நிலத்தை பாதுக்காப்பதில் உயிர் வேலிகளின் பங்கு அதிகம். முன்பெல்லாம், தானாகவே வளர்ந்து உயிர் வேலி செடி காணப்படும். ஆனால் மரங்கள் இப்போது கால மாற்றத்தினால் நிலத்தை சுற்றி சிமெண்ட் சுவர்களை அமைக்கின்றனர்.
- அவற்றை விட உயிர் வேலி நன்மைகள் பயப்பவை.
- உயிர் வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்கள் நிலத்திற்குள் வரும் காற்றை தடுக்கும் தடுப்பானாகவும் அமையும்.
- உயிர் வேலிகளுக்கு மண் அரிப்பு, காற்று அரிப்பை தடுக்கும் சக்தி உண்டு.
- உயிர் வேலிகள் நிலத்தில் உள்ளே நாம் பயிரிடும் பழ மரங்கள், தென்னை, வாழை போன்றவைகளை கீழே சாய விடாமல் காற்றின் வேகத்தை குறைத்து தடுக்கும் தடுப்பாக பயன்படுகிறது.
- கடற்கரை ஓரங்களில் காற்றினால் மண் வாரி இறைப்பது தடுக்கப்படுகிறது.
- மண் மேடு உருவாவது தடுக்கப்படுகிறது.
உயிர் வேலி மரங்கள் :
- பரம்பை முள்
- கிளுவை முள்
- கள்ளிச்செடி
- நொச்சி
- பனைமரம்
- கொடிப்பு வரசு
- கொடுக்காப்புளி
- இலந்தைமுள்
- சவுக்கு
- காகிதப்பு
- கலாக்காய்மரம்
- சீகைக்காய் மரம்
போன்ற உயிர் வேலி மரங்கள் பல்லுயிர்களின் பெருக்கமாகவும், அதற்கு தேவையான வாழ்விடமாகவும் அமையும்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்