மாவில் பறவைகண் நோயை கட்டுபடுத்துவது எப்படி?

உங்கள் மாமரத்தில் மாம்பிஞ்சு, காய்களில் கருப்பு நிற புள்ளிகள் ஏற்படுகின்றனவா? அப்படிப்பட்ட பிஞ்சுகள் பெருமளவில் உதிர்கின்றனவா? மாம்பழங்களில் கருப்புநிற வட்ட வடிவில் அழுகல் காணப்படுகின்றனவா?

அப்படியானால் ஆந்த்ரக்னோஸ் எனப்படும் பூசண நோய் ஏற்பட்டிருக்கலாம். இந்நோய்க்கு “பறவைக்கண் நோய்’ என மற்றொரு பெயரும் உண்டு.

இந்நோய் பிஞ்சு மற்றும் காய் பருவங்களில் தோன்றி, முதிர்ந்த மாங்காய்கள் பழுக்கும்பொழுது பெரிய ஒழுங்கற்ற கரும்புள்ளிகளாக மாறும்.

மேல் தோல்பகுதி கருமை நிறமாகிவிடும். பழத்தின் சதைப்பகுதி அழுகிவிடும்.
நோய் பரவும் விதம்:

 • பூக்கும் பருவத்தில் மற்றும் பிஞ்சு, காய் பருவத்தில் பெய்யும் மழை, இந்நோய் பரவுவதற்கு சாதகமாக அமையும். பூசண வித்துக்கள் காற்றின் மூலம் பரவுகின்றன.
 • பிஞ்சு மற்றும் காய்களில் கண்ணுக்குத் தெரியாத காயங்கள் உண்டானால் இந்நோய் அதிகம் காணப்படும்.

கட்டுபடுத்தும் விதம்:

 • சூடோ மோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் வீதம் தெளிக்க வேண்டும்.
 • 2 சதவீதம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் இயற்கை உயிரியல் பூஞ்சானக் கொல்லியை வேறு ஒரு பூச்சி அல்லது பூஞ்சானக் கொல்லியுடன் கலக்காமல், 7 நாள்களுக்கு ஒரு முறை 3 தடவை தெளிக்க வேண்டும்.
 • ஒரு சதவீதம் ஸ்டார்ச் கலவையை தெளித்தும் கரும்படல நோயை கட்டுப்படுத்தலாம்.
 • விரிவான விவரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மாவில் பறவைகண் நோயை கட்டுபடுத்துவது எப்படி?

 1. Santhosh Kumar says:

  Dear Admin,

  Really i am appreciating you and very use full messages you are given,
  i have got lot of knowledge from your web,

  Thank you very much,

  Regards,
  S.Santhosh Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *