உயிரியல்முறையில் பப்பாளி மாவுப்பூச்சிக் கட்டுப்பாடு

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வகையான மாவுப்பூச்சிகள்தான் பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் (பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ்) எனும் பப்பாளி மாவுப்பூச்சி. இப்பூச்சியின் தாக்குதல் தமிழ்நாட்டில் முதன் முதலாக ஜுலை 2008 ஆம் ஆண்டு கோயமுத்தூர் பகுதியில் பப்பாளியில் கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலும் இப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. இப்பூச்சிகள் பப்பாளியை மட்டும் அல்லாது மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி, போன்ற பயிர்களையும், களைச்செடிகளையும் தாக்குகிறது எதிர்காலத்தில் மக்காச்சோளம் போன்ற பிற பயிர்களையும் தாக்கக்கூடும். காற்று, பறவைகள், விலங்குகள், தண்ணீர் மற்றும் மனிதர்களால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவக்கூடும்.

மாவுப்பூச்சி வேகமாக பரவக் காரணங்கள்

இப்பூச்சியின் உடல் முழுவதும் மெழுகு மற்றும் மாவு போன்ற வெள்ளை நிறப் பொருளால் கவரப்பட்டிருப்பதால் இதனை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.

அயல்நாட்டு பூச்சி என்பதாலும் அதற்கு இயற்கை எதிரிகள் இல்லாத காரணத்தாலும் இப்பூச்சிகள் மிக வேகமாக பரவி வருகிறது. ஒரு வருடத்தில் இம்மாவுப்பூச்சி 15 முறை இனப்பெருக்கம் செய்கிறது. மேலும் இவை அதிக முட்டையிடும் திறன் கொண்டது. ஒரு பூச்சி 500 முதல் 600 முட்டைகள் ஒரு வருடத்தில் இடும். இதனால் இதன் எண்ணிக்கை அதிக அளவில் பெருகி மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்துகிறது.

மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்

  • இலையின் அடிப்பகுதி குருத்து, கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக அடைபோல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும்.
  • சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.
  • பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன்மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும் அதிக தாக்குதலில் செடிகள் இலைகள் வாடி கருகிவிடும்.
  • இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
  • களைகளை அகற்றி வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்
  • பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச்செடிகளை பூச்சிகள் அதிகம் பரவாமல் பிடுங்கி அழிக்கவும்.

இயற்கை வழி மேலாண்மை

அசெரோபேகஸ்பப்பாயே @ 100 ஒட்டுண்ணிகளை / வயலில் / கிராமத்தில் அல்லது தொகுதியில் வெளியிடவும்.

நன்றி: TNAU


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *