ஜவிக் ஜபுத்ரா (மண் சமையறை) மூலம், ஒரு விவசாயி எளிதில் கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கத் தக்க வளங்கள் மற்றும் பண்ணையில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு நிலத்திற்குத் தேவையான இடுபொருட்களை தயாரித்து வைத்துக் கொள்ள முடியும்.
வயலின் ஒரு ஓரத்தில் கூட அமைத்து கொள்ளலாம். வயலின் ஒரு ஓரத்தில் 15×15 அடி என்ற அளவில் பண்ணை இடுபொருள் உற்பத்தி கூடத்தை அமைக்க வேண்டும். இதில் இரண்டு அல்லது மூன்று 100 லிட்டர் கொள்கலன், இரண்டு அல்லது மூன்று 50 லிட்டர் கொள்கலன், இரண்டு அல்லது மூன்று 20-30 லிட்டர் பிளாஸ்டிக் மூடி உள்ள வாளிகள், 20 லிட்டர் அளவு கொண்ட இரண்டு அல்லது மூன்று மண்பானைகள், இரண்டு உயிராற்றல் குழிகள், ஒரு அக்னிகோத்தரா காப்பர் பிரமிடுகள் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்த ஜவிக் ஜபுத்ரா மென்மையான முறையில் அங்கக உற்பத்தி திட்டம் செய்ய உதவுகிறது. மேலும் இது நான்கு பரிமாணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மண் ஊட்டமளிப்பு (பூமி உப்கார்)
வீரிய ஒட்டு ரக பயிர்கள்/கலப்பின பயிர்கள், அதிக அளவில் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும் திறன் கொண்டுள்ளதால், அவற்றை பயிர்திட்டத்தில் தொடர்ந்து பயிரிட்டு வந்தால் மண்ணில் உள்ள பெரு ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிறு ஊட்டச்சத்துக்களின் பற்றாக் குறை ஏற்படும். எனவே கலப்பின ரகங்களை அங்கக முறை பயிர் உற்பத்தி திட்டத்தில் பயன்படுத்துவது இல்லை. இவ்வாறான மண் ஊட்டச்சத்துக் குறைபாட்டை பூமி உப்கார் கொண்டு சரி செய்ய முடியும்.
- செறிவூட்டப்பட்ட பஞ்சகாவ்யா (ஒரு ஏக்கர் நிலத்திற்கு 200 கிலோ)
- சாணம் (மாடு /எருமை/காளை): 40 கிலோ
- சிறுநீர் (மாடு/எருமை/காளை) :40 கிலோ
- வெண்ணெய்/கடுகு எண்ணெய்- ½ லிட்டர்
- பால்: 2 ½ லிட்டர்
- லெஸ்சி /நீர்த்த தயிர் – 8 லிட்டர்
- பருப்பு மாவு மற்றும் மெத்தி மாவு : 1 கிலோ (ஓவ்வொன்றும்)
- பழைய வெல்லம் : 2 கிலோ
- அழுகிய வாழைப்பழம் – 1கிலோ
- கடகு பின்னாக்கு – 2 கிலோ
- ஆலமரம் மற்றும் வாழை மரம் நடவு செய்யப்பட்ட நிலத்தின் மண் – 2 கிலோ (ஓவ்வொன்றும்)
உபயோகப்படுத்தும் முறைகள்/நடைமுறைப்படுத்துதல்
- அனைத்து பொருட்களையும் டிரம்மில் போட்டு, முப்பது முறை கடிகார திசையிலும், முப்பது முறை கடிகார எதிர் திசையிலும், ஒரு நாளுக்கு இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.
- கொள்கலனை மூடி வைக்க வேண்டும்.
- செறிவூட்டப்பட்ட பஞ்சகவ்யா 7வது நாளில் தயாராகி விடும். இதனுடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து நன்கு கலக்கி விட வேண்டும்.
- இந்த கலவையை மண்புழு உரம் அல்லது சாம்பல் அல்லது வளமான மண்ணுடன் கலந்து, விதைப்பதற்கு முன் நிலத்தில் பரப்பி விட வேண்டும்.
- நீர்பாசனத்தின் பொழுது, கொள்கலனின் அடிப்பகுதிக்கு மேலே ஒரு சிறு துளையிட்டு, செறிவூட்டப்பட்ட பஞ்சகாவ்யாவை சொட்டு சொட்டாக விழும்படி செய்தால், மொத்த நிலமும் செழிப்பாக மாறி விடும்.
- விதைப்பின் பொழுதும், நீர் பாசனத்தின் பொழுதும் இதனை தெளித்தால், மண்ணின் வளம் பராமரிக்கப்படும்.
- மண்ணின் வளத்தை பாதுகாத்து, கனிசமான விளைச்சல் பெற முடியும்.
- பயிர்கள் ஆரோக்கியமாகவும், பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபட்டும் காணப்படும்.
- பயிர்கள் குறித்த காலத்தில் முதிர்ச்சி நிலையை அடையும்.
நன்றி:TNAU
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்