மஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய்

மஞ்சளுக்கு ஊடுபயிராய் மிளகாய் பயிரிடுவதில் பவானிசாகர் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • பவானிசாகர் பகுதியில் கொத்தமங்கலம், ராஜன் நகர், பசுவபாளையம், புங்கார், தொட்டம்பாளையம், எரங்காட்டூர் பகுதி விவசாயிகள் மஞ்சளுடன்  ஊடுபயிராய் மிளகாய் பயிரிட்டுள்ளனர். மஞ்சள் பத்து மாதப்பயிர்.
  • வைகாசி மாதம் நடவை துவங்கி மாசி மாதம் அறுவடை முடியும். ஒரு ஏக்கருக்கு மஞ்சள் பயிரிட 750-800 கிலோ விதை மஞ்சள் தேவைப்படுகிறது.
  • ஒரு கிலோ விதை மஞ்சள் 30-40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
  • வெட்டுக்கூலியோடு சேர்த்து ஏக்கருக்கு நடவு செலவு ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு 15-20 டன் வரை அறுவடை கிடைக்கிறது.
  • சென்றாண்டு மஞ்சள் விலை உச்சியை தொட்டதையடுத்து இம்முறை மஞ்சள் சாகுபடி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மஞ்சள் விளைவிப்பதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்று விவசாயிகள் நம்பி பெருமளவில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர்.
  • மஞ்சளுடன் ஊடுபயிராக வெங்காயத்தைதான் பெரும்பாலான விவசாயிகள் பயிரிடுவது வழக்கம்.
  • ஆனால், பவானிசாகர் பகுதி விவசாயிகள் மஞ்சளுக்கு ஊடுபயிராக மிளகாயை பயிரிட்டுள்ளனர். மிளகாய் பயிரிடுவதால் விளைச்சல் அதிகரிப்பதோடு, லாபமும் பெருகுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

நன்றி: தினமலர் 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *