தென்னை பயிரிடும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பயனளிக்கும் விதத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் “தென்னை டானிக்’ என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தென்னை டானிக் ஊட்டப்பட்ட மரங்களில் குரும்பை உதிர்வது குறைந்து காய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், காய்களின் பருமனும் தரமும் அதிகரிக்கிறது.
- தென்னை டானிக்கில் நைட்ரஜன், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான், மாலிப்டினம் உள்ளிட்ட மரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் சரியான விகிதத்தில் கலந்து ஆக்சின், அஸ்கார்பிக் அமிலம் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
- மரத்தின் கார அமில நிலைக்கு டானிக்கின் கார அமில நிலையை அமைத்து இந்த டானிக் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், மரங்களில் டானிக் காரணமாக வேதியியல் செயல்பாடு பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும், மரத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும், வளர்ச்சி ஊக்கிகளையும் சேதாரமின்றி தருகிறது.
- தென்னை மரங்களுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துகளை சரியான விகிதத்தில் நேரடியாக மரத்துக்குள் செலுத்த முடியும். நோய், பூச்சித் தாக்குதல், வறட்சியைத் தாங்கும் வகையில் இயற்கையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

டானிக் செலுத்தும் முறை:
- மரத்திலிருந்து 3 அடி தள்ளி மண்பறித்து பென்சில் கனமுள்ள வெள்ளை நிற உறிஞ்சும் வேர் ஒன்றைத் தேர்வுசெய்து வேரின் நுனியை மட்டும் கத்தி மூலம் சாய்வாகச் சீவ வேண்டும்.
- பின்னர், டானிக் உள்ள பையின் அடிவரையில் வேரை நுழைத்து, வேரையும் பையின் மேல் பாகத்தையும் நூலால் கட்டி டானிக் சிந்தாத வகையில் மண் அணைக்க வேண்டும்.
- மண்ணின் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் 12 மணிநேரத்துக்குள் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும்.
- எனவே, வெயில் நேரத்திலும், மழை, பாசனம் இல்லாத நேரத்திலும் டானிக் கொடுப்பது சிறந்தது. தென்னை டானிக்கை தயாரித்த 30 நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
- ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய பலன்தரும் தென்னை மரத்துக்கு ஆண்டுக்கொரு முறை 50 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்டு, 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இடுவது அவசியம். மேலும், இத்துடன் ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 1 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3 கிலோ பொட்டாஷ் உரங்கள் தேவைப்படும்.
- இவற்றை இரு பிரிவாக 6 மாதங்களுக்கு ஒருமுறை இட்டு உடனடியாக நீர்பாய்ச்ச வேண்டும். மேலும், ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒருமுறை வேர் மூலம் டானிக் செலுத்துவதால் நுண்ணூட்டச் சத்து குறைபாடு நீங்கும். வளர்ச்சி ஊக்கிகள் தட்டுப்பாடும் நீங்கும். மரங்கள் செழிப்பாக வளர்ந்து உயர்விளைச்சல் கொடுக்கும்.
- ஒரு மரத்துக்கு 200 மில்லி டானிக் தேவை. இது பாலிதீன் பையில் அடைத்து சீலிட்டு ரூ.10-க்கு விற்கப்படுகிறது. தென்னை விவசாயிகள் அனைவரும் இந்த டானிக்கை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, 04622575552 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
சார் சிறப்பான பதிவு விவசாயிகளின் உற்ற நண்பன் நீங்கள். நன்றி டானிக் எவ்வாறு தயாரிப்பது?
சார்
தென்னை டானிக் தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் தயாரித்து விற்கிறது
இதை பற்றிய தகவல்களையும் கிடைக்கும் இடங்களையும் இங்கே பார்க்கலாம்
மகசூலை அதிகரிக்கும் தென்னை டானிக்
Sir,I need coconut tonic,what I do
சார் தஞ்சாவூர் மாவட்டம் வேப்பங்குளத்தில் கிடைக்கிறது.
சிறப்பான கட்டுரை
ஆனால் கிடைக்கும் இடம் பற்றி சரியான தகவல் இல்லாத வருத்தம்
Thangal kooriyathu unmai
Nan kadantha 10 varuda kalam
Veril moolam marunthu kodukkum
Tholilthan seithu varugiren
Uthavikku 9894523582 enra ennai thodarbu kollavum
I am from Vellore where to buy a coconut tonic near me