நிலக்கடலையில் அதிக மகசூலுக்கு பயிர் எண்ணிக்கை அவசியம்

நிலக்கடலையில் கூடுதலான மகசூல் எடுக்க பயிர் எண்ணிக்கையினை பராமரிப் பது அவசியம் என வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் ஷாஜஹான், குடுமியான் மலை உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் சாந்தி மற்றும் வேளாண் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

இறவை நிலக்கடலையில் கூடுதல் மகசூல் கிடைக்க பயிர் எண்ணிக்கை முக்கியமான காரணியாகும். பயிர் எண்ணிக்கை நிலக்கடலையில் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றால் விவசாயிகள் எவ்வளவு உரம் இட்டாலும் செலவு செய்தாலும் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்க வாய்ப்புகள் இல்லை.

 

 

 

 

 

 

 
பயிர் இடைவெளி:

  • பயிர் எண்ணிக்கையைச் சரியாக பராமரிக்க வேண்டுமென்றால் விதைக்கு விதை இடைவெளிவிட்டு விதைப்பது மிக முக்கியமானதாகும்.
  • விதை விதைக்கும்போது வரிசைக்கு வரிசை ஒரு அடியும் (30செ.மீ) செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும் இருக்குமாறு விதைக்க வேண்டும்.
  • விதைக்கப்படும் விதை 4செ.மீ ஆழத்திற்கு கீழே சென்றுவிடக்கூடாது.
  • இறவை நிலக்கடலை விதைப்பில் ஏருக் குப் பின் விதைப்புச் செய்யும்போது அனுபவம் உள்ள ஆட்களைக் கொண்டு சரியான இடைவெளியில் விதைகள் விழுமாறு விதைப் புச் செய்ய வேண்டும்.

பயிர்எண்ணிக்கை: 

  • நிலக்கடலை விதைக்கப்படும்போது நமக்கு ஒரு ச.மீக்கு 33 கடலைச் செடி கள் கிடைக்கும்.
  • இதனை எளிதாக கண்டுபிடிக்க ஒரு பெரிய சைக்கிள் டயருக்குள் 11 செடிகள் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்கும்.
  • தரமான விதை களைப் பயன்படுத்தவேண் டும். தேவையான அளவு விதைப்பருப்பை (ஒரு ஏக்கருக்கு 5,055 கிலோ) பயன்படுத்த வேண்டும்.
  • தூய்மையான, திரட்சியான, பூச்சி நோய் தாக்காத பொறுக்கு விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
  • நிலத்தைத் தயார் செய்யும்போது தனிக்கவனம் செலுத்தி நன்கு சமன்செய்ய வேண்டும்.
  • விதைப்பில் நன்கு அனுபவமும் பயிற்சியும் பெற்ற நபர்களைக் கொண்டு சரியான இடை வெளி கொடுத்து விதைக்க வேண்டும்.

எனவே புதுகை மாவட்ட விவசாயிகள் இறவை நிலக்கடலையில் மேற்கண்ட வழிமுறைகளைத் தவறாது கடைப்பிடித்து நிலக்கடலையில் பயிர் எண்ணிக்கையினை சரியாகப் பராமரித்துக் கூடுதல் மகசூல் பெறலாம்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *