நாகலிங்க மரம்!

பல தாவரங்கள் கடல் கடந்து நம் மண்ணை வந்தடைந்துள்ளன. அவை நம்மிடையே பரவலானது மட்டுமில்லாமல், நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறிவிடுவது உண்டு. அவற்றில் ஒன்றான மரம் தான் நாகலிங்க மரம்.

நாகலிங்க மரம் சராசரியாக 35 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இந்த மரத்தில் பு க்கள் கொத்துக்கொத்தாகப் பு க்கும்.

நாகலிங்க மரம் ஆண்டு முழுவதும் பு க்கும் தன்மை கொண்டது. அடிமரத்தில் இருந்து நேரடியாகக் கிளைகள் இல்லாமல் இருக்கும் மரம்.

நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பு க்கள் பு ப்பதால் மரமே பு க்கள் நிறைந்து காட்சியளிக்கும். ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூடப் பு க்கும்.

இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்ட மலர்கள் நறுமணம் வாய்ந்தவை.

நாகலிங்க மரத்தின் காய்கள் உருண்டையாக பந்து போன்று காணப்படும்.

நாகலிங்க மரத்தின் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும்.

பாம்பு படமெடுப்பது போன்ற மலரின் தோற்றத்தால் இந்த மலர் புனிதமாகக் கருதப்படுகிறது.


நாகலிங்க பு வும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீர்க்க பெரிதும் உதவுகின்றன.

இந்த மரத்தில் வேதிப்பொருட்களான டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் போன்றவை காணப்படுகின்றன.

நாகலிங்க மரத்தின் பட்டையும், காயும் நச்சுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இலைகள் தோல் நோய்களுக்கு மேற்பு ச்சாகி நிவாரணமளிக்கிறது. இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பு ஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.

நாகலிங்க மரத்தின் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

நாகலிங்க மரத்தின் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

பற்களை பாதுகாக்கும் இதன் இலைகளை மையாக அரைத்து, பு ஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமாகும்.

நாகலிங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

நாகலிங்க மரங்கள் இப்போது அரிதாகி வருகின்றன. சில சிவன் கோயில்களில் வெளியே கிடைக்கின்றன. இந்த மரங்களை நீங்கள் எங்காவது பார்த்தால் படம் எடுத்து, எந்த இடத்தில உள்ளது என்ற தகவலோடு gttaagri@gmail.com அனுப்பவும். tweet செய்யவும் !

நீங்கள் பெங்களூரில் வாழ்ந்தால், இவற்றை பார்க்க, கப்பன் பூங்கா செல்லுங்கள். அங்கே சிறுவர்களுக்கான ரயில் உள்ளது. அதன் டிக்கெட் கொடுக்கும் இடத்தில, வரிசையாக நாகலிங்க மரங்கள் இருக்கின்றன. அந்த இடமே குப் என்று வாசனையாக இருக்கும். whitefield சத்ய சாய் பாபா ஆஸ்பத்ரி உள்ள ரோட்டிலும் இந்த மரங்கள் உள்ளன


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நாகலிங்க மரம்!

  1. ஈஸ்வரன் says:

    நாகலிங்க செடி எங்கே கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள உதவவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *