திருந்திய நெல் சாகுபடியின் மூலம் 2 கிலோ விதை நெல்லில் குறைந்தபட்சமாக சுமார் 60 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும் என்றார் வேளாண் விரிவாக்க இணை இயக்குநர் ஆர். முருகவேல்.
வேளாண் விரிவாக்க இணை இயக்குநர் முருகவேல் பேசியது:
- இந்த உழவர் பெருவிழாவின் குறிக்கோள், விளைச்சல் உற்பத்தியை 2 மடங்காகவும், வருவாயை 3 மடங்காகவும் விவசாயி பெற வேண்டும் என்பதுதான்.
- சாதாரணமாக, ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவை.
- இவை சுமார் 30 நாட்கள் வரை நாற்றாங்காலாக செயல்படும்.
- இதன் மூலமாக சுமார் 40 மூட்டை மகசூல் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- ஆனால், திருந்திய நெல் சாகுபடியில் சுமார் 2 கிலோ விதை நெல் போதுமானது. சுமார் 14 நாள்கள் மட்டுமே நாற்றாங்காலாக செயல்படும்.இந்த நாற்றாங்காலுக்கு மேட்டுப்பாத்தி நாற்றாங்கல் என்று பெயர்.
- இந்த நவீன முறை விவசாயம் மூலமாக குறைந்தபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 60 மூட்டை (60 கிலோ) நெல் பெறலாம்.
- திருந்திய நெல் சாகுபடி செயயும் விவசாயிகளுக்கு ரூ. 800 மதிப்பிலான களை எடுக்கும் கருவியும் அரசால் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
- மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.
- மண் பரிசோதனை செய்து அதன் தன்மையை அறிந்து விவசாயம் செய்தால் மகசூல் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மண் பரிசோதனை செய்ய 20 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள், ஆத்மா திட்ட அலுவலர்கள் ஆகியோரை அணுகலாம் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்