நெல்பயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.விதைகள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கவும், ஊட்டச்சத்துகள் பயிருக்கு கிடைப்பதை எளிதாக்கவும் விதை நேர்த்தி செய்வது அவசியம்.
– டிரைகோடெர்மா விரிடி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் அல்லது சூடோமோனாஸ் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயன்படுத்துவதால் விதை மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்தலாம். நெல் விதைகளை இம்மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்வதால் நட்ட 40 நாட்கள் வரை குலை நோயிலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.இதனை பயன்படுத்துவதால் நோய்களுக்கு மருந்தடிக்கும் செலவு மிச்சமாகிறது.
-நெல் விதைகளுடன் அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தலா 2 பாக்கெட் கலந்து விதைப்பதால் வளி மண்டல தழைச்சத்து பயிருக்கு கிரகித்து கிடைக்க செய்வதோடல்லாமல், கரையாத நிலையிலுள்ள மணிச்சத்து பயிருக்கு கிடைக்க கூடிய நிலைக்கு மாறுகிறது.
மேலும் விவரங்களுக்கு: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்