இயற்கை விவசாயத்தில் மகசூல் பற்றிய ஆய்வு

இயற்கை விவசாயம் பற்றி சில சந்தேகங்கள் கேட்டு  இருக்கிறோம்.

“நீங்கள் சொல்கிற மாதிரி ரசாயன உரங்கள் ரசாயன பூச்சி  மருந்துகள் எல்லாம் இல்லாமல் விவசாயம்  செய்தால் நல்லது தான். ஆனால  அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாம் அதிகம் சாகுபடி செய்ய வேண்டாமா? எல்லோர்க்கும் உணவு கிடைக்க ரசாயன விவசாயம் தான் சிறந்தது. அதில் தான் அதிக மகசூல் கிடைக்கும்” என்று அடிக்கடி கேட்டு உள்ளோம்

இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட அமெரிக்காவில் மிகவும் பெருமைக்குரிய University  of California Berkeley பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்

இதில் தெளிவாக வந்துள்ள முடிவுகள்:

– ரசாயன விவசாயத்திற்கு ஒப்பிட்டு பார்த்தால்  இயற்கை விவசாயத்தில்  கிட்டத்தட்ட 19% மகசூல் குறைவு
– ஆனால, ஒரே வயலில் பலவகை பயிர்களை சாகுபடி செய்வதால் (ஊடு பயிர்கள் ) (Multi-cropping) இந்த வித்தியாசம் 8% ஆக குறைகிறது
– பயிர்களை மறு சுழற்சி செய்தால் (Crop rotation) இந்த வித்தியாசம் 9% ஆக குறைகிறது
– கடலை பீன்ஸ் போன்ற பலவகை பயிர்களில் எந்த  வித்தியாசமும் இல்லை

ஆக மூலம் இயற்கை விவசாயத்தில் கிட்டத்தட்ட ரசாயன விவசாயத்தில் வரும் மகசூல் கிடைக்கும்,
இயற்கை விவசாயத்தில் செலவு குறைவானதால் லாபமும் அதிகம். ரிஸ்க் குறைவு..

நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்த்தல்  நீர்,நிலம் மாசுபடுதல் குறைகிறது. விவசாயிகள் ரசானயங்களை பயன் படுத்துவதால் வரும் உடல்நல கோளாறுகள் இல்லை

இந்த ஆய்வு அமெரிக்காவில் மிக பிரபலமான பல்கலை கழத்தில் இருந்து  வந்து உள்ளது… நம்பலாம் இல்லையா?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *