வேர்க்கடலையில் பச்சைப்புழு

மங்கலம்பேட்டை பகுதியில் சாகுபடி செய்துள்ள வேர்க்கடலை செடிகளில் பச்சைப் புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சுப்ரமணியன் கூறியதாவது:

  • கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த வேர்க்கடலை செடிகளை பச்சைப் புழுக்கள் (புரோடீனியா) அதிகமாக தாக்கும்.
  • இந்த புழுக்கள் பகல் நேரங்களில் மண்ணுக்குள் சென்று விடும்.
  • மாலை 4:00 மணிக்கு மேல் வெளியே வரும்.
  • அவற்றை கட்டுப்படுத்த குளோரோபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மி., கலந்து தெளிக்கலாம்.
  • அல்லது ஏக்கருக்கு ஐந்து கிலோ தவிடு, அரை கிலோ காய்ச்சிய வெல்லம், கர்பரில் மருந்து அரை கிலோ ஆகியவற்றை கலந்து சிறு உருண்டைகளாக பிடித்து, வயலில் ஆங்காங்கே வைக்கலாம்.
  • புழுக்களை அழிக்க மாலை நேரத்தில் மருந்து தெளிக்கலாம்.
  • அல்லது ஏக்கருக்கு டைக்ளோர்வாஸ் 300 மி., மருந்தை லிட்டருக்கு அரை மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • வேர்க்கடலை வயலின் வரப்பைச் சுற்றி ஆமனுக்கு செடிகளை விதைத்தால் புழுக்கள் வேர்கடலை செடிகளுக்கு வருவதை கட்டுப்படுத்தலாம்.
  • இனக்கவர்ச்சி பொறி வைத்து தாய் அந்துபூச்சியை அழிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி : தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *