தென்னைக்கு ஏற்ற இணைப்பயிர் பலா மரம்

  •  செம்மண் நிலம், வண்டல், மணல் கலந்த நிலம், மணற்பாங்கான நிலம் ஆகியவற்றில் பலா நன்றாக வளரும்.
  • தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுடைய தென்னந்தோப்புக்களில் பலாவை இணைப்பயிராக சாகுபடி செய்யலாம்.
  • புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் அணவயல் போன்ற பல கிராமங்களில் தென்னந்தோப்பில் பலா சிறந்த பணம் கொழிக்கும் பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.
  • பலா வெப்பமண்டலப் பயிர் மரமாகும்.
  • சதுர முறையில் 25 x 25 அடி இடைவெளியில் நடவு செய்யப்பட்டுள்ளன.
  • இளம் தென்னந்தோப்பு அல்லது வளர்ந்த தோப்புகளிலும், பலாக்கன்றுகளை இணைபயிராக நடலாம்.
  • ஏக்கருக்கு சுமார் 70-80 தென்னை நடப்பட்டுள்ள வயலில் எந்த ஒருநான்கு மரங்களுக்கு நடுவிலும் ஒரு பலாக்கன்று வீதம் ஏக்கரில் சுமார் 50 கன்றுகள் நடவு செய்யலாம்.
  • (தகவல்: பி.ஹரிதாஸ், விதைச்சான்று உதவி இயக்குநர், கடலூர்).

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தென்னைக்கு ஏற்ற இணைப்பயிர் பலா மரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *