ஒரு இன்ச் மண் (top soil) உருவாக்க இயற்கைக்கு 1000 வருடங்கள்தேவை ஆகிறது.
Top soil மண் நிலத்தில் 5 இன்ச் வரை மேலே இருந்து இருக்கும் மண். இதில் தான் தாவரங்களுக்கு தேவையான எல்லா சத்துக்களும், நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.
ஆனால, நம் தலைமுறை மேல் மண்ண வெகு வேகமாக இழந்து வருகிறோம். இதே வேகத்தில் நாம் மேல் மண்ணை இழந்தால் 60 ஆண்டுகளில் விவசாயமே செய்ய முடியாது என்கிறது உலக உணவு நிறுவனம். (UN Food and Agricultural Organization
இப்போதே, உலகத்தில் உள்ள மேல் மண்ணில் மூன்றில் ஒரு பகுதி அழிந்து விட்டது.
மேல் மண் அழிவதற்கு முக்கிய காரணங்கள் ரசாயன உரங்கள், காடுகளை அழிப்பது, வெப்பமயமாதல் ஆகியவை
“மேல் மண்ணே உலகத்தின் எல்லா உயிர்க்கும் அடிப்படை. 95% நம் உணவு இதில் விளையும் பயிர்களில் இருந்த வருகிறது” என்கிறார் சமேடோ, உலக உணவு நிறுவனத்தின் டைரக்டர்.
ஏதாவது வேகமாக மனித குலம் செய்யாவிட்டால், 2050இல் உழுவதற்க்கான நிலம் 1960இல் இருந்ததை விட 1/4 அளவே இருக்கும்..
நல்ல மண் வளம் இருந்தால் பல பயன்கள் – நீரை சேர்ப்பது, கார்பனை சேர்ப்பது , பல உயிரினங்களை வாழ விடுவது என்று.. மண்வளம் குறைந்து வருவதால் ஒரு மோசமான சுற்று ஆரம்பிக்கிறது என்கிறார் அவர். உலகம் மேலும் வெப்பமாகிறது, இதனால் மேலும் நிலம் பாழாகிறது…
ஒவ்வொரு நிமிடமும் 30 கால்பந்து மைதானம் அளவான இடம் மண்வளத்தை இழந்து கொண்டு இருக்கிறது, அதற்கு முக்கிய காரணம் ரசாயன விவசாயமே என்கிறார் வோலேர்ட்.
இயற்கை விவசாயமே இதற்கெல்லாம் பதில்.
மேலும் அறிய- Scientific American
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்