கால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம்

தீவனப் பற்றாக்குறையை போக்குவதற்கு விவசாயத்துறையும், கால்நடைத்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் சிவபிரகாசம் கூறியதாவது:

  • சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், கால்நடைகளுக்கு தீவனமாக பசும்புல் கொடுக்கின்றனர்.
  • தீவன புற்கள், ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியவை.
  • இவைகளை மாடுகளுக்கு தீவனமாக தந்தால், புற்களை அப்படியே சாப்பிட சிரமப்படுகின்றன.
  • இவற்றை தவிர்ப்பதற்காக, கோவையில் தயாரிக்கப்பட்ட பசும்புல் தீவனம் வெட்டும் இயந்திரம் சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளது.
  • சேலம் மாவட்டத்துக்கு இந்தாண்டுக்குள், 450 பசும்புல் தீவனம் வெட்டும் இயந்திரங்கள் வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த இயந்திரங்களை ஒன்றிணைக்கும் பணி நடந்து வருகிறது.
  • பசும்புல் தீவனம் வெட்டும் இயந்திரத்தில், ஐந்தடி, ஏழடி உயர தீவனப் பயிர்களை போட்டு விட வேண்டும்.
  • அந்த இயந்திரம் தீவனப் பயிர்களை துண்டு துண்டாக வெட்டி, மாடுகள் சாப்பிடும் வகையில் தரும்.
  • அதன் பிறகு, மாடுகள் எந்தவித சிரமுமின்றி, அவைகளை சாப்பிடும்; கடினமாக அசைப்போட்டு சாப்பிடுவது தவிர்க்கப்படும்.
  • பசுந்தீவன சோளம், கோ-3, கோ-4 கலப்பு தீவன புல்களின் அறுவடை பணிக்கு, அரசின் மானிய உதவி கொடுத்து வருகிறோம்.
  • கடந்தாண்டு, 100 விவசாயிகளுக்கு, பசும்புல் தீவனப் பயிர்களை அறுவடை செய்வதற்குரிய இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
  • இந்த இயந்திரத்தின் விலை, 17, ஆயிரத்து 400 ரூபாய். இதில், 75 சதவீதம் மானியமாக இருப்பதால், விவசாயிகள், 4,350 ரூபாய் செலுத்தி, இயந்திரத்தை வாங்கிச் செல்லலாம்.
  • இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *