ஆமணக்கு கரைசல் செய்வது எப்படி

பூச்சித் தாக்குதல்களால் பயிர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இவற்றை இயற்கை முறையில் அழிக்க நொதித்த ஆமணக்கு கரைசலை பயன்படுத்தலாம்.

கரைசல் தயாரித்தல்

5 கிலோ ஆமணக்கு விதைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து மண் பானை அல்லது தொட்டிகளில் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். அதன்பின் கலவையிலிருந்து வாசனை தோன்றும்.
5 லிட்டர் பானையில் 2 லிட்டர் நொதி வந்த கலவை மற்றும் 3 லிட்டர் நீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 மண் பானைகள் தேவைப்படும். மண்பானையின் வாய்ப்பகுதி மட்டும் தெரியும் அளவு புதைத்து வைக்க வேண்டும்.
தென்னந்தோப்பு, பாக்குத்தோப்புகளில் மரத்தின் அருகே புதைத்து வைத்தால் பூச்சிகள் பானையை நோக்கி வந்து விழுந்து இறந்து விடும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பூச்சிகளை துாக்கி எறிந்துவிட்டு மீண்டும் அதே கரைசலை பயன்படுத்தலாம்.

கட்டுப்படும் பூச்சிகள்


கூன் வண்டு, சாம்பல் நிற வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற பூச்சிகளும், பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்களின் சாம்பல் நிற வண்டையும் எளிதில் கட்டுப்படுத்தலாம். சிறுதானிய பயிர்களில் இக்கரைசலை பயன்படுத்துவதால் விளைச்சல் அதிகரிக்கும். எலிகளின் நடமாட்டம் குறைவாக இருக்கும்.

– எஸ்.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443590289

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *