ஸ்ரீவில்லிபுத்துார் இயற்கை விவசாய தம்பதி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அச்சங்குளம் பிச்சை முருகன் -அமுதா தம்பதியினர், வயலுக்குள் குடில் அமைத்து இயற்கை விவசாயத்தில் அசத்தி வருகின்றனர்.

பிச்சைமுருகன் பி.காம்., அமுதா பி.இ., படித்துள்ளனர். தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தனர். எனினும் தங்களது பாரம்பரிய தொழிலான விவசாயத்தின் பக்கம் கவனம் திரும்பியது.

இதற்காக அச்சங்குளத்தில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் குடில் அமைத்து, அங்கேயே தங்கி பருத்தி, நெல், வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, வாழை மற்றும் பயறு வகைகளை பயிரிட்டு சிறந்த முறையில் சாகுபடி செய்கின்றனர்.
அரசு மானியத்துடன் பசு மாடுகள், நாட்டுக் கோழிகள் வளர்த்து, அதன் மூலம் கிடைக்கும் தினசரி வருவாய், இயற்கை விவசாயத்தால் கிடைக்கும் வருவாய் என இரட்டிப்பு வருவாய் கிடைக்கிறது.தம்பதி கூறியதாவது:

  • இயற்கை விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்களை கால்நடை, பழக்கழிவுகள் மூலம் பஞ்ச காவ்யம், அமிர்த கரைசல், பூச்சிக்கொல்லி மற்றும் சில பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மூலம் இயற்கை விவசாயம் செய்து, விளைபொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துகிறோம்.
  • பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருப்பினும் இயற்கை விவசாயம் செய்வதும், கிராமத்து வாழ்க்கையும் மனதிற்கு மகிழ்ச்சிக்கு தருகிறது.
  • விவசாயத்தில் அதிக வருவாயை ஈட்ட முடியும். மனநிம்மதி, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுதல் போன்றவை கிராமத்து வாழ்க்கையில் கிடைக்கிறது என்றனர்.

விவசாய தம்பதியினரை வாழ்த்த 09362794206.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *