சூரியகாந்தி அறுவடை அட்வைஸ்

சூரியகாந்தி விவசாயிகள், அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்பனை செய்துவிடலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

 
இந்தியாவின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர்களில் சூரியகாந்தி நான்காமிடம் வகிக்கிறது.
சூரிய காந்தியை தமிழகம் தவிர கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்கள் அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. சூரியகாந்தி எண்ணெய் நாட்டின் தெற்கு, மேற்கு மாநிலங்களில் அதிக அளவில் நுகரப்படுகிறது.
இந்தியாவில் மொத்த சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் சென்னை துறைமுகம் வழியாக மட்டும் 64.30 சதவீதம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில், 2014-15-ஆம் ஆண்டில் சூரியகாந்தி 0.07 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 0.05 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் எண்ணெய் பிழிதிறன் 35 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில், கரூர், தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், அரியலூர் மாவட்டங்கள் மொத்த சூரியகாந்தி சாகுபடி பரப்பில் 81 சதவீதமும், உற்பத்தியில் 79 சதவீதமும் பங்களிக்கின்றன.
தற்போது நல்ல தரமான சூரியகாந்தி விதையின் பண்ணை விலை, குவிண்டாலுக்கு ரூ. 3,400 முதல் ரூ. 3,500 வரை வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விற்கப்படுகிறது. விவசாயிகள் சூரியகாந்தி விதைப்புக்கான முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, வேளாண் விற்பனைத் தகவல் – வணிக ஊக்குவிப்பு மையம், கடந்த 13 ஆண்டுகளாக வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய சூரியகாந்தி விதையின் விலையை ஆராய்ந்தது.
இதையடுத்து, சந்தை, பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில், சூரியகாந்தி விதையின் பண்ணை விலை, செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் குவிண்டாலுக்கு ரூ. 3,500 முதல் 3,600 வரை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
எனவே விவசாயிகள் அறுவடை செய்த சூரியகாந்தி விதையை உடனடியாக விற்பனை செய்யப் பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு – ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, எண்ணெய் வித்துகள் துறையையோ 04222431405, 04222450812 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *