வாழையில் ஊடுபயிர்கள்

  • வாழையில் ஊடுபயிராக   தட்டைப்பயறு சாகுபடி செய்வது நல்ல பலன் கொடுக்கிறது. வாழைக்கன்றுகளுக்கு இடையே உள்ள காலி இடத்தில் தட்டைப்பயறு விதைக்கலாம்.
  • செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நடவு செய்யலாம்.
  • தட்டைப்பயறும், செடி முருங்கையும் காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து மண்ணை வளப்படுத்தும்.
  • இதன் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக அமையும்.
  • வாழை நடவு செய்த 4 மாதங்கள் வரை காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.
  • ஊடுபயிராக தர்மபுரி பகுதியில் தக்காளி சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது.
  • முள்ளங்கி, காலி பிளவர், முட்டைகோஸ், மிளகாய், கத்தரி, கருணைக்கிழங்கு, வெண்டை, கீரை, பூசனி மற்றும் செண்டுமல்லி போன்றவைகளை சாகுபடி செய்யலாம்.
  • தகவல் : என்.மதுபாலன், தர்மபுரி மாவட்ட வேளாண்துறை உதவி இயக்குநர், தொடர்புக்கு. போன்: 09751506521.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *