மண் சோதனை முறை வேளாண்துறை அட்வைஸ்

மானாவாரி நிலங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மண்ணின் ஊட்டச்சத்து குறைபாடுகளின் காரணமாக பயிர்களின் மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. மண்ணின் பண்புகள் உரமேலாண்மை முறைகளை கையாண்டு வந்தால் மண்வளத்தினை பாதுகாப்பதோடு, பயிர் விளைச்சலையும் அதிகரிக்கலாம். இதற்கு ஒரே வழி மண்மாதிரி எடுத்து பரிசோதனை செய்வதே ஆகும். எப்படி எடுக்கலாம்? மாதிரி எடுக்கும் ஆழம் புல் மற்றும் புல்வெளி 2 அங்குலத்தில் 5 செ.மீ,  நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சில தானியப் பயிர்கள் 6 அங்குலம்  மேலும் படிக்க..

உவர் நீரில் ஒருங்கிணைந்த பண்ணையம்

வானம் பார்த்த பூமியில் உவர் நீரில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் ஓசையின்றி சம்பாதிக்கிறார், ராமநாதபுரம் வழுதூரைச் சேர்ந்த விவசாயி த.சிவா. இவர் கூறுகிறார் – “பிளஸ் 2, கம்ப்யூட்டர் பயிற்சி முடித்து 2000ல் துபாய் சென்றேன். டிரைவராக 10 ஆண்டு வேலை செய்துவிட்டு ஊர் திரும்பினேன். மீண்டும் அங்கு செல்ல விருப்ப மில்லை. சொந்த கிராமத்திலேயே முன்னேற விரும்பினேன். எனது மூன்றரை ஏக்கர் நிலமான வறண்ட பூமியில் உவர் நீரில் மேலும் படிக்க..

குறைந்த நீரில் நல்ல மகசூல் பெற மக்காச்சோளம்

பொன்னமராவதி வட்டார விவசாயிகள் குறைந்த நீரில் அதிக வருமானம் பெற மக்காச்சோளம் பயிரிடலாம் என்றார் வேளாண் உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உணவு தானிய உற்பத்தியின் விளைச்சலை பெருக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே,குறைந்த நீரினை பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய சிறு தானியப் பயிர்களை சாகுபடி செய்து கூடுதல் மகசூல் மேலும் படிக்க..

நெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி?

நெல் அறுவடையின்போது விதை சேமிப்பு அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் சு.அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் ரகத்தினை பிற ரகத்துடன் கலக்காத வகையில் அறுவடை செய்து தனித்தனியாக சேமித்துவைக்க வேண்டும். பயிர் அறுவடை செய்யும் இயந்திரத்தை நன்கு சுத்தம் செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். முதலில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை விதைக்கு மேலும் படிக்க..

பழங்களின் மன்னன் மா!

ஒற்றை எழுத்தில் ஓர் கனி. உலக நடுகள் விரும்பும் அற்புத கனி. ஆண்டிற்கு ஒரு முறை தான் கிடைக்குமென்றாலும் முக்கனிகளில் முதலில் வைத்துப் போற்றப்படுவது ‘மா’. மாம்பழத்திற்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா? எத்தனை எத்தனை ரகங்கள்? எத்தனை நிறம்? எத்தனை மணம்? எத்தனை சுவை. இந்தப் பழம் கிடைக்கவில்லை என்று முருகப்பெருமான் கோவித்துக் கொண்டதும் நியாயமாகத்தான் படுகின்றது. மாவின் சுவை அலாதியானது. பழங்களின் அரசன் என அழைக்கப்படும் ‘மா’ இந்தியாவில் அதிகம் உற்பத்தியாகும் பழமாகும். இதன் அற்புதமான மேலும் படிக்க..

மண்ணால் புதிய கட்டிடக் கலை!

 இப்போது எந்த கட்டிடம் பார்த்தாலும் சிமெண்ட் இரும்பு கம்பி வைத்தே கட்ட படுகிறது. டிவி மற்றும் பத்திரிகைகளில் இரும்பு கம்பிக்கு பெரிய அளவில் விளம்பரம்! ஏதோ பிஸ்கட் அரிசி விளம்பரம் போல!! இந்த சிமெண்ட் இரும்பு கம்பி மூலம் கட்ட பட்ட வீடுகள் வெயிலை அப்படியே கிரகித்து இரவில் வெளியில் விடும். இதனால் தான் கான்க்ரீட் மூலம் கட்டப்பட்ட அபர்ட்மெண்ட் போன்ற வீடுகளில் ஏசி இல்லாமல் இரவில் இருக்க முடியாத சூழ்நிலை. இந்த நிலையில், இயற்க்கையில் கிடைக்கும் மேலும் படிக்க..

நொய்யலை மீட்பது சாத்தியமா?

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று நொய்யல். வரலாற்று சிறப்பு மிக்கதும்கூட. சோழர்கள் நொய்யலில் மேற்கொண்ட நீர் மேலாண்மை தொழில்நுட்பம் அபாரமானது. ஆற்றின் தண்ணீர் சிறிதும் வீணாகாமல் ஆற்றின் இருபக்கமும் 40-க்கும் மேற்பட்ட குளங்களை கட்டினர். ஆனால், நொய்யலின் இன்றைய நிலை மனம் நோக செய்கிறது. ஆறு இருந்த இடம் தெரியாமல் சிதைக்கப்பட்டு அதன் மொத்த நீளமான 160 கி.மீட்டரில் சுமார் 152 கி.மீட்டர் சாக்கடையாக ஓடுகிறது. ஏற்கெனவே நொய்யலை காக்க பல்வேறு அமைப்புகள் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும்கூட தொடர்ந்த மேலும் படிக்க..

இயற்கை முறையில் மா சாகுபடி செய்யும் ஐ.ஐ.டி இன்ஜினியர்!

‘ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒவ்வொரு விதம் பிரச்னை இருக்கும். நாங்கள் உயிர்எழுச்சி வேளாண் முறையை கடைபிடிக்கிறோம்,” என்கிறார், சென்னை மா விவசாயி முரளி. சிறந்த மா விவசாயி என, முதன்முறையாக இயற்கை விவசாயியான முரளிக்கு விருது கிடைத்துள்ளது பெருமை. சென்னையைச் சேர்ந்த முரளி புள்ளியியல் பட்டதாரி. பங்குதாரர் ஹரிசேதுராமன் ஐ.ஐ.டி.,யில் சிவில் இன்ஜினியராக பணியாற்றியவர். இருவரும் இணைந்து மதுராந்தகத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பொன்னம்மையில் 62 ஏக்கரில் கூட்டு விவசாயம் செய்கின்றனர். ரசாயன விஷம் கலக்காத மேலும் படிக்க..

சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம்

சித்திரை உழவு… பத்தரை மாற்று தங்கம் என்பது பழமொழி. ஏப்., மே மாதங்களில் 15 சதவீத கோடை மழை கிடைக்கிறது. மழை பெய்யும் போது நிலத்தின் சரிவிற்கு குறுக்காக 25க்கு 30 செ.மீ., உழவு செய்யும் போது மழைநீர் வழிந்தோடாமல் நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. இதனால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு வளமான மேல் மண் பாதுகாக்கப்படுகிறது. கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. போதுமான காற்றோட்டம் கிடைப்பதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள ரசாயன மேலும் படிக்க..

வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி

நாமக்கல்லில் வரும் 2016 ஏப். 11-ஆம் தேதி வாழை சாகுபடி தொழில்நுட்பம், வாழை நார் பிரித்தெடுக்கும் முறைகள் குறித்து இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 11-ஆம் தேதி காலை 9 மணிக்கு வாழை சாகுபடி தொழில்நுட்பம், வாழை நார் பிரித்தெடுக்கும் முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் கன்று மேலும் படிக்க..

மாவில் தத்து பூச்சி

மாமரங்கள் பூத்துள்ள நிலையில் வெயிலில் பளபளவென்று இலைகள் மின்னுகின்றதா… கவனம் தேவை! இலைகளை தொட்டு பாருங்கள். தேன் தெளித்தது போல பிசுபிசுப்பாக உள்ளதா. இலைக்கு மேலுள்ள பூங்கொத்துகளை தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என்று அர்த்தம். உற்று பார்த்தால் சிறிய பழுப்புநிற பூச்சிகளை பார்க்கலாம். இவற்றின் முட்டைகளை இளங்குருத்து, பூங்கொத்து, இலைகளின் காம்புகளை துளைத்து வைக்கின்றன. முட்டை உட்செலுத்தப்பகுதி மேற்புறத்தில் வாடி கருகிவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் மற்றும் முழு வளர்ச்சியடைந்த பூச்சிகள் இலைகுருத்து, பூங்கொத்துகளின் சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் மேலும் படிக்க..

மண் தரையில் காய வைப்பதால் தரத்தை இழக்கும் மிளகாய்

போதிய உலர் களம் இல்லாததால் அறுவடை செய்யும் மிளகாய்களை மண் தரைகளில் கொட்டி காயவைப்பதால் அவற்றின் தரம், நிறம் குறைகிறது. முதுகுளத்தூர் அருகே காக்கூர், கீழத் தூவல், பொன்னக்கனேரி, தேரிரு வேலி, உலையூர், கோடாரேந்தல், ஆதனக் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிட்டதட்ட 3 ஆயிரம் ஏக்கரில் விவ சாயிகள் மிளகாய் சாகுபடி செய் துள்ளனர். இவை தற்போது அறுவடை யாகி வருகிறது. அப்பகுதிகளில் போதிய உலர் களங்கள் இல்லாததால் மிளகாய்களை சாலையோரம் மணல் தரையில் பரப்பி காய மேலும் படிக்க..

தக்காளியில் நுண்காய் துளைப்பான் தாக்குதல்

தென்அமெரிக்காவின் ஊசி இலை துளைப்பான் அல்லது நுண்காய் துளைப்பான் தற்போது இந்திய தக்காளியில் தாக்குதலை துவக்கியுள்ளது. தர்மபுரி காரிமங்கலம் கொல்லுபட்டி கிராமத்தில் கடந்தாண்டு மார்ச்சில் இதன் தாக்குதல் கண்டறியப்பட்டது. பழுப்புநிற தாய் அந்து பூச்சிகள் நீள்வட்ட வடிவ வெண்ணிற முட்டைகளை இலையின் அடிப்பகுதி, இளம் மொட்டு, காயின் காம்புகளில் இடுகிறது. தண்டு, காய், பழங்களில் நுண்துளைகளை ஏற்படுத்துகிறது. இதனால் இலைகள் காய்ந்து செடிகள் வாடி வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படுகிறது.    கட்டுபடுத்தும் வழிகள் கோடை உழவு செய்வதன் மேலும் படிக்க..

மா மரத்தில் போரான் சத்துக் குறைபாடு

போரான் சத்துக் குறைபாட்டால் மா விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் நிலையில், அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் ஆ.ரேணுகா தேவி, எஸ்.முகமது ஜலாலுதீன் ஆகியோர் தெரிவித்ததாவது:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதில் பெங்களூரா, அல்போன்ஸா, செந்தூரா, நீலம் போன்ற பல்வேறு பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. நீலம் பழ ரகம் பொதுவாக மேலும் படிக்க..

அமெரிக்காவிலிருந்து இயற்கை விவசாயத்துக்கு!

“இயற்கை வேளாண்மைக்காக அமெரிக்க வீட்டையும் வேலையையும் துறந்து விட்டோம். ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீடு, இரண்டு கார் என சொகுசு வாழ்க்கையைக் கைவிட்டதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. புதிதாகச் சாதிக்கப் போகிறோம் என்ற சிந்தனையே எங்களிடம் மேலோங்கி இருந்தது” ஹேமாவும் தேவ்குமாரும் பேசும்போது எழும் ஆச்சரியத்தைச் சுலபமாக ஒதுக்கி வைக்க முடியவில்லை. இன்ஜினீயரிங் படிப்பு, ஐ.டி.கம்பெனியில் வேலை, கை நிறையச் சம்பளம் – இதுதான் இன்றைய இளைய தலைமுறையினர் பலருடைய கனவு, விருப்பம், லட்சியம் எல்லாமே. மேலும் படிக்க..

சூரிய ஒளி மின்சாரம் பயிர்களுக்கு தண்ணீர்

விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நீலகிரி மாவட்ட விவசாயிகள் தற்போது சூரிய ஒளி மின்சார பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதால் இங்கு கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி, கோதுமை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாய நிலங்கள் பள்ளத்தாக்குகள், சரிவான பகுதிகளில் அமைந்துள்ளன. பள்ளத்தில் உள்ள கிணற்றில் இருந்து டீசல் மோட்டார் மூலம் மேடான பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்று விவசாயிகள் பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். மேலும் படிக்க..

தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்… இருந்தும்..

தேங்காய் உற்பத்தியில் இதுவரை முதலிடத்தில் இருந்த கேரள மாநிலத்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி… முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழகம். முன்னாள் கோவை ஆவின் சேர்மனும் முன்னோடி தென்னை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஆர்.ராஜகோபால் பேசியபோது, “இது தமிழகத்துக்கு பெருமைதான். தமிழ்நாட்டில் 9 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கலாம். ஆரம்பத்தில் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில்தான் தென்னை விவசாயம் பரவலாக இருந்தது. ஆனால், அந்த நிலை மாறிவிட்டது. தஞ்சாவூர் மாவட்டம் மேலும் படிக்க..

வறட்சியை தாங்கும் உத்திகள்

மானாவாரி சாகுபடியில் மழைப்பொழிவு, மழையளவை பொறுத்து பயிர் விளைச்சலும், உற்பத்தியும் மாறுபடுகிறது. அறிவியல் ரீதியான நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் விளைச்சல், உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. முன்பருவ வறட்சி என்பது பருவமழை தாமதமாக துவங்குவதாலும், மழை துவங்கி விதைத்தபின் 3 முதல் 5 வாரங்களுக்கு ஏற்படும் இடைவெளியில் உண்டாவது. பிந்தைய மழைக்கான பயிர் ரகங்களை தேர்வு செய்து மறு விதைப்பு செய்யலாம். விதையை கடினப்படுத்தி விதைக்க வேண்டும். மழைநீர் சேமிப்புக்கான பகுதி பாத்திகள், வரப்பும் அமைத்தல்; மேலும் படிக்க..

செண்டுமல்லி பயிரிட்டால் வருடம் முழுவதும் வருமானம்

தோட்டக்கலை பயிர்களிலேயே அதிக அளவில் தினமும் வருவாய் தரக்கூடியதும், ஆண்டு முழுவதும் மகசூல் கொடுக்கக் கூடியது மலர்ப் பயிர்கள் மட்டுமே. அதிலும், உதிரி மலர்கள் வரிசையில் வருவாயை அதிக அளவில் அள்ளிக் கொடுப்பது செண்டுமல்லி ஆகும். களர், உவர் நிலங்கள் அல்லாத அனைத்து வகை நிலங்களிலும் வளரக்கூடிய செண்டுமல்லியைப் பயிரிடுவதும், பாதுகாப்பதும் எளிமையானது என்பதால் விவசாயிகள் அதிகம் விரும்பக்கூடிய மலர்ப்பயிர் செண்டுமல்லி விளங்குகிறது. செண்டுமல்லியில் பலவித ரகங்கள் உள்ளன. அவை எம்.டி.யு.1, உள்ளூர் மஞ்சள், ஆரஞ்சு வகைகள், மேலும் படிக்க..

ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயியின் அனுபவம்

” ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவின்றி இயற்கை முறையில் விவசாயம் செய்வது. தமிழகத்தில் இந்த பழைய முறை புதிய மாற்றத்தை அளித்துவருவது மகிழ்ச்சியான விஷயம். நானும் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் கடந்த 9 ஆண்டுகளாக 24 ஏக்கரில் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன்”  என்கிறார் மதுரை வாடிப்பட்டி திருவாலவாய நல்லூரைச் சேர்ந்த விவசாயி பார்த்தசாரதி.இயற்கை விவசாய அனுபவங்களை கூறியதாவது:’ 8 ஏக்கரில் நெல், 2 ஏக்கரில் காய்கறி, 7 ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது. இரண்டு மேலும் படிக்க..

கொத்தமல்லி செடி சாகுபடியில் குறுகியகாலத்தில் அதிக பலன்

ஆண்டிபட்டி பகுதியில் குறுகிய காலத்தில் அதிக பலன் தரும் கொத்தமல்லி செடி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கீரையாகப்பயன்படும் கொத்தமல்லி செடியின் இலைகள் சமையலில் சுவை மற்றும் மணத்திற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. மூலிகைத்தன்மை கொண்ட இவை குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே செழித்து வளரும் தன்மை கொண்டதால் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படுவதில்லை. ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம் கிராமங்களில் விவசாயிகள் சிலர் கொத்தமல்லி செடி சாகுபடி செய்துள்ளனர். மழை மற்றும் பனிக்காலங்களில் நடவு செய்யப்படும் இச்செடிகள், மேலும் படிக்க..

கோழிகளுக்கு கழிச்சல் கட்டுப்படுத்துவது எப்படி?

கோடையில் கோழிகளுக்கு ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்த, பண்ணையாளர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மண்டல கால்நடை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியதாவது: வெள்ளைக்கழிச்சல் நோயானது கோடை காலத்தில், எல்லா வகையான கோழிகளையும் எளிதில் தாக்கி கொல்லக்கூடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தடுப்பூசியே இதற்கு மருந்தாகும். இந்நோய் தாக்கிய கோழிகள் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் கழிச்சல் போகும். தலையை ஒரு பக்கமாக இழுத்தவாறு காணப்படும். கழுத்து முருக்கல், தலை திருகல், பின்னோக்கி தள்ளாடி நடத்தல், இரை மேலும் படிக்க..

இனி வாஷிங் மெஷினுக்கு வேலையில்லை!

வாஷிங்மெஷினுக்கு இனி வேலை இருக்கப் போவதில்லை. வாஷிங்மெஷின் வேலையை இனி டோல்ஃபி என்ற சிறிய கருவியே செய்துவிடப் போகிறது. ஒரு சோப் அளவுக்கு கையடக்கமாக இருக்கும் டோல்ஃபி, அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது. ஒரு வாளியில் தண்ணீர் விட்டு, சோப்புத் தூளைச் சேர்த்து, அழுக்குத் துணிகளை போட்டு விட வேண்டும். டோல்ஃபியை ஆன் செய்து வாளியில் வைத்து விட வேண்டும். டோல்ஃபியில் இருந்து சக்தி வாய்ந்த அல்ட்ராசோனிக் அலைகள் உருவாகி, குமிழ்களை ஏற்படுத்தும். துணிகளில் உள்ள அழுக்குகள் மேலும் படிக்க..

நதிகளை பாதுகாப்பது அரசின் கடமை: அன்னா ஹசாரே

‘நதிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி, நீராதாரங்களை பாதுகாப்பது அரசின் கடமை,” என, சமூக சேவகர் அன்னா ஹசாரே வலியுறுத்தினார். கோவை, ஆலாந்துறையில் உள்ள கூடுதுறையில், ‘சிறுதுளி’ அமைப்பின், ‘நொய்யலை நோக்கி’ நிகழ்ச்சி, நேற்று நடந்தது. சமூக சேவகர் அன்னா ஹசாரே, தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீராதாரங்களை மீட்க, ‘சிறுதுளி’ அமைப்பு, நல்ல திட்டங்களை கையில் எடுத்துள்ளது. இதன் நேர்மையான செயல்பாடுகளால், இணைந்து செயல்பட வந்துள்ளேன். என், 25வது வயதில், ‘உலகில் எதற்காக இருக்கிறோம்?’ மேலும் படிக்க..

அழிந்து வரும் இலுப்பை!

பாலை நிலத்தில், வேனிற்காலத்தில், நீர் வேட்கையைத் தணிக்கப் பழங்குடித் தமிழர் இலுப்பைப் பூக்களைத் தின்றனர், பூக்களின் சாறைக் குடிநீர் போன்று பருகினர். பூக்களை அரைத்துப் பாலுடன் கலந்து குடித்தனர். வேடர் குலப் பெண்கள் கீழே உதிர்ந்த பூக்களை ஒன்று திரட்டி, மூங்கில் குழாய்களுக்குள் அடைத்து, கிராமங்களுக்குச் சென்று விற்பர் என்று அகநானூறு 381-ம் பாடல் குறிப்பிடுகிறது. விற்காத பூக்களை அதே மூங்கில் குழாய்களுக்குள் அடைத்து வைத்து, நொதிக்கச் செய்து, நாள்பட்டவுடன் சாராயமாக வேட்டுவ மக்கள் குடித்தனர். பூக்களிலிருந்து மேலும் படிக்க..

இயற்கை பலா சாகுபடி

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியில் இயற்கை உரம் மூலம் பலா மரங்களை வளர்த்து, ஆண்டு தோறும் ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் சம்பாதித்து வருகிறார் விவசாயி எம்.ஆபிரகாம் அவர் கூறும்போது: கிராமத்தில் மா, பலா, தென்னை, கொய்யா உள்ளிட்ட பழ பண்ணை வைத்து, அதில் ஆடுகள் வளர்க்கிறேன். இதற்காக மா, பலா, தென்னை மரங்களுக்கு இடையே சொட்டு, தெளிப்பு நீர் பாசன கருவி மூலம் தண்ணீர் தெளித்து பசும்புற்கள் வளர்க்கிறேன். இவை ஆடுகள் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றன. ஆடு, மேலும் படிக்க..

காகிதக்கூழ் நாற்றுகள் தேவையா?

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு காகிதக்கூழ் மர இளம் நாற்றுகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. சவுக்கு மரம் 3 ஆண்டுகள், மீதி பயிர்களை ஐந்தாண்டுகள் வளர்க்க வேண்டும். குறைந்த பட்சமாக ஒரு ஏக்கரில் இருந்து அதிகபட்சமாக எவ்வளவு ஏக்கரிலும் இம்மரங்களை வளர்க்கலாம். சவுக்கு மரத்திற்கு தண்ணீர் வேண்டும். மற்ற பயிர்களுக்கு ஆரம்பகட்டத்தில் தண்ணீரும் ஆண்டுக்கு 800 – 900 மி.மீ., மழையே போதும். எங்களிடம் பதிவு செய்த நாளில் ஒப்பந்தம் இடுகிறோம். மரம் மேலும் படிக்க..

பப்பாளியில் கள்ளிப்பூச்சி தாக்குதல்

தமிழ்நாட்டில் சில இடங்களில்  பப்பாளி மரங்களில் கள்ளிப்பூச்சிகள் தாக்குதல் அதிகமாக உள்ளது. இது சாறு உறிஞ்சும் பூச்சி வகையை சார்ந்தது. மஞ்சள் நிற உடலுடன் மெழுகு போன்று பால் நிறத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட பப்பாளி செடியின் தரைப்பகுதிக்கு மேல் இலை, தண்டுப்பகுதி, பழம் ஆகியவை பருத்தி இலை போன்று கொத்தாக காணப்படும். தேன் போன்ற திரவத்தை உடலில் சுரப்பதால் கருமைநிற பூஞ்சாணம் வளரும். இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றி மகசூல் பாதிக்கப்படும். கட்டுப்படுத்தும் முறை இதற்கான மேலும் படிக்க..

வெள்ளாடு வளர்ப்பில் லாபம்

வெள்ளாடு வளர்ப்பு என்பது லாபகரமான தொழில் என்றாலும், அதிகபட்ச முதலீடு தேவை என பலரும் இதில் களமிறங்க தயங்குகின்றனர். சில புதுமையான யுக்திகளை கையாண்டால் வெள்ளாடு வளர்ப்பில் அதிக லாபம் சம்பாதிக்கலாம். வெள்ளாட்டின் பாலுக்கு பல மருத்துவ குணம் உண்டு. குறிப்பாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. குடல்புண் ஆற்றுவதற்கு அருமருந்தாகவும் உள்ளது.இதுகுறித்து கால்நடை மருத்துவகல்லூரி பேராசிரியர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘வெள்ளாடு வளர்ப்பில் ஆடுகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது. இறைச்சி, பால் உற்பத்தி என அதன் மேலும் படிக்க..

நெல்லை விட கேழ்வரகில் லாபம் அதிகம்?

நெல் பயிருக்கு இணையாக கேள்வரகு பயிரிட்டு கூடுதல் லாபம் சம்பாதிக்கலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்கழஞ்சியம் என அழைக்கப்படுவது திருவாடானை தாலுகாவாகும். இங்கு நெல் பயிர் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சில சமயங்களில் சரியான மழை பெய்யாததால் விவசாயம் பொய்த்து விடுகின்றது. தற்போது ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஊரணங்குடி, கடலுார், சித்துார்வாடி உள்ளிட்ட சில கிராமங்களில் கேழ்வரகு பயிரிட்டுள்ளனர். வறட்சியை தாங்கக்கூடிய கேழ்வரகு விவசாயம் செய்தால் வறட்சியான காலங்களில் கூட அதிக மகசூல் மேலும் படிக்க..

'இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்!'' – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா

“Kodaikanal won’t Kodaikanal won’t Kodaikanal won’t step down until you make amends now…” என்று துவங்கும்  இந்த பாடலை நிச்சயம் நீங்கள் கேட்டு இருப்பீர்கள் எந்த வெகுஜன ஊடகங்களிலும் இந்த பாடல் ஒளிப்பரப்பபடவில்லை… ஆனால், இந்த பாடல் யுனிலிவருக்கு எதிரான கொடைக்கானல் மக்கள் போராட்டத்திற்கு முக்கிய ஆயுதமாக இருந்தது.   அந்த பாடலில் வரும்  ராப் இசையுடன் கூடிய அந்த பெண்ணின் அலட்சிய குரல், யுனிலிவரை கிண்டல் செய்தது, கோபக் கேள்விகளை வீசியது, மக்களை மேலும் படிக்க..

பாட்டில் குடிநீர்: அறிந்ததும் அறியாததும்!

மார்ச் 22 உலக நீர் தினம் வெயில் காலம் வந்து விட்டது . உடல் வெப்பத்தையும் தண்ணீர் தாகத்தையும் தணித்துக்கொள்ளத் தண்ணீர் தேவைப்படும். அந்தக் காலத்தில் வீட்டுக்கொரு பானைத் தண்ணீர் தாகம் தணித்தது. பொது இடங்களில் தண்ணீர் பந்தல்கள் முளைத்தன. தண்ணீரைப் போய் யாராவது விற்பார்களா என்று கேட்டுக்கொண்டிருந்த காலம் போய், தண்ணீர் வர்த்தகம் மிகப் பெரிய அளவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் காலம் இது. தண்ணீர் இன்றைக்கு இலவசமில்லை. எவ்வளவு அவசரமென்றாலும், ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரை மேலும் படிக்க..

பிரதமர் மோடி ஆசி பெற்ற தமிழக விவசாயி பூங்கோதை!

டெல்லியில் சிறந்த விவசாயிக்கான விருதை, தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண் விவசாயி பூங்கோதைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். அப்போது,  பூங்கோதையை குனிந்து கும்பிட்டு பிரதமர் ஆசி பெற்றார். டெல்லியில் விவசாயிகள் முன்னேற்ற மாநாடு நேற்று தொடங்கியது. கடந்த நிதியாண்டில் விவசாயத்தில் சாதனைகளை புரிந்த விவசாயிகளுக்கு பிரமதர் மோடி கிருஷி கர்மண் விருதுகளை வழங்கி கவுரவித்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண் விவசாயி பூங்கோதையை குனிந்து கும்பிட்டு பிரதமர் ஆசி பெற்றார். மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் வேம்பு

விவசாயம், காய்கறித் தோட்டம், மாடித் தோட்டம் என எதுவென்றாலும் வேம்பை அடிப்படையாகக் கொண்ட பொருட்களைப் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தலாம். வேம்பு சிறந்த இயற்கை பூச்சிக்கொல்லி, செலவும் குறைவு. இது குறித்துச் சென்னையில் உள்ள இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள ‘இயற்கை விவசாயத்தில் வேம்பு’ என்ற புத்தகம் தரும் யோசனைகள்: வேம்புப் பொருட்கள் 200 வகைப் பூச்சிகளைக் கட்டுப் படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கட்டுப்படுத்தப்படும் பூச்சிகளில் பல, பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புசக்தி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பயன்பாட்டிலிருக்கும் மேலும் படிக்க..

பசுந்தீவன மற்றும் விதை உற்பத்தி பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 மார்ச் 28ஆம் தேதி பசுந்தீவன மற்றும் விதை உற்பத்தி பயிற்சி நடைபெற உள்ளது கலந்து கொள்ளும் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு 04427452371

நிலக்கடலையில் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி

நாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 மார்ச் 31 ஆம் தேதி நிலக்கடலையில் பூச்சி, நோய் மேலாண்மை  பற்றிய  பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு தொலைபேசி – 04286266345

மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

நாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 மார்ச் 28ஆம் தேதி   மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய  பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு தொலைபேசி – 04286266345

மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி

நாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 மார்ச் 30ஆம் தேதி மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய  பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம் தொடர்புக்கு தொலைபேசி – 04286266345

இயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் , மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் 2016 மார்ச் 29ஆம் தேதி இயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற உள்ளது கலந்து கொள்ளும் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளவும் மேலும் விவரங்களுக்கு 04285241626  

குப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்!

சாதி சீழ் படிந்த ஊர், பெண் சிசுக் கொலை அதிகம் நடந்த ஊர் என்று நமக்கு மோசமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தருமபுரியின் மொத்த பிம்பத்தையும், நூறு இளைஞர்கள் கரம் கோர்த்து மாற்றி இருக்கிறார்கள். இப்போது இந்த ஊர் நீர் மேலாண்மையில், மொத்த தமிழகத்திற்குமே வழிகாட்டியாக இருக்கிறது. ஆம், குப்பை மேடாக, சீமை கருவேலம் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஏரிக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள். இலக்கியம்பட்டி ஏரி, தருமபுரி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக மேலும் படிக்க..

மோசாமான டெல்லி காற்றால் நுரையீரல் பாதிப்பு

டில்லியில் சில காலம் வசித்தாலே போதும், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் நுரையீரல் பாதிப்பு வந்து விடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. டில்லியில் வசிக்கும் மக்களில் 34.5 சதவீதம் பேர் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. டில்லியில் ஒற்றை-இரட்டை இலக்க பதிவெண் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி சார்பில் டில்லியில் வசிப்பவர்களிடம் நுரையீரல் பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. புகைபிடிக்கும் பழக்கும் உள்ளவர்கள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் மேலும் படிக்க..

கருவேலமரங்களை தனி ஒருவராக அழித்து வரும் மனிதர்

விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சி கருப்பசாமி நகர் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை தனி மனிதர் ஒருவர் அகற்றி வருகிறார். விருதுநகர் மாவட்டம் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணமே மாவட்டம் முழுவதும் உள்ள கருவேலம் மரங்களே என ஆய்வு கூறுகிறது. விருதுநகரில் உள்ள கருப்பசாமி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதிகளில் கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன . இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் மேலும் படிக்க..

சேதாரமின்றி நெல் அவிக்க..

விவசாயத்தில் பாரம்பரியத்தை பின்பற்றினாலும் நவீன தொழில்நுட்பத்தை கைப்பிடித்தால்தான், நஷ்டமின்றி லாபம் பார்க்க முடியும்,” என்கிறார் மதுரை வயலூர் வழி மூலக்குறிச்சியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி. நெல் அவிப்பதிலும் முறையான தொழில்நுட்பத்தை பின்பற்றினால்தான் குருணை அதிகமின்றி முழுஅரிசி பெறமுடியும் என நிரூபித்து காட்டியுள்ளார். அவர் கூறியது: ஒரு ஏக்கர் நிலத்தில் நெல்சாகுபடி செய்கிறேன். நிலத்திலேயே ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கிறேன். அவற்றின் எருக்கள்தான் பயிருக்கு உரங்கள். வேறெந்த ரசாயனமும் சேர்ப்பதில்லை. 2 ஏக்கர் நிலத்தில் பழமரங்கள் வளர்கின்றன. 100க்கு 100 மேலும் படிக்க..

வீடுகளில் உளுந்து, துவரை வளர்க்கலாம்

வீடுகளில் அடுக்கு முறையில் உளுந்து, துவரை செடிகள், இயற்கை முறை முள்ளங்கி, எள்செடிகள் வளர்ப்பு குறித்த ஆராய்ச்சியில் மதுரை விவசாய கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.உழவியல் துறைத்தலைவர் சாமிநாதன், உதவி பேராசிரியர் சத்தியமூர்த்தி வழிகாட்டுதலில் நான்காம் ஆண்டு மாணவர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் கூறியதாவது: மண்ணில்லாமல் முள்ளங்கி சரவணன்: மட்கிய தென்னை நார், வண்டல் கழிவு, இலைச்சருகு, மண்புழு உரம், தொழுஉரம், ஆட்டுகழிவுகளை வெவ்வேறு விகிதங்களில் கலந்து 20 தொட்டிகளில் முள்ளங்கி வளர்க்கிறேன். தற்போது மேலும் படிக்க..

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

‘வரும், 2016 மார்ச் 29ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது’ என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் அகிலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 மார்ச் 29ம் தேதி , காலை, 9 மணிக்கு, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடக்கிறது. முகாமில், நாட்டுக்கோழி ரகங்கள், வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள், குஞ்சு மேலும் படிக்க..

ராதா வாய்க்காலும் ரங்கநாயகியும்!

நமது விவசாய முறை பாரம்பரியம் நிறைந்தது. வேளாண் அறிஞர்களும் அறிவியலாளர்களும் சேர்ந்து விவசாயத்தை வளப்படுத்திய வரலாறு நம்முடையது. விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ள நாட்டில் விவசாயம் பற்றிய புரிதலும் அது சார்ந்த அறிவியல் ரீதியான அணுகுமுறைகளும் சிறப்பாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அப்படி வழிவழியாக விவசாயம் பார்த்துவந்த நமது விவசாயிகள், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீருக்காகப் படாத பாடுபடுகின்றனர். பாசனத்துக்கு நீரின்றி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படியொரு நிலையில்தான் மாற்றத்துக்கான சாவியைக் மேலும் படிக்க..

காளான் வளர்ப்பு:இலவச பயிற்சி

புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் சார்பில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநர் சு. ரமேஷ் வெளியிட்ட தகவல்: எங்களது பயிற்சி நிலையத்தின் சார்பில் படித்து,வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்கள், மகளிர்க்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் நோக்கில் அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறோம். அதன்படி, தற்போது காளான் வளர்க்கும் தொழில்நுட்பங்கள் குறித்து 6 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில்,சேர விரும்பும் மேலும் படிக்க..

நிலத்தடி நீரைப் பாதுகாக்க…

வருகிற 2,030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் வறட்சியாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் வெள்ளை அறிக்கை கூறுகிறது. கையால் மணலை அள்ளி அகற்றிவிட்டு, ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று 200 அடிக்கும் கீழேதான் நிலத்தடி நீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கீழ்நோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறது. பருவமழைக் காலங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழை மேலும் படிக்க..

நெல்லி சாகுபடியில் லாபம் எடுக்கும் விவசாயி

திண்டுக்கல் – தாடிக்கொம்பு ரோட்டில் உள்ளது பூதிப்புரம். இங்குள்ள விவசாயி ராஜூவின் நெல்லித்தோட்டம் 2.5 ஏக்கரில் உள்ளது. இதில் ஒரு ஏக்கரில் 265 பெருநெல்லி மரங்களும், மூன்று சிவப்பு நெல்லி மரங்களும் நட்டுள்ளார். சிவப்பு நெல்லி (பி.எஸ்.ஆர்.1) மரங்களிலுள்ள பூக்களில் ஆண் மகரந்த தூள்கள் உள்ளன. அவை பெருநெல்லி மரங்களின் மகரந்த தூளுடன் சேர்ந்து மகசூலை அதிகரிக்கின்றன. இதனை முறையாக பயன்படுத்தி ஆட்டுச் சாணம், மக்கிய தொழு உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நெல்லி சாகுபடியில் ஏக்கருக்கு ஆண்டுக்கு மேலும் படிக்க..

மழையிலும் லாபம் கொடுத்த தக்காளி

‘ஐந்து மாத தக்காளி பயிரில் மழை பெய்தபோதும் சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்து லாபம் ஈட்டினேன்,” என்கிறார், மதுரை வாடிப்பட்டி செம்மினிபட்டியைச் சேர்ந்த சின்னசாமி.ஒட்டுரக தக்காளியின் விட்டுகொடுக்காத லாபம் குறித்து அவர் கூறியது: 3 ஏக்கரில் தோட்டம் உள்ளது. 1987வரை திராட்சை பயிரிட்டேன். 15 ஆண்டுகளாக சப்போட்டா மரங்கள் வளர்த்தேன். எல்லாவற்றையும் அழித்து விட்டு காய்கறி பயிர் செய்கிறேன். மழை இல்லாததால் போர்வெல் வறண்டு போனது. இருக்கும் தண்ணீரை வைத்து ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்கிறேன். மேலும் படிக்க..

நாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு 2 நாள் பயிற்சி

2016 மார்ச் 23ம்தேதி மற்றும் 24ம்தேதிகளில் நாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு” குறித்து இரண்டு நாள் பயிற்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பேராசிரியர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும் 2016 மார்ச் 23ம்தேதி மற்றும் 24ம்தேதிகளில் “லாபகரமான நாட்டுக்கோழி, மற்றும் வாத்து வளர்ப்பு” குறித்து இரண்டு நாள் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கோழி வளர்ப்பு மேலும் படிக்க..

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி

நாகப்பட்டினத்தில் வெள்ளாடு வளர்ப்பு தொடர்பாக இலவச ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை (2016 மார்ச் 23) நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ, அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் வெள்ளாடு வளர்ப்பு என்னும் தலைப்பில் இலவச ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சியில் வெள்ளாட்டினங்கள், இடத்தேர்வு, கொட்டகை அமைக்கும் முறை, தீவன பராமரிப்பு, நோய்த் தடுப்பு மேலும் படிக்க..

சென்னை அருகே எஞ்சியுள்ள நரிகள் !

இந்த கட்டுரை சென்னையில் உள்ள அரசியல் குள்ள நரிகளை பற்றி அல்ல! சென்னைக்கு மிக அருகில் ரியல் எஸ்டேட் வீட்டுமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கின்றனவோ இல்லையோ, இயற்கை செழிக்கும் இடங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பழவேற்காடு உப்புநீர் ஏரி. இந்தியாவிலேயே மிகப் பெரிய இரண்டாவது உப்புநீர் ஏரி இது. கிழக்கிந்தியக் கடற்கரைப் பகுதியில் வலசை வரும் பறவைகள் பெருமளவு கூடும் மூன்றாவது முக்கிய நீர்நிலை இது. இதையொட்டிப் பல்வேறு சதுப்புநிலங்களும் காயல்களும் பெருமளவு உள்ளன. நடனப் பறவை மேலும் படிக்க..

இன்று உலக சிட்டுக்குருவி தினம்

‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா’…, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’… ‘ஏய் குருவி, சிட்டுக் குருவி’ என்று தொடங்கும் பல சினிமா பாடல்கள் நமக்கு சிட்டுக்குருவியை நினைவுப்படுத்துகின்றன. தொல்காப்பியத்திலும், பாரதியார் கவிதைகளிலும் சிட்டுக்குருவியின் பெருமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. புறநானூற்றுப் பாடலில் உள்ள ‘‘குரீஇ’’ என்ற சொல்லே மருவி குருவி என்று ஆனது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் ‘மனையுறை குருவி’ என்று நம்முடைய சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. காடு, மேடு, வயல்வெளி, வீடுகள் என சுதந்திரமாக திரிந்த சிட்டுக்குருவியின் மேலும் படிக்க..

இயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்!

திட்டமிட்டு முறையான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தினால், விவசாயம் போல் கொட்டிக் கொடுக்கும் தொழில் வேறு எதுவும் இல்லை என்பதை நிரூபித்து வருகிற விவசாயிகள் பலர் உண்டு. இந்த வரிசையில் இணைகிறார் கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த குரியன் ஜோஸ். இவர் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்து மகத்தான இலாபம் ஈட்டி வருகிறார். தமிழகத்தின் தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள கழுதை மேடு பகுதியில், பொட்டல் காடாக இருந்த நிலத்தை வாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கடின மேலும் படிக்க..

பருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை

பருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை வழிகளை பார்ப்போமா? இலை தத்துப் பூச்சி மேலாண்மை: எம். சி. யூ 3, எம். சி. யூ 5  மற்றும் எம். சி. யூ 9 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல். விளக்குப் பொறி வைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழித்தல். கிரைசோபா கமீனா என்ற ஒட்டுண்ணியை விடுதல். மழை அதிகமாகப் பெய்யும் காலங்களில், பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்க காலத்திற்கு முன்னதாக மற்றும் பருத்திகளின் இடைவெளியைக் குறைத்தும் பயிரிட வேண்டும். பருத்தி மேலும் படிக்க..

நெற்பயிரில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு

தேவகோட்டை அருகே கண்ணங்குடி வட்டாரத்தில் 7ஆயிரத்து 240 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பயிர்களில் குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் உள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இதனை நோய் என்று அறியாமல் பூச்சியால் வந்த சேதமென்று எண்ணி பூச்சிமருந்துகளை தெளிக்கின்றனர். இந்நிலையில் நோய்கள் அதிக அளவில் தென்பட்ட கப்பலூரில் விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் சுப்புலெட்சுமி தலைமை வகித்தார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய வேளாண் மேலும் படிக்க..

வெண்டை சாகுபடி: 45 நாளில் மகசூல்!

தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் முழுமையாகக் கடைப்பிடித்து, 45 நாளில் மகசூல் தரும் வெண்டை சாகுபடி செய்து லாபம் ஈட்டலாம் என, வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.  ரகங்கள்: கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி, வர்சா உப்கார்.  மண் – தட்பவெப்பநிலை: வெண்டை வெப்பம் விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள் இதற்குத் தேவை. பனி மூட்டத்தால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் மேலும் படிக்க..

தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்!

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையும், பால்வளத் துறையும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வேலூர் மாவட்டம், நெமிலி வட்டாரத்துக்கு உள்பட்ட கீழ்வீதி கிராமத்தில் 50 ஏக்கரில் ரூ.64.26 லட்சம் நிதியில் கால்நடை தீவனப் பண்ணை அமைத்து கால்நடைகளுக்குத் தேவையான பல்வேறு வகையான தீவனப் பயிர்களை பயிரிட்டு வருகின்றன.  கால்நடைகளுக்கான தீவனம் எனும் நிலையில், முதலிடத்தைப் பெறுவது தீவன மக்காச்சோளம் ஆகும்.  இதை, இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். இப்பயிருக்கான மேலாண்மையில் மேலும் படிக்க..

.நாவல் சாகுபடி தொழிற்நுட்பம்

நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.இது நிரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரம் என்றே கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பயிரிடுவது குறைவாக உள்ளது ஏனெனில் சாகுபடி முறைகள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கப்பெறாதது, குட்டையான மற்றும் அதிக மகசூல் வகைகள் கிடைக்கப்பெறாதது ஆகியவையாகும். நாவல்பழம் உள்நாட்டில் வர்த்தக மதிப்பு மிக்க பழமாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருப்பு பிளம்ஸ், இந்திய கருப்பு செர்ரி மற்றும் ராம் நாவல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மரம் மேலும் படிக்க..

வீணாக்க படும் உணவும் மரபணு தொழிற்நுட்பமும்

சில நாட்கள் முன்பு ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் பேசிய மார்க் லினாஸ் என்ற பேராசிரியர் “உலகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க 100% உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். இதற்கு மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்பம் தேவையே”  என்றார்.இது எந்த அளவு உண்மை என்று பார்ப்போம் இன்றைய தேதியில் உலகத்தில் 700 கோடி பேர் உள்ளனர். 2050 ஆண்டு இந்த மக்கட்தொகை 900 கோடி எட்டும் என கணக்கிட பட்டு உள்ளது. 2012 ஆண்டில் உலகத்தில் 87 மேலும் படிக்க..

காளான் வளர்ப்பு பயிற்சி

சென்னையில் தமிழ் நாடு வேளாண் பலகலை கழகத்தில் வரும் 2016 மார்ச் 18 தேதி ஒரு நாள் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்க பட இருக்கிறது. தொடர்புக்கு – 04426263484 நன்றி:ஹிந்து

மரம் வளர்ப்பில் 7 ஆண்டில் … ரூ 20 லட்சம்

விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்… வாழ்க்கை முறை, பணிச்சூழல் ஆகிய காரணங்களால், விவசாயத்தைத் தொடர முடியாத பலரும், நிலங்களைப் பராமரிக்க முடியாமல், விற்று விடுவது வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட நிலத்தை விற்க மனமில்லாமல், அதில் மரங்களை வளர்த்து, விவசாயத்தைத் தொடர்பவர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர்… சென்னை, மாங்காடு, விநாயகமூர்த்தி. குன்றத்தூர் நால்ரோட்டிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் குறுகிய சாலையில் இரண்டு நிமிடம் பயணித்தால், சிமெண்ட் காம்பவுண்டுக்குள் கம்பீரமாகக் காட்சி தருகிறது விநாயகமூர்த்தியின் மரச் சோலை. உள்ளே, உயர வளர்ந்துள்ள மேலும் படிக்க..

நிலங்களை மீட்டெடுக்கும் நுண்ணுயிரிகள்

தெரிந்தோ, தெரியாமலோ இரண்டு தலைமுறை விவசாயிகள் பசுமைப் புரட்சி பரிந்துரைத்த ரசாயனங்கள், வீரிய விதைகள் போன்றவற்றைத் தங்களின் நிலத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவற்றின் பாதகமான விளைவுகளை மனப்பூர்வமாக உணர்ந்தவுடன், இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்குத் தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. “இப்படி விவசாயிகள் மாற நினைத்தாலும், உடனடியாக மாற முடியாது. ஏனென்றால், மண்ணில் பயன்படுத்தப்பட்ட ரசாயனப் பொருட்களின் தன்மையை அவ்வளவு சீக்கிரமாக மண்ணிலிருந்து வெளியேற்றிவிடமுடியாது” என்கிறார் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில். நம் விவசாய மேலும் படிக்க..

விஜய் மல்லையாவும் முருகையன் தாத்தாவும் !

உங்களுக்கு முருகையன் தாத்தாவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பக்கம் அவர் ஊர்.  ஒரு வேலி நிலம் வைத்திருந்தார். ஹோ… உங்களுக்கு வேலி கணக்கு தெரியாது அல்லவா, 6.17 ஏக்கர் நிலம். ஆம். வைத்திருந்தார்தான். அது இறந்த காலம் ஆகி இரண்டு தசாப்தம் ஆகிறது. முருகையன் தாத்தாவை நான் சந்தித்தது, தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே. 2007-ம் ஆண்டு ஒரு நள்ளிரவு நேரத்தில், சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது, தூரத்தில் ஒரு உருவம் சரிந்து மேலும் படிக்க..

ஊரெங்கும் தினை சாகுபடி: வியக்க வைக்கும் கிராமம் !

சிறுதானியங்களின் மகத்துவம் மீண்டும் உணரப்படும் காலம் இது. ஆரோக்கியமற்ற உணவுப் போக்கிலிருந்து மக்கள் மாறத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், சிறுதானியங்களைப் பயிரிடுவதில் முன்மாதிரியாகத் திகழ்கிறது, புதுச்சேரியிலுள்ள விநாயகம்பட்டு கிராமம். புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கு உட்பட்ட விநாயகம்பட்டு கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து தினை சாகுபடியில் சாதனை படைத்துவருகின்றனர். 10 மடங்கு அதிகரிப்பு கடந்த ஆண்டில், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 14 விவசாயிகள் 15 ஏக்கர் நிலத்தில் தினை சாகுபடி செய்தனர். அது, தற்போது 10 மடங்காக அதிகரித்துள்ளது. இப்போது மேலும் படிக்க..

ரப்பர் மரங்களால் குறையும் நிலத்தடி நீர்மட்டம்

குமரி மாவட்டத்தில் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் தோட்டப் பயிர்கள் சாகுபடி அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக நிலத்தடி நீர் ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். குமரி மாவட்டத்தில் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் படிப்படியாக மாற்றம் செய்யப்பட்டு அவற்றில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது. பல பகுதிகளில் வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இம் மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் முன்காலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்ட மேலும் படிக்க..

மிளகாயில் இலை சுருட்டலா?

மிளகாயில் இலை சுருட்டல், மற்றும் நுனிகருகல் நோயை கட்டுப்படுத்த இளையான்குடிதோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இளையான்குடி வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமார் 3 ஆயிரத்து 500 எக்டேர் பரப்பளவில்  மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் விதைக்கப்பட்ட மிளகாய் விதைகள் பூக்கும் நிலையில் வளர்ந்துள்ளது. தற்போது நிலவி வரும் தொடர் பனி, மழைக்கு வேர் அழுகல் நோய், நுனி கருகல் நோய், இலை சுருட்டல் நோய் பரவ வாய்ப்புள்ளது. நுனி கருகல் நோய் தாக்கிய செடியின் நுனி இலைகள் கருகிவிடும். மேலும் படிக்க..

சம்பா, தாளடி நெற்பயிரில் நெற்பழநோய்

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற்பயிர்களில் நெற்பழ நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் வேளா ண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் நிலைய தலைவர் பாஸ்கரன், பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் ராஜாரமேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் நெற்பழ நோய் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இந்த நோயானது அஸ்டி லாஜி நாய்டியா வைரஸ் என்ற பூஞ்சாணத்தால் உண்டாகிறது. பொதுவாக அதிகமான மேலும் படிக்க..

பணம் காய்க்கும் மரங்கள்

பச்சைப் பசேல் என்று மனதை மயக்கும் மரம், செடி, கொடிகளால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் மூச்சு விடுவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறார்கள். மரமோ மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஆக்சிஜனைத் தேவையான அளவு பெற்றுக்கொண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ மனிதனைச் சுற்றி நலம் பயக்கும் மரங்கள் அவசியம். அவை பணம் தரும் மரங்களாகவும் இருந்தால் இன்னும் கூடுதல் பயன். ஐம்பது ஆண்டு வளர்ந்த மரங்கள் மட்டுமல்ல பத்து ஆண்டுகள் வளர்ந்த மரங்கள்கூட பணங்காய்ச்சி மரங்கள் மேலும் படிக்க..

இயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்

இயற்கை விவசயம் மூலம் முருங்கை சாகுபடி செய்யும் சடையாண்டி கூறுகிறார் செடிமுருங்கை… நாட்டுமுருங்கை ஓர் ஒப்பீடு முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடிமுருங்கை விதை மூலமும், நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் மேலும் படிக்க..

கறவை மாடுகளை சீராக கவனித்தால் கூடுதல் வருவாய்!

கறவை மாடுகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால், நிரந்தரமான வருவாயை ஈட்டலாம். கால்நடை வளர்ப்பில் முக்கியமானது, அவற்றை நல்ல தரமான கன்றுகளைப் ஈன்ற வைப்பதேயாகும். அதற்கு சத்தான தீவனமும், முறையான கவனிப்பும் அவசியம். கன்றுகளை ஈனுவதற்கு முன்பிருந்தே மாட்டை நன்கு கவனித்தல் வேண்டும். இல்லையெனில், அந்த மாடுகள் ஈனும் கன்றும் மெலிந்து பலவீனமானஇருக்க நேரிடும். எனவே, கன்று ஈனுவதற்கு 6 முதல் 8 வாரங்களுக்கு முன்பிருந்தே சினை மாட்டுக்கு சிறந்த கவனிப்பு அவசியம். கன்றின் கவனிப்பு கன்றை மேலும் படிக்க..

எள் சாகுபடியில் தொழில்நுட்பங்கள்

மாசிப்பட்ட எள் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது. குறைந்த வயதில் (85 நாட்கள்) அதிக நீர் தேவையின்றி குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிர் எள். எள் சாகுபடி செய்வதற்கு பிப்ரவரி, மார்ச் மாத (மாசி பட்டம்) பருவமே ஏற்ற தருணம் ஆகும். கோ.1, டி.எம்.வி 4, 6 (85-90 நாட்கள்), டி.எம்.வி 3 (80-85 நாட்கள்), வி.ஆர்.ஐ.எஸ்.வி1 (70-75 மேலும் படிக்க..

வறட்சியை போக்கிய நீர் கடவுள்கள்!

தமிழ்நாட்டில் பொழியும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் வீணாக்காமல், நமக்கு எப்போதும் பயன்படும்படி சேமித்துவைக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? நினைத்துப்பார்க்கவே குளுகுளுவென இருக்கிறதுதானே! அது  மட்டும் நிகழ்ந்துவிட்டால் காலம்தோறும் கர்நாடகாவின் கருணையையும், ஆந்திராவின் அன்பையும், கேரளாவின் அனுசரணையையும் எதிர்பார்த்துக்கிடக்க வேண்டாம். `என் தண்ணீர் என் உரிமை’ என தலை நிமிரலாம். சொல்வதற்குச் சரி. இதெல்லாம் சாத்தியமா? ‘சத்தியமாகச் சாத்தியமே’ என நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் இருவர். ஒருவர், ராஜேந்திர சிங் – இன்னொருவர், மதுர்பாய். இவர்கள் வெறும் வாயால் குளம் மேலும் படிக்க..

இரும்புத் தாதிற்காக அழிக்கப்படும் ஒரு மலை

வரலாற்றுச் சிறப்புமிக்க கவுத்தி மலை, திருவண்ணாமலையில் இருந்து 8. கி.மீ தொலைவில் உள்ளது. மூலிகைச் செடிகள், வானுயர்ந்த மரங்கள் மற்றும் இயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் உள்ளன. மக்களின் வாழ்வாதாரத்திலும் கவுத்தி மலை முக்கிய பங்கு வகிக்கிறது. தொன்றுதொட்டு பாதுகாக்கப்பட்டு வந்த கவுத்தி மலைக்கு “இரும்புத் தாது” வடிவில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கவுத்தி மலையில் இரும்புத் தாது இருப்பது அரை நூற்றாண்டுக்கு முன்பே உறுதி செய்யப் பட்டுள்ளது. அதன்பிறகு பல கட்ட ஆய்வுகளை மேலும் படிக்க..

ஏன் வீழ்ந்தன நம் தானியங்கள்?

‘கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணவும் இல்லை’ – என்று மாங்குடிக் கிழாரால் (புறநானூறு: 335) உயர்த்திக் கூறப்படும் வரகு, தினை போன்ற தவசங்கள் (தானியங்கள்), தமிழகத்தின் வானவாரி (மானம்பாரி) நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை. இன்றைய காலகட்டத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட இவை, பல பன்னாட்டு நிறுவனங்களால் ஊட்ட மாவுக்காகவும், ஊட்டக் குடிநீராகவும் (Health Drinks) விரும்பி வாங்கப்படுகின்றன. தானியங்களைப் பொறுத்த அளவில் நஞ்சை (நன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் மேலும் படிக்க..

பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரிப்பு

பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி கம்போஸ்ட் உரம் தயாரித்து பயன்பெற அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பண்ணைகளில் பல வகையான இலைச்சருகுகள், மாட்டுத் தொழுவ கழிவு, பயிர்க்கழிவுகள் உள்ளன. இவற்றை புளூரோட்டஸ் பூஞ்சானம் உதவியுடன் மக்கச் செய்து, எருவாக்கி மண்ணில் இடுவதால், மண் வளத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டச் சத்துகள் மண்ணில் சேர்க்கப்படுகின்றன. தேவையான பொருள்கள் பண்ணைக்கழிவு ஆயிரம் கிலோ, யூரியா 50 கிலோ, புளூரோட்டஸ் மேலும் படிக்க..

பச்சைப்பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நடப்பு பருவத்தில் பச்சைப் பயறு செடிகளை பரவலாக மஞ்சள் தேமல் நோய் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம், வழிமுறைகள் குறித்து திருவள்ளூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி கூறியது: தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பச்சைப் பயறு செடிகளை பரவலாக மஞ்சள் தேமல் நோய் தாக்கி வருகிறது. இதன் அறிகுறிகளாக, இலைகளில் லேசான மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றுகின்றன.  இச்சிறிய புள்ளிகள் அளவில் பெரியதாகி இலை முழுவதும் மஞ்சள் மேலும் படிக்க..

இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்தும் முறை

நடப்பு சம்பா நெற்பயிரில் பரவலாக தென்படும் இலைசுருட்டு புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில்  நடப்பு ஏரி பாசன சம்பா சாகுபடி செய்துள்ள பயிர்களில் இலைசுருட்டு புழுவின் தாக்குதல் தற்போதுள்ள தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பரவலாக தென்படுகிறது. இந்த பூச்சியின் தாக்குதலால் பயிர்களில் உள்ள பச்சையத்தை சுரண்டி தின்று உயிர் வாழ்வதால் பயிர்களின் வளர்ச்சி குன்றி அதிக மகசூல் மேலும் படிக்க..

இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழி!

இயற்கை சார்ந்த உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழிமுறையாகும் என வேளாண் அறிவியல் மைய தலைவர் கூறினார். அரியலூர் மாவட்டம், சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் (CREED KVK)2015-16ம் ஆண்டிற்கான கலந்தாய்வு திட்டமிடல்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி விரிவாக பேசினார். சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தலைவர் நடனசபாபதி தலைமை வகித்து பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் மேலும் படிக்க..

இலுப்பை சிறப்புகள்!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்ற முதுமொழியை பல முறை கேட்டிருப்போம். ஆனால், நம்மில் எத்தனை பேர் இலுப்பைப் பூவை பார்த்திருக்கிறோம்? சுவைத்திருக்கிறோம்? குறைவாகவே இருக்கும். அதற்குக் காரணம் இலுப்பை மரங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதே. இருப்பையிலிருந்து இலுப்பைக்கு ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் ‘இருப்பை’ என்றழைக்கப்பட்ட இலுப்பைத் தாவரம் மது, மதுகம், மதூகம், குலிகம், சந்தானகரணி, அட்டி போன்ற இதர பெயர்களாலும் அழைக்கப்பட்டதாக பல தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் முதல் மேலும் படிக்க..

தளிர் வளர்க்கும் சருகு!

வயது 73.. ஆனாலும்.. மகன் மாதம்தோறும் செலவுக்குத் தரும் பணத்தில் சேமித்து மரக்கன்றுகள் வாங்கி ராஜபாளையம் பகுதியில் முக்கிய இடங்களில் நட்டுப் பராமரித்து வருகிறார் ராஜபாளையம் அருகேயுள்ள நக்கனேரி என்கிற இடத்தைச் சேர்ந்த கருப்பையா. நக்கனேரி, தெற்கு வெங்காநல்லூர், முறம்பு எனப் பல பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பசுமை, குளிர்ச்சி தரும் மரங்கள் தற்போது பரவலாக உள்ளன. இந்த மரங்களை 2003-ம் ஆண்டு முதல் நட்டு வருகிறார் கருப்பையா. இவர் இளைஞராக இருந்தபோது அரசியலில் அதிக ஈடுபாடு மேலும் படிக்க..

பிளாஸ்டிக் எமனை தெரிந்து கொள்வோம்

சாதாரணமாக நாம் பிளாஸ்டிக் பைகளை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். மிகக் குறைந்த நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நாம் பயன்படுத்திய பிறகு என்னவாகிறது என்று நம்மில் யாரும் கண்டுகொள்வதில்லை. இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கடக்கமுடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என விரிந்து மேலும் படிக்க..

வெந்தயம் சாகுபடி

கீரையாகவும், விதைகளாகவும் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் அளிக்கும் வெந்தயம் சாகுபடியில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும் என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.  ரகங்கள்: கோ 1, பூசா எரிலி பன்சிங், லேம் தேர்வு 1, ராஜேந்திர கிராந்தி, கிஸார் சோனாலி, ஆர். எம்.டி 1, கோ 2 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.  மண், தட்பவெப்பநிலை: நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச் சத்து மிகுந்த மணல் பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான மேலும் படிக்க..

கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி

கோடைக் காலத்தில் பழங்களுக்கு அதிக தேவை இருக்கும். குறிப்பாக தர்ப்பூசணி, முலாம்பழம், எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களின் தேவை சராசரி நுகர்வைவிட அதிகளவில் இருக்கும். இக்காலங்களில் அறுவடைக்கு வரும் பழங்கள் சந்தைகளில் அதிக வருவாயைத் தரும். இதில் தர்ப்பூசணி என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும் ஏற்ற பயிர். இப்பயிர் குறித்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டார தோட்டக்கலை, உதவி வேளாண் அலுவலர் ஜி.திருக்குமார் தெரிவித்ததாவது: தர்ப்பூசணி அதிக அளவிலான பாதுகாப்புகளை கொண்டிராத பயிர் என்பதால் விவசாயக் மேலும் படிக்க..

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு திட்டங்கள்

மத்திய பட்ஜெட்டில் இம்முறை வேளாண் துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் முறை முதல் ஆன்லைன் சந்தைகள் வரை முக்கிய அறிவிப்புகள் வெளியிட்ப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் விவரம்: * வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி மேலும் படிக்க..

சூரிய ஒளியில் நாள்தோறும் 500 கிலோ நீராவி மூலம் உணவு தயாரிப்பு!

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் சூரிய மின்சக்தி நீராவி அடுப்பின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக நாளொன்றுக்கு 500 கிலோ நீராவியும், அண்மையில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தித் தகடுகள் மூலம் 550 யூனிட் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. திருப்பதியில் இப்படி சூரிய ஒளி மூலம் நீராவி தயார் செய்து அரிசியை சமைக்கிறார்கள்.  இதனால் பல காஸ் சிலிண்டர்கள் மிச்ச படுத்துகிறார்கள் இந்த மாணவர் இல்லத்தில் பெற்றோரை இழந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் பள்ளிக் மேலும் படிக்க..

சூழல் மாசை கட்டுபடுத்தும் பவழமல்லி

பவளமல்லியின் தாவரப் பெயர் நிக்டாந்தஸ்ஆர்போரடிரிஸ்டிஸ் (Nyctanthes arbortristis). இது ஒரு சிறிய மரமாக 10 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. தாவரப் பெயரில் உள்ள ஆர்போர் என்ற சொல் இதையே சுட்டுகிறது. இதன் இலைகள் கோடைக்காலத்தில் உதிர்ந்துவிடும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம்வரை பொதுவாகப் பூக்கள் உண்டாக்கப்படும். பூக்கள் சிறியவை, மயக்கும் மணம் கொண்டவை. மணம் ஏறத்தாழ 100 அடி சுற்றளவுக்கு வீசும். தாவரப் பெயரில் உள்ள நிக்டாந்தஸ் என்ற சொல் சுட்டுவதைப்போன்று, முன்னிரவில் மலரக் கூடியவை. இப்படிப் மேலும் படிக்க..

உருளை கிழங்கு உயிரைப் பறிக்குமா?

முளைவிட்ட உணவுகள்ஊட்டம் நிறைந்தவை என்று கேள்விப்பட்டிருப்போம். அதுவே உருளைக்கிழங்கில் முளைவிட்டிருந்தாலோ, பச்சை நிறத்திட்டுகள் காணப்பட்டாலோ, அவற்றை உபயோகிக்கக்கூடாது என எச்சரிக்கின்றன சில செய்திகள். எது சரி, எது தவறு? சந்தேகங்களைத் தீர்க்கிறார் உணவியல் நிபுணர் ஏ.டி.சாந்தி காவேரி… ‘‘உருளைக்கிழங்குகளை நீண்டநாள் சேமித்து வைப்பதால் அவற்றில் முளைவிடுகின்றன. நல்ல உருளைக்கிழங்கோடு ஒப்பிடும்போது இவை ருசியாகவோ, ஆரோக்கியமானதாகவோ இருப்பதில்லை. முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் காணப்படும் சாக்கோனைன் (Chaconine) மற்றும் சாலனைன் (Solanine) ஆகியவை நச்சுப் பொருட்களைக் கொண்டுள்ளன. Solanine நச்சுப்பொருள் சிறிது மேலும் படிக்க..

இயற்கைவழி வேளாண்மையில்ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர்

இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களுக்கு ஜப்பான் நாட்டின் மிகச் சிறந்த இயற்கை வேளாண் வல்லுநரான மசானபு ஃபுகோகாவைப் பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. உலகம் போற்றும் பெரும் வேளாண் அறிஞரான அவரிடம் பயிற்சி பெற்ற ஒரு தமிழர் நம்மிடையே இருப்பது பலருக்கும் தெரியாது. பொள்ளாச்சி அருகேயுள்ள மலையாண்டிப்பட்டணம் என்ற ஊரில் வாழும் அந்த இயற்கை வேளாண் முன்னோடி மது ராமகிருஷ்ணன். வேளாண்மையைச் சுலபமாகச் செய்யும் முறையைப் பற்றி இவர் எழுதியும் பயிற்சியளித்தும் வருகிறார். ஐம்பது ஏக்கர் மரங்கள் மேலும் படிக்க..

சென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் நம்பர் U-30, 10ஆவது தெரு அண்ணா நகர் முகவரியில் 2016 மார்ச் 4ஆம் தேதி “மாடி தோட்டம்” பற்றிய பயிற்சி அளிக்கிறது. – தொடர்புக்கு 04426263484 . நன்றி: (ஹிந்து ஆங்கிலம்)

நெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி?

நெல் அறுவடையின்போது விதை சேமிப்பு அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் சு.அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் ரகத்தினை பிற ரகத்துடன் கலக்காத வகையில் அறுவடை செய்து தனித்தனியாக சேமித்துவைக்க வேண்டும். பயிர் அறுவடை செய்யும் இயந்திரத்தை நன்கு சுத்தம் செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். முதலில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை விதைக்கு பயன்படுத்தக் மேலும் படிக்க..

கோடை உழவு அவசியம்

களைகள், நோயை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என, வேளாண்மைத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். அவர்கள் கூறியதாவது: பயிர் அறுவடைக்கு பின் நிலத்தில் ஆழமான வெடிப்புகள் ஏற்பட்டு அடிமண் ஈரம் ஆவியாகிறது. இதனால் சாகுபடி சமயங்களில் மீண்டும் தண்ணீர் பாய்ச்சும்போது அடியில் சென்றுவிடும். மேலும் உழவின்போது வளமான மேல் மண் துகள்கள் வெடிப்புகள் வழியாக அடிமட்டத்திற்கு சென்றுவிடும். இதனை தடுக்க கோடை உழவு அவசியமாகிறது. இதன்மூலம் அதிக வெடிப்பு ஏற்படாமல் மண் பொல, பொலவென்று இருக்கும். முன்பருவ விதைப்புக்கு மேலும் படிக்க..

எள்ளில் தண்டு பிணைப்பான

எள்ளில் உண்டாகும் பூச்சி நோய்களை பயிர் பாதுகாப்பு செய்து கட்டுப்படுத்தலாம் என மொடக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.இதுகுறித்து மொடக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் குழந்தைவேலு கூறியதாவது: எள்ளுச் செடிகளில் தண்டு பிணைப்பான், காய் பிணைப்பான் குறிப்பிடத்தக்க பூச்சிகளாகும். அதிக தாக்குதல் இருந்தால் செடி காய்ந்து விடவும் வாய்ப்புண்டு. இதைக் கட்டுப்படுத்த, பூச்சி தாக்கிய குருத்துக்களை, காய் கொத்துக்களை சேகரித்து அழிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு மாலத்தியான் அல்லது பென்தியானை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். மேலும் படிக்க..

தண்ணீர் கசியாத மாடித் தோட்டம்

பொதுவாக எல்லாரும் காற்று வாங்கத்தான் மொட்டை மாடிக்குச் செல்வார்கள். ஆனால் கோயம்புத்தூர் சாமியார் புது வீதியில் இருக்கும் அனுராதாவின் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்றால், காற்று வாங்கிக்கொண்டே காய்கறிகளையும் சேர்த்துப் பறிக்கலாம். நகரமயமாக்கலின் விளைவாக விவசாய நிலப்பகுதியின் அளவு குறைந்துகொண்டே வருவதுடன், அந்தப் பகுதிகளில் கான்கிரீட் காடுகளின் பரப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது. விவசாய நிலங்களை அழித்துவிட்டுக் கட்டிடங்கள் கட்டிய நமக்கு, கட்டிடங்களை அழித்து விவசாயம் செய்வது அத்தனை எளிதல்ல. இரட்டை லாபம் “அதனாலதான், இருக்கிற இடத்தை எப்படிப் மேலும் படிக்க..

நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி?

ஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காண படுகிறது. இந்த செடி வந்துவிட்டால், ஏரி முழுவதும் பரவி, நீரே தெரியாதவாறு மூடி விடும். நீரும் கெட்டு விடும். ஆகாயத்தாமரை பற்றிய ஆராய்ச்சி மூலம் கற்பூர வள்ளி இலை பயன் படுத்தி கட்டுப்படுத்துவது பற்றிய செய்தியை முன்பே படித்து உள்ளோம். ஆகாயத்தாமரை  எப்படி இயற்கை உரம் உருவாக்கலாம் என்பதையும் படித்து உள்ளோம். இப்போது Dr கதிரேசன் ஆகாயத்தாமரை   இயற்கை முறை மூலம் பூச்சிகளை பயன் படுத்தி மேலும் படிக்க..

சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி

கோயம்புத்தூர் த.வே.ப.கழக காய்கறித் துறையின் தலைவர் முனைவர் சரஸ்வதி  சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி பற்றி வெளியுட்டுள்ள அறிவிப்பு கோ.ஆன்.5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த ரகத்தில் விதை உற்பத்தி செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு. ஆராய்ச்சி முடிவின்படி அக்டோபர் – நவம்பர் மாதங்களில் விதைக்கப்படும் சின்ன வெங்காயத்தில் இருந்து மட்டுமே பூக்கள் வந்து விதை உருவாகின்றது. குறிப்பாக கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையில் மட்டுமே பூக்கள் பூத்து மேலும் படிக்க..

முருங்கையில் இலைப்பிணிக்கும் புழு

முருங்கை சாகுபடி குறித்து, க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மணி கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் 4,800 ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரவக்குறிச்சியில், 3,சூ385 ஏக்கர், க.பரமத்தியில், 1,033 ஏக்கர் பரப்பளவில் முருங்கை விவசாயம் நடக்கிறது. தற்போது, மரத்தில் பூக்கள் தோன்றி பிஞ்சு விட ஆரம்பித்துள்ளன. இரவில் நிகழும் குளிர் தொடர்ந்து பகலில் காணப்படும் வெப்பநிலை காரணமாக இலைப்பிணிக்கும் புழு மற்றும் மொக்கு புழுவின் தாக்கம் காணப்படுகிறது. இதை தடுக்க மேலும் படிக்க..

சிறுதானியம் பெற்றுத் தந்த தேசிய விருது!

பதப்படுத்தப்பட்டுக் கண்கவர் உறைகளிலும் டப்பாக்களிலும் அடைத்து விற்கப்படுகிற பொருட்களில் மலிந்திருக்கும் ரசாயனங்களைப் பற்றி பேசிப் பேசி மாய்ந்துபோகிறோம். தண்ணீர், அரிசி, காய்கறிகள் என்று அத்தியாவசியப் பொருட்களிலும், செயற்கைப் பொருட்களின் தாக்கம் இருப்பதை வேதனையோடு பகிர்ந்துகொள்கிறோம். ஆனால், கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிற நம் பாரம்பரிய உணவவுப் பொருட்கள் குறித்தோ, அவற்றில் நிறைந்திருக்கும் சத்துகள் குறித்தோ பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. நேரமில்லை என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லிக்கொண்டு நிமிடங்களில் தயாராகும் துரித – உடனடி உணவுகளின் பின்னால் ஓடி மேலும் படிக்க..

உளுந்து சாகுபடியில் அதிக மகசூல்!

உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார். கோடை பருவத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உளுந்து பயிர் சாகுபடிக்கு ஏற்ற தருணமாகும். இதற்கு ஏற்ற ரகம் ஆடுதுறை 5. வம்பன் 5,6. ஐ.டி.யூ 941, ஆகியவையாகும். விதைப்பு செய்தவற்கு முன்பாக விதை மூலம் பரவக்கூடிய வேரழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு 1 கிலோ விதைக்கு டிரைகோடெர்மா விரிடி மேலும் படிக்க..

தென்னை சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி?

தென்னையில் தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரத்தில் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தென்னையை தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்தி, விளைச்சலைப் பெருக்க மானிய விலையில் வழங்கப்படும் இன கவர்ச்சி பொறி வாங்கி பயன்படுத்துமாறு கறம்பக்குடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னையைத் தாக்கும் பூச்சிகளான சிவப்பு கூன் மேலும் படிக்க..

கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி!

புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை அரிசியே காரணம் என்பதும் நவீன மருத்துவ உலகம் கூறும் முடிவுகள். இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தானியங்கள். எனவே, நகர்ப்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறி வருகிறது. ஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக மேலும் படிக்க..

குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் (Purifiers) ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக விளக்கினார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதிகா சந்திரபாகம். நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகசிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம். தேத்தான் கொட்டை: மேலும் படிக்க..

தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு 3-ம் இடம்

இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக மைசூரு இடம்பிடித்துள்ளது. முதல் 5 நகரங்களில் தமிழகத்தின் திருச்சி நகரம் இடம்பெற்று சாதனை படைத் துள்ளது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவின் சுத்தமான நகரங்கள், அசுத்தமான நகரங்களை கண்டறிந்து பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறை ஆய்வு நடத்தி வெளியிட்ட பட்டியலில் மிக சுத்தமான நகரமாக மைசூரு இடம்பிடித்தது. இந்நிலையில், 2015-ம் ஆண்டும் மைசூரு நகரம்தான் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கடுத்து சண்டிகர், மேலும் படிக்க..

இமயமலையில் ஒரு புது பறவை!

சில வரலாற்று நாயகர்களுக்கு மரணமே இல்லை. மக்களின் கதைகளிலும் வாழ்விலும் நீக்கமற கலந்திருப்பார்கள். சாலிம் அலியும் (அப்படிப்பட்ட ஒருவர்தான். இயற்கையியலாளர்கள் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் சாகாவரம் பெற்றவர் சாலிம் அலி. அவரது அன்பர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி இது! புதிதாக இனம்காணப்பட்ட இமயமலை பறவை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருப்பட்டிருக்கிறது. ஆம்! காட்டுப் பூங்குருவி கிழக்கு இமயமலையில் பரவலாகக் காணப்படும் பூங்குருவி வகையைச் சேர்ந்த இந்தப் பறவை முன்பு கருதப்பட்டதுபோல் அல்லாமல், ஒரு புதிய சிற்றினம் என்பது தற்போது மேலும் படிக்க..

ஒற்றை வைக்கோல் புரட்சி

மசானபு ஃபுகோகா 1978-ம் ஆண்டு எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி‘ புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது, அவருடைய இயற்கை வேளாண் முறை தொடர்பாக உலகம் முழுவதும் கவனம் திரும்பியது. தமிழகத்தில் இயற்கை வேளாண்மை வேர்விட ஆரம்பித்த காலத்தில் அவரது வேளாண் முறை பரவலான விவாதத்தை உருவாக்கியது. ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தினரால் 1991-ம் ஆண்டே ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. வேறு எந்தச் சுற்றுச்சூழல் – விவசாயம் சார்ந்த நூல்களைவிடவும் அதிகப் பதிப்புகளை இந்நூல் கண்டுள்ளது. அந்த மேலும் படிக்க..

சென்னையில் நல்ல கீரை!

சத்தான உணவு என்றவுடன், டாக்டர்கள் உட்பட அனைவரும் பரிந்துரைப்பது, “சாப்பாட்டுல கீரை சேர்த்துக்குங்க” என்பதுதான். கீரையில் நார்ச்சத்து, வைட்டமின் சத்துகள், ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. அத்துடன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், இதயக் கோளாறுகள் போன்றவை குறைய வாய்ப்பு உண்டு. ஆனாலும், சென்னை போன்ற நகரங்களில் கீரை சாப்பிட விரும்புபவர்கள், அய்யய்யோ வேண்டாம் என்று நினைக்க வைக்கும் வகையில் இருக்கிறது கீரை பயிரிடுதல். காரணம், சென்னையில் பல இடங்களில் சாக்கடை அருகேதான் கீரை பயிரிடப்படுகிறது, கீரையில் நிறைய பூச்சிகள், மேலும் படிக்க..

லெமன்கிராஸ் சாகுபடி

இரகங்கள் : ஒடி – 19, 408, ஆர்ஆர்எல் – 39, பிரகத், பிரமான, சிபிகே – 25, கிருஷ்ணா மற்றும் காவேரி. மண் மற்றும் தட்பவெப்பநிலை வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றிலள்ள ஈரப்பதம் வேண்டும். விதை மற்றும் விதைப்பு ஒர எக்டருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை மேலும் படிக்க..

வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவால் கூடுதல் மகசூல்

“”வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவால் பயிர்களில் கூடுதல் மகசூல் கிடைக்கும்,” என, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப் பாடு) ஜெயபாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பயன்படுத்தும் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் மானியம் வழங்குகிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு யூரியா இன்றியமையாத உரம். தழைச்சத்து வழங்கும் பணியை யூரியா செய்து, பயிர் செழிப்பாக வளர உதவுகிறது. ஒரு மூடை யூரியா விலை ரூ. 270 . மத்திய அரசு மானியம் மேலும் படிக்க..

பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை

இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும். டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும். காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம். தங்க அரளி மற்றும் செவ்வரளி மேலும் படிக்க..

'நெல்லின் செல்வர்'

திருவண்ணாமலை பகுதியில் பாரம்பரிய நெல் விதைகள் எங்குக் கிடைத்தாலும், உடனே அங்குச் சென்று சேமிக்கும் முயற்சியில் இறங்கிவிடுபவர் செங்கம் வெங்கடாசலம். அது மட்டுமல்லாமல், இந்த விதைகளைக் கேட்கும் உழவர்களுக்குக் கொடுத்தும் உதவுகிறார். ஒரு பக்கம் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வரும் அதேநேரம், இயற்கைவழி வேளாண்மையில் பல்வேறு பயிர்களையும் சாகுபடி செய்துவருகிறார். இவருடைய பண்ணையின் பரப்பு 10 ஏக்கர். செய்யாறு ஆற்றின் பாசனப் பகுதியில் இவருடைய பண்ணை அமைந்துள்ளது. முற்றிலும் இயற்கைவழி வேளாண்மையே செய்கிறார். மொத்தமுள்ள 10 மேலும் படிக்க..

வால்பாறை காடுகளை அழிக்கும் அமெரிக்க தாவரம்

‘மிக்கானியா மைக்ரந்தா’ (Mikaniamicrantha).. காடுகளில் மரங்கள் உட்பட பற்றுக்கோலாக எது கிடைத்தாலும் பற்றிக் கொண்டு வேகமாகப் படரும் ஒரு தாவரம். பெரிய மரங்களையும் பின்னிப்படர்ந்து சூரிய வெளிச்சத்திலிருந்து சத்துக்களை அந்த மரங்கள் சேகரிக்க விடாது தடுக்கும் தன்மையுடையது. இந்த தாவரத்தினால் வால்பாறை காடுகளுக்கு பேரழிவுகள் ஏற்படும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். பசுமை மாறாக்காடுகள் நிரம்பிய பகுதியாக விளங்கும் வால்பாறையை  சொர்க்கம் என்று வர்ணிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். நீக்கமற பசுமை போர்த்தி, புல்வெளி சூழ் காடுகளை உள்ளடக்கியிருப்பதால் மேலும் படிக்க..

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம்!

கோயம்பேடு மார்க்கெட்டில் சேரும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மீண்டும் அடுத்த மாதம் (மார்ச்) முதல் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசியாவிலேயே 2–வது பெரிய மார்க்கெட் என்று பெயர் பெற்ற சென்னை கோயம்பேடு மார்க்கெட் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் 1,900 காய்கறி கடைகளும், 700 பழக்கடைகளும், 450 பூக்கடைகளும் உள்ளன. கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி சராசரியாக 120 முதல் 150 டன் வரை காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் மேலும் படிக்க..

ஒரு ஏரியின் கண்ணீர் கதை!

மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து திருச்சி செல்லும் சாலை. உத்தங்குடியைத் தாண்டியவுடன் ஒரு மெல்லிய அபயக்குரலை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். வாகன இரைச்சலைக் கடந்து அது உங்கள் காதுகளுக்கு வந்திருக்காது. அப்படியே கேட்டாலும் உங்கள் அவசரம் அதற்கு இடம் தந்திருக்காது. ‘எனக்கு நேர்ந்த அநீதியைக் கேட்க யாரும் இல்லையா?’ என்று காற்றில் கலந்து வந்த அந்தக் குரலை, பல தடவை கடந்து சென்றுகொண்டிருந்த நான், ஒருநாள் ‘‘யாரது?’’ என்று நின்று கேட்டேன். ஈனஸ்வரத்தில் ‘‘நான்தான் உலகனேரி பேசுகிறேன்’’ என்றதும் எனக்குத் மேலும் படிக்க..

மழை அளவை உணர்த்தும் பறவைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை அளவை, கூடு கட்டி முன்கூட்டியே பறவை இனங்கள் உணர்த்தி வருகின்றன. அறிவியல் வளர்ந்த காலத்தில் அதை அலட்சியமாக நாம் நினைப்பதால், வெள்ள சேதங்களை கண்கூடாக கண்டு வருகிறோம். உலகில் 10 ஆயிரம் பறவை இனங்கள் இருந்தன. 1400 இனங்கள் அழிக்கப்பட்டு விட்டது. கடந்த 200 ஆண்டில் 300 பறவை இனங்கள் அழிந்துள்ளன. பருவநிலை மாற்றம், இரைக்காக வேட்டையாடப்படுதல் உள்ளிட்டவை இதற்கான காரணங்களாகும்.பொதுவாக பறவை இடம் பெயர்தல் என்பது குளிர் அதிகமாகும் போது மேலும் படிக்க..

அன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்

அன்ட்ராய்ட் Android போனில் பசுமை தமிழகம் படிக்க ஆப்  app டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். இது வரை டவுன்லோட் செய்துள்ள 5000+ பேர் பசுமை தமிழகத்தை மொபைல் மூலம் படிக்கிறார்கள்! உங்களின் கருத்துகளை  gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்!!!

90 நாளில் பலன்தரும் பறங்கிக்காய்!

தோட்டக்கலைப் பயிர்களில் பறங்கிக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதன் தொழில்நுட்ப முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.  பறங்கிக்காய் வகைகள்: கோ 1, கோ 2, அர்க்கா, சூரியமுகி, சந்தன் வகை சிறந்தவை.  மண்: அங்ககத் தன்மை கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 சதம் முதல் 7.5 சதம் வரையிலுள்ள மண் ஏற்றது.  பருவம்: ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி ஆகியவை மேலும் படிக்க..

வேலை வாய்ப்பு தரும் தென்னை மர ஏற்ற பயிற்சி

ராமேஸ்வரம் இளைஞர்கள் மாற்றுத் தொழில் வாய்ப்பு இல்லாததால் தென்னை மரம் ஏறும் பயிற்சியில் ஆர்வம் காட்டுகின்றனர்.ராமநாதபும் மாவட்டத்தில் குந்துகால், தரவை தோப்பு, அக்காள்மடம், தங்கச்சிமடம் பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. இதுதவிர பாம்பன் முதல் தனுஷ்கோடி வரை தென்னை மர சாகுபடி உள்ளது. இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். வேறு தொழிலில் ஈடுபடும் வாய்ப்புகள் குறைவு. இந்நிலையில் அங்குள்ள இளைஞர்கள் தென்னை ஏறும் தொழில் செய்ய முன்வந்தனர். இதையடுத்து திண்டுக்கல் காந்திகிராம பல்கலை மேலும் படிக்க..

புன்செய் நிலத்தில் உளுந்து

நெல் விதைக்காத நிலத்தில், உளுந்து பயிர் செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.மானாவாரி விவசாயத்தை அடிப்படையாக கொண்ட சாக்கோட்டை ஒன்றியத்தில் நன்செய் நிலத்தை காட்டிலும் புன்செய் அதிகம். ஆண்டுக்கு ஒரு முறை பருவம் தவறாமல் விவசாயம் செய்து வந்த விவசாயிகள், பருவநிலை மாறியதால், வெளிநாடுகளுக்கு பறந்தனர். விளைந்த பூமி வெட்டவெளியானது. காணுமிடமெல்லாம் கருவேல மரங்கள் நிறைந்தது. தற்போது மீண்டும் விவசாயத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். பள்ளத்தூரில் பல ஆண்டுகளாக தரிசாக கிடந்த 200 ஏக்கருக்கும் அதிகமான நிலம், மேலும் படிக்க..

வறண்ட பூமியில் துளசி சாகுபடி

சிவகங்கை அருகே துளசி விவசாயத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதித்து வருகிறார் விவசாயி. வறண்ட பூமியான சிவகங்கையில் சாதாரண துளசி விவசாயத்திலும், சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் விவசாயி மாணிக்கம். சிவகங்கை-மதுரை ரோட்டில் பொன்னாகுளத்தைச் சேர்ந்த இவர், ஒரு ஏக்கரில் துளசி விவசாயம் செய்து உள்ளார். எவ்வித செலவினமும் இன்றி, மாதம் ரூ.30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிறார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் வயல் வரப்புகளில் தானாக வளர்ந்து துளசி செடிகளை அறுத்து விற்பர். இதையே மேலும் படிக்க..

பக்கிங்ஹாம் கால்வாயின் கதை!

சென்னையின் நீர்வழித்தடங்களில் முக்கியமானவை மூன்று. அவற்றில் கூவமும், அடையாறும் பழமை வாய்ந்த நதிகள். பக்கிங்ஹாம் கால்வாய், மனிதனால் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிகவும் நீளமான, உப்புநீர்க் கால்வாயான இதன் வரலாறே, ஒரு அதிசயம் தான். இந்த பக்கிங்ஹாம் கால்வாய் கதையை நாம் படித்தால் வியப்பாக இருக்கும். ஒரு தலைமுறையில் எப்படி ஒரு நீர் நிலை சாக்கடையாக ஆனதின் அவலம் புரியும்… கடந்த, 1639ம் ஆண்டில், சென்னைக்கு ஆங்கிலேயர் வந்த நேரத்தில், எழுமூர் ஆறு என்று ஒரு நதி, வடக்கிலிருந்து மேலும் படிக்க..

காய்கறி, பழங்களில் விஷம்!

காய்கறிகள் பல்வேறு ஊட்டச்சத்துகளை நம் உடலுக்குத் தரும் என்று நம்பித்தான் நாம் ஒவ்வொருவரும் அவற்றைச் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், அண்டை மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் பூச்சிக்கொல்லிகள், தமிழகத்தில் தடை செய்யப்படாமல் பயன்படுத்தப்படும் செய்தி சமீபத்திய அதிர்ச்சி. தவிர்க்கும் கேரளம் தமிழகத்தில் விளையும் காய்கறிகளைக் கடந்த வாரத்தில் கேரளம் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறது என்று செய்திகள் வர ஆரம்பித்தபோது, இப்பிரச்சினை கவனத்துக்கு வந்தது. இதற்குக் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் அதிகமாக இருப்பதாகக் கேரளம் குற்றஞ்சாட்டுகிறது. மேலும் படிக்க..

சொட்டு நீர்ப் பாசனத்தில் செழிக்கும் வாழை!

பட்டம் படித்திருந்தாலும் விவசாயத்தைத் தொழிலாகத் தேர்வு செய்து, சுய ஆர்வத்தால் நீர் பாசனத் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்றுச் சாதித்திருக்கிறார் புதுச்சேரி விவசாயி முத்து வெங்கடபதி. இதற்காகத் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விருதையும் அவர் பெற்றிருக்கிறார். புதுச்சேரி பண்டசோழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து வெங்கடபதி (47). பி.எஸ்சி. கணிதப் பட்டதாரி. கடந்த பத்து ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்து வருகிறார். புதிய தொழில்நுட்பம் “எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம். பட்டப் மேலும் படிக்க..

மாடித் தோட்டம் டிப்ஸ்

மாடித் தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத் தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை ‘36 வயதினிலேயே’ திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘நாமும் மாடித் தோட்டம் போடலாமே’ என்ற யோசனை மனதுக்குள் எட்டி பார்த்திருக்கும். வீட்டில் இருக்கும் இடத்தைப் பற்றிய கவலையை ஒதுக்கி வைத்துவிட்டாலும், ‘எப்படித் தோட்டத்தை அமைப்பது?’ என்ற கேள்வி சற்றே மலைப்பை ஏற்படுத்தலாம். ஆனால், நேரடியாகக் களத்தில் இறங்கிவிட வேண்டியதுதான். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைத் மேலும் படிக்க..

மிளகாய் சாகுபடி டிப்ஸ்

மிளகாய் பயிரிடும் விவசாயிகள் முறையான பயிர் மேலாண்மையைக் கையாள்வதன் மூலமும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் அதிக சாகுபடியைப் பெற முடியும். மிளகாய் செடியைப் பொருத்தவரை வளரும் பருவம், பூக்கும் பருவம், காய் விடும் பருவம் என மூன்று பருவத்திலும் பலவிதமான பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றை முறையான தடுப்பு முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.                     மிளகாயில் பச்சை மிளகாய், பஜ்ஜி மிளகாய், குடை மிளகாய் என்ற மேலும் படிக்க..

வெண்டை சாகுபடி டிப்ஸ்

தோட்டக்கலை பயிர்களில் தினமும் பணத்தை கையில் பார்க்கக்கூடிய முக்கியப் பயிர் வெண்டைச் சாகுபடியாகும். இதற்கு சீசன் என்பதே இல்லை. எப்போதும் சந்தையில் வரவேற்பு உண்டு. அதிகம் விளையக்கூடிய நாள்களில் தேவை எங்கு இருக்கிறது என்பதை அறிந்து அந்த குறிப்பிட்ட சந்தைக்கு அனுப்பி வைத்தால் முழு மகசூலையும் பணமாக்க இயலும். பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். வெண்டையில் பல ரகங்கள் உண்டு. அவை கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், மேலும் படிக்க..

நெல்லி தருகிறது மகசூல் அள்ளி!

சிவகங்கை சுற்றுப்பபகுதி கிராமங்களில் செழித்து வளரும் நெல்லியால் விவசாயிகள் குறைந்த செலவில் வருவாய் ஈட்டி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் செம்மண் சார்ந்த பகுதியாக உள்ளது. ஆண்டுதோறும் சீரான மழை பெய்யாததால் இப்பகுதியில் விவசாயம் செய்வது குறைந்து விட்டது. இந்நிலையில் குறைந்த அளவிலான பராமரிப்புச்செலவு மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் வருவாய் ஈட்டும் விவசாயத்தை பல வெளிமாவட்ட விவசாயிகளும், நிறுவனங்களும் இப்பகுதியில் செய்து வருகின்றனர். இதில் நெல்லி உற்பத்தி முதலிடம் வகிக்கிறது. தற்போது பல்வேறு மேலும் படிக்க..

மக்காச்சோளத்தை தாக்கும் தண்டழுகல் நோய்

மக்காச்சோளத்தை தாக்கும் “ப்யூசேரியம்’ தண்டழுகல் நோயை கட்டுப்படுத்த ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பரமசிவன் மற்றும் சேதுராமன் ஆலோசனை கூறினர். அவர்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம் பிரதான பயிராக உள்ளது. மக்காச்சோளம் பயிர், மண் மூலம் பரவும் “ப்யூசேரியம்’ தண்டழுகல் நோயினால் பாதிக்கப் படுகிறது. இந்நோய் பாதித்தால் தண்டின் உள்பகுதியில் உள்ள திசு சேதமடையும். இதனால் தண்டு பகுதி மிருது வாகவும், கணுக்கள் முறுகியும் காணப்படும். பூத்தபின் இந்நோய் வந்தால், வேரையும், தண்டின் உட் பகுதியையும் தாக்கும். மேலும் படிக்க..

முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம்

சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம் இருப்பதை பற்றி 2012 ஆண்டே தகவல் படித்தோம். இப்போது அந்த மாநிலம் இந்த இலட்சியத்தை அடைந்து விட்டது மட்டும் இல்லாமல் பிரதமர் மோடியிடம் இருந்து சிறப்பு பரிசையும் வென்று இருக்கிறது. இதை பற்றிய செய்தி ஹிந்துவில் இருந்து…. முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம் இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம். முதல்வரின் முழு முயற்சி மேலும் படிக்க..

திருச்செந்தூர் கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது ஏன்?

சிறிது நாட்கள் முன் துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் பகுதியில் கல்லாமொழி முதல் மணப்பாடு வரையுள்ள கரைப்பகுதியில்  56 திமிங்கலங்கள் பலியாகியுள்ளன. ஏன் இப்படி கும்பலாக இறந்தது என்பதற்கான பல காரணங்கள், யூகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லாமொழி கடற்கரைப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இதனை மீனவர்கள் கடலுக்குள் தள்ளி விட்டனர்.மறு நாள் மணப்பாடு முதல் கல்லாமொழி வரை 12 கி.மீ., நீள கடற்கரை பகுதியில் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. மேலும் படிக்க..

பூநாரைகளின் புகலிடமாகும் நகரங்கள்!

மேற்கத்திய நடன வகைகளில் ‘ஃப்ளெமங்கோ’ எனும் ஸ்பானிய நடனம் பிரசித்தி பெற்றது. லத்தீன் மொழியில் ‘ஃப்ளெம்மா’ (flamma) என்று ஒரு சொல் இருக்கிறது. ‘பற்றி எரியும் தீ ஜுவாலை’ என்பது இதன் பொருள். அந்தத் தீ ஜுவாலை காற்றில் எப்படி அசைந்தாடுகிறதோ, அப்படியான அசைவுகளில் இந்த நடன வகை இருக்கும் என்ற காரணத்தாலோ என்னவோ, லத்தீன் மொழியின் வேர் வார்த்தையை வைத்துக்கொண்டு ‘ஃப்ளெமங்கோ’ என்ற சொல்லை ஸ்பானிய மக்கள் உருவாக்கினர். ஜூவாலைப் பறவை அதே வேர் வார்த்தையிலிருந்து மேலும் படிக்க..

காவிரியில் கழிவுநீர் கலப்பு விவகாரம்

கர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவது, இதனால் செத்து மிதக்கும் பறவைகளை பற்றியும்  பற்றி முன்பே படித்தோம். இதை பற்றிய ஒரு அப்டேட்  ஹிந்துவில் இருந்து காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு 8 வாரங்களுக்குள் பதில ளிக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக மேலும் படிக்க..

நுனி கிள்ளுதல் மூலம் துவரையில் கூடுதல் மகசூல்

துவரை சாகுபடியில் நுனியை கிள்ளி விடுவதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண்மை துறையினர் யோசனை தெரிவித்தனர். நத்தம், சிறுகுடி, காசம்பட்டி, பட்டணம்பட்டி, மூங்கில்பட்டி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மானாவரியாக துவரை சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் பூவில் இருந்து காய் பிடிக்கும் தருவாயில் உள்ளது. செடியின் நுனியை கிள்ளி விடுவதால் பக்க கிளைகள் வளர்ந்து, அதிக பூக்கள் பூத்து காய் பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மகசூலை அதிகரிக்க இரண்டு சத டி. ஏ. மேலும் படிக்க..

தென்னைக்கு இசைவான ஊடுபயிர் கோகோ!

“சாக்லேட் மரம்’ என அழைக்கப்படும் கோகோ-வை, தென்னைக்கு இசைவான ஊடுபயிராக சாகுபடி செய்து பயனடையலாம் என தோட்டக்கலைத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் டி. சி. கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோகோவின் தாவரவியல் பெயர் “தியோபுரோமா கோகோ’. இது, ஐஸ்கிரீம், கேக், சாக்லேட், ஊட்டச்சத்து பானங்களின் மூலப்பொருளாக விளங்குகிறது. இதனால், அதன் தேவை அதிகரித்துள்ளது.                       மேலும் படிக்க..

தென்னையில் சிவப்பு கூண் வண்டுகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி

பொன்னமராவதி வட்டாரத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தென்னையை தாக்கும் சிவப்பு கூண்வண்டுகளை கட்டுப்படுத்தி மகசூலை பெருக்க மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விநியோகிக்கப்படும் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்துமாறு வேளாண்மை உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்னை மரங்களைத் தாக்கும் பூச்சிகளில் சிவப்பு கூண்வண்டு மற்றும் காண்டாமிருகவண்டு ஆகியவை தென்னை மரங்களின் மகசூலில் கணிசமான இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் சிவப்பு கூண்வண்டால் தாக்கப்பட்ட தென்னை மேலும் படிக்க..

‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’ – பிரகாஷ்ராஜ்

இயற்கைக்கு முன்ன நாமெல்லாம் ரொம்பவும் சின்னவங்கதான். பூமியோட ஆயுள் ரொம்பவும் அதிகம். நமக்கு ஒரு நொடி மாதிரிதான் பூமிக்கு 100 வருஷம். டைனோஸரையே இயற்கை பாத்துடுச்சு, அதனால இயற்கையை நாம காப்பாத்துறோம்ங்கிற கர்வம் வரவே கூடாது. ஏன்னா.. அது நம்மளோட கடமை. நாம நல்லா இருக்கணும்னா இயற்கையோட ஒன்றித்தான் ஆகணும். மரங்கள் வளர்த்துதான் ஆகணும். தண்ணீர் சேமிச்சுதான் ஆகணும். மாடு கூட, சாப்பிடும்போது வேரை விட்டுட்டுத்தான் சாப்பிடும். சில நாட்கள் கழிச்சு திரும்ப அதே இடத்துல புல் மேலும் படிக்க..

மண்புழுக்குளியல் நீர் Vermiwash

மண்வளம் பெருகிட மண்புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. இவை கிடைத்த பயிர் கழிவுகளை உண்டு நன்மை செய்யும் உரமாக்குவது நாம் அறிந்ததே. பயிர் வளர ஊக்கியாக செயல்பட மண்புழுக்களின் உடலின் வெளிப்புறம் ஈரமாக வைத்திருக்க அவை வியர்வை போன்ற திரவத்தை மெதுவாக வெளியிடுகின்றன. இந்த திரவத்தை சேகரித்து பயன்படுத்தும் உத்தி தான் மண்புழுக்குளியல் நீர் தயாரித்தல் ஆகும். அதற்கு ஆங்கிலத்தில் வெர்மிவாஷ் (Vermiwash) என்ற பெயர் உள்ளது. மண்புழுவை ஒரு தொட்டியில் அல்லது பானையில் வளர்த்து அதன் அடியில் மேலும் படிக்க..

புரட்சி விதைகளால் வாடிய பயிர்கள்

விதை சார்ந்த கொள்கையில் (National Seed Policy) இன்றைக்கு எப்படி அமைச்சர்கள் பேசுகிறார்களோ, அப்படியே அன்றைக்கும் (60-களில்) பேசினார்கள். அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போன்றோர் எச்சரித்தும்கூட, அன்றைய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியன் வலுக்கட்டாயமாக ஐ.ஆர். ரக விதைகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தார். அன்றைக்கு ஒட்டு விதைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த எம்.எஸ். சுவாமிநாதன், இன்றைக்கும் மரபீனி மாற்ற விதைகளுக்கு ஆதரவான குரல் எழுப்புகிறார். ராக்பெல்லர் பவுண்டேஷன், ஃபோர்டு பவுண்டேஷன் ஆகியவற்றின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் மேலும் படிக்க..

வெள்ளரி விவசாயியின் அனுபவங்கள்

குறைந்த செலவில் அதிக லாபம் பெற வெள்ளரி சாகுபடி உதவும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சின்னமனூர் விவசாயி ராஜா. தேனி மாவட்டம் சின்னமனூரைச் சுற்றியுள்ள ஊத்துப்பட்டி, முத்துலாபுரம், வீரபாண்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, சுக்காங் கல்லுப்பட்டி ஆகிய கிராமங்களில் வாழைக்கு நடுவில் ஊடுபயிராகவும், தனியாகவும் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நீர்ச் சத்து நிறைந்த இதைச் சாகுபடி செய்ய, குறைந்த செலவு ஆவதுடன் அதிக லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். வெள்ளரி பயிர் முறை கடந்த 10ஆண்டுகளாக வெள்ளரி சாகுபடி மேலும் படிக்க..

புகையான் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர்  அழகர், திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுராதா ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது நிலவி வரும் வானிலை சூழ்நிலையால் நடப்பு சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் தென்படுகிறது. புகையான் தாக்குதலை தடுக்க நடவிற்கு முன் தண்ணீர் தேங்கி நிற்காமல் வயலை சீராக சமப்படுத்த வேண்டும். புகையான் பூச்சி தாக்குதலை எதிர்பார்க்கும் இடங்களில் ஒவ்வொரு 8 அடிக்கும் ஒரு அடி இடைவெளி விட்டு நடவு செய்ய மேலும் படிக்க..

தென்னையின் அழையா இரவு விருந்தினன்

‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்… எங்கள் உலகம்…’ கண்ணதாசன் எழுதிய திரைப்பாடல் வரி இது. இந்தப் பாடலில் வருவதுபோல் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த மரநாய். பொதுவாகத் தென்னை அதிகம் வளர்க்கப்படும் பகுதிகளிலும் குறிப்பாகப் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணிப் பகுதிகளில் தென்னை மரங்களில் மேலும் படிக்க..

2015: தமிழகத்தை உலுக்கிய சுற்றுச்சூழல் சர்ச்சைகள்

கடந்து சென்ற 2015-ம் ஆண்டு உக்கிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சந்தித்தது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்துவருவது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதையும் இது சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் சந்தித்த முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள், ஒரு பார்வை: பாதரசக் கழிவு சர்ச்சைக்கு இடமாகி கொடைக்கானலில் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்ட ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பாதரச தெர்மாமீட்டர் நிறுவனம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு, அப்பகுதி மக்களை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மேலும் படிக்க..

தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. சுப்பையா வெளியிட்ட செய்திக்குறிப்பு: குருத்தழுகல், சாறு வடிதல், தஞ்சாவூர் வாடல் நோய், இலைக்கருகல், இலைப்புள்ளி ஆகியவை தென்னையைத் தாக்கும் முக்கிய நோய்களாகும். இவற்றைக் கட்டுப்படுத்த பயன்படும் ரசாயனக் கொல்லிகள் பெரியளவில் தீங்கு ஏற்படுத்தக் கூடியவை. அவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சுழல் மாசுபாடு, நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு, உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை, உயிரினங்களுக்கு தீங்கு போன்றவை ஏற்படுகின்றன. ஆனால், உயிர் எதிர்கொல்லிகளைப் மேலும் படிக்க..

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்

தற்போதுள்ள பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை பரவலாக ஆனைக்கொம்பன் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் தகுந்த மேலாண் முறையைப் பின்பற்ற வேண்டும். இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி கூறியதாவது: தற்போதுள்ள பருவத்தில் நெற்பயிரை ஆனைக்கொம்பன் தாக்கி சேதப்படுத்தி வருகிறது. இப்புழுக்கள் தண்டைத் துளைத்து உள்சென்று குருத்தைத் தாக்கும்போது உள்பகுதியிலிருந்து தோன்றும் இலை, மேற்கொண்டு வளராமல் வெங்காய இலை போல குழலாக மாறிவிடும்.  இது வெள்ளிக் குருத்து அல்லது வெங்காய மேலும் படிக்க..

மாப்பிள்ளை சம்பா'வின் மகத்துவம்

பாரம்பரியம் மிக்க “மாப்பிள்ளை சம்பா’ நெல் ரகத்தை காஞ்சிபுரத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர் பயிர் செய்து வருகிறார். இந்தியாவில் 20,000 பாரம்பரிய நெல் வகைகள் இருந்தன. அவற்றுள் பல, நவீன நெல் ரகங்களின் வரவால் அழிந்துவிட்டன. தற்போது சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுப் பொன்னி, சின்னப் பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா உள்ளிட்ட 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. அவையும் குறைந்த அளவே பயிரிடப்படுகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மேலும் படிக்க..

பூச்சிக்கொல்லி மருந்தால் 50 சதவீதம் அழிந்த தேவாங்குகள்

திண்டுக்கல் காந்திகிராமம் பல் கலைக்கழகமும், ‘சீட்ஸ்’ தன்னார்வ நிறுவனமும் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் தேவாங்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கினங்கள் மிகவும் அறிவுத் திறன் படைத்தவை. உலகளவில் 800-க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் குரங்குகளில் காணப்படுகின்றன. இவற்றில் குட்டித் தேவாங்கு என அழைக்கப்படும் ‘லாரிஸ் லைடிக் கெரியானஸ்’ தேவாங்குகள் இந்தி யாவில் கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரின் மழை மறைவுப் பிரதேசங்களில் குறிப்பாக தமிழகம், ஆந்திரம், கேரள வனப் பகுதிகளில் காணப்படுகின்றன. சர்வதேச அளவில் திண்டுக்கல் மேலும் படிக்க..

மனிதர்களை காப்பாற்றும் அலையாத்தி காடுகள்

ஆழிப் பேரலை Tsunami, தமிழகக் கடற்கரைகளை 2004-ல் தாக்கியபோது, சிதம்பரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிகமில்லை. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? அங்கிருந்த இயற்கைத் தடுப்பரண்கள். அதாவது அலையாத்திக் காடுகள். (Mangrove forests) இந்த அலையாத்திக் காடுகள் சத்தமின்றி, மந்திரஜாலம் செய்வதுபோல நமது கடற்கரைகளைக் காலங்காலமாகக் காப்பாற்றிவருகின்றன. அவை செய்யும் பேருதவிகளில் சில: புயல் தடுப்பு பருவமழைக் காலங்களிலும், புயல் காலங்களிலும் பெரும் புயல்களும் பேரலைகளும் நம் கடற்கரைகளைத் தாக்குகின்றன. இந்த அதிவேகமான இயற்கைச் சீற்றங்களை, மேலும் படிக்க..

உடலை காக்கும் அற்புத மருந்து நெல்லிக்காய்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய் ”நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான்…” என்கிறார் டயட்டீஷியன் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து… 1. ‘காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் மேலும் படிக்க..

மண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்சான்டோ

‘மான்சான்டோவுக்கு விஞ்ஞானி சவால்!’ என்று மேற்கத்திய ஊடக செய்திகளில் சமீபத்தில் இடம்பிடித்தார் சிவா அய்யாதுரை. ‘இ மெயில் தமிழன்’ என்பதுதான் இவருடைய அடையாளம். ஆனால், இப்போது மரபணு மாற்றப் பயிர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்து, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராகவும் மாறியுள்ளார் சிவா. மான்சான்டோவின் மரபணு மாற்ற சோயாவில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்ற தனது ஆய்வைப் பொய் என நிரூபித்தால், 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 60 கோடி) மதிப்புள்ள தன்னுடைய மேலும் படிக்க..

நம்பிக்கையூட்டும் புதிய பயிர்க் காப்பீடு!

விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை ஓரளவுக்குப் பூர்த்திசெய்யும் வகையில் ‘பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டிருக்கிறது. ரூ.17,600 கோடி மதிப்பிலான திட்டம் இது. இதை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ளும். காரிஃப் பருவத்தின்போது உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகளைப் பயிரிடும் விவசாயிகள், காப்பீட்டு நிறுவனம் நிர்ணயிக்கும் காப்பீட்டுச் சந்தாவில் 2% மட்டுமே செலுத்தினால் போதும். ராபி பருவத்தின்போது சந்தாவில் 1.5% மட்டுமே செலுத்தினால் போதும். இவ்விரு பருவங்களிலும் பயிரிடப்படும் தோட்டப் பயிர்கள், கரும்பு, பருத்தி மேலும் படிக்க..

இரண்டாம் போக சாகுபடிக்கு ஏற்ற பயிர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடிக்கு உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயிர்களை தனிப் பயிர்களாகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் சி.கனகராசன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: வடகிழக்குப் பருவ மழையால் விருதுநகர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கண்மாய்கள் மற்றும் கிணறுகளில் இரண்டாம் போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது. எனவே நெல், சிறு தானியங்கள், பயறு வகை பயிர்கள், பருத்தி மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்த இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2016 ஜனவரி 25ஆம் தேதி காலை 9 மணிக்கு நெல், மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப்பயிற்சி முகாமில் நெல், மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடிக்கு மண்வளத்தினை கண்டறியும் வழிமுறைகள், மண்வளத்தை மேம்படுத்தும் உத்திகள், மண் வளத்திற்கேற்ற சமச்சீர் மேலும் படிக்க..

பிழைக்குமா கானமயில்?

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி என்ற பாடலைக் கேள்விப்பட்டிப்பீர்கள். அதில் வரும் கானமயில் (Great Indian Bustard) என்பது மயிலைக் குறிப்பதாகத்தான், இவ்வளவு நாளும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இல்லை, அது வான்கோழி உயரமே இருக்கும் புல்வெளிகளில் வாழும் வேறொரு பறவையைப் பற்றியது. இந்தியாவின் தேசியப் பறவையாக அங்கீகாரம் பெற இருந்த அந்தப் பறவை, இன்றைக்கு அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஒகேனக்கல், மதுரையில் இந்தப் பறவை இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. முன்பு வேட்டையால் பெருமளவு அழிந்த கானமயில், மேலும் படிக்க..

ரசாயனக் கழிவுகளால் அழிந்துவரும் புலிகள்

வனப் பகுதியில் உள்ள தடுப்பணை வழியாக ரசாயன ஆலைகள் திறந்துவிடும் கழிவுநீரைப் பருகுவதால் புலிகள் உயிரிழக்கின்றன. புலிகளைப் பாதுகாக்க இந்த ஆலைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் வனக் கல்லூரிப் பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள அரசு மரக்கிடங்குக்கு பின்புறம், வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே வனத் துறையினரால் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராவில்  (Camera trap) இரவு புலி மேலும் படிக்க..

தங்கத்துக்கு இணையான பாரம்பரிய நெல் கட்டச்சம்பா

பாரம்பரிய நெல் வகைகளில் இன்றைக்கும் பிரபலமாக பேசப்படும் ரகம் கட்டச்சம்பா. இந்தப் பயிருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், இந்த பயிரில் நோய் தாக்குதல் என்பதே இருக்காது. நம்முடைய முன்னோர் இந்த ரகத்தைப் பயிரிட்டு ஏக்கருக்கு முப்பது மூட்டைக்கு மேல் மகசூல் எடுத்துள்ளனர். தங்கத்தின் விலை அளவுகோல் பாரம்பரிய நெல் ரகங்களில் குள்ள ரகமாக இருப்பதால், இதைக் கட்டச்சம்பா என்று அழைக்கின்றனர். இந்த நெல் ரகத்தைப் பயிரிடுவதன் மூலம், குறைந்த செலவில் அதிக மகசூல் எடுக்கும் மேலும் படிக்க..

தக்காளி ரகங்கள்

இரகங்கள் : கோ.1, கோ.2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, சிஒஎல்சிஆர்எச் 3, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனான்யா, அர்கா அலோக், அர்கா சிரஸ்டா, அர்கா வர்தன், அர்கா விசால், அர்கா விகாஸ், அர்கா செவ்ரோப், அர்கா மெகாலி மற்றும் அர்கா அஹ்தி. த.வே.ப.க தக்காளி வீரிய ஒட்டு கோ – 3: HN2 x CLN2123A வின் வீரிய ஒட்டு. மகசூல் 96.2 டன்/ எக்டர். பயிரின் மேலும் படிக்க..

திரவ நுண்ணுயிர் உரம் (பிபிஎப்எம்)

பாக்டீரியாக்கள் பல்வேறு சூழலில் வாழ்கின்றன. மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா (PINK PIGMENTED FACULTATIVE METHYLOTROPS – PPFM)  ஏராளமாக இலைகளை சுற்றி மற்றும் மேற்புறத்தில்  காணப்படும்.   மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா மெத்தைலோ பாக்டீரியா பேரினத்தைச் சேர்ந்தவை. மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா வளர்சிதை மாற்றத்தினால் மெத்தனால், கரிம அமிலங்கள் மற்றும் ஆல்கஹால் போன்ற  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாற்று கார்பன் மூலக்கூறுகள் உருவாக்கப்படுகின்றன. தாவர இலை பரப்பில் மைக்ரோமீட்டர் வரம்பில், பல்வேறு கார்பன் மூலங்கள், முக்கியமாக சர்க்கரை மற்றும் கரிம அமிலங்களை இலைத்துளை வழியாக மேலும் படிக்க..

பயிற்சிகள் மூலம் வழி காட்டும் விவசாய கல்லூரி

மதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் மையத்தில் பெண்களுக்கு தென்னை மரங்கள் ஏறுவதற்கும், பிற இயந்திரங்களை கையாள்வதற்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நிலக்கடலையை செடி மற்றும் காய்களை தனியாக பிரிப்பது, மக்காச்சோள விதை பிரிப்பதற்கு ஒரு நாள் இயந்திர பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மையத்தின் உழவியல் துறை உதவி பேராசிரியர் பத்மநாபன் கூறியது: பெண்கள் கையாளும் வகையிலான கருவிகளுக்கு குழுவாகவும், தனியாகவும் பயிற்சி தருகிறோம். பாதுகாப்பான முறையில் தென்னை மரங்கள் ஏறுவதற்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் படிக்க..

அன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்

அன்ட்ராய்ட் Android போனில் பசுமை தமிழகம் படிக்க ஆப்  app டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். இது வரை டவுன்லோட் செய்துள்ள 5000+ பேர் பசுமை தமிழகத்தை மொபைல் மூலம் படிக்கிறார்கள்! உங்களின் கருத்துகளை  gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்!!!  

நெற்பயிரில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு

நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வரப்புகளில் பயறு வகைகளை பயிரிட வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.இது குறித்து வேளாண் அதிகாரி கூறியதாவது: நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், புகையான், பச்சை தத்துப்பூச்சி, ஆனைக்கொம்பன் ஈ ஆகியவை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பொறிவண்டு, சிலந்தி, தட்டான், நீள்கொம்பு வெட்டுக்கிளிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் உதவுகின்றன. இவைகள் தீமை செய்யும் பூச்சிகளை உண்கின்றன. மேலும், நெல் பயிரிட்டுள்ள வயல்களில் உள்ள வரப்புகளில் தட்டைப்பயறு, மேலும் படிக்க..

’நான் முதல் தலைமுறை விவசாயி'

நல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் இளைஞர்களின் வரிசையில் ஒருவர்தான் என்றாலும், செந்தில்குமாரின் வாழ்க்கையும் இயற்கை வேளாண்மையை அவர் முன்னெடுக்கும் முறையும் வித்தியாசமானவை. நமது மரபு விவசாய முறைகள் குறித்த செந்தில்குமாரின் தேடல், வேர்களை நோக்கி அவரைத் திருப்பியது. ஒரு விவசாயியாக இன்று அவர் பரிணமித்திருக்கிறார். நம்முடைய மரபு சாகுபடி முறைகளை மீட்டெடுப்பதிலும், அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வேலையையும் அவர் செய்துவருகிறார். வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்றபோது செந்தில்குமாருக்கு மேலும் படிக்க..

தலைமுறைகளாகத் தொடரும் இயற்கை வேளாண்மை

ஆடுகளின் கழிவுகளை விளை நிலங்களில் அடியுரமாகப் பயன்படுத்தும் பழமையான மந்தை அடைத்தல் முறையை கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பல தலைமுறைகளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சைக்கு ஈடாக நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளில் சிலர், பல தலைமுறையாக இயற்கை வேளாண்மையை விடாமல் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். மரம், செடி ஆகியவற்றின் இலைகள், மாட்டுச் சாணம் போன்றவற்றை அடியுரமாக இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், சிலர் ஆடுகளைப் பட்டியில் அடைக்கும் முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து மேலும் படிக்க..

சின்ன வெங்காயம் பயிரிட்டால் நல்ல மகசூல்

சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று லாபம் அடையலாம் என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சின்ன வெங்காயம் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் வளர்ச்சிக்கு 15 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அவசியம். நன்கு தண்ணீர் தேங்காத வளமான இரு மண்பாங்கான நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும். மண்ணின் கார, அமிலத் தன்மை 6 சதவீதம் முதல் மேலும் படிக்க..

மண்ணின் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரம்!

மண்ணின் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்களில் குறைபாடு ஏற்படுவதாலும், அங்கக உரங்களைப் பயன்படுத்தாமை அல்லது குறைத்து இடுவதாலும், பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இது குறித்து, வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் ம. மதன்மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, அதிக கரிம அளவை மண்ணில் நிலை நிறுத்துதல் மிக அவசியம். தொடர்ந்து தழை, எருக்களை நிலத்தில் இடுவதால், மண்ணில் கரிமம் நிலைபெறும். மண்ணில் சேரும் கரிமப் மேலும் படிக்க..

சில ஆயிரம் செலவில், லட்சம் லிட்டர் தண்ணீர்!

உலகுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே நெருக்கடியாக இருக்கக்கூடிய இயற்கை வளம் தண்ணீர். குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது நமக்குத் தெரியும். கோடையில் தென்னையைக் காப்பாற்ற தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாசனம் செய்யும் உழவர்கள் நம்மூரில் இருப்பது அதைவிடக் கொடுமை. இப்படி நீரின் தேவையும் அழுத்தமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. அனைத்துப் பொருட்களைவிடவும் நீர் விலைமதிப்பற்றது. ஏனென்றால், நீரை விளைவிக்க முடியாது. அதனால்தான் நமது முன்னோர் `நீரின்றி அமையாது உலகு’ என்று மேலும் படிக்க..

இயந்திரம் மூலம் வேர்க்கடலை விதைப்பு!

சீரான இடைவெளி, நேர்த்தியான விதைப்பு ஆகியவற்றின் மூலம், அதிக மகசூலை பெற, இயந்திரம் மூலம் வேர்க்கடலை விதைக்கப்பட்டு வருகிறது. மீஞ்சூர் ஒன்றியத்தில், நெல், வேர்க்கடலை, கரும்பு உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு வந்தன. ஆட்கள் பற்றாக்குறையால், வேர்க்கடலை பயிரிடுவதையும், ஆலைகளில், ‘கட்டிங் ஆர்டர்’ கிடைக்காமல், கரும்பு பயிரிடுவதையும் விவசாயிகள் தவிர்த்தனர்.நெல் சாகுபடி செய்ய, நடவுக்கும் அறுவடைக்கும் இயந்திரங்கள் உள்ளதால், விவசாயிகள் தொடர்ந்து நெல்லை பயிரிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது, வேர்க்கடலை பச்சை பயறு, தர்பூசணி உள்ளிட்டவைகளை, அப்பகுதி வாசிகள் இயந்திரம் மேலும் படிக்க..

பசுமைத் திருமணங்கள்!

கோடிக்கணக்கான ரூபாய் செல வழித்து ஆடம்பர திருமணங்கள் அரங்கேறிவரும் நிலையில் காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் பசுமைத் திருமணங்களை நடத்தி வரு கிறார் கடலூர் மாவட்டம், தொழுதூரைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையா. இன்றைக்கு ஆடம்பரத் திருமணங்கள் என்கிற பெயரில் பட்டாசில் தொடங்கி பட்டாடை வரை படோபடம் செய்கிறார்கள். தினமும் கோடிக்கணக் கானோர் பட்டினி கிடக்கும் நிலையில் ஏராளமான உணவுகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. தேவைக்கு நுகர்வு என்பது போய் கெளரவத்துக்கு நுகர்வாகி விட்டது. இந்நிலையை மாற்ற பசுமைத் திருமணங்களை நடத்தி மேலும் படிக்க..

ஊரார் வளர்க்கும் சிட்டுகுருவிகள்

ஓசூர் மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், அட்டை கூடுகள் அமைத்து, சிட்டு குருவி வளர்க்கின்றனர். காகத்திற்கு அடுத்து, மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை, சிட்டு குருவி. சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மொபைல் ஃபோன் டவர் அதிகரிப்பு உள்ளிட்ட காரணத்தால், வீடுகளுக்குள் கூடு கட்டி வாழ்ந்த குருவிகளை தற்போது காண முடியவில்லை என்பது பலருக்கும் வேதனையான விஷயம். இதனால் தான் என்னவோ இந்த இளைய தலைமுறைக்கு சிட்டுக்குருவியை பற்றி தெரியவில்லை. உலக மேலும் படிக்க..

தென்னையை வெள்ளத்தில் இருந்து காப்பது எப்படி

திருவையாறு தென்னை ஆராய்ச்சியாளர் டாக்டர் வா.செ.செல்வம், தென்னை சாகுபடியாளர்கள்  அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை அடைமழையாக மாறி, தென்னந்தோப்புகள் வெள்ளக் காடாகியுள்ளது. ஒரு வாரம் 10 நாட்களுக்கு மேல் தென்னந்தோப்புகளில் தண்ணீர் தேங்குமானால், தென்னை மர வேர்கள் அழுகி தென்னை சாக வாய்ப்புள்ளது. தென்னை அதிக தண்ணீரையும் தாங்காது. அதிக வறட்சியையும் தாங்காத சாதுவான பயிர் அரை அடி அகலம், அரை அடி ஆழமும் உள்ள ஒரு வாய்க்கால் இரு தென்னை வரிசைக்கு நடுவில் எடுத்து பள்ளமான மேலும் படிக்க..

25 சென்ட் நிலத்தில் 2 டன் வெள்ளரி சாதனை

மன்னார்குடி அருகே திருக்கொல்லி காட்டை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி தியாகராஜன் (60). இவருக்கு திருக்கொல்லிகாட்டில் 45 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல் பயிரிட்டு வருகிறார். இந்நிலையில் 25 சென்ட் நிலத்தில் வெள்ளரி சாகுபடி செய்து ஒரே மாதத்தில் 2 டன் வெள்ளரி உற்பத்தி செய்துள்ளார். களிமண் பூமியாக உள்ள கோட்டூர் ஒன்றிய பகுதியில் எப்படி இந்த வெள்ளரி சாகுபடி சாத்தியமானது என்று தியாகராஜனிடம் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது: இந்த பகுதியில் மேலும் படிக்க..

கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்

மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி, ஆய்வகத் தலைவருமான பேராசிரியர் ந.புண்ணியகோடி தெரிவித்தார்.  மடிவீக்க நோய்: கறவை மாடுகளில் மடிவீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமித் தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும் கடினத் தன்மையுடனும் வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது மேலும் படிக்க..

மானாவாரி நிலத்தில் பருத்தி விவசாயம்

மானாவாரி நிலங்களில் பருத்தி விவசாயம் செய்யும்முறை குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பணப்பயிர்களில் பருத்தி முதன்மை இடத்தில் உள்ளது. உலகளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா 2ம் இடத்தில் உள்ள போதிலும், பருத்தியின் உற்பத்தியில் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 70 லட்சம் பேல்கள் பஞ்சு தேவைப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அந்தளவிற்கு பருத்தி கிடைப்பதில்லை. இதன் காரணமாக வேளாண்துறையினர் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் பல நவீன சாகுபடி முறைகளை மேலும் படிக்க..

நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி 2016 பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து பல்கலைக்கழக பூச்சியியல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயிர்களில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் பூச்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மையத்தில் உயிரியல் முறை சார்ந்த பூச்சி கட்டுப்பாட்டுக்கு உதவும் ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், பூச்சிகளை அழிக்கவல்ல மேலும் படிக்க..

மனிதன் அழித்த அதிசயப் பறவை

இருநூறு ஆண்டு களுக்கு முன்பு வரை பூமியில் வாழ்ந்த ஒரு அதிசயப் பறவை ‘டூடூ’(Dodo). ஆனால், இன்றைக்கு அந்த அதிசயப் பறவை உயிரினங்களின் அழிவுக்கான குறியீடாக மாறிவிட்டது. ‘டூடூ போல் சாகாதே’ (‘as dead as a dodo’) என்னும் பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. மிக மிக சாதுவான பறவையாக டூடூ இருந்ததுதான் அழிந்ததற்குக் காரணமாக இருக்கலாம். டூடூ மனிதர்களைக் கண்டு அஞ்சி ஓடாத பறவை யாக இருந்திருக்கிறது. பார்ப்பதற்கு மிகப்பெரிய உருவ அமைப்பைக் கொண் டிருந்தாலும் மேலும் படிக்க..

அலுமினியப் பறவையும் நிஜப் பறவையும்

பறவையைக் கண்டான், விமானம் ப டைத்தான்” என்று ஒரு பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டி ருந்தார். ஆனால் பறவையும், விமானமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகிவிட்டது காலத்தின் கொடுமை. ‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் இறந்தனர்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால்,வருடந்தோறும் பறவைகளால் விமான விபத்துகள் ஏற்படுகின்றன. சென்ற ஆண்டு இப்படி 50 முறை விமானங்களில் பறவைகள் சிக்கிக்கொண்டதாக இந்திய விமான நிலையங்களின் நிர்வாகம் (AAI) குறிப்பிட்டிருக்கிறது. புறாவி லிருந்து காக்கைகள்வரை (சில சமயம் மயில்கள்கூட) மேலும் படிக்க..

பனை மரத்தின் சிறப்புகள்

ஒரு பனை மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு பதநீர் 180 லிட்டர், பனை வெல்லம் 25 கிலோ, பனஞ்சீனி 16 கிலோ, தும்பு (மிதியடி பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது) 11.4 கிலோ, ஈக்கு 2.25 கிலோ, விறகு 10 கிலோ, ஓலை 10 கிலோ, நார் 20 கிலோ அளவுக்கு கிடைக்குதுன்னு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தென்னை மரத்தோட ஒப்பிட்டால் பனை மரத்துலதான் நிறைய பலன் உண்டு. பனங் கருப்பட்டி தான் கிராம மக்களுக்கு ஏற்றது. பனங்கருப்பட்டியும் பனங்கற்கண்டும் சாப்பிட்டால் மேலும் படிக்க..

நல்ல விளைச்சல் தரும் யாழ்ப்பாணம் தென்னை

கீழக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாழ்ப்பாணம் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. நல்ல விலை கிடைப்பதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட தென்னை மரங்கள் அதிகமாக உள்ளன. யாழ்ப்பாணம் தென்னை மரங்களில் காய்ப்புத்திறன் அதிகம் மட்டுமின்றி தேங்காய்கள் பெரிசாகவும், எண்ணெய் சத்து நிறைந்ததாகவும் உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் யாழ்ப்பாணம் தேங்காய்க்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலும் அதிக மவுசு உள்ளது. வியாபாரிகள் போட்டி மேலும் படிக்க..

ரசாயன உரங்களை பயன்படுத்தினால் மண்வளம் குறையும்

கம்பம் வட்டாரத்தில் விவசாயிகள் தினவிழா வேளாண்துறை சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெங்கடசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வெங்கடசுப்ரமணியன் பேசுகையில், ’தேனி மாவட்டத்தில் 12 ஆயிரம் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்ணில் இயற்கை நுண்ணுயிரிகள் பல உள்ளன. ரசாயன உரங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லி மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் நுண்ணுயிரிகளின் பெருக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டு மண்வளம் குறைய வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் உரப்பயன்பாட்டை மண்பரிசோதனை மூலம் அறிந்துகொண்டு மேலும் படிக்க..

வறட்சியிலும் வருமானம் தரும் நாட்டுமுருங்கை!

சாம்பார், புளிக்குழம்பு, குருமா, பொரியல், கூட்டு, அவியல்… என முருங்கைக்காயைக் கொண்டு பலவித உணவுகள் சமைக்கப்படுகின்றன. குறிப்பாக, முருங்கைக்காய் இல்லாத சைவ விருந்தே கிடையாது என்றுகூட சொல்லலாம். இப்படி அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணம்… அது தன்னுள் கொண்டுள்ள ஊட்டச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட மருத்துவக் குணங்களே! முருங்கைக்காய் ஓரளவுக்கு வறட்சியையும் தாங்கும் என்பதால், பாசன வசதி குறைவான விவசாயிகளுக்கு உகந்த பயிராகவும் இருக்கிறது. அதனால்தான் காய்கறி விவசாயிகள் பலரும் முருங்கையை விடாமல் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட கடுகு!

மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகள் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். இன்றைய  நிலையில்,இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி மட்டுமே பயிர் இட படுகிறது. சில ஆண்டுகள் முன் மரபணு மாற்றப்பட்ட கத்திரியை அனுமதிக்க மறுத்து விட்டது மதிய அரசு. ஐரோப்பாவில் பல நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகளை தடை செய்துள்ளன. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொது மத்திய அரசு சத்தம் போடாமல் மரபணு மாற்றப்பட்ட கடுகை அனுமதி கொடுக்க  பார்க்கிறது.இதை பற்றிய மேலும் படிக்க..

கோத்தகிரி பகுதியில் ‘பேஷன் புரூட்’ சாகுபடி

கோத்தகிரி பகுதியில் ‘பேஷன் புரூட்’ விளைச்சல் அமோகமாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வால்பேரிக்காய், ரம்பூட்டான், பிளம்ஸ், பேஷன் புரூட், ஆப்பிள் உள்பட பல்வேறு வகையான பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஒரு சில இடங்களில் விவசாயிகள் தோட்டங்களில் பழ மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். பொதுமக்கள் சிலரும் தங்களது வீடுகளில் பழ மரங்களை நட்டுள்ளனர். இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கிளப் ரோடு மற்றும் ரைபிள் ரேஞ்ச் பகுதிகளில் உள்ள வீடுகளில் ‘பேஷன் புரூட்’ (Passion fruit) பழ மரங்கள் மேலும் படிக்க..

சிறுதானிய பயிர் மானாவாரியாக பயிர் செய்தால் லாபம்

சிறுதானியங்கள் மானாவரியாக பயிர் செய்தால் விவசாயிகள் அதிக வருமானம் சம்பாதிக்கலாம். நீர் மேலாண்மை பயிற்சி நிலைய, வேளாண் துணை இயக்குநர் இந்திராகாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளாகவும், வறட்சி தாங்கி, எல்லா விதமான மண்ணிலும், வளரும் பயிராக சிறுதானியங்கள் உள்ளந. குறிப்பாக கம்பு, சோளம், குதிரைவாலி, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை லேசான மழை பெய்யும் சமயத்தில் உழவு செய்த பிறகு, தொழு மேலும் படிக்க..

அரிதாகி வரும் மாகாளிக் கிழங்கு

மாகாளிக் கிழங்கு என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம் தாயின் நினைவும் அவர் தயாரிக்கும் மாகாளிக் கிழங்கு ஊறுகாயின் நினைவும்தான் உடனே எனக்குத் தோன்றும். அத்துடன் திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலுக்கு எதிரில் ஊறுகாய் தாவரங்கள் விற்கும் நான்கைந்து தெருவோரக் கடைகளும் நினைவுக்கு வரும். இந்தக் கட்டுகளில் சிலவற்றை வாங்கி, வேர்க்கிழங்குகளின் மையத்திலுள்ள கடினமான நார்ப் பகுதியை நீக்கிவிட்டு, கிழங்குப் பகுதிகளைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மிளகாய்த்தூள், சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்த வெந்நீரில் போட்டு என்னுடைய தாய் மேலும் படிக்க..

போரூர் ஏரியில் சாலை அமைக்க தடை!

ஒரு ஏரியை கொல்ல மிகவும் எளிதான வழி அந்த எரி நடுவே ஒரு ரோடு  போடுவதுதான். இப்படி செய்தால் ஏரி  துண்டுதுண்டாக  உடையும் (Fragmented) . சிறிய சிறிய  குட்டைகளாகும். ரோடு வந்த உடன் இந்த ரோட்டில் வந்து இரவோடு இரவாக  குப்பை, கோழி  கழிவு, கட்டட உடைப்பு கற்கள் போட்டு  நிரப்புவர். சிறிது நாளில் அந்த ரோடு பக்கத்திலேயே Lakeview apartments என்று கோடிகணக்கில் பிளாட்கள்  விற்க  படும். இந்த வழிமுறையை பயன்படுத்தியே எத்தனையோ ஏரிகளை மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி?

கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ, மேற்கண்ட இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும். 1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து, கரைசலை பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டியில் தயாரிக்க வேண்டும். நிழலான இடத்தில் மேலும் படிக்க..

இயற்கை உரங்கள் தயாரிக்கும் அசாருதீன் அனுபவங்கள்

விளம்பர ஏஜென்ஸி நடத்திவந்த அசாருதீன், இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியது எதேச்சையான ஒன்று. கோயம்புத்தூரைச் சேர்ந்த அசாருதீனுக்குத் திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது சின்ன வயது ஆசை. அதற்காகவே பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். நிர்வாகத் திறமையும் அவசியம் என்பதற்காக எம்.பி.ஏ.வும் முடித்தார். சென்னையில் திரைத் துறை சார்ந்த வேலைகளில் சுமார் ஒன்றரை ஆண்டு ஈடுபட்டார். இரண்டு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும் அசாருக்கு உண்டு. பிறகு விளம்பர ஏஜென்ஸி ஒன்றை நடத்தினார். இயற்கை மேலும் படிக்க..

தக்காளி பயிரில் புது முறை சாகுபடி

பூ, இலைகள் உதிர்ந்த பிறகும், தக்காளிச்செடிகளுக்கு உயிர் கொடுத்து, விளைச்சலை பெருக்கி விவசாயிகள் சாதித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழையால், விவசாய நிலங்கள் குளிர்ந்துள்ளன. பாசனக்கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகளுக்கு திருப்தியை கொடுத்துள்ளன.நிலத்தடி நீரால் தென்னைகளின் வளர்ச்சியும், காய்ப்பிடிப்பு திறனும் கூடியுள்ளன.ஆனாலும், தக்காளி, மிளகாய், கத்திரி உள்ளிட்ட செடிகள் மழை நீர் தேங்குவதால் அழுகி, இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதைத்தவிர்க்க, பெரும்பாலான விளைநிலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி, பயிர் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. ஆனாலும், சமீப நாட்களில் பெய்த, மேலும் படிக்க..

லாபம் தரும் செவ்விளநீர் கன்றுகள்

பெரியகுளம் பகுதிகளில் குறுகிய கால செவ்விளநீர் தென்னங்கன்றுகள் அதிகளவில் நடவு செய்யப்படுகிறது.பெரியகுளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. தற்போது பெரியகுளம் பகுதியில் குறுகிய காலத்தில் பலன்தரும் செவ்விளநீர் தென்னங்கன்றுகள் நடுவது அதிகரித்துள்ளது. இவை நடவு செய்யப்பட்ட 3 ஆண்டுகளில் பலன் கொடுத்து விடும். இவ்வகை தென்னை மரங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை இளநீர் வெட்டப்படுகிறது. மரத்தின் வாழ்நாள் 35 ஆண்டுகளாகும். இந்தவகையான மரங்களில் இளநீர் மட்டும் கிடைக்கும். இளநீர் ஒன்று 20 முதல் 25 மேலும் படிக்க..

நெற்பயிரில் குலைநோய் தடுப்பு

தேவகோட்டை அருகே கண்ணங்குடி வட்டாரத்தில் 7ஆயிரத்து 240 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பயிர்களில் குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் உள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இதனை நோய் என்று அறியாமல் பூச்சியால் வந்த சேதமென்று எண்ணி பூச்சிமருந்துகளை தெளிக்கின்றனர். இந்நிலையில் நோய்கள் அதிக அளவில் தென்பட்ட கப்பலூரில் விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானிகள் செல்வராஜ், சீனிவாசன் ஆகியோர் விவசாயிகளிடம் பேசியதாவது, மேலும் படிக்க..

காணாமல் போன நதிகள்!

“மலை முழுங்கி மகாதேவன்” என்று ஒரு வசனம் உண்டு. மதுரை போன்ற இடங்களில் க்வாரி செய்து மலைகளை காணாமல் செய்த புண்ணியவான்கள் நாம் அறிவோம்.. நதிகளும் இப்படி காணாமல் போய் கொண்டிருக்கின்றன என்பது தான் சோகம். நகர வளர்ச்சி,  நீர் பற்றிய அலட்சியம், பணம் மட்டுமே கொள்கை என வாழும் அரசியல் வாதிகள் போன்ற காரணங்களால் நடத்த படும் சோக  நாடகம்  இது. ஹிந்துவில் இருந்து தகவல்… கோவை கவுசிகா நதியை அறிவீர்களா? கோவையில் பவானி ஆற்றை மேலும் படிக்க..

கடல் ஆமைகளை காப்பாற்றும் மனிதர்கள்

கடலில் வாழும் அற்புத பிராணிகளான ஆமைகள் கடல் குதிரைகள் எப்படி மனிதனால் அழிக்க படுகின்றன என  படித்தோம். இந்த சூழலில் சிலர் தன்னால் முடிந்த அளவு கடல் ஆமைகளை காப்பாற்றி கடலில் விடுவதை volunteer வேலையாக  செய்கின்றனர். இந்த ஒலிவ் ரிட்லி போன்ற பெரிய கடல் ஆமைகள் மிகவும் சாதுவானவை. இவை கடலில் உள்ள மீனவர்களின் (Trawlers ) போன்ற இயந்திரங்களில் மாட்டி  சாகின்றன. மீனவர்கள் அடிபட்ட இந்த ஆமைகளை அப்படியே கடலில் விட்டு விட்டு தனக்கு மேலும் படிக்க..

தில்லியில் காற்று நிலைமை படு மோசம்

இந்தியத் தலைநகர் தில்லியில் காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாக இந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சக நோய்கள் வரக்கூடும் என்று தேரி எனப்படும் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்ட்டிடியூட் (TERI) தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள மந்திர் மார்க், ஆர்.கே. புரம், பஞ்சாபி பாக், ஆனந்த் விஹார் ஆகிய நான்கு இடங்களில் 24 மணி நேரம் அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் படிக்க..

மாதம் ஒரு லட்சம் லாபம் கொடுக்கும் பால் பண்ணை

பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்… “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத். பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். மேலும் படிக்க..

ஒரு தென்னை மரத்தில் ஆண்டுக்கு 200 காய்கள் மகசூல் பெற..

சரியான முறையில் தென்னைக்கு உரமிட்டால் ஆண்டுக்கு 200 காய்கள் வரை மகசூல் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து பட்டுக்கோட்டை அடுத்த திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நெட்டை ரக தென்னைக்கான உர பரிந்துரைகள் நடவு செய்தது முதல் ஒரு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 10 கிலோ, யூரியா 0.325 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 0.5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 1.5 மேலும் படிக்க..

மண்வளத்தை நிலை நிறுத்தும் உளுந்து

“அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகள் அடுத்ததாக நிலத்தை தரிசாக போடாமல், மண்வளத்தை நிலை நிறுத்தும் விதமாக உளுந்து பயிரிடவேண்டும்,’ என வேளாண் ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது. ஒரு எக்டேர் சத்தான மண்ணில் ஒரு சதவீதம் கரிம சத்தும்,300 கிலோ தழைச்சத்தும் 20 கிலோ மணிச்சத்தும், 200 கிலோ சாம்பல் சத்தும் இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கரிமச்சத்து 0.4 சதவீதம் முதல் 0.7 சதவீதம் வரையே உள்ளன. நெல் நடவு செய்தவர்கள் மண் வளத்தை அதிகப்படுத்தும் உளுந்து மேலும் படிக்க..

களை மேலாண்மை இலவச பயிற்சி

பயிர்களில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2016 ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இப் பயிற்சியில் பயிர்களில் காணப்படும் முக்கிய களைகள், அவை பரவும் விதம், ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாட்டு முறைகள், உழவியல் முறையில் ஊடுபயிர் சாகுபடி, பயிர் மூடாக்கு அமைத்தல், பயிர் சுழற்சி முறையில் களைக் கட்டுப்பாடு, இயந்திர முறையில் களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்படும். மேலும் படிக்க..

தென் மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள் அழித்த கதை

பாண்டியர்கள் காலத்தை நீர் நிலைகளின் பொற்காலம் எனலாம். வைகை, தாமிரபரணி, பழையாறு, காவிரி இங்கெல்லாம் ஏராளமான அணைகளைப் பாண்டிய மன்னர்கள் கட்டினார்கள். வைகை ஆற்றங்கரையில் கிடைத்த கல்வெட்டின் மூலம் பாண்டிய செழியன் சேந்தன் வைகையில் மதகு கட்டியதையும் அரிகேசரி என்கிற கால்வாயை வெட்டியதையும் அறிய முடிகிறது. மதுரை சோழவந்தான் தென்கரை கண்மாயை உருவாக்கியதும் செழியன் சேந்தனே. அவை இன்றும் பயன்பாட்டில் இருப்பது பாண்டியர்களின் தலைசிறந்தப் பாசனக் கட்டுமானங்களுக்கு சாட்சியாக இருக்கின்றன. சங்க காலத்தில் இருந்தே முற்கால பாண்டியர்களும் மேலும் படிக்க..

பரிதாபமாக மடியும் அரிய உயிரினங்கள்

எல்லா மிருகங்களுக்கும் பிள்ளை பெற்று கொள்ளும்  காலம் (Breeding season) என்று ஒன்று  உண்டு. அந்த நேரத்தில் தான் அவை  கூடி, கூடு கட்டி பிள்ளை  பெறும். கடவுள் ஏனோ மனித மிருகத்திற்கு வருடம் முழுவதும் இதை கொடுத்து  விட்டார். 60 வயது தாண்டிய பணக்கார சீன தாத்தாக்கள் ஆண்மை அதிகரிக்க என்று எதை தின்றால் நல்லது என்று எல்லா மிருகங்களையும் அழித்து வருகின்றனர். புலிகள் அப்படி தான் கொல்லப்பட்டு அவற்றின் ஆணுறுப்புக்கள் ஆண்மை அதிகாரிக்கும் மருந்துகள் மேலும் படிக்க..

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் குதிரைவாலி பயிர்

கடும் வறட்சியிலும், தொடர் மழையிலும் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் குதிரைவாலி பயிர் விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய் யப்பட்டு அறுவடைக்குத் தயாராகி வருகிறது. தொடர் வறட்சியால் பாதிக்கப் பட்ட விருதுநகர் மாவட்ட விவ சாயிகளுக்குக் கனமழையிலும் உதவி வருகிறது குதிரைவாலி பயிர் சாகுபடி. இப்பயிர் வறட்சி மற்றும் மண் உவர்ப்பு தன்மைகளைத் தாங்கி வளரக்கூடியது. மிகக் குறைந்த நீரே சாகுபடிக்கு போது மானது. இறவையாக சித்திரை, ஆடி, மார்கழி பட்டங்களிலும் மானாவாரியாக ஆடி, புரட்டாசிப் மேலும் படிக்க..

இன்று நம்மாழ்வார் நினைவு தினம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்  இன்று  (டிசம்பர் 30). நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை வேளாண்மையை மிக மிக எளிமையாக விளக்கும் அவருடைய உரைகள்தான். இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் பற்றிய நம்மாழ்வாரின் பேச்சை, கோட்டோவியங்கள் நிரம்பிய காணொளித் தொகுப்பாக வரைந்து ஓவியர் ரஜினிபாபு காட்சிப்படுத்தியிருக்கிறார். பின்னணியில் நம்மாழ்வாரின் குரல் ஒலிக்க, அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ஓவியமாக மாறும் அந்தக் காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது. மேலும் படிக்க..

நெற் பயிரில் குலை நோய

ராமநாதபுரம் மாவட்டத்தில் டீலக்ஸ் பொன்னி என்று அழைக்கப்படும் பி.பி.டி. 5204 நெல் ரகத்தில் குலைநோய் தாக்குதல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குநர் ஆர்.ராமசாமிப் பாண்டியன் யோசனைகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: பொதிப் பருவத்தில் உள்ள இப்பயிரில்  டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை மற்றும் மேகமூட்டம் காணமாக குலைநோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. ராமநாதபுரம் அருகே பேராவூர், தேவிபட்டினம், சம்பை ஆகிய கிராமங்களில் டீலக்ஸ் பொன்னி என்று அழைக்கப்படும் மேலும் படிக்க..

மக்காச்சோளம் சாகுபடியில் அதிக மகசூல் பெற..

மக்காச்சோளம் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான  தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை துறை ஆலோசனை வழங்கி உள்ளது. மக்காசோளத்தில் கோ- 1, கோ.எச். 5 (எம்) முதலிய ரகங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் வழங்கும் வீரிய ஒட்டு ரகங்களும் நல்ல மகசூல் தருகின்றன. வீரிய ஒட்டு ரக விதைகளை ஏக்கருக்கு 6 கிலோ வீதமும், பிற ரகங்களை ஏக்கருக்கு 8 கிலோவும் பயன்படுத்தலாம். விதை மூலம் பரவும் அடிச்சாம்பல் நோயை தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 மேலும் படிக்க..

தானியங்களை மதிப்பூட்டு செய்து விற்றால் அதிக லாபம்

”வயலோடு நின்று விடாமல் உணவுப்பொருட்களாக வணிகம் செய்வதால் வெற்றிபெற முடிகிறது,” என்கிறார், விருதுநகர், சூலக்கரை மேடு, சின்ன தாதம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார். சிறுதானியங்களின் உணவுத்தன்மை குறித்து ஆய்வு செய்வதோடு, புதுப்புது உணவு மெனுக்களை உருவாக்கி வரும் சிவக்குமார், தன் அனுபவங்களை கூறியது: தாத்தா சங்கரலிங்கம் இயற்கை விவசாயம் செய்தார். அப்பா சுப்புராஜ் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்தார். தாத்தாவைப் போலவே எனக்கும் விவசாயத்தில் ஈடுபாடு இருந்தது. தாத்தா நிலம் என் கைக்கு வந்தபோது நெல் விவசாயம் செய்தேன். மேலும் படிக்க..

புரதச்சத்து மிக்க உலர்தீவனம் நிலக்கடலை செடி

உலர் தீவனங்களில், புரதச்சத்துக்கள் நிரம்பிய, நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு கொடுப்பதால், சத்துக்கள் கிடைப்பதோடு, தீவனங்கள் வாங்க செலவாகும் பெருந்தொகையை குறைக்கலாம் என, கால்நடைத்துறை பரிந்துரைத்துள்ளது. கால்நடைகள், உலர் தீவனங்களை விரும்பி சாப்பிடாது. இதில், குறைந்த புரதச்சத்துகள் இருப்பதோடு, எளிதில் செரிப்பதால், பால் உற்பத்தி குறைவதோடு, உடல் வளர்ச்சி தாமதப்படும். இதற்காக, அதிக விலை கொடுத்து, அடர் தீவனங்கள் வாங்க வேண்டியிருக்கும். பாலின் விலை அதிகமாவதற்கு, தீவனச் செலவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், மேலும் படிக்க..

பூண்டு கழிவுகளில் இயற்கை உரம்

பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு போகும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக்கி, விவசாயிகள் மகசூலை அதிகரிக்கின்றனர். வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து ரசாயண உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலங்கள், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.         இதை தவிர்க்க, விவசாயிகள் மண்ணை உழுது இயற்கை உரங்களான மாட்டுசாணம், புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை போட்டு, சணம்பு உள்ளிட்ட கீரைச்செடிகளை பயிர் செய்கின்றனர். மேலும் படிக்க..

அதிசய மரக்கொடி யானைக் கொழிஞ்சி

கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கிழக்கு மலைத்தொடரின் பல்வேறு பகுதிகளில் நான் மேற்கொண்ட கள ஆய்வுகளின்போது, என்னை அடிக்கடி வியப்பில் ஆழ்த்திய ஒரு தாவரம் எதுவென்று கேட்டால், அது யானைக் கொழிஞ்சிதான். சில்லு, இரிக்கி, வட்டவள்ளி என்று தமிழிலும், எண்டடா ரீடிஐ என்று தாவரவியலிலும் (தாவரக் குடும்பம்: மைமோசேஸி) அழைக்கப்படும் இந்தத் தாவரம், ஒரு மரக்கொடி (liane) வகையைச் சேர்ந்தது. நன்கு வளர்ந்த நிலையில் இந்தத் தாவரம் ஒரு மரமொத்த அடித்தண்டு (Trunk) பகுதியையும், பெரிய கிளைகளையும் கொண்டிருந்தாலும், மேலும் படிக்க..

கிளோரினுக்கு மாற்று

மழை நீரோடு கலந்த சாக்கடை நீர் ஆங்காங்கே வடிந்துவருகிறது.  எலிக்காய்ச்சல் தொடங்கிப் பலவிதமான தொற்றுநோய்களைப் பரப்பும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை சாலை ஓரங்களில் இருந்தும், வீட்டுத் தண்ணீர் தொட்டிகளிலிருந்தும் முற்றிலும் நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வீட்டின் கழிவறை, தண்ணீர் தொட்டி, சாக்கடை நீர் கலந்த குடிநீர் ஆகியவற்றைச் சுத்தப்படுத்துவதற்குப் பெரும்பாலோர் கையிலெடுக்கும் ஆயுதம் பிளீச்சிங் பவுடர். ஆனால், பிளீச்சிங் பவுடரைப் பரவலாகவும் அதிகப்படியாகவும் பயன்படுத்துவதும் ஆபத்து என்கிறார் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அனந்து. குளோரின் நல்லதா? மேலும் படிக்க..

Android போனில் மொபைல் app

அன்ட்ராய்ட் போனில் பசுமை தமிழகம் படிக்க app டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். இது வரை டவுன்லோட் செய்துள்ள 5000+ பேர் பசுமை தமிழகத்தை மொபைல் மூலம் படிக்கிறார்கள்! உங்களின் கருத்துகளை  gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்  

வாழை சாகுபடியில் புது முறை

‘வாழையடி வாழையா…’ என்பதை வாழ்த்துச் சொல்லாகத்தான் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்தப் பழமொழி உண்மையில் சொல்லவருவது, வாழையின் வளத்தைப் பெருக்கவே. வாழை விவசாயத்தில் அடிவாழையை வெட்டாமல் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நம் முன்னோர் வலியுறுத்தியது என்கிறார் கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணி. வாழையே உரம் இயற்கை விவசாய முறையைப் பின்பற்றும் இவர் மரம், செடிகளில் இருந்து உதிரும் இலைகளை அப்புறப்படுத்துவதில்லை. அவற்றை அப்படியே மக்கவைத்து உரமாக்கிவிடுவது வழக்கம். இதையே இன்னும் மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் சொர்ணமசூரி

திருச்சி மாவட்டத்தை மையமாகக்கொண்டு பயிரிடப்படும் பாரம்பரிய நெல் ரகம் சொர்ணமசூரி. இது பொன்னிறம் கொண்ட நெல் என்பதால், சொர்ணமசூரி என்கின்றனர். சொர்ணம் என்றால் தங்கம். தங்கம் போல் ஜொலிக்கக்கூடிய இந்த ரகத்தை, உணவுக்காக இல்லத்தரசிகள் விரும்புகிறார்கள். தற்போது தமிழகத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் இந்த ரகம், திருந்திய நெல் சாகுபடி முறைக்கு ஏற்றது. 130 நாள் வயதுடைய சன்ன ரகம், வெள்ளை அரிசி. ஏக்கருக்கு இருபத்தி எட்டு மூட்டை மகசூல் கிடைக்கும். எளிமையான பராமரிப்பு ஆற்றுப் பாசனம் மேலும் படிக்க..

மண்வளம் பற்றிய இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 டிசம்பர்  28ம் தேதி, காலை, 9 மணிக்கு, ‘மண்வளமே பயிர்களின் உயிர் நாடி’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இம்முகாமில், மண் வளம், மண்வளத்தை கண்டறியும் வழிமுறைகள், மண்வளத்தை மேம்படுத்தும் உத்திகள், சிறப்பான மண் வளத்தினால் பயிர்களில் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும், மண்வளத்திற்கு ஏற்ற சமச்சீர் உரமிடுதல் குறித்தும் எடுத்து கூறப்படுகிறது. அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மேலும் படிக்க..

பரவி வரும் கருவேல மரங்கள்

தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு குறைந்துவருவதாக வேளாண்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ராம நாதபுரம், விருதுநகர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக ளவிலும், திண்டுக்கல், தஞ்சாவூர், தருமபுரி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அதிகளவிலும் கருவேல மரங்கள் உள்ளன. பொதுவாக கருவேல மரம் அதிகமாகவும், நெருக்கமாகவும் மேலும் படிக்க..

சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் விற்பனை!

சீனா போல் நாமும் வளர ஆசையா? என்ற  பதிப்பில் எப்படி சீனாவின்  காற்று மாசு பட்டு உள்ளது என்று  படித்தோம்.இப்போது இதை ஒரு வாய்ப்பாக கொண்டு ஒரு கம்பெனி காற்றை அங்கே விற்க ஆரம்பித்து உள்ளது! எப்படி நீர் பாட்டிலில் வந்து அதை குடிப்பதை நாம் ஒத்துக்கொண்டு விட்டோமோ அதை போல் கூடிய விரைவில் காற்றையும் பாட்டிலில் வாங்கும் நிலை வந்தாலும் வரும்.  ஒரே ஒரு நிம்மதியான விஷயம் இந்த காற்று பாட்டில் Made in China மேலும் படிக்க..

'ஜீரோ பட்ஜெட்' விவசாயம் பற்றி சுபாஷ் பலேகர் பேச்சு

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டுமெனில், ‘ஜீரோ பட்ஜெட்’ இயற்கை வேளாண் முறையை பின்பற்ற வேண்டும்,” என, இயற்கை வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பாலேகர் பேசினார். ‘ஜீரோ பட்ஜெட்’ இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது. ‘நபார்டு’ வங்கி தலைமை பொது மேலாளர் வெங்கடேஸ்வர ராவ் தலைமை வகித்தார்.இயற்கை வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பாலேகர் பேசியதாவது:         மனித வாழ்க்கை, இயற்கையை சார்ந்து வாழ்வதாகும். இயற்கையை அதிகம் மேலும் படிக்க..

இயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்

இப்போது மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ரசாயன உரங்களின் பாதிப்பு குறித்தும் பற்றியும் நம் பாரம்பரிய விவசாய முறைகளைக் குறித்தும் மக்கள் ஆர்வம் காட்டாத எண்பதுகளிலேயே மண்புழு வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியவர் பேராசிரியர் ஜி.எஸ்.விஜயலட்சுமி.தென்னிந்தியாவில் மண்புழு வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை அடிமட்டம்வரை எடுத்துச்சென்றவர்களில் முதன்மையானவர். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 49 மண்புழு வளர்ப்பு தொட்டிகளை அமைத்திருக்கிறார். தமிழக அரசின் பசுமைப் படை சார்பாகக் கழிவு மேலாண்மையை முக்கியக் கடமையாக மேலும் படிக்க..

வீட்டுத் தோட்டம் டிப்ஸ்

நகர்ப்புறத்தில் இட நெருக்கடி, நேரமின்மை போன்றவை எல்லாம் இருந்தாலும், நம் வீட்டிலேயே மாடியில், பால்கனியில், கிடைக்கும் சின்ன இடத்தில் தோட்டம் போடுவது மனதுக்குப் புத்துணர்ச்சி தருவதுடன், வயிற்றுக்கு ஆரோக்கியமான உணவையும் தரும். அதற்கான எளிய யோசனைகள்: விதைகளும், இயற்கை எருவும் தோட்டம் போட அடிப்படைத் தேவை. இயற்கை பூச்சிக்கொல்லி – பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பற்றி நிபுணர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். வீட்டில் தோட்டம் போட நினைப்பவர்கள் முதலில் கீரைகளை வளர்க்க முயற்சிக்கலாம்.. கீரைகளை வளர்ப்பது எளிது, நல்ல மேலும் படிக்க..

பழக்கன்றுகள் விற்பனை

மதுரை மாவட்டம் பூச்சுத்தியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை சார்பில் பழச்செடிகள் மற்றும் காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பூஞ்சுத்தியில் அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்து வகையான பழக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.    சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அதிக மகசூல் தரும் பங்களப்பளி, காளப்படி, சேலம், சப்போட்டா, இமாம் உள்ளிட்ட உயர்ரக மாங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஒட்டு மரக்கன்றுகளும் தயார் செய்யப்படுகிறது. இதேபோல் உயர்தர வெளிநாட்டு பாப்பாளி வகை கன்றுகள், சப்போட்டா பழம், கொய்யாக்கன்றுகள், மேலும் படிக்க..

முந்திரி கன்றுகள் மானிய விலையில் விற்பனை

விருத்தாசலம் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 40 ஆயிரம் முந்திரி கன்றுகள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரி தெரிவித்தார். விருத்தாசலம் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் முந்திரி, மா, பலா, கொய்யா, மிளகாய், பப்பாளி உள்ளிட்ட பயிர்களின் கன்றுகள் உற்பத்தி செய்து, அரசு அறிவிக்கும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கன்றுகள் கடலூர் மாவட்டம் மட்டும் இன்றி அருகில் உள்ள வெளிமாவட்ட விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில் தற்போது முந்திரி மேலும் படிக்க..

சீனா போல் நாமும் வளர ஆசையா?

இந்திய நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் எந்த சர்ச்சையும்  இல்லை.ஆனால் சீன போல நாம் வளர வேண்டுமா? நம் பொருளாதார நிபுணர்கள் எப்போதும் சீனா எப்படி 8-10% வருடா வருடம் “வளர்ந்து” (GDP Growth) பொருளாதாரத்தில் எப்படி உலகத்தில் இரண்டாம் இடம் பெற்று விட்டது என்பதை பேசி கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்த வளர்ச்சி மூலம் மக்கள் என்ன ஆனார்கள் பார்க்கலாமா? இதோ, சீன நகரங்களில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்க்கான சில புகை படங்கள். மேலும் படிக்க..

பாரிஸ் மாநாடு உண்மை நிலை என்ன?

‘வரலாற்றுத் திருப்புமுனை ஒப்பந்தம் Historic Agreement’ – பல்வேறு இந்திய நாளிதழ்களின் ஞாயிற்றுக்கிழமை தலைப்புச் செய்தி இப்படித்தான் இருந்தது. பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய ஒப்பந்தம், உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் ஏற்படுத்த உள்ள தாக்கங்களுக்குத் தீர்வு காண உதவும் என்றே இந்திய ஊடகங்கள் பலவும் நம்புகின்றன. 2009-ல் கோபன்ஹேகனில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஆக்கப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத நிலையில், சமீபத்திய ஒப்பந்தம் புதிய மேலும் படிக்க..

சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள 10 புத்தகங்கள்

நாம் வாழும் பூவுலகைக் காப்பாற்ற வேண்டும், சுற்றுச்சூழலை, அது சார்ந்த பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள். ஆனால், அந்தப் புரிதலை எப்படிப் பெறுவது என்று யோசனையாக இருக்கிறதா? தமிழில் வெளியான கீழ்க்கண்ட 10 புத்தகங்கள் அந்த அடிப்படை புரிதலைத் தரும். 1. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு.தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம் சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன், புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார். அவருடைய சூழலியல் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. மேலும் படிக்க..

விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்!

ஈரப்பதம் நிறைந்த இலையுதிர் காடுகள், பசுமை மாறாக் காடுகள், உயரமான மலைப் பகுதிகளில் வளர்ந்து நிற்கும் காடுகள் என்று ஈரம் நிறைந்த எல்லாக் காடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவை ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (Leeches). கறுப்பு அல்லது பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த அட்டைகள், வளையங்கள் கொண்ட பகுதிகள் ஒன்றாக இணைந்து நீளும் தன்மையுடன் மிருதுவான உடலமைப்பைக் கொண்டிருக்கும். இவை பாலூட்டிகளின் (Mammals) ரத்தத்தை உறிஞ்சி உணவாகக் கொள்ளும். மனித ரத்தத்தையும் விட்டுவைப்பதில்லை. இந்த அட்டைகள் நம்மைக் கடிக்கும்போது மேலும் படிக்க..

அரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுகள் விற்பனை

பெரியகுளம் அருகே, அரசு தோட்டக்கலை பண்ணையில் குழித்தட்டு நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன என தோட்டக்கலை துணை இயக்குனர் சின்னராஜ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், எண்டப்புளி புதுப்பட்டி கிராமத்தில் உள்ளது அரசு தோட்டக்கலை பண்ணை. இங்கு தோட்டக்கலை பயிர்களான கொய்யா, மாதுளை போன்ற கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. குழித்தட்டு முறையில் வீரிய ரக தக்காளி மற்றும் மிளகாய் நாற்றுகளும் தயார் நிலையில் உள்ளன. பண்ணையில் கொய்யா பதியன் நாற்று ரூ.25, மாதுளை பதியன் மேலும் படிக்க..

தென்னையில் அதிக மகசூல் பெறுவது எப்படி

தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்க்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னையில் நாட்டு ரக (நெட்டை ரகம்) தென்னைகளுக்கு நடவு செய்தது முதல் ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10 கிலோ, யூரியா 325 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 500 கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500 கிலோ இட வேண்டும். 2 வருட கன்றுக்கு தொழுஉரம் 20 கிலோ, யூரியா 650கிராம், மேலும் படிக்க..

சின்ன வெங்காயத்தை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சி

சின்ன வெங்காய பயிரை தாக்கி சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. சின்ன வெங்காய பயிரை சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குவதால் அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சின்ன வெங்காயத்தில் இலை, நுனி கருகல், இலைப்பேன் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளால் கருகல் நோய் ஏற்படும். இந்த நோய் பூசாணத்தினால் ஏற்படுகிறது. நுனி கருகிய வெங்காயத்தின் அடிப்பாகத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இருந்தால் அதை கட்டுப்படுத்த பயிருக்கு அதிகளவில் சாம்பல் மேலும் படிக்க..

வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வருகிற 2015 டிசம்பர் 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு, உயர்ரக இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, வெள்ளாடுகளுக்கு தீவன மேலாண்மை, ஆட்டுக்கொட்டகை அமைக்கும் முறை பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மேலும் படிக்க..

ஒரு காலத்தில் அடிமைகள்; இன்று வசதி படைத்த விவசாயிகள்!

“ஒருகாலத்தில் நாங்கள் அடிமை கள்; இன்றோ சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுக்கள் மூலம் மாதத்துக்கு லட்சக்கணக்கில் வியாபாரம் செய்யும் விவசாயிகள். எல்லாம் பெரியாறு புலிகள் சரணாலயம் தந்த வாழ்க்கை” என்கின்றனர் புலிகள் சரணாலயம் காட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள். கேரள மாநிலம் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. புலிகள் சரணாலயத்தில் மன்னான், பளியன், ஊரளி, உல்லாடன், மலம்பண்டாரம், மலராயன் ஆகிய சமூகத்தை சேர்ந்த பழங்குடியின மேலும் படிக்க..

உணவின்றித் தவிக்கும் பனிக் கரடிகள்

குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் மிருகங்கள் பனி கரடியும் பாண்டாவும். அழகான இந்த கரடிகளை விரும்பாத மனிதனே இருக்க முடியாது                         ஆர்டிக் கடலில் மாறுமே வாழும் பனி கரடிகளுக்கு பூமி வெப்பமாதல் காரணமாக இப்போது உயிர் போராட்டமாக ஆகி  உள்ளது. ஆர்டிக் சமுதிரம் அண்டார்டிக் போல ஒரு நில பிரதேசம்  அல்ல. குளிர் காலத்தில் மட்டுமே மேலும் படிக்க..

இயற்கை விவசாயி அந்தோணிசாமி அனுபவங்கள்

கரும்பு சாகுபடி என்பது உழவர் களுக்குப் பெருத்த நட்டத்தைத் தரும் பயிர் என்பதை யாரும் உணர்வதில்லை. ஏனென்றால், அதில் கணக்கு வழக்கின்றி நீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பாய்ச்சும் அளவை பற்றி யாரும் கணக்கு போடுவதும் இல்லை. இவ்வளவு செய்தாலும், கரும்புக்குக் கிடைக்கும் விலையோ குறைவு. இருந்தபோதும், வங்கிக் கடனைப் பெறுவதற்காக நிறைய உழவர்கள் கரும்பு சாகுபடிக்குள் நுழைகின்றனர். இப்படி மோசமான பொருளாதார, சூழலியல் சேதாரத்தை ஏற்படுத்தும் கரும்பைப் பொருளாதார ரீதியில் லாபமாகவும், சொட்டு நீர் பாசன முறையில் மேலும் படிக்க..

வேப்பம்புண்ணாக்குடன் யூரியா இட யோசனை

தற்போது பெய்து வரும் மழைக்கு, நெல் நடவு செய்துள்ள விவசாயிகள், மேலுரம் இட வேண்டுமென, வேளாண் இணை இயக்குனர் கார்த்திகேயன், யோசனை தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில், நெல், வாழை, கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் மாவட்ட அளவில், 30 ஆயிரம் ஹக்டர் வரை நெல் சாகுபடி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 18,000 ஹக்டேர் சாகுபடி நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ச்சியாக பெய்து வரும் மேலும் படிக்க..

மா கிளை முறிந்தால்?

“மாமரம் கிளை முறிந்து விட்டால் வருத்தப்பட வேண்டியதில்லை. மகிழ்ச்சி கொள்ளுங்கள்” என்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மா விவசாய தி.அங்கமுத்து கூறுகிறார். அந்த மரத்தில் ஒரு ரகத்தின் காய்கள் மட்டுமே கிடைத்திடும். இப்போது அந்த மரத்தில் நீங்கள் விரும்பும் 30 மா ரகங்களைக் கூட உருவாக்க முடியும். இதற்கு ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நர்சரி நடத்துபவர்களிடம் நம்முடைய தேவையைச் சொன்னால் மரத்தில் ஒட்டுக்கட்டிக் கொடுப்பார்கள். ஏற்கனவே வளர்ந்துள்ள நீலம், பேங்களூரா மரங்களை வெட்டி அகற்றாமல், அல்போன்சா, மேலும் படிக்க..

சந்தன மர விசித்திரங்கள்

சந்தன மரம் என்றாலே அதன் வாசனையும் மதிப்பும்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சந்தன மரம் வளரும் விதத்தை அறிந்தால், அதுதான் இனிமேல் உங்களுக்கு ஞாபகம் வரும். வேப்பம் மரம், புங்க மரம் என விரும்பும் மரத்தை நினைத்த இடத்தில் தனியாக வளர்க்கிறோம் இல்லையா? ஆனால், சந்தன மரத்தை இப்படித் தனியாக வளர்க்க முடியாது. சந்தன மரத்தை வேறு மரங்களுக்குப் பக்கத்தில்தான் வளர்க்க முடியும். அதற்குக் காரணம் இருக்கிறது. சந்தன மரத்தின் வேர் ஒரு ஒட்டுண்ணி. அதனால், மேலும் படிக்க..

அரியலூர் சிமெண்ட் ஆலைகள் பயங்கரம்!

‘அரியலூர் மாவட்ட மக்களின் வாழ்க்கையை பாழாக்குகிறது சிமெண்ட் ஆலைகள்’ என்று தனியார் சிமெண்ட் ஆலைகளை எதிர்த்தும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட களத்திலிருந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெயக்குமார்  பேசினோம். “விவசாயத்தை அழித்ததோடு இப்போது அரியலூர் மாவட்டத்தையும் அழிக்க தொடங்கியுள்ளன சிமெண்ட் ஆலைகள். பணத்திற்காக அதிகாரிகளும் துணை போகிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இம்மாவட்டம் சிமெண்ட்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. பலருக்கு மேலும் படிக்க..

மழையினால் நெற்பயிராய் தாக்கும் நோய்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெற்பயிர்களைத் தாக்கும் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.  இலை கருகல் நோய்த் தாக்கும் அபாயம் உள்ள போதும், இவற்றை கட்டுப்படுத்தலாம் என வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் ஞானமலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையால் நெற்பயிர்களில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக இந்நோய் நாற்றாங்காலில் நாற்றுகளைத் மேலும் படிக்க..

தொடர் மழையில் இருந்து வாழையை காப்பது எப்படி?

தொடர் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் தங்கி நிற்பதால் வாழை சாகுபடியில் 25 சதவிகிதம் வரை ஏற்படும் மகசூல் இழப்பை தடுப்பது எப்படி? என்பது குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆலோசனை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக, சாகுபடி செய்யப் பட்டுள்ள பெருவாரியான வாழைத் தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்க அதிகம் வாய்ப்புள்ளது, இந்த தண்ணீரை தோட்டங்களில் இருந்து வடிக்கும்போது 2 மற்றும் 3ம் தவணையாக இடப்பட்டுள்ள பொட்டாஷ் உரம் மேலும் படிக்க..

மழைநீர் தேங்கியதால் பருத்தியில் வாடல் நோய்

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், மழைநீர் தேங்கியதால், பருத்தியில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளது. நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி, பெருமளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால், பருத்தியில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாமகிரிப்பேட்டை அட்மா சார்பில், லத்துவாடி வேளாண் அறிவியல் நிலைய, உழவியல் உதவி பேராசியர் டாக்டர் அழகுதுரை, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர், பருத்தி செடிகளை பார்வையிட்டனர்.பின், அவர்கள் கூறியதாவது: தொடர் மழை காரணமாக, பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி, மேலும் படிக்க..

திருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் வருகிற 2015 டிச.11-ஆம் தேதி திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்து பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பருவமழை போதிய அளவு பொழியாததால் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்தது. இந்த நிலையில், தற்போது மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், சாகுபடி பரப்பளவு நிகழாண்டு மேலும் படிக்க..

அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்?

கடந்த இருபது – முப்பது ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்கள் (Pterocarpus santalinus) வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை. முதல் காரணம், செம்மரங்களின் மிகக் குறுகிய விரவல் பரப்பு (distribution area), இது எண்டமிக் (Endemic) எனப்படும் ஓரிடவாழ்வித் தாவரம். அதாவது, கிழக்கு மலைத்தொடருக்கு மட்டுமே உரித்தான இயல் (Wild) தாவரம். இந்த மலைத்தொடரிலும்கூட ஆந்திரத்தின் தெற்கில் சில பகுதிகளில் மட்டும், இது சிதறிக் மேலும் படிக்க..

கர்நாடக கழிவுகளால் செத்து மிதக்கும் பறவைகள்

கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் சாக்கடை மற்றும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் மேட்டூர் நீர்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்களை சாப்பிடும் பறவைகளும் இறப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மக்களவையில் கர்நாடக நீர் மந்திரி சிவராஜ் கூறியபடி சொன்னபடி தினமும் மொத்தம் 1482 மில்லியன் லிட்டர் சாக்கடை காவேரியில் கலக்கிறது. அவற்றில் 889 மில்லியன் லிட்டர் சாக்கடை  நீர் தென் பெண்ணார் ஆறு மூலம் ஹோசூர்  கேளவரப்பள்ளி அணையில் கலக்கிறது. மீதி சாக்கடை அரகவதி ஆறு மேலும் படிக்க..

ஏற்காட்டின் அற்புதங்கள்!

பச்சை நிறத்தில் பூக்கும் ரோஜா மலர், ஆறு அடி உயரம் வளர 1000 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் டையூன் இடுலி மரம், உலகில் ஒன்று மட்டுமே எஞ்சியிருக்கும் வெர்னோனியா சேவாராயன்சிஸ் எனப்படும் அரிய மரம் என ஏராளமான அதிசயத் தாவரங்கள் ஏற்காட்டில் உள்ள மத்தியத் தாவர மதிப்பீட்டாய்வு அலுவலகத்தின் தாவரவியல் பூங்காவில் உள்ளன. ஏற்காடு மலைப் பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள இந்த ஆராய்ச்சிப் பூங்காவில் 1,100 வகை தாவரங்கள் உள்ளன. இவற்றில் உலகில் அழியும் நிலையில் மேலும் படிக்க..

474 ஆக இருந்து 43 ஆக குறைந்த சென்னை ஏரிகள்!

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த நில நாட்களாக நகரமே வெள்ளக்காட்டில் மிதந்தது. சென்னை நகரில் இருந்த பெரும்பாலான நீர்நிலைகளை ஆக்கிரமித்ததால்தான் சென்னை நகருக்கு இந்த நிலை என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி சென்னையில் ஏரி, குளம் என 474 நீர் நிலைகள் இருந்துள்ளன.கடந்த 2013ஆம் ஆண்டு அதுவே 43 ஆக குறைந்துள்ளது. தற்போது அதிலும் 96 சதவீத நீர்நிலைகளை காணவில்லை அல்லது  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க..

முகத்வாரத்தை அடைக்காமல் விட்டதால் அதிகரித்த சென்னை வெள்ளம்

அடையாறு மற்றும் நேப்பியர் பாலங்களில் முகத்துவார மணல் அடைப்பை திறந்து விடாததால் கடலுக்குள் நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது தெரிய வந்துள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து முறையே வினாடிக்கு, 80 ஆயிரம் மற்றும், 30 ஆயிரம் கனஅடி நீர் நேற்று முன்தினம் இரவில் திறந்து விடப்பட்டது.இந்த நீர் ஆற்றில் கலந்து கடலுக்குள் செல்ல முடியாமல் நிரம்பியதால் கூவம் மற்றும் அடையாற்று கரைகளிலிருந்து எதிர்த் திசையில் வெளியேறிய மேலும் படிக்க..

குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி!

விவசாயிகள் குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும் என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.                    ரகங்கள்: போனிவில்லி, புளுபேண்டம், அர்கெல், அலாஸ்கா லின்கோலின், அசாத் ரகங்கள் ஏற்றவை. மண், தட்பவெப்பநிலை மணல்சாரியான செம்மண் பூமியிலும், களிமண் நிறைந்த நிலங்களிலும் வளர்ந்தாலும், வடிகால் வசதி கொண்ட பொல பொலப்பான இருபொறை மண் நிலங்களில் நன்கு வளரும். மேலும் படிக்க..

செயற்கை வேளாண்மையே நோய்களுக்கு காரணம்

பல்வேறு நோய்களுக்குச் செயற்கை வேளாண்மையே காரணம் என்றார் ஸ்வீடன் நாட்டின் பெராஸ் பன்னாட்டு நிறுவன தலைமைச் செயல் அலுவலர் ஜோஸ்டீயின் ஹேர்ட்வீக். தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் தாவரவியல், நுண்ணுயிரியல் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மைப் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அவர் பேசியது: நம் மண்ணில் நன்மை தரும் உயிரிகளான ஆக்டினோபாக்டீரியா, வேர் பூஞ்சாணம் உள்ளிட்டவை உள்ளன. இவை அந்தந்த மண்ணுக்குத் தேவையான உரமாக இருக்கிறன. குறிப்பாக, வளிமண்டலத்தில் நைட்ரஜனை மண்ணுக்குள் ஈர்த்து மேலும் படிக்க..

நெல்லில் இலை கருகல் நோய்

பனி காரணமாக நெல்லில் ஏற்படும் இலை கருகல் நோயை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது. தேனி பகுதிகளில் நெல் நடவுப்பணிகள் முடிந்துள்ளன. அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் பனிப்பொழிவு இருந்தால், இலை கருகல் நோய் ஏற்படும். தற்போது பனிப்பொழிவு உள்ளதால்ல, நெல் நாற்றுகளில் இலைக்கருகல் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்நோய் தாக்கிய இலைகளின் ஓரங்களில் இருந்து நடு இலைகள் வரை கருக ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் “ஸ்ட்ரெப் டோமைசீன்’ மேலும் படிக்க..

காய்கறி விதைகள் விற்பனை

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நியைத்தில், தானியங்கி விதை வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 ரூபாய் செலுத்தி,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையால் வெளியிடப்பட்டுள்ள தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, வெங்காயம், பாகல், புடலை, பீர்க்கன், பூசணி உட்பட காய்கறிகள் மற்றும் மலர் செடிகளின் விதை பாக்கெட்டுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற்கு அதிகளவில் விதை பாக்கெட்டுகள் விற்பனையாகிறது. தொடர்புக்கு  04546231726 நன்றி: தினமலர்

இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி செய்யும் கிராமம்

ராமநாதபுரம் அருகே நைனாமரைக்கான் கிராமத்தில் விவசாயிகள் அனைவரும் இயற்கை முறையில் நாட்டு ரக பாகற்காய் சாகுபடி செய் கின்றனர்.இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாகற்காய் சாகுபடி செய்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த நாட்டு ரகங்களையே பயிடுகின்றனர். இவற்றிற்கு கொலுஞ்சி, கால்நடை சாணம் மட்டுமே உரமாக இடப்படுகிறது. சிலர் மண்புழு உரத்தை பயன்படுத்துகின்றனர். ரசயன உரத்தை பயன்படுத்துவதில்லை. இங்கு விளையும் காய்கள் அளவில் பெரிதாக இருக்கும்.பாரம்பரியமாகவும், இயற்கை முறையிலும் நைனாமரைக்கான் பாகற்காய் விளைவதால், ராமநாதபுரம் பகுதி மக்கள் விரும்பி மேலும் படிக்க..

ஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் சாதனை

செம்மை சாகுபடி முறையில் ஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் செய்து மொடக்குறிச்சி விவசாயி சாதனை படைத்துள்ளார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி வாத்தியார் காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி. தனது நிலத்தில் விளையும் கரும்பை ஒப்பந்த அடிப்படையில் எழுமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக விவசாயி ரங்கசாமி அனுப்பி வருகிறார். சாதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தில் 40 முதல் 45 டன் கரும்பு மட்டுமே விளையும். இந்த ஆண்டு ரங்கசாமி ஒரு மேலும் படிக்க..

நிலக்கடலை, எள் சாகுபடி இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2015 டிசம்பர் 7-ஆம் தேதி நிலக்கடலை, எள் சாகுபடி, விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப் பயிற்சி முகாமில் நிலக்கடலை, எள் சாகுபடியின் முக்கியத்துவம், மண் பரிசோதனை செய்தல், நிலம் தயார் செய்தல், விதைத் தேர்வு செய்தல், விதை நேர்த்தி செய்தல், பயிர் இடைவெளி, விதைக்கும் முறைகள், உரமிடுதல், களை நிர்வாகம் செய்தல், பயிர்களுக்கு மேலும் படிக்க..

எண்ணெய்பனை சாகுபடியால் நல்ல வருவாய்

பாமாயில் எண்ணெய்ப்பனை சாகுபடி செய்து மாதம் ரூ.1.50லட்சம் வருவாய் ஈட்டுகிறார், தேனியைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ராஜ். இந்திய தேவைக்காக மாதம் 60 முதல் 80 லட்சம் டன் பாமாயில் இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்ப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு அதிகமான அந்நிய செலாவணி செலவாகிறது.  பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் ‘பாமாயில் எண்ணெய்ப்பனை சாகுபடி திட்டம்’ அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மகசூலை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் அரசு நிர்ணய மேலும் படிக்க..

கறவைமாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 டிசம்பர் 8ம் தேதி, காலை, 9 மணிக்கு, ‘கறவைமாடு வளர்ப்பில் லாபம் பெற ஆண்டுக்கு, ஒரு கன்று உற்பத்தி’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடக்கிறது. முகாமில், கறவைமாடுகளில் சினைப்பருவ அறிகுறிகள், கனநீர் மாறுபாடுகள், நோய்க் கிருமிகளின் தாக்குதல் மற்றும் தீவன குறைபாடுகளால் ஏற்படும் தற்காலிக மற்றும் நிரந்தர மலட்டுத்தன்மை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், சினைப்பருவ அறிகுறிகளை தெரிந்து கொள்வது, சினைப் பருவத்திற்கு வராத மேலும் படிக்க..

சென்னை வெள்ளங்களுக்கு காரணம் என்ன?

சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்படும் விளைவுகளின்போது சென்னை மாநகரம் எப்படியிருக்கும் என்பதற்கு அச்சாரம் இட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒழுங்கற்ற வளர்ச்சியின் காரணமாக நகரின் சுற்றுச்சூழல் சமநிலை எவ்வளவு எளிதாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதையும், வெள்ளத்தில் சிக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்கும் என்பதையும் உணர்த்தியுள்ளது. சென்னையில் இந்த மாத மத்தியில், கடந்த பத்தாண்டுகளிலேயே அதிகமாகப் பெய்த பெருமழை இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டது. வெள்ளநீர் வடிகால்களையும் பாரம்பரியச் சதுப்பு நிலப்பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட மேலும் படிக்க..

ஆரோக்கியம் கெடுக்கும் விஓசி

நிம்மதியாக வாழப்போகும் வீட்டைக் கட்டி முடித்த பின்னர் இறுதியாக வந்து நிற்கும் வேலை வண்ணமடிப்பது. அவ்வளவு எளிதில் வீட்டுக்குத் தேவையான வண்ணங்களை நாம் தேர்ந்தெடுத்துவிடுவதில்லை. பார்ப்பதற்கு அழகாகத் தோன்றும் வண்ணங்களை அடிக்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கிறோம். நண்பர்கள் பரிந்துரைக்கும் இணையத்தை மேய்கிறோம், யாரிடமெல்லாம் கேட்க முடியுமோ அனைவரிடமும் கேட்கிறோம். ஏற்கனவே கட்டி முடித்திருக்கும் வீடுகளை எல்லாம் ஆவலுடன் கவனிக்கிறோம்.  வீட்டுக்கு வண்ணமடிப்பதற்காக பெயிண்ட் வாங்கக் கடை கடையாக அலைந்து திரிகிறோம், ஒருவழியாக நமக்குத் தேவையான வண்ணத்தைக் மேலும் படிக்க..

பண்ணைக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு!

செயற்கை உரங்களால் மண் தனது வளத்தை இழந்து வரும் நிலையில், விவசாயிகளின் கவனம் இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியுள்ளது. செயற்கை உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்களின் விலை குறைவு என்பதை விட அவற்றை விவசாயிகளே உற்பத்தி செய்ய முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பு. விவசாயிகள் பண்ணைக் கழிவுகளில் இருந்து அங்கக உரம் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சூழல் அறிவியல் துறை, வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறைப் பேராசிரியர் அ.பரணி கூறியதாவது: மண்ணின் மேலும் படிக்க..

கடலில் வீணாகக் கலக்கும் பாலாற்று நீர்

கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், போதிய தடுப்பணைகள் இல்லாததாலும், பல இடங்களில் மணல் வரைமுறையின்றி மொத்தமாக அள்ளப்பட்டதாலும் வீணாக உருண்டோடி கடலில் கலக்கிறது. எனவே பாலாற்றை சுற்றியுள்ள பகுதிகளின் நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது. கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடகத்தில் 93 கி.மீ. தொலைவும், ஆந்திரத்தில் மேலும் படிக்க..

சென்னையில் மாடி காய்கறி தோட்டம் பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம் சென்னையில் மாடி காய்கறி தோட்டம்  அமைக்க ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கிறது. அண்ணா நகரில் நடக்கும்  பயிற்சி 2015 டிசம்பர் 3 தேதி நடக்கிறது. மதிய உணவு தரப்படும். விருப்பம்  உள்ளவர்கள் 04426263484 எண்ணை தொடர்பு கொள்ளவும் நன்றி: (ஹிந்து ஆங்கிலம்)

கால்நடை பண்ணையம் இலவச பயற்சி

கரூர் மாவட்டத்தில் லாபகரமான கால்நடை பண்ணையம் அமைக்க, இலவச பயற்சி பெற கால்நடை ஆராய்ச்சி மைய அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூரில் அமைந்துள்ள கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில் முனைவோர் மற்றும் பயிற்சி மையத்தின் நிதியுதவியுடன், ‘லாபகரமான கால்நடை பண்ணையம்’ பயிற்சி வரும், 2015 டிசம்பர் 7 முதல், 12ம் தேதி வரை, ஆறு நாட்களுக்கு இலவசப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் அறிவியல் ரீதியான மேலும் படிக்க..

5,500 பறவைகள் குவிந்தன – வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு

சில தினங்களாக பெய்த கன மழையால், காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது; அங்கு, 5,500 பறவைகள் குவிந்துள்ளன. எனவே, வேடந்தாங்கல் சரணாலயம்  பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் மற்றும், பல மாநிலங்களில் இருந்து, அக்டோபர் மாதத்தில், ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து குவியும். அவை, இங்கேயே தங்கி, கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்யும். ஏப்ரல் முதல் மே வரை பறவைகள் இங்கு தங்கியிருக்கும்.அதன்படி, 2014 அக்டோபர், மேலும் படிக்க..

வெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புகள் காரணம்: சென்னை உயர்நீதிமன்றம்

‘மழை வெள்ள பாதிப்புக்கு தவறான நிர்வாகம் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தது தான் காரணம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை, கொளத்துாரில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து, பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களை வெளியேற்ற, அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, கொளத்துார் ஏரியில் குடியிருப்பவர்களுக்கு, பட்டா வழங்கவும், ஆக்கிரமிப்பை வரன்முறை (Regularize) செய்யவும் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், வட சென்னை மாவட்ட செயலர் சண்முகம், மனு தாக்கல் செய்தார்.அரசு தரப்பில், கூடுதல் மேலும் படிக்க..

கோவில் குளங்கள் பற்றிய அடிப்படை தகவல்களே இல்லை!

சென்னையில், இதுவரை 114செ.மீ., மழை பதிவாகி இருந்தும், பல கோவில் குளங்கள் நிரம்பவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, குளங்கள் பற்றிய அடிப்படை தகவல்களே, இந்து சமய அறநிலைய துறையிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னையில், கடந்த அக்., 28ம் தேதி முதல், நவ., 24ம் தேதி வரை, 114 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதில், மொத்தம் 18 டி.எம்.சி., தண்ணீர் கிடைத்துள்ளது. ஆனால் வெறும், 5 டி.எம்.சி., மழை நீர் மட்டுமே ஏரி, குளம் மற்றும் நிலத்தடி மேலும் படிக்க..

நெல்வயலில் அசோலா – அதிக மகசூல்

நெல் வயலில் அசோலாவை பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அசோலா என்பது தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுகிறது. நெல் வயலில் இரண்டாம் களை மேலும் படிக்க..

மழைக்காலத்தில் நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சிகள்

நிலக்கடலை பயிரை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க எளிய வழிமுறையை வேளாண்மை துறை அதிகாரி ஆலோசனை வழங்கினார். தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்து பயிரில் நிலக்கடலை முக்கியமானது. நிலக்கடலை பயிரிட முறையான பாத்தி அமைத்தல், உரமிடுதல், நுண் ஊட்டமிடுதல், ஊட்டச்சத்து கலவை தெளிப்பு, விதை நேர்த்தி, களை கட்டுபாடு, பாசனம் செய்தல் அவசியம். பூச்சி மேலாண்மையிலும் விவசாயிகள் அக்கறை காட்ட வேண்டும். மழைக்காலத்தில் நிலக்கடலை பயிரில் ரோமப்புழு, சுருள் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுபடுத்த, கோடை மேலும் படிக்க..

வெள்ளம்: பயிர்களை எப்படி காப்பாற்றுவது?

ஆண்டுதோறும் பெய்யும் மழையில் 40 சதவீதத்துக்கு மேல் கடலில் கலக்கும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாகும், 14 சதவீதம் மண்ணால் உறிஞ்சப்படும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்துக்கு உதவும் என்கின்றனர் நிபுணர்கள். கடந்த 2005-ம் ஆண்டு பெய்த மழையின் அளவைவிட, தற்போது பெய்திருக்கும் மழையின் அளவு குறைவாக இருந்தாலும் அன்றைக்கு ஆனதைவிட அதிக சேதத்தை பயிர்கள் சந்தித்து இருப்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். விவசாயிகள் எத்தகைய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன்மூலம் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்கலாம் என்று மேலும் படிக்க..

ராமநாதபுரத்தில் சாலட் வெள்ளரி!

ராமநாதபுரம் சுந்தரமுடையான் கடற்கரை பகுதியில் சாலட் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வெள்ளரி குளிர் பிரதேசங்களில் விளையக் கூடியது. இதனை முதல் முயற்சியாக வெப்பம் மிகுந்த ராமநாதபுரத்தில் பயிரிட்டுள்ளனர். இவை கடற்கரை பகுதியான சுந்தரமுடையான் ஊரக வளர்ச்சி முகமையின் தோட்டக்கலை பண்ணையில் ஆயிரம் சதுர மீட்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குளிர் சீதோஷ்ண நிலையை உருவாக்க பாலிஹவுஸ் அமைக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் விடப்படுகிறது. தற்போது செடிகளில் சாலட் வெள்ளரிகள் காய்த்துள்ளன. ஒரு கொடியில் 6 காய்கள் மேலும் படிக்க..

நெல்லில் 3 புதிய ரகங்கள்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மூன்று நெல் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பல்கலைக்கழகம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் நெல் ரகங்கள், முதல், 10 ஆண்டுகளுக்கு அரசு மூலம், விதை நெல், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.புதிய ரகம் என்பதால், அதை பிரபலப்படுத்தவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், மானியம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டில், கோவை ரகமான கோ-ஆர்-50 என்ற புதிய சன்ன ரகம், ஈரோடு மாவட்டத்தில் அறிமுகமானது. இது, 130 முதல், 135 நாள் பயிராகும். விதைப்பண்ணையில், 38.5 ஏக்கரில் தற்போது பயிர் மேலும் படிக்க..

ஆப்பிளுக்கு பைபை!

தெருக் கோடியில் நிறுத்தப்பட்ட தள்ளுவண்டியில் இஸ்திரி போடும் முத்துலட்சுமிக்குப் பெண் குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து எனக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. என் குழந்தையின் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முத்துலட்சுமியின் நான்கு வயது பிரியா பாப்பாவும் ஆட்டம் பாட்டம் எனக் குதூகலமாக ஆடிப் பாடினாள். ஆனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொடிசுகள் எல்லாரையும்விட பிரியா பாப்பா தோற்றத்தில் மிகவும் சிறுத்து இருந்தாள். மற்ற பிள்ளைகளெல்லாம் அந்தந்த வயதுக்குரிய வளர்ச்சி அடைந்திருக்க பிரியா பாப்பாவின் மேலும் படிக்க..

சென்னையின் வெள்ளத்திற்கு காரணம் என்ன?

சென்னையின் வெள்ளம் வழிந்த பாடில்லை. மழை விட்டு விட்டுத் தொடர்கிறது. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி யிருப்பதாக எச்சரிக்கிறது வானிலை மையம். ஏரிக்கரை மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கூனிக்குறுகி ஓடிய கூவமும் அடையாறு ஆறும் சீறிப் பாய்வதை மக்கள் மிரட்சியோடு பார்க்கின்றனர். உயிர்ப்பலி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், சென்னைக்கு புயல் புதிது அல்ல. காலம்காலமாக கடும் புயல்களை தாங்கியது அது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு தாக்குதலின்போதும் சென்னை மேலும் படிக்க..

ஹம்மிங் பறவை தேன் குடிப்பது எப்படி?

ஹம்மிங் பறவை (humming bird) எனப்படும் ரீங்காரச் சிட்டு அதன் நீளமான நாக்கை நுண் உறிஞ்சு பம்பு போல (suction pump) ஆக்கித்தான் பூவுக்குள்ளே இருக்கும் தேனை அருந்துகிறது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் நேரத்தில் வீடே பறக்குமே! பரபரப்பில் சீருடையையும் காலணிகளையும் போட்டுக்கொண்டே, வாயை மட்டும் காட்டி அம்மாவிடம் பூரி சாப்பிடுவார்களே குழந்தைகள், அவர்களைப் போல ஹம்மிங் பறவை அந்தரத்தில் பறந்தபடி தனது மூக்கில் உள்ள நாக்கைப் பூவின் தேன் குடத்துக்குள்ளே விட்டு தேனை உறிஞ்சும். இந்தப் மேலும் படிக்க..

சென்ற வாரம் டாப் 6

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்! நாட்டு பசுவின் மகிமை மரபணு மாற்றப்பட்ட மீன்! மோசமாகி வரும் மண்வளம் தலைகீழாய் வளரும் தக்காளி மாடி தோட்டம் டிப்ஸ் புவி இணையத்தளத்தில் டாப் 3 பாலை வார்த்த பாலாறு கடலூர் அழிவுக்கு யார் காரணம் ? பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு!

மோடி என்ன செய்ய போகிறார்?

“பெரிய நிறுவனங்களுக்கும் அந்நிய நிறுவனங்களுக் கும் தேவைப்படும் சலுகைகளை அடுத்தடுத்து வழங்குவதில்தான் அக்கறை காட்டுகிறார், அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காகத்தான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்” என்று பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டப்படுகிறது. அது முழுக்க முழுக்க உண்மையல்ல. தொழில்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தினால்தான் விவசாயத்துறை, சேவைத்துறை போன்றவற்றிலும் வேலைவாய்ப்பு ஏற்படும் வருவாய் பெருகும் என்பதால் யாராக இருந்தாலும் தொழில்துறையைத்தான் முடுக்கி விட நினைப்பார்கள். அதில் தவறு காண முடியாது. விவசாயத் துறையில் வளர்ச்சி என்பது நீண்டகால திட்டமிடலும் மேலும் படிக்க..

மண்ணை பொன்னாக்கும் மலைவேம்பு

அது… பத்து அடி ஆழத்தில் சுண்ணாம்பு பாறைகள் நிறைந்த கரிசல்காடு. கடல் நீர் போல் உப்புச்சுவை மிகுந்த தண்ணீர். சுட்டெரிக்கும் வெயில். வறட்சியால் பாளம் பாளமாக பிளந்துள்ள நிலம். முயல், எலி, கீரி, மயில்கள் வயலில் ஆட்டமாடி கொஞ்சமாக விளையும் சிறிய தானியங்களையும் ஒன்று விடாமல் கொற்றி தின்று விடுகின்றன. இவைகளை கட்டுப்படுத்த முடியாமல், விவசாயிகள் பலருக்கு நிலத்தை பார்த்து கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை. வறண்ட பூமியை வளமான பூமியாக மாற்றுவது குறித்து மூளையை மேலும் படிக்க..

சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் பயிற்சி

ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சிகள் நடக்க உள்ளன.நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீகன்பால் கூறியதாவது: ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2015 நவ., 27 ல் பாலில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல் 2015 நவ., 30 ல் சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் குறித்த பயிற்சி அளிக்கப்படும் இந்த பயிற்சியில் விவசாயிகள், பெண்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம். விரும்புவோர் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், கடலோர உவர் ஆராய்ச்சி மையம், மேலும் படிக்க..

திராட்சை பழங்களில் ஏற்படும் வெடிப்புகள் கட்டுப்படுத்துவது எப்படி?

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை பழங்களில் ஏற்படும் வெடிப்புகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து திராட்சை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. திராட்சை விவசாயத்தில் புதிய ரகம் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ரக திராட்சைகளை விவசாயம் செய்யவும், விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தவும் ஆனைமலையன்பட்டியில் திராட்சை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட மீன்!

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பற்றிய சச்சரவுகளே தீர்ப்பு வரவில்லை. அதற்கு முன்பு அமெரிக்காவில் இப்போது மரபணு மாற்றப்பட்ட மிருகங்களை உருவாக ஆரம்பித்து விட்டார்கள். சாலமன் (Salmon) என்ற மீன் அமெரிக்காவில் அதிகம் உண்ணபடுகிறது. அட்லாண்டிக் சால்மன் எனப்படும் இந்த மீன் வகை ஒரு காலத்தில் அட்லாண்டிக் மகாகடல் முழுவதும்  .பரவி இருந்தது. அளவுக்கு மீறி இந்த மீன்களை மீன் பிடித்தால் இவை இப்போது அழிந்து வருகின்றன. அதனால் captive வழியாக மீன்களை வளர்த்து அவற்றை விற்க  ஆரம்பித்தார்கள். மேலும் படிக்க..

சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஒருங்கிணைந்த  செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.  தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தக் கோரி சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.  இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வனத்துறை முதன்மைச் செயலரின் அறிக்கையை  கூடுதல் தலைமை முதன்மை வனப் மேலும் படிக்க..

எலுமிச்சை மூலம் லாபம்

எலுமிச்சை விளைச்சல் மூலம் செலவு போக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் லாபம் பார்த்து வருகிறார் சிவகங்கை தேவனிப்பட்டி விவசாயி பி.மாதவன். இவர், 3 ஏக்கரில் எலுமிச்சை கன்றுகளை நடவு செய்து வறண்ட பூமியில் பழத்தை விளைவித்து வருகிறார். மாதவன் கூறியதாவது: 3 ஏக்கர் நிலத்தில் 2009ல் ஏக்கருக்கு 90 கன்று வீதம் நடவு செய்தேன். தொடர்ந்து 5 ஆண்டு பராமரிப்பிற்கு பின், ஒரு ஆண்டாக எலுமிச்சை விளைச்சல் நடந்து வருகிறது. குளிர்ச்சி காலமாக இருப்பதால், பூக்கள் அதிகரித்து மேலும் படிக்க..

விறுவிறு லாபம் தரும் மிளகாய்!

தேவையான தொழில்நுட்பங்கள், முறையான திட்டமிடல் போன்றவை இருந்தால்… விவசாயத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம், என்பதை பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். குறிப்பாக, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என அதிக சம்பளம் கிடைக்கும் படிப்பைப் படித்த இளைஞர்கள்கூட… விவசாயத்தின் மீதிருக்கும் பாசம் காரணமாக அதில் கால் பதித்து, அசத்தல் வருமானம் ஈட்டி வருகிறார்கள். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள துவார் கிராமத்தின் தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி சரவணன், அவர்களில் ஒருவர… கணினி வேண்டாம்… களத்துமேடு போதும்! செம்மண் பூமியில் மேலும் படிக்க..

பாலை வார்த்த பாலாறு

விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்திருக்கின்றது பாலாறு. பல ஆண்டுகளுக்குப்பின் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு கடலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. பாலாறு என்றாலே வறண்ட மணல் படுகைகளும், மணல் கொள்ளையும்தான் கண்முன் வந்து நிற்கும். ஆற்றில் மீன் பிடித்தது, ஆற்றில் இறங்கி விளையாடியது, பாசனத்திற்கு நீர் பாய்ச்சியது எல்லாம் இளைய தலைமுறை காணாத ஒன்று. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டில் பெய்த மழையால் சில நாட்கள் பாலாற்றில் வெள்ளம் சென்றிருக்கின்றது. 2005-ம் ஆண்டு பெய்த மழையில் லேசான வெள்ளம் சென்றிருக்கின்றது. மேலும் படிக்க..

கடலூர் அழிவுக்கு யார் காரணம் ?

வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 51- ஏ வகுத்துள்ள 10 ஷரத்துகளில் ஒன்று. ஆனால், அந்த சட்டத்தை அரசுகளே மதிக்கவில்லை. தமிழகத்தில் 1970-களின் தொடக்கத்தில் முதன்முதலாக ஏரிகளின் மீது கையை வைத்தது அரசாங்கம்தான். குடிசை மாற்று வாரியத்துக்காக, பேருந்து நிலையத்துக்காக, அரசு அலுவலக கட்டிடங்களுக்காக… என ஏராளமான ஏரிகளை அழித்தது. அந்தக் காலகட்டத்தில் அதைத் தவறென்று சுட்டிக் காட்ட சுற்றுச்சூழல் மேலும் படிக்க..

ஒரு நதியின் படுகொலை!

சமீபத்தில் சேலத்துக்கு சென்றபோது சாக்கடை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் இருந்து மலத்தை நேரடியாக சாக்கடையில் விட்டிருந்தார்கள். தூரத்தில் நின்றபோதே துர்நாற்றம் தூக்கியது. சாக்கடையின் கரை ஓரத்தில் வீற்றி ருக்கிறது சேலம் பெரிய மாரியம்மன் கோயில். நினைவுகள் பின்னோக்கிச் சுழல்கின்றன. புவியியல் அமைப்பின்படி மலைகள் மடியில் வைத்து தாலாட்டும் பள்ளத்தாக்கு… சேலம் மாவட்டம். இயற்கையின் செல்லப்பிள்ளை அது. சேலத்தின் வரலாற்றுப் பெயர் சைலம். சைலம் என்றால் மலைகள் சூழ்ந்தப் பகுதி மேலும் படிக்க..

கொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு

கொடைக்கானலில் பாதரசக் கழிவு களால் மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக்கபட்டுள்ளதை  படித்துள்ளோம்.. கொடைக்கானல் அவலத்தை வசீகரமான குரலில் Youtubeஇல் கவனம் ஈர்க்க வழிவகுத்துள்ள சோபியா அஷ்ரஃப் பற்றியும்  முன்பே படித்துள்ளோம் இதையடுத்து, கொடைக்கான லில் இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனியின் தெர்மாமீட்டர் தயா ரிப்பு நிறுவனம் செயல்பட்ட இடத்தை, மாநில கூடுதல் முதன் மைச்செயலர் மற்றும் மாசுக்கட்டுப் பாட்டு வாரியத் தலைவர் ஸ்கந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரி கரன், எம்.எல்.ஏ.க்கள் பாலபாரதி, மேலும் படிக்க..

புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி

நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. அப்படி இருந்த ஒரு பெரிய ஏரியை எப்படி ஊர் மக்களும் அதிகாரிகளும் செயல் பட்டு உயிர் கொடுத்துள்ளார்கள் என்பதை பற்றிய ஒரு நல்ல செய்தி… புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன பிரம்மாண்டமான ஏரி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மேலும் படிக்க..

மலைப்பகுதியில் இயற்கை வழி மூலிகை சாகுபடி

பொதுவாக, ‘பசுமைக் குடில் விவசாயம், மலைப்பகுதி விவசாயம் போன்றவற்றுக்கு இயற்கை விவசாயம் சரிப்பட்டு வராது’ என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இக்கருத்தைத் தகர்க்கும்விதமாக, நீலகிரி மலைப்பகுதியில் முழு இயற்கை முறையில் மூலிகைகள் மற்றும் நறுமணப்பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள், சகோதரர்களான பிரவீண்குமார், சிவராமகிருஷ்ணன் ஆகியோர். நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்தச் சகோதரர்கள். அக்கிராமத்தின் மலைச்சரிவில் அமைந்திருக்கிறது, இவர்களது தோட்டம். நண்பகல் வேளையன்றில் தேடிச் சென்றபோது… தோட்டத்தில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும். மேலும் படிக்க..

கால்நடைகள் வளர்ப்பு இலவச பயிற்சி

திண்டுக்கல் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2 நாள் பயிற்சி நடக்க உள்ளது. வரும் 2015 நவ.26 ல் வெள்ளாடு, 2015 நவ.27 ல் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்தும் பயிற்சி நடக்கிறது. முன்பதிவிற்கு 04512460141 ல் தொடர்பு கொள்ளலாம். மையத்தின் தலைவர் பேராசிரியர் சிவசீலன் கூறுகையில், “” கால்நடை கொட்டகை அமைப்பது, நோய் பராமரிப்பு, பண்ணை அமைத்தல், வியாபார உத்திகள் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் அரசு சான்றிதழ்களும் மேலும் படிக்க..

கால்வாய் ஆக்கிரமிப்பே வெள்ளப் பெருக்குக்கு காரணம்

 எந்த ராஜாவோ எப்போதோ  வெட்டி வாய்த்த கால்வாய்களையும் ஏரிகளையும் தூர் வாராமல் கருவேல மரங்களை வெட்டாமல் வைத்து மழை பெய்யும் நீர கடலூரில் வீணாகியது பற்றி படித்தோம். தூத்துக்குடி மாவட்டமும் இதே கதைதான்.. ஹிந்துவில் வந்த செய்தி கால்வாய் ஆக்கிரமிப்பே வெள்ளப் பெருக்குக்கு காரணம் பருவமழை தொடங்கும் முன்பே குளங்கள், கால்வாய்களை முறையாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் தான் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பலத்த மழை தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக ஓட்டப்பிடாரம், மணியாச்சி, மேலும் படிக்க..

பயிரை பாதுகாக்க கூடிய வேம்பின் பயன்கள்

வேப்ப மரத்தின் பயன்களை பார்ப்போமா? சுற்று சூழல் பாதிப்படையாது, பூஞ்சாண நோயை கட்டுப்படுத்தும் , நூற்புழுக்களை கட்டுப்படுத்தும், அந்துப்பூச்சிகளை மலடாக்கும், முட்டைகளை பொறிக்க விடாமல் தடைசெய்யும், வேம்பின் வாசனையின் மூலம் பூச்சிகளை வரவிடாமல் செய்யும் கசப்புத் தன்மை இருப்பதால் பூச்சிகளை உண்ணவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது பூச்சிகள் சாப்பிடாலும் அவற்றை சீரணிக்க விடாமல் குமட்டச் செய்யும் ஆற்றல் உள்ளது புழுக்களை தோலுரிக்க விடாமல் தடுக்கும், புழுக்கள் இனவிருத்தி செய்வதை தடுக்கும் கூட்டுப்புழு மற்றும் புழுவின் வளர்ச்சியை தடுக்கும், மேலும் படிக்க..

கருவேலம் காடாகிய நீர் நிலைகளால் ஆபத்து

கடலூரில் வெள்ளம் ஏற்பட்டு அதிக அளவில் விளைநிலங்கள் பாதிக்க பட்டுள்ளது என்பதை அறிவோம். அதற்கான பெரிய காரணம் என்ன தெரியுமா? அதிக அளவில் ஒரே நாளில் மழை பெய்தது என்பது ஒரு காரணம். ஆனால் பெய்த மழை நீர் வாய்கால், நதிகள் மூலம் ஏரிகளை அடைந்திருக்க வேண்டும் ஆனால் அரசின் மெத்தன நடவடிக்கையால் நீர் பாயும் இடங்களை தூர் வாராமல், கருவேல மரங்களை வளர்க்க விட்டு நீர் போக வழியை அடைத்து வெள்ளம் பாய்ந்து இருக்கிறது. இதை மேலும் படிக்க..

தென்னையில் மண்வளத்தை பெருக்க சணப்பு

மண் அரிப்பை தடுத்து மண்வளத்தை அதிகரிக்க சணப்பு பயிர் சாகுபடி செய்யலாம் என மேல்புறம் வேளாண்மை விரிவாக்க மையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மேல்புறம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மழைக் காலங்களில் மழைநீரால் வளமான மேல் மண் அரிக்கப்பட்டு நிலம் வளம் அற்றதாக மாறி பயிரின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. மழைநீரால் சாகுபடி பயிரை சுற்றி களைகள் வளர்ந்து அவை சாகுபடி பயிருடன் நீருக்காகவும், உரத்துக்காகவும் போட்டிபோட்டு பயிர் மகசூலை குறைக்கிறது. தென்னந் தோப்புகளில் மேலும் படிக்க..

நெற்பயிரில் ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க..

நெல் பயிரில் உயிர் உர விதை நேர்த்தி செய்து ரசாயன உரத்தின் அளவை விவசாயிகள் குறைக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்தது. நெல் சாகுபடியில் விதை, மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்திடவும், பயிர் வளர்வதற்கான வளி மண்டல தழைச்சத்தைக் கிரகித்து வழங்கவும், உயிரியல் விதை நேர்த்தி, நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்யலாம். நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு விதை நேர்த்தி செய்வதால் மண் மூலம் பரவும் நோய்களான குலை நோய், இலைப்புள்ளி நோய், பாக்டீரியா மேலும் படிக்க..

மழைக்காலத்தில் நெல் பயிரை பாதுகாக்க யோசனைகள்

மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் முனைவர் டி. பாஸ்கரன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா. ரமேஷ் ஆகியோர் நெல் வயல்களில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியதாவது:                   தமிழகத்தில்  தற்போது அதிக மழை பெய்து மேலும் படிக்க..

கசப்பு காயில் இனிப்பு லாபம்

வெள்ளரி செடியை தரையில் படரவிடுவர். ஒட்டுரக வெள்ளரி செடியை கொடியில் வளரவிடும் பழக்கம் விவசாயிகளிடையே பரவி வருகிறது. இதன் மூலம் குறுகிய இடத்தில் அதிக செடிகளை வளர்க்க முடிகிறது. இதே பாணியில் பந்தலில் பெரிய பாகற்காய்களை விளைவிக்கிறார் விவசாயி கண்ணன்.                 இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியை சேர்ந்தவர். வாடிப்பட்டி பகுதியில் நெல், கரும்பு விவசாயம் அமோகம். எனினும் விவசாயி கண்ணன் மாற்று விவசாயமாக மேலும் படிக்க..

கார்த்திகை, மார்கழி பட்ட சூரியகாந்தி சாகுபடி

கார்த்திகை பட்டத்தில் மானாவாரி பயிராக கோ.4, மார்டன் ஆகிய சூரியகாந்தி இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களில் கே.பி.எஸ். எச்.1, கே.பி.எஸ்.எச்.44, டி.சி.எஸ்.எச்.1 ஆகியவை சூரியகாந்தி இரகங்களும் ஏற்றவை.               மார்கழி பட்டத்தில் இறவைப் பயிராக பயிரிட கோ.4, மார்டன் ஆகிய இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களில் கே.பி.எஸ்.எச்.1, கே.பி.எஸ்.எச்.44, எம்.எஸ்.எப். எச்.17 ஆகியவை ஏற்றவை. விதையளவு : கிலோ / ஹெக்டேர் இரகங்கள் – மானாவாரி 7, இறவை மேலும் படிக்க..

நஷ்டமில்லாத இயற்கை வேளாண் சாகுபடி

ஒரு பண்ணையாளர் தனது உழைப்புக்கான ஊதியத்தை வரவு செலவில் பெரும்பாலும் குறிப்பிடுவதே இல்லை. ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் மேலாளருக்கு என்ன ஊதியம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்காவது கணக்கிடப்பட வேண்டும் என்கிறார் சத்தியமங்கலம் சுந்தரராமன். ஏனெனில், ஒரு பண்ணை உரிமையாளர் இயற்கையின் சாதகப் பாதகங்கள், விலை ஏற்ற இறக்கங்கள், பூச்சித் தாக்குதல்கள் போன்ற கணித்தறிய முடியாத சவால்களை ஏற்றுக்கொண்டுதான், தனது பண்ணையை நடத்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கிறார். இதை எந்தக் கொள்கை வகுப்பாளர்களும் கண்டுகொள்ளவில்லை என்பது இவருடைய மேலும் படிக்க..

எலுமிச்சையை தாக்கும் நோய்கள்

எலுமிச்சை மரங்களைத் தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது சொறி நோயாகும். இந்நோய் எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இந்நோய் ஒருவித பாக்டீரியாவினால் ஏற்படுகின்றது.                 நோயின் அறிகுறிகள் : இலை, கிளை, சிறு கிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும். குச்சிகளில் தோன்றும் சொறிப் புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும். காய்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளைச் சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் தோன்றும். மேலும் படிக்க..

நல்ல விலை போகும் நாவல்

திருப்புவனம் அருகே பூவந்தியில் ஆடி மாத சீசன் பழமான நாவல் பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. பூவந்தியில் இருந்து மேலூர் செல்லும் வழியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நாவல் பழ தோப்பு அமைந்துள்ளது. நாட்டு ரகத்தில் பழத்தின் அளவு சிறியதாக இருக்கும் ஆனால் ஒட்டு ரகத்தில் பழத்தின் அளவு பெரியதாகவும் சதைப்பற்றாகவும் இருக்கும் என்பதால் ஒட்டு ரகத்தையே அதிகளவு நடவு செய்துள்ளனர். சொட்டு நீர் பாசனம் மூலம் 24 மணி நேரமும் நாவல் பழ மரவேரில் தண்ணீர் மேலும் படிக்க..

நாட்டு மாடுகள் இருக்க ஜெர்சி பசுக்கள் நமக்கெதற்கு?

இப்போது வேளாண்மையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சிக்கலான வேலைக்குத் தேவையான ஆட்களின் பற்றாக்குறை பற்றி, கால்நடை களஞ்சியம் சி. கணேசன் பெரிதும் கவலைப்படுகிறார். இப்படியே சென்றால் வேளாண்மை முற்றிலும் அழிந்துவிடும் என்பது இவருடைய ஆதங்கம். இன்றைய இளைஞர்களிடம் உடல் உழைப்பு குறித்து இழிவான எண்ணம் உள்ளதாகக் கூறும் இவர், மிக அதிகச் சம்பளம் கொடுத்தாலும் புதிய தலைமுறையினர் வேளாண்மை துறைக்குள் வருவது பெரிதும் குறைந்துவிட்டது. அரசின் அக்கறையற்ற போக்குதான் இதற்கான முதன்மைக் காரணம் என்று இவர் குற்றஞ்சாட்டுகிறார். எப்படித் மேலும் படிக்க..

வறட்சியை தாங்கி வளரும் புதிய ரக சோளம்

வேளாண் பல்கலை சார்பில், புதிய ரக சோளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகம், மத்திய ஆராய்ச்சி கழகத்தால், அங்கீகரிக்கப்பட்டு, தற்போது விற்பனை துவங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, மக்காசோளம் உள்ளிட்ட, ஒன்பது வகை தானியங்களின் சாகுபடி அதிகரித்து வருகிறது. இத்தகைய சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலை, சிறுதானியங்கள் துறை சார்பில் நடந்து வருகிறது. நடப்பாண்டு, பல்கலையின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஆராய்ச்சி மேலும் படிக்க..

மீண்டும் கிளம்புகிறது மரபணு பூதம்

மரபணு பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. அமெரிக்க அதிபர் இந்தியா வந்து சென்றாலும், இந்திய பிரதமர் அங்கு சென்று விட்டு திரும்பினாலும் இந்த பூதம் கிளம்பும். அத்தகைய வல்லமை கொண்டவை பன்னாட்டுக் கம்பனிகள். ஆனால் இந்தமுறை நமது கைகளைக் கொண்டே கண்ணை குத்திக்கொள்ளச் சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆம்… வட இந்தியாவின் முக்கிய எண்ணெய்வித்து பயிரான கடுகை கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, மரபணுமாற்று கடுகு விதைகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் மூலம் கொண்டு வர இருக்கிறார்கள். மரபணு மாற்று பயிர்களை, உலகளவில் மேலும் படிக்க..

பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு!

முன்னேற்றம் என்பது என்ன? நல்ல மாசு படாத நீரை இலவசமாக உறுஞ்சி எடுத்து பாட்டிலில் அடைத்து கேவலமான லாபம் செய்வது முன்னேற்றமா?நம் தமிழ்நாட்டில் தோன்றி கடலில் சேரும் ஒரே பெரிய ஆறான தாமிரபரணியில் பெப்சி ஆலையை அனுமதித்த நம் அரசை என்ன சொல்வது? கேட்டால் முதலீடு என்பார்கள், வேலை வாய்ப்பு என்பார்கள். இதை பற்றிய தகவல் விகடனில் இருந்து… பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு! தென் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் பெப்சி மேலும் படிக்க..

வவ்வால் கூட்டத்துக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்!

நாமகிரிப்பேட்டை பகுதியில், மரத்தில் வாழும் வவ்வால் கூட்டத்துக்காக, ஒரு கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், தீபாவளி கொண்டாடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மயானத்தில், மூன்று அரச மரங்கள் வளர்ந்துள்ளன; அதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசித்து வருகின்றன.               கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய அரச மரத்தில் வசித்த இந்த வவ்வால்கள், அந்த மரம் மேலும் படிக்க..

சென்ற வார டாப் 6

மண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்! தெளிப்பு நீர் பாசனம் BT சச்சரவுகள் – 5 சிப்பி காளான் தயாரிப்பு பற்றிய வீடியோ சந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர்  

தரிசு நிலத்தில் வருவாய் அளிக்கும் லெமன் கிராஸ்

தரிசு நிலத்தில் பராமரிப்பின்றி வருவாய் அளிக்கும் லெமன் கிராஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாண்டிக்குடி மலைப்பகுதியில் எலுமிச்சை வாசனை அளிக்கும் புல் அதிகளவு கரடு, சரிவான வனப்பகுதியில் உள்ளது. இவ்வகை புல் மண் அரிப்பு, நீர் சேமிப்பிற்கு உதவியாக உள்ளது. லெமன் கிராஸ் எனறழைக்கப்படும் இவற்றை “தரகு’ என்றும் கூறுவர். இவற்றிலிருந்து எடுக்கப்படும் சிட்ரோனால், சிட்நூல், ஜெரேனியா எண்ணெய் அழகு சாதனப் பொருட்கள் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயப்பயிர்களுக்கு பூஞ்சாண கொல்லியாகவும் பத்ன்படுகிறது.   மேலும் படிக்க..

மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற யோசனை

மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற உரங்கள் எவ்வளவு இட வேண்டும் என்று வேளாண்மை அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வேளாண்மை உதவி இயக்குநர் ராஜகோபால் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு விவரம்: தற்போது மானாவாரியிலும், இறவையிலும் விருதுநகர் மாவட்டத்தில் மக்காச் சோளம் அதிகப் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மற்ற பயிர்களைப் போல் அதிக அளவில் பூச்சி நோய் தாக்குதல் இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், சந்தையில் மக்காச் சோளத்துக்கு ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் கிடைத்து மேலும் படிக்க..

எள் அறுவடை நேர்த்தி முறைகள்

எள் அறுவடை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்) தனவேல், விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எண்ணெய்வித்து பயிரான எள், எண்ணெய் அளவு குறையாமலும் தரம் கெடாமலும் காத்திட வேண்டும். எள் பயிர் அறுவடையின் போது செடியின் கீழ் பகுதியிலுள்ள இலைகளில் 25 சதவீதம் இலைகள் உதிர்ந்தும், மேலே உள்ள இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறியிருக்க வேண்டும். எள் மேலும் படிக்க..

அமெரிக்காவிற்கு பறக்கும் பெரியகுளம் முருங்கை விதை

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி முருங்கை விதையை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய வகையில் ஓராண்டு பயிராக செடிமுருங்கை ரகங்களை உருவாக்கி, 5 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த செடிமுருங்கையின் இலைகள், பூக்கள் மற்றும் காய்களில் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ போன்றவை அடங்கியுள்ளன. இதனால் செடி முருங்கைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.           மேலும் படிக்க..

புவி இணையத்தளம் மற்றும் மொபைல் அப்

வணக்கம்! தமிழகத்தை நோக்கியுள்ள சுற்று சூழல் பிரச்னைகள், அவற்றிக்கான விடைகள், நம்மை சுற்றி நம்மை அறியாமால் நடந்து வரும் மாற்றங்கள் போன்ற தகவல்களை  அறிந்து கொள்ள இதோ ஒரு முயற்சி – புவி  இணைய தளம் உங்களையும் என்னையும் போன்ற சில தனி நபர்கள் எப்படி இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார்கள் ? நம்மால் நம்முடைய சக்திக்கு உட்பட்டு ஏதாவது செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில்கள், மற்றும் இயற்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் பசுமை மேலும் படிக்க..

தென்னை வாடல் நோய் தடுக்கும் வழிமுறைகள்

தென்னையில் தற்போது புதிதாகப் பரவிவரும் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண் அதிகாரிகள் விளக்கியுள்ளனர். தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் எரிப்பூச்சிகள், கருந்தலைப் புழுக்கள், செம்பான் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் தாக்குதலைப் போல், தற்போது தஞ்சாவூர் வாடல் நோய் எனும் பென்சில் பாயிண்ட் நோய் தாக்குதல் பரவலாகிவருகிறது. இது தென்னை விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த நோய் தொடர்ச்சியாகப் மேலும் படிக்க..

தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை

சோற்றுக்கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும். மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான அளவில் நடைபெற முடியாத நிலையில் மூலிகைப் பயிரான சோற்றுக் கற்றாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது. சோற்றுக் கற்றாழை அதிகளவில் தரிசுநிலப் பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது. ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் ஒரு மருந்துப் பொருளாகப் மேலும் படிக்க..

பருத்தியில் பூச்சி கட்டுப்பாடு டிப்ஸ்

பெரம்பலூர் மாவட்டம்,தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவிகள் சார்பில், பருத்தி பயிர்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து, ரோவர் வேளாண்மை கல்லூரி பூச்சியியல் துறை மூத்த பேராசிரியர் ராஜீ பேசியது: பல்வேறு கிராமங்களில் பருத்தி பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் சாறு உறிஞ்சும் பூச்சி, அஸ்வினி பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால், பருத்தி பயிரில் பாதிப்பும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த மாலை நேரங்களில் மேலும் படிக்க..

காணாமல் போய் கொண்டிருக்கும் சிட்டு குருவிகள்…

சின்ன வயசில்  எனக்கு நினைவில் உள்ள சில பசுமையான நினைவுகளில் ஒன்று சிட்டுக்குருவிகள் வீட்டில் வந்து கூடு கட்டுவது. சீலிங் பானில் அடி படாமல் இருக்க நாங்கள் அதை போடாமலையே  இருப்போம். பாய்ந்து பாய்ந்து இரண்டு குருவிகளும் அழகாக கூடு  கட்டும்.சிறிது நாட்களில் சிறு குருவிகளின் சப்தங்கள் வரும். குட்டிகளுக்கு அம்மாவும் அப்பாவும் அழகாக உணவு ஊட்டும். ஒரு மாதத்தில் எல்லாம் கிளம்பி சென்று விடும். இந்த அனுபவங்களை இந்த தலைமுறைக்கு தெரியாமலேயே போக போகிறது.. சிட்டு மேலும் படிக்க..

பிளாஸ்டிக் பாட்டிலால் சுற்றுச்சுவர்!

PET பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து சமர்பன் என்ற ஒரு நிறுவனம் ஒரு கட்டிடமே கட்டி உள்ளது என்பதை முன்பு .படித்தோம்.  இப்போது, தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பள்ளிகூட சுவரை இப்படி வடிவமைத்து, செலவை குறைத்தது மட்டும் இல்லாமல் உலக அளவில் விருதையும் வாங்கியுள்ளனர்! இதை பற்றிய செய்தி தினமலரில் இருந்து. இப்போது நம் வீட்டிலும் சுவரையாவது இப்படி கட்டலாம் இல்லையா? சிக்கனமும்  கூட, மறு சுழற்சியும் கூட! பிளாஸ்டிக் பாட்டிலால் சுற்றுச்சுவர் அரசு பள்ளியில், பிளாஸ்டிக் பாட்டில்கள் மேலும் படிக்க..

வேளாண் காடு, மலர் சாகுபடி, செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சிகள்

நாமக்கல் அறிவியல் வேளாண் மையத்தில் 2015 நவம்பர் மாதம் நடைபெறும் பயிற்சிகள்: நவம்பர் 3 ம் தேதி: வேளாண் காடுகளுடன் கால்நாடைகளை ஒருங்கிணைத்தல். நவம்பர் 16 ம் தேதி: மலர் சாகுபடி தொழில் நுட்பம். நவம்பர் 16 ம் தேதி: செம்மறி ஆடு வளர்ப்பு. முன் பதிவு அவசியம் தொடர்புக்கு: திட்ட ஒருங்கிணைப்பாளர், அறிவியல் வேளாண் மையம், நாமக்கல், போன் : 04286266244, 04286266650, 04286266345

மல்லிகைப்பூ போன்ற பாரம்பரிய நெல்!

தூயமல்லி நெல் ரகம் பாரம்பரிய நெல் வகைகளில் வித்தியாசமானது, சன்னமான ரகம். நெல், வெள்ளை கலந்த மஞ்சள் நிறமாகவும் தூய்மையாகவும் இருக்கும். அரிசி வெள்ளை நிறம். நெல்லை பார்த்தாலே அரிசியை அள்ளிச் சாப்பிட வேண்டும் என்பது போல், நெல் மணிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அரிசி பளபளவென இருக்க வேண்டும். மிகவும் சன்னமாகவும் இருக்க வேண்டும் என்று இல்லத்தரசிகள் வழக்கமாக விரும்புவார்கள். அரிசி சீக்கிரமே வேக வேண்டும். வெந்த அரிசி சாதம், மல்லிகைப் பூவைப் போல் இருக்க மேலும் படிக்க..

விவசாயியான ஐஐடி என்ஜீனியர்

ஏன் எப்படி என்று தெரியாது ஆனால் சிறிய வயதிலேயே மாதவனுக்கு செடிகள் வளர்ப்பதில் ஈடுபாடு.செடிகொடிகள் வளர்ப்பது என்பது விவசாயத்தின் ஒரு பகுதி என்பது புரிந்தபிறகு நானும் விவசாயம் செய்யப்போகிறேன் என்று சொன்ன மாதவனுக்கு வீட்டில் எதிர்ப்பு. ஒழுங்கா படிக்கிற வேலையாப்பாரு என்ற பெற்றோரின் கட்டளையை மீறமுடியாமல் உச்சபட்ச படிப்பான ஐஐடியில் மெக்கானிக்கல் என்ஜீனியர் படித்து முடித்தார்.கையோடு உயர்பதவி, லகரங்களில் சம்பளம். இது எதுவுமே மாதவனின் மனதை ஈர்க்கவில்லை அவரது மனம் முழுவதும் விவசாயத்திலேயே இருந்தது,சில ஏக்கர் நிலம் மேலும் படிக்க..

விளைநிலத்தை பாதுகாக்கும் தக்கைப்பூண்டு இயற்கை உரம்

பழநி பகுதியில் யூரியா தழைச்சத்து உரத்திற்கு பதிலாக, குறைந்த செலவில் மண்வளத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் இயற்கை பசுந்தாள் தக்கைப்பூண்டுகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.                 இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது பழநி பகுதியில் குறிப்பிட்ட அளவு மழைபெய்துள்ளதால், விவசாயிகள் வயலை உழுது, சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக நெற்பயிர் வளர தழைச்சத்து உரமாக விவசாயிகள் யூரியாவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். விபரமான சில விவசாயிகளோ இயற்கை பசுந்தாள் உரமான தக்கைபூண்டு மேலும் படிக்க..

சென்ற வாரம் டாப்-6

டீசலின் செலவை குறைக்க புன்னை எண்ணை ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்! இயற்கை மூலிகை மருந்து தெளித்து தென்னை மரத்தில் 300 காய்கள்! இயற்கை விவசாயத்தில் மகசூல் பற்றிய ஆய்வு கருவேலங்காடாக இருந்த 140 ஏக்கர் சீரமைத்து விவசாயம் மண்புழு உரம் சிறப்புகள்

இயற்கை வேளாண்மையின் மறைக்கப்பட்ட வெற்றிக் கதைகள்

மத்திய வேளாண் அமைச்சராகச் சரத்பவார் இருந்தபோது இயற்கைவழி வேளாண்மை எனப்படும் வளர்ந்துவரும் துறை பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் பயனாகவே, ‘Ecological Agriculture in India scientific evidence on positive impacts and successes’ நூலில் உள்ள ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. இது தொடர்பாக மேலும் சில விவரங்களைப் பார்ப்போம். வெளிவந்த உண்மைகள் உண்மையில் மக்களை நேசிக்கும் அல்லது மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் நமது அரசாங்கத்தின் அறிவியல் மேலும் படிக்க..

ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி டிப்ஸ்

ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றி தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தகவல் தருகிறார். தேர்வு செய்யப்பட்ட நிலத்தை இரண்டுசால் புழுதி உழவு செய்ய வேண்டும். 150 கிலோ கன ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தில் கலந்து புட்டு பதத்திற்கு பிசைந்து வயல் முழுக்க பரவலாக தெளிக்க வேண்டும். கன ஜீவாமிர்தம் பறக்காமல் இருக்கவும் அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கும் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். பின்பு 20 அடி நீளம் 15 அடி மேலும் படிக்க..

மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

பெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2015 அக். 27 ஆம் தேதி விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற உள்ளது என்றார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) சி. கதிரவன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு 2015 அக். 27 ஆம் தேதி மண்புழு உரம் தயாரித்தல் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி முகாம் மேலும் படிக்க..

நஞ்சூரான கடலூர்

கடலூரில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அதை பற்றிய நிலைமையை விவரிக்கும் ஹிந்துவில் வந்த ஒரு செய்தி.. இதை படிக்கும் நீங்கள் கடலூரில் ரசாயன தொழிற்சாலை வட்டத்தில் வாழ்ந்தால் தயவு செய்து உங்கள் உயிரை புற்று நோயில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வேறு ஊருக்கு  செல்லவும். கடலூரில் இருந்து வரும் மீன்களை உண்ணாதீர்கள்! கடலூர. இந்தப் பெயரே பல தருணங்களில் எனக்குக் கிளர்ச்சியைத் தந்திருக்கிறது. எத்தனையோ ஊர்களில் கடல் இருக்கிறது என்றாலும், பெயருக்கேற்றாற்போல, மேலும் படிக்க..

நெடுந்தூரம் பறந்து வரும் விருந்தாளி

நம்மூர் நீர்நிலைகளிலும் வயல்களிலும் குளிர்காலத்தில் பறவைகள் நடமாட்டம் அதிகமாவதைக் கவனித்திருப்பீர்கள். லட்சக்கணக்கான பறவைகள் உருவில் சிறிய வாலாட்டிக்குருவியிலிருந்து ஒரு மீட்டர் உயரமுள்ள செங்கால் நாரை வரை ஐரோப்பா போன்ற உலகின் வடபகுதியிலிருந்து ஆசியா, ஆப்ரிக்கா போன்ற தென்பகுதிக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவைக் கடந்து இரை தேடிவருகின்றன. புள்ளினங்களின் இந்த வலசை வழக்கம் பற்றி அறிவியலின் பல கேள்விகளுக்கு இன்னும் பதிலில்லை. ஆனால், நெடுந்தூரம் பயணிக்கும் விமானங்கள் போலவே இப்பறவை கூட்டங்கள் முடிந்தவரை கடலின் மீது பறப்பதைத் தவிர்த்து, மேலும் படிக்க..

சத்தியமங்கலத்தில் ஓர் ‘இயற்கை வேளாண் பள்ளி'

இயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு அரசு எந்தவித ஆதரவோ, உதவியோ செய்யவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய செய்தி. இப்படித் தங்களை இழந்து இயற்கைவழி வோளண்மையை முன்னனெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், வேளாண் மையில் நீண்ட மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை தாக்கும் புதிய எதிரி

மரபணு மாற்றப்பட்ட பருத்தி (BT) சர்ச்சையில் வெகு காலமாக இருந்து வந்துள்ளது. பருத்தியை தாக்கும் ballworm எனப்படும் புழுவில் இருந்து மரபணு மாற்றப்பட்ட பருத்தி பாதுகாத்தது. இந்த செடியின் மரபணுவை மாற்றி, நிலத்தில் உள்ள ஒரு பாக்டீரியாவின் மரபணுவை சேர்த்து இந்த “புதிய பயிரை”  உண்டாக்கினர். இயற்கையில் இப்படி ஒரு உயிரினத்தின் மரபணுவை எடுத்து மற்றொரு உயிரினத்தில் சேர்த்து உண்டாக்க பட்ட பருத்தி செடி இது. இந்த பருத்தியை இந்த பூச்சி கடித்தால் அதற்கு விஷம் ஆகி  மேலும் படிக்க..

சோலைக்காடுகளின் அழிவும் தென்னிந்திய நதிகளின் வறட்சியும்

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள அவலாஞ்சி மலையின் உச்சி. அடர்ந்த சோலைக் காடுகளின் இடையே, பவானியின் நதி சிறு ஊற்றாகத் தொடங்கும் தொடக்கப் புள்ளி. வெள்ளி கண்ணாடிப் பாளம் போல் சிறு அருவியாகக் கொட்டிக்கொண்டிருந்தாள் பவானி. அந்தப் பிறப்பிடத்தில் பவானி அம்மன் காட்டுக் கோயிலைக் கட்டியிருந்தார்கள். குளிர்ந்த தண்ணீரில் தலையை நனைத்து, கையில் அள்ளிப் பருக, உடல் நனைந்து, உள்ளம் இனித்தது. அநேக முறை காடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் தென்னிந்திய நதிகளுக்கு ஆதாரமான மலை உச்சிகளில் மேலும் படிக்க..

பிளாஸ்டிக் பாட்டில் வீடு!

எங்கு பார்த்தாலும் குப்பை போல் கிடக்கும் பெப்சி கோகோ கோலா மற்றும் நீர் பாட்டில்களை என்ன செய்வது என்பது ஒரு தலை வலி.   இந்த பாட்டில்கள் PET எனப்படும் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்ய கூடியது என்றாலும் இவற்றை சேகரித்து மறு சுழற்சி செய்வது நடைமுறையில் கடினம். ஆகையால் குப்பையோடு சேர்ந்து போகிறது. ரயில்வே நிலையங்களில் பிஸ்லேரி ரயில்நீர் பாட்டில்களை அதிகம் பார்க்கலாம்                 இந்த மேலும் படிக்க..

Android போனில் மொபைல் app

அன்ட்ராய்ட் போனில் பசுமை தமிழகம் படிக்க app டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். இது வரை டவுன்லோட் செய்துள்ள 5000+ பேர்கள் பசுமை தமிழகத்தை மொபைல் மூலம் படிக்கிறார்கள்! உங்களின் கருத்துகளை  gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும் இந்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம். நன்றி! பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு…  

தேங்காயில் மதிப்பூட்டுவது எப்படி

தேங்காய் விலை சரிவை தடுக்க தென்னை விவசாயிகளுக்கு, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் மாற்று யோசனை தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் காய்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி டில்லி, மும்பை போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கர்நாடகா, கேரளா பகுதிகளில் இருந்து தேங்காய் வரத்து அதிகரிக்கும்போது விலை குறைகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க உலர் தேங்காய் துருவலாக மதிப்பு கூட்டி விற்பனை மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் சாதித்த பெண் விவசாயி

மானாவாரி எனப்படும் வானவாரி வேளாண்மை மிகவும் கடினமானது மட்டுமல்ல, நிச்சயமற்றதும்கூட.எதிர்பார்ப்புக்கு மாறாக மழைப்பொழிவு குறைந்துவிட்டால், விளைச்சல் கிடைக்காது. இதைச் சமாளிக்க நமது முன்னோர் நாட்டுரக விதைகளை, அதாவது வறட்சியைத் தாங்கும்தன்மை கொண்ட விதைகளைப் பயன்படுத்தினர். ஆனால், பசுமைப் புரட்சிக்குப் பின்னர் வீரிய விதைகள் என்ற பெயர் கொண்ட தாக்குப்பிடிக்காத விதைகள், அதாவது வறட்சியைத் தாங்க முடியாத விதைகள் வந்தன. விளைவு போதிய மழை பெய்யாதபோது, பயிர்கள் கருகிப் போயின. வேளாண்மைக்கு அரசின் ஆதரவு பொதுவாகவே குறைவு, அதுவும் மேலும் படிக்க..

மீன் அமிலம் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி வீடியோ

மீன் அமிலம் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி – இயற்கை வேளாண் நிபுணர் நம்மாழ்வார் விளக்கும் வீடியோ. நன்றி: நம்மாழ்வார் வீடியோ

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்!

விவசாயத்தில செலவுக்கும் வரவுக்குமே சரியாப் போகுது, இதுல எங்கெருந்து லாபம் கிடைக்குறது!” இதுதான் இன்று பெரும்பாலான விவசாயிகளின் புலம்பல். இந்தக் காரணத்தினாலேயே விவசாயத்தைக் கைவிட்டோர் பலர். அதாவது இப்போது நீங்கள் விவசாயம் செய்ய வேண்டுமானால், அதற்காக நீங்கள் வெளியாட்களையோ, வெளியிலிருந்து வாங்கப்படும் இடுபொருட்களையோ நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சென்ற தலைமுறைக்கு முன்புவரை, இந்த நிலைமை நிச்சயம் இல்லை! ஏர் உழுதல் முதல் கதிரடித்து, களம்சேர்த்து வியாபாரம் செய்வது வரை, அனைத்தையும் விவசாயிகள் தன்னிச்சையாக சுயசார்புடன் மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டி

விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று விவசாயிகளுக்கு மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் செய்து காண்பித்தனர். மதுரை விவசாய கல்லூரி மாணவிகள் தீபிகா, கவிப்பிரியா, மகுடீஸ்வரி, ரம்யா, சாருமதி, கவிதா ஆகியோர் கம்பத்தில்  விவசாயிகளுக்கு மூலிகை பூச்சி விரட்டி எப்படி தயாரிப்பது என்று செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். வேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், பீநாரி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 மேலும் படிக்க..

நிலம் யாருக்குச் சொந்தம்?

ஒரு நாள் காலை அவசரமாகத் தொலைபேசியில் அழைத்த நண்பர் அய்யர்பாடிக்காரனும், சின்ன மோனிகாவும் காட்டுப் பகுதியின் ஓரமாகத் தேயிலைத் தோட்டத்தின் அருகில் இருப்பதாகச் சொன்னார். கூடவே, ஒரு ஆச்சரியமான சங்கதியையும் சொன்னார். அவன் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான், அவள் நின்று கொண்டிருக்கிறாள் என. வியப்பு மேலிட உடனே அந்த இடத்துக்கு விரைந்தேன். அவர் சொன்னபடியேதான் இருந்தது, நான் இதுவரை கண்டிராத அந்தக் காட்சி. சற்று நேரத்தில் அவளும் மெதுவாகத் தனது கால்களை மடக்கி, பக்கவாட்டில் சாய்ந்து படுத்துக்கொண்டாள். மேலும் படிக்க..

கொட்டாங்குச்சி மூலம் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் கப்!

மறு சுழற்சி செய்வதன் மூலம்  பெரிய அளவில் குப்பை சேருவதை குறைக்கலாம். இளநீர், தேங்காய் உபயோகம் செய்த பின் தூக்கி போட படும் கொட்டாங்குச்சியில் இருந்து உபயோகமாக ஐஸ் கிரீம் கோப்பை செய்யபடுவது மட்டும் இல்லாமல் அவை நல்ல விலைக்கு போகிறது என்பது நல்ல  செய்தி தானே! ஹிந்துவில் இருந்து தகவல் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக் கும் வகையில், அதற்கு மாற்றாக கொட்டாங்குச்சிகள் மூலம் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் கப்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மேலும் படிக்க..

தடுப்பணைகளால் கிடைத்தது விமோசனம்!

கடலுார் மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வரும் நிலையில் தடுப்பணை, பண்ணைக்குட்டை அமைத்ததன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. விவசாயமே பிரதானமாகக் கொண்ட கடலுார் மாவட்டத்தில் வாய்க்கால் பாசனம் மற்றும் கிணற்று பாசன முறையில் நடைபெற்று வந்தது. காவிரியின் கடைமடை பகுதியான இப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால், கிணற்று பாசனம் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பல தொழிற்சாலைகள் தங்கள் தேவைக்காக நிலத்தடி நீரை ராட்சத மோட்டர்களைக் கொண்டு உறிஞ்சி வருகிறது. அதே நேரத்தில் மேலும் படிக்க..

எல்லா வயதினருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான்

பாரம்பரிய நெல் ரகங்களில் நீண்ட வயதுடைய நெல் ரகங்களில் வாலான் நெல்லும் ஒன்று. இதன் வயது நூற்றி அறுபது நாட்கள். இது எல்லா மண் ரகங்களுக்கும் ஏற்ற ரகம். மோட்டா ரகம். வெள்ளை அரிசி. வெள்ளம், வறட்சியைத் தாங்கி வளரும். இதற்கு எந்த உரமும் தேவையில்லை. ஒரு சால் உழவு செய்து, விதை தெளித்துவிட்டுவந்தால் போதும். மழை பெய்த ஈரத்திலேயே முளைத்துப் பயிர் செழித்து மகசூல் கொடுக்கும். தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவரும் இந்த நெல் ரகம், மேலும் படிக்க..

பேசிலோமைசிஸ்

இது ஒரு நூற்புழுவை (நெமெட்டோட்ஸ் – Nemetodes ) கட்டுப்படுத்தும் பூசாணமாகும். எல்லாவிதமான மலைத்தோட்டப்பயிர்களும் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், சவ்சவ்) பல வகையான நூற்புழுக்களின் தாக்குதலினால் மகசூல் பாதிக்கப்பட்டு செடிகள் மடிகின்றன. இந்த பேசிலோமைசிஸ் பூஞ்சாணம் அந்த நூற்புழுக்களை முட்டையிலிருந்து கடைசி பருவம் வரை தாக்கி அழிக்கிறது. இந்த வகையான நூற்புழுக்கள் பயிரின் வேரை அழிப்பதனால் அழுகல் நோய் உண்டாகக் கூடிய பூஞ்சாணங்கள் மிகவும் எளிதாக பயிர்களை தாக்க ஏதுவாகிறது. பேசிலோமைசிஸ்ஸை நிலத்தில் இடுவதன் மேலும் படிக்க..

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில், பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் மையம் PNB Pillaiyarpatti சார்பில் 2015 அக்டோபர் 17-ம் தேதி வன மரங்கள் வளர்ப்பு, 2015 அக்டோபர் 20-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்: தொடர்புக்கு 09941647893

ஈரோடு க்ரிஷி விக்யான் கேந்திராவில் இலவச பயிற்சிகள்

ஈரோடு க்ரிஷி விக்யான் கேந்திராவில் 2015 அக்டோபர் நடக்கும் இலவச  பயிற்சிகள் பற்றிய தகவல்கள்: காளான் உற்பத்தி தொழிற்நுட்பம்  – 27/10/2015. விண்ணப்ப கடைசி நாள்: 20/10/2015 வெள்ளாடு வளர்ப்பு – 28/10/2015. விண்ணப்ப கடைசி நாள்: 26/10/2015 தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 04285241626 மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா, 272, பெருமாள் நகர், புதுவல்லியாம்பாளையம் கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம் பின்கோடு 638 453

இஸ்ரேல் தொழில்நுட்பம் மூலம் வெள்ளரி சாகுபடியில் சாதனை

இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் பாலிஹவுஸ் அமைத்து இரண்டு ஏக்கரில் சாகுபடி செய்யவேண்டிய வெள்ளரியை அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து தமிழகத்திலேயே அதிக விளைச்சல் கண்டுள்ளார் திண்டுக்கல்லை சேர்ந்த விவசாயி. திண்டுக்கல் மாவட்டம், குளத்தூரை சேர்ந்த விவசாயி சுப்புராஜ் மகன் ரமேஷ். இவர் தோட்டக் கலைத் துறை மானியத்தில் பாலிஹவுஸ் அமைத்து அரை ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்துள்ளார். வெள்ளரி செடிகள் வழக்கமாக தரையில் படர்ந்து வளரும். இவை கொடிபோல் மேல் நோக்கி வளரவிடப்பட்டுள்ளது. இதற்கு சொட்டு நீர் மேலும் படிக்க..

முருங்கை சாகுபடியில் சாதிக்கும் இளைஞர்

வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இளைஞர்களிடையே, இயற்கை முறை முருங்கை விவசாயத்தில் சாதித்துள்ளார் திண்டுக்கல் பித்தளைப்பட்டி சந்திரகுமார். இவர் எம்.எஸ்சி., (பயோடெக்) முடித்ததும், சென்னை தனியார் நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் பணி செய்தார். அன்றாட செலவுகளை சமாளிக்க இயலாமல் திணறினார். இதனால், சொந்த நிலத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் ஏற்பட்டது. ஓராண்டுக்கு முன் அதை செயல்படுத்தினார். இரண்டு ஏக்கரில் 20க்கு 20 என்ற அளவில் 200 முருங்கை கன்றுகளை நட்டார். அவை மரமாகி ஆறு மேலும் படிக்க..

விதை நேர்த்தி செய்தால் வறட்சியை தாங்கி வளரும்

“மானாவாரி விவசாயிகள் விதை நேர்த்தி செய்து விதைப்பதால் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கிடைக்கும்’, என்று சென்டெக்ட் திட்ட இயக்குநர் மாரிமுத்து அறிவுறுத்தி உள்ளார். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்கிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் விரக்தியிலிருந்த மானாவாரி விவசாயிகள் தற்போதைய மழையை பயன்படுத்தி தானியங்கள், எண்ணெ# வித்துகள், பயறு வகைகளை பயிரிடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தரிசு நிலங்களில் மானாவாரி பயிரிடுவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். வாழை, தென்னை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக மேலும் படிக்க..

முருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி

செடி முருங்கை, வெண்டை, அவரை சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2015 அக்டோபர் 12 தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் பயிர்களின் ரகங்கள், பருவம், விதை அளவு, விதை நேர்த்தி, பயிர் இடைவெளி, சொட்டு நீர் பாசனம் மூலம் உரமிடல், களை நிர்வாகம், பூச்சி, நோய் மேலாண்மை போன்ற தொழிற்நுட்பங்கள் விரிவாக கற்று தர படும். விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தை 04286266345 மற்றும் 04286266244 எண்களில் மேலும் படிக்க..

சென்ற வாரம் டாப்-5

மண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ் சிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி வசம்பு – பூச்சிவிரட்டி பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி? இயற்கை பூச்சி விரட்டிகள்

திறன்மிகு நுண்ணுயிர்கள் அதிகரிப்பது எப்படி வீடியோ

திறன்மிகு நுண்ணுயிர்கள் EM (Effective Microorganisms) பற்றி ஏற்கனவே படித்தோம். இந்த EM எப்படி  பல மடங்கு அதிகரித்து குறைந்த செலவில் பயிர்களுக்கு இடலாம் என்பதை  ஒரு வீடியோ நன்றி: RSGA கன்னிவாடி

பாரம்பரிய நெல்: பொரிக்கு ஏற்ற தேங்காய்ப்பூ சம்பா

மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையே இந்திய எல்லை ஓரமாக இச்சா நதி பாயும் பகுதியில் தேங்காய்ப்பூ சம்பா என்ற பாரம்பரிய நெல் ரகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நெல்லுக்கு வங்க மொழியில் வேறு பெயரும் உண்டு. தேங்காய்ப்பூ இந்த ரகம் பொரி தயாரிப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது. காலை உணவாகத் தண்ணீரில் பொரியை ஊறவைத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துச் சாப்பிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் பிரபலமான இந்த நெல் ரகம், தமிழகத்திலும் சோதனை அடிப்படையில் மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள்

வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது. துளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் காம்பு அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. நெற்பயிரில் ஏற்படும் இலை நோய்களுக்கு வேப்ப எண்ணெய் 3 சதத்துடன் 10 சதம் சீமைக்கருவேல் இலைச்சாற்றை நாற்று நட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 தெளிப்புகள் கொடுக்க நோய்கள் கட்டுப்படுகிறது. மிளகாயில் ஏற்படும் மேலும் படிக்க..

பெங்களூரில் வேளாண் கண்காட்சி

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில், பெங்களூரில் 2015 நவ.19-ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு வேளாண் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக வேளாண் துறையின் ஒத்துழைப்புடன் பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில், பெங்களூரு, காந்தி வேளாண் மையத்தில் 2015 நவ.19 முதல் 22-ஆம் தேதி வரை வேளாண் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியின் அங்கமாக தேசிய இயற்கை வேளாண்மை கண்காட்சி, தேசிய வேளாண் கருவிகள் மேலும் படிக்க..

திறன்மிகு நுண்ணுயிர்கள்

நுண்ணுயிர்கள் இருவகைப்படும். அதாவது தீமை பயக்கும் நுண்ணுயிர்கள் (நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுண்ணுயிர்கள் போன்றவை) மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள். திறன்மிகு நுண்ணுயிர்கள் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் வகையைச் சார்ந்ததாகும். ஜப்பான் நாட்டில் ஒகினவாபில் உள்ள நியூக்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் ஹிகா (Dr. Teruo Higa) என்பவர் அற்புதமான திறன்கொண்ட நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் கூட்டுக் கலவையை கண்டறிந்து அதற்கு திறன்மிகு நுண்ணுயிர்கள் (Effective Microorganism)  என்று பெயரிட்டார். தொழு உரம், மக்கு உரம் மேலும் படிக்க..

கிராமத்து விஞ்ஞானி விவசாயியின் டிராக்டர் செக்கு

எண்ணெய் ஆட்டுவதற்கு மோகனூர் விவசாயி பயன்படுத்தும் புதிய முறை, விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் மாடு பூட்டி செக்கிழுத்து எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்றுவந்தது. எண்ணெய் எடுப்பதற்கு இந்த முறைதான் பரவலாகப் பின்பற்றப்பட்டுவந்தது. எண்ணெய் வியாபாரிகள் கடைகளில் மட்டுமல்லாமல், வீடுகளுக்கும் கொண்டுவந்து எண்ணெய் விற்றுவந்தார்கள். இன்றைக்கு செக்குகள் குறைந்துவிட்டன. எண்ணெய் எடுக்கும் தொழில் பல்வேறு நவீன மாற்றங்களைக் கண்டுள்ளது. மாடுகளும் குறைந்துவிட்டதால், மாடு கட்டி எண்ணெய் எடுக்கும் தொழில் கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது. இந்த நிலையில், மேலும் படிக்க..

34 சென்டில் விவசாயம் செய்யும் கணினி பொறியாளர் வீடியோ

வெறும் 34 சென்டில் வெற்றிகரமாக தனக்கு தேவையானதை விவசாயம் செய்யும் கணினி பொறியாளர் பற்றிய வீடியோ .. நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்

சோலைக்காடுகளை புனரமைக்கும் திட்டம்

‘தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை சோலைக் காடுகளை புனரமைக்க நிபுணர் குழு அமைத்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’ என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை சரவணன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டதாவது – தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 22 ஆயிரம் எக்டேர் சோலைக்காடுகள் (Shola Forests) உள்ளன. இந்த காடுகள் மேற்கு தொடர் மலைகளில் மலையிடுக்குகளில் மட்டுமே காணபடுகின்றன. இவற்றால் தான் மலைகளில் விழும் மழை நீர் ஸ்பாஞ் மேலும் படிக்க..

கொடைக்கானலில் விதிமீறி கட்டப்படும் ரிசார்ட்கள்

கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் விதிகளைமீறி 4 மாடி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.கொடைக்கானல் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கட்டுமானங்களுக்கு பல விதிமுறைகள், மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. கட்டுமான பணிகளுக்கு, மலைப் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு, கிராம பகுதியில் விவசாயத்திற்கு பயன்பாடற்ற நிலம் என வி.ஏ.ஓ., முதல் தாசில்தார் வரையான வருவாய் அதிகாரிகள் சான்று பெற வேண்டும்.கட்டுமான பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லவில்லை என மின்சார வாரியத்திடமும், நிலச்சரிவு ஏற்படாத பகுதி என விவசாயத்துறையிலும் மேலும் படிக்க..

மக்காச் சோளப் பயிரில் சாகுபடித் தொழில்நுட்பங்கள்

குறைந்த காலத்தில் உடனடி வருவாய் அளிக்கக் கூடியதாக இருப்பதால், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்காச் சோளத்தை விவசாயிகள் பயிரிட வேண்டும் என தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: உணவு, கால்நடைத் தீவனமாக மக்காச் சோளம் பயன்படுவதால், தனிப் பயிராகவும், வரப்பு, ஊடுபயிராக அதிகளவில் மானாவாரி, இறவையில் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த நீரில் 90 முதல் 100 நாள்களில் உயர் விளைச்சல், கூடுதல் வருவாய் பெற புரட்டாசி மேலும் படிக்க..

பாக்கு மரங்களுக்கு மத்தியில்ஊடுபயிராக வாழை

கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பாக்கு மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நேந்திரன் வாழை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் பயிரிடப்பட்டு வந்த நெல் விவசாயம் காலநிலை மாற்றத்தால் படிப்படியாக கைவிடப்பட்டு வருகிறது.இந்த நிலங்களில் தேயிலை, காபி, இஞ்சி, வாழை மற்றும் பாக்கு விளைவிப்பதில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, நேந்திரன் வாழை விளைவிப்பதில், விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பாக்கு மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக நேந்திரன் வாழை விளைவிக்கப்படுகிறது. இதனால், வாழைக்கு இடும் மேலும் படிக்க..

சிறு தானிய உணவு தயாரிப்பு 5 நாள் பயிற்சி

சென்னையில் உள்ள, மத்திய அரசின், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம், அக்., 5ம் தேதி, சிறு தானிய உணவு, வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை, கிண்டியில் உள்ள தங்கள் மையத்தில் துவக்குகிறது. ஐந்து நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில், தினை லட்டு, இனிப்பு பணியாரம், தோசை மிக்ஸ், வரகு புளியோதரை, சாமை முறுக்கு, சிறு தானிய சத்து மாவு, பாயச மிக்ஸ் வகைகள், வாஷிங் பவுடர், சோப்பு ஆயில், சொட்டு நீலம், ஷாம்பு உள்ளிட்ட மேலும் படிக்க..

'இயற்கை விவசாயத்தில் மட்டுமே விலையை விவசாயிகள் நிர்ணயிக்க முடியும்!'

ஈரோட்டில் நடைபெற்று வரும் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015’ ன் இரண்டாம் நாள் அன்று ,  ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர் இடு பொருட்கள் விற்பனை, வீட்டுத்தோட்ட உபகரணங்கள் அரங்குகள் மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன. மற்ற அரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவை பண்பலை வானொலியில் சொல்லியது போல ‘மண்ணின் வளமே மக்கள் வளம்’ என்ற கொள்கை பிடிப்பில் பசுமை விகடன் முனைப்பாக இருந்து வருகிறது. அதை விவசாயிகளும் நிரூபித்து வருகின்றனர். கண்காட்சி, மேலும் படிக்க..

பதநீரும் கருப்பட்டியும்

பனையின் முதன்மையான விளைபொருள் பதநீர். பனையின் ஆண் மற்றும் பெண் மஞ்சரிகளில் இருந்து பதநீர் எனப்படும் சுவை மிகுந்த சாறு கிடைக்கிறது. பதநீர் சுவையாகவும், ஓரளவு அமிலத்தன்மையுடனும் இருக்கும். காலைப் பதநீரும், மாலைப்பதநீரும் பருகுவதற்கு சுகம். பதநீர் கிடைக்கும் இடங்களில், குறிப்பாக மழை மற்றும் காற்று காலங்களில் பதநீரின் தரம் குறையும். ஒரு பனையிலிருந்து 3 முதல் 5 மாதங்கள் வரை பதநீரைப் பெறலாம். இதில் 3 மாதங்கள் அதிக அளவில் பதநீர் கிடைக்கும். பானைகளிலிருந்து பதநீரைப் மேலும் படிக்க..

அங்கக வேளாண்மைப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் “”வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை”யில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி அங்கக வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் பற்றிய ஒருநாள் கட்டணப் பயிற்சி நடைபெற உள்ளது. மண்வளப் பாதுகாப்பு, வீட்டுத்தோட்டம், உயிர் உரங்கள், இயற்கைவழி பயிர் பாதுகாப்பு, மண்புழு உரத் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடுகள் பஞ்சகவ்யா தயாரிப்பு, அங்ககச் சான்றளிப்பு குறித்த விபரங்கள் போன்ற விஷயங்கள் பயிற்சியில் சொல்லித்தரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு , தலைவர் மற்றும் பேராசிரியர் வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை, தமிழ்நாடு மேலும் படிக்க..

பப்பாளி மரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000!

இயற்கை முறையில் பப்பாளி பயிரிட்டு, ஒரு மரத்தில், ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்து வரும், நெல்லை மாவட்டம், மேலகரம் பகுதியைச் சேர்ந்தவிவசாயி பி.கே.மாரிமுத்து கூறுகிறார் –                 பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். பப்பாளியில், ஆண், பெண் என, இரு வகை உண்டு. இரு பாலினமும் கலந்த ரகங்களும் உண்டு. கோ-3, கோ-7 போன்ற ரகங்கள், ஆண் பூ மற்றும் பெண் பூவை ஒரே மரத்தில் மேலும் படிக்க..

சென்ற வாரம் டாப் 5

இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி உண்மைகள் ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் வழி பச்சை தங்கமாம் மூங்கில் மண்புழு நண்பன் சுல்தான் இஸ்மாயில் நேர்காணல் ஜெட் வேக லாபத்துக்கு ஜீரோ பட்ஜெட் சின்னவெங்காயம் ஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை

வறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை

நாகை மாவட்டத்தில் தற்போது வறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அனுராதா தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியுள்ளார். நாகை மாவட்டத்தில் தற்போது நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிர்கள் போதிய தண்ணீர், மழை இன்றி பயிர் கருகும் தருவாயில் உள்ளது. பாதிப்பிற்கு உள்ளாகும். நெற்பயிரை 7 முதல் 10 நாட்கள் வரை ஆரம்ப கட்ட வறட்சியிலிருந்து காப்பாற்ற, பி.பி.எப்.எம். என்ற மெத்தைலோட்ரோபிக் பாக்டீயா கரைசலை ஒரு ஏக்கருக்கு மேலும் படிக்க..

ஆடு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி

சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 அக்டோபர் 1ம் தேதி, பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு தொழில் நுட்ப பயிற்சி நடக்கிறது. இது குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கூறியதாவது: வேளாண் சார்ந்த உப தொழிலில், வெள்ளாடு வளர்ப்பு, குறைந்த முதலீட்டில், நிறைய லாபம் தரும் தொழிலாக உள்ளது. விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் பயன் பெறும் வகையில், 2015 அக்டோபர் , 1ம் தேதி, காலை, 9.30 முதல் மேலும் படிக்க..

ஒரு நாள் மழையில் நிரம்பிய பண்ணை குட்டைகள்

மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாடையம்பட்டி ஊராட்சியில் ஒரே நாள் மழையில் 52 பண்ணை குட்டைகள் நிரம்பியது விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மாகாந்தி தேசிய நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைக்கப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை நீர் தேங்குமிடங்களில் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் 1290 பண்ணை குட்டைகள் வரை அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் சேடப்பட்டி ஒன்றியத்தில் தாடையம்பட்டி ஊராட்சியில் ஒரே இடத்தில் விவசாயிகள் மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கு ரஷியா தடை

ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கு எதிராக வலுத்து வரும் மக்கள் கருத்து பற்றியும் எப்படி மக்கள் கருத்துக்கு தலை சாய்த்து பிரான்ஸ் நாடு அவற்றை தடை செய்ய திட்டமிட்டுள்ளதையும் படித்தோம். இப்போது ரஷியா நாடும் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கு  தடை செய்து  உள்ளது. இதை பற்றிய செய்தி ஹிந்துவில் இருந்து.. மரபணு மாற்ற உணவுக்கு முடிவு? இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், பட்டினியைப் போக்கும் என்று பரப்புரை செய்யப்பட்டுவரும் மேலும் படிக்க..

நம்ம ஊர் நம்மாழ்வார்கள்

இயற்கை வேளாண்மையை மீட்டெடுக்கத் தன்னையே விதையாக்கிக் கொண்ட நம்மாழ்வாரின் முதலாண்டு நினைவு நாள் சமீபத்தில் முடிந்தது. அதையொட்டிப் பெரம்பலூரில் நடந்த இயற்கை வேளாண் ஆர்வலர் நிகழ்வில் உள்ளூர் ‘நம்மாழ்வார்கள்’ கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சி அரங்கில் நுழைந்தவுடன் முதலில் ஈர்த்தது இயற்கை வேளாண் விளைபொருள் கண்காட்சிதான். உள்ளூர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் சிறுதானிய, காய் கனி, மூலிகை, பயிர் ரகங்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இயற்கை பூச்சி விரட்டி, இயற்கை உரம், பஞ்சகவ்யம் போன்ற நுண்ணுயிர் ஊட்டங்கள், பயிர் ஊக்கிகள், மேலும் படிக்க..

தினையால் கிடைத்தது இரண்டு மடங்கு லாபம்

சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆரம்பித்த பின் வாழ்க்கை நல்லதற்கு மாறி விட்டது என்கிறார் ஜானகி – இவர் மன்னடிபேட்டை அருகே உள்ளே வினாயகம்பேட்டை என்ற கிராமத்தில் வசிக்கிறார். இது புதுச்சேரி மாநிலத்தில் வருகிறது “இப்போதேல்லாம் எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது. முன்பு நெல் சாகுபடி செய்த போது வேலை அதிகம். ஆட்கள் கிடைப்பது கஷ்டம். சிறு தானியங்கள் சாகுபடியில் எனக்கு உடற் உழைப்பு அதிகம் குறைந்து உள்ளது” ஜானகியும் அவரை போன்று 15 பேரும் மன்னடிபேட்டை மேலும் படிக்க..

பிரான்ஸ் நாடு விவசாயிகள் போராட்டம்..

இந்தியாவில் மட்டும் தான் விவசாயம் நெருக்கடியில் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். மேற்கத்திய நாடுகளிலும் விவசாயிகளுக்கு வருமானம் குறைந்து வருகிறது என்று அந்த நாட்டு விவசாயிகள் போராட்டம் செய்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் குறைந்து வரும் வருமானம் பற்றி போராட்டம் நடத்தியதில் இருந்து சில காட்சிகள்                                         மேலும் படிக்க..

பூச்சிகளைக் கட்டுப்படுத்த நவீன விளக்குப் பொறிகள்

காட்பாடி சேவூரில் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களை நாசம் செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நவீன விளக்குப் பொறிகள் அமைக்கப்பட்டன. இந்த புற ஊதா கதிர் விளக்குப் பொறிகள் அரக்கோணத்தில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்கிலும் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளியிடங்களில் இருந்து ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் நெல், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் சேவூரில் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கில் சேமித்து மேலும் படிக்க..

தக்காளி சாகுபடியில் குழித்தட்டு தொழில்நுட்பம்

“”இளைஞர்கள் குழிதட்டு தொழில்நுட்பத்தில் காய்கறி செடிகள் வளர்த்து, விற்பனை செய்யும் நர்சரி துவங்கலாம்”, என தோட்டக்கலைத்துறை பரிந்துரைத்துள்ளது. திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் குழிதட்டு (ப்ரோ ட்ரே) தொழில்நுட்பத்தில் காய்கறி நாற்றுக்கள் உற்பத்தியாகிறது. இம்முறையில் தென்னை நார் கழிவுகள் 1.25 கிலோ, நுண்ணுயிர் ஊக்கிகள் 200 கிராம் சேர்க்க வேண்டும். அதை குழிகளை கொண்ட பிளாஸ்டிக் தட்டில், ஒவ்வொரு குழியிலும் 98 தக்காளி விதைகளை விதைக்க வேண்டும். நட்ட 25 முதல் 30 நாட்களில் தக்காளி மேலும் படிக்க..

தென்னையில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை

தென்னந்தோப்பில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை பயிரிட்டு அதன் மூலம் அதிக மகசூல் கண்டு சாதனை படைத்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி நடராஜன். கோட்டைத்தலைவாசல் தெருவை சேர்ந்த இவர், கடந்த 23 ஆண்டாக விவசாயம் செய்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரின் மேற்கே திருவண்ணாமலை பகுதியில் 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 5ஏக்கர் தென்னந்தோப்பில், ஊடுபயிராக தைவான் நாட்டு ரெட்லேடி என்ற ரக பப்பாளியை பயிரிட்டுள்ளார்.                   மேலும் படிக்க..

இயற்கை மூலிகை மருந்து தெளித்து தென்னை மரத்தில் 300 காய்கள்!

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது தென்னந்தோப்பு அனுமந்தன்பட்டியில் உள்ளது. இவரது தோப்புகளில் உள்ள தென்னைமரங்களில் வருடத்துக்கு 50 காய்கள் காய்ப்பதே அரிதாக இருந்தது. தனது தோப்பில் உள்ள தென்னை மரங்களில் உற்பத்தியை பெருக்குவதற்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இயற்கை வேளாண் மூலிகை மருந்து கண்டுபிடிப்பாளர் ஜெயவீரனை அணுகினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள இவருக்கு வேளான் தொடர்பான இவரது கண்டுபிடிப்புக்காக மத்திய வேளாண் அமைச்சகம் மேலும் படிக்க..

சென்ற வாரம் டாப் 5

சென்ற வாரம் டாப் 5 தகவல்கள் – பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015 வேம்பு மூலம் பூச்சி கட்டுப்பாடு எதிர்கால விவசாயம் இப்படி இருக்கலாம்! பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி? சந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர் ஆயுள் பயிர் கறிவேப்பிலை!    

வறட்சிக் காலத்திலும் அதிக விளைச்சல் பெறுவது எப்படி?

வறட்சிக் காலத்திலும் சிறப்பான நெல் மகசூலை பெற்றது எப்படி என்பது குறித்து முதல்வரின் கையால் விருது பெற்ற ஈரோடு விவசாயி விளக்கம் அளித்துள்ளார். திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி செய்யும் விவசாயியை ஊக்குவிக்கும் பொருட்டு, குடியரசு தினத்தன்று ரூ.5 லட்சத்துடன் கூடிய சிறப்பு விருதினை அரசு வழங்கி வருகிறது. ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்த ந.பரமேஸ்வரனுக்கு, இந்த ஆண்டு இவ்விருதினை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமைவழங்கினார். விருது பெற்ற அவர் ‘தி இந்து’ மேலும் படிக்க..

மரவள்ளியில் மஞ்சள் தேமல் நோய்

மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது: மரவள்ளி செடியில் மஞ்சள் தேமல் நோய் பெருமளவில் பரவி வருகிறது. நோய் காரணமாக, விளைச்சல் குறைந்து, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மரவள்ளியில், தோன்றும் மஞ்சள் தேமல் நோய், “ஜெமினி’ வைரஸ் எனப்படும் ஒரு வகை நச்சுயிரியால் உண்டாகிறது. இந்த நச்சுயிரியால், 80 சதவீதம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படும். நோயினால் இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிறப்பகுதிகளும், பச்சைநிற மேலும் படிக்க..

இயற்கை உரமாக பயன்படும் வெள்ளைப்பூண்டு கழிவுகள்

பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு செல்லும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக விவசாயிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் வெள்ளைப்பூண்டு கழிவுகள் இயற்கை உரமாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.                 இன்றைய சூழ்நிலையில் விவசாயிகள், உடனடி விளைச்சலுக்காக தொடர்ச்சியாக ரசாயன உரங்களை, அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.தொடர்ந்து ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விடுவதால் விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை மேலும் படிக்க..

காணாமல் போய்கொண்டிருக்கும் நண்டுகள்

கோவாவில் அடர்ந்த காட்டுக்குள் தூத் சாகர் (Dudh sagar) அருவிக்கு அருகே, தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறையின் மீது ஒரு நண்டைக் கண்டேன். தன் மீது தண்ணீர் விழும்படியாக, கெட்டியாகப் பாறையைப் பற்றிக்கொண்டு அது அமர்ந்திருந்தது, அந்தப் பெரிய சிவப்பு நண்டு. கண் இமைக்காமல் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, படமும் எடுத்துக்கொண்டேன். நான் நடந்து செல்லச் செல்ல இன்னும் நிறைய நன்னீர் நண்டுகள், பாறையைப் பற்றிக்கொண்டு இருந்ததைக் கண்டேன். அதன் பெரிய உருவமும், வசீகரிக்கும் மேலும் படிக்க..

கூண்டுகளாவது மிஞ்சுமா நம் பிள்ளைகளுக்கு?

சிங்கப்பூர் தனி தேசமாக உருவானதன் பொன்விழா ஆண்டு இது. “உலக நாடுகள் நகரக் கட்டமைப்புருவாக்கம் சார்ந்து சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றார் நண்பர் மு.ராமநாதன். ஹாங்காங்கில் வசிக்கும் பொறியாளரும் எழுத்தாளருமான ராமநாதனுக்கு நகர நிர்மாணம் தொடர்பாக ஆழ்ந்த பார்வை உண்டு. பேச்சு இயல்பாக ஹாங்காங் பக்கம் திரும்பியபோது, ஹாங்காங் கூண்டு வீடுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். ஹாங்காங்கின் கூண்டு வீடுகளும் அங்கு நிலவும் வாழ்க்கைச் சூழலும் இன்றைக்கு நகர்மயமாக்கல் ஆய்வாளர்கள் மத்தியில் உலகப் பிரசித்தம். கசகச மேலும் படிக்க..

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் ஆக்கிரமிப்புகள்

சதுப்பு நிலங்கள் ஸ்பாஞ் போன்றவை. மழை பெய்யும் போது அதிகம் வரும் நீர் இங்கே தங்கி நிலத்தடி நீரை அதிகபடுதுகிறது. சென்னை அருகே வேளச்சேரியில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் வரும் பள்ளிகரணை அப்படி ஒரு இடம். ஒரு காலத்தில் இந்த சதுப்புநில பகுதி, கிழக்கில், பழைய மகாபலிபுரம் சாலை வரையும், மேற்கில், தாம்பரம் – வேளச்சேரி சாலை வரையிலும், வடக்கில், வேளச்சேரி கிராமம் வரையும், தெற்கில், கொட்டிவாக்கம் – காரப்பாக்கம் சாலை வரையும் இருந்துள்ளது. இப்போது மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு பிரான்ஸ் தடை

மரபணு மாற்றப்பட்ட தானியங்களுக்கும் பயிர்களுக்கும் ஐரோப்பாவில் எப்போதுமே ஆதரவு  குறைவுதான். ஆனால் அமெரிக்கா நச்சரிப்பால் ஐரோப்பா union (European Union) ஒரு நாடு மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை அந்த நாடு வேண்டும் என்று ஆசை பட்டால் சாகுபடி செய்யலாம் என்று சட்டம் இயற்ற பட்டது. அனால் ஒன்றன் பின் ஒன்றாக ஐரோப்பாவில் உள்ள நாடுகள் Opt-out எனப்படும் விதி படி மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அவர்களின் நாடுகளில் தடை  செய்து வருகிறார்கள். புதிதாக பிரான்ஸ் நாடு இந்த மேலும் படிக்க..

பாரம்பரிய நெல்: கட்டுச்சோற்றுக்கு சுவை தரும் திருப்பதி சாரம்

டெல்டா பாசனப் பகுதிகளிலும் திருச்சி போன்ற சில பகுதி களிலும் காணப்படும் மிதமான உவர் நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்ற நெல் ரகம், திருப்பதி சாரம். திருச்சி மாவட்டத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப் பட்டுவந்த இந்த ரகத்தை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தற்போது விவசாயிகள் சாகுபடி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்கள் விரும்புவது சுமார் நான்கடி உயரம் வரை வளரும் தன்மை கொண்ட இந்த நெல் ரகம், 140 நாள் வயதுடையது. இயல்பான மஞ்சள் நிற நெல்லும் வெள்ளை மேலும் படிக்க..

வீட்டிலேயே எரு தயாரிக்கலாம்

மண்ணின் வளத்தை மேம்படுத்தும் எருவை விலை கொடுத்து வாங்கித்தான் தோட்டங்களுக்கு இட்டு வருகிறோம். இந்நிலையில் வீட்டுப் பூத்தோட்டம், காய்கறித் தோட்டம், மாடித் தோட்டம் போன்றவற்றுக்கு இடுவதற்கான எருவை வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிக்கலாம். முதலில் ஒரு பழைய பிளாஸ்டிக் பெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் அடியில் காற்றோட்டத்துக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றவும் சில துளைகளை இட வேண்டும். அதன் பிறகு ஒரு அங்குல உயரத்துக்குச் சரளைக் கற்களைப் பரப்பி வைக்கவும். அதன் மீது ஓர் அங்குல அளவுக்கு மணலைப் மேலும் படிக்க..

உரச்செலவை குறைக்க நெல் சாகுபடியில் பசுந்தாள் உரம்

தமிழ்நாட்டில் ஒருபோக சம்பா நெல் சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்டடுகிறது.  இப்பருவத்தில் மத்திய மற்றும் நீண்ட கால நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. மண் பரிசோதனை அடிப்படையில் பயிருக்கு உரமிடல் நன்று.  மண் பரிசோதனை செய்ய இயலாத  நிலையில் மத்திய மற்றும் நீண்டகால ரகங்களுக்கு எக்டேருக்கு 150கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச் சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து மற்றும்க் 25 கிலோ துத்தநாக சல்பேட்டும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் மேலும் படிக்க..

புதிய தொழில் நுட்பத்தில் வெள்ளரி சாகுபடி

நத்தம் பகுதியில் வீரிய ஒட்டு (ஜெர்கின்ஸ்) ரக வெள்ளரியை புதிய தொழில் நுட்ப முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறுகின்றனர். நத்தம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஒத்தக்கடை, அய்யனார்புரம், மணக்காட்டூர், செந்துறை, மேற்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீரிய ஒட்டுரக வெள்ளரி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வகை வெள்ளரி பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களே விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை வழங்கி கொள்முதலும் செய்கின்றன. வெள்ளரி கொள்முதல் விலையில் இடுபொருட்களின் மேலும் படிக்க..

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

பசுமை விகடன்,  தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சேர்ந்து எடுக்கும் அக்ரி எக்ஸ்போ ஈரோடில் 2015 செப்டம்பர் 25-28 வரை நடக்கிறது. நிச்சயம் கலந்து கொள்வீர்! இடம்: மைதானம், ஈரோடு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 09840968450

செண்டு மல்லி சாகுபடி

நடப்பு பருவத்துக்கு ஏற்றபடி துல்லிய தொழில்நுட்ப சாகுபடித் திட்டம் மூலம் செண்டுமல்லியைப் பயிரிடலாம் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். செண்டு மல்லி எல்லாக் காலத்திலும் மக்கள் விரும்பி வாங்கக் கூடியது. சுப, துக்க காரியங்கள் போன்றவற்றுக்கும் செண்டுமல்லியை மக்கள் பயன்படுத்துகின்றனர்.                     மண் வகை: செண்டுமல்லி அனைத்து வகையான மண்ணிலும், மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண்ணுக்கும் மிகவும் ஏற்றது. பருவ காலம்: மேலும் படிக்க..

ஒட்டு ரக பப்பாளி சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் ஒட்டு ரக பப்பாளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதால், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கச்சிராயபாளையம் சுற்றியுள்ள கிராமங்கள் நிறைந்துள்ளதால், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பதியில் கிணற்று பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, மக்கா சோளம், வாழை, பருத்தி போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதி விவசாயிகள் மாற்று பயிர்களாக வசம்பு, கோலியாசிஸ் போன்ற மருத்துவ பயிர்களும், திசுவளர்ப்பு மேலும் படிக்க..

2.5 செ.மீ. மழை பெய்தால் 1.70 கோடி லிட்டர் நீர் சேமிப்பு!

திண்டுக்கல் அருகே பஞ்சாயத்து தலைவர் ஒருவர், மக்கள் பங்களிப் புடன் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்து ஒரு முறை பெய்யும் 2.5 செ.மீ. மழை யில் 1.70 கோடி லிட்டர் தண்ணீ ரைச் சேமித்து, குடிநீர் பிரச்சினைக் குத் தீர்வுகண்டு சாதனை படைத் துள்ளார். வைகை ஆறு பாய்ந்தாலும், ராமநாதபுரம் மாவட்டம்போல திண்டுக்கல் மாவட்டமும் வறட்சி மிகுந்தது. இந்த மாவட்டத்தில், தொப்பம்பட்டி அருகே வாகரை பஞ்சாயத்து கிராமங்கள், ஆண் டுக்கு வெறும் 5 நாள் 625 மி.மீ. மேலும் படிக்க..

ரசாயன விநாயகர் சிலைகளை தவிர்ப்போம்

ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படு வதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன, இதேபோல ரசாயன சிலைகளால் நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் நாளை 2015 செப்டெம்பர் 17-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. மும்பையின் சின்ன சின்ன சந்துகளிலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படுவது வாடிக்கை. 11 நாட்கள் திருவிழாவுக்குப் பிறகு அனைத்து விநாயகர் சிலைகளும் கடல், நீர்நிலைகளில் கரைக்கப்படும். மும்பையில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் விநாயகர் மேலும் படிக்க..

டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க நிறுவனம் மீண்டும் மனு

மீத்தேன் திட்டமென்ற பூதம் எப்படி தஞ்சை மாவட்டத்தை அழிக்கும் என்று முன்பே படித்தோம். இதை எதிர்த்து  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர பட்டுள்ள வழக்கில் இடை கால தடை கொடுக்க பட்டு  உள்ளது.இது ஒரு ஆரம்பமே. நீண்ட வழக்குக்கு நாம் தயார் செய்து கொள்ள .வேண்டும். இதை பற்றிய புதிய தகவல் இதோ — திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி சுமார் 766 சதுர கி.மீ. பரப்பளவுக்கு அரியவகை நிலக்கரி இருப்பதை கடந்த 20  ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மேலும் படிக்க..

விவசாயத்தை அழிக்க பார்க்கும் காஸ் பைப் லைன் திட்டம்

தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் திட்டமென்ற பூதம்  ஒரு பக்கம் இன்னும் முடியாத போது இப்போது விளை நிலங்களை அழிக்க வரும் இன்னொரு பூதத்தை பார்ப்போம்.. தினகரனில் இருந்து தகவல்… அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட விவசாயிகளை உயரிய இடத்தில் வைத்துள்ளது. அவர்களின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து  வருகிறது.  கனரக தொழில், தொழிற்சாலைகள், சுரங்கத் தொழில் உள்பட பல தொழில்களில் கொடி கட்டி பறந்தாலும் விவசாயிகள், விவசாயம் இல்லாத  நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாகவே கருத மேலும் படிக்க..

தானியங்களை பாதுகாக்கும் குதிர்கள்

தானியங்களை பாதுகாக்கும் குதிர்களை பயன்படுத்தும் பழக்கம் திண்டுக்கல் மாவட்ட கிராம மக்களிடம் இன்றும் உள்ளது. பழங்காலங்களில் நெல், கம்பு, கேழ்வரவு, குதிரைவாலி, வரகு போன்ற தானியங்கள் அதிகளவில் விளைந்தன. தானியங்களை சேமிக்கவும், மழை, வெயில், பூச்சிகளில் இருந்து பாதுகாக்கவும் குதிர்களை பயன்படுத்தினர். இதில் பல நாட்கள் வரை தானியங்கள் பாதுகாக்கப்படும். மேல் பகுதியில் காற்று செல்லும் துளை இருக்கும். சில குதிர்களின் அடித்தளம், தரையில் இருந்து 3 அடி உயரத்தில் இருக்கும்.விளையும் தானியங்களின் அளவுக்கு ஏற்ப குதிர்களை மேலும் படிக்க..

பாரம்பரிய நெல்: எதையும் தாங்கும் சம்பா மோசனம்

பாரம்பரிய நெல் ரகங்களில் பள்ளமான பகுதிகளில் பயிரிட ஏற்ற ரகம் சம்பா மோசனம். இதன் வயது நூற்றி அறுபது நாள். அதிகத் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீர் வருவதற்கு முன்பு, நெல் விதையைத் தெளித்துவிட்டு வந்தால் போதும். மழை பெய்யும்போது குறைந்த ஈரத்திலும் முளைத்துவிடும். எதையும் தாங்கும் வறண்டு கிடக்கும் ஏரிகளில் இதைப் பயிர் செய்யலாம். பிறகு தண்ணீரின் அளவு அதிகரிக்க அதிகரிக்கப் பயிரின் உயரமும் அதிகரித்துக்கொண்டே வரும். இதனால் பயிர் அழுகாது. அதிகத் தண்ணீர் இருந்தாலும் மேலும் படிக்க..

இந்தியாவின் காற்று மாசு அட்லஸ்

இந்தியாவில் காற்றில் உள்ள மாசுக்கள் பற்றி நம் அரசு கவலை படுவதே இல்லை. மண் தூசி, டீஸல் புகை, டிராபிக் ஜாமில் வரும் புகை, தொழிற்சாலைகளால் வரும் புகை  என்ற பல வகை மாசுக்கள் காற்றில் உள்ளன. இந்த மாசுகளில் இரண்டு வகை. PM 2.5 மற்றும் PM 10 என்று PM என்றால் பார்டிகிலட் மாட்டர் (Particulate Matter). அதாவது 2.5 மைக்ரோன் அளவிற்கு கீழே உள்ள துகள்கள் மற்றும் 10 மைக்ரோன் அளவு துகள்கள் மேலும் படிக்க..

கழிவு நீர் கலந்ததால் ஊட்டி எரி படகுகள் நிறுத்தம்

ஊட்டி ஏரியில் கழிவுநீர்கலந்து கடும் துர்நாற்றம் வீசியதால், தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஊட்டி ஏரியில்சுற்றுலாத்துறை சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக வருகிறது. இந்த கால்வாய் நகரின் மையப்பகுதியில் செல்கிறது.கால்வாயின் இருபுறமும் உள்ள ஓட்டல்கள், குடியிருப்பு,லாட்ஜ் உள்ளன.இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கால்வாயில் வந்து ஏாியில் கலப்பதால் ஏாி மாசடைந்து வந்தது. இதையடுத்து,ஏரியை தூய்மைப்படுத்த கடந்த இரு ஆண்டுக்கு முன் தமிழக அரசு ரூ.4 கோடியே 27 மேலும் படிக்க..

மேற்குத் தொடர்ச்சி மலையில் 100+ யானைகள் கொன்றழிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலைகளிலே தான் தொடர்ச்சியாக (Contiguous) கேரளா தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களில் காடுகள் உள்ளன இதனால் உலகத்திலேயே அதிக அளவு அடர்த்தியான அளவில்  புலி மற்றும் யானைகள் வன விலங்குகள் காண படுகின்றன. பிள்ளையார், கோயில்களில் யானை,  என்று பல விதமான வழிகளில் யானைகள் நம் கலாச்சாரத்தில் ஒரு பெரிய செல்ல பிரியமான இடத்தை பிடித்து கொடுள்ளன. இவற்றை காப்பது நம் கடமை ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மேலும் படிக்க..

சுரைக்காய் தருகிறது ஜோரான மகசூல்

குறைந்த பரப்பில் கூட நன்கு நிரந்தர அமைப்புகள் அமைத்து அதன் மூலம் சுரைக்காயை பலவித மண் வகைகளிலும் வளர்த்து 12 டன் வரை மகசூல் ஒரு ஏக்கரில் பெறலாம் சுரைக்காய்க்கு உள்ள சிறப்பே அது ஓராண்டு தாவரமாக, வேகமாக படர்ந்து செல்லும் தன்மை தான். இதனை தரையில் மற்றும் கூரைகளில் கூட படர விடலாம். மாட்டுக் கொட்டகை, பம்ப் ஹவுஸ், சேமிப்பு கூடம் இப்படி எங்கெல்லாம் கொடியை ஏற்ற முடியுமோ அங்கு கூட பந்தல் இன்றி சமாளித்து மேலும் படிக்க..

கொய்யா சாகுபடியில் மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம்!

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகள் உள்ளன. தண்ணீர் வந்தால் இருபோக விவசாயம் நடக்கும். தண்ணீர் வராவிட்டால் நிலைமை தலைகீழ் தான். மதுரையை பொறுத்தமட்டில் கிணற்று பாசனம் மூலம் நெல், வாழை போன்ற பாரம்பரிய விவசாயம் நடக்கிறது. “பாரம்பரிய விவசாயத்தில் எதிர்பார்த்த லாபத்தை எதிர்பார்க்க இயலாது. “வந்தால் வரவு; போனால் செலவு’ என்ற நிலையிலேயே நெல், வாழை சாகுபடியில் ஈடுபட முடியும்,’ என்கின்றனர் அனுபவம் வாய்ந்த மேலும் படிக்க..

காய்கறி தோட்டங்களில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு வீடியோ

காய்கறி தோட்டங்களில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு பற்றிய ஒரு வீடியோ இங்கே பார்க்கலாம்    

இயற்கை விவசாயத்தில் உளுந்து, புடலை சாகுபடி

மன்னார்குடி அருகே ரசாயன உரத்தை பயன்படுத்தாமலேயே உளுந்து, காய்கறி பயிர்களை செழித்து வளர செய்து, இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர் கொடுத்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார். ரசாயன உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்படும் நெல், உளுந்து மற்றும் காய்கறிகளால் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படும் என்றும், பயிருக்கு உயிர்ச்சத்து கொடுக்கும் தன்மையை மண் இழக்கும் என்றும் பரவலாக பேசப்படும் நிலையில், மன்னார்குடி அருகே உள்ள சிங்கங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராசு என்பவர் கடந்த 3 ஆண்டு களாக மேலும் படிக்க..

சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி

பொள்ளாச்சி அருகே இருக்கும்  நெகமம் பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் மழையை நம்பியே சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். காய்கறிகள், நிலக்கடலை, தென்னை உள்பட பல்வேறு விவசாயம் நடந்து வருகிறது. சேரிபாளையம், ஆண்டிபாளையம், தேவணாம்பாளையம், கொண்டேகவுண்டன் பாளையம், ஆவலப்பம்பட்டி, சின்னநெகமம் ஆகிய பகுதிகளில் தற்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடியில் தீவிரம் மேலும் படிக்க..

மண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ்

மண் புழு உரம் தயாரித்து வரும் ரங்கசாமி கூறுகிறார் –                 சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவன் நான். செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள் மட்டுமே. சுற்றுச்சூழலை கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து, மண் புழுக்கள். இவை, 120க்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளன.ஒவ்வொரு வகை மண் புழுவும், வெவ்வேறு விதமான தட்ப வெப்ப சூழலில், வெவ்வேறு ஆழத்தில், மூன்று ஆண்டுகள் மேலும் படிக்க..

தாமிரபரணி: மண் மேடாகிப்போன ஸ்ரீவைகுண்டம் அணை

தாமிரபரணி ஆற்றின் கடைசி அணை ஸ்ரீவைகுண்டம் அணை. இங்கே ஆற்றின் நீரோட்டம் ஓடையாக சுருங்கிக்கிடப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் விவசாயத்துக்கு உயிர் நாடியாக திகழ்வது ஸ்ரீவைகுண்டம் அணை. இந்த அணை 1873-ல் பக்கிள் என்கிற ஆங்கிலேயே அதிகாரியின் முயற்சியால் கட்டப்பட்டது. ஒரு கி.மீ. சுற்றளவுடன் 8 அடி தண் ணீரை தேக்கும் அளவுக்கு இந்த அணை கட்டப்பட்டது. ஆனால், பெயருக்குத் தான் 8 அடி. இதுவரை அணை தூர் வாரப்படாததால் இப்போது அணையில் ஒரு மேலும் படிக்க..

உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது

உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது. மேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 192,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அதிவேகமாக அழிக்கப்பட்டு வருவதால் மானுட நாகரீகம் தொடங்கும்போது இருந்த மரங்கள் மேலும் படிக்க..

இந்த வாரம் டாப் 5 தகவல்கள்

இந்த வாரம் டாப் 5 தகவல்கள் – லண்டன் வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்யும் இளைஞர் ஒரு வழியாக என்டோசல்பான் தடை பஞ்சாபின் நிலத்தடி நீர் பிரச்னை மாதுளை சாகுபடி தீவனச் செலவுகளை குறைக்கும் முறைகள்  

வீட்டில் செய்ய கூடிய இயற்கை பூச்சி விரட்டி

வீட்டுத் தோட்டத்தில் பூச்சி வந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். அதிகச் செலவில்லாமல் இயற்கை முறையில் நாமே பூச்சி விரட்டியைத் தயாரிக்கலாம். வீட்டில் பெரிய அளவில் காய்கறித் தோட்டம் இருப்பவர்களுக்கு இந்த முறை நன்கு உதவும். இயற்கை பூச்சி விரட்டியைத் தயாரிப்பதற்கு மூன்றிலிருந்து ஐந்து வகை ஆடு தின்னாத இலைதழைகள் அல்லது கிள்ளினால் பால் வரும் இலைதழைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக அத்தி, பப்பாளி, வாதமடக்கி, ஆவாரை, வரிக்குமட்டி, நுணா (மஞ்சணத்தி) ஆகிய இலைகளை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு இலையிலும் தலா மேலும் படிக்க..

கடனை திருப்பி தராத பணக்காரர்கள்

  விவசாயிகள் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குவது வழக்கம்.ஆனால் விவசாயத்தில் ரிஸ்க் அதிகம். வானம் பொய்க்கலாம். புது வித பூச்சி தாக்குதல் வரலாம். இப்படி எத்தனையோ காரணங்கள். அப்போது அவர்கள் வாங்கிய கடனை திருப்பி தராவிட்டால், வங்கிகள் வந்து ஜப்தி செய்வது பார்த்திருக்கிறோம்   ஆனால் வங்கிகளில் இடம் இருந்து அதிகம் கடன் வாங்கி திருப்பி தராதவர்கள் யார் பார்ப்போமா? மதிய வர்க்கமோ, விவசாயிகளோ இல்லை.   ரூ 1 கோடி மேல் வாங்கிய புண்யவான்கள் அவர்களின் மேலும் படிக்க..

மொட்டை மாடியில் பச்சை காய்கறித் தோட்டம்

“என்னடா ஆச்சு…? ஏன் இப்படி வாடிப் போயிருக்கே…? தாகமா இருக்கா?…பூச்சி ஏதாவது கடிச்சிருச்சா…? இதோ இப்ப தண்ணி ஊத்துறேன்…’ பீளமேட்டை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் இப்படி பேசுவது, குழந்தைகளுடன் அல்ல… காய்கறி செடிகளுடன். விளை நிலங்கள் அத்தனையும் “கான்கிரீட் காடுகள்’ ஆக மாறி விட, காய்கறி, பழங்களை விளைவிக்க மண்ணில் இடமில்லை. இதனால் ஆசை ஆசையாக காய்கறி சமைத்து சாப்பிட முடியாத நிலை. ஆனால், பேராசிரியர் பாலகிருஷ்ணனுக்கு இது குறித்தெல்லாம் கவலை இல்லை. தனது வீட்டின் மேலும் படிக்க..

மண்ணுக்கு வளம் தரும் பயோ ஃபிக்ஸ்

மண் வளம் காக்கும் அதேநேரத்தில், விதைகளுக்கு இயற்கை முறையில் வீரியம் கூட்டும் பயோ ஃபிக்ஸ் (Bio Fix) என்னும் இயற்கையான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார் பேராசிரியர் நந்தகோபால். சென்னை மாநிலக் கல்லூரியில் மனோதத்துவம் படித்த நந்தகோபால், நஞ்சியலும் (Toxicology) முடித்தவர். இயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே இவரும் இவருடைய சகோதரர் பிரேம்குமாரும் இணைந்து ’ரெவல்யூஷன்ஸ்’ என்னும் ஆராய்ச்சி நிறுவனத்தை 1987-ல் தொடங்கினார்கள். அந்த நிறுவனம் சார்பில் ’பயோ ஃபிக்ஸ்’ என்ற இயற்கை தொழில்நுட்பத்தை மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் நடவு திருவிழா

சோழமண்டல இயற்கை வேளாண் குழுவும் Save Our Rice Campaign இணைந்து 2015 செப்டம்பர் 6 தேதி அன்று நடக்கும் பாரம்பரிய நெல் விழாவிற்கு உங்களை அழைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இலவசம்.               இடம்: ஒர்கனிக் வே பார்ம்,  கதிராமங்கலம், குற்றாலம் அருகே (மயிலாடுதுறை குடந்தை நடுவில்) தேதி: 2015 செப்டம்பர் 6 நிகழ்ச்சி நிரல்: – ஆலங்குடி பெருமாள் நெல் சாகுபடி டெமோ – அனுபவம் உள்ள மேலும் படிக்க..

மருத்துவகுணம் அதிகம் நிறைந்த நோனி சாகுபடி

மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்து சாதித்துள்ளார் பஞ்சம்தாங்கி கிராம விவசாயி ஒருவர். ராமநாதபுரத்திற்கு ஏற்ற நோனிப்பழ சாகுபடி என்ற தலைப்பில் இவரை பற்றி முன்பே படித்து உள்ளோம். இப்போது எப்படி நோனி கடற்கரையில் பயிர் இடலாம் என்று அவர் கூறுவதை பார்ப்போம் தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சார்ந்தது வெண் நுணா என்னும் நோனி மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி மேலும் படிக்க..

ஏலத்தோட்டத்தில் காளான் விவசாயம்

ஏலச்செடிகளுடன் காளான் வளர்ப்பு என்ற கொள்கையை பரிசோதித்து வெற்றி பெற்றுள்ளார் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன். இது பற்றி அவர் கூறுகையில், ஏலத்தோட்டங்களில் நிலவும் காலச் சூழ்நிலையையும் சீதோஷண நிலைகளைப் பயன்படுத்தி குடில்கள் அமைக்காமல் இயற்கையில் ஏலச்செடிகளுடன் காளான் வளர்த்து ஏல விவசாயத்தை மிகவும் லாபகரமாகவும், ஆர்கனிக் முறைக்கு மாற்றும் முயற்சி இது. இம்முறையை பின்பற்றும் போது அது விவசாயிகளுக்கு பலவகை நன்மைகளை தருகிறது.குறைந்த செலவில் அதிக வருமானம் பன்மடங்காக மேலும் படிக்க..

தீவனப்பயிர் சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 செப்டம்பர் 7ம் தேதி, தீவனப்பயிர் சாகுபடி, விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது’ என, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 செப்டம்பர் 7ம் தேதி, காலை, 9 மணிக்கு, தீவனப்பயிர் சாகுபடி மற்றும் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச மேலும் படிக்க..

சூரியகாந்தி அறுவடை அட்வைஸ்

சூரியகாந்தி விவசாயிகள், அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்பனை செய்துவிடலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.                   இந்தியாவின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர்களில் சூரியகாந்தி நான்காமிடம் வகிக்கிறது. சூரிய காந்தியை தமிழகம் தவிர கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்கள் அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. சூரியகாந்தி எண்ணெய் நாட்டின் தெற்கு, மேற்கு மாநிலங்களில் அதிக அளவில் நுகரப்படுகிறது. இந்தியாவில் மொத்த சூரியகாந்தி எண்ணெய் மேலும் படிக்க..

கறவை மாடு பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 செப்டம்பர், 8ம் தேதி, கறவை மாடுகள் பராமரிப்பு, நோய் மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 செப்டம்பர், 8ம் தேதி, காலை, 9 மணிக்கு, “கறவை மாடுகள் பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடக்கிறது.பயிற்சி முகாமில், மேலும் படிக்க..

1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம்!

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்ட காரணத்தாலும், நாவல் மரங்கள் குறைந்து வருவதாலும், அதன் பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள் அரிதாகிவிட்ட நிலையில், நாவல் பழமும், விதைகளும் படிப்படியாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக அறியப்பட்டுள்ளதால், அவற்றின் மதிப்பு தற்போது பன்மடங்கு உயர்ந்துவிட்டது. நீரிழிவு நோய் தவிர, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான மேலும் படிக்க..

வாழையைத் தாக்கும் காய்ப்பேன்

வாழைக்காய்களை இரண்டு வகையான காய்ப்பேன்கள் தாக்குகின்றன. 1. பூவைத் தாக்கும் பேன், 2. வாழைப்பழத்தோலில் காயம் ஏற்படுத்தும் பேன்.மிகச்சிறிய காய்களை பூப்பேன் தாக்குகிறது. சிறு காயங்களிலிருந்து சாற்றை உறிஞ்சுவதால் காய்களின் பரப்பில் சிறிய சிவப்புநிற புள்ளிகள் நாளடைவில் வளர்ந்து கறுப்பு நிற புள்ளிகளாக மாறிவிடும். பூ பேன் தாக்கும் ரகங்கள் – பூவன், நேந்திரன், கற்பூரவல்லி இரகங்களிலும், ரஸ்ட் காய்ப்பேன் சபா, மொந்தன், கற்பூரவல்லி, ரஸ்தாளி ஆகிய இரகங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பூ வெளிவந்தவுடன் மாலை மேலும் படிக்க..

களர் மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்

கோ.43 மற்றும் பையூர் ரக நெல், கோ.11, கோ.12, கோ.13 ஆகிய கேழ்வரகு இரகங்கள் அதிக அரை களர் தன்மையைத் தாங்கி வளரக்கூடியவை. கோ.24, கோ.25 ரக சோளம் பழைய பருத்தி இரகங்கள் (எம்.சி.யு), கோ.5, கோ.6 ரக கம்பு, கோசி.671 ஆகிய கரும்பு ரகங்கள் மிதமான களர் நிலங்களில் நன்றாக வளர்பவை. தவிர சூரியகாந்தி சவுண்டல் (சூபாபுல்), வேலி மசால், குதிரை மசால், வரகு, கொய்யா, இலந்தை, கருவேல், வேலிக்கருவேல், வேம்பு, சவுக்கு ஆகியவையும் களர் மேலும் படிக்க..

பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு

வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது. துளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் காம்பு அழுகல் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. நெற்பயிரில் ஏற்படும் இலை நோய்களுக்கு வேப்ப எண்ணெய் 3 சதத்துடன் 10 சதம் சீமைக்கருவேல் இலைச்சாற்றை நாற்று நட்ட 25 நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 தெளிப்புகள் கொடுக்க நோய்கள் கட்டுப்படுகிறது. மிளகாயில் ஏற்படும் மேலும் படிக்க..

துரித உணவுகளில் பயன்படுத்தும் ஆபத்தான சிவப்பு நிறம்!

பெரியவர்கள் குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் துரித உணவுகளில் (Fast food) கண்ணை பறிக்கும் சிவப்பு நிறம் பயன்படுத்துவதால், உடல்நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மதுரையில் உணவு பாதுகாப்பு துறையினர் இதை தொடர்ந்து ஆய்வு செய்வதில்லை.பாரம்பரியமாக குழம்பு மஞ்சள் நிறம் மற்றும் பீட்ரூட் சிவப்பு வண்ணங்கள் உணவில் பயன்படுத்த தகுதியுடையன. இந்நிறங்களைத் தாண்டி ரோட்டோர, தள்ளுவண்டி கடைகளில் அடர்சிவப்பு நிறம் (Synthetic food dye/colour) பயன்படுத்துகின்றனர். பளபளக்கும் சிவப்பு நிறத்தில் பொரித்த மட்டன், சிக்கன், காலிபிளவர், மீல்மேக்கரை மேலும் படிக்க..

கன்னியாகுமரியின் இயற்கை வளங்களை சுரண்டும் குவாரிகள்

கேரளத்தை `கடவுளின் தேசம்’ என வர்ணிப்பார்கள். ஆனால் கேரள மாநிலத்தின் தேவைக்காக ஓசையே இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் கபளீகரம் செய்யும் சம்பவம் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிதாக கல் குவாரிகளுக்கு அனுமதி பெற வேண்டுமானால், மாநில சுற்றுச் சூழல் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இந்த நீதிமன்ற வழிகாட்டுதலை சுட்டிக் காட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி பெற்று இயங்கி வந்த 28 குவாரிகளுக்கு அப்போதைய ஆட்சியர் நாகராஜன் மேலும் படிக்க..

மணல் திருட்டால் ஆற்றில் உருவான மரணப் பள்ளங்கள்

மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் நதியின் வலி வேதனையானது. தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் காணப்படும் பள்ளங்களால், இயற்கையான ஊற்று நீரின் அளவும் குறைந்துவிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரத்தில் ஐந்தாண் டுகளுக்கு முன்பு 13 குவாரிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டது. ராட்சத இயந்திரங்களின் பேராசைக் கரங்கள் தாய் மடியைக் கிழித்தன. ஆயிரமாயிரம் லாரிகளில் தாய் மண்ணை பிற மாநிலங்களில் விற்றார்கள். இதனைத் தடுக்க நதியைப் போலவே திராணியற்று தவித்தார்கள் மக்கள். ஆற்று நீரோட்டம் மாறிப்போனது. மேலும் படிக்க..

மாடி தோட்டம் டிப்ஸ்

தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு! தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மதுபாலன் மற்றும் கோவை மாடித் தோட்ட வல்லுனர், ‘தோட்டம்’ சிவா கூறுகிறார்:                 காய்கறி தோட்டம் அமைப்போர், முதலில் கவனிக்க வேண்டியது, இடவசதி. மொட்டை மாடியில் அதிகளவு வெயில் அடிக்கிற மாதிரி இருந்தால், ‘ஷேடு நெட்’ எனப்படுகிற வலையைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம். மாடியில் தோட்டம் அமைக்கும்போது, தரையில், ‘ஒயிட் வாட்டர் புரூப் பெயின்ட்’ மேலும் படிக்க..

கேரள எல்லையில் பால் சோதனை

தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பால் பொருட்களை ஆய்வு செய்வதற்காக, மீனாட்சிபுரத்தில், கேரள பால் வளத்துறையினர், தற்காலிக முகாம் அமைத்து, பணிகளை துவங்கியுள்ளனர். தமிழகத்திலிருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் பால், கேரளா எடுத்துச் செல்லப்படுகிறது. இதில், கலப்படம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆய்வு செய்வதற்கு, அம்மாநில பால் வளத்துறையினர் முடிவு செய்தனர். இதற்கென, கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து கேரளா செல்லும் வழியில், அம்மாநில எல்லையில், மீனாட்சிபுரம் வணிகவரித் துறை சோதனைச் சாவடி அருகில், பால் பரிசோதனைக் மேலும் படிக்க..

பொருளாதார நிபுணர்களும் மழையும்

வேளாண்மை வளர ஆலோசனை வேண்டும் என்று தொடர்ந்து நமது பிரதமர் பேசிவருகிறார். ஏராளமான பரிந்துரைகள் உள்ளன. அவற்றை உளத் தூய்மையோடு அவர் அணுக வேண்டும். குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறுபவர்களில் பலர் வேளாண்மை ஆலோசகர்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்கின்றனர். இவர்களுடைய ஆலோசனை களுக்கு மட்டும் காது கொடுக்காமல், உழவர் நலன் சார்ந்த செயல்பாட்டாளர்கள், உழவர் அமைப்புகள் ஆகியோரின் கருத்துகளைக் காதுகொடுத்துக் கேட்பது மட்டுமல்லாது, உண்மையானவற்றைக் கண்கொண்டு பார்க்கவும் வேண்டும். மழையே தீர்மானிக்கிறது எடுத்துக்காட்டாக, இந்தியாவின் மேலும் படிக்க..

மல்யுத்த வீரர்கள் உண்ட மிளகு சம்பா

பாரம்பரிய நெல் ரகங்களில் சற்றே வித்தியாசமாக உருண்டை வடிவத்தில் இருக்கும் நெல் ரகம் மிளகு சம்பா. பார்ப்பதற்கு மிளகுபோல இருப்பதால், மிளகு சம்பா என அழைக்கப்படுகிறது. வெள்ளை நிறம் கொண்ட சன்ன ரக அரிசியைக் கொண்ட இது, 130-நாள் வயதுடையது. இந்த ரக நெல் மேடான பகுதியில் விளையக்கூடியது. நேரடி விதைப்புக்கும் நடவு முறைக்கும் ஏற்றது. எந்த ரசாயன உரங்களும் தேவையில்லை. இந்த ரகம் தமிழகத்தில் பரவலாகப் பயிர் செய்யப்பட்டுவருகிறது. ஒற்றை நாற்று முறையில் மேலாக நடவு மேலும் படிக்க..

காய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம்

காரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் காய்கறி, மற்றும் இயற்கை கழிவுகளை மட்க வைத்து மண்புழு உரமாக்கி அதே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளத்தூர் பேரூராட்சியில் 200 வணிக நிறுவனங்கள் உள்ளன. வெள்ளிதோறும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.25 டன் குப்பை சேகரமாகிறது. இதில் மட்ககூடிய கழிவு 400 கிலோ. எளிதில் மட்கக்கூடிய காய்கறி கழிவு, இலை கழிவுகளை தனியாக சேகரித்து அவற்றை இயற்கை உரமாக மாற்றி சந்தை மட்டுமன்றி விவசாயிகளுக்கும் நேரடியாக மேலும் படிக்க..

தமிழகத்திற்கு தேவை மயில் சரணாலயங்கள்

முருக பெருமானுக்கு வாகனமும் தமிழகத்தில் பல மலைகளில் காணப்படும் தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமான  மயில்களுக்கு போதாத காலம். திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு, தினமும் 87 ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றில் வடமாநிலங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சரக்கு ரயில் கள் மூலம் அதிகளவில் வருகின் றன. இந்த ரயில்களில் கொண்டு வரப்படும் கோதுமை, அரிசி, மதுரை- திண்டுக்கல் இடையேயான மலைப்பகுதி தண்டவாளத்தில் வழிநெடுக சிதறுகின்றன. திண்டுக்கல் மேலும் படிக்க..

ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை வளர்ப்பது எப்படி?

மிளகாய் விவசாயத்தில் வீரிய ஓட்டு மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே நல்ல மகசூல் பெற முடியும் எனவும், அதைச் செயல்படுத்தும் முறை குறித்தும் வேளாண் துறையினர் விளக்கமளித்தனர்.                   மேட்டுப்பாத்தி நாற்றங்கால்: மேட்டுப்பாத்திகளை ஓரளவு நிழல்படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும். மேட்டுப்பாத்தியின் அகலம் ஒரு மீட்டர் வரையும், நீளம் 3 மீட்டர் வரையும், மேலும் படிக்க..

பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி?

பார்த்தீனியம் செடியை குவித்து மண்புழு உரம் தயாரிக்கலாம் அல்லது இயற்கை களைக்கொல்லி தயாரித்து கட்டுப்படுத்தலாம் என, 15 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப்பின் இயற்கை விவசாயி மதுராமகிருஷ்ணன் முடிவை தெளிவுபடுத்தியுள்ளார். பார்த்தீனியம் இன்று வரை வேண்டாத பொருளாகவே மதிக்கப்படுகிறது. இது உடலில் பட்டால் அலர்ஜியாகி விடுகிறது. இதிலிருந்து பரவும் ஒருவித பவுடர் உடல் முழுவதும் பட்டு தோலில் வீக்கம் உண்டாகி, தடிப்பும், அரிப்பும் ஏற்படுகிறது. கம்பளி பூச்சி உடலில் பட்டது போன்று எரிச்சல் உண்டாகிறது. இந்த ஒவ்வாமை ஒரு மேலும் படிக்க..

உணவுப்பொருட்களில் நச்சு கண்டறிய ஆய்வுக்கூடம்

வெளி மாநிலங்களிலிருந்து  (அதாவது தமிழ்நாட்டில் இருந்து )வரும் உணவு பொருட்களில், ‘நச்சு இருக்கிறதா’ என்று கண்டறிய, கேரள உணவு பாதுகாப்புத்துறையினர் அமைத்துள்ள தாற்காலிக ஆய்வுக்கூடம், வாளையார் மற்றும் மீனாட்சிபுரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. கேரளாவில், ஆகஸ்ட் 28ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வெளி மாநிலங்களில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வருவது அதிகரித்துள்ளது. அவற்றில், ‘நச்சு கலந்திருக்கிறதா’ என்று ஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநில உணவுப் பாதுகாப்புத்துறையினர், எல்லையில் அமைந்துள்ள வாளையார், மீனாட்சிபுரம் மேலும் படிக்க..

திருச்சியில் இயற்கை வேளாண் திருவிழா

வளம் குன்றாத விவசாயத்துக்கு, இயற்கை வேளாண்மையே தீர்வு என்ற கருத்து உலகம் முழுவதும் பரவலாகக் கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சூழலில் தேசிய அளவிலும் தமிழகத்திலும் பாரம்பரியமான இயற்கை வேளாண் முறைகளைப் பரவச் செய்வது, ஒரு மக்கள் இயக்கமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘நிலமும் வளமும்’ மற்றும் ‘கிரியேட் – நமது நெல்லைக் காப்போம்’ இயக்கம் இணைந்து இயற்கை வேளாண்மைத் திருவிழாவை திருச்சியில் 2015 ஆகஸ்ட் 29-ம் தேதி (சனிக்கிழமை) நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன. மேலும் படிக்க..

கொழுப்பைக் குறைக்கும் பாரம்பரிய நெல் பிசினி

பாரம்பரிய நெல் ரகங்களில் நன்கு ஒட்டும் பசைத்தன்மை கொண்ட ரகம் பிசினி. நூற்றி இருபது நாள் வயதுடையது. மோட்டா ரகம், சிவப்பு நிற அரிசி கொண்டது. ஐந்தடி உயரம் வரை வளரும் தன்மையுள்ளது. எல்லா ரக மண்ணுக்கும் ஏற்றது. வறட்சி, வெள்ளத்தைத் தாங்கி மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு 28 மூட்டை கிடைக்கும். நேரடி விதைப்பு, நடவு முறைக்கு ஏற்ற ரகம். இயற்கை எரு மட்டும் இட்டால் போதும். பூச்சி தாக்குதல் இருக்காது. எளிமையாகச் சாகுபடி செய்யலாம். உளுந்து மேலும் படிக்க..

காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை

இந்தியாவில்  காய்கறி உற்பத்தி உலகளவில் 2 ம் இடத்தில் உள்ளது. சாகுபடி பரப்பு குறைவு, நுண்ணூட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை தடுக்க பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி கழகம் சிறப்பு நுண்ணூட்ட கலவையை கண்டுபிடித்துள்ளது. இதனை காந்திகிராம வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், குடைமிளகாய் பயிர்களுக்கு 5 கிராம், மிளகாய், கத்தரி, வெங்காயத்திற்கு 3 கிராம், பீன்ஸ், தட்டைபயறு, வெண்டைக்கு 2 கிராம், பீர்க்கு, பாகல், மேலும் படிக்க..

திருந்திய நெல் சாகுபடி போட்டி

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று ரூ.5 லட்சம் பரிசு பெறலாம் என, வேளாண்மை இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் கூறியது: திருந்திய நெல் சாகுபடியில் மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு முதலிடம் பெறுவோர் தேர்வு செய்யப்படுவர். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, பதிவுக் கட்டணமாக ரூ. மேலும் படிக்க..

புடலங்காய் சாகுபடி

தமிழகத்தில் எளிதாக பயிராகும் காய் வகைகளில், கொடி வகைத் தாவரமான புடலங்காய் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் பெறலாம் என தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர். இது வேகமாக வளரக் கூடியதும், அதிக மகசூல் தரும் பயிராகும்.                  மண், தட்ப வெட்ப நிலை: புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி மேலும் படிக்க..

ஆபத்தாக மாறும் ஆன்ட்டிபயாட்டிக்

இந்தியாவில் சாப்பிடப்படும் இறைச்சியில், 50 சதவீதம் கோழி இறைச்சிதான். கறிக்கோழி இறைச்சித் தொழில் ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ந்துவருகிறது. ஆனால், அது எல்லாமே சத்தானதாக, நோயைத் தராத ஒன்றாக இருக்கிறதா? பிராய்லர் சிக்கன் எனப்படும் கறிக்கோழி, இன்றைக்குத் தொழில்முறையாக உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்களின் உற்பத்தி முறை சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. உணவு உற்பத்தித் தொழில் லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட துறையாகிவிட்டது. அதனால் லாபத்தைப் பெருக்க, பாதுகாப்பற்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நுகர்வோரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. மேலும் படிக்க..

அரிதான பொருளாகும் நீர்

உலகின் நீரில் 97 சதவீதம் கடலில் உள்ள உப்பு நீர் தான் உள்ளது. மீதமுள்ள 3 சதவீதம் மட்டுமே நன்னீர். நல்ல நீரில் 68.7 சதவீதம் பனிமலைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் உள்ளன. 30.1 சதவீதம் நிலத்தடி நீர். மீதமுள்ள 1.2 சதவீதம் மட்டுமே ஆறு, ஏரி, குளம் மற்றும் அணைகளில் உள்ளன. வெப்பமயமாதல், காடுகளை அழித்தல் போன்ற இயற்கைக்கு எதிரான செயலால், நீர் ஆதாரம் மிகவும் கெட்டு விட்டது. உலகில் உள்ள பல பெரிய ஆறுகள் தற்போது அழியும் மேலும் படிக்க..

தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு!

தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மதுபாலன் மற்றும் கோவை மாடித் தோட்ட வல்லுனர், ‘தோட்டம்’ சிவா கூறுகிறார்: காய்கறி தோட்டம் அமைப்போர், முதலில் கவனிக்க வேண்டியது, இடவசதி. மொட்டை மாடியில் அதிகளவு வெயில் அடிக்கிற மாதிரி இருந்தால், ‘ஷேடு நெட்’ எனப்படுகிற வலையைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம். மாடியில் தோட்டம் அமைக்கும்போது, தரையில், ‘ஒயிட் வாட்டர் புரூப் பெயின்ட்’ அடிப்பது நல்லது. முடிந்தளவு புதிய பொருட்களை வாங்காமல், வீட்டிலிருக்கும் மண் தொட்டி, பானை, வாட்டர் பாட்டில், மேலும் படிக்க..

ரசாயன உரமா விஷமா?

முதன் முதலாக ரசாயன உரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டபோது விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தொழு உரம், தழையுரம், சாண உரம் என்று தேடியலைய வேண்டியதில்லை. காசைக் கொடுத்தால் விதவிதமான ரசாயன உர மூட்டைகள் வீட்டில் வந்து இறங்கிவிடும். எந்தப் பயிருக்கு, எந்த உரத்தை எவ்வளவு இட வேண்டும் என்பதையெல்லாம் விவசாயிகளுக்குப் பாடம் நடத்தின உர நிறுவனங்கள். முதல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு விளைச்சல் அபரிமிதமாகத்தான் இருந்தது. மேலும் மேலும் அதிக அளவில் ரசாயன உரங்களைப் போட்டால் இன்னும் மேலும் படிக்க..

எம்.எஸ்.சுவாமிநாதனும் பசுமை புரட்சியும்

எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள 90 வயதிலும் விவசாயத்தில் ஊக்கத்துடன் ஈடுபாடோடு இருப்பதை பற்றி  எழுதியிருந்தோம்.அதற்கு பதிலாக சிலர்  அவரின் பசுமை புரட்சியை பற்றியும் அதனால் விளைந்த கேடுகளை பற்றியும் குறை கூறி எழுதி இருந்தனர். இதை பற்றி நாம் கருத்து சொல்வதற்கு முன் 1960 களில் இந்தியா எப்படி இருந்தது என்பதை  நினைவு கூற  வேண்டும் நம்முடைய உற்பத்தியும் தேவைக்கும் இடையே பெரிய  இடைவெளி. வெளி நாடுகளில் இருந்து கப்பல் மூலம் அரிசியும் கோதுமையும் இறக்குமதி. அமெரிக்கா நன்மை மேலும் படிக்க..

மாஞ்செடி உற்பத்தி: பலருக்கு வேலை வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூரில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்வதன் மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் மாஞ்செடிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. போச்சம்பள்ளி, சந்தூர், பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் படிக்க..

கீரையில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம்

முழு நேரமும் நிலத்துடன் சேர்ந்து உழைத்து, மண்ணை நேசித்தால் உரிய பலன் கிடைக்கும் என்கிறார் கீரை சாகுபடியில் சாதிக்கும் உடுமலை முன்னாள் ஆசிரியர் விவசாயி த. பிரபாகரன் (29). திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலையில் உள்ள கிளுவன்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் பிரபாகரனும், அவரது மனைவியும் இன்றைக்கு முழு நேர விவசாயிகள். தங்களுக்கு இருக்கும் சிறிய நிலத்துடன், கூடுதல் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கீரை விளைவித்து வருகின்றனர். விவசாயம் நம்பகமானது மேலும் படிக்க..

மீன் கழிவிலிருந்து பூச்சிவிரட்டி, பழக் கழிவிலிருந்து இயற்கை உரம்

கழிவாக வீசப்படும் மீன், பழங்களிலிருந்து பூச்சிவிரட்டி, இயற்கை உரம் தயாரித்திருக்கிறார் தேனி மாவட்ட விவசாயி.தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். விவசாயிகள் பலர் அதிக மகசூல் கிடைக்கும் என்பதற்காகச் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சில விவசாயிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகளில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். சில நேரம் இயற்கை உரத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு தேவாரத்தைச் சேர்ந்த ஆர். நவநிதி என்னும் பட்டதாரி மேலும் படிக்க..

கொடைக்கானல் 'கலக்கத்தை' பரப்பும் பெண்!

கொடைக்கானலில் பாதரசத்தால் பகீர் என்ற தலைப்பில் எப்படி பன்னாட்டு நிறுவனமான யுனிலீவர் கொடைக்கானலில் பாதரச மாசை பரப்பி உள்ளனர் என்று முன்பே படித்து உள்ளோம். அரசியல், அதிகார மட்டத்திலான செல்வாக்குகளின் துணையுடன், அப்பாவி மக்களுக்கு இழைத்த துரோகத்துக்கு ‘பதில்’ சொல்வதில் இருந்து சிலர் போக்குக் காட்டலாம்… ஆனால், இணையத்தில் வெறும் 2 நிமிட வீடியோ பதிவால் உருவான போக்கு (Trending), அந்தச் சிலரை உலுக்குவது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறது, அட்டகாசமான ஒற்றைப் பாடல் வீடியோ அந்த வீடியோ மேலும் படிக்க..

இறால் பண்ணையும்… இயற்கை சீரழிவும்!

கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக கடல், நிலம், உப்பு வளத்தை விற்று ( அழித்து ) செயற்கை இறால்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது மரக்காணம் கடற்கரை. அசைவ உணவுப் பிரியர்களின் பட்டியலில், மீன் வகையை சேர்ந்த இறாலுக்கு முக்கிய இடம் உண்டு. சிறுவர் முதற்கொண்டு இறாலை விரும்பி உண்ணுவதற்கு அதன் வடிவமும், நிறமும், தனிச்சுவையும்தான் காரணம். உள்நாட்டு விற்பனை மட்டுமின்று வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படு வதன் மூலமும், பெரும் அந்நிய செலாவணியை இறால் ஈட்டித் தந்துக்கொண்டிருக்குறது. தமிழகத்தில் மேலும் படிக்க..

நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்

நிலக்கடலையின் மகசூலை குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் நோய்களினால் ஏற்படும் சேதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றில் பூஞ்சாணங்கள், நச்சுக்கிருமிகளால் ஏற்படும் நோய்களே அதிக சேதத்தை விளைவிக்கும். இப்பயிரைத் தாக்கும் நோய்களில் சில இலைகளில் தோன்றி சேதம் ஏற்படுத்தக் கூடியவை. சில வகை மண்வழிப் பரவும் தன்மை கொண்டவை. தற்போது இந்த வகையான மண் மூலம் பரவும் நோய்களைப் பற்றியும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் அறிந்து கொள்வது நல்லது.               மேலும் படிக்க..

சூரிய மின் சக்தி மூலமாக லாபகரமான விவசாயம்!

சூரிய மின் சக்தி மூலமாக கடலூர் விவசாயி லாபகரமான முறையில் விவசாயப்பணியில் ஈடுபட்டு வருகிறார். லாபகரமான தொழிலாக இல்லாததால் விவசாயப்பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமானவர்கள் அத்தொழிலிலிருந்து விலகி வருகின்றனர். விவசாயத்தின் தேவையை உணர்ந்த தமிழக அரசு, விவசாயிகள் லாபகரமான முறையில் விவசாயம் செய்திட பல்வேறு சலுகைத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக விவசாயப்பணிகளுக்கு இயற்கையான சூரிய ஒளியின் மூலம் இயங்கும் மின்மோட்டார் மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2014ஆம் மேலும் படிக்க..

இயற்கை உரம் பயன்படுத்துவோர் தமிழகத்தில் குறைவு!

இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் நர்சரிக்கு தேவையான தேங்காய் நார் தட்டுகளை தயாரிக்கும் கே.ரங்கசாமி கூறுகிறார்: பொள்ளாச்சி அருகில் உள்ள கோபி செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவன் நான். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் தோட்டக்கலை துறையில் எம்.எஸ்சி., படித்து முடித்தவுடன், ‘ஸ்பிக்’ நிறுவனத்தில் வேலை கிடைத்தது.உயிரி தொழில்நுட்ப பிரிவில், 11 ஆண்டுகள் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றேன். ஆந்திர விவசாயிகளுக்கு, ‘ஜிங்க் சல்பேட்’டின் தேவை இருப்பது தெரிந்து, தமிழகத்தில் இருந்து அதை வாங்கி, ராயலசீமாவில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.அத்துடன், இயற்கை மேலும் படிக்க..

பூச்சிகளை அழிக்கும் சோலார் விளக்குப் பொறி!

கெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்க உதவும் சோலார் விளக்குப் பொறி குறித்து விளக்கும், புதுவை சாப்ஸ் வேளாண் நிறுவனர் அப்துல்காதர் கூறுகிறார்: வயலில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக, ரசாயனமருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகக் கண்டறிந்த முறை தான், இந்த சோலார் விளக்குப் பொறி.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவி இயற்கைமுறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது. முற்றிலும் சூரிய ஒளியில், தானியங்கி முறையில்இந்த சோலார் விளக்குப் பொறியை வடிவமைத்து உள்ளோம்.அதிலும், தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் அழிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்என்பதற்காக, மேலும் படிக்க..

முருங்கை சாகுபடி!

 தானிய பயிர், பணப்பயிர், சாகுபடிகளைக் காட்டிலும் அதிக லாபத்தை விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடியது நிச்சயம் தோட்டக் கலையின் கீழ் வரும் காய்கறி சாகுபடிதான். காய்கறி சாகுபடியில் விற்பனை விலை எனும் ஒரே ஒரு இடத்தில்மட்டும்தான் விவசாயிகள் பெரும் இன்னலையும் ஏற்ற இறக்கத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது. மொரிங்கா ஒலிபெரா (Moringa Olefera) எனும் தாவரவியல் பெயருடைய முருங்கை ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drumstick) என்று அழைக்கப்படுகின்றது. தமிழ்ப் பெயரும், ஆங்கிலப்பெயரும் இரண்டுமே காரணப் பெயர்கள்தான். முருங்கை மரத்தின் இலைகள் மிகவும் மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் வகை – உவர்முண்டான்

தமிழகத்தில் பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் பல பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், அந்தந்தப் பகுதி மண்ணுக்கேற்ப பாரம்பரிய நெல் ரகங்களும் காலங்காலமாக சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் உவர் தன்மைகொண்ட நிலங்களிலும் கடலோர உவர்ப்பு நிலங்களிலும் நம் முன்னோரால் சாகுபடி செய்யப்பட்ட நெல் ரகம் உவர்முண்டான். நேரடி விதைப்பு டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது மற்றப் பகுதி உவர் நிலங்களில் சாகுபடி செய்யும் நெல் வகை இது. சிவப்பு நெல், சிவப்பு அரிசி, நூற்றி முப்பது மேலும் படிக்க..

எம்.எஸ்.சுவாமிநாதன் 90!

இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் (M.S.Swaminathan) பிறந்த தினம் (ஆகஸ்ட் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: கும்பகோணத்தில் 1925-ல் பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்த தும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தந்தை மருத்துவர். இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சம் இவரை மிகவும் பாதித்தது. வேளாண் துறையில் ஆராய்ச்சி மேலும் படிக்க..

நாட்டுக்கோழி குஞ்சுகள் பராமரிப்பு இலவசப் பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகளின் இறப்பைக் கட்டுப்படுத்துதல், பராமரிப்பு முறைகள் குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இதுகுறித்து பயிற்சி முகாமில் நாட்டுக்கோழி ரகங்கள், குஞ்சு பொரிக்கும் முறை,  குஞ்சு பொரிப்பான்களின் பயன்கள், வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள் குறித்த பயிற்சி நடத்தப்பட உள்ளது. மேலும், இந்தப் பயிற்சியில் நாட்டுக்கோழி குஞ்சுகளைத் தாக்கும் பல்வேறு நோய்கள், அதன் அறிகுறிகள், மேலும் படிக்க..

இலவச மூலிகை பயிற்சி முகாம்

புதுவை சுற்றுச்சூழல் கல்விக் கழகம் சார்பில் இலவச மூலிகை பயிற்சி முகாம் வரும் 2015 ஆகஸ்ட் 16ஆம் தேதி மேரி உழவர்கரை அய்யனார் தெருவில் மூலிகை தோட்ட வளாகத்தில் நடக்கிறது. சுற்றுச்சூழல் கல்விக் கழகம், சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் மூலிகைகளின் பயிர்கள், தாவரவியல் பெயர்கள், பயன்கள், பயன்படுத்தும் முறைகள், செயல் விளக்கங்கள் ஆகியன பற்றிய வகுப்புகள், மூலிகை தோட்டத்திலேயே நடத்தப்படும். மேலும் விதைகள் சேகரிப்பு, நாற்றங்கால் உருவாக்கம், மூலிகை தோட்டம், மேலும் படிக்க..

கேரள அரசின் கெடுபிடியால் இயற்கை உரத்திற்கு கிராக்கி

தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் நச்சுத் தன்மை அதிகம் என கூறி மாநிலத்திற்குள் அனுமதிப்பதில் கேரள அரசு கெடுபிடி செய்து வருகிறது. அதிக நச்சு தன்மை இல்லை என ஆய்வு மூலம் தெரிவித்தாலும் அதை கேரளா ஏற்க மறுக்கிறது.நஞ்சில்லா காய்கறி சாகுபடி செய்ய இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள், அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் உரம், பூச்சி மருந்து பயன்படுத்துவதை தவிருங்கள் என விவசாயிகளிடம் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்துகின்றனர். அதன்படி தேனி மாவட்ட விவசாயிகள் தற்போது தோட்டம், மேலும் படிக்க..

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை

மீத்தேன் திட்டமென்ற பூதம் எப்படி தஞ்சை மாவட்டத்தை அழிக்கும் என்று முன்பே படித்தோம். இதை எதிர்த்து  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர பட்டுள்ள வழக்கில் இடை கால தடை கொடுக்க பட்டு  உள்ளது.இது ஒரு ஆரம்பமே. நீண்ட வழக்குக்கு நாம் தயார் செய்து கொள்ள .வேண்டும். இதை பற்றிய செய்தி இதோ… காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையிலுள்ள தேசிய பசுமைத் மேலும் படிக்க..

கம்பு பயிரில் அதிக லாபத்திற்கு எளிய வழிகள்

தரமான கம்பு உற்பத்தி முறைகள் குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். கம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரி ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை ஆகும். மானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஏற்றவை ஆகும். கே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள் ஆகும். மானாவாரியாக இருந்தால் எக்டேருக்கு 5 கிலோ விதை மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் வானம் பார்த்த விவசாயமும்

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பற்றிய சர்ச்சைகள் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். ஒரு பக்கம் மரபணு மாற்றப்பட்ட பருத்தி மூலம் ரசாயன  பூச்சி கொல்லி உபயோகம் குறைந்து, விவசாயிகள் லாபம் அதிகம் என்ற  வாதம்.இன்னொரு பக்கம் விதர்பாவில் அடிக்கடி நடக்கும் தற்கொலைகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தி மூலம் வரும் நஷ்டமே காரணம் என்று இந்த சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்க இங்கிலாந்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் விதர்பாவில் ஆராய்ச்சி செய்து Nature என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியுட்டுள்ள கட்டுரையில் மேலும் படிக்க..

பூமி இவ்வளவு அழகா?

பருவகால மாறுதல்களைக் கண் காணிப்பதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவால் அனுப்பப்பட்ட ‘டீப் ஸ்பேஸ் கிளைமேட் அப்சர் வேடரி’ (டிஎஸ்சிஓவிஆர்) செயற்கைக்கோள் விண்வெளியில் 16 லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்து எடுத்த பூமியின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. டிஎஸ்சிஓவிஆர் எடுத்து அனுப்பிய முதல் புகைப்படம் இதுவாகும். டிஎஸ்சிஓவிஆர் செயற்கைக்கோளில் எர்த் பாலிகுரோமேடிக் இமேஜிங் கேமரா (Earth Polychromatic Imaging Camera) (எபிக்) பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் கடந்த 6-ம் தேதி பூமியைப் புகைப்படம் எடுத்து மேலும் படிக்க..

புலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு நிரூபணம்

புலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ‘புலிகளை பாதுகாத்தால், அணைகள், ஆறு களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். மழையளவு அதிகரிக்கும்’ என வன அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் தேசிய விலங்கு புலி. உலகில் முன்பு 8 வகையான புலிகள் இருந்துள்ளன. அவற்றில் தற்போது எஞ்சியவை 5 இனங்கள் மட்டுமே. இந்த இனங்களில் தற்போது 4 ஆயிரத்து 600 மேலும் படிக்க..

சர்வதேச பூர்வகுடிகள் தினம்

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி ‘சர்வதேச பூர்வகுடிகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. நுகர்வுக் கலாசாரம், சுரண்டல், நோய்கள், பொருளாதார வளர்ச்சியின் மீதான அதீத மோகம் போன்ற பல காரணங்களால் உலகம் முழுவதிலும் இருக்கும் பல பூர்வகுடி இனங்கள் வேகமாக அழிந்துவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆஸ்திரேலியப் பூர்வகுடி இனங்கள். வெள்ளையர்களால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளான அந்தப் பூர்வகுடி இனங்களின் அழிவு குறித்து சமீபத்தில் ஒரு புத்தகம் வந்துள்ளது. உலகெங்கும் பூர்வகுடிகள் தினம் கடைப்பிடிக்கப்படும் இந்த தருணத்தில், மேலும் படிக்க..

அதிக வருவாய் தரும் நாட்டு வாழை

ரசாயன நச்சு உரங்கள் கலக்காமல் இயற்கை உரங்கள் கொண்டு வாழை சாகுபடி செய்கிறார் திருத்தங்கல் விவசாயி திருவேங்கட ராமானுஜம். அவர் கூறியதாவது:               3 ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு 1100 வீதம் 3,300 வாழை கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறேன். பாரம்பரிய வாழையான நாட்டு வாழைக்கு தமிழகத்தில் என்றுமே மவுசு உண்டு. ஜீரணதி, வைட்டமின்கள் நிறைந்த நாட்டு வாழையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த வாழையின் மேலும் படிக்க..

மண்புழு நண்பன் சுல்தான் இஸ்மாயில் நேர்காணல்

மண்புழு என்றால் இளக்காரமாகப் பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதை மாற்றி மண்புழுக்களின் மீது மக்களுக்கு மரியாதை பிறக்கச் செய்த மனிதர் அவர். “நான் இருக்கும் வரை மண்புழுக்களுக்கு இடையே எனது வாழ்க்கை. நான் இறந்த பிறகு என் மீது மண்புழுக்களின் வாழ்க்கை!” – இதுவே, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறும் எளிய வாழ்க்கைத் தத்துவம். அவரை சந்தித்து உரையாடியதில் இருந்து… இந்த ஆண்டு ‘சர்வதேச மண் வள’ ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் முக்கியத்துவம் என்ன? மேலும் படிக்க..

பசுந்தீவனம் உற்பத்தி திறன் பெருக்குதல் பயிற்சி

காஞ்சிபுரம் ஏனாத்தூர் உழவர் பயிற்சி மையத்தில் வருகிற 10-ஆம் தேதி ஒருங்கிணைந்த மண் வள மேம்பாடு மூலம் பசுந்தீவனம், கால்நடை உற்பத்தி திறனை பெருக்குதல் குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து பயிற்சி மையத்தின் தலைவர் வீரமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உழவர் பயிற்சி மையம் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் இயங்கி வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த மண் வள மேம்பாடு மூலம் பசுந்தீவனம், கால்நடை உற்பத்தி திறனைப் மேலும் படிக்க..

கருவேல மரம் என்ற பூதம்

இந்த கருவேல மரம் மனிதர்கள்  மட்டும் இல்லாமல் மிருகங்களையும் அழித்து வருவதை படித்தோம் தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு குறைந்துவருவதாக வேளாண்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ராம நாதபுரம், விருதுநகர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக ளவிலும், திண்டுக்கல், தஞ்சாவூர், தருமபுரி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மற்ற மேலும் படிக்க..

காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்

சந்தையில் வாங்கும் காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா என்பதை மதுரை விவசாய கல்லுாரி ஆய்வு மையத்தில் கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ளலாம்.விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளில் நஞ்சுள்ளதா என்பதை கண்டறிய இக்கல்லுாரியில் ரூ.45 லட்சம் செலவில் இரண்டு கருவிகள் நிறுவப்பட்டன. இதில் கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறிகளை தண்ணீரில் கழுவி அந்த தண்ணீரில் எஞ்சியுள்ள நஞ்சு கழிவுகளை கண்டறிவது ஒருமுறை. கிழங்கு வகைகள், பீட்ரூட், கேரட், காலிபிளவரை நசுக்கி அதன் உட்புறத்தில் நஞ்சு ஊடுருவியுள்ளதா என்பதை கண்டறிவது இன்னொரு மேலும் படிக்க..

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை

மீத்தேன் திட்டமென்ற பூதம் எப்படி தஞ்சை மாவட்டத்தை அழிக்கும் என்று முன்பே படித்தோம். இதை எதிர்த்து  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர பட்டுள்ள வழக்கில் இடை கால தடை கொடுக்க பட்டு  உள்ளது.இது ஒரு ஆரம்பமே. நீண்ட வழக்குக்கு நாம் தயார் செய்து கொள்ள .வேண்டும். இதை பற்றிய செய்தி இதோ… காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையிலுள்ள தேசிய பசுமைத் மேலும் படிக்க..

நெல் திருவிழா மற்றும் கண்காட்சி அழைப்பு

எங்கள் பகுதியில் உள்ள உழவர்கள் சேர்ந்து கடலூரில் “அன்னை தேசிய வேளாண்மை திட்ட விவசாயிகள் சங்கம்” என்ற பெயரில் சங்கம் வைத்து விவசாய தொண்டு செய்து வருகிறோம்… வரும் 2015 ஆகஸ்ட் 6-ம் தேதி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குனர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் “நெல் திருவிழா மற்றும் கண்காட்சி” வரகால்பட்டில் நடைபெற உள்ளது.. அதற்கான அழைப்பிதழ்அனுப்ப உள்ளோம்.. எந்த விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்… அல்லது மெயில் id தெரிவிக்கவும்….தங்கள் இதழில் முன் கூட்டியே மேலும் படிக்க..

நன்மை தரும் பூச்சிகளை உற்பத்தி செய்து பயிர்களை காக்கும் விவசாயி

விவசாயத்தில் நோய் பாதிப்பு, பூச்சி தாக்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்துகின்றனர். ஆனால் பூச்சி மருந்து பயன்படுத்திய சில நாட்களிலேயே மருந்து வீரியம் குறைந்து நோய் பரப்பும் பூச்சிகள் அதிகரித்துவிடுகிறது. பயிர்களை பாதுகாக்க முடியவில்லை என விவசாயிகள் புலம்பும் நிலை உள்ளது. குறிப்பாக பயிர்களில் தண்டுபுழு நோய் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் 40 சதவீத மகசூல் குறையும். இப் பாதிப்பில் இருந்து பயிர்களை காக்க இயற்கை வேளாண் முறையில், நோய் ஏற்படுத்தும் மேலும் படிக்க..

புரதம் தேவையை அதிகரிக்க பயறு வகை பயிர் சாகுபடி

“பயறு வகைப்பயிர்களை தனிப்பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ, ஆடிப்பட்டத்தில் பயிரிட்டு, நமக்குத் தேவையான புரதத் தேவையை அளிக்கும் இப்பயிர்களின் மூலம் நல்ல வருவாய் பெறலாம்’ என, மோகனூர் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: பயறுவகைப் பயிர்கள், நம் உடலுக்கு தேவையான புரதத்தேவையை அளிப்பதில் முன்னிலை வகிக்கிறது. பயறுவகை பயிர்கள் எல்லாவிதமான மண் மற்றும் தட்பவெப்பநிலைகளையும் தாங்கி வளரும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் பயிறுவகைப் பயிர்கள் ஊடுபயிராகவே பயிரிடப்படுகிறது.நெல் வயலில் வரப்பு ஓரங்களிலும், மேலும் படிக்க..

இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி

மசினகுடி பகுதியில் இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தற்போது உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள மலை காய்கறிகள் அறுவடைக்கு பின்னர் மேட்டுப்பாளையம், ஊட்டி பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள். அங்கிருந்து வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மசினகுடி மற்றும் வாழைத்தோட்டம் பகுதியில் சில விவசாயிகள் மேலும் படிக்க..

அழுகிய இறைச்சியும் பிணந்தின்னிக் கழுகும்

இறந்து அழுகிப் போன இறைச்சியை, நோய் வந்த உயிரினங்களின் இறைச்சியைச் சாப்பிட்டுப் பிணந்தின்னிக் கழுகுகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? அவை நோயால் தாக்கப்படாதா? நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள் பாக்டீரியாக்கள்தான் இறந்த உடல்களை மக்கிப்போக வைக்கின்றன. அப்போது அவை வெளியிடும் வேதி நச்சுகள், பறவைகள், உயிரினங்களுக்கு ஆபத்தானவையாக இருக்கின்றன. ஆனால், பிணந்தின்னிக் கழுகுகளோ உயிரினங்களின் உடல் சிதைக்கப்படும்வரை காத்திருக்கின்றன. ஏனென்றால், அப்போது விலங்குகளின் வலுவான உடல் மேல்தோல் துளைக்கப்பட்டிருக்கும் என்பதால், உள்ளிருக்கும் இறைச்சியை எளிதாகச் சாப்பிட முடியும். அழுகிக்கொண்டிருக்கும் பிணத்தில் மேலும் படிக்க..

தனுஷ்கோடி கடற்கரையில் ஜெல்லி மீன்களால் ஆபத்து

தனுஷ்கோடி கடற்பகுதியில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதை தொடர்ந்து அங்கு கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடற்கரை சுற்றுலாவிற்கு புகழ்பெற்று விளங்குகிறது. இந்தக் கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்கள் என்றால் பயணிகளின் கூட்டம் இரண்டு மடங்காகி விடும். தனுஷ்கோடி கடல் அலைகளின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை. மேலும் இதன் மணல் படுகைகள் , சகதி மற்றும் பாறைகள் மேலும் படிக்க..

மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி

‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது. இதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் காடுகளை வளர்த்து மண் வளத்தை, உணவு வளத்தை மீட்டெடுத்ததற்காகவும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்ததற்காகவும் 1998-ம் ஆண்டில் இந்திரா மேலும் படிக்க..

விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் விதை நேர்த்தி

விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைகளை விதைநேர்த்தி செய்துகொள்வது அவசியம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.  மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு நடப்பு பருவத்துக்குத் தேவையான இடுபொருள்களான விதைநெல், உரங்கள் இருப்பு வைத்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், நடப்பு தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கும், எதிர்வரும் நாள்களில் கீழ்பவானி பாசனப் பகுதிக்கும் ஏற்ற நெல் ரகங்களான ஏ.எஸ்.டி-16, கோ-50, மேலும் படிக்க..

சிறுதானியப் பயிர் சாகுபடி பயிற்சி

சோளம், மக்காச்சோளம் மற்றும் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2015 ஆகஸ்ட், 5ம் தேதி காலை, 9 மணிக்கு நடக்கிறது.இது குறித்து, பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மோகன் வெளியிட்ட அறிக்கை: பயிற்சி முகாமில் சோளம், மக்காச்சோளம் மற்றும் சிறுதானியப்பயிர்கள் சாகுபடியின் முக்கியத்துவம், அதிலுள்ள சத்துக்கள், ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், பயிர் இடைவெளி, மண்பரிசோதனை, விதைக்கும் முறைகள், உர நிர்வாகம் (நுண்ணூட்ட மேலும் படிக்க..

தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீக்கள் வளர்ப்பு குறித்த தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பூச்சியியல் துறை சார்பில் மாதம் தோறும் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (2015 ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது. இதில், தேனீக்களின் இனங்களைக் கண்டறிதல், பெட்டிகளில் தேனீக்களை வளர்க்கும் முறை, நிர்வகிக்கும் முறை, தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிர்வாகம் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதில், கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பயிற்சி நாளன்று காலை 9 மணிக்கு  பூச்சியியல் மேலும் படிக்க..

கொய்யாவில் எலிகாது இலை நோய்

கொய்யாவில் ஏற்படும் எலிகாது இலைகளை கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் (பொ) பொ.மணிமொழி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பரவலாக மரத்தின் கிளைகளில் உள்ள இலைகள் பொன்மஞ்சள் நிறமாக மாற்றமடைந்து உதிர்ந்து விடுகின்றன. மேலும் ஒருசில கிளைகளில் வழக்கமான இலைகளை விட எலியின்காது போன்ற வடிவம் கொண்ட சிறுசிறு இலைகள் காணப்படுகின்றன. இதனால் மகசூல் குறைவு ஏற்பட்டு நாளடைவில் மேலும் படிக்க..

Android போனில் மொபைல் app

அன்ட்ராய்ட் போனில் பசுமை தமிழகம் படிக்க app டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். இது வரை டவுன்லோட் செய்துள்ள 5000+ பேர்கள் பசுமை தமிழகத்தை மொபைல் மூலம் படிக்கிறார்கள்! உங்களின் கருத்துகளை gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும் இந்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம். நன்றி! பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு… பசுமை தமிழகம் மொபைல் app பயன்படுத்துவோருக்கு …

மாடிதோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2 மாதத்தில் விண்ணப்பித்த 8 ஆயிரம் பேரில் இரண்டாயிரம் பேருக்கு காய்கறித் தோட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. நகரங்களில் வாழும் மக்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் வீட்டின் பின்புறம் தோட்டம் அமைக்க முடிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு வீட்டு மொட்டை மாடியில் சிறிய அளவில் தோட்டம் அமைத்து காய், கனி, மருந்து செடிகள், பூச்செடிகள், அலங்கார தாவரங்களை வளர்க்க வசதியாக மேலும் படிக்க..

திரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்

பொதுவாக தூள் முறை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் ஆனது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இத்தகைய துகள் முறை மூன்று மாதங்கள் மட்டுமே பயன்படுத்துவது மட்டுமல்லாமல் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு குழாய்களில் அடைபட்டு பாசனத்திற்கு தடையாய் அமைகிறது. இத்தகைய பிரச்னைகளுக்கு மாற்றாக திரவநிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திரவநிலையை நீண்டநாள் வைத்து பயன்படுத்தலாம்.மேலும் அதிக எண்ணிக்கை அளவில் இத்தகைய முறை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சொட்டுநீர்ப்பாசனத்தில் எளிய முறையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் மற்ற முறைகளைக் காட்டிலும் இத்தகைய திரவ நிலை மேலும் படிக்க..

மல்லிகை ஊடுபயிராக அவுரி மூலிகை செடி சாகுபடி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சோலைபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி “அவுரி’ என்னும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை ஊடு பயிராக பயிரிட்டு ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் வரை சத்தமில்லாமல் வருவாய் ஈட்டி வருகிறார்.அவர் கூறியதாவது:                   தூத்துக்குடி சென்னா என்றழைக்கப்படும் இந்த மூலிகைச் செடிகள் 90 நாட்கள் பயிராகும். ஆண்டுதோறும் பருவ மழையை ஒட்டி நவம்பர் மேலும் படிக்க..

மண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைந்து, அதிக மகசூல்

மண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைவதுடன் அதிக மகசூலும் பெற முடியும் என்று வேளாண் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.பெரம்பலூர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவரி பயிராக ஆடிப் பருவத்தில் பருத்தி பயிரிட மழையை எதிர் நோக்கி விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த தருணத்தில் அடியுரம் இடுவது என்பது மிகவும் அவசியம். பொதுவாக பயிர்களுக்கு அடியுரம் இடுவது இரண்டு வகைகளை சார்ந்திருக்கிறது. அவற்றில் ஒன்று மண் மேலும் படிக்க..

வெள்ளாடுகளில் நோய் மேலாண்மைப் பயிற்சி

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில், நோய் மேலாண்மை மற்றும் தடுப்பூசி முறைகள் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2015 ஆகஸ்ட் 4-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து, பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்தி: இந்த பயிற்சியில், செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில் ஏற்படும் பல்வேறு நோய்கள், அதன் தாக்கம் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கப்படும். மேலும், நோய்த் தாக்கம் ஏற்படும் கால அட்டவணைக்கு மேலும் படிக்க..

தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக பசுந்தாள்

தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பசுந்தாள் பயிரிடலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார். பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் சாகுபடி பரப்பளவு 13 ஆயிரத்து 718 ஹெக்டேர் ஆகும். மற்ற பயிர்களை விட தென்னை சாகுபடியில் அதிக வருமானம் கிடைக்கிறது. தென்னையில் தேங்காய் தவிர உரிமட்டை, சிரட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மூலமும் லாபம் பெறலாம். மற்ற பயிர்களை விட வேலை ஆட்கள் குறைவாக தேவைப்படுவது உள்பட பல்வேறு காரணங்களால் தென்னை சாகுபடியில் மேலும் படிக்க..

பவுடர் உயிர் உரங்களுக்கு பதிலாக திரவ உயிர் உரம்

பாலிதீன் பாக்கெட்டுகளில் வழங்கி வந்த, பவுடர் உயிர் உரங்களுக்கு பதிலாக, வேளாண் துறை நடப்பு ஆண்டில் இருந்து, திரவ வடிவில், உயிர் உரங்கள் (பயோ- பெர்டிலைசர்) விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, தீவிரம் காட்டி வருகிறது. இந்த திரவ உயிர் உரங்களின் பயன்பாட்டினால், ரசாயன உரங்களின் பயன்பாடு குறையும் என, விவசாயிகளிடம் வேளாண் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, 1.48 லட்சம் ஏக்கரில் நெல்லும்; 25,490 ஏக்கரில் வேர்க்கடலை; 10,139 ஏக்கரில் பயறு மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் ஆண்டு முழுவதும் திராட்சை!

இயற்கையின் எழில் கொஞ்சும் திண்டுக்கல் சிறுமலை அடிவாரம். அங்கே மூன்று ஏக்கரில் விரிந்து கிடக்கும் ஜானகிராமனின் திராட்சைத் தோட்டத்தில் ஆண்டு முழுவதும் திராட்சை கொத்துக்கொத்தாய் காய்த்துத் தொங்குகிறது. எல்லாம் இயற்கை விவசாயத்தில் விளைந்தவை. இயற்கை விவசாயத்தில் திராட்சையெல்லாம் சாத்தியமா? ’’மதுரையில் எங்களுக்கு ஜவுளி வியாபாரம். போதிய அளவுக்கு வருமானம் இருக்கு. எஞ்சிய காலத்துக்குச் சும்மா இருக்க வேண்டாமேன்னுதான் நண்பர் ஒருவரோட ஆலோசனைப்படி இந்தத் தோட்டத்த வாங்கினேன். ஏற்கெனவே, இங்கே ரசாயன உரம் பயன்படுத்தித் திராட்சை போட்டிருந்தாங்க. வருசத்துக்கு மேலும் படிக்க..

ஆயுள் பயிர் கறிவேப்பிலை!

கறிவேப்பிலை இல்லாமல் சமையல் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. சமையலுக்கு எப்போதும் தேடப்படும் கறிவேப்பிலையை ஒரு முறை மட்டும் நடவு செய்தால், தென்னையைப் போல் ஆயுள் முழுவதும் பயன்பெறலாம் என்கிறார் தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த விவசாயி கே.வீரமணி. பார்வைக்கு நல்லது நல்ல மணமும் மருத்துவக் குணமும் கொண்ட கறிவேப் பிலையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் உடலுக்குக் குளிர்ச்சி கிடைப் பதுடன், பார்வை குறைபாடு பிரச்சினை குறையும் என்பது மருத்துவர்கள் அறிவுரை. இதைத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துத் மேலும் படிக்க..

ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய

மழைக்காலங்களில் ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். செம்மறி ஆடுகளில் பெரும் இழப்பை உண்டு பண்ணும் நோய்களில் நீல நாக்கு நோய் முக்கியமாக கருதப்படுகிறது. இந்நோய் எல்லா ஆடுகளுக்கும் வரும் என்றாலும், செம்மறி ஆடுகளில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மழைக்காலங்களில் கூலிகாய்ட்ஸ் என்ற பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இந்நோய் தாக்குதல் ஏற்படுகிறது.  இந்நோய் ஒருவகை நச்சுயிரிகளால் செம்மறி ஆடுகளில் உருவாகிறது. மேலும் படிக்க..

கரும்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்

கரும்பில் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் முறைகளை சர்க்கரை ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை வெளியிட்டுள்ள அறிக்கை: வெப்பம் அதிகமாக இருப்பதால் கரும்பில் இளம் குருத்துப்புழு மற்றும் இடைக்கணுப் புழு தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இளம் குருத்துப்புழு கரும்பு நடவு செய்த 15 முதல் 120 நாட்கள் வரை தாக்கும் நிலை உள்ளது.ஒரு தாய்ப்புழு 400 முட்டைகள் வரை இடுவதால் இப்புழுவின் தாக்குதல் வேகமாக அதிகரிக்கும். தாக்கப்பட்ட பயிர்களின் தாய் கரும்பு அழுகிவிடும். இதைத் தடுக்க மேலும் படிக்க..

சந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர்

பொள்ளாச்சி பகுதியில், இன்றைய தேதியில் ரசாயனமே விழாத விளைநிலமொன்று உள்ளது என்றால், நம்புவது சற்று கடினம் தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக, எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லிகளையோ பயன்படுத்தாமல், இயற்கையும், நவீனமும் கைகோர்க்கும் விவசாயம் நடந்து வருகிறது. பொள்ளாச்சி வால்பாறை ரோடு வஞ்சியாபுரம் பிரிவிலிருந்து, கிழக்குத்திசையில் நாட்டுக்கல்பாளையம் ரோடு செல்கிறது. அதனருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்டு, ‘இன்ஜினியர் தோட்டம்’ உள்ளது.இங்கு மொத்தம் உள்ள, 12 ஏக்கரில், குடியிருப்பு, கட்டடங்கள் போக, 10 ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. மேலும் படிக்க..

கோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி!

கோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியை சுமார் 2 லட்சம் பேர் பார்வையிட்டனர். இதில் ரூ.60 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெற்று உள்ளது. கோவை மாவட்ட சிறுதொழில் வளர்ச்சி கழகம், தமிழ்நாடு வேளாண் மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், தூத்துக்குடி மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தென்னிந்திய அளவிலான 15-வது வேளாண் கண்காட்சியை நடத்தியது. கோவை கொடிசியா வணிக வளாகத்தில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2015’ என்ற தலைப்பில் கடந்த 17-ந் தேதி தொடங்கிய கண்காட்சி நேற்று நிறைவு மேலும் படிக்க..

மூலிகைப் பூச்சி விரட்டி!

பூச்சி தாக்குதலால் பாதிப்பு வந்தால் ரசாயன மருந்துகள் ஊறுவிளைவிப்பதால் (நமக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் சேர்த்து தான்). அவற்றை நிறுத்தி மூலிகைப்பூச்சி விரட்டி பயன்படும். இதற்கு பூச்சிகளை சாகடிக்க வேண்டாம். இனப்பெருக்கம் செய்ய விடவும் வேண்டாம். விரட்டினாலே போதும். அவை தானாக குறைந்து பொருளாதார சேத நிலைக்குள் கட்டுப்பட்டு வாழ்வதற்கும் நமது சுற்றுச்சூழல் மாசுபடாமல் நலமான வாழ்வை நாம் வாழவும் வழி பிறக்கும். விவசாயிகள் தோட்டத்தில் சுற்றிப் பார்த்து கிடைக்கும் பல மூலிகைகளில் குறிப்பாக கால்நடைகள் உண்ணாதவை, கசப்பான மேலும் படிக்க..