நிலக்கடலை சாகுபடி டிப்ஸ்

நிலக்கடலை சாகுபடியில் உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளை வேளாண் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாகுபடி முறைகளை பின்பற்றினால் அதிக மகசூலும், அதிக வருமானமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

 • நிலக்கடலை பயிர் சாகுபடிக்கு மணல் பாங்கான வண்டல், செம்மண் மற்றும் வண்டல் நிலங்கள் ஏற்றது.
 • சட்டிக்கலப்பையை பயன்படுத்தி மூன்று அல்லது நான்கு இரும்பு கலப்பை அல்லது நாட்டு கலப்பையை கொண்டு மண் புழுதியாகும் வரை உழ வேண்டும்.
 • பொதுவாக டி.எம்.வி., 2, டி.எம்.வி., 7, ஜே.எல்., 24 ஆகிய ரகங்களை சேர்ந்த நிலக்கடலை விதைகளை சாகுபடி செய்யலாம்.
 • நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் தென்னை நார் கழிவினை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்.
 • மானாவாரி பயிருக்கு 9 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 30 கிலோ பொட்டாஷ் உரத்தினை ஊட்டமேற்றிய தொழு உரமாக இட வேண்டும்.
 • விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் நுண்ணியிரையை கலக்க வேண்டும்
 • விதைக்கும்போது ஏக்கருக்கு தேவையான விதையுடன் இரு பாக்கெட் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரு பாக்கெட் உரங்களை ஆரிய அரிசி கஞ்சியில் கலந்து விதைக்க வேண்டும்.
 • இதனால், நிலக்கடலை பயிரின் வேர் முடிச்சு காற்றில் உள்ள தழைச்சத்தை பயிருக்கு கிடைக்க செய்கிறது.
 • ஏக்கருக்கு, 5 கிலோ நூண்ணூட்ட சத்து கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் நிலத்தின் மேல் சீராக தூவ வேண்டும்.
 • விதைத்த 45ம் நாள் ஏக்கருக்கு, 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து 24 சதவீதம் மற்றும் கந்தக சத்து 18.8 சதவீதம் நிலக்கடையில் திரட்சியான காய்கள் உருவாகி மகசூல் அதிகரிக்க செய்கிறது.
 • நிலக்கடை சாகுபடி செய்த வயலை சுற்றி ஆமணக்கு பயிரிட்டு புரோடீனியா தாய் பூச்சியின் முட்டைகளையும், இளம் புழுக்களையும் அழிக்கலாம்.
 • 10:1 என்ற விகிதத்தில் நிலக்கடலையில் தட்டைப்பயறு ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும்.
 • நிலக்கடை செடிகளில் இலைகள் முதிர்ந்து காய்ந்த நிøயில் மேல்மட்ட இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும்போது அறுவடை செய்ய வேண்டும்.
 • இந்த தொழில்நுட்பம் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்தால் ஏக்கருக்கு, 600 கிலோ வரை உலர்ந்த காய்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் மதிப்பு இன்றைய விலையில் 25,000 ரூபாய்.
 • நிலக்கடலைக்கு தேவையான உயிர் உரங்கள், ஜிப்சம் ஆகியவை 50 சதவீதம் மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது

இவ்வாறு  வேளாண் உதவி இயக்குனர் நாகராஜ் கூறியுள்ளார்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *