கிருஷ்ணகிரியில் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

கிருஷ்ணகிரியில் இளைஞர்களுக்கு காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்ததுதல் குறித்து இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனமான என்ஐஆர்டி நிதி உதவியுடன் கிருஷ்ணகிரி அணை மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் 2012 நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் இளைஞர்களுக்கு காளான் வளர்ர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து 10 நாள்கள் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.பயிற்சி நாள்களில் நிறுவனத்திலேயே தங்கி பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே கடந்த மார்ச் மற்றும் ஏபரல் மாதத்தில் பயிற்சி பெற்றவர்கள், இதில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.

ஆர்வமுள்ளவர்கள், ஒரு வார காலத்திற்குள் 04343240416 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயரினை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தொடர்புக்கு: து.ராமச்சந்திரன், உதவி இயக்குநர், மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனம், கிருஷ்ணகிரி அணை, 09443054536.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *