அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரு தீவில் Narcondam Hornbill என்ற ஒரு பறவை இனம் உள்ளது.
ஹோர்ன்பில் என்ற பறவை பெரிய பறவை. மரங்களின் உச்சிகளில் வாழும். எப்போதும் பசுமையாக உள்ள காடுகளில் (Evergreen forests)
மட்டுமே வாழும் இந்த பறவையை மனிதன் சகடு மேனிக்கு தீர்த்து கட்டி விட்டான்.
இதற்கு காரணம் இந்த பறவையின் தலையில் உள்ள அலங்கார கொம்பே. இது ஒரு அழகு பொருள் ஆகவும் சேகரிக்க படும் ஒரு பொருள் (Collectibles) ஆகவும் ஆனது தான் காரணம்.
இப்போது நிகோபார் தீவு களில் ஒரே ஒரு தீவில் மட்டும் இவை வசிக்கின்றன. வேறு எங்கேயும் இல்லை,
இப்படி பட்ட நிலைமைக்கு தள்ள பட்ட இந்த பறவைக்கு புது தலைவலி.
இந்தியா கடற்கரையோர காவற்படை அந்த தீவில் ஒரு ராடார்
அமைக்க வேண்டும் என்று திட்டம் இட்டது.
நல்ல வேலை, இயற்கை சூழ் ஆர்வலர்கள் நிறைய பேர் மதிய சுற்று சூழல்
அமைச்சரவைக்கு கடிதம் ஈமெயில் அனுப்பினர். பத்திரிக்கைகளில் இதை பற்றி எழுதினர். ஜெயந்தி நடராஜன் இப்போது இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்.
இப்போதைக்கு இந்த அழகான பறவை பிழைத்தது. வெறும் ஆறு சதுர கிலோமீட்டர் பரப்பு உள்ள தீவிற்கு தள்ள பட்டுள்ள இந்த அழகான பறவைகள் எத்தனை காலம் மனிதனின் இருந்து தப்பிகுமோ?
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்