இயற்கை வேளாண்மைக்கு செலவு குறைவு

பரவலாக பலவகைப் பயிர்களில் கையாளப்பட்டு இயற்கை வேளாண்மை உத்திகள் பற்றி பொய்யான கருத்தாக அதிக செலவு பிடிக் கும். உத்தி இது என்று பலரும் அறியாமையில் தெரிவித்து வருகிறார்கள்.

உண்மை யாதெனில் அதிக விலை கொண்ட இடுபொருட்களான இரசாயன உரங்களையும் பயிர் பாதுகாப்பு மருந்துகளையும் தவிர்த்து மேற்கொள்ளப்படும் இந்த உத்தியால் செலவு மிச்சம் தான் ஆகும்.
குறிப்பாக உரத்தின் பயன்பாட்டை உள்ளூரில் கிடைக்கும் பயிர்க்கழிவுகள், மண்புழு மற்றும் சாண எரு, பறவைக் கழிவு முதலியவற்றைக் கொண் டும் பூச்சி மருந்துக்குப் பதில் உயிரியல் கட்டுப்பாட்டு முறை மற்றும் தாவர இலைச்சாறுகள் மற்றும் உயிர் உரம், வேம்பு பயன்பாடுகள் மூலம் செய்யும் போது எப்படி கூடுதல் செலவாகும்.

மேலும் கிடைக்கின்ற எந்த தாவரத்தையும் கம்போஸ்ட் உரம் தயாரித்திட பயன்படுத்த வாய்ப்பும் எந்த மிருக கழிவு கிடைத்தாலும் மட்க வைத்து உபயோகிக்கும் வாய்ப்பும் உள்ள இடத்தில் அதிக விலை கொடுத்து எதுவும் வாங்கும் நிலையே இயற்கை விவசாய முறையில் வருவதில்லை.
வேம்பு சார்ந்த மருந்துகள் வாங்கிப் பயன்படுத்தாமல் வேப்பிலைக் கரைசல், தயாரித்தாலே போதும்.வேப்பம் பிண்ணாக்கு கரைசல் மூலம் நல்ல விளைவுகள் உண்டு.வேப்பம் கொட்டைகள் நசுக்கி ஊறவைத்து அந்த சாறு கூட போதுமானது.

எல்லா பயிருக்கும் உள்ள நோய் மற்றும் பூச்சிகள் வராத வண்ணம் நலம் தரும் டானிக் எனும் வளர்ச்சி ஊக்கிகள் அடங்கிய பஞ்சகவ்யா, தசகவ்யா, மூலிகை பூச்சி விரட்டிகள் தயாரித்திட செலவு குறைவே.

இதற்கு காரணம் தேவைப்படும் பொருட்கள் யாவும் வீட்டில் உள்ள பொருட்கள் தாம்.
– பா.இளங்கோவன், திருப்பூர் மாவட்டம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *