“”கொய்யா சாகுபடியில் உயர் தொழில்நுட்ப அடர் நடவு முறையை கடைபிடித்தால், மூன்று மடங்கு மகசூல் பெறலாம்”, என தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, பாப்பம்பட்டி, அய்யம்பாளையம், நத்தம், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 1,768 எக்டேரில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது.மக்களிடம் கொய்யா பழங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
சாதாரண கொய்யா நடவுமுறையில் 18 க்கு 18 அடி இடைவெளியில் நடவு செய்கின்றனர்.அதுவே அடர் நடவு முறையில் 10க்கு 10 அடி இடைவெளியில் நடவு செய்து, ஒரு ஏக்கரில் மூன்று மடங்கு கொய்யா மகசூல் கிடைக்கிறது.
இதனால் ஏராளமான விவசாயிகள் அடர் நடவு முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.
பழநி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பழனிச்சாமி கூறியதாவது:
- சாதாரண கொய்யாவை 14 முதல் 18 அடி இடைவெளியில் நடவு செய்வர். இதில் ஏக்கருக்கு 195 கொய்யா செடிகள் நடலாம். உயர் தொழில்நுட்பமான அடர் நடவில் 1111 செடிகள் நடலாம்.
- நடவு செய்த 2 ஆண்டுகளில் பயன்தரும்.
- இம்முறையில் வேர்களுக்கும், செடிகளுக்கும் பாதிப்பு எதுவும் வராது.
- சாதாரண நடவில் ஒராண்டில் ஒரு மரத்தில் 5 முதல் 10 கிலோ காய்கள் கிடைக்கும்.
- அதுவே அடர் நடவு முறையில் ஓராண்டில் 30 கிலோ கிடைக்கும்.
- சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தினால் சீராக செடிகளின் வேர்களுக்கு தண்ணீர் கிடைக்கும். அதனால் செடிகள் அடர்ந்து வளரும், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பழநி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பழனிச்சாமி our thanks to him palani rajasingh 9842102627,9150919502, he is very nice officer at dgl dt all so we or happy
கொய்யா அடர்நட