எலுமிச்சை சாகுபடி

தமிழகத்தில் பயிராகும் பழ மரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

மா, வாழை ஆகியவற்றிற்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சை தான்.

எலுமிச்சை பலவிதமான வெப்பநிலைகளில் பயிர் செய்யப்படுகிறது.

இந்தியாவில் வெப்பம் மிகுந்த தென் மாநிலங்களில் எலுமிச்சை நன்றாக வளர்ந்து நல்ல பலனைத்தருகிறது.

எலுமிச்சையை கடல் மட்டதிலிருந்து ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்யலாம்.பணி உறையும் பகுதிகளில் இதனை சாகுபடி செய்ய இயலாது.

வடிகால் வசதி

  • பலவகையான குணங்களை கொண்ட மண்ணில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
  • களிமண் நிலங்களிலும் தண்ணீர் எளிதில் வடியாத நிலங்களிலும் இதனை சாகுபடி செய்ய முடியாது.
  • மேல் மண் ஆழமில்லாமலும் அடியில் பாறையுடன் இருந்தால் மரம் சில ஆண்டுகளில் நலிந்து இறந்து விடும்.
  • எலுமிச்சை சாகுபடி செய்யும் தோட்டத்தில் தகுந்த வடிகால் வசதி அமைத்தல் அவசியம்.
  • எலுமிச்சை செடி வளர்ச்சிக்கு மண்ணில் கார அமிலத்தன்மை இருத்தல் சிறந்தது.
  • ல்ல வடிகால் வசதியுள்ள இரு மண் பாங்கான குறுமண் நிலம் ஏற்றது.
  • பெரும்பாலும் விதையில் இருந்து வரும் கன்றுகளை நடுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
  • இலை மொட்டு ஒட்டுதல், பதியன்கள் செய்தல் ஆகிய முறைகளிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
  • மொட்டுக்கட்டுதலினால் உண்டாகும் செடிகள் விரைவிலேயே பலன் தரும். பழங்களும் ஒரே சீரான அளவுடன் தரமுள்ளதாக இருக்கும். ஓராண்டு வயதுடைய கன்றுகள் நடவுக்கு சிறந்ததாகும்.

ரகங்கள்

  • பி.கே.எம் -1, சாய்சர்பதி, தெனாலி, விக்ரம், ப்ரமாலினி போன்றவை எலுமிச்சையில் உள்ள உயர் விளைச்சல் ரகங்களாகும்.
  • இவற்றில் பி.கே.எம்-1, விக்ரம் ஆகிய ரகங்கள் தமிழகத்திற்கு உகந்தவையாகும்.
  • எனவே விவசாயிகள் நல்ல மகசூல் தரக்கூடிய எலுமிச்சை ரகங்களை தேர்ந்தெடுத்து, சாகுபடி செய்து அதிக அளவு மகசூலினை பெறலாம்.

தகவல்: தோட்டக்கலைத்துறை, தஞ்சாவூர்.

நன்றி: M.S சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “எலுமிச்சை சாகுபடி

  1. Rajagopal says:

    I am planning for farming good variety lemon for 3 acres and casuarina : சவுக்கு மரம் in five acres. I am looking for a good supplier of quality saplings. Can you suggest.
    I already have five acres which a separate piece of land in which I have Banana plantation.

  2. sangeetha says:

    I HAVE 200 TRESS IN THAT SOME BLACK DOTS ARE THERE IN LEMON FRUITS . CAN U SUGGEST ANY MEDIATION FOR MY FARMS

    • gttaagri says:

      Dear Sir,

      You can contact TNAU nursery in Coimbatore they give good seedlings and plants.

      Professor and Head,
      Department of Fruit crops,
      Horticultural College and Research Institute,
      TamilNadu Agricultural Univeristy,
      Coimbatore – 641 003.
      Phone No.: 0422-5511269, 3335030
      Fax:0422-2430781

      Warm regards
      -admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *