ஆதிரெங்கத்தில் 2013 மே 25, 26ல் நெல் திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே, மாநில அளவில் நெல் திருவிழா வரும் 2013 மே 25,26ம் தேதிகளில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் நடக்கிறது.

இதுகுறித்து, “நமது நெல்லை காப்போம்’ மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறியதாவது:

  • நெல் திருவிழாவில், பாரம்பரிய நெல், இயற்கை வேளாண் முறையிலான தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, இடுபொருள் தயாரிப்பு, திருந்திய நெல் சாகுபடி முறை, ஒருங்கிணைந்த பண்ணையம், நீர் ஆதார பாதுகாப்பு, இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனை போன்ற தலைப்புகளில், தனித்தனி அரங்குகளில் கருத்தரங்கம் 25, 26ம் தேதிகளில் நடக்கிறது.
  • இதில், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த எளிய தொழில்நுட்பங்களை முன்னோடி விவசாயிகள் விளக்குகின்றனர்.
  • தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி பங்கேற்கிறார்.
  • தமிழக அரசின் வேளாண் துறை இயக்குனர் ராஜேந்திரன், பாரம்பரிய நெல் குறித்த நூலை வெளியிடுகிறார். திருவாரூர் கலெக்டர் நடராஜன், விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல்களை வழங்குகிறார்.
  • விழாவில், தமிழகம், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிஷா மாநிலங்களை செய்த முன்னணி விவசாய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
  • 60 நாள் முதல் 150 நாள் வயதுடைய பாரம்பரிய நெல் விதைகள், வறட்சி, வெள்ளம், புயல் உள்பட இயற்கை சீற்றங்களை தாங்கி வளரும் விதை நெல்கள், விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும்.”

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *