப்பு அதிகம் குறைந்து உள்ளது”

Courtesy: Hindu
Courtesy: Hindu

ஜானகியும் அவரை போன்று 15 பேரும் மன்னடிபேட்டை வட்டத்தில் வருட கணக்கில் நெற்சாகுபடி செய்து விட்டு இப்போது சிறு தானியங்களுக்கு மாறியவர்கள்.

இவர்கள் MS சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தால் தத்து எடுக்க பட்டு அவர்களால் உதவி பெற்றவர்கள். இவர்கள் இந்த நிறுவனம் மூலம் இயற்கை வேளாண்மை, காளான் சாகுபடி, போன்றவற்றையும் கற்றனர்.

இந்த திட்டத்தில் பலனாக 15 விவசாயிகள் 16 எகரில் திணை சாகுபடி செய்கின்றனர். முதல் சாகுபடியில் 10000 கிலோ கிடைத்தது.

“திணை சாகுபடிக்கு நெல் சாகுபடியில் பத்தில் ஒரு பங்கு நீரே போதும். 5000 ரூபாய் செலவு செய்து 1000 கிலோ சாகுபடி கிடைத்தது. உர தேவையும் குறைவு. என்னுடைய லாபம் இரண்டு மடங்கு ஆகியது” என்கிறார் சுப்ரமணியம்

ஜானகியின் கணவர் சண்முகம் கூறுகிறார் – ” பூச்சி தொல்லையும் குறைவு. இப்போது சிறு தானியங்களை பற்றிய மக்களின் கவனம்  திரும்பியதால்,ஒரு கிலோ ரூ 28 வரை விற்பனை ஆகிறது”

நன்றி: ஹிந்து (ஆங்கிலத்தில்)
மேலும் விவரங்களுக்கு –

Dr. Vidya Ramkumar
Biocenter
vidramk@gmail.com
Ms. D.S. Girija
Village Resource Centre
pillaiyarkuppam_vrc@rediffmail.com

M.S. Swaminathan Research Foundation
Pillaiyarkuppam, Thondamanatham post
Vazhuthavoor road, Pudhucherry -605502
Tel: 0413-2667313 / 2667861 / 2666484 / 2668108 / 660297


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *