பெரியார் மணியம்மை பல்கலை.யில் வேளாண் தொழில்நுட்ப விழா

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்நுட்பத் திருவிழா 2013 ஆக. 30-ம் தேதி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

பல்கலைக்கழக வளாகத்தில் ஆக. 30, 31-ம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த விழாவில் 12 தலைப்புகளில் அமர்வுகள் நடத்தி, விவாதிக்கப்படவுள்ளது. இவை தீர்மானங்களாகவும் இயற்றப்படவுள்ளன.

ஒவ்வொரு அமர்விலும் வேளாண் அறிஞர் ஒருவரும், முன்னோடி விவசாயிகள் இருவரும் பேசவுள்ளனர். கேள்வி – பதில் மற்றும் தீர்மானங்கள் இயற்றுதல் ஆகியவற்றுடன், அந்த அமர்வை வழிநடத்தும் நிபுணர் தன்னுடைய கருத்துகளையும் விளக்குவார்.

மேலும், இன்றைய சூழ்நிலையில் பயன்படுத்தக்கூடிய வேளாண் கருவிகள், விதைகள், உரங்கள், பூச்சிமருந்துகள், உயிரி உரங்கள், பயிர் காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், அரசுத் துறைகள் உள்பட 60-க்கும் அதிகமான காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. கையேடும் வெளியிடப்படவுள்ளது.

ஆக. 30-ம் தேதி காலை பல்கலைக்கழக வேந்தர் கி. வீரமணி தலைமையில் நடைபெறவுள்ள தொடக்க விழாவை தோட்டக்கலை வல்லுநர் த. வெங்கடபதி ரெட்டியார் தொடக்கிவைக்கிறார். ஆக. 31-ம் தேதி மாலை நிறைவு விழா நடைபெறவுள்ளது என்றார் அவர்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *