தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீக்கள் வளர்ப்பு குறித்த தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பூச்சியியல் துறை சார்பில் மாதம் தோறும் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (2015 ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது.

இதில், தேனீக்களின் இனங்களைக் கண்டறிதல், பெட்டிகளில் தேனீக்களை வளர்க்கும் முறை, நிர்வகிக்கும் முறை, தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிர்வாகம் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இதில், கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பயிற்சி நாளன்று காலை 9 மணிக்கு  பூச்சியியல் துறைக்கு வர வேண்டும். பயிற்சிக் கட்டணமாக ரூ. 250 வசூலிக்கப்படும்.

பயிற்சி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறை தெரிவித்துள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *