மிளகாயில் காய்ப்புழுக் கட்டுப்பாடு

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மூலம் மிளகாயில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தி உயர்மகசூல் பெறலாம் என்று சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மிளகாய் பயிர் இப்போது காய்ப்புப் பருவத்தில் உள்ளது. இத் தருணத்தில் காய்ப்புழு மிகுந்த மகசூல் இழப்பை மிளகாயில் ஏற்படுத்தும். இந்தக் காய்ப்புழுக்களை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு கட்டுப்படுத்தலாம். அதன்மூலம் உயர் மகசூலும், அதிக லாபமும் பெறலாம். 1. இனக்கவர்ச்சி பொறி வைத்தல்: ஒரு மேலும் படிக்க..

உரங்களுக்கான மானியங்கள் குறைப்பு

இந்த நிதியாண்டுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான மானியங்களை குறைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை முடிவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் உரங்களின் விலை குறைவு ஏற்பட்டதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி மிச்சமாகும். உரங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டபோதும், டை அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு போன்ற உரங்களின் அதிகபட்ச சில்லறை விலை ஒரு டன்னுக்கு முறையே ரூ.1500 மற்றும் ரூ. 1000 குறையும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இது மேலும் படிக்க..

கால்நடைகளுக்கு மாற்றுத் தீவனமாக அசோலா

கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசோலா செடிகளை மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்துமாறு, கால்நடைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, ஈரோட்டில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர்கள் கவிதா, யசோதை ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் பருவமழை மாற்றத்தால் வறட்சி நிலவுகிறது. மேலும், விவசாயம், மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவும் குறைந்து கொண்டே வருவதால் தீவனப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், மாற்றுத் தீவனமான அசோலாவைப் பயன்படுத்தி தீவனச் செலவு மேலும் படிக்க..

கோடை உழவால் நன்மை

பழமரச் சாகுபடியாளர்கள் கோடை உழவு செய்து பயன்பெறலாம் என்று சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடை உழவால் கோடி நன்மை, சித்திரை உழவு பத்தரை மாற்றுத்தங்கம் என்றெல்லாம் பழமொழிகள் கோடை உழவின் நன்மைகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றன. கோடை மழையை அடுத்து பழமரத் தோப்புகளில் இடை உழவு மேற்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறமுடியும். கோடை உழவின் நன்மைகள்: மழை நீர் சேமிப்பு: பெய்யும் மேலும் படிக்க..

நீடித்த நவீன கரும்பு சாகுபடி

கரும்பு விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் லாபம் பெற வேண்டுமெனில், நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையைப் பின்பற்ற வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார். தருமபுரி ஒன்றியத்துக்குள்பட்ட கோடுஹள்ளி ஊராட்சியில் அண்மையில் நடைபெற்ற உழவர் பெரு விழாவில், நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து அவர் பேசியது: வழக்கமான முறையில் கரும்பு சாகுபடி செய்வதைத் தவிர்த்து, இன்றைய சூழலில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறைகளைப் பின்பற்றுவதே சிறந்தது. முன்பு ஓர் மேலும் படிக்க..

கொத்தமல்லி சாகுபடி

இரகங்கள் : கொத்தமல்லி  கோ 1, கோ 2 மற்றும் கோ 3, கோ (சி.ஆர்) 4 மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதி உள்ள இரு மண்பாட்டு நிலம் பயிரிட மிகவும் ஏற்றது. மண்ணின் அமில காரத் தன்மை 6-8 வரை இருக்கவேண்டும். மானாவாரியாகப் பயிரிட ஈரமான கரிசல் மண் ஏற்றது, வெப்பநிலை சராசரியாக 20-25 செல்சியஸ் இருந்தால் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பருவம் : கீரைக்காக பாத்திகளில் வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். நிலம் மேலும் படிக்க..

பர்மா தேக்கை சாகுபடி செய்யும் வாலிபர்: ஊடு பயிராக வாழையும் சாகுபடி

விவசாய நிலத்தில்,பர்மா தேக்கை நடவு செய்து, பராமரித்து வருகிறார் காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர். காஞ்சிபுரம் அடுத்துள்ள முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தா, 27. பி.காம்., பட்டதாரி. இவ ருக்கு சொந்தமான 10 ஏக்கர் விளை நிலத்தில், நெல், வேர்கடலை, கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இதுகுறித்த நந்தா கூறியதாவது: பர்மா தேக்கு கன்றுகளை, இந்துஸ்தான் பையோ டெக் நிறுவனத்தாரிடம் இருந்து வாங்கி வந்து நடவு செய்துள்ளேன். ஒரு செடியின் விலை மேலும் படிக்க..

செம்மை கரும்பு சாகுபடி கரூரில் சாதனை

செம்மை சாகுபடியில் நவீன தொழில்நுட்பத்தின்படி, கரும்பு நாற்றங்கால் உற்பத்தி செய்து, கரூர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் விற்பனை செய்து வருகிறார். தமிழகத்தில், 2.84 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, மூன்று கோடி டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. பணப்பயிரான கரும்பிலிருந்து சர்க்கரை, வெல்லம், கந்தசாரி போன்ற இனிப்பு பொருட்கள் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது பாரம்பரிய முறைபடி கரும்புகளை துண்டு, துண்டாக வெட்டி நடவு செய்வது நடைமுறையில் இருக்கிறது. இதற்கு ஏக்கருக்கு, நான்கு டன் கரும்பு மேலும் படிக்க..

பழ/பூ வகை செடிகள் உற்பத்தியில் கருமந்துறை அரசு பழப்பண்ணை முதலிடம்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை உள்ள அரசு பழப்பண்ணை, பழ வகை மற்றும் பூச்செடி உற்பத்தியில், ஆசியா அளவில், இரண்டாவது இடமும், தமிழக அளவில், முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழக தோட்டக்கலை, வேளாண்துறை மூலம், 54 பழப் பண்ணை, பலன் தரும் பழ வகை, மலர் செடிகள் வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள கருமந்துறையில், 1,036 ஏக்கர் பரப்பளவில், தோட்டக் கலைத்துறையின் பழப்பண்ணை உள்ளது. இங்கு, மா, கொய்யா, மேலும் படிக்க..

விவசாயிகள் விஞ்ஞானிகளாக மாறுவது அவசியம்: எம்.எஸ். சுவாமிநாதன்

ஒவ்வொரு விவசாயியும் விஞ்ஞானியாக மாற வேண்டும் என்றார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதி கோவில் கிராமத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பண்ணைப் பள்ளித் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது: பருவ மழை குறைவு, காவிரி நீர் பிரச்னை போன்றவற்றால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் விவசாயிகள் தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்தப் பண்ணைப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாதபோது என்னென்ன மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்திற்கு பச்சை கொடி!

ஏழு ஆண்டுகள் நீண்ட ஆராய்ச்சி பின், கர்நாடகாவில் தார்வாத் ஊரில் உள்ள வேளாண் பலகலை கழகம் (University of Agricultural Sciences, Dharwad, Karnataka) ஒரு உண்மையை கண்டு வெளியிட்டு உள்ளது இயற்கை வழி விவசாயம் செய்ய முன்படும் போது கேட்க படும் கேள்வி “எல்லாம் சரி. இயற்கை விவசாயத்தில் இதே அளவு சாகுபடி கிடைக்குமா? வருமானம் குறையுமா?” என்பது தான்.. இந்த கேள்விக்கு கர்நாடக வேளாண் பல்கலை கழகம் 7 ஆண்டுகள் விஞான முறையாக ஆராய்ச்சி செய்து மேலும் படிக்க..

பூச்சி கொல்லியாக கோகோ கோலா!

ஆந்திராவிலும் சத்திஸ்கர் மாநிலத்திலும் உள்ள விவசாயிகள் கோகோ கோலா மற்றும் பெப்சி பயன் படுத்தி பூச்சிகளை  கட்டுபடுத்தி வெற்றி அடைந்து உள்ளார்கள் என்று பிரிட்டின் இல் இருந்து வெளி வரும் மதிப்பு உரிய நாளிதழ் ஆன கார்டியன் கூறுகிறது! ஆந்திராவை சேர்ந்த லக்ஷ்மயா என்ற பருத்தி விவசாயி கூறிகையில் ” பருத்தியில் நான் கோகோ கோலாவை தெளித்த போது புழுக்கள், பூச்சிகள் இறப்பதை பார்த்தேன். இந்த முறையை எங்கள் ஊரில் பல இடங்களில் பயன் படுத்துகிறோம்” என்றார் விவசாய அறிஞர் மேலும் படிக்க..

இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் 2013 ஏப்ரல் Calendar

இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் அவர்களின் 2013 ஏப்ரல் மாதத்திற்கான calendar: 21/4/2013: புதுச்சேரி: விவசாயிகளை சந்திப்பு, தொடர்பு எண்:09842212731 22/4/2013: செங்கல்பட்டு: விவசாயிகளை சந்திப்பு, தொடர்பு எண்: 09842212731 23/4/2013: ஹோசூர்: ஹோசூர் புத்தக சந்தையில் பேசுகிறார். தொடர்பு எண்: 09842212731 24/4/2013: சேலம்: சோனா கல்லூரியின் மாணவர்களுடன் பேசுகிறார். தொடர்பு எண்: 09842212731 27/4/2013: மதுரை: கூரை காய்கறி வளர்த்தல் பயிற்சி தொடர்பு எண்: 09443055060 29/4/2013: புதுச்சேரி: விவசாயிகளை சந்திப்பு, தொடர்பு எண்: 09842212731

நிலக்கடலையில் புரோடினியா புழு

நிலக்கடலை பயிரில் பகலில் தூங்கி, இரவில் தாண்டவமாடும் புரோடினியா புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் புரோடினியா புழுக்கள் பகல் முழுவதும் சூரிய வெப்பம் தாங்க முடியாமல் மண்ணுக்குள்ளும், நிழலிலும் கண்ணுக்கு தெரியாமல் பதுங்கி கொள்ளும். இரவில் வெளியில் வந்து நிலக்கடலை பயிரின் இலைகளை சுரண்டி அதன் பச்சையத்தை தின்றுவிடும். இதன் மூலம் நாளடைவில் செடியின் ஆரோக்கியம் பாழ்பட்டு மசூல் பெரிதும் பாதிக்கும். இப்புழுக்களை கட்டுப்படுத்த நிலக்கடலை சாகுபடி செய்யும்போது ஆமணக்கு பயிரினை வரப்பு பயிராகவோ, ஊடுபயிராகவோ சாகுபடி செய்தால் மேலும் படிக்க..

நெல்லில் கோரைக் களையை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

கோரை களைகள் கடினத்தன்மை கொண்டிருப்பதால் மிக விரைவில் இவைகளை நீக்க முடியாது. கோரை மண்டியுள்ள வயலில் இக்களையை மேலும் பரவ விடாமலும், நாட்போக்கில் இதன் வீரியத்தை குறைத்தும் சிறுகச் சிறுக இதன் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு வர வேண்டும். இதற்கு ஒருங்கிணைந்த முறையில் செயல் திட்டம் வகுப்பது சிறந்தது. கோடைக்காலத்தில் நிலத்தை ஆழ உழுது கிழங்குகளை மண் மேல்மட்டத்திற்கு கொண்டு வந்து சூரிய வெப்பத்தில் காய வைத்தல், தகுந்த பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடித்தல் போன்றவைகளைச் செயல்படுத்த மேலும் படிக்க..

நெல்லில் விதை நேர்த்தி மற்றும் உர நேர்த்தி

காய்ந்த விதைகளை விதை நேர்த்தி செய்வதைவிட ஈர விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். முதலில் பூஞ்சானக் கொல்லி விதை நேர்த்தி செய்யவேண்டும்.  ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பன்டை சிம் ம்ருந்தின் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 24 மணி நேரம் விதைகளுடன் ஊறவைத்து முளை கட்டி வைக்கவேண்டும்.  இவ்வாறு செய்வதால் நாற்றுக்களை சுமார் 40 நாட்களுக்கு குலை நோய் வராமல் பாதுகாக்கலாம். ரசாயன பூச்சிகொல்லி மருந்துக்குப் பதிலாக உயிர் எதிர் பூசனக் கொல்லி மேலும் படிக்க..

தென்னையில் கோகோ ஊடு பயிர்

தென்னையில் கோகோ ஊடுபயிர் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இதோ அதை பற்றிய ஒரு செய்தி தினமலரில்: ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் உபரி வருமானம்கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் பெரும்பாலான விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலமாக தென்னையில் ஊடுபயிராக கோகோ பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தோட்டக்கலைத் துறையிலிருந்து விவசாயிகளுக்குத் தேவையான கோகோ செடிகள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான உரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. வாரம் ஒருமுறை தென்னைக்குத் தண்ணீர் பாய்ச்சும்போது, அந்த தண்ணீரே மேலும் படிக்க..

சீரகம் சாகுபடி

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும். ரகங்கள்: கோ.1 மற்றும் கோ.2. மண் மற்றும் தட்பவெப்ப நிலை: ஆழமான வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு செழித்து வளரும். குளிர்ந்த தட்பவெப்பநிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் வரை பயிர் செய்யலாம். பருவம்: மலைப்பகுதிகளுக்கு: மே – ஜூன்; சமவெளிப்பகுதிகளுக்கு: அக்டோபர்- நவம்பர் அதிக மேலும் படிக்க..

மண்புழு உரம் தயாரித்தல்

உடன்குடி வட்டாரம் சிறுநாடார் குடியிருப்பு ஊராட்சியில் பெரியபுரம் கிராமத் தில் விவசாயிகள் பங்கேற்ற மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி நடைபெற்றது.அதில் உடன்குடி வேளாண்மை உதவி இயக்குநர் த.பாரதி முன்னிலையில் தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) ந.மலர்விழி மண்புழு உரம் தயாரித்தலின் செயல்முறைகளை விளக்கங்களுடன் கூறினார்.அவர் கூறியதாவது:  மண்புழுவைக் கொண்டு மக்கு உரம் தயாரிக்க சாணம், மண் மற்றும் நிழலான இடம் தேவைப்படும். நன்கு சமமான சற்றே மேடான நிலப் பகுதியில் 3 மீட்டர் அகலம் 2 மீட்டர் மேலும் படிக்க..

வெள்ளரி சாகுபடி

மருத்துவ குணமிக்க வெள்ளரி சாகுபடி குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரகங்கள் – கோ 1, ஜாப்பனிஸ் லாங் கிரீன், ஸ்டெரெய்ட் எய்ட், பாயிண்ட் செட்டி. மண் மற்றும் பருவநிலை – வடிகால் வசதியுள்ள, அங்ககச் சத்து நிறைந்த மணல்சாரி வண்டல் மண் மிகவும் ஏற்றது. ஜூன் மாதமும், ஜனவரி முதல் ஏப்ரல் முடிய நான்கு மாதங்களும் விதைப்பதற்கு மிகவும் ஏற்ற காலம். விதைப்பு நிலத்தை நான்கு முறை மேலும் படிக்க..

சவுக்கு பாத்தியில் ஊடுபயிராக கேழ்வரகு

காஞ்சிபுரம் வெங்கச்சேரி கிராம விவசாயி, சவுக்கு பாத்தியில், ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி செய்து வருகிறார். காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ளது, வெங்கச்சேரி கிராமம். பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த, விவசாயிகள் ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழிக்க வேண்டியுள்ளதால், அதிக லாபம் பெற முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க, பெரும்பாலான விசாயிகள், சவுக்கு பயிரை சாகுபடி செய்ய துவங்கி விட்டனர். இதுகுறித்து, வெங்கச்சேரியை சேர்ந்த விவசாயி கோபால்சிங் கூறியதாவது: ஐந்தாண்டு பயிரான சவுக்கு, ஊட்டமாக வளர்ந்து மேலும் படிக்க..

வறட்சியை சமாளிக்க விவசாயிகள் புது யுக்தி : நிழல் போர்வை சாகுபடி

பனமரத்துப்பட்டி கம்மாளப்பட்டி பகுதியில், வறட்சியை சமாளிக்க, நிழல் போர்வை அமைத்து, சொட்டு நீர் பாசனம் மூலம் மிளகாய், தர்பூசணி போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். சேலம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், பூக்கள்,காய்கறி, நெல், வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்ததால், விவசாயம் செய்ய தேவையான தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி அடுத்த கம்மாளப்பட்டி பகுதி விவசாயிகள், வறட்சியை சமாளிக்க, நிழல் போர்வை அமைத்து, சொட்டு நீர் பாசனத்தில் பயிர் நடவு மேலும் படிக்க..

மாம்பழம் கெட்டு போகாமல் தடுப்பது எப்படி

அறுவடைக்குப் பின் மாம்பழங்கள் சேதம் அடையாமலும், கோடையில் கெட்டுப் போகாமலும் தடுப்பது எப்படி என, வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். மாங்காய்கள் உற்பத்தியாவதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன.ஆனால், அவை நன்கு முற்றிய உடன் விரைவில் பழுத்து உண்பதற்கு தயாராவதுடன், அதிக அளவில் சேதாரங்களையும் ஏற்படுத்துகின்றன.இதைத் தடுக்க, அறுவடைக்குப் பின் அவற்றை கையாளுவது மிக அவசியம். இதுகுறித்து, திருவூர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் தேவநாதன், பேராசிரியர் முத்துராமலிங்கம் கூறியதாவது: ஏப்ரல் மாதம் முதல், மேலும் படிக்க..

காய்கறி சாகுபடி பயிற்சி

“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2013 ஏப்ரல் 9ம் தேதி நிழல் வலையில் தாக்காளி, கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை சாகுபடி குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது’ என, அதன் ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2013 ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் பயிற்சியில், நிழல் வலையில் கீரை, காய்கறி சாகுபடியின் முக்கியத்துவம், உர மேலாண்மை போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க..

நிழல் வலையில் காய், கனி சாகுபடி இலவசப் பயிற்சி

நிழல் வலையில் தக்காளி, கொத்தமல்லி, புதினா, கீரை சாகுபடி செய்வது குறித்து, நாமக்கல்லில் 2013 ஏப்ரல் 9-ஆம் தேதி விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிழல் வலையில் தக்காளி, கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை சாகுபடி செய்வது குறித்த ஒருநாள் இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2013 ஏப்ரல் 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் மேலும் படிக்க..

வாழையில் பனாமா வாடல் நோய

கோடை காலத்தில் வாழையில், பனாமா வாடல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது. கோடை காலங்களில் வாழையில் பனாமா வாடல் நோய் தாக்கத்தால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள மண்ணில் இந்த பூஞ்சானம் அதிகமாகக் காணப்படும். இந்நோய் தாக்கப்பட்டால் முதலில் அடிப்பக்க இலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காம்பிலிருந்து ஒடிந்து விடும். பியூசேரியம் ஆக்ஸிஸ்போரம் என்ற பூஞ்சானம் சைலம் திசுக்களில் உள்ள சத்துக்களை உறிஞ்சுகிறது. இதனால் வேரிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் மேலும் படிக்க..

பருத்தி அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம்

அறுவடை செய்த பருத்தியை தொழில்நுட்ப உதவியுடன் பராமரிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாயை ஈட்டலாம் என்று வேளாண் வணிகத்தின் வேளாணைமை துணை இயக்குநர் இ.செல்வம் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி போன்ற இடங்களில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. பருத்தியின் சிறப்புத் தன்மைகளான நிறம், சுத்தம்,மென்மை, குறைவான ஈரம் ஆகிய நான்கு தன்மைகளைப் பொருத்தே அதன் விலை அமைகிறது. மேற்கண்ட நான்கு மேலும் படிக்க..

வாழை மகசூலைத் தடுக்கும் இலைப்புள்ளி நோய்

கன்னியாகுமரி மாவட்டத்தில், வாழை மகசூலைத் தடுக்கும் வகையில் இலைப்புள்ளி நோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நோயைத் தடுப்பது குறித்து தக்கலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷீலா ஜான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாழையில் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் சிகடோகா இலைப்புள்ளி நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நோய் தாக்கிய இலையின் மேற்பகுதியில் வெளிறிய மஞ்சள் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றி அவை விரைந்து நீள் வடிவத்தில் பழுப்பு நிறமடைகின்றன. மேலும் படிக்க..

தென்னை சாகுபடி டிப்ஸ்

தென்னை சாகுபடிக்கு முன்னர், மண் மாதிரி எடுத்து சோதனை செய்ய வேண்டும். இது தொடர்பாக நாகர்கோவில் வேளாண்மை இணை இயக்குநர் மு.சையது அகமது மிராஞ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னை மரத்திலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் 0-25 செ.மீ. ஆழத்திலும், 25-50 செ.மீ. ஆழத்திலும், 50-100 செ.மீ. ஆழத்திலும் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். இவற்றை ஒன்றாகச் சேர்த்து சமப் பகிர்வு முறையில் ஒரு மண் மாதிரியை ஆய்வுக்கு தயார் செய்ய வேண்டும். ஆய்வுக்கு அனுப்பும் மேலும் படிக்க..

தர்பூசணி சாகுபடி

தர்பூசணி சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தகிக்கும் வெயிலுக்கும், தவிக்கும் தாகத்திற்கும் அருமருந்தாக திகழ்கிறது தர்பூசணி. நீர்ச்சத்து நிறைந்த இத் தர்பூசணி நிறைய மருத்துவப் பயன்களையும் கொண்டுள்ளது. ரகங்கள்: பி.கே.எம். 1, சுகர்பேபி, அர்காமானிக், டிராகன் கிங், அர்கா ஜோதி, அர்கா ஜஸ்வர்யா, அம்ருத் அபூர்வா, பூசா பெடானா, புக்கிசா, மைதிலா (மஞ்சள்), தேவயானி (ஆரஞ்சு) ஆகிய தர்பூசணி ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. அங்ககச் சத்து நிறைந்த, வடிகால் மேலும் படிக்க..

தக்காளி சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள்

தக்காளி பி.கே.எம்-1, கே.பி.ஹெச்-1, கோ.பி.ஹெச்-2, யு.எஸ்.-618, ருச்சி, லட்சுமி ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம். மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிடுதல் வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து நீர் வழி உரமிடுதல் மூலம் மகசூலை இரட்டிப்பு செய்ய முடியும். நடவு செய்த 30ஆவது நாளும், நன்றாகப் பூத்திருக்கும் நிலையிலும் 1.25 மில்லி கிராம் என்ற அளவில் வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். துல்லிய பண்ணையத்தில் வீரிய ஒட்டு ரகங்களை நடவு செய்தால் ஹெக்டேருக்கு மேலும் படிக்க..

மிளகாய் சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள்

 மிளகாய்ச் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற சரியான ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். கோ-1, கோ-2, கே-1, கே-2, எம்.டி.யு.-1, பி.கே.எம்.-1, பாலூர்-1 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம். ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது காப்டான் 2 கிராம் என்ற அளவில் விதைகளுடன் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விதைக்க வேண்டும். மேலும், அசோஸ்பைரில்லம் 400 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையை 25 சதம் வரை குறைக்கலாம். குழித்தட்டு மேலும் படிக்க..

உயிர் உரங்கள் தென்னையில் அதிக விளைச்சல்

தென்னைக்கு உயிர் உரங்கள் இட்டால் 20 சதவீத அதிக விளைச்சல் கிடைக்கும் என்று, சுல்தான்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மனோகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது:    தென்னை மரங்களுக்கு உயிர் உரங்கள் இடுவதன் மூலமாக வேர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கலாம். இதனால் வறட்சியைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா போன்ற உயிர் உரங்கள், மண்ணில் உள்ள தழை, மணிச் சத்துகளை விரயமின்றி பயன்படுத்த உதவும். உயிர் உரங்களை மேலும் படிக்க..

வெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள்

கோடையில் உடல் வெப்பத்தை தணிக்கும் வெள்ளரி சாகுபடி செய்து தியாகதுருகம் பகுதி விவசாயிகள் உபரி வருவாய் ஈட்டி வருகின்றனர். எளிய முறையில் வெள்ளரி சாகுபடி செய்து லாபம் ஈட்டமுடியும் என்பதால் தியாகதுருகம் விவசாயிகள் சிலர் இதனை பயிரிட்டுள்ளனர். இது விதைத்த 30 நாளில் பூக்க துவங்குகிறது. கொடியாக படருவதால் அதிக இடைவெளி விட்டு விதை நடப்படுகிறது. 50 நாளில் இருந்து பிஞ்சுகளை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 60 நாட்களுக்கு தினமும் பிஞ்சுகளை பறித்து விற்பனை செய்து வருவாய் மேலும் படிக்க..

நேரடி புளி விற்பனையில் விவசாயிகளுக்கு ஆதாயம்

திண்டுக்கல்லில், ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் புளிச்சந்தை துவங்கியது. வியாபாரிகள், இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்தனர்.           தமிழகத்தில், புளி விளைச்சல் அதிகம் உள்ள மாவட்டத்தில், திண்டுக்கல்லும் ஒன்று. மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், ரெட்டியார்சத்திரம், வடமதுரை ஆகிய ஊர்களில், அதிக எண்ணிக்கையில், புளிய மரங்கள் உள்ளன. திண்டுக்கல்லில் ஆண்டுக்கு, ஒரு முறை கூடும் புளிச்சந்தை, திங்கட்கிழமை துவங்கியது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இச்சந்தை கூடும். இது, ஜூலை மேலும் படிக்க..

குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி

காஞ்சிபுரம் குருவிமலையை சேர்ந்த விவசாயி, குறைந்த நீரைக் கொண்டு, குழி நடவு முறையில், வெள்ளரி பயிர் சாகுபடி செய்துள்ளார். தமிழகத்தில் கோடை வெயிலுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளரி விற்பனை, அமோகமாக நடைபெறும். இதைப் பயிரிடும் முறை குறித்து தெரிந்தவர்கள், மாவட்டங்களில் முக்கிய இடங்களை தேர்வு செய்து, நிலங்களை குத்தகைக்கு எடுத்து, மூன்று மாத பயிரான வெள்ளரியை பயிரிட்டு வந்தனர். இதில் லாபம், நஷ்டம் எதுவாக இருந்தாலும், நில உரிமையாளர்களுக்கு குத்தகைப் பணம் தவறாமல் சென்றுவிடும். வெள்ளரி மற்றும் மேலும் படிக்க..

பூச்சித் தாக்குதலில் இருந்து மா மரங்களை காப்பது எப்படி?

  மாமரத்தின் பூக்களின் எண்ணிக்கை மற்றும் விளைச்சலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை வல்லுநர் நி.விஜயகுமார் கூறியது மாமரம் இதுவரை பூக்காமல் இருந்தால், 0.5 சதவீத யூரியா கரைசல் (5 கிராம் யூரியா ஒரு லிட்டர் நீருக்கு) அல்லது ஒரு சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் (10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் ஒரு லிட்டர் நீருக்கு) என்ற அளவில் பிப்ரவரி மாதம் 15 தேதிக்குள் தெளிக்க மேலும் படிக்க..

விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்!

விவசாயத்தை விட்டு வெளியேறிவருபவர்களை மீண்டும் விவசாயத்துக்கு அழைத்துவரும் வகையில் தெளிப்புநீர் பாசனம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் ஒருகாலத்தில் வற்றாத ஜீவநதியாக திகழ்ந்தன. இதில் செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் பாலாற்றில் கலந்து மாவட்டம் முழுவதும் பாசனத்தை பலப்படுத்தியது. ஒரு காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தில் நெல் உற்பத்தியில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறந்து விளங்கியது. காலப்போக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் அந்த பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது. மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாகபாளையத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து, பருத்தியில் அதிக மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார் விவசாயி ஒருவர். ஸ்ரீவில்லிபுத்தூர் நாகபாளையத்தை சேர்ந்தவர் குருசாமி,50. விவசாயியான இவர், ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களான எரு, கடலை புண்ணாக்கு போன்றவைகளை உரமாக போட்டு, அரை ஏக்கர் நிலத்தில், பருத்தி விளைவித்து 17 குவிண்டால் மகசூல் பெற்று, சாதனை படைத்துள்ளார். சாதாரணமாக அரை ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்தால், அதிகபட்சமாக 5 குவிண்டால் மகசூல் பெறும் மேலும் படிக்க..

வறட்சியை சமாளிக்க யோசனை

குஜிலியம்பாறை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், நிலக்கடலை, கரும்பு ஆகியன போதுமான மழை இல்லாத காரணத்திலும், நீர் ஆதாரம் குறைந்து வருவதாலும் பயிர்கள் சற்று வாடும் நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், பயிர்களை பாதுகாக்க வேளாண்மை உதவி இயக்குநர் ரவிபாரதி யோசனை தெரிவித்துள்ளார். பொட்டாசியம் குளோரைடு 2 சதவீத கரைசல் தெளிப்பதின் மூலம் பயிர்கள் இழைவழியாக நீர் ஆவியாதல் குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக மகசூல் தரக்கூடி பூ , பிஞ்சுகள் உதிராமல் பயன்தரக்கூடிய அளவில் மகசூல் கிடைக்கும்.பயிறு மேலும் படிக்க..

ஆமணக்கு சாகுபடி

ஆமணக்கு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா பரப்பளவிலும், உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் 3 ஆயிரத்து 750 டன் ஆமணக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் ஆமணக்கு சாகுபடி செய்யப்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் உண்ணா வகையைச் சார்ந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் மேலாக எண்ணெய்ச் சத்து உள்ளது. ஆமணக்கில் இருந்து மருந்துப் பொருள்கள் தயாரிக்கபபடுகின்றன. இந்த எண்ணெய் பெயின்ட், வார்னிஷ் தயாரிக்கவும் மேலும் படிக்க..

இதிலுமா ஊழல்?

அந்த காலத்தில் பாட்டிமார்கள் ஒரு பிரயோகத்தை பயன் படுத்துவார்கள். அநியாயம் செய்பவர்களை  “கட்டையில போக”, “நாசமா போக” என்று சாபம் கொடுப்பார்கள். எத்தனையோ கஷ்டங்களுடன்  நமக்கு உணவு கொடுத்து வரும் நம் உழவர்களின் வயற்றில் அடித்து விட்டு அவர்கள் பேரில் பணம் செய்யும் இந்த UPA அரசு ஊழல்கள் பற்றி என்ன கூறுவது – இதோ தினமணியில் வந்துள்ள ஒரு கட்டுரை– இதிலுமா ஊழல்? 2008-ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மேலும் படிக்க..

தானியக்கிடங்குகளில் இயற்கை பூச்சிக் கட்டுப்பாடு

சேமிப்பில் பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, சேமிக்கும்முன்பு, விதைகளையும் தானியங்களையும் அமாவாசை அன்று காய வைக்கவேண்டும். விதைகளை மண்கலத்தில் இட்டு, சமையல் அறையிலுள்ள பரண்மீது வைக்கலாம். அடுப்புப்புகை பூச்சிகளுக்கு பிடிக்காது. அதனால் பூச்சியின் தாக்குதல் இராது. தானியங்கள், மரங்கள் ஆகியவற்றை பெளர்ணமி அன்று அறுவடைச் செய்தால், தானியக்கிடங்கு பூச்சி தாக்குதல் ஏற்படும். சேமிக்கும் போது விதைகளோடு, காய்ந்த வேப்பிலையைக் கலந்து சேமிக்கவேண்டும். விதை சேமிக்கும் போது, காய்ந்த நொச்சி இலைகளைக் கலந்து சேமித்தல் வேண்டும். விதைகளை புங்கம் மேலும் படிக்க..

மரவள்ளி கிழங்கு நாற்று முறையில் நடவு

தர்மபுரி மாவட்டத்தில், நோய் தாக்குதல் இல்லாமல் தரமான செடிகளை நட குழிதட்டு மரவள்ளி கிழங்கு நாற்றுகளை விவசாயிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களில், மரவள்ளி கிழங்கும் ஒன்று. மானாவரியில் சாகுபடி செய்யும் போது, விவசாயிகள் பாத்திகளில் மரவள்ளி கிழங்கு குச்சிகளை நேரடியாக நடவு செய்து வந்தனர். இறவை முறையில் நடவு செய்ய, நாற்றங்கால் அமைத்து நடுவு செய்து வந்தனர்.இது போன்று நடவு செய்யும் போது, அடிக்குச்சியில் இருந்து நடுக்குச்சி வரை நாற்றுகள் மேலும் படிக்க..

தென்னையில் ஊடு பயிராக தீவனப்புல்

கறவை மாடுகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க, சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள், தென்னையில் ஊடுபயிராக தீவனப்புல் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுல்தான்பேட்டை வட்டாரத்தில், ஜல்லிப்பட்டி, கம்மாளப்பட்டி, செஞ்சேரிபுத்தூர், தாளக்கரை, வாரப்பட்டி, குமாரபாளையம், செலக்கரிச்சல், வதம்பச்சேரி, வடவள்ளி, போகம்பட்டி உட்பட பல இடங்களில் கறவை மாடு வளர்ப்புத்தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. 4,000 கறவை மாடுகள் உள்ளன. சுல்தான்பேட்டை வட்டாரத்தில், மேய்ச்சல் நிலங்கள் பரப்பளவு குறைந்ததால், கறவை மாடுகளுக்கு போதிய அளவு பசுந்தீவனம் கிடைக்கவில்லை. இதனால், கறவை மாடு மேலும் படிக்க..

அழிந்து வரும் காட்டு யானைகள்

மனிதனின் பேராசையும் அழிக்கும் குணமும் உலகத்தில் உள்ள எல்லா உயிர் இனங்களுக்கும் கெடுதலாக ஆகி வருகிறது அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தகவல் தொழிற்நுட்பம் இப்போது கடலில் எந்த இடத்தில மீன்கள் கிடைக்கும் real time  தெரிகிறது. ஆப்ரிக்காவில் எந்த இடங்களில் யானைகள் இப்போது இருக்கின்றன என்று தெரிகிறது. யானைகள் மிகவும் அறிவு மிகுந்த மிருகங்கள் என்று நமக்கு தெரியும். நம் இந்திய கலாச்சாரத்தில் யானைக்கும் பிள்ளையாருக்கும் உள்ள முக்கியத்துவம் அதிகம் இந்த யானைக்கு பாவம் மேலும் படிக்க..

மாவின் சாம்பல் நோய்

இந்நோய் தமிழ்நாட்டில் பயிரிடப்படும் எல்லா மாந்தோப்புகளிலும் காணப்படுகிறது. எல்லா வகை மாமரங்களிலும் தோன்றுகிறது. இது பெரும்பாலும் டிசம்பர் முதல் மார்ச்சு மாதம் வரையிலும் காணப்படுகிறது. இந்நோயினால் 5 முதல் 20 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது என கணிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள்   இந்நோய் தாக்கப்பட்ட தாவர பாகங்களின் மேல் வெண்மையான பஞ்சு போன்ற வளர்ச்சி காணப்படும். இது இலை மொக்குகளிலும், பூக்களிலும் , இளம் பிஞ்சுகளிலும், முதிர்ந்த இலைகளிலும் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட இலைகளின் பசுமை நிறம் மேலும் படிக்க..

சூரியகாந்தி சாகுபடி

சூரியகாந்தி பயிரின் வயது 80-85 நாட்களாகும். சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் மற்றும் கோ.3. ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும். நீண்ட கால விதை ரகங்களை 60க்கு 15செ.மீ. இடைவெளியிலும், குறுகிய கால விதை ரகங்களை 30க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும். விதை முளைப்பு சீராக இருப்பதற்கு தண்ணீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நீண்டகால ரகமாக இருந்தால் சதுரமீட்டரில் 12 செடிகளும், குறுகிய மேலும் படிக்க..

வாழை சீப்பு பிரித்தெடுக்கும் கருவி

வாழை சீப்பை பிரித்தெடுக்க பொதுவாக அரிவாள் அல்லது உள்ளூர் கத்தி போன்றவற்றை பயன்படுத்தி பிரித்து எடுக்கின்றனர். இம்முறையின் மூலம் பிரித்தெடுக்கும்போது பழங்கள் வெட்டுப்படுதல் மூலம் பழம் அழுகுதல் அதிகரிக்கின்றது. இக்குறைபாட்டை களைய மத்திய அறுவடை பின்சார் பொறியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம், லூதியானா, பஞ்சாப் மாநிலத்தில் வாழை சீப்பு பிரித்தெடுக்கும் கருவியை வடிவமைத்துள்ளனர். இக்கருவி அனைத்துவித வாழைத்தார்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. எளிதாக மிக குறைவான அழுத்தத்தை மேலிருந்து கீழாக செலுத்தினால் வாழை சீப்பை பிரித்தெடுக்கும் வகையில் மேலும் படிக்க..

மாடு வளர்ப்போருக்கு காரைக்கால் கோசாலையில் இலவச பயிற்சி

காஞ்சிபுரம் : கறவை மாடுகளின் பால் மட்டும் அல்லாது, அவற்றின் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி வருமானத்தை இரட்டிக்கும் வழிகளை, காரைக்காலில் உள்ள ஒரு கோசாலை, விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி வருகிறது.இதன் மூலம், அந்த பகுதியில் கால்நடை வளர்ப்பு அதிகரித்து வருவதாக, அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, கறவை மாடுகளில் பால் வற்றிய பின், அவை பொருளாதார ரீதியாக பயனளிப்பது இல்லை. இதனால், அவற்றிற்கு தீவனம் வைத்து பராமரிப்பது, வளர்ப்போருக்கு இயலாத ஒன்றாகிவிடுகிறது. இதுவே, பால் வற்றிய மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட சோளத்திற்கு தோன்றி வரும் பூச்சி எதிர்ப்பு

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எப்படி ஆராய்ச்சி மூலம் செய்கிறார்கள் என்று முன்பு படித்து உள்ளோம். சுருக்கமாக சொல்ல போனால் ஒரு பூச்சிக்கு விஷமாக இருக்கும் ஒரு மரபணு நமக்கு உணவாக்கும் பயிரின் மரபணுவுடன் சேர்க்க படுகிறது.           உதாரணமாக BT பருத்தியில் மண்ணில் உள்ள ஒரு பக்டீரியா வின் DNA எடுத்து பருத்தியன் DNA வுடன் சேர்க்க படுகிறது. இந்த பருத்தியை தாக்கும் பூச்சிகளுக்கு இது விஷம். இந்த தொழிர்நுட்பதை பயன் மேலும் படிக்க..

இயற்கை விவசாயம் சாகுபடியில் உலக சாதனை

இயற்கை விவசாயத்தை பற்றி எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் பயிர் செய்தால் நல்ல சாகுபடி வராது என்ற ஒரு தவறான சந்தேகம் இருக்கிறது. இந்த எண்ணம் தவறு என்று ஏற்கனவே ஒரு முறை படித்து உள்ளோம் இப்போது அதே பீகாரில் நாளாந்த மாவட்டத்தில் உள்ள சோதி என்ற கிராமத்தில் உள்ள ஒரு ராகேஷ் குமார் என்ற விவசாயி 1 ஹெக்டருக்கு 108.8 டன் உருளை கிழங்கு இயற்கை விவசாயத்தில் சாகுபடி மேலும் படிக்க..

கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் உரமான கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறலாம்’ என்று வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பச்சையப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டு லட்சம் ஹெக்டேரில் நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணைய் வித்து பயிர்கள், மலர் பயிர்கள், காய்கறிபயிர்கள், பழப்பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டதில் இயங்கி வரும், 125 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம், 30 மேலும் படிக்க..

அங்கக வேளாண் முறை

ஈரோடு: மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்கக வேளாண்மை முறையை கையாண்டு நஞ்சில்லாத சுத்தமான சுவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். வேளாண் அதிகாரிகள் தெரிவித்தது: இயற்கையாக கிடைக்கும் எந்தவொரு வேளாண் இடுபொருளையும் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்கா வண்ணமும் மண் வளத்தையும் நலத்தையும் பேணி மனித மற்றும் கால்நடை வளத்தையும் காக்கும் வண்ணமும் பயன்படுத்தி இயற்கை வளத்தினை பாதுகாத்து மேம்படுத்தி வேளாண்மை செய்வதே அங்கக வேளாண்மை ஆகும்.  பயிர் சுழற்சி, ஊடுபயிர், கவர்ச்சிப்பயிர், நீர் மேலாண்மை, சரியான விதைக்கும் மேலும் படிக்க..

எள் சாகுபடி நுட்பங்கள்

தை, மாசி பட்டத்தில் எள் சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நான்கு மடங்கு மகசூல் அதிகரிக்கலாம் என கோபி வேளாண் உதவி இயக்குனர் ஆசைத்தம்பி தெரிவித்தார். தமிழகத்தில், 2.5 லட்சம் ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. சராசரி மகசூல் ஏக்கருக்கு, 100 முதல், 200 கிலோ வரை கிடைக்கிறது. சில எளிய தொழில் நுட்பங்கள் மூலம், நான்கு மடங்கு மகசூல் பெறலாம். தை, மாசி மற்றும் பங்குனி, சித்தரை பட்டம் இறவைக்கு ஏற்றதாகும்தை, மாசி பட்டத்தில் மேலும் படிக்க..

வீட்டுத் தோட்டங்களைப் பாதுகாக்க எளிய பாசன தொழில்நுட்பம்

கோக், பெப்சி பாட்டில் பாட்டில்களை வைத்து எளிமையான ஒரு சொட்டு நீர் பாசனம் வழி அமைத்து இருக்கிறார்கள்  நிகாரகுவா (Nicaragua) நாட்டில். இதைமுன்பு படித்தோம்.  இப்போது, கேரளத்திலும் இந்த முறையை பயன் படுத்துகிறார்கள். இதோ அதை பற்றிய செய்தி: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. மழை போதிய அளவு பெய்யாத நிலையில் கடும் வெப்பம், வீடுகளில் உள்ள தோட்டங்களை கடுமையாக பாதித்து வருகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் காய்கறித் தோட்டம் அமைத்திருப்பவர்கள், அலங்காரச் மேலும் படிக்க..

மணத்தக்காளி சாகுபடி

பலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில் இம்மூலிகையும் ஒன்று. வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் உள்ளது. பூக்கள் வெண்மையாய் இருக்கும். காய்கள் கருமையாகவும், கரும்பச்சையாகவும் காணப்படும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களோடு இருக்கும். இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும் மருந்தாகப் பயன்படுத்தலாம். ஈரோடு மற்றும் சேலம் போன்ற மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மஞ்சளில் முக்கிய களையாக மணத்தக்காளி விளங்குகிறது. விவசாயிகள் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி

கிருஷ்ணகிரி அருகே எட்டு ஏக்கர் நிலத்தில், 11 ஆண்டுகளாக இயற்கை உரம் மற்றும் மருந்துகளை தானே தயாரித்து, அதன் மூலம் தென்னை, மா, வாழை போன்ற பயிர்களை, 75 வயது முதியவர் சாகுபடி செய்து, சாதனை புரிந்து வருகிறார். விவசாயத்தில், ரசாயன உரங்கள் பயன்பாட்டால், மனிதனினுக்கு பல்வேறு நோய் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க, விவசாயிகள், இயற்க்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில ஆண்டுகளாக, விவசாயிகள் மேலும் படிக்க..

மாவில் சாம்பல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டத்தில் 90 சதவீதம் மா மானாவாரியாக அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மாவைத் தாக்கும் மிக முக்கியமான நோய்கள் குறித்தும், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் கிருஷ்ணகிரி டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சந்தாராஜ் கூறியது: சாம்பல் நோய், பறவைக் கண் நோய், மேலும் படிக்க..

சோள சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பங்கள்

சோளக் கதிர்களை அறுவடை செய்தபின் 2 நாள் வெயிலில் காய வைத்து, சோளமணிகளை உதிர்க்காமல் அப்படியே ‘பட்டரையில்’ சேமித்தால் தேவைப்படும்போது எடுத்து, கதிர் அடித்து, மணிகளைப் பிரித்துப் பயன்படுத்தலாம். மாறுபட்ட காலநிலையிலும், நல்ல முளைப்பு திறனைப் பெற சோள விதைகளை சாதாரண உப்பு கரைசலில் ஊற வைத்து, விதைக்கவேண்டும். சோள விதைகளை பசுமாட்டுக் கோமியத்தில் அரைமணி நேரம் ஊறவைத்து, பின் வெயிலில் உலர்த்தி விதைத்தால், வறட்சியைத் தாக்கி வளர்வதோடு கரிப்பூட்டு நோயையும் கட்டுப்படுத்தலாம். விரைவாக முளைக்கவும் தண்டு மேலும் படிக்க..

சிறுநீரை உரமிட்டு பயன் பெரும் ஆப்ரிக்க விவசாயிகள்

நாம் எப்போதும் மேற்கத்திய நாடுகள் இருந்து தான் தெரிந்து கொள்ள விருப்பம். ஆனால் நம்மை போன்ற ஏழை நாடுகள் ஆன ஆப்ரிக்க போன்ற இடங்களில் என்ன யுத்திகள் பயன் படுத்துகிறார்கள் என்று பார்ப்போம் மனித சிறுநீரை உரமாக பயன் படுத்துவதை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். கென்யா போன்ற நாடுகளில் இதை Systematic ஆக பயன் படுத்துகிறார்கள்! பள்ளி கூடங்களில் சிறுவர்களின் சிறுநீரை சேர்த்து நீருடன் கலந்து உரமாக பயன் படுத்தி பயன் பெறுகிறார்கள் இந்த கட்டுரையில் இருந்து மேலும் படிக்க..

ஜீவாம்ருதம் கொடுக்கும் அதிக மகசூல்

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விவசாயி விஷ்ணுவர்தன ராவ். இவர் நாட்டு பசு மூலம் கிடைக்கும் சாணத்தையும் கோ மூத்திரத்தையும் வைத்து நல்ல மகசூல் கிடைத்து உள்ளதாக கூறுகிறார் நெல் சாகுபடிக்கு ஜீவாம்ருதம் நல்ல பயன் கொடுப்பதாக கூறுகிறார். ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பயன் படுத்தி ஜீவாம்ருதம் தயார செய்கிறார். இந்த முறை மூலம், நிலத்தின் தன்மை நன்ற மாறுகிறது என்கிறார் இவர். இவர் அவர் கிராமத்தில் MTU 7029 என்ற நெல் ரகத்தை ஐந்து மேலும் படிக்க..

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

காளான் வளர்ப்புக்கான பயிற்சி ஈரோட்டில், ஆறு நாட்கள் நடக்கிறது. மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதல்படி கனரா வங்கி நடத்தும் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி 2013 ஃபிப்., 11 முதல், 16 வரை ஆறு நாட்கள், ஈரோடு அசோகபுரம் சரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. சுயதொழில் செய்ய விரும்புவோர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சி பெற எவ்வித கல்வித்தகுதியும் தேவையில்லை. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க மேலும் படிக்க..

கரும்பில் இடைக்கணு புழுவை அழிக்க ஒட்டுண்ணி முறை

கரும்பில் இடைக்கணு புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒட்டுண்ணியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் ஏக்கருக்கு 1200 மெட்ரிக் டன் பெறுவதற்காக செம்மை சாகுபடி மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும். தொழில் நுட்ப பயிற்சி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ராஜ் ஸ்ரீசுகர்ஸ் மூலம் வழங்கப்படுகிறது. மக்கிய தொழு உரம், மண்புழு மேலும் படிக்க..

விலை உயர்வால் 80 லட்சம் டன் உரம் தேக்கம

நடப்பு நிதியாண்டின் (2013) இறுதியில், 80 லட்சம் டன் உர வகைகள் தேக்கமடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பருவமழை பொய்த்ததால், வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மானியம்இந்நிலையில், மத்திய அரசு, பல உர வகைகளுக்கு, அளிக்கப்பட்டு வந்த மானியத்தை குறைத்துஉள்ளது. இது போன்ற காரணங்களால், நாடு தழுவிய அளவில், விவசாயிகள் உரம் வாங்குவதை வெகுவாக குறைத்துள்ளனர். இதனால், உரத் துறை நிறுவனங்கள் பாதிப்படையும் என்பதுடன், ஒட்டு மொத்த அளவில், வேளாண் உற்பத்தியும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க..

திருந்திய நெல் சாகுபடி சாதனை விவசாயி

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை முழுமையாக பின்பற்றினால், அதிக மகசூல் பெற முடியும், என தமிழக முதல்வரிடம் நெல் சாகுபடியில் சாதனை புரிந்து முதல் பரிசு பெற்ற விவசாயி பெ. சோலமலை தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் திருந்திய நெல்சாகுபடி தொடர்பாக முதல்வர் அறிவித்த போட்டியில், 2011-12-ம் ஆண்டில் அதிக மகசூல் எடுத்து முதலிடம் பிடித்த மதுரை மாவட்டம், வெள்ளியங்குன்றம் ஊராட்சி அண்டமான்  கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி மகன் பெ.சோலமலை முதல் பரிசான ரூ.5 மேலும் படிக்க..

கொடி வகை காய்கறிகள் பயிர் இடுவது எப்படி

தோட்டக்கலைதொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கொடி வகை காய்கறிகளை பயிரிட்டு, அதிக லாபம் பெறலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிலாகிங்ஸி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கொடிவகை பயிர்களான பாகற்காய், புடலங்காய், பீர்க்கன் காய் வகை காய்கறி பயிர்கள் செய்யலாம். தற்போது பாகற்காயில் விவேக், அபிஷேக், ப்ரித்தி ஆகிய ரக விதைகள், புடலங்காய் கோ-1, கோ-2, பிகேஎம்-1, எம்டியு பிஎல்ஆர்(எஸ்ஜி-1) ஆகிய ரக விதைகள், பீர்க்கன்காய் கோ-1, கோ-2, அர்கா சுமீத் மற்றும் அர்கா சுஜாத் ஆகிய ரக விதைகளை விதைக்கலாம். மேலும் படிக்க..

டெல்டாவில் ஏகபோக கொள்முதல் தடுக்க வர்த்தக சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்: டெல்டா மாவட்டங்களில் ஏகபோக நெல், அரிசி கொள்முதலை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. டெல்டா மாவட்டங்களில் ஏகபோக நெல், அரிசி கொள்முதலை தடை செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பார்க் முன் வர்த்தக சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தஞ்சை மாவட்ட நெல் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்து பேசியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், பாசனத்துக்கு உரிய மேலும் படிக்க..

நிலக்கடலை செடிகளுக்கு இலைவழி உரம்

இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பின்பற்றி, நிலக்கடலை செடிகளுக்கு, இலைவழி உரமிடுவதன் மூலம், பல மடங்கு கூடுதலாக விளைச்சல் கிடைக்கும் என, விவசாயி ஒருவர் கூறியுள்ளார். திருக்கழுக்குன்றம் அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் கேசவன்,63; விவசாயி. இவர், ஆறு ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார். இப்பயிர்களுக்கு, இஸ்ரேல் நாட்டு விவசாயிகளை பின்பற்றி, இலை வழியாக நுண்ணூட்ட உரங்களை செலுத்தி, அதிக லாபம் பெற்று வருகிறார்.இது குறித்து அவர் கூறியதாவது: ஆறு ஏக்கர் நிலத்தில், இஸ்ரேல் நாட்டின் விவசாய தொழில் நுட்பத்தில், நிலக்கடலை பயிர் மேலும் படிக்க..

கருகும் பயிர்களைக் காக்க இலவச நுண்ணுயிர் திரவம்

கருகும் நிலையில் உள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற  பிபிஎப்எம் என்ற நுண்ணுயிர் திரவம் அனைத்து வயல்களுக்கும் இலவசமாக தெளிக்கப்பட உள்ளது என்றார் வேளாண்துறை பேராசிரியர் ஆர். மாரிமுத்து. பூதலூர் பகுதியில் கருகும் நிலையில் உள்ள சம்பா பயிர்களில்  பிபிஎப்எம் என்ற நுண்ணுயிர் திரவம் இலவசமாக தெளிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் வேளாண்துறை அலுவலர் மாரிமுத்து கூறியது: தமிழக முதல்வரின் சம்பா கூடுதல் சிறப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், வறட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா மேலும் படிக்க..

களர் நிலத்தை சரி செய்வது எப்படி

திருநெல்வேலி சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சீர்திருத்தம் செய்து பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெற முடியும் என சங்கரன் கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது;   சங்கரன்கோவில் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் அனைத்து வகையான பயிர்களிலும் மண்ணின் தன்மை அறிந்து குறிப்பாக களர் நிலமாக இருந்தால் அதனை சீர்திருத்தம் செய்து பயிர் சாகுபடி செய்தால் மட்டுமே அதிக மகசூல் மேலும் படிக்க..

பூச்சி மருந்துகளால் பேராபத்து: வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை

“”பயிர்களை பாதுகாக்க மூலிகை பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட, பூச்சிகளை அழிக்கும் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், மக்கள் கொடிய நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்,” என, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார். தமிழக விவசாயிகள் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கின்றனர். இதுகுறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதாவது: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் மேலும் படிக்க..

உரம், விதை விதைக்கும் கருவி

தமிழகத்தில் உள்ள சாகுபடி நிலப் பரப்பில் 70 சதவீதம் மானாவாரி நிலப் பரப்பாகும். இதில் 25 சதவீதம் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு மானாவாரியில் பயிரிடப்படும் நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம் மற்றும் பிற பயறு வகைககளைக் குறித்த காலத்திற்குள், அதாவது மண்ணில் ஈரப்பதம் குறைவதற்கு முன்பாகவே விதைக்க வேண்டும். குறிப்பாக நிலக்கடலையைப் பொருத்த வரையில் மண்ணில் ஈரப்பதம் குறைவதற்குள் கலப்பையின் பின்னால் சால்விட்டு விதைக்கப்படுகிறது. தற்சமயம் விதை விதைக்கும் பட்டத்தில் போதிய ஏர், ஆள்கள் பற்றாக்குறை காரணமாக மேலும் படிக்க..

தைப் பட்ட சூரியகாந்தி

ஆண்டு முழுவதும் சூரியகாந்தி சாகுபடி செய்ய உகந்ததாக இருந்தாலும், இப்போது தைப் பட்டம் தொடங்கியிருப்பதால் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி தொழில்நுட்பங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியமானது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் சூரியகாந்தி விதைப்பு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். தைப்பட்டம் என்பது ஜனவரி-பிப்ரவரியை உள்ளடக்கியது. இந்தப் பட்டத்தில் பூ பருவத்தில், மழையால் பூக்கள் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். சூரியகாந்தி பயிர் இதர பயிர்களைவிட மிகக் குறுகிய காலத்தில் மகசூலுக்கு வந்துவிடும். 80 முதல் 85 மேலும் படிக்க..

தென்னையில் ஊடு பயிர்கள்

பனமரத்துப்பட்டி வட்டாரத்தில்,குறைந்த பராமரிப்பு செலவில், கூடுதல் லாபம் பெறும் வகையில், தென்னை மர தோப்புகளில் வெங்காயம்,கத்தரி,கொய்யா,தக்காளி உள்ளிட்டவற்றை ஊடு பயிர் செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, கூலி ஆள் பற்றாக்குறை, வரவை மிஞ்சும் செலவு ஆகிய காரணங்களால், நீண்ட நாள் பலன் தரக்கூடிய தென்னை மரம் வயல்களில் நடவு செய்துள்ளனர். வயல்களில் குறைந்தபட்சம், 20 அடி இடைவெளியில் தென்னை கன்று நடவு மேலும் படிக்க..

மழையே துணை – தினமணி தலையங்கம்

இந்தியாவில் அதிக உணவு தானிய உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு “கிருஷி கர்மன்’ விருது வழங்கப்படுகிறது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற இதற்கான விழாவில் 18 மாநிலங்கள் பல்வேறு பிரிவுகளில் முதன்மை பெற்று, பரிசுகள் பெற்றன. இதில் தமிழ்நாட்டுக்கும் பரிசு கிடைத்தது என்று மகிழ்ச்சி கொள்ளலாம். அதே நேரத்தில் பெருமை கொள்ள முடியாது. இந்த விருதுகள் 2011-12-ஆம் ஆண்டு ஒரு மாநிலத்தின் மொத்த உணவு தானிய உற்பத்தி அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. முதல் பிரிவு மேலும் படிக்க..

வாழையில் இலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்

வாழையில் இலைப் புழுவைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் இளஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரவருணி வடிகால் பாசனப் பகுதியான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி மற்றும் பாளை வட்டாரப் பகுதிகளில் வாழை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.வாழையை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும், தற்போது இலைப் புழுவானது பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. அறிகுறிகள இப் புழுவானது வாழை நடவு செய்த மேலும் படிக்க..

மரபணு மாற்ற பயிர்: கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது – பவார்

மரபணு மாற்ற பயிர் தொடர்பான அனைத்து கள ஆய்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவின் மீது விசாரித்த நீதிபதிகள், நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தனர் இந்த குழு மரபணு மாற்றப்பட்ட எல்லா பயிர்களின் கள ஆய்வுகளுக்கும் 10 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று இடைகால அறிக்கை தந்ததை நாம் படித்தோம். இந்த குழுவை உச்ச நீதி மன்றம் முழு அறிக்கையை மூன்று மாதங்களில் கொடுக்க வேண்டும்  என்று கூறி மேலும் படிக்க..

அழிந்து வரும் பனை மரங்கள்

தென் மாவட்டங்களில் பனைமரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விறகுக்காக விற்பதால் இவை அழியும் தறுவாயில் உள்ளன. ஏற்கெனவே, மருத்துவ குணமிக்க வாராச்சி மரங்களையும் அந்த வகையில் வெட்டி அழித்துவிட்ட நிலையில் இப்போது பனைமரங்களுக்கு அபாயம் வரவழைக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய அனைத்து கிராமங்களிலும் வாராச்சி எனப்படும் மருத்துவ குணமிக்க மரங்களைக் காணமுடிந்தது. வீடுகளில்கூட இந்த மரங்கள் வளர்க்கப்பட்டன. வாதமடக்கி என்று கிராம மக்களால் இவை அழைக்கப்பட்டன. காயங்கள், புண்கள், மேலும் படிக்க..

"இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பில்லை"

இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பில்லை என இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசினார். ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர் தின விழா கிரியேட் அறக்கட்டளை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. கிரியேட் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ஆர்.பொன்னம்பலம் வரவேற்றார். விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது:  இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே தற்போது அதிகரித்து வருகிறது. பருவ கால மாறுபாடுகள் மேலும் படிக்க..

மொபைல் டவர்களும் கதிர் வீச்சும்

மொபைல் டவர்கள் மூலம் வரும் கதிர்வீச்சு மக்களுக்கு கான்செர் புற்று நோய் வர வாய்ப்பு இருப்பதாக  விஞான ஆராய்சிகள் கூறுகின்றன. ஒரு இடத்தில உள்ள எல்லா மொபைல் போன்களுக்கு எல்லாம் தொடர்பு கொள்ள எல்லா அலை வரிசைகள் பயன் படுத்த படுவதால இந்த மொபைல் டவர் கீழே அதிக நேரம் இருப்பது நல்லது அல்ல பல நாடுகளில் இந்த டவர்கள்  அமைக்க கட்டுபாடுகள் உள்ளன.  நம் நாட்டில் கட்டுபாடுகள் இருந்தாலும் அதை யார் மதிக்கிறார்கள் !! இப்போது உலக அளவில் மேற்கொண்ட மேலும் படிக்க..

வாழைக்கு உரமாகும் தேங்காய் நார்க் கழிவுகள்

கோபி அருகே தேங்காய் நார்க் கழிவுகளை வயலுக்கு விவசாயிகள் உரமாகப் பயன்படுத்துகின்றனர். கோபி அருகிலுள்ள பவளமலை அருகில் விவசாயி ஒருவர் தேங்காய் நார் மூலம் கயிறு தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறார். தேங்காய் நார்க் கயிறு தயாரித்த பின்னர் அதில் எஞ்சும் தேங்காய் நார்க் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை அவரது கள்ளிப்பட்டியில் உள்ள வயல்களில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி, மழையின்மை காரணமாகவும் பவானிசாகர் அணையில் தண்ணீர் இருப்பு இல்லாத காரணத்தாலும், மேலும் படிக்க..

வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

வாழை சாகுபடியில் துல்லிய பண்ணையம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2013 ஜன.4-ல் நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:    வாழை சாகுபடியில் நீர், உரம் மற்றும் தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை சமாளித்து கூடுதல் லாபம் பெற துல்லிய பண்ணைய தொழில் நுட்பம் சிறந்த தீர்வாக உள்ளது. சாகுபடி செய்த வாழையில் தண்டுத் துளைப்பான், கிழங்குத் துளைப்பான் மேலும் படிக்க..

ராகி சாகுபடியில் புதிய நுட்பம்

மார்கழி பட்ட ராகியில் புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என்று தருமபுரி உழவர் பயிற்சி நிலையம் தெரிவித்தது. தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமெனில் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது. கார்த்திகை, மார்கழிப் பட்டங்களில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. ரகங்கள் தேர்வு: முதல் கட்டமாக அதிக விளைச்சல் தரக் கூடிய ரகங்கள் எவை என்பதைத் ஆராய்ந்து தேர்வு செய்ய மேலும் படிக்க..

விதை காய வைப்பது எப்படி

விதையை காயவைப்பது என்பது விதையின் ஈரபதத்தை பாதுகாப்பான ஈரப்பதம் வரும்வரை காயவைப்பது ஆகும். ஒவ்வொரு விதைக்கும் அதன் தன்மை, சேமிப்பின் நோக்கம், சேமிக்க பயன்படுத்தப்படும் பைகளைப் பொறுத்து பாதுகாப்பான ஈரப்பதம் வேறுபடும். விதையை காயவைப்பது விதையினை உயிருடனும் நல்ல வீரியமுடனும் சேமிக்க முக்கிய காரணமாகும். இல்லையெனில் சீக்கிரமே பூஞ்சானங்களாலும், வெப்பத்தினாலும் மற்றும் அதிக நுண்ணுயிர் தாக்குதலாலும் கெடுகிறது. விதைகளை இரண்டு முறையில் நாம் காயவைக்கலாம். ஒன்றாவது சூரிய ஒளியில் நல்ல சிமிண்ட் தளத்தில் காயவைப்பது, இரண்டாவது இயந்திரங்கள் மேலும் படிக்க..

திரட்சியான கடலை பெற வேளாண் துறை யோசனை

நிலக்கடலை சாகுபடியின்போது பொக்குகளற்ற திரட்சியான எடை அதிகம் உள்ள நிலக்கடலை பெற ஜிப்சம் இடவேண்டும் என வேளாண் துணை இயக்குநர் ஆர்.அரிவாசகன் தெரிவித்தார்.   நிலக்கடலை சாகுபடியில் பூக்கள் விழுதுகளாக மாறி பூமியினுள் சென்று கடலைகளாக மாற்றம் பெறுகின்றன. இந்த விழுதுகள் பூமியில் இறங்கும்போது மண் பொல பொலப்பாக இருக்க வேண்டும்.   நிலக்கடலையில் பூக்கும் பருவம் 26-ம் நாளில் துவங்கி 45-ம் நாள் விழுதுகள் மண்ணில் இறங்க ஆரம்பிக்கும். அந்த காலகட்டத்தில் மண்ணை கிளறிவிட்டு ஜிப்சம் மேலும் படிக்க..

விவசாயத்திற்கு அச்சுறுத்தலான மீத்தேன் வாயு திட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தொழிலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு நிலக்கரி படிமம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி படுகைகளைச் சுற்றிலும் பெருமளவு மீத்தேன் வாயு உள்ளது. நிலத்துக்குக் கீழேயுள்ள நீரின் அழுத்தம் காரணமாக இந்த மீத்தேன் வாயு அதே இடத்தில் நிலையாக உள்ளது. ஆகவே, மேலே அழுத்திக் கொண்டிருக்கும் மேலும் படிக்க..

நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முக்கூடல் வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பாப்பாக்குடி வட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் குருத்துப்பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டு ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் குருத்துப்பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகள் நெற்பயிரின் இலைகளின் நுனியில் குவியல் குவியலாக முட்டைகளிடும். இம்முட்டைகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இதில் மேலும் படிக்க..

நெற்பயிருக்கு உயிர் உரங்கள்

முக்கூடல் வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்குமார் பாப்பாக்குடி வட்டார விவசாயிகளுக்கு கூறிஇருப்பதாவது: ஆசோஸ்பைரில்லம் உயிர் உரமானது காற்றில் உள்ள தழைச்சத்தை எடுத்து நெல் பயிரிருக்கு கொடுப்பதோடு மண்ணிலும் நிலை நிறுத்தும். இதனால் நெல் பயிரில் வேர் வளர்ச்சி அதிகமாகி பயிர் அதிக அளவில் தழைச்சத்தை எடுத்து நன்கு வளர்ந்து அதிக தூர்கள் உருவாகி பயிர் மகசூல் அதிகமாகும். பாஸ்போபாக்டீரியா உயிர் உரமானது மண்ணில் பயிருக்கு கிடைக்காத நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்து நெல் பயிர் எளிதில் மணிச்சத்தை மேலும் படிக்க..

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – III

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும் ஒரு இன்னொரு பெரிய காரணம் இதோ: “சிறு விவசாயிகள், இடை தரகர்களிடம் மாட்டி கொண்டு அவர்களின் பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை. அனால், வால்மார்ட் போன்ற பெரிய சில்லறை நிறுவனங்கள், இப்படி செய்யாது. விவசாயிகளிடம் உடன்படிக்கை செய்து கொண்டு (Contract farming) ஸ்திரமான  விலையை கொடுக்கும்.” இந்த நிலை உண்மை  தானா என்று பார்ப்போம். 1. பஞ்சாபில், பெப்சி கம்பெனி, விவசாயிகளிடம் உடன்படிக்கை போட்டு உருளை கிழங்கு, தக்காளி மேலும் படிக்க..

மா சாகுபடியில் அடர்நடவு முறை

அடர்நடவு முறையில் இரு அடுக்கு முறையில் 10x5x5 மீட்டர் இடைவெளியில் நெருக்கி மா நடவு செய்வதால் எக்டருக்கு 260 கன்றுகளை நடவு செய்யலாம். இரு அடுக்குகளுக்கு இடையில் 10 மீட்டர் இடைவெளி இருப்பதால் டிராக்டர் மூலம் மருந்து தெளிக்கவும், அறுவடை செய்யவும் இன்னும் பிற பயிர் பராமரிப்பு வேலைகளை செய்யவும் ஏற்றதாக இருக்கும். தற்போது அதிஅடர்நடவு முறையில் 3×2 மீட்டர் இடைவெளியில் ஒரு எக்டருக்கு 1666 மரங்கள் நடவு செய்வதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர் – மேலும் படிக்க..

மஞ்சள் நாற்று நடவு

பொதுவாக மஞ்சள் பயிர் கிழங்கின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மஞ்சள் நடவிற்கு விரலி, குண்டு மஞ்சள் பயன்படுகிறது. விதை மஞ்சள் 25 முதல் 30 கிராமிற்கு குறையாமலும் 3 முதல் 4 பரு கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 2000 முதல் 2500 கிலோ விதைமஞ்சள் தேவைப்படுகிறது. பவானி சாகரிலுள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விதை கிழங்கிற்குபதிலாக மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மஞ்சள் நாற்றை நாம் விதை கிழங்கின் மூலம் சாகுபடி செய்வதைப்போல் சாகுபடி மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட உணவு – உலக நாடுகளின் நிலைபாடுகள்

இந்த நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் தடை செய்ய பட்டு உள்ளன: நியூ சிலாந்து, ஜெர்மனி இர்லாந்து ஆஸ்திரியா கிரீஸ் புல்காரியா லக்சம்பர்க் ஜப்பான் இந்தியா. இந்தியாவில், இப்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தி மட்டுமே அனுமதி உள்ளது மற்ற நாடுகளின் நிலைமைகள்: ஆஸ்திரேலியா: நியூ சவுத் வாலஸ் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் அனுமதி உண்டு பிரான்ஸ்: தற்போதைய நிலரவறபடி இல்லை சுவிற்சலாந்து: 2005 ஆண்டு மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் தடை செய்ய பட்டன. மேலும் படிக்க..

பஞ்சாபில் ரசாயன பூச்சி கொல்லி பயனால் வந்த வினைகள்

பஞ்சாபில் அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்துகள் பயன் படுத்தி நிலத்தடி நீர் மாசு பட்டு விட்டது. பஞ்சாபில் அதிகமாக கான்செர் (புற்று நோய்) அதிகரித்து உள்ளது. புற்று நோய்க்கும் ரசாயன பூச்சி கொல்லி உள்ள உறவு நன்கு புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று இப்போது பஞ்சாபில் உள்ள ஜலந்தர் லூதியானா அம்ரித்சர் போன்ற மாவட்டங்களில் மேற்கொண்ட பட்ட ஆய்வில் குழந்தைகளையும் தாய்மார்களையும் தாக்கும் புதிய தகவல்கள் வெளி வந்து உள்ளன: நிலத்தடி நீர் விஷம் இப்போது பச்சிளம் குழந்தைகளையும், மேலும் படிக்க..

வாழை வயலில் ஊடுபயிராக பூசணி

சத்தியமங்கலம் பகுதியில் வாழை வயலில் நடப்பட்டுள்ள பூசணி, தற்போது அறுவடையாகி வருகிறது. சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள், பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் வாழை பயிரிட்டுள்ளனர். இதில் செவ்வாழை மற்றும் கதளி ஆகிய ரக வாழைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. இந்த ரகவாழைகள் ஏக்கர் ஒன்றுக்கு செவ்வாழை, 800 வாழை கன்றுகளும், கதளி ஏக்கர் ஒன்றுக்கு, 1,200 வாழை கன்றுகளும் நடப்படுகிறது. ஒவ்வொரு வாழை கன்றுகளுக்கு இடையே செவ்வாழை எட்டு அடி இடைவெளியும், கதளி ரகத்திற்கு ஆறு அடி இடைவெளியும் விடப்படுகிறது. மேலும் படிக்க..

பாக்குத் தோப்பில் ஊடு பயிராக காஃபி செடி

ராசிபுரம் அருகே பாக்குத் தோப்பில், ஊடு பயிராக, காஃபி செடி பயிரிடப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொ.ஜேடர்பாளையம் அருகே ஒசைக்கரையான் ஊற்று உள்ளது. கொல்லிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியை சேர்ந்தவர் வக்கீல் குமார். அவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில், பாக்கு மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். பாக்கு மரத்தின் இடையே, ஊடுபயிராக, காஃபி செடி வளர்க்க முடிவு செய்தார். நாமகிரிப்பேட்டை தோட்டக்கலை துறை மூலம், 3,000 காஃபி செடிகளை பெற்று, அதை, பாக்கு மரத்தின் இடையே மேலும் படிக்க..

இளநீர் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் குட்டை ரகம்

“”தமிழகத்தில் முதல்முறையாக இளநீர் உற்பத்தியை அதிகரிக்க, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் குட்டை ரகத்தை கண்டுபிடித்துள்ளதாக,” அதன் தலைவர் ராஜாமாணிக்கம் தெரிவித்தார். தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் புதிதாக தென்னையில் மூன்று ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், அரசம்பட்டி, டிப்பூர் ஆகியவை நெட்டை ரகங்களாகவும், கெந்தாலி என்பது குட்டை ரகமாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், முதல் முறையாக குட்டை ரக இளநீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மேற்கு மண்டல பகுதிகளுக்காக, ஆண்டில் மூன்று பருவ காலத்தில் ஒரு நாளுக்கு எத்தனை மேலும் படிக்க..

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – II

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும் ஒரு முக்கிய காரணம் இதோ: “நம்முடைய மிகவும் திறன் அற்றது. விவசாயி இடம் இருந்து காய்கறி அல்லது தானியம் முதலில் ஒரு  வணிகரிடம் போகும். அவரிடம் இருந்து மொத்த  வணிகரிடம் போகும். பிறகு, ஒவொரு இடத்தில இருக்கும் சிறு கடை காரர்கள் இந்த மொத்த  வணிகரிடம் இருந்து வாங்கி வந்து நுகர்வோரிடம் விற்பார்கள். இந்த சங்கிலியில், உற்பத்தி பொருளில் 40% சதவீதம் வரை வீணாகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய மேலும் படிக்க..

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – I

பிரதம மந்திரி பொருளாதார மேதை. நிறைய படித்தவர். ஆனால் சில சமயம் அவர் உளறுவது தாங்கவில்லை அவருக்கும் அவரின் காங்கரஸ் கட்சிக்கும் தேவையான   சில்லறை வணிகத்தில்   அந்நிய முதலீடு மசோதா (FDI in retail) எப்படியோ பாராளுமன்றத்தில் “வாங்கி” விட்டார் ஆனால், இதற்கு சப்புக்கட்டு கொடுக்க, இந்த அந்நிய முதலீட்டால் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பயன் கிடைக்குமாம். அவர்கள் வாழ்வு உயருமாம். என்றெல்லாம் பேசி இருக்கிறார் இந்த அப்பட்ட பொயை வெளிச்சமாக்கும் சில தகவல்களை வர மேலும் படிக்க..

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு 2012 டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் தொழில் முனைவோர், மாணவர்கள், இல்லத்தரசிகள் உள்பட அனைவரும் பங்குபெறலாம். 2012 டிச.11-ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ள இந்த வகுப்பில் பயிற்சி குறிப்பேடு, கையேடு மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. பயிற்சிக் மேலும் படிக்க..

நெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள்

நெற்பயிர்களில் தாக்கும் பூச்சிகளை அழிக்க டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதுச்சேரி மாநில விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் (சொர்ணவாரி, சம்பா, நவரை) நெல் பயிடுகின்றனர். அதில் தோன்றும் குருத்துப் புழுவைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தலாம் என்று புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நெல்லைத் தாக்கும் பூச்சிகளை எவ்வாறு இந்த ஓட்டுண்ணிகளைப் பயன்படுத்தி அழிப்பது என்று காமராஜர் வேளாண்மை மேலும் படிக்க..

டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி

பயறு வகைப் பயிர்களில் கூடுதல் மகசூல் பெற இரு முறை 2 சதம் டிஏபி கரைசலை கைத் தெளிப்பான் கொண்டு தெளிப்பது அவசியம் என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. பயறு வகைப் பயிர்கள்: கொண்டைக் கடலை, உளுந்து, தட்டைப் பயிறு, அவரை, பாசிப் பயறு, கொள்ளு, துவரை, சோயா மொச்சை ஆகிய பயறு வகைப் பயிர்களுக்கு டிஏபி கரைசல் பெரிதும் அவசியமானது. டிஏபி கரைசல் தயாரிப்பு: டிஏபி கரைசலைப் பயிர்களுக்கு தெளிப்பதைவிட அந்தக் கரைசலைத் தயாரிப்பதில் கூடுதல் மேலும் படிக்க..

பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும்

“”பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது,” என்று நமது நெல்லை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேசினார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிரியேட் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பாரம்பரிய நெல் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடந்தது. “நமது நெல்லை காப்போம்’ மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பேசியதாவது: நமது முன்னோர்கள் அறிவின் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை அடையாளம் கண்டுள்ளனர். இதன் மருத்துவ குணங்களையும், கால பருவ நிலைகளையும் அறிந்து, மேலும் படிக்க..

உளுந்து பயிரில் மகசூல் பெருக்க ஆலோசனை

உளுந்து பயிரில் மகசூலை பெருக்க இலை வழி கரைசல் தெளித்து பயன் பெறுமாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். தியாகதுருகம் பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பில் மானாவாரியில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மகசூலை பெருக்க தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தியாகதுருகம் சுற்றுவட்டார கிராமங்களில் மானாவாரி சாகுபடி பயிராக வம்பன் 3,4,5 மற்றும் டி.யு., 94 ஆகிய ரக உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. செடிகள் செழித்து வளர்ந்து தற்போது பூக்கும் தருவாயில் மேலும் படிக்க..

நாற்றங்கால் முறையில் துவரைச் சாகுபடி

பயறு வகைகளில் துவரை முக்கிய உணவுப் பயிராகும். இதை விவசாயிகள் ஊடுபயிராகவோ,வரப்பு ஓரங்களிலோ பயிர்செய்து வருகின்றனர். துவரையைத் தனியாகப் பயிர் செய்து, அதிக பலன் பெற்று உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்கத்தில், வேளாண்மை துறை மூலமாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி துவரையை நாற்றங்கால் அமைத்து பின்பு நடவு செய்யலாம். இம்முறை திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் வட்டாரத்தில் முதன் முதலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து,நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இ.வ.நா.முத்துஎழில் வெளியிட்டுள்ள செய்திக் மேலும் படிக்க..

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை கருத்தரங்கு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வலியுறுத்தினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான அங்கக வேளாண்மை கருத்தரங்கில், இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது: உலகத்தை பயமுறுத்தும் அச்சுறுத்தல் பூமி வெப்பமயமாதல் ஆகும். பூமி வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து, கடலோரப் பகுதிகளில வசிப்பவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் வரும். இதற்கு காடுகளை அழித்தல், பெருகி வரும் மேலும் படிக்க..

அதிக யூரியாவால் நெற்பயிரில் நோயின் தாக்கம் அதிகரிக்கும்

நெற்பயிரில் தழைச்சத்தாக அளிக்கும் யூரியா உரத்தை அதிகமாக இட்டால், நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்றார் வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மைய நோயியல் துறைப் பேராசிரியர் முனைவர் ஆர்.பி. செüந்தர்ராஜன். ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:    நெற்பயிரைத் தாக்கும் முக்கிய பூச்சிகளான இலைப்பேன், தண்டுதுளைப்பான், இலைச்சுருட்டுப்புழு, புகையான், பச்சை தத்துப்பூச்சி மற்றும் கதிர்நாவாய் பூச்சிகளை ஒருங்கிணைந்த முறைகளான மேலும் படிக்க..

யூரியா உற்பத்திச் செலவைக் குறைக்க புதிய கொள்கை

உர மானியத்தைக் குறைப்பதற்காக, யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளில், நாப்தா எரிபொருளுக்குப் பதில் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது என்று நாடாளு மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், கேள்வி நேரத்தின் போது பல்வேறு கேள்விகளுக்கு அந்தத்துறை அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் பதிலளித்தனர். உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, Naptha நாப்தா (பெட்ரோலியம் சார்ந்த நீர்ம எரிபொருள்)வில் இயங்கும் யூரியா உரத் தொழிற்சாலைகள், இயற்கை எரிவாயுவில் மேலும் படிக்க..

சம்பா சாகுபடி பாதிப்பு விவசாயி தற்கொலை

விதர்பா, பஞ்சாப் என்ற தூர தேசங்களில் நடந்து வந்த அவலம் இப்போது நம் ஊரிலும் ஆரம்பித்து விட்டது… வட்டிக்கு கடன் வாங்கி, சாகுபடி செய்த சம்பா பயிரை காப்பாற்ற முடியாத கவலையில், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாகை மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா கூவெட்டான்குடியை சேர்ந்தவர் ராஜாங்கம், 35. இவருக்கு சொந்தமான, ஆறு ஏக்கர் நிலத்தில், சம்பா நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் விஷம் குடித்து, ராஜாங்கம் இறந்து மேலும் படிக்க..

இயற்கை வேளாண் கண்காட்சி

பெங்களூரில் கர்நாடக அரசு வேளாண் துறை சார்பில், 2012 நவ.29-ஆம் தேதி இயற்கை வேளாண்மைக் கண்காட்சி தொடங்குகிறது. கர்நாடக அரசு வேளாண் துறை, பயோ ஃபெச் இந்தியா மற்றும் சர்வதேச இயற்கை வேளாண் மையம் சார்பில் பெங்களூரில் இயற்கை வேளாண்மைக் கண்காட்சி, 2012 நவம்பர் 29-ஆம் தேதி பெங்களூர் அரண்மனை திடலில் தொடங்குகிறது. டிசம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், இயற்கை வேளாண் விவசாயிகள், வேளாண் கருவி உற்பத்தியாளர்கள், இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனையாளர்கள் மேலும் படிக்க..

எண்டோசல்ஃபானை 2 ஆண்டுகள் அனுமதிக்க பரிந்துரை

எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தியாவில் அனுமதிக்கலாம் என்று என்று உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. எண்டோசல்ஃபானை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமித்தது. 2011 மே மாதம் எண்டோசல்பானுக்கு தாற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்த நிபுணர் குழு, அடுத்த மேலும் படிக்க..

நெற்பயிரில் இலைக்கருகல் நோய்

நெற்பயிரில் பாக்டீரியா தாக்குதலால் இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் அப்பன்ராஜ் விடுத்துள்ள் செய்திக்குறிப்பு: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் தற்போது சம்பா பயிரிடப்பட்டுள்ள பயிரில் சில இடங்களில் பாக்டீரியா தாக்கி இலைக் கருகல் நோயின் அறிகுறிகள் காணப்படுகின்றன. நெற்பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காணப்படுவதால் விவசாயிகள் இதனை மஞ்சள் நோய் என தவறாகக் கருதுகின்றனர். அறிகுறிகள் பாக்டீரியா தாக்கிய பயிரில் இலையின் நுனிப் பகுதியிலிருந்து மேலும் படிக்க..

மரம் வளர்ப்பதில் புதுமை

செடி வைத்து நடவு செய்து 2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல் 3 மாத்திலேயே மரமாக உருவாக்கி நெல்லையை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர். நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை துவக்கி மரக்கன்றுகள் வளர்த்து பசுமைப்புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர். விதைகள் பாவு செய்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்த தன்னார்வ இளைஞர்கள், மரத்தின் பெரிய கம்புகளை வெட்டி, நடவு செய்து, இயற்கை உரங்களை போட்டு 90 நாட்களிலேயே மரங்களாக உருவாக்கி மேலும் படிக்க..

பருத்தியில் பூச்சி மேலாண்மை

பருத்தியில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு வழிகளை பார்ப்போமா? இலை தத்துப் பூச்சி மேலாண்மை: எம். சி. யூ 3, எம். சி. யூ 5  மற்றும் எம். சி. யூ 9 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல். விளக்குப் பொறி வைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழித்தல். கிரைசோபா கமீனா என்ற ஒட்டுண்ணியை விடுதல். மழை அதிகமாகப் பெய்யும் காலங்களில், பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்க காலத்திற்கு முன்னதாக மற்றும் பருத்திகளின் இடைவெளியைக் குறைத்தும் பயிரிட வேண்டும். பருத்தி மேலும் படிக்க..

பஞ்சகவ்யாவின் பயன்கள்

இலை பஞ்சகாவ்யாவை செடியின் மேல் தெளித்தால் பெரிய இலைகள் மற்றும் அடர்த்தியான மேற்கவிகையை உருவாக்கும். ஒளிச்சேர்க்கை முறை உருவாகி உயிரியல் திறன், கருத்தொகுப்பு அதிகளவ வளர்ச்சிதை மாற்றத்தை மற்றும் ஒளிச்சேர்க்கையை இயங்கச் செய்யும். தண்டு அடிமரத்தின் அருகில் தண்டுகள் உருவாகும். அவைகள் வலிமையாகவும் மற்றும் அதிகப்படியான பழங்களை முதிர்ச்சியடையச் செய்யும். கிளைகள் பெரியதாகி வளரும். வேர் வேர்கள் மட்டுமீறியும், அடர்த்தியாகவும் இருக்கும் வேர்கள் நிறைய நாட்களுக்கு நன்றாகக் காணப்படும். இந்த வேர்கள் ஆழமாக உட்சென்று பரவி வளர்ந்து மேலும் படிக்க..

முருங்கை சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பம்

முருங்கை மரம் 4-5 அடி உயரம் இருக்கும் போது, அதன் உச்சிக் கொழுந்தை கிள்ளிவிட்டால் அதிக கிளைகள் உண்டாகும். முருங்கை கம்பளிப்புழுவை கட்டுப்படுத்த மண்ணில் வேர் அருகில் விரல் வடிவ பெருங்காயத்தை வைத்தால் போதும். இலை கழிவு மற்றும் இதர கழிவுகளை மரத்தின் அடிப்பாகத்தில் போட்டு எரித்தால், கம்பளிப்புழு தாக்குதல் கட்டுப்படும். செடி முருங்கையில் 3 தடவை மறுதாம்பு பயிர் விடலாம். நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்

நீர் பரிசோதனை அவசியம்

சிறந்த வேளாண்மைக்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் அவசியம். முற்றிலும் ஏரி, குளங்களில் தேக்கிய மழைநீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலை மாறி வருகிறது. ஆறுகள் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்களாலும், தொழிற்சாலைகளாலும் பெருமளவுக்கு மாசுபடுத்தப்படுகின்றன. தற்போது நாம் திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரைப் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நீரின் தன்மை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. நிலம் மேலும் படிக்க..

லாபம் தரும் தீவனப்புல் சாகுபடி

 கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா கடைமடைப் பாசனப் பகுதியான சிதம்பரத்தை அடுத்த மணலூர் கிராமத்தில் மண்ணின் தன்மை மற்றும் இயற்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு அதிக லாபம் தரும் புல்வகை பயிர்கள் பன்னெடுங்காலமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சிதம்பரம் அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.எஸ்.ஜாகீர்உசேன் கடந்த பல ஆண்டுகளாக தீவனப்புல் சாகுபடி செய்து தினந்தோறும் வருமானம் பெற்று வருகிறார். விவசாயி ஜாகீர்உசேன் நல்ல நீரில் தீவனப்புல் சாகுபடியை தனது வயலில் முதலில் சிறிய மேலும் படிக்க..

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிகள்

குறைந்த பரப்பளவு நிலத்தில், அதிக விளைச்சல் காண வேண்டும் என்ற ஆவல் தான் பசுமைப் புரட்சி திட்டங்களுக்கு வித்திட்டது. அதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித இனம் பெருமளவுக்கு பாதிப்புகளை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டால் அந்த ரசாயனங்கள் மனிதனின் உடலில் புகுந்து பல்வேறு நோய்களுக்கும், சுகாதாரக் கேடுகளுக்கும், பக்க விளைவுகளுக்கும் காரணமாகி விடுகின்றன. உதாரணமாக தென்னை மரத்தில் ஏற்படும் மேலும் படிக்க..

கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

புதுக்கோட்டை வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில், கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம், 2012 நவம்பர்  16ம் தேதி நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் அறிவியல் நிலையத்தில் பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கரும்பு சாகுபடியில் உரம் மற்றும் தண்ணீர் விரயம் ஆவதை தவிர்க்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் ஏதுவாக, துல்லிய பண்ணையம் என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பின்பற்றி கரும்பு மேலும் படிக்க..

வேளாண்மை பொருள்கள் பதனிடல் தொழில்நுட்பப் பயிற்சி

சென்னையில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் 2012 டிசம்பர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வேளாண்மை பொருள்கள் பதனிடல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வேளாண்மை பொருள்களை உற்பத்திக்கு பிறகு முறையாக பதப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெரியாததால் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடி வேளாண்மை உற்பத்தி பொருள்கள் விரயம் ஆகின்றன. இந்தியா தானியம் மற்றும் பருப்பு உற்பத்தியில் முதலிடத்திலும், காய்கறி மற்றும் பழ உற்பத்தியில் மேலும் படிக்க..

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காளான் வளர்ப்பு ஒரு நாள் இலவச பயிற்சி வரும் 2012  நவம்பர் 20-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. காளான் உற்பத்தி செய்திட ஆர்வமுள்ள விவசாயிகளும் அரசு சாரா நிறுவன உறுப்பினர்களும் பண்ணை மகளிர் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் தி. செங்குட்டுவன் கேட்டுக் கொண்டுள்ளார். பயிற்சி பெற மேலும் படிக்க..

பருத்தியில் வேரழுகல் நோய்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தியில் ஏற்பட்டு வரும் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ஜெ. கதிரவன். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:    பெரம்பலூர் மாவட்டத்தில் பீ.டி பருத்தியானது அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையால் பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பருத்தி செடிகளில் வேர் அழுகல் நோய், இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் படிக்க..

வம்பனில் இலவச வாழை நார் பயிற்சி

வாழை நார் தொழிர்நுட்பதை பற்றி வம்பனில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திர ஒரு இலவச பயிற்சியை திட்டமிட்டு உள்ளது. இதை பற்றி பேசிய கலெக்டர் மனோகரன் “வாழை சாகுபடி செய்த பின் வாழை தண்டு பகுதிகள் வீணாக படுகின்றன. ஆனால் இந்த வாழை நார் மூலம் பல பொருட்கள் செய்ய முடியும். இவற்றுக்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது” என்றார் இந்த பயிற்சி வரும் 2012 நவம்பர் 5 அன்று வம்பனில் நடக்க இருக்கிறது. இதை பற்றி மேலும் படிக்க..

BT சச்சரவுகள் – 7

மரபணு  மாற்றப்பட்ட விதைகளை வெளி இடங்களில் பரிசோதனை செய்ய கூடாது என்று உச்ச நீதி மன்றத்தால் அமைக்க பட்ட குழு பரிந்துரை செய்து உள்ளது பற்றி ஏற்கனவே படித்தோம். இந்த வழக்கு கடந்த 2012 அக்டோபர் 29 அன்று உச்ச நீதி மன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் வரும் 2012 நவம்பர் 9 அன்று இந்த வழக்கின் விசாரணை தொடரும் என்றனர். மதிய அரசு எதிர் பார்த்த படி மரபணு மாற்ற பட்ட தொழிற் மேலும் படிக்க..

முள் இல்லா மூங்கில் சாகுபடி

மதுரை வனத்துறை சார்பில் வேம்பரளியில் முள்ளில்லா மூங்கில் வளர்ப்பு பற்றி ஆராய்ச்சி நடக்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த முள்ளில்லா மூங்கில் வளர்ப்பது விவசாயிகளுக்கு லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. மதுரை ஆராய்ச்சி வனச்சரகம் சார்பில், நத்தம் ரோடு கடவூர் வேம்பரளியில் 30 ஏக்கர் பரப்பளவில் முள்ளில்லா மூங்கில் அறிமுக சோதனை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 அடி உயரம் வளரும் முள்ளில்லா மூங்கிலின் சுற்றுப்பகுதி பருமனாகவும், உறுதித்தன்மையுடனும், நேர்குத்தாகவும் வளரும் தன்மை கொண்டது. முள்ளில்லா மூங்கிலை ஒரு முறை மேலும் படிக்க..

விதையை காய வைப்பது எப்படி?

விதையை காய வைப்பதின் அவசியம் குறித்து வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார். விதையை காயவைப்பது என்பது விதையின் ஈரபதத்தை பாதுகாப்பான ஈரப்பதம் வரும்வரை காயவைப்பது ஆகும். ஒவ்வொரு விதைக்கும் அதன் தன்மை, சேமிப்பின் நோக்கம், சேமிக்க பயன்படுத்தப்படும் பைகளைப் பொறுத்து பாதுகாப்பான ஈரப்பதம் வேறுபடும். விதையை காயவைப்பது விதையினை உயிருடனும் நல்ல வீரியமுடனும் சேமிக்க முக்கிய காரணமாகும். இல்லையெனில் சீக்கிரமே பூஞ்சானங்களாலும், வெப்பத்தினாலும் மற்றும் அதிக நுண்ணுயிர் தாக்குதலாலும் கெடுகிறது. விதைகளை இரண்டு முறையில் நாம் காயவைக்கலாம். மேலும் படிக்க..

கார்த்திகைப் பட்ட எள் சாகுபடி

கார்த்திகைப் பட்டத்தில் (நவம்பர் – டிசம்பர்) எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், உயர் விளைச்சல் பெற முடியும் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் ந. மேகநாதன் கூறியது:  ரகங்கள்: கார்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு கோ-1, டிஎம்வி-3, டிஎம்வி-5, எஸ்விபிஆர்-1 ஆகிய ரகங்கள் தகுதியானவை. எள் பயிரிடுவதற்கு மணல் பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை.  உழவு முறை: எள் மேலும் படிக்க..

கிருஷ்ணகிரியில் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

கிருஷ்ணகிரியில் இளைஞர்களுக்கு காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்ததுதல் குறித்து இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனமான என்ஐஆர்டி நிதி உதவியுடன் கிருஷ்ணகிரி அணை மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் 2012 நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் இளைஞர்களுக்கு காளான் வளர்ர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து 10 நாள்கள் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சியில் ஆண், பெண் இரு பாலரும் கலந்து மேலும் படிக்க..

நெல் குலைநோயை கட்டுப்படுத்த சூடோமோனஸ்

“நெல் குலைநோய் மற்றும் இலை உறைக்கருகல் நோயை கட்டுப்படுத்த உயிர் எதிர் கொல்லியான சூடோமோனஸ் பிளோரசன்ஸ் பயன்படுத்த வேண்டும்’ என கீழப்பாவூர் உதவி வேளாண்மை இயக்குநர் நல்லமுத்து ராசா விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார். நெல் பயிரில் குலைநோய் மற்றும் இலை உறைக்கருகல் நோயை கட்டுப்படுத்த சிறந்த உயிர் எதிர்கொல்லியாக சூடோமோனஸ் பிளோரசன்ஸ் திகழ்கிறது. சூடோமோனஸ் நுண்ணுயிரியானது விதை மற்றும் மண் வழி பரவும் நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. பயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்ட வல்லது. உயிர் மேலும் படிக்க..

இலவச விதை உற்பத்தி பயிற்சி

ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில்  உணவுப்பயிர், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துக்களில் விதை உற்பத்தி செய்வது குறித்து தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2012 அக்டோபர் 31-ல் நெல்லில் தரமான விதை உற்பத்தி, 2012 நவம்பர் 1-ல் துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறில் தரமான விதை உற்பத்தி, 2012 நவம்பர் 2-ல் நிலக்கடலையில் தரமான விதை உற்பத்திக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் விதை உற்பத்தி செய்வதற்கான மேலும் படிக்க..

BT சச்சரவுகள் – 6

மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை பற்றி எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில்  உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி கபாடியா கொண்ட பெஞ்ச் ஐந்து விஞானிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. இந்த  குழுவின் இடை கால அறிக்கை பற்றி நாம் ஏற்கனவே படித்தோம். இந்த அறிக்கையை முழுமையாக இங்கே படிக்கலாம். மரபணு தொழிர்நுட்பதை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் பலரின் வாக்குமூலங்களை கேட்டு அதன் பின் எழுத பட்ட ஓர் அறிக்கை இது இந்த வழக்கின் அடுத்த மேலும் படிக்க..

BT சச்சரவுகள் – 5

மரபணு மாற்றப்பட்ட விதைகளை பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்கின்றன சென்ற மாதம், மதிய பாராளுமன்ற குழு, மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் தொழிர்நுட்பதையும் தடை செய்ய பரிந்துரை செய்தது. ஆனால் பிரதம மந்திரியின் விஞான ஆலோசனை குழு இதற்கு மாறாக தொழிர்நுட்பதை வேகமாக பரப்ப பரிந்துரை செய்தது இப்போது, இன்னொரு திருப்பமாக, சுப்ரீம் கோர்ட்டில் மூலமாக வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்  மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கு தலைமை நீதிபதி மேலும் படிக்க..

வாழையில் நூற்புழு கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வாழைகளில் நூற்புழுக்கள் மற்றும் நோய்கள் அதிகளவு சேதம் விளைவிக்கின்றன. நூற்புழுக்களால் வாழையில் 10 முதல் 50 சதம் வரை மகசூல் குறைப்பு ஏற்படுகின்றன. இந்த நோய்களின் அறிகுறிகள் பற்றியும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும் பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசியர்கள் பூர்ணிமா மற்றும் கி.மணி ஆகியோர் கூறியது: வாழையைத் தாக்கும் நூற்புழுக்களில், வேர் அழுகல் நூற்புழு, வேரைக் குடையும் நூற்புழு, சுருள்வடிவ நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு ஆகிய முக்கியமானவையாகும். 3000 புழுக்கள் மேலும் படிக்க..

மஞ்சளில் நோய் மேலாண்மை

தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பயிராக மஞ்சள் விளங்குகிறது. பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் மஞ்சளைப் பரவலாகத் தாக்குகின்றன. பூஞ்சாண நோய்களில் இலைப்புள்ளி, செந்நிற இலைக் கருகல் நோய், வேர் அழுகல் நோய்கள் மஞ்சள் பயிரைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய்களின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையப் பயிர் நோயியல் துறை உதவிப் பேராசியர் கி.கல்பனா கூறுவது: இலைப்புள்ளி மேலும் படிக்க..

மேம்படுத்தப்பட்ட கோனோ வீடெர்

துரை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுவை என்ற கிராமத்தை சேர்ந்தவர். 38 வயது ஆனவர். நெல் மற்றும் பருப்பு சாகுபடி செய்பவர். இவர் ராஜராஜன் என படும் SRI நெல் சாகுபடியில் பயன் படுத்த படும் கோனோ வீடெர் என்ற இயந்திரத்தை மாற்றி அமைத்து விவசாயிகளுக்கு பயன் படும் படி செய்து உள்ளார். இந்திய அரசாங்கத்தால் 2010 வருடத்தில் விவசாய கண்டுபிடிப்புக்காக விருது வழங்கப்பட்டார் இவரின் கண்டுபிடிப்பு பற்றி தெரிந்து கொள்வோம்         மேலும் படிக்க..

பூச்சி மருந்துகளால் அழிந்து வரும் பறவை இனங்கள்

“பெருகி வரும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு காரணமாக, வாரம் ஒரு பறவையினம் அழிந்து வருகிறது,’ என கானுயிர் வார விழாவில் கவலை தெரிவிக்கப்பட்டது. பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக கானுயிர் வாரத்தை முன்னிட்டு சிறப்பு கருத்துரங்கு நடந்தது.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,” ஒரு புலி வாழ 25 சதுர கி.மீ., வனப்பகுதி தேவை. அத்தகைய ஒரு காட்டில் அனைத்து உயிரினங்களும் வாழும். மேலும் அங்கு மேலும் படிக்க..

காளான் வளர்ப்பு பயிற்சி

ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் உணவுக்காளான் வளர்ப்பு பயிற்சி 2012 அக்.17-ல் தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது. தொழில் முனைவோரை உருவாக்கும் இந்தப் பயிற்சியில் உணவுக் காளான்களின் வகைகள், வளர்ப்பு முறைகள், தேவைப்படும் பொருட்கள், குடில் அமைப்பு மற்றும் பராமரிப்பு, சந்தை வாய்ப்பு மற்றும் காளானில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு முறைகள் விரிவாகப் பயிற்றுவிக்கப்படும். காளாண் வளர்ப்பில் ஆர்வமுள்ள ஊரக இளைஞர்கள், மகளிர் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் மேலும் படிக்க..

பிசான நெல் நடவுக்கு முன் பசுந்தாள் விதைப்பு

“பிசான நெல் நடவுக்கு முன் பசுந்தாள் உரப்பயிர் விதைப்பு செய்ய வேண்டும்’ என கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நல்ல முத்துராசா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது மண் வகைகளில் கரிம பொருட்கள் அதாவது அங்ககப் பெருட்களின் அளவும், தழைச்சத்தின் அளவும் மிகவும் குறைவாக உள்ளது.மண் வள மேம்பாட்டில் இவையிரண்டும் இரண்டு கண்கள். மண் வளத்தை மேம்படுத்துவதற்கு கரிமப் பொருள் மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகப்படுத்த வேண்டும். கரிம தழைச்சத்து பெறுவதற்கு பசுந்தாள் மேலும் படிக்க..

துவரை சாகுபடியில் நாற்று விட்டு நடும் முறை

துவரை சாகுபடியில் நாற்று விட்டு, நடும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டலாம். துவரையை நேரடியாக விதையை ஊன்றுவது வழக்கம். தற்போது, நெற்பயிரைப் போல், துவரையையும் நாற்று விட்டு நடும் முறை அறிமுகமாகி உள்ளது. கோபி வோளண் உதவி இயக்குனர் ஆசைத்தம்பி கூறியதாவது: பொதுவாக, பயறு வகைகளை நாற்று நடும் பழக்கம் இல்லை. துவரை போன்ற பயறுகளை, நாற்று விட்டு, நடும் போது அதிக மகசூல் கிடைப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி

இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்வது என்று பாப்போம் தேவையான பொருட்கள் – பூண்டு – 300 கிராம், மண் எண்ணை 150 மிலி. பூண்டை மண் எண்ணையில் 24 மணி நேரம் ஊற வைக்கவும் 60 லிட்டர் நீரில் சேர்த்து ஒரு ஏகர் நிலத்தில் பயன் படுத்தலாம் கட்டு படுத்த படும் பூச்சிகள்: பருத்தி காய் துளைப்பான், அசுவினி, படை புழு, நெல் செம்புள்ளி நோய், கொலராடோ வண்டுகள், பருத்தி சிவப்பு பூச்சி, மேலும் படிக்க..

பஞ்சாபின் நிலத்தடி நீர் பிரச்னை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சாப் மாநிலம் பசுமை புரட்சியின் ஒரு வெற்றி சின்னமாக இருந்தது. இந்திய முழுவதிற்கும் உணவு விளைவிக்கும் மாநிலமாக பெயர் எடுத்தது. இப்போது, பஞ்சாப் மாநிலத்தில் விவசாயம் ஒரு பெரிய நெருக்கடியை சந்திக்கிறது. நிலத்தில் நீர் மட்டம் மிகவும் குறைந்து வருவது ஆய்வுகளில் தெரிந்து உள்ளது. ஐந்து நதிகள் பாயும் மாநிலத்தில் இப்போது நீர் பற்றாக்குறை இந்த நிலைமைக்கு வர காரணம் என்ன? பசுமை புரட்சி என்ற பெயரில் வருடத்தில் hybrid விதைகள் மேலும் படிக்க..

தென்னையை தாக்கும் "பென்சில் பாயிண்ட்' நோய்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னையில் நுண்ணூட்ட சத்து குறைபாடால் “பென்சில் பாயிண்ட்’ என்ற புதிய நோய் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில், 16 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆற்று படுகை பகுதிகளான பாரூர், அரசம்பட்டி, புலியூர், பெண்டரஹள்ளி, கீழ்குப்பம், புங்கம்பட்டி, மருதேரி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் குட்டை மற்றும் நெட்டை ரக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டாக தென்னையில் மேலும் படிக்க..

தர்ப்பூசணி சாகுபடி

வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிடப்படுகிறது. இப்பயிரில் உள்ள பல ரகங்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும், மண் வகைகளிலும் குறைந்த செலவில் சாகுபடி செய்து அதிக லாபத்தை தரக்கூடியதாகும். விவசாயிகள் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து அதிக வருவாயைப் பெறலாம். இது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல தோட்டக்கலைத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கே.மணிவண்ணன் தெரிவித்தது:      தர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் மேலும் படிக்க..

தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை

 திருநெல்வேலி மாவட்டம்,பாவூர்சத்திரம் பகுதியில் தரிசு நிலங்களில் அதிகமாக சோற்றுக் கற்றாழை பயிரிடப்பட்டு வருகிறது. சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும். Courtesy: Dinamani மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான அளவில் நடைபெற முடியாத நிலையில் மூலிகைப் பயிரான சோற்றுக் கற்றாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது. இந்தப் பயிர் அதிகளவில் தரிசுநிலப் பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது. ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர், பாலில் மேலும் படிக்க..

வெட்டிவேர் நாற்றுகள்

வெட்டிவேர் மகிமையை நாம் ஏற்கனவே படித்து உள்ளோம்.இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது: இது ஒரு லாபகரமானபயிர். இதற்கு அதிக ஆள் தேவையில்லை. அதிக தண்ணீர் தேவையில்லை. அதிக வெயில் தேவையில்லை. அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை. வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது. பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50,000 வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன. மேலும் படிக்க..

வெங்காயதை தாக்கும் நோய்கள்

உழவர்களால் சாம்பல்பூச்சி என்று அழைக்கப்படும் இலைப்பேன்கள் வெங்காய இலைகளின் சாற்றை உறிஞ்சி சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் இலைகள் வெளுத்துக் காணப்படும். ஒளிச்சேர்க்கை குறைவதால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். தீவிரமாகத் தாக்கப்பட்ட பயிர் காய்ந்து, கருகியதுபோல காணப்படும். இதன் தாக்குதல் பொதுவாக குளிர்காலப்பயிரில் அதிக அளவில் காணப்பட்டாலும் தொடர்ந்து வெங்காயம் பயிரிடப்படும் இடங்களில் இதன் தாக்குதல் வருடம் முழுவதும் காணப்படும். பூசண, நச்சுயிர் நோய்களின் தாக்குதலை அதிகப்படுத்தும். இதனைக்கட்டுப்படுத்தும் வழிகள் தொடர்ந்து வெங்காய சாகுபடியினை தவிர்த்து, முறையான மேலும் படிக்க..

BT சச்சரவுகள் – 4

மரபணு மாற்றபடும் தொழிற் நுட்பத்தை (Bt, Genetically modified crops) ஆதரிப்பவர்கள் கூறும் ஒரு காரணம் இது: இந்தியாவின் ஜன தொகை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் உணவு வழங்க நாம் மரபணு மாற்றப்படும் விதைகளை பயன் படுத்த வேண்டும் இந்த கருத்தை மறுத்து உள்ளார்கள், வெளி நாட்டை சேர்ந்த நிபுணர்கள். இந்த தொழிற் நுட்பத்தை பயன் படுத்தும் விவசாயிகளுக்கு அதிக ஈடுபொருட்கள் செலவு ஆகிறது. அதிகம் நீர் தேவை படுகிறது. புது விதமான பூச்சி தொல்லைக்கு ஆட்படுகின்றன  என்கிறார்கள் அவர்கள் மேலும் படிக்க..

தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்

காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலை, நீள் வாட்டத்தில் வெட்டி, நெல் நாற்றை வளர்பதற்கு உபயோகப்படுத்தலாம். பாட்டிலின் இந்த பாதி பகுதியை, வண்டல் மண், மண்புழு உரம் மற்றும் நெல் உமியை 3:2:1 விகித கலவையை கொண்டு நிரப்ப வேண்டும்.  தோராயமாக, ஒரு பாதி பாட்டிலுக்கு, 300 கிராம் கலவை தேவைப்படும். அமிர்தபாணி/பிஜாம்ரூத்துடன் (இயற்கை உரங்கள்) நேர்த்தி செய்யப்பட்ட விதையை இந்த பாட்டிலில் உள்ள படுக்கையில் விதைக்க வேண்டும்.  ஒவ்வொரு படுக்கையிலும், 10 கிராம் மேலும் படிக்க..

இயற்கை விவசாய புத்தகங்கள்

நுண்ணுயிர் உரங்கள் இலவச பதிப்பு         நெற் பயிருக்கு நீல பச்சை பாசி உயிர் உரம்       உங்கள் பிரதிகள் கிடைக்க அணுக வேண்டிய முகவரி: பேராசிரியர், Department of Agricultural Microbiology , தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோவை -641 003 தொலைபேசி:: 04226611294, ஈமெயில்:microbiology@tnau.ac.in

தென்னை மரங்களின் நண்பர்கள்

தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வரும் சிறு மற்றும் குறு விவசாயிகளை தானே புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள், குறைந்து வரும் கொள்முதல் விலை போன்ற அதிகளவு பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்னை சாகுபடியில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்கவும் தென்னை வாரியத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் தென்னை நண்பர்கள் திட்டம் மிகப்பெரிய அளவில் கிராமப்புறங்களில் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல விரிவாக்கத் மேலும் படிக்க..

வேளாண் வருவாய் பெருக சில சிந்தனைகள்

கி. சிவசுப்பிரமணியன் இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மை. மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்வாதாரமாகவும், தொழில்துறைக்கான மூலப் பொருள்களை வழங்கும் துறையாகவும், மொத்த விவசாயிகளில் 75 சதவிகிதத்திற்கு மேல் சிறு மற்றும் குறு விவசாயிகளைக் கொண்டுள்ள தொழிலாகவும் வேளாண்மை விளங்குகிறது. இதுபோன்ற இந்திய வேளாண்மை பற்றிய கருத்துகளைப் பல ஆண்டுகளாக அனைவரும் அறிவோம். ஆனால், வேளாண்மையின் நிலை இப்போது தலைகீழாக மாறிச் சென்று கொண்டுள்ளது. இந்நிலை எங்கு சென்று நிற்கும் என்பதைப் பற்றி அறுதியிட்டுக் கூறும் நிலையில் விஞ்ஞானிகளும் இல்லை. மேலும் படிக்க..

இயற்கை விவசாயமே நம்மை வாழ வைக்கும் – நம்மாழ்வார்

“”இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும்” என நெல்லையில் நடந்த உணவுத் திருவிழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார். நெல்லை தினமலர், நன்னெறித் தொடர்பகம், ஸ்ரீராம் குரூப்ஸ், ஜானகிராம் ஓட்டல், ராஜா போட்டோ ஸ்டூடியோ, சிகரம் நல்லெண்ணெய் ஆகியன இணைந்து நெல்லை டவுனில் இயற்கை உணவுத் திருவிழாவை நடத்தியது. விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது பசு மாட்டை தாயாகவும், தெய்வமாகவும் பார்கிறோம். பசுவின் மூலம் பெறப்படும் பஞ்ச கவ்யம் மேலும் படிக்க..

பிளாஸ்டிக் எமன் – 2

பிளாஸ்டிக் பைகள் மூலம் விளையும் தீங்குகள் பார்போமா இவை சாக்கடையில் தங்கி நீர் ஓட்டத்தை தடை பண்ணுகின்றன. இயற்கையாக நீரில் மக்காத தன்மையால் இவை நீரோட்டத்தை நிறுத்துகின்றன. மழை பெய்தால், நகரங்களில் நீர் தேக்கம் நேர இது காரணம் பிளாஸ்டிக் பைகள் எல்லா இடங்களில் பறந்து குப்பையாக கிடக்கின்றன. மழை பெய்யும் போது, இவற்றில் நீர் தங்குகிறது. இவற்றில் டெங்கு சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் முட்டை இட இந்த நீர் தேக்கங்கள் உதவுகின்றன காவேரி மேலும் படிக்க..

பிளாஸ்டிக் எமன்

பிளாஸ்டிக் எமன் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. ஆனால், ஒரு படத்தின் வலிமை ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாது என்ற பழமொழி போல இதோ சில படங்கள்: முதல் படம் ஈரோடின் அருகே உள்ள குமாரபாலயத்தின் அருகே உள்ளே காவேரி பாலம் இரண்டாவது படம் மும்பை பீச் அருகே நாம் எல்லோரும் இப்படி ஒரு படங்களை பார்க்கும் போது மனம் நோகிறோம். ஆனால் பின்பு பழயபடி நம் வாழ்க்கையில் செல்கிறோம். நம்மால், எதாவது செய்ய முடியுமா? Wait மேலும் படிக்க..

சிறுநீரை உரமாக பயன் படுத்துவது எப்படி

மனித சிறுநீரின் உர மகிமையை பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம். உங்கள் வீட்டில் உள்ள காய்கறி தோட்டத்திற்கு நீங்கள் சிறுநீரை எப்படி உரமாக பயன் படுத்தலாம் என்பதை பார்க்கலாமா ?   கழிவறையில் கோக் பெப்சி பாட்டில் வைத்து கொள்ளவும். நீங்கள் சிறுநீர் செல்லும் பொது இந்த பாட்டிலில் சிறுநீரை சேகரிக்கவும் சேர்த்த சிறுநீரில் ஒன்றுக்கு பத்து (1:10) என்ற விகிதத்தில் நீரை சேர்க்கவும் சேர்த்த கலவையை காய்கறி செடிகளின் வேர் பகுதியில் விடவும் தினமும் மேலும் படிக்க..

இயற்கை உரமான ஃயூமிக் அமிலம்

விவசாயிகள் நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்தினால் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கமுடியும் என்று வேளாண்மை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இயற்கை உரங்களையும் ரசாயன உரங்களையும் சரியான அளவில் பயன்படுத்தும் போது மண் வளம் காக்கப்படுவதுடன் விளைச்சல் அதிகரிக்கிறது. ஃயூமிக் அமிலம் (Humic acid) என்ற இயற்கை மூலப்பொருளைப் பயிர்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். ஃயூமிக் அமிலம் என்பது பூஞ்சாணம், நிலத்தடிநீர், புதைப்பொருட்களின் சிதைவுகளின் மூலம் உருவாகும் பல அமிலங்கள் சேர்ந்த கலவையாகும். ஃயூமிக் அமிலத்தை ஒரு மேலும் படிக்க..

பூசணி செடியில் சிவப்பு வண்டு

சிவப்புபூசணி வண்டு புடலை, பூசணி, வெள்ளரி, தடியன்காய், பீர்க்கன்காய் போன்றவற்றை தாக்கக்கூடும். வண்டுகள் இலைகள், பூக்கள் போன்றவற்றில் வட்டவடிவமான துவாரங்களை உண்டுபண்ணி, திசுக்களை கடித்து உண்டு சேதம் விளைவிக்கின்றன. இளம் செடிகளில் வண்டுகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.தாக்குதல் அதிகமாக இருக்கும்போது இலைகள் எல்லாம் வண்டுகளால் துளைக்கப்பட்டு சேதப்படுத்தப் படுவதால் செடிகள் மடிந்துவிடக்கூடும். வளர்ந்த செடிகளின் இலைகளில் அனேக துவாரங்கள் உண்டுபண்ணினாலும் அவை மடிந்துவிடுவதில்லை. ஆனால் செடியின் வளர்ச்சி அதிகளவில் பாதிக்கப்படுகிறது. மண்ணில் இருக்கக்கூடிய புழுக்கள் செடிகளின் வேர்களைக் மேலும் படிக்க..

மக்காச்சோள மேக்சிம்

மக்காச்சோளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் பயன்கள் மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கும் விளைச்சல் 20 சதம் வரை கூடும் வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கும் பயன்படுத்தும் முறை அளவு:               ஏக்கருக்கு 3 கிலோ தெளிப்பு திரவம்:               200 லிட்டர் தெளிக்கும் பருவம்:               ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் பருவம் தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும் மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் வினையியல் துறை பயிர் மேலாண்மை மேலும் படிக்க..

வாழையில் உர மேலாண்மை பயிற்சி

புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வாழையில் உர மேலாண்மைப் பயிற்சி முகாம் செப். 25-ல் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழையில் புவன், ரொபஸ்டா, கிராண்ட் நையன் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வாழை சாகுபடியில் உர மேலாண்மை செய்தால் மட்டுமே நல்ல செழிப்பான மரங்களிலிருந்து அதிக எடை கொடுக்கும் வாழைத் தார்களைப் பெற முடியும். வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 25.9.2012-ல் வாழையில் மேலாண்மை குறித்த மேலும் படிக்க..

வேலியே பயிரை மேய்வது எப்படி?

காடுகள் நிறைந்த இடங்கள் இந்தியாவில் மிகவும் குறைந்து விட்டன. ஒரு காலத்தில் 33% சதவீதம் வரை இருந்த காடுகள் இப்போது எங்கே இருக்கின்றன  என்று தேடி போக வேண்டிய நிலைமை இப்போதும் சில அடர்ந்த காடுகள் சத்திஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ளன இந்த காடுகளின்  துர் அதிர்ஷ்டம் – இவற்றின் உள்ளே   உள்ளே நிறைய தாதுக்கள் உள்ளன.  இந்த இடங்களில் தாதுக்களை தோண்டி எடுக்க அனுமதி கேட்டு பெரிய பெரிய நிறுவனங்கள் கியீவில் நிற்கின்றன. மேலும் படிக்க..

எண்ணூர் திரவ பெட்ரோலிய வாயு முனைய பொது விசாரணை

எண்ணூர் துறைமுகத்தில் உள்ளே வர இருக்கும் திரவ பெட்ரோலிய வாயு முனையதிற்கு (Liquified Natural Gas terminal) பொது விசாரணை (Public Hearing) நேற்று (செப்டம்பர்  13 2012 ) அன்று முடிந்தது பெரிய அளவில் சுற்று சூழல் பாதிக்க படும் திட்டங்களுக்கு மதிய அரசின் சட்ட படி திட்டம் செயல் படுத்த படும் ஊரில் பொது விசாரணை (Public hearing) நடத்த பட வேண்டும் இப்படி எண்ணூர் துறைமுக திட்டத்திற்கு நேற்று பொது விசாரணை நடந்து மேலும் படிக்க..

ஊட்டியின் பயங்கர முகம் – Part 2

தினமலரின் வந்த பைகாரா எரி கழிவு நீர் விவகாரம் பற்றி சிறிது ஆராய்ச்சி செய்ததில் இந்த விஷயங்கள் தெரிந்தன இந்த நிறுவனம் Sterling Biotech பெயர் என்பதாகும். இது ராலிஸ் (Rallis) என்ற நிறுவனத்தின் ஒரு பகுதி (ராலிஸ் டாடா குழுமத்தின் ஒரு பகுதி) இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை ஊட்டியில் சோலையூர் என்ற கிராமத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் தமிழ் நாடு மின்சார நிறுவனத்துடன் (TNEB) போட பட்ட ஒப்பந்த படி, ஒவ்வொரு நாளும்  5000 லிட்டர் மேலும் படிக்க..

ஊட்டியின் பயங்கர முகம்

அந்த போட்டோவை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை. சகலவிதமான கெமிக்கல் விஷத்தையும் சுமந்துகொண்டு ஆறு போல அந்த தண்ணீர் வளைந்து, நெளிந்து போய்ச் சேர்ந்து கொண்டு இருந்தது, சேர்ந்த இடம் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக மழைநீர் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் அணைப்பகுதியாகும். அழகான, பசுமையான, குளுமையான ஊட்டியைத்தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஊட்டியை நாசப்படுத்திக் கொண்டிருக்கும் வகையில் அங்கே இன்னொரு கோரமுகம் இருப்பது நிறையபேருக்கு தெரியாது. அந்த கோரமுகம் அங்குள்ள பைகாரா அணைப்பகுதியில் மருந்து கம்பெனி என்ற பெயரில் மேலும் படிக்க..

இயற்கை விதை நேர்த்தி பீஜ மித்ரா செய்வது எப்படி

நம் நாட்டில் பசுமை புரட்சி வருவதற்கு முன்னால் நம் விவசாயிகள் நாட்டு பசு சாணம் மற்றும் மூத்திரம் மூலம் விதை நேர்த்தி செய்து வந்தனர். மிகவும் திறமை வாய்ந்த இந்த முறை பசுமை புரட்சி வந்த பின் மறக்கடிக்க பட்டது. இதற்கு பதிலாக விஷ ரசாயன பூச்சி மருந்துகள் பரிந்துரை செய்ய பட்டன. இவற்றால், நிலத்தில் உள்ள நன்மை தரும் பூஞ்சணங்களும், பூச்சிகளும் கொள்ள பட்டன. இப்போது ஜீரோ பட்ஜெட் விவசாயம் பரப்பி வரும் சுபாஷ் பலேகர் மேலும் படிக்க..

வெண்மை புரட்சி தந்தை குரியன் மறைந்தார்

பசுமை தமிழகம் வெண்மை புரட்சியின் வித்தகரான டாக்டர் குரியனுக்கு தன்னுடைய மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறது கேரளத்தில் பிறந்து, குஜராத்தில் தன முழு வாழ்கையும் பால் பண்ணை, மாடுகள் வைத்து இருந்த சிறு விவசாயிகளுக்க அர்ப்பணித்து கொண்டார். சென்னையில் கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்த பின் குஜராத் சென்றவர், அங்கேயே தங்கி விட்டார். அமுல் என்ற ஒரு நிறுவனத்தை ஆனந்த் என்ற சிறு ஊரில் ஆரம்பித்து, 14000 கோடி வரை வியாபாரம் செய்ய வைத்தார். கூட்டுறவு மேலும் படிக்க..

செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம்

“தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது’ என, நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் ஜோதேடியஸ் தெரிவித்துள்ளார். நாமக்கல் வட்டாரத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணை கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 15 அடி நீளம், ஆறடி அகலம், இரண்டு அடி ஆழம் உள்ள எரு மேலும் படிக்க..

ஆட்டு கிடைகள் மூலம் ஆத்தூர் பகுதியில் இயற்கை உரம்

ஆட்டு கிடைகள் வைத்து இயற்கை உரம் பெறுவதை ஏற்கனவே படித்து உள்ளோம். அதை பற்றிய தினமலரில் வந்த இன்னொரு செய்தி: ராமநாதபுரம் மாவட்ட செம்மறி ஆடுகள் வளர்ப்போர், “நடோடிகள்’ போன்று, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, ஆடுகள் மேய்த்து வருகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், செம்மறி, மாலாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. அம்மாவட்டங்களில், கால்நடை மேய்ச்சல் நிலம் போதியளவில் இல்லாததால், ஆடு வளர்ப்பவர்கள், சேலம், ஆத்தூர், தலைவாசல், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, மேலும் படிக்க..

நர்கோண்டம் ஹோர்ன்பில் பிழைத்தது!

அந்தமான் மற்றும்  நிகோபார் தீவுகளில் உள்ள ஒரு தீவில் Narcondam Hornbill என்ற ஒரு பறவை இனம் உள்ளது. ஹோர்ன்பில் என்ற பறவை பெரிய பறவை. மரங்களின் உச்சிகளில் வாழும். எப்போதும் பசுமையாக உள்ள காடுகளில் (Evergreen forests) மட்டுமே வாழும் இந்த பறவையை மனிதன் சகடு மேனிக்கு தீர்த்து கட்டி விட்டான். இதற்கு காரணம் இந்த பறவையின் தலையில் உள்ள அலங்கார கொம்பே. இது ஒரு அழகு பொருள் ஆகவும் சேகரிக்க படும் ஒரு பொருள் மேலும் படிக்க..

வறட்சியில் கை கொடுக்கும் ஜே-13 நெல்

மதுரையில் விவசாயிகள் அணைக்கட்டு பாசனம் கிடைக்காத சூழ்நிலையில் நெல் சாகுபடியை கிணற்றுப்பாசனம் கிடைக்கக்கூடிய நெடுங்குளம், சோழநேரி, தேனூர், திருபுவனம் மற்றும் சோழவந்தான் என்ற இடங்களில் செய்கிறார்கள். சில நேரங்களில் கிணற்றுநீர் சற்று குறைந்துவிடுவதும் உண்டு. மதுரை விவசாயிகள் துணிவே துணை என்ற நம்பிக்கையில் சோதனையிலும் சாதனை படைக்கும் நெல் ரகங்களை சாகுபடி செய்கின்றனர். மதுரை விவசாயிகள் ஜே-13 என்ற 100 நாள் நெல் ரகத்தினை சாகுபடி செய்கிறார்கள். இந்த ரகத்திற்கு செழிப்பைக் கொடுக்க வயலுக்கு கணிசமான அளவு மேலும் படிக்க..

திசு வாழை சாகுபடி

விருத்தாசலம் பகுதியில் திசு வளர்ப்பு வாழையான கிராண்ட் நைன் ரக வாழையை சாகுபடி செய்து நல்ல லாபம் கிடைப்பதாக இளைஞர் ஒருவர் தெரிவிக்கிறார். தற்போது திசு வளர்ப்பு வாழைக்கன்றான ஜி9 வாழைப்பழம் பார்வைக்கு கவர்ச்சியாக இருப்பதால் அவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கிராண்ட் நைன் எனப்படும் ஜி9 வாழை விற்பனைக்கு வருகிறது.இதைப் பார்த்த விருத்தாசலத்தை அடுத்த சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த ப.வேல்முருகன், தானும் இந்த மேலும் படிக்க..

மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி

“நாமக்கல் வேளாண் அறிவில் நிலையத்தில், வரும் 2012 செப்டம்பர் 11ம் தேதி, மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். பயிற்சியில், மண்புழு உரம் தேர்வு செய்தல், தொட்டி முறை, குவியல் முறை மண்புழு உரம் தயார் செய்தல், கோழிக் கழிவில் இருந்து மண்புழு உரம் தயார் செய்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மேலும் படிக்க..

வெட்டிவேர் சாகுபடி

வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல் வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக்கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டிவேர் என வழங்கப்படுகிறது. இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மேலும் படிக்க..

திராட்சைக்கு போர்டோ கலவை தயாரித்தல் எப்படி

போர்டோ கலவை ஒரு நுண்ணு¡ட்டக்கலவை, இது அடிசாம்பல் நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. 1 சதவித போர்டோக் கலவை தயாரிக்கும் முறை: 400 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் நீரில் தனியாகக் கரைத்து வைக்கவம். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுடன் கலக்கவும். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுக்குள் ஊற்றும் போது சுண்ணாம்புக் கரைசலைத் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டே மேலும் படிக்க..

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு அறுக்கும் கருவி

கரும்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில்நுட்பம் “நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி’ தொழில்நுட்பமாகும். இதற்கு 500லிருந்து 650 கிலோ விதைக்கரும்பு போதுமானதாகும். பருக்களுடன் சிறிது கரும்புத் தண்டும் பெயர்த்து எடுத்து பிளாஸ்டிக் குழித்தட்டில் மக்கிய தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு எரு இட்டு பருவை குழியில் நட்டு வைத்து இத்தட்டுக்களை பசுமைக்குடிலில் வைத்து நாற்று உற்பத்தி செய்து தரமான நாற்றுக்களை வளர்க்க வேண்டும். ஒரு மாத வயதுடைய நாற்றுக்களை / வயலில் 5 அடிக்கு 2 அடி மேலும் படிக்க..

உரச் செலவை குறைக்கும் வழிமுறைகள்

விவசாயத்தில் முக்கிய இடுபொருள்களான விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், விவசாயக் கூலி ஆகியவற்றின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு உரங்களின் மானிய செலவைக் குறைப்பதற்காக யூரியா தவிர்த்து ஏனைய உரங்களின் விலை கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. இந்த காரணங்களால் சாகுபடி செலவைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தின் மூலம் உர செலவைக் குறைக்கலாம் என கீழ்கண்ட வழிமுறைகளை கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் மேலும் படிக்க..

வாழை சாகுபடியில் சொட்டு நீர் பாசனத்தில் பயன்கள்

சொட்டு நீர் பாசனத்தால் வாழையில் நல்ல பலன் பெறலாம் என்று மதிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Research Centre for Banana (NRCB)) தலைவர் முஸ்தபா கூறினார். வாழைக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் 40% சதவீதம் வரை நீரை சேமிக்கலாம் என்றார் அவர். மகாராஷ்டிரா, குஜராத் ஆந்திரா மாநிலங்களில் சொட்டு நீர் பாசனம் வாழைக்கு நல்ல மகசூல் கிடைபதாக அவர் கூறினார். வாழை ஒரு நீர் விரும்பி பயிர். டெல்டா மாவட்டங்களிலேயே நீர் பிரச்னை மேலும் படிக்க..

போபால் விஷ வாயு வழக்கு

போபால் விஷ வாயு கசிவு ஞாபகம் இருக்கிறதா? 1984 வருடம், Dec 2 விடியற் காலை, Methyl Isocyante என்னும் ரசாயனம் தயாரிக்கும ஆலையில் இருந்து விஷ வாயு வெளி ஏறியது உலகத்தில் மிக பெரிய ரசாயன விபத்தான இதில் 2000 மேற்பட்ட பேர் உயிர் இழந்தனர். அப்போது 1987 வருடம் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர பட்டது அப்போது இருந்து இப்போது வரை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. மத்ய பிரதேசம் ஹை கோர்டில் இந்த வழக்கு மேலும் படிக்க..

கேரளாவை பயமுறுத்தும் ஆப்ரிக்க ராட்சச நத்தை

கேரளாவில் ராட்சச ஆப்ரிக்க நத்தை பெருகி வருகிறது. இதனால், வேளாண்மையும் சுற்று சூழலும் கெட்டு வருகிறது. உலக மயமாக்கல் மூலம் வர்த்தகம் அதிகம் ஆகி கொண்டே வருகிறது. கண்டைனர் Containers மூலம் பொருட்கள் ஒரு கண்டத்தில் இருந்து எளிதாக கப்பல் மூலம் இன்னொரு கண்டத்திற்கு போகிறது. அப்போது, அவற்றோடு சேர்ந்து, ராட்சச ஆப்ரிக்க நத்தை இனமும் கேரளாவிற்கு வந்து உள்ளது. இந்த இனத்திற்கு இங்கே இயற்கையான எதிரி இல்லாதால், தாறு மாறாக பெருகி வருகிறது. நிலத்தில் உள்ள மேலும் படிக்க..

வெப்பத்தை குறைக்க புங்கன் மரங்கள்

சென்னை நகரில், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்க, ஏராளமான புங்கன் மரங்களை நட வேண்டுமென்று சமீபத்திய ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், தற்போதுள்ள வெப்ப நிலையில் 3 முதல் 5 டிகிரி வெயிலை குறைக்க முடியுமென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமி வெப்பமாதலை தடுப்பதில் மரங்களின் பங்கு என்பது குறித்து வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் மாநில வன ஆராய்ச்சி மையத்தின் ஓய்வு பெற்ற துணை வன பாதுகாவலர் ஜெயினலாவுதீன் கடந்த ஒரு வருடமாக ஆய்வு நடத்தினார். மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய் – பாராளுமன்ற குழு

பாராளுமன்றத்தின் விவசாயத்தை பற்றிய குழு இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட உணவு தானியங்களை (genetically modified Bt seeds) தடை செய்ய பரிந்துரை செய்து உள்ளது இந்தியாவில் இப்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தி (Bt cotton) பயிரிட படுகிறது. 2010 வருடம் மகாராஷ்டிரா சேர்ந்த என்ற Mayhco நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட கத்திரியை (Bt Brinjal) அறிமுகம் செய்ய மத்ய அரசை கேட்டது. இதற்கு மக்களிடையும் விஞானிகள் இடம் இருந்தும் பெரும் எதிர்ப்பு தோன்றியது. அப்போது சுற்று சூழல் மேலும் படிக்க..

பருத்தி செடியின் தண்டுகள இருந்து மக்கிய உரம்

பருத்தி அறுவடை முடிந்ததும் அதன் தண்டுகள் விறகிற்காக எரிக்கப்படுகின்றன. இந்த தண்டுகளுடன் இதர பயிர்களின் பண்ணைக்கழிவுகள் மற்றும் களைகள் போன்றவற்றை டிரைக்கோடெர்மா விரிடி போன்ற புஞ்சாணங்களைக் கொண்டு சிறப்பான முறையில்  மக்கச் செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் சிஜிசிஆர் நாக்பூர் அறிமுகப்படுத்தியது. இதன் விவரம் பின்வருமாறு: 10x2x1 மீட்டர் என்ற அளவில் குழியை தயார் செய்ய வேண்டும். இதில் 2 ஹெக்டர் அளவில் உள்ள காய்ந்த பருத்தி குச்சிகளை நான்கு அடுக்கலாக அடுக்க வேண்டும். இந்த தண்டுகளுக்கு மேலும் படிக்க..

சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம்

சிக்கிம் மாநிலம் 2014 வருடத்தில் எல்லா விவசாயமும் அங்கக முறை இயற்கை விவசாயம் ஆக மாறிவிடும் என்று அந்த மாநில அரசு அறிவித்து  உள்ளது. 2003 வருடம் சிறிய அளவில் ஆரம்பித்த இந்த முயற்சி மாநிலம் முழுவதும் எல்லா விவசாயமும் 2014 வருடத்தில் இயற்கை முறை விவசாயம் முறைக்கு மற்ற படும் 2007 வருடத்திற்கு பிறகு, மத்திய அரசு அளிக்கும் ரசாயன உர அளவை சிக்கிம்  முற்றிலும் நிறுத்தி கொண்டு விட்டது(fertilizer quota) . இரண்டு ஆண்டுகளாக மேலும் படிக்க..

அழுகி போகும் காய்கறிகள் மூலம் பயோ காஸ்

கடலூரை அடுத்து உள்ள பிள்ளயார் குப்பத்தில் உள்ள மக்கள் மீதம் உள்ள விவசாய கழிவுகள் மற்றும் அழுகி போகும் காய்கறிகள், மிஞ்சி போன உணவு பொருட்களை வைத்து   கொண்டு பயோ காஸ் (Biogas) உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த முறை மிகவும் எளிமையானது: ஊரில் உள்ள ஹோட்டல், கடைகளில் பக்கெட் களை கொடுத்து வைத்து உள்ளனர். இவற்றில், அழுகி போகும் காய்கறிகள், மிஞ்சி போன உணவு பொருட்களை கொட்டுகின்றனர். இவற்றை மாலையில் சேர்த்து, ஒரு பயோ மேலும் படிக்க..

தென்னை நார் கழிவு உரம்

பெரியகுளம் பகுதியில், தென்னை நார் கழிவை இயற்கை சுழற்சி முறையில், உரமாக நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பெரியகுளம் பகுதியில், ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தேங்காயில் இருந்து எண்ணெய், மட்டையிலிருந்து கயறு உட்பட தென்னையின் அனைத்து பகுதிகளும் உபயோகமாகிறது. பெரியகுளம், கள்ளிப்பட்டி, கைலாசபட்டி பகுதியில் மட்டையிலிருந்து கயறு தயாரிக்கப்பட்டு கடைசியாக நார்க்கழிவுகள் வீணாகின்றன. நார்க்கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது. பெரியகுளம் பகுதியில், விவசாயிகள் சிலர் வீணாகும் நார்க்கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி, மேலும் படிக்க..

பருத்தியில் தண்டுக்கடன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி

பருத்தியில் தண்டுக்கடன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தி 15 சதவீத மகசூல் இழப்பை தடுக்குமாறு வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். குருவிகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மானாவாரி மற்றும் கோடைப்பருவத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பயிர்களை வேர்பூச்சி எனப்படும் தண்டுக்கடன் வண்டு தாக்குவதால் சுமார் 10 முதல் 15 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இழப்பை தடுக்க வேளாண்மை உதவி இயக்குநர் சார்பில் தொழில் நுட்ப குறிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பூச்சி விபரம் மேலும் படிக்க..

கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

விழுப்புரம் பகுதியில் கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் மற்றும் ஏழைகளின் உணவாக மட்டுமே கேழ்வரகு இருந்தது. கேழ்வரகு மூலம் அதிகமாக கூழ் காய்ச்சுவது, புட்டு அவிப்பது மற்றும் தோசை செய்வது கிராமங்களில் அதிகளவு காணப்படும். இதனால் கேழ்வரகு கிராமத்து மக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே பெரும்பாலும் இருந்து வந்தது.காலப்போக்கில் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கேழ்வரகு கஞ்சி சாப்பிட வேண்டும் என்று மேலும் படிக்க..

பருத்தியில் நுண்ணூட்ட சத்துக்கள

விவசாயிகள், பருத்தியில் அடியுரமாக நுண்ணூட்ட சத்துக்களின் முக்கியத்துவம் அறிந்து இட வேண்டும் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) கதிரவன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மானாவாரி பீ.டி பருத்தி சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருசில பகுதிகளில் அடியுரம் இட்டும்,சட்டிக் கலவை உழவுடன் அடியுரம்இடாமலும் பருத்தி சாகுபடி செய்ய நிலங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த சூழ்நிலையில் பருத்தி சாகுபடிக்கு அடியுரமாக நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவது மிகவும் அவசியமாகும். நுண்ணூட்டச் மேலும் படிக்க..

மொட்டை மாடியில் பரங்கி சாகுபடி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருச்சடைவளந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.சிவானந்தம். இவர் மொட்டைமாடியில் எந்தப் புறத்தில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டார். பிறகு பூமியில் அரை அடி குழிவெட்டி, நன்கு ஆறவைத்து, மக்கிய தொழு உரம் 10 கிலோ வைத்தார். விதைப்பதற்கு 30 நாட்களுக்கு முன் ஒரு கிலோ மக்கிய தொழு உரத்தில் சூடோமோனாஸ் 20 கிராம், அசோஸ்பைரில்லம் 50 கிராம், பாஸ்போ பாக்டீரியா 50 கிராம் இவைகளைக் கலந்து நிழலில் நீர் மேலும் படிக்க..

தென்னையில் ஊடு பயிராக கோகோ

தோட்டக்கலைத் துறை, தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், கோகோவை ஊடு பயிராக அறிமுகப் படுத்தி உள்ளது.இதன் மூலம் ஹெக்டேருக்கு, 75 ஆயிரம் ரூபாய் வரை உபரி வருவாய் கிடைக்கும் என, தாட்டக்கலைத் துறை தெரிவித்து உள்ளது. சாக்லெட், உணவுப் பொருட் கள், பானங்கள், மருந்துகள் ஆகியவற்றில் கோகோ பயன்படுகிறது. கோகோவின் தேவை ஆண்டுதோறும், 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. இதன் தேவை, உற்பத்தியின் அளவை விட, அதிகமாக இருப்பதால், 60 மேலும் படிக்க..

நாரைகளும் குப்பையான நீர் நிலையும்

ஒரு காலத்தில் சென்னை போன்ற நகரங்களை சுற்றி ஏரிகளும் நீர் நிலைகளும் அதிகம் இருந்தன. இந்த நீர் நிலைகள் ஒரு காலத்தில் சுத்தமாக இருந்தன. ஊர்கள் எப்போது எல்லா பக்கமும் பரவுவதால் (Urban Sprawl) , இந்த நீர் நிலைகள் மண் போட்டு மூட படுகின்றன. அல்லது, சென்னை வேளச்சேரி அருகே உள்ள பள்ளிகரணை போன்று, குப்பைகள் போட்டு நிரப்புகின்றனர்.சுத்தமாக இருந்த நீர் நிலைகளை இப்படி குப்பை போட்டு வைத்து கெடுப்பது என்பது மனிதனுக்கு மட்டுமே சாத்தியம்! மேலும் படிக்க..

மக்கும் காலம்!

நாம் தினமும் உபயோக படுத்தும் செயற்கையாக உற்பத்தி செய்ய பட்ட பொருட்கள் மக்க எத்தனை காலம் தேவை என்று பார்கலாமா கிளாஸ் பாட்டில் – 1 மில்லியன் வருடங்கள் அலுமினியம் கேன் – 500 வருடங்கள் பிளாஸ்டிக் கப் – 70 வருடங்கள் ஷூவில் உள்ள ரப்பர் சோல் – 80 வருடங்கள் ஸ்டீல் கேன் – 50 வருடங்கள் தோல் (leather) – 50 வருடங்கள் நைலான் துணி – 40 வருடங்கள் குழந்தைகளின் டைபர் மேலும் படிக்க..

மின்சாரத்தில் ஓடும் சைக்கிள், ஸ்கூட்டர்

இன்றைய உலகம் புகை மண்டலம் மிகுந்து, புழுதி படிந்து உள்ளது. வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையால், சுவாசிக்கும் காற்று கூட, நச்சுப்புகையாக மாறிவிட்டது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க, இன்றைய காலகட்டத்தில் புகையில்லாத எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நவீன வடிவமைப்பு, எளிய பராமரிப்பு, குறைந்த விலை, சிறந்த செயல்திறன் கொண்ட வாகனங்கள், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழிலதிபர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், பல்வேறு மாடல்களில் இவ்வகை வாகனங்கள் மேலும் படிக்க..

மரங்களை நேசிக்கும் தலைமலை

சொந்த செலவில், 20 ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருகிறார், சேத்தூர் வெற்றிலை வியாபாரி தலைமலை.விருதுநகர், சேத்தூர் அருகே தேவதானத்தை சேர்ந்தவர் தலைமலை, 50. இவர், தினமும் சைக்கிளில் வெற்றிலை வியாபாரம் செய்கிறார். ஒரு நாள், வியாபாரத்தை முடித்து விட்டு வரும் போது, வெயிலின் கொடுமைக்கு மூதாட்டி இறந்ததை கண்டார். “மரம் இருந்தால், மூதாட்டி உயிரை காப்பாற்றியிருக்கலாம்’ என, எண்ணினார். அன்று முதல், மரம் வளர்க்க வேண்டும் என, ஆசை வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக சுதந்திர தினம், மேலும் படிக்க..

பனி கரடியின் வாழ்கை போராட்டம்

பனி கரடிகள் (Polar bear) போட்டோகளை நாம் பார்த்து இருக்கிறோம். இந்த அழகான கரடிகள் வட துருவத்தில் மட்டுமே உள்ளன. தென் துருவத்தில் இவை இல்லை. தென் துருவம் அண்டார்டிக்கா என்ற கண்டம் இருக்கிறது. எப்போதும் பனி மூடிய இந்த கண்டம் இருக்கிறது. ஆனால், வட துருவம் தென் துருவத்தை போன்று ஒரு கண்டம் இல்லை. குளிர் காலத்தில், இங்கே நீர் உறையும். இந்த உறைந்த நிலத்தில், பனி கரடிகள் வாழ்கின்றன. ஆனால் மனிதனால் உண்டாக்க பட்ட மேலும் படிக்க..

வெண்டை பயிரில் காய்ப்புழு தாக்குதல்

நெல்லை மாவட்டத்தில்  வெண்டை பயிரில் காய்ப்புழு தாக்குதல் உள்ளது. அதிக வெப்பநிலை, காற்றில் அதிக ஈரப்பதம் உள்ள தற்போதைய சூழ்நிலையில் காய்ப்புழு தாக்குதல் அதிகரித்தவண்ணம் உள்ளது. அறிகுறிகள் இளம்புழுக்கள் தண்டை துளையிட்டு கீழ்நோக்கி சென்று உள்ளே இருக்கும் திசுக்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தண்டு வாடி காய்ந்து விடுகிறது. பூ மொட்டுகள், பூக்கள், காய்களையும் புழுக்கள் துளையிட்டு சதைப்பற்றுள்ள பகுதி, விதைகளை உண்ணுகிறது. தண்டு, காய்களில் உள்ள துளை புழுக்களின் எச்சத்தால் நிரப்பப்பட்டுள்ளது. புழுக்களால் தாக்கப்படும் மேலும் படிக்க..

இயற்கை வேளாண் பயிற்சி

“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 ஆகஸ்ட் 16ம் தேதி, இயற்கை வேளாண்மை குறித்து ஒரு இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 16ம் தேதி, இயற்கை வேளாண்மை எனும் தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சியில், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்கள், இயற்கை உரம் தயாரித்தல், இயற்கை முறையில் மேலும் படிக்க..

நெல் நாற்றங்காலில் இயற்கை வழி பூச்சி கட்டுப்பாடு

நாற்றங்காலில் நெல் நாற்றுவிடும் சமயத்தில் உருவாகும் பூச்சிகளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கை வழியிலும், உயிர்ரக மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். சம்பா பருவ நெல் சாகுபடிக்காக, வெள்ளைப் பொன்னி, பொன்மணி (சி.ஆர். 1009) அல்லது சாவித்திரி, பாபட்டலா, ஐ.ஆர். 20 மற்றும் பின் சம்பா ரகமான ஆடுதுறை 39 போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து சாகுபடிசெய்து வருகின்றனர்.  உயிர்ரக பூச்சிக்கொல்லிகள்… நெல் நாற்றங்காலில் தோன்றக்கூடிய பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த தேவையில்லை. சுற்றுச்சூழலுக்கு மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய் – பாராளுமன்ற குழு

பாராளுமன்றத்தின் விவசாயத்தை பற்றிய குழு இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட உணவு தானியங்களை (genetically modified Bt seeds) தடை செய்ய பரிந்துரை செய்து உள்ளது இந்தியாவில் இப்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தி (Bt cotton) பயிரிட படுகிறது. 2010 வருடம் மகாராஷ்டிரா சேர்ந்த என்ற Mayhco நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட கத்திரியை (Bt Brinjal) அறிமுகம் செய்ய மத்ய அரசை கேட்டது. இதற்கு மக்களிடையும் விஞானிகள் இடம் இருந்தும் பெரும் எதிர்ப்பு தோன்றியது. அப்போது சுற்று சூழல் மேலும் படிக்க..

சுழற்சி முறையில் பயிர் சாகுபடி

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் பெறலாம். பயறு வகைகளுக்குப் பிறகு: பயறு வகைகள் பயிரிடும் விவசாயிகள் அதன் பிறகு பயறு அல்லாது வேறு பயிர்களை தேர்வு செய்ய வேண்டும் கோதுமை, மக்காச் சோளம், முதலில் செய்த பயிர் அல்லது தானியங்களை ஊடுபயிராக பயிரிடலாம். சில வகைப் பயிர்கள் மண்ணில் உள்ள மேலும் படிக்க..

இயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்

திரு தளபதி அவர்கள் பள்ளி ஆசிரியர் ஆகவும், கிராம பஞ்சாயத்தின் தலைவர் ஆகவும் இருந்து உள்ளார். இவரின் இயற்கை விவசாய அனுபவங்கள்: – இவருக்கு பத்து ஏகர் நிலம் இருக்கிறது – 9 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார் – ADT 46, CR 1009, BPT போன்ற வகைகளை பயிர் இடுகிறார் – நூறு நாள் வேலை திட்டத்தால் வேலை ஆட்கள் கிடைக்கததால், இவரே இயந்திரம் வைத்து அறுவடை செய்கிறார் – இயற்கை விவசாயம் மேலும் படிக்க..

தென்னை மரத்தில் ஏற பயிற்சி!

ஒரு காலத்தில் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிப்பது ஒரு பிரச்னையே இல்லை.இப்போது, யாரை கேட்டாலும், மரத்தில் தேங்காய் பறிக்க ஆளே என்பது தான். விவசாயத்தில், ஆள் பற்றாக்குறை என்பது சில காலமாக ஒரு கசப்பான உண்மையாக  ஆகி விட்டது. இந்த பிரச்னையை தீர்க்க திண்டுகல்லில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திரா இப்போது தென்னை மரத்தில் ஏறுவதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள். இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்: – திண்டுக்கல் உட்பட 9 மாவட்டங்களில் செயல் படுத்த படும் மேலும் படிக்க..

தெரிந்து கொள்வோம் – கங்கை டால்பின்

டால்பின் வகை மீன்களை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். மனிதர்களுக்கு அடுத்த படியாக அறிவில் சிறந்த யானை, குரங்கு போன்று டால்பின்கள் அதிகம அறிவு உள்ளவை. உங்கள்ளுக்கு தெரியுமா அவை நதிகளிலும் இருக்கின்றன என்று? இந்தியாவில் கங்கை மற்றும் பிரமபுத்ரா நதிகளில் வாழும் ஒரு வகையான டால்பின் (Gangetic Dolphin)  இங்கே மட்டும் வாழ்கின்றன. இவை நதிகளில் உள்ள  கிட்டதட்ட 200 சென்டிமீட்டர் 7ஆடி வரை வளரும் இவை, இப்போது அழிந்து கொண்டு இருக்கும் பட்டியல் மேலும் படிக்க..

கிரீன்லாந்து பனி உருகும் அவலம்

கிரீன்லாந்து (Greenland) எனப்படும் தீவு ஆர்டிக் மகா கடலில் உள்ள பெரிய தீவு இந்த தீவு வருடம் முழுவதும் ஐஸ் கட்டிகளால் மூட பட்டு இருக்கும் எப்போதும் தட்ப நிலை ஜீரோ குறைந்தே இருக்கும். இந்த தீவு உலகத்தில் துருவ பகுதியில் உறைந்தே இருக்கும் ஒரு பகுதி இப்படி பட்ட ஒரு இடத்தில, இந்த ஜூலை வருடம் நாசா செயற்கை கோள் எடுத்த புகை படங்கள் ஒரு அதிர்ச்சி ஆக வந்து உள்ளது. ஜூலை எட்டாம் தேதி, மேலும் படிக்க..

2100ல் கடல் மட்டம் 1.6 மீட்டர் உயரும்

ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப, வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி, ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2100ம் ஆண்டுக்குள் வங்கதேசம் முதல் புளோரிடா வரையிலும், பசிபிக் பெருங்கடலின் தாழ்வான பகுதிகளிலும், லண்டன் முதல் ஷங்காய் வரையிலான நகரங்களிலும் கடல் மட்டம் 1.6 மீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுனாமி தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும் என்று கடல் நீர் மட்டம் குறித்த சர்வதேச மேலும் படிக்க..

சம்பா பருவத்தில் நேரடி புழுதி நெல் விதைப்பு

மாறிவரும் கிராம சமூக பொருளாதார காரணிகளால் வேளாண்மைக்கு பணியாளர்கள் கிடைப்பது ஒரு பிரச்னையாக மாறி வருகிறது. இதை சமாளிக்க தமிழக அரசு வேளாண்மையில் இயந்திர மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மேலும் டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்து குறுவை சாகுபடி குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லாமையால் எதிர்வரும் சம்பா பருவமும் நிச்சயமற்ற சூழல் விவசாயிகளிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் சம்பா பருவத்தில் நேரடி புழுதி விதைப்பு செய்தால் வெற்றிகரமான சாகுபடி செய்யமுடியும் என்கிறார் கடலூர் மாவட்டம் மேலும் படிக்க..

பயறு பயிர்களைத் தாக்கும் பச்சைப் புழு கட்டுப்படுத்தும் வழிகள

விவசாயிகள் பயிரிடும் பயறு வகை பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. குறிப்பிட்ட சில வைரஸ்களை கொண்டு தயாரிக்கப்படும் உயிர்ரக மருந்துகளைக் கொண்டு இவ் வகையான பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், சூரியகாந்தி பயிர்களில் பச்சை புழு சேதத்தை உருவாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.இந்த பச்சைப் புழுக்களை வைரஸ் உயிரிகளைப் பயன்படுத்தி அழிக்கலாம். இப் பூச்சிகளை அழிக்க என்.பி.வைரஸ் என்ற உயர்ரக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது. இப் பூச்சிக் கொல்லி குறித்தும் இதைப் மேலும் படிக்க..

தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் தடுப்பு முறை

“தென்னையில், கருந்தலை புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்’ என, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் லோகநாத பிரகாசம் தெரிவித்துள்ளார். கருந்தலைப்புழுக்கள், இலைகளின் அடிப்பரப்பில் தனது கழிவுகளையும், கைகளையும் கொண்டு நூலாம் படையினைப் பின்னிக்கொண்டு, அதனுள் இருந்து கொண்டே, பச்சயத்தை சுரண்டி உண்ணும். சேதநிலை அதிகமானால், தென்னை ஓலைகள் தீய்ந்து கருகிவிடும். தூரத்தில் இருந்து மரத்தைப் பார்த்தால், இலைகள் எரிந்து கருகியது போல் தோற்றமளிக்கும். அதனால், தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கை மேலும் படிக்க..

நீர் பற்றாக்குறையால் சொட்டு நீர்ப்பாசனம் அதிகரிப்பு

நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், பாசனப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனத்துக்கு மாறி வருகின்றனர். கோபிசெட்டிபாளையம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகரி, தெங்குமரஹாடா, குந்தால கெத்தை, பில்லூர், மொய்யாறு ஆகிய பகுதிகளில் மழை பொய்த்ததால், அணையின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. சென்ற இரண்டு ஆண்டுகளாகவே பாசன நேரத்தில், தண்ணீர் பற்றாகுறை நிலவுகிறது. இதனால், விவசாயிகள் பலரும் சொட்டு நீர்ப்பாசனத்துக்கு மாறி வருகின்றனர். கோபி வேளாண் துறை உதவி இயக்குனர் ஆசைத்தம்பி கூறியதாவது: மேலும் படிக்க..

நெல்லில் கூடுதல் லாபம் தர "பின்செய்நேர்த்தி'

அறுவடை செய்த நெல்லை செய்நேர்த்தி செய்து விற்பதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர். நெல்லுக்குக் கூடுதல் விலையைப் பெற்றுத் தருவது அதில் உள்ள முழு அரிசியின் அடிப்படையில் தான்.  பின்செய்நேர்த்தி செய்வதன் மூலம் நெல் அரவையின் போது 62 சதவீத அரிசி கிடைக்கிறது.   அறுவடைக் காலம் நெல் ரகங்களின் வயதுக்கேற்றவாறு அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். கதிரில் நெல்மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறியிருந்தாலே போதுமானது. மேலும் படிக்க..

துவரை மகசூல் அதிகரிக்க மாற்று முறை சாகுபடி

கோவை வேளாண் பல்கலையில், இளங்கலை வேளாண்மை பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் பாலக்கோடு தாலுகா பகுதியில் தங்கிருந்து பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாலக்கோடு அடுத்த முனியப்பன் கோவில் கொட்டாய் கிராமத்தில், துவரை நடவு முறை தொழில் நுட்பம் குறித்து விளக்கினர். அட்மா திட்டதின் கீழ் அமைக்கப்பட்டிருந்த துவரை பாலித்தீன் பை நாற்றங்கால் நடவு நடந்தது. நடவு முறை துவரை சாகுபடியால் ஏற்படும் நன்மைகள், பருவமழை தாமதமானலும், அதற்கேற்றவாறு குறுடத்த மேலும் படிக்க..

செம்மை கரும்பு சாகுபடி

கள்ளக்குறிச்சி பகுதியில் “செம்மை கரும்பு சாகுபடி’ என்ற நவீன முறையில் பயிர் செய்யப்பட்டுள்ள கரும்பு ஊட்டமாக வளர்ந்துள்ளதால் இம்முறையை பின்பற்றி கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாரம்பரிய முறைப்படி செய்யப்படும் கரும்பு பயிரை காட்டிலும் கூடுதல் மகசூல் பெற, வேளாண் ஆராச்சி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் “செம்மை கரும்பு சாகுபடி’ விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கரும்புகளை துண்டு, துண்டாக வெட்டி நடவு செய்யும் வழக்கமான முறையில் கூடுதல் கரும்பு தேவைப்படுவதுடன், நடவு மேலும் படிக்க..

ஊட்டி ஏரியின் நிலைமை

ஊட்டி ஏரியில் உள்ள நீர் மிகவும் மாசு பட்டு உள்ளதாக தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்து உள்ளது. தமிழ் நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஊட்டி நகரில் எரி மிகவும் புகழ் பெற்றது. ஒரு காலத்தில், இந்த எரி ஊட்டி மக்களின் நீர் ஆதாரமாக இருந்தது. இப்போது, சாக்கடை வந்து விழும  ஒரு அசிங்கமான இடம் ஆகி விட்டது நல்ல நீரில் 3mg/liter இருக்க வேண்டிய Biological oxygen demand (BOD) ஊட்டி மேலும் படிக்க..

BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 3

மரபணு மாற்றபட்ட பருத்தி (Bt cotton) பற்றிய செய்தி கட்டுரைகள் தொடர்  மூன்றாம் பகுதி: மகாராஷ்டிரா Bt பருத்தி சச்சரவுகளில் நடுவம் (epicenter). இந்தியாவில் அதிகம் விவசாயிகள் பருத்தியை பயிர் இடுகிறார்கள். இப்போது அங்கேயும், விவசாயிகள், சாதாரண, பாரம்பரிய பருத்தியை பயிர் இட ஆரம்பித்து இருக்கிறார்கள். ரவீந்திர தப்தரி, தப்தரி விதைகள் (Daftari Agro) என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம், பாரம்பரிய பருத்தி விதைகளை விற்று வந்தது. Bt பருத்தி கடுமையான தாக்குதலால், பாரம்பரிய விதைகளின் விற்பனை மேலும் படிக்க..

BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 2

மரபணு மாற்றபட்ட பருத்தி (Bt cotton) பற்றிய செய்தி கட்டுரைகள் தொடர்  பகுதி: மகாராஷ்ட்ராவில் விதர்பா பகுதியில் Bt பருத்தி விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொன்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்தி. ஒரு சார்பினர், Bt பருத்தி சாகுபடி செய்ய அதிகம் செலவு, விவசாயிகள் கடன் வாங்கி திருப்பி கொடுக்க வில்லை என்பது காரணம் என்கின்றனர். இதை பற்றி இதோ ஹிந்து இதழில் வந்துள்ள ஒரு பகுப்பாய்வு: விதர்பா பகுதியில் 140 Bt பருத்தி மேலும் படிக்க..

BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 1

மரபணு மாற்றபட்ட பருத்தி (Bt cotton) பற்றிய செய்தி கட்டுரைகள் தொடர்  முதல் பகுதி: மரபணு மாற்ற பட்ட பருத்தியில் (Bt cotton) இலைகள், Bollworm புழுவிற்கு விஷம் ஆகும். இதனால் பருத்தியை இவை தாக்குவதை குறைத்து கொண்டன. ஆனால் இந்த புழுக்கள் இப்போது மற்ற பயிர்களை தாக்க ஆரம்பித்து விட்டன. தக்காளி, கொண்டை கடலை, மக்காச்சோளம் சோளம போன்ற பயிர்களை இந்த பூச்சிகள் தாக்க ஆரம்பித்து விட்டன. இதனால், மற்ற பயிர்களை பயிரிடும் விவசாயிகள், முன்பு மேலும் படிக்க..

கொத்தவரை பயிரைத்தாக்கும் காய்ப்புழு

  பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:   இந்தப்பூச்சி பயறு வகைப் பயிர்களைத் தாக்கக்கூடிய முக்கியமான பூச்சிகளில் ஒன்று. கொத்தவரையைத் தவிர தக்காளி, பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, மொச்சை, அவரை, மிளகாய், சோயா மொச்சை போன்ற பல்வேறு பயிர்களையும் தாக்கக்கூடியது. புழுக்கள் காய்களைத் துளைத்து உள்ளிருக்கும் விதைகளை உண்டு அதிக சேதம் விளைவிக்கக்கூடியவை. புழுவின் தலையும் உடலின் முன்பகுதியும் மட்டுமே காய்களுக்குள் செல்லும். மதிப்பகுதி காயின் வெளியே காணப்படும். ஒரு புழு பல காய்களைத் தாக்கும். மேலும் படிக்க..

மானாவாரி கேழ்வரகு சாகுபடி

மானாவாரி கேழ்வரகு சாகுபடியில் உரிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்தால் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, வேலூர் மாவட்டங்களில் அதிக அளவில் (சுமார் 80 சதம்) மானாவாரியாக கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.  பருவம்: மானாவாரிப் பயிராக ஆடி, புரட்டாசிப் பட்டங்களிலும், இறவைப் பயிராக சித்திரை, ஆடி, மார்கழி பட்டங்களிலும் பயிரிடலாம். ரகங்கள்: ஆடிப் பட்டத்தில் கோ-13, கோ(ரா) 14, பையூர்(ரா) 1, பையூர்(ரா) 2 ஆகிய ரகங்களைப் மேலும் படிக்க..

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் மாற்று பயிருக்கு மாறும் விவசாயிகள்

பருவ மழை தாமதம் உள்பட பல்வேறு காரணங்களால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பாசன பகுதியில், நெல் சாகுபடி செய்த விவசாயிகள், ராகி மற்றும் எண்ணெய் வித்துப்பயிர் சாகுபடிக்கு மாறியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சம்பா பருவத்தில், 17 ஆயிரத்து, 500 ஹெக்டேரிலும், காரீப் பருவத்தில், 10 ஆயிரம் ஹெக்டேரிலும் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்யப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு, இரண்டு லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. கே.ஆர்.பி., அணை பாசன பகுதியில் மட்டும், பத்து ஆயிரம் ஹெக்டேரில் மேலும் படிக்க..

மக்காச்சோளம் சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 24ம் தேதி மக்காச்சோளம், சோளம் சாகுபடி குறித்த உயர் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 24ம் தேதி, மக்காச்சோளம், சோளம் மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது. பயிற்சியில், சிறுதானியப் பயிர் சாகுபடி முக்கியத்துவம், மண் பரிசோதனை, வீரிய ஒட்டு ரகம் மேலும் படிக்க..

அசோலா மற்றும் காளான் உற்பத்தி இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 17ம் தேதி, காளான் உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.   நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 17ம் தேதி, அசோலா மற்றும் காளான் உற்பத்தி குறித்து ஒரு நாள் இலவச செயல் விளக்க பயிற்சி முகாம் நடக்க உள்ளது. பயிற்சியில், அசோலா ரகங்கள், உற்பத்தி முறை, வளரிடம், அசோலாவில் உள்ள சத்து, கால்நடை மற்றும் கோழித் தீவனமாக அளிக்கும் முறை மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு

அதிக சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த பாரம்பரியமிக்க நெல் ரகங்களை சாகுபடி செய்து மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு திரும்புமாறு விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறைகூவல் விடுத்துள்ளார். புதுக்கோட்டை அடுத்த வாகைப்பட்டியில் ரோஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாப்பது குறித்த விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடந்தது. இதை துவக்கிவைத்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது: உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வெளிநாடுகளிடம் ஆலோசனைகள் பெற்று நவீன ரக தானியங்களை குறிப்பாக மேலும் படிக்க..

வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research – CSIR) வாழையில் இருந்து நார் பிரித்து எடுக்க எளிய முறையை கண்டு பிடுத்து உள்ளனர். பொதுவாக, வாழையில் இருந்து நாரை பிரித்து எடுக்க நேரமும் முயற்சியும் அதிகம் வேண்டும். வேலை செய்ய ஆட்களும் தேவை. பொதுவாக, ஒரு நபரால், ஒரு மணியில் 500 கிராம் நார் மட்டுமே எடுக்க புடியும் இந்த புது முறையால், இதை போன்று பாத்து மடங்கு மேலும் படிக்க..

மல்லிகையில் பூச்சி மேலாண்மை பயிற்சி

வம்பன் அருகே உள்ள க்ரிஷி வேளாண் கேந்திராவில் (KVK)  வரும் 2012 ஜூலை 17 அன்று மல்லிகையில் பூச்சி மேலாண்மை பற்றி இலவச பயிற்சி அளிக்க படும். விருப்பம் உள்ளவர்கள் 04322290321 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் நன்றி: ஹிந்து

செடி முருங்கையில் சாகுபடி

கரூர் கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது: செடி முருங்கை சாகுபடி செய்ய நவம்பர், டிசம்பர் மாதங்கள் மிகவும் ஏற்றது. செடி முருங்கை எல்லா மண் வகையிலும் வளரும். எனினும் மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது. மண்ணில் கார அமிலத்தன்மை ஆறு முதல் 7.5 வரை இருக்க வேண்டும். முருங்கை சாகுபடி செய்ய பி.கே.எம்.,1, 2, கே.ம்.,1 ரகங்களை தேர்வு செய்து நடவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு மேலும் படிக்க..

வாழை சாகுபடியில் அடர் நடவு முறை

வாழை சாகுபடியில் அடர் நடவு முறை லாபகரமானது என்று தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு விளக்கமளித்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வீரக்குமாரன்பட்டி காவல்காரன் காலனியில் வாழை அடர் நடவு முறை குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.   அப்போது அவர்கள் கூறியது: இந்தியாவில் ஆந்திரா, அசாம், பிகார், குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ஒடிசா, தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. 2009-10-ம் ஆண்டில் இந்தியாவின் வாழை உற்பத்தி 26.9 மில்லியன் மேலும் படிக்க..

நெல் சாகுபடி வயல் பயறு வகை விதைப்பு

நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் உளுந்து, பாசிப் பயறு போன்ற பயறு வகை சாகுபடி மேற்கொள்ள மார்கழி, தைப் பட்டம் ஏற்ற தருணமாகும். தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பாசனப் பகுதிகளில் சம்பா, முன் தாளடிப் பருவ நெல் சாகுபடி அறுவடையாகும் தருணத்தில் உளுந்து, பாசிப் பயறு போன்றவை நேரடியாக விதைப்பு செய்யப்படுகிறது. நெல் தரிசு பயறு வகை விதைப்புக்கு மார்கழி, தைப் பட்டம் ஏற்ற தருணமாகும். நிலத்தின் தன்மை மெழுகுப் மேலும் படிக்க..

உரங்களின் விலை மூன்று ஆண்டுகளில் 300% உயர்வு!

விவசாய ஈடு பொருட்களில் முக்கியமானது ரசாயன உரங்கள் இவற்றின் விலைகள் தாறு மாறாக உயர்ந்து வருகின்றன. இதனால் விவசாயத்தின் லாபம் குறைந்து வருகிறது. DAP  உரம் 50  கிலோ விலை 2009 ஆண்டில் ரூ 486  ஆக இருந்தது. இப்போது அதன் விலை ரூ 1050  அடுத்த மாதம் அதன் விலை 1245  தொடும் என படுகிறது. NP  காம்ப்ளெக்ஸ் உரம் 20 : 20  விலை ரூ 360  இருந்தது. இப்போது ரூ 855  அடுத்த மேலும் படிக்க..

பலன் தரும் பசும்தீவன வகைகள்

நமது நாட்டில் வேளாண்மை மற்றும் கால்நடைகள் இணைந்த கலப்புப் பண்ணை முறையே கையாளப்பட்டு வருகிறது. தரமான கால்நடை வளர்ப்புக்கும், அதிக வருமானம் பெறவும் பசுந்தீவனப் பயிர்களை சாகுபடி செய்வது அவசியம். கால்நடைகளுக்கு புரதம், நார்ச்சத்து, உயிர் மற்றும் தாதுச் சத்துகளை அளிப்பதுடன் கால்நடைகளின் உடல் வெப்பநிலைக் கட்டுப்பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது பசுந்தீவனம். சரியான இனப் பெருக்கத்துக்கும் இது இன்றியமையாதது.  பசுந்தீவனத்தை பயிர் செய்வதன் மூலம் நிலத்தின் மண்வளம், மண்ணின் நீர் தாங்கும் திறன் அதிகரிக்கிறது. களைகள் மேலும் படிக்க..

விதைகளைப் பாதுகாப்பது எப்படி?

ஒரு விதை தான் பெரும் விருட்சம் ஆகும் என்பது பழமொழி. விதையின் ஆரோக்கியமே விவசாயத்துக்கு அடிப்படையானது.அவ்வாறு மிக முக்கியத்துவம் வாய்ந்த விதைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்து காண்போம். விதை மற்றும் தானிய மணிகளைத் தாக்கும் பூச்சிகள் பெரும்பாலும் வண்டுகள் மற்றும் புழுக்கள் இனத்தைச் சேர்ந்தவைதான்.இவைகளை முறையான வழிகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம். சுமார் 40 வகையான பூச்சிகள் தாக்குவதால், விதைகள் 5 சதம் வரை குறைகின்றன. தானியம் மற்றும் விதைகளை தாக்கும் பூச்சிகள், முதலில் உள்பகுதியை குடைந்து சத்துப் மேலும் படிக்க..

வாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை

கோபி வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பூசணி பயிரிடப்பட்டுள்ளது. வெள்ளைப் பூசணி மற்றும் சாம்பார் பூசணி தனியாகவும், வாழையில் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. பூசணி, 90 முதல், 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஏக்கருக்கு, 20 டன் பூசணி கிடைக்கிறது. சேனைக் கிழங்கு எட்டு மாத பயிர்.மஞ்சளில் அதிகளவில் ஊடுபயிர் செய்யப்படுகிறது. களிமண் பகுதியில் சேனை கிழங்கு நன்கு வளரும். சேனைக் கிழங்கு பத்து மாத பயிராக இருந்தாலும், ஏழு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கரில், மேலும் படிக்க..

வாழையில் நோய்களை சூடோமோனஸ் மூலம் கட்டுபடுத்துவது எப்படி

ஸ்ரீவைகுண்டத்தில் வாழை விவசாயிகளுக்கு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லுரி மாணவிகளின் செய்முறை பயிற்சி நடந்தது. ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியில் நடந்த பயிற்சி பட்டறையில் வாழை பயிரில் பணமாவாடலை கட்டுப் படுத்தவும் நூற்புழுவை கட்டுப்படுத்தவும் சூடோமோ னாஸ் பயன்படுத்துவதை குறித்து பயிற்சி தந்தனர் இளம் வாழை கன்றுகளின் வேர்களை நீக்கி களிமண் கரைசலில் மூழ்கி எடுக்க வேண்டும் ஒரு கன்றுக்கு 10 கிராம் அளவில் சூடோமோனாஸ்ஸை நன்றாக பரவும் விதம் தூவ வேண்டும் இவ்வாறு சிகிச்சை பெற்ற கன்றுகளை நட்டால் மேலும் படிக்க..

அற்புத கால்நடை தீவனம் அசோலா

அற்புத கால்நடை தீவனமான அசோலா பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம். இதோ தினமலரில் வந்துள்ள மேலும் ஒரு தகவல் ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி போன்ற கால்நடைகளுக்கு செலவில்லாத அற்புத தீவனமாகவும், மனிதர்களுக்கு மிகச்சிறந்த உணவாகவும், அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து வாழ வைக்கும் தாயாக விளங்கும் தாவரங்களுக்கு உன்னதம் மிகுந்த உயிர் உரமாகவும் அமைந்து வளம் தரக்கூடிய ஆதி தாவரமாகிய அசோலா என்னும் நீலப்பச்சைப்பாசி நீரில் வளரும் பாசி வகையாகும். செலவின்றி மேலும் படிக்க..

பெவேரியா பேசியானா கட்டுபடுத்தும் பூச்சிகள்

ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற உயர்ரக பூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது. விவசாயிகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர்.  இந்த ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயிர் சுற்றுச்சூழல் அமைப்பின் முன்னுக்குப்பின் முரணாக அதிக வீரியத் தன்மை கொண்ட பல மூலக்கூறுகளை தாங்கிய ரசாயன பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதால் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் உருவாகி விடுகிறது. மேலும் பருவநிலை மற்றும் மேலும் படிக்க..

மானாவாரி நெற்பயிருக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை

உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், சீரான விளைச்சலைப் பெறவும், வேளாண்மை தொழில்நுட்பங்களை சீரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும். மானாவாரி நெல் விளைச்சலை நிர்ணயிக்கும் தொழில்நுட்பங்களான உயர் விளைச்சல் ரகங்களைத் தேர்ந்தெடுத்தல் (அண்ணா-4 ரகம் உள்பட) சீரிய உழவியல் மற்றும் நீர், களை நிர்வாகம், ஒருங்கிணைந்த உர மேலாண்மை, தேவைக்கேற்ப பயிர்ப் பாதுகாப்பு. இவை நான்கு தொழில்நுட்பங்களில் ஒன்றான ஒருங்கிணைந்த உர நிரவாகம் நெல் உற்பத்தில் ஒரு மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது எனலாம். மானாவாரி நெற்பயிருக்கு அடியுரம் இடுதல்: மேலும் படிக்க..

மானாவாரி பருத்தி பயிரிட மண் பரிசோதனை அவசியம்

மானாவாரி பருத்தி சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. மாரிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: எங்கள் அறிவியல் மையமானது, பருத்தி சாகுபடியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்கிறது.இந்த ஆய்வுகளின் முடிவுப்படி, மானாவாரிப் பருத்தி பயிருக்கு மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி பயிரிடும் கரிசல் மண் வகை அதிகளவிலும், செம்மண் வகை ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகிறது. மண் மேலும் படிக்க..

BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள்

BT பருத்தி பற்றி எப்போதும் ஒரு சச்சரவு இருந்து கொண்டே இருக்கிறது. BT ஆதரிப்பவர்கள் ஒரு பக்கம் – இவர்களின் வாதம் இதோ – BT பருத்தி மூலம் ரசாயன பூச்சி கொல்லி தெளிப்பது குறைந்து உள்ளது. இதனால், பருத்தியின் சாகுபடி உயர்ந்து உள்ளது. அதனால் விவசாயிகள் முன்னேறி உள்ளனர். எதிர்பவர்களும் நிறைய வாதம் கொடுக்கிறார்கள் – BT  பருத்தி ஒரே ஒரு வகை பூச்சியை (American Ballworm) தான் தடுக்கிறது. மற்ற பூச்சிகளுக்கு பழைய படி மேலும் படிக்க..

கொத்தவரை சாகுபடி

இரகங்கள் : பூசா மவுசாமி, பூசா நவுபகார், பூசா சதபாகர் மற்றும் கோமா மஞ்சரி மண் : நல்ல வடிகால் வசதியுடைய மணற்பாங்கான (அ) வண்டல் மண்ணின் காரத்தன்மை 7.5-8.0 வரை இருத்தல்வேண்டும். உவர்ப்பு நிலங்களில் வளரும் தன்மையுடையது. விதைப்பு மற்றும் பருவம் ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர் விதைகளை பார்களின் பக்கவாட்டில் 15 செ.மீ இடைவெளியில் ஊன்றவேண்டும். விதையளவு : ஒரு எக்டருக்கு 10 கிலோ விதை விதை நேர்த்தி : ஆறிய மேலும் படிக்க..

இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்

பாஸ்கர் இந்தியன் இன்ஸ்டிடுட் ஆப மனஜெமென்ட் (Indian Institute of Management) கல்வி நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியர் ஆக இருந்தவர். இப்போது கும்பகோணம் அருகே இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறார். இவருடைய அனுபவங்கள்: 8 ஏகர் நிலம் ADT 46, CR 1009 and BPT போன்ற வகைகளை பயிர் இடுகிறார் இந்த வருடம் ADT  43  பயிர் இட்டு உள்ளார் இயந்திரத்தை வைத்து அறுவடை செய்கிறார். வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பது நாள் திட்டத்தால் மேலும் படிக்க..

எலுமிச்சை சாகுபடி

தமிழகத்தில் பயிராகும் பழ மரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. மா, வாழை ஆகியவற்றிற்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சை தான். எலுமிச்சை பலவிதமான வெப்பநிலைகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் வெப்பம் மிகுந்த தென் மாநிலங்களில் எலுமிச்சை நன்றாக வளர்ந்து நல்ல பலனைத்தருகிறது. எலுமிச்சையை கடல் மட்டதிலிருந்து ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்யலாம்.பணி உறையும் பகுதிகளில் இதனை சாகுபடி செய்ய இயலாது. வடிகால் வசதி பலவகையான மேலும் படிக்க..

Slug caterpillar தாக்குதலை தென்னையில் கட்டுபடுத்துவது எப்படி

தமிழ் நாட்டில் கரூர் மாவட்டத்தில் Slug Caterpillar பூச்சியின் தாக்குதல் தென்னையில் அதிகம் ஆக இருக்கிறது இந்த பூச்சி பச்சை பிரவுன் கலரில் இருக்கும். முன்னால் அகலமாகவும்பின்னால் மெலிதாகவும் இருக்கும் உடல் முழுவதும் சிறிய மயிர்கள் இருக்கும். முதிர்ந்த லார்வாக்கள் இலைகளை தின்னும். லார்வாக்கள் ஒரு வெள்ளை கலர் கூட்டை (cocoon) இலைகளுடன் அமைக்கும் கூட்டில் இருந்து இரண்டு வாரம் பின்பு பிரவுன் கலர் பூச்சிகள் வெளி வரும். உயரமான தென்னை மரங்களையே இந்த பூச்சி தாக்கிறது. மேலும் படிக்க..

இஸ்ரேல நாட்டின் விவசாய தொழிற் நுட்பம்

இஸ்ரேல நாட்டில் நடந்த விவசாய கண் காட்சியை நம் நாட்டில் இருந்து 2000 இந்திய விவசாயிகள் சென்று பார்த்து வந்து உள்ளனர். நம் எல்லோர்க்கும் இஸ்ரேல நாடு எப்படி விவசாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று தெரியும். சொட்டு நீர் பாசனம், துல்லிய விவசாயம் போன்ற பல வித தொழிற் நுட்பங்கள் அங்கே இருந்து தான் கண்டு பிடிக்க பட்டன. தம்ழி நாட்டில் இருந்து இஸ்ரேல விவசாய கண்காட்சியை நேரில் சென்று பார்த்து வந்த தமிழ் நாடு மேலும் படிக்க..

2 கிலோ சாம்பலாகும் ஒரு டன் குப்பை!

ஒரு டன் குப்பையை பெரிய அளவில் மாசில்லாமல், வெறும் இரண்டு கிலோ சாம்பலை மட்டுமே வெளியேற்றும், “பிளாஸ்மா ஸ்வாட்ச்’ (Plasma Swatch) என்ற நவீன இயந்திரத்தை மாநகராட்சியில் அறிமுகப் படுத்த, “தனியார் நிறுவனம்’ஒன்று முயற்சித்து வருகிறது. தொழில்நுட்பம் “பிளாஸ்மா’ மூலம் எரிப்பது என்பது, “மைக்ரோ ஓவனில்’ சமைப்பது போன்றது; நெருப்பு இல்லாமல் அந்த ஏவலை நடக்கிறது. வெளிநாடுகளில், இந்த தொழில்நுட்பத்தில், ஆயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வரை உருவாகும் வெப்பத்தில், குப்பையில் உள்ள அணுக்கள் சீர்குலைக்கப்பட்டு; குப்பை அமிலம் மேலும் படிக்க..

கங்கை எங்கே போகிறாள்?

இந்த தலைப்பில் ஜெயகாந்தன் எப்போதோ எழுதிய நாவலில் கங்கை நதி பற்றி அழகாக எழுதி இருப்பார் எல்லோரின் பாவங்களை கழிப்பவள் தான் தூய நதியான கங்கை இந்த கங்கை இப்போது, எப்படி இருக்கிறது பார்கலாமா? உலக சுற்று சூழல் நாளான 5th June 2012 அன்று Times of India பத்திரிகையில் வந்துள்ள விவரம் இதோ. நல்ல நீரை மதிப்பிட இரண்டு அளவுகள் விஞானிகள் பயன் படுத்துகிறார்கள். Biological Oxygen Demand (BOD) என்பது ஒன்று. நீரில் மேலும் படிக்க..

காவிரித் தாய்க்கு சோதனை – தினமணி தலையங்கம்

ஜூன் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் தொடக்கம் வரை குற்றாலத்தில் சாரல் சீசன் தமிழர்களை மகிழ்விக்கும் காலமாகும். அதே ஜூன் இரண்டாவது வாரம் வந்துவிட்டாலே காவிரி டெல்டா மக்களுக்குக் காவிரியில் தண்ணீர் வராமல் திண்டாடும் சீசனும் தொடங்கி விடும். இது முடிவில்லா சோகக் கதையாகத் தொடர்கிறது. இந்த ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கவில்லை. டெல்டா மாவட்டத்தில் குறுவைப் பயிர் கேள்விக்குறியாகிவிட்டது. மேட்டூர் அணையிலிருந்து கடந்த 78 ஆண்டுகளில், 15 தடவை மட்டுமே மேலும் படிக்க..

யூரியா விலை உயர்வு ஒத்திவைப்பு

யூரியா உரத்தின் விலையை, 10 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற உரத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒத்தி வைத்துள்ளது. மத்திய அரசு, நிர்ணயித்த விலையில் யூரியா உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏற்படும் இழப்பு, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், உர மானியத்திற்கான தொகை, 24 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், மானிய சுமையை குறைக்கும் மேலும் படிக்க..

மாவு பூச்சி தாக்குதல் குறைவால் விவசாயிகள் ஆர்வம்

 மாவு பூச்சி தாக்குதல் குறைவால், கோபி சுற்று வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் மீண்டும் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன பகுதிகளில் உள்ள, 24 ஆயிரம் ஏக்கர் மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளிலும் வழக்கமாக நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. விவசாய கூலி ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வால், விவசாயிகள் மல்பெரி, மரவள்ளி கிழங்கு என மாற்று பயிர்களுக்கு தாவினர். மாவு பூச்சி தாக்குதலால் மேலும் படிக்க..

ஈரோட்டில் தென்னையில் மர்மநோய்

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்னை மரங்களில் மர்மநோய் தாக்கி வருவதால், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். மர்ம நோயை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க, புழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, சித்தோடு, கவுந்தப்பாடி, பவானி உட்பட பல பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மர்ம நோய் தாக்குதலால், தென்னை மரங்கள் காய்க்காமல் போய்விடுகின்றன. மேலும் தென்னங்கீற்றுக்கள் வெள்ளையாகி, எதற்கும் மேலும் படிக்க..

தென்னையில் குரும்பை உதிர்வை தடுக்க வழிகள்

தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத் தரும் முக்கிய பிரச்னையாகும். காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வது தவிர்க்க முடியாத பண்பாகும். எனினும், நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிருகின்றன. காரணங்கள்: குரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் தாவர உடற் செயலியல் குறைபாடு, மண்ணின் குணம் (உவர், களர் தன்மை), மண்ணில் ஊட்டச் மேலும் படிக்க..

பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7

தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரங்களில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரகம் ஜூன், ஜூலை சாகுபடிக்கு ஏற்ற இரகம், சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 978 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. பயிரின் உயரம் 30 முதல் 32 செ.மீ. உள்ளது. ஒரு செடியில் 18 மேலும் படிக்க..

கோடையில் தென்னை பராமரிப்பு

கோடையில் தென்னை மரங்களை பராமரிப்பது பற்றி ஏற்கனவே படித்துள்ளோம். இதோ, இன்னும் சில டிப்ஸ்கள்: பருவமழை துவங்கும்போதும், முடியும் போதும் நடுவில் மழைக்காலத்திலும் தோப்பை நன்கு உழ வேண்டும். கோடைமழை பெய்வதால் இடையழவு செய்யலாம். இடையழவு செய்வதால் மழை நீர் தோப்பிலேயே ஈர்க்கப்படும். வேர்களுக்கு காற்றோட்டம் கிடைத்து நன்கு வளர்ந்து பயிரூட்டங்களையும் தண்ணீரையும் நன்கு எடுத்துக்கொள்ளும். களைகள் நீக்கப்படுகின்றன. தேங்காய் மகசூல் கூடும். தோப்பில் பளை,கூராஞ்சி,அடிமட்டை,பன்னாடை,ஓலை மற்றும் குப்பை கூளங்களை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்க வேண்டும். மேலும் படிக்க..

பருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் வழிகள்

அறிகுறிகள் பருத்தியில் வேர் அழுகல் நோயானது விதை முளைத்து ஒன்று அல்லது இரண்டு வார காலத்தில் தாக்கினால் விதை உறையில் கருப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும். தண்டு பகுதி சிறுத்து, செடி வாடிவிடும். அதனால் வயலில் இடைவெளி அதிகமாகி திட்டு திட்டாக காணப் படும். இந்நோயானது 4 முதல் 6 வார வயதுடைய செடியைத் தாக்கினால் சிவப்பும் பழுப்பும் கலந்த திட்டுக்கள் மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியில் காணப்படும். பின்னர் அப்பகுதி கருப்பு நிறமாக மாறி, மண்ணுக்கு மேலும் படிக்க..

இயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை

அளவுக்கதிகமான பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் விதமாக பூச்சிகளில் நோயை உருவாக்கி இயற்கை வழியில் அவற்றை அழிக்கும் முறை தற்போது பிரபலமாகி வருகிறது. பெவேரியா பேசியானா என்ற வெண்மை பூஞ்சாணம் இதில் உயர்ரக பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. இரசாயன பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.  முன்னுக்குப்பின் முரணாக அதிக வீரியத்தன்மை கொண்ட ரசாயன பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும்போது பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் அதிகமாகி எண்ணிக்கையிலும் அதிகமாகின்றன. சில நேரங்களில் இம் மருந்துகள் நன்மைத் தரும் பூச்சிகளையும் மேலும் படிக்க..

தக்காளி சாகுபடி டிப்ஸ்

ஆண்டு மூழுவதும் பயிர் செய்யக்கூடிய தக்காளியை நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்ணில் சாகுபடி செய்யலாம். கோ-1,2,3, பி.கே.எம்.1, பூசா ரூபி, பையூர் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது.  இதனை பிப்ரவரி,மார்ச், ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். விதை நேர்த்தி ஒரு ஹெக்டேருக்கு 350-400 கிராம் விதைகள் போதுமானது. ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை 40 அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி  செய்யவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு மீட்டர் அகலமுள்ள மேலும் படிக்க..

இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான ” வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் ” நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் வருகிற ஜூன் மாதம் 15.6.2012 முதல் 19.6.2012 ஆகிய 5 நாட்களில் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும். செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும். இந்த மேலும் படிக்க..

எலிகளைக் கட்டுப்படுத்தும் மிஸ்டர் ஆந்தை

கடந்த சில ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைக் குறைப்பதில் எலிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.  நமது நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 2 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சேதத்தையும், இழப்பையும் எலிகள் ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.     மிக அதிகளவு எலி தாக்குதலை குறிப்பிட்ட கால அளவில் கட்டுப்படுத்தவில்லை என்றால் சேதத்தின் அளவு நூறு சதவீதம் வரை உயர்ந்து விடும் அபாயமும் உள்ளது. இத்தகைய மேலும் படிக்க..

கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த வழிகள்

விவசாயிகள் கரும்பை பயிரிடும்போது அதை பல்வேறு விதமான பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றை முறையாக கட்டுப்படுத்தினால் கரும்பு பயிரில் அதிக லாபம் ஈட்ட முடியும். இந்த கரும்பை சில வகையான பூச்சிகள் தாக்குவதால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.  இந்த கரும்பை தாக்கும் பூச்சிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்தும் புதுச்சேரி பூச்சியல் துறை வல்லுநர் நி. விஜயகுமார் கூறியதாவது: பல்வேறு பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை, பயிருக்கு நன்மை பயக்கும் உயிரிகளை பயன்படுத்தி அழிக்கும் முறை  தற்போது மேலும் படிக்க..

மகாராஷ்ட்ராவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம்

பருத்தி  சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்கொலைக்கு மரபணு மாற்ற பட்டபருத்தி (Bt Cotton) தான் காரணம் என்று மதிய விவசாய அமைச்சரவை ஒப்பு கொண்டு உள்ளது. மகாராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவில் மட்டும் 2011 வருடம் 209 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மதிய அரசின் அறிக்கையில் “பருத்தி விவசாயிகள் மரபணு மாற்ற பட்ட பருத்திக்கு (Bt cotton) மாறிய பின் தற்கொலைகள் அதிகமாகி உள்ளன” என்கிறது. பூச்சி மருந்து குறைவு, அதிக மகசூல், என்று பலவிதமான மேலும் படிக்க..

கொத்தமல்லி சாகுபடி

குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.  தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது. கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு மேலும் படிக்க..

வாழையில் ஊடுபயிராக இஞ்சி

பூலத்தூர் மலைக் கிராமத்தில் பட்டதாரி விவசாயி ஒருவரின் புது முயற்சியால், ஊடு பயிராக இஞ்சி பயிரிடப்பட்டு, மலை வாழையில், நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பூலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 38. எம்.ஏ., பட்டதாரி. தோட்டத்தில் காபி, வாழை, ஆரஞ்சு, அவக்கடா உள்ளிட்ட மலைப்பயிர்கள் பயிரிட்டுள்ளார். கோகுலகிருஷ்ணன், 10 ஏக்கரில், மலை வாழைக்கு இடையே இஞ்சி பயிரிட்டுள்ளார். இதனால் மலை வாழையில் முடிக்கொத்து, வாடல் நோய் தாக்குதல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கோகுலகிருஷ்ணன் கூறியதாவது: வாழைக்கு இடையே இஞ்சி பயிரிட்டேன். மேலும் படிக்க..

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்

வ.எண் – திட்டத்தின் பெயர் – வழங்கப்படும் மானியம் (ஒரு எக்டருக்கு) – விவசாயிகளுக்கு வழங்கப்படும் அலகு 1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்(HDS) – 50 சத மானியத்தில் காய்கறி விதைகள் பழச்செடிகள், மலர்ச்செடிகள் வழங்கப்படும் – 0.5 எக்டர் 1.0 எக்டர் 2. வானிலை சார்ந்த பயிர்காப்பீடுத் திட்டம் (WBCIS) – தட்பவெப்பநிலையின் மூலம்சேதாரம் ஏற்படுவதின் காரணமாக வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். 3. தேசிய வேளாண் மேலும் படிக்க..

வேர் உட்பூசணம் என்னும் பயிர்களின் நண்பன்

பயிர்களின் வேர்கள் நிலத்தில் பதித்து சத்துக்களை கிரகித்து வளர்கின்றன. இந்த வேர்கள் குறிப்பிட்ட அளவு ஆழத்திற்கு மட்டுமே செல்லும். அப்படி செல்லும் இடத்தில்கிடைக்கும் சத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆனால் வேர் உட்பூசணங்களை பயிர்களுக்கு இடும் போது அவை தாவரங்களுக்கு எளிதில் கிடைக்காத சில நுண்ணிய சத்துக்களை கூட கிரகித்து பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த வேர் பூசணங்கள் என்பது ஒரு வகை நுண்ணுயிர் வகையை சேர்ந்தது. இது பயிர்களின் வேர்களில் வாழ்ந்து கொண்டு பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மேலும் படிக்க..

வாழையைத் தாக்கும் கூன் வண்டை கட்டுப்படுத்தும் வழிகள்

வாழையை கோடை காலங்களில் கூன் வண்டு எனப்படும் பூச்சி வகைகள் அதிகம் தாக்குகின்றன. இந்த வண்டுகளை இனக்கவர்ச்சி பொறி மூலம் அழிக்கலாம். இதன் தாக்குதல் பற்றியும், இதை கட்டுப்படுத்தும் வழிகள் பற்றியும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பூச்சியியல் துறை வல்லுநர் விஜயகுமார் கூறியது: தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக வாழையில் கூண் வண்டு தாக்குதலை ஏற்படுத்தி வாழையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பும் ஏற்படும். இந்த கூண் வண்டு கிழக்குக் மேலும் படிக்க..

ஹியூமிக் அமிலம் பயன்கள்

ஹியூமிக் அமிலம் (Humic acid) என்பது பூஞ்சாணம், நிலத்தடி நீர், புதைபொருட்களின் சிதைவுகளின் மூலம் உருவாகும் பல அமிலங்கள் சேர்ந்த கலவை. இந்த அமிலத்தை களிமண்ணில் தெளிக்கும்போது அது மண்ணை இலகுவாக மாற்றி அதன்மூலம் நீர் உட்கிரகிக்கும் திறனையும் ஆரோக்கியமான வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மணற்பாங்கான இடத்தில் தெளிக்கும்போது அதனுடன் தேவையான அங்ககப் பொருட்களைச் சேர்த்து நீர் தேக்கும் திறனை அதிகரிக்கிறது. இதன்மூலம் மண்ணிலிருந்து சத்துக்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மண்ணில் தாவரத்திற்கு தேவையான சத்துக்களைதாவரம் உட்கொள்ளும் வகையில் மேலும் படிக்க..

வாழையில் ஊடுபயிராக வெள்ளரி

கோபி சுற்று வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பயிரிடப்பட்ட வெள்ளரி பழம் அறுவடை தீவிரமாக நடக்கிறது. விவசாய கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக தோட்டக்கலை பயிர்களான காய்கறிகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர். கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, பாகற்காய், காலிஃபிளவர், புடலை, சின்ன வெங்காயம், பூசணி வகைகள், முள்ளங்கி, கீரை வகைகள் மற்றும் பூ வகைகள் வகைகளை அறுவடை செய்ய கூலியாட்கள் தேவை இல்லை.குடும்ப உறுப்பினர்களே பெரும்பாலும் அறுவடை செய்கின்றனர். தோட்டக்கலை பயிர்கள் மூலம் அதிகளவில் லாபமும் கிடைக்கிறது.  ஃபிப்ரவரி மாத இறுதியில் மேலும் படிக்க..

நிலக்கடலை சாகுபடி குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்

“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 மே 29ம் தேதி, நிலக்கடலை சாகுபடி குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, அதன் ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 மே 29ம் தேதி, “நிலக்கடலை சாகுபடியும், களைக்கட்டுப்பாடு முறை’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சியில், நிலக்கடலை சாகுபடியின் முக்கியத்துவம், மண் பரிசோதனை மேலும் படிக்க..

மக்கும் எரு தயாரிக்கும் முறைகள்

மக்கும் எருவை குழிமுறை குவியல் முறை என 2 முறைகளில் தயாரிக்கலாம். மக்கும் எரு தயாரிக்கும் இடம் நிழல் உள்ளதாக இருக்க வேண்டும். மழைநீர் தேங்காத மேட்டுப்புறமாக இடத்தை தேர்வு செய்து குழி எடுக்க வேண்டும். ஆழம் 3 அடுக்கு மேல் போக கூடாது. 3 அடிக்கு கீழே குறைந்த எண்ணிக்கையிலே பாக்டீரியா வாழ முடியும். நீளம், அகலம் நமது வசதிக்கு ஏற்ப வைத்து கொள்ளலாம். முதலாவதாக காய்ந்து பட்டுப்போன பெரும் குச்சிகளை முறித்து போட்டு 3/4 மேலும் படிக்க..

இயற்கை விவசாய கருத்தரங்கம்

திருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாய பண்ணையில்  இயற்கை விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வரும் மே 27, 2012 அன்று மாநில அளவில் ஆன  விவசாய கருத்தரங்கம் நடை பெறுகிறது. இதில் இயற்கை விவசாயி நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார். இயற்கை விவசாயம் பற்றிய ஆலோசனைகள் கொடுக்க படும். மூவாயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு கிலோ பாரம்பரிய விதைகள் கொடுக்க படும். மேலும் விவரங்களுக்கு, செல் 09443320954 அணுகலாம் நன்றி:தினமலர்

வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி

கோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. நெல், கரும்பு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களின் உற்பத்திக்கு பெயர் போன கோபி பகுதியில், ஐந்து ஆண்டுகளாக மாற்றுப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். உரம் விலை பல மடங்கு உயர்வு, விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் சாகுபடியும், சரியான விலை கிடைக்காததாலும், குறித்த காலத்தில் கரும்பு வெட்டாததால் கரும்பு சாகுபடியும், நிரந்தர விலை மேலும் படிக்க..

இயற்கை உரங்களை பரப்ப திட்டம்

ரசாயன உரங்கள் பெட்ரோலிய பொருட்களில் இருந்தும் குறைவாக கிடைக்கும் தாதுக்கள் இருந்தும் தயார் செய்ய படுகின்றன. இவை இரண்டும் வெளி நாடுகள் இருந்து இறக்குமதி செய்ய படுகின்றன. பெட்ரோலியத்தின் விலை ஏறி கொண்டே போகிறது. இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து கொண்டே போகிறது. இதனால் ரசாயன உரங்கள் உற்பத்தி விலை ஏறி கொண்டே போகிறது. மேலும் உர தாதுகள் ஆன போஸ்பேட் எப்படி நெருக்கடி வர போகிறது என்றும் நாம் படித்தோம். இதனை எல்லாம் ஒரு வழியாக மேலும் படிக்க..

கோடையில் பிஞ்சு வெள்ளரி சாகுபடி

கோடைப்பட்டத்தில் நல்ல வருவாயினைத் தருவது பிஞ்சு வெள்ளரி சாகுபடி. இந்தப்பயிர் சிறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இவர்கள் சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர்தான் செய்ய இயலும். பிஞ்சு வெள்ளரி சாகுபடி என்பது வெள்ளரிக்காய் பிஞ்சாக இருக்கும்போதே அறுவடை செய்து விற்று பயன்பெறும் தொழிலாகும். இதன் வயது 90 நாட்கள். பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாகி அதிக விதைகளைக் கொண்டிருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது. மிகச்சிறிய பிஞ்சுகள், நீளம் ஆறு மேலும் படிக்க..

கோடீஸ்வரர்களின் கடன்!

ஒரு விவசாயி விவசாயம் செய்ய வங்கியில் கடன் வாங்குகிறார் என்போம். திடீர் என்று காற்று அடித்தோ, அல்லது பூச்சி தாக்குதல் மூலமோ, அல்லது விலை வீழ்ச்சி மூலமோ, அவரால் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை. வங்கிகள் உடனே என்ன செய்யும்? அவருடைய சொத்துகளை ஜப்தி செய்யும். வெறும் 20 ஆயிரம் ருபாய் கடன் நிலுவைக்காக ஜப்தி செய்ய பட்ட செய்திகளை நாம் தினமும் பார்க்கிறோம். மகாராஷ்ட்ராவில், BT பருத்தி சாகுபடி செய்து கடன் பட்டு தற்கொலை செய்தவர்களை மேலும் படிக்க..

இயற்கை விவசாயம் மூலம் உலக சாதனை

ஒரு காலத்தில் பீகார் என்றால் மோசமான செய்திகள் தான் வரும். கங்கை நதியில் வெள்ளம், இல்லாவிட்டால் எதோ ஒரு ரயில் தடம் புரண்டு இருக்கும். மாட்டு தீவன ஊழலில் புகழ் பெற்ற பீகாரில் எல்லாம் சாதி மயம் தான். சுதந்திரம் பெற்ற போது பீகார் இந்தியாவில் பொருளாதரத்தில் இரண்டாவது இடத்தில இருந்தது. முப்பது ஆண்டுகளில் அதல பாதாளத்தை சேர்ந்தது இப்போது அங்கே வந்துள்ள புது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பீகார் மீண்டும் எழுச்சி பெற ஆரம்பித்து மேலும் படிக்க..

மிளகாயில் பூச்சி கட்டுப்பாடு

நாற்றங்காலில் இலைப்பேன் தாக்குதல் உள்ளதா என்று கவனியுங்கள். இலைப்பேன் தாக்குதலுக்கு உள்ளான மிளகாய் இலைகள் சிறுத்து மேடு பள்ளங்களுடன் காணப்படும். அப்படிப்பட்ட இலைகளின் பின்புறத்தினை உற்றுநோக்கினால் வைக்கோல் நிற மெல்லிய பேன் போன்ற பூச்சிகள் விரைந்து நகர்வதைக் காணலாம். நாற்று பிடுங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக டைமீதோயேட் 0.03 சத கரைசலைக் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து நட்ட வயலில் இலைப்பேன் தாக்குதல் தொடர்வதைக் கட்டுப் படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி டைமீதோயேட் மருந்து வீதம் மேலும் படிக்க..

வெட்டிவேர் மகிமைகள்

விலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் வெட்டிவேர் எல்லா விவசாயிகளுக்கும் நன்மை செய்யும் ஒரு வெற்றி வேராகத் திகழ்கிறது. பிரதானமாக இந்த வேர் மண் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. வெட்டிவேரின் செடிகளை வேருடன் வெட்டி, தோண்டி எடுத்து, ஒரு கொத்தாக உள்ள செடியைத் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். பின் வேர்ப்பகுதியிலிருந்து 15-20 செ.மீ. மேலே உள்ள இலைகளை வெட்டிவிட வேண்டும். வேர்ப்பகுதியிலிருந்து 10 செ.மீ. கீழே உள்ள வேர்களை வெட்டி, நடுவதற்கு உள்ள நாற்றுக்களைத் தயாரிக்க மேலும் படிக்க..

சொட்டு நீர் பாசன முறையில் மிளகாய் விளைச்சல் அமோகம்

சொட்டு நீர் பாசனத்தில் பயிரிட்டுள்ள மிளகாய் அமோகமாக விளைச்சல் கண்டுள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தை சேர்ந்த அறிவழகன்,40. விவசாயியான இவர் தனது நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனத்தில் மிளகாய் பயிர் செய்துள்ளார். இந்த பயிர் தற்போது அமோகமாக விளைச்சல் கண்டு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து விவசாயி அறிவழகன் கூறியதாவது: சொட்டு நீர் பாசனத்தில் கடந்த ஜனவரி மாதம் எனது நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிர் செய்துள்ளேன். மேலும் படிக்க..

களர் நிலத்தை சரி செய்ய டிப்ஸ்

களர் நிலத்தை சரி செய்ய சணப்புப் பயிரை விதைத்து அதை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதால் போதும். களர் நிலத்தை மேம்படுத்த தக்கைப்பூண்டை பயிரிட்டு, அது பூப்பதற்கு முன் மடக்கி உழவு செய்யவேண்டும். களர் நிலத்தை சரிசெய்ய பிரண்டையை இடலாம். களர்நிலத்தில் வேப்பந்தழை இட்டால் சரியாகும். உப்புநிலத்தை சரிசெய்ய வேப்பங்கொட்டை மேல் தோலை இடலாம். வேப்பம் புண்ணாக்கு இட்டால் உவர் தன்மை சரியாகும். பனை மரத்தின் ஓலையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை அதிகளவு நிலத்தில் இட்டால் மேலும் படிக்க..

திருந்திய நெல் சாகுபடியில் நாற்று நடவு நுட்பங்கள்

திருந்திய நெல் சாகுபடி நாற்றங்கால் அமைப்பது குறித்து கோபி வேளாண்மை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கோபி வட்டார விவசாயிகள் அதிக அளவில் இம்முறையில் நெல் நடவு செய்கின்றனர். திருந்திய நெல் சாகுபடி நாற்றங்கால் அமைப்பது முக்கியமான தொழில் நுட்பமாகும். இள நாற்றை நடுவதால் விரைவில் நிலை கொண்டு, நாற்று விரைந்து வளரும். வேர்களின் வளர்ச்சி அதிகமாகிறது. அதிக தூர்கள் வெடிக்கின்றன. இலைகள் அறுவடை வரை பசுமையாக இருப்பதால் சூரிய ஒளிக்சேர்க்கை கடைசி வரை நன்றாக மேலும் படிக்க..

இலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்

இலைச் சுருட்டுப் புழு – நெஃபெலோக்ரோசிஸ் மெடினாலிஸ் பூச்சியின் வாழ்க்கைச் சரிதம் பெண் அந்துப் பூச்சி, தளிர் இலைகளின் அடிப்பரப்பில் 10-15 முட்டைகளை ஒரே தொகுதியாக, பெரும்பாலும் வரிசையாக இடும். முட்டைகள் வெண்மையாக இருக்கும். 6-7 நாட்களில் இளம் புழுக்கள் வெளிவரும். புழுப் பருவம் 25-30 நாட்கள் வரை நீடிக்கும். முழு வளர்ச்சியடைந்த புழு சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் இலையினுள்ளேயே கூண்டுப் புழுவாக மாறும். கூண்டுப் புழுக்களிலிருந்து 6-8 நாட்களில் அந்துப் பூச்சிகள் வெளிவரும். வாழ்க்கைச் சுழல் 30-42 மேலும் படிக்க..

பாரம்பரிய விதைகளை சேர்த்து வரும் குருசுவாமி

கர்நாடகாவில் உள்ள சமரஜநகர் மாவட்டத்தில் உள்ள ஒடையார் பாளையம் கிராமத்தில் உள்ள ஓர் வீட்டின் இருட்டு அறையில் வரிசை வரிசை ஆக சிறிய பானைகளும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில் களும் உள்ளன இவை எல்லாம் பாரம்பரிய விதைகள். இவற்றை தன்னுடைய உழைப்பால் சேகரித்து உள்ளார் இந்த ஊரை சேர்ந்த குருசுவாமி. 10 ஆண்டுகளாக பாரம்பரிய விதைகள் சேர்த்து வருகிறார் இவர். கர்நாடகத்தில் உள்ள பாரம்பரிய விவசாயிகள் மூலம் கிடைத்த விதைகள் இவை. திரு குருசுவாமி கூறுகிறார்: “இயற்கைக்கும் மேலும் படிக்க..

தேங்காய் பறிக்க நூதன திட்டம்!!

திருவனந்தபுரம்: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகமானது முதல், நாடு தழுவிய அளவில், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. குறிப்பாக, தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்க யாரும் வருவதில்லை. அப்படியே வந்தாலும், அவர்கள் கேட்கும் கூலி, விவசாயிகளுக்கு கிலி ஏற்படுத்துவதாக உள்ளது. தேங்காயை பறித்து, இழப்பை சந்திப்பதை விட, “தானாக காய்த்து விழட்டும், கொப்பரையாவது தேறும்’ என்ற மனநிலைக்கு விவசாயிகள் ஆளாகி உள்ளனர். இதனால், ஒரு காலத்தில் தேங்காய் மேலும் படிக்க..

உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் தேமல் நோய்

உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் மிக முக்கியமானதாகும். அறிகுறிகள் மஞ்சள் தேமல் நோய் தாக்குதலுக்குட்பட்ட பயிரின் இலைப்பரப்பில் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றி படிப்படியாக மஞ்சள் நிறப்படலங்களாக மாறிவிடும்.  இந்த நோயானது உளுந்தை மட்டுமின்றி பச்சைப்பயறு, துவரை மற்றும் சோயாமொச்சை போன்றவற்றை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இந்த நோயின் அறிகுறிகளான மஞ்சள்நிற தேமல் படலங்கள் முதன் முதலில் இளம் இலைகளில்தான் காணப்படும். இந்த நோயின் பாதிப்புக்குட்பட்ட பயிர் முதிர்ச்சியடைய காலதாமதமாகும். மேலும் குறைந்த அளவே மேலும் படிக்க..

ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பல்வேறு குணங்களைக் கொண்ட ஆடுதுறை நெல் ரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. அதில் அதிக சவுகர்யங்கள் இல்லாத, சிறு விவசாயிகளுக்கு ஏற்றது ஆடுதுறை 37 நெல் ரகமாகும். பொதுவாக கோடையில் நெல் சாகுபடியை செய்வது மிகக் கடினமானது. இந்தக் கோடையிலும் நல்ல பலனைத் தருவது ஆடுதுறை 37 ரகமாகும். சிறு விவசாயிகள் இதனை சாகுபடி செய்யலாம். வைகாசி பட்டத்தில் நெல் சாகுபடி செய்வது சிறிது கடினமானாலும் வைகாசியும் நெல் சாகுபடி பட்டம்தான். இந்த மாதத்தில் கோடை மேலும் படிக்க..

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை மூலம் ஒரு எக்டருக்கு 249 டன் கரும்பு மகசூல் பெறலாம் என தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக சோதனைத் திடல்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பு 3.06 லட்சம் எக்டரில் சராசரி விளைச்சல் எக்டருக்கு 105 டன் ஆகும். ஆனால் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையை பின்பற்ற தொடங்கியபின், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாகுபடி அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்ட விவசாயி ஒருவர் ஒரு மேலும் படிக்க..

திருந்திய நெல்சாகுபடி: 2 கிலோ விதை நெல்லில் 60 மூட்டை மகசூல்

 திருந்திய நெல் சாகுபடியின் மூலம் 2 கிலோ விதை நெல்லில் குறைந்தபட்சமாக சுமார் 60 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும் என்றார் வேளாண் விரிவாக்க இணை இயக்குநர் ஆர். முருகவேல். வேளாண் விரிவாக்க இணை இயக்குநர் முருகவேல் பேசியது: இந்த உழவர் பெருவிழாவின் குறிக்கோள், விளைச்சல் உற்பத்தியை 2 மடங்காகவும், வருவாயை 3 மடங்காகவும் விவசாயி பெற வேண்டும் என்பதுதான். சாதாரணமாக, ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவை. இவை சுமார் 30 மேலும் படிக்க..

நெற்பயிரை காக்கும் இயற்கை பூச்சி கொல்லிகள்

 நெற்பயிரைக் காக்க இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்துகளை சுயமாக தயாரிப்பது எப்படி என்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். நெற்பயிர்களில் அண்மைக்காலமாக அதிக நச்சுத்தன்மையுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள், அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில பூச்சிகள் இந்த மருந்துக்கு எதிர்ப்புத் திறன் பெற்று விட்டதால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிக நச்சுத்தன்மையுள்ள மருந்துகளை பயன்படுத்துவதால், பயிர்களை தாக்கும் பூச்சிகளை இயற்கையிலேயே பெருகா வண்ணம் தடுத்து நிறுத்தும், நன்மை செய்யும் பூச்சிகள் அழிகின்றன. அத்துடன் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. மேலும் படிக்க..

அழுகும் வழைகன்றை என்ன செய்வது?

முதலில் அழுகிய வாழை கன்றின் குருத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் முதல் கட்டமாக காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும். பின்னர் டிரைகோடெர்மா விரிடி 1 கிலோகிராம் 50 – 60 குப்பையுடன் கலந்து உரமாக அந்த மரத்திற்கு தரவேண்டும். இவ்வாறு உரம் கொடுக்கும் போது மண்ணில் உள்ள கிருமிகள் செத்துவிடும். மேலும் கீழ்கண்ட உர மேலாண்மை செய்ய வேண்டும். மேலும் படிக்க..

புளியில் மேல் ஓடு பிரிக்கும் இயந்திரம்

அறுவடை செய்ய பட்ட புளியில் 25-30% வரை மேல் ஓடு இருக்கும், புளியை சமையல் செய்து சாப்பிட இந்த ஓடை எடுக்க வேண்டும். மேல் ஓடை எடுக்கும் வேலயை இப்போது மனிதர்கள் தான் செய்கின்றனர். அறுவடை செய்த பின் புளியை வெயிலில் காய வெய்து, அதன் பின் குச்சிகளால் குத்தி மேல் ஓட்டை எடுக்கின்றனர். ஏற்கனவே வேலை ஆட்கள் பற்றாக்குறை ஆட்டி வைக்கும் போது இந்த வேலையை செய்ய வருபவர்கள் குறைந்து வருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க மேலும் படிக்க..

நெல்லிக்காய் சாகுபடியில் சாதனை

விஜய் மற்றும் அசோக் பெட்ரே சகோதரர்கள் வரட்சியான பகுதியில் நெல்லிக்காய் சாகுபடி செய்து சாதனை செய்துள்ளார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள மல்நாடு பகுதியை சேர்ந்த இவர்கள் இருக்கும் இடத்தில பாக்கு தோட்டங்களே அதிகம். இவர்கள் சேலத்திற்கு வந்த போது நெல்லிக்காய் சாகுபடி பற்றி தெரிந்து கொண்டனர். இப்போது 30 ஹெக்டர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். ஜீரோ பட்ஜெட் விவசாயம் படி விவசாயம் செய்கின்றனர். ஜீவம்ருத செய்ய நாட்டு பசுக்களின் சாணி, வெல்லம் பயன் படுத்துகின்றனர். நெல்லிக்காயக்கு ஆயுர்வேத மேலும் படிக்க..

நெற்பயிரில் இயற்கை பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்

விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கவும் விளக்குப் பொறிகளைப் பயன்புடுத்தலாம். தேவையில்லாத பொருட்களை வயலில் ஒரு ஓரமாகக் குவித்து மாலை வேளைகளில் தீ மூட்டி விளக்குப் பொறியாகப் பயன்படுத்தலாம். மேலும் அரிக்கேன் விளக்கு மற்றும் மின்சார விளக்குகளையும் பொறியாகப் பயன்படுத்தலாம். இந்தப் பொறிகளை மாலை ஐந்தரை மணிக்கு மேல் வயலில் வைக்க வேண்டும். தாய் அந்துப் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தினால் கவரப்படும்.இந்த முறையில் தாய்ப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறிகளின் அருகில் ஒரு பெரிய மேலும் படிக்க..

பருத்தியில் நுனி கிள்ளுதல்

அதிக வெப்பத்தினால் பருத்திக்கு அதிகம் நீர் பாய்ச்சப்படுகிறது. மேலும் தழைச்சத்து அதிகம் உள்ள இடங்களிலோ அல்லது இட்ட இடங்களிலோ செடி வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு பூ, காய் மற்றும் சப்பைகள் கொட்ட ஆரம்பிக்கும். இதனைக் கட்டுப்படுத்த நுனிக்கிள்ளுதல் அவசியமாகும். பயிர் வளர்ச்சியில் காய்கள் அதிக பருமனாவதற்கும் நன்கு வெடிக்கவும் கையாள வேண்டிய சில எளிய தொழில்நுட்பங்களில் நுனி அரும்பு கிள்ளுதல் என்பது முக்கிய தொழில் நுட்பமாகும். தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதால் பயிர்கள் சில சமயங்களில் தேவைக்கு அதிகமாக மேலும் படிக்க..

சித்தரை பட்டத்தில் எள்

இப்போது உளுந்துக்கு அடுத்தப்படியாக எள் பயிரிடப்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் சித்திரை மாதத்தில் எள் பயிரிட்டால் ஓரளவு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏதுவாக அமையும். எள்ளுக்கு தண்ணீர் அதிகாளவு பிடிக்காது. களையும் ஒரு முறை எடுத்தால் போதும். அதுவும் களைக்கொல்லி போட்டுவிட்டால் களை எடுக்க வேண்டியதில்லை. எள் பயிர் 2 இலைவிட்டசில நாட்களில் நுனியை கிள்ளி விட்டால் அதிக கிளை வெடித்து காய்கள் அதிகளவில் பிடிக்கும். இதனால் மகசூல் அதிகரிக்கும். மேலும் எள் செடி நெருக்கமாக இருந்தால் அவற்றை மேலும் படிக்க..

கொய்யா சாகுபடியில் புதிய வேளாண் தொழில்நுட்பம்

நாட்டின் மிக முக்கிய பழப்பயிர்களுள் ஒன்றானது கொய்யா. குறிப்பாக ஏப்- மே மற்றும் ஆகஸ்ட்-செப்டம்பர் ஆகிய இரண்டு பருவ காலங்களில் கொய்யா அறுவடைக்குத் தயாராகி அதிகளவு விற்பனைக்கு வரும். மழை பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்யா பழங்கள் மகசூல் அளவில் அதிகரித்து காணப்பட்டாலும் அவற்றின் தரம் குறைவாகக் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் பழ சந்தையின் சந்தை தேவையை கருத்தில் கொண்டு கொய்யா உற்பத்தியைப் பெருக்க மேற்குவங்க கொய்யா விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகள் பங்களிப்புடன் புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் மேலும் படிக்க..

மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூலுக்கு டிப்ஸ்

மழையை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்படும் மானாவாரி விவசாயத்தில், சில நவீன யுக்திகளை கையாண்டு, நல்ல மகசூல் எடுக்கலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். கோபி வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு ஆசைத்தம்பி கூறியதாவது: தமிழகத்தில், 52 விழுக்காடு நிலம் மானாவாரியாக உள்ளது. மானாவாரியில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு, சோளம், கம்பு, ராகி, பருத்தி மற்றும் பயறு வகைகளான உளுந்து, துவரை, பாசிப்பயறு, தட்டை போன்றவை பெரும்பாலும் சாகுபடியாகிறது. சிறு விவசாயிகளின் நிலங்கள் பெரும்பாலும் மானாவாரி மேலும் படிக்க..

தண்ணீர் பாலிடிக்ஸ்

நிலத்தடி நீரை தனியாரிடம் தாரை வார்த்து தர துடிக்கும் ஹார்வர்ட் பல்கலைகழக, பொருளாதார நிபுணர்களுக்கு (Montek Singh Ahluwalia) துணை போகும் நம் பிரதமரை சாடும் தினமணியின் தலையங்கம் தலையங்கம்: வேண்டாமே… நிலத்தடி நீரைப் பொதுச் சொத்தாக மாற்ற நாம் தயாராக வேண்டும் என்றும், குடிநீருக்குத் தகுந்த விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், தில்லியில் நடைபெற்ற இந்திய நீர் வார விழா நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பது, மத்திய அரசு நிலத்தடி நீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் மேலும் படிக்க..

வாழை சாகுபடியில் விளைச்சலைப் பெருக்கும் வழிமுறைகள்

வாழை சாகுபடியில் விளைச்சலைப் பெருக்குவதற்கு முறையான வழிமுறைகளைக் கையாண்டால் அதிக மகசூலைப் பெற முடியும்.  இது குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியல் துறை வல்லுநர் விஜயகுமார் கூறியது: வாழையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மண்வெட்டியால் கொத்தி மண் அணைக்க வேண்டும். பக்கக் கன்றுகளை மாதம் ஒரு முறை நீக்க வேண்டும். இலைக்காக சாகுபடி செய்யப்படும் பூவன், கற்பூரவள்ளி மற்றும் மெந்தன் ரகங்களில் முதல் மூன்று அல்லது நான்கு பக்கக் கன்றுகளை வளர மேலும் படிக்க..

நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

புரோடீனியா புழு: புழுக்கள் நிலக்கடலை செடியின் குருத்து மற்றும் இலைகளை கடித்து தின்பதால் பயிர்கள் ஆடு, மாடுகள் மேய்ந்ததுபோல் காணப்படும். இதன் அந்துப்பூச்சி உருண்டை வடிவ முட்டைகளை குவியலாக இலையின் மேற்பரப்பில் இட்டு அதை கம்பளி ரோமங்களால் மூடி வைக்கும். இளம் புழுக்கள் பச்சை நிறமாகவும் பின்னர் கருப்புப் புள்ளிகளுடன் நிறமாற்றம் பெறும். இப்புழுவின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் உடல்நிறம் மாறிவரும். பழுப்பு நிற அந்துப்பூச்சியின் முன் இறக்கைகளில் கருப்பு நிறப் பின்னணியில் மஞ்சள் நிற குறுக்கு மேலும் படிக்க..

விண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம் சாகுபடி செய்துவருகிறார். இப்பண்ணையில் உள்ள தோப்புகள் முழுவதும் இயற்கை வேளாண்மை முறையே மேற்கொள்ளப்படுவதால் இந்த ரகத்தின் பாரம்பரிய குணாதி சயங்கள் எதுவும் மாறாமல் காக்கப் படுகிறது. இயற்கை முறை பராமரிப்பு என்பதால் நோய் தாக்குதல் இல்லை. இப்பண்ணையில் உருவாக்கப்படும் முருங்கை கன்றுகளுக்கு, நன்கு பராமரிக்கப்பட்டு தாய்குணம் உள்ள, அதிக காய்பிடிப்பு தன்மையுள்ள மரத்தில் விண்பதியம் மூலம் மேலும் படிக்க..

நம்மாழ்வாரின் இயற்கை வாழ்வியல் பயிற்சி

கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான வானகம் இயற்கை வேளாண்   பண்ணையில் வருகிற ஏப்ரல் மாதம் 21.4.2012  மற்றும்  22.4.2012     ஆகிய   நாட்களில்   இயற்கை வாழ்வியல் பயிற்சி  நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும்.   செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும். இந்த களப்பயிற்சியை ” இயற்கை ஞானி நம்மாழ்வார் ”  மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு

கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்து சாதனை படைத்துள்ளார். 1960-களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சி, இந்தியாவின் வேளாண் முறையையே தலைகீழாக மாற்றி அமைத்துவிட்டது. ஆனால், பசுமைப் புரட்சியால் நெல் உற்பத்தி பலமடங்கு பெருகிவிட்டதாக மார்த்தட்டிக் கொண்டாலும், ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகளும் ஏராளம் என்பதை அண்மைக் காலமாக அறியமுடிகிறது. விளைவு இயற்கை விவசாயம் மற்றும் அதன்மூலம் விளையும் உணவுப் பொருள்களுக்கு மவுசு கூடிவருகிறது.  இதை, மேலும் படிக்க..

ஆகாயத் தாமரையை கட்டுப்படுத்துவது எப்படி?

தமிழகம் முழுவதும் உள்ள ஆறு, குளம், வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை தாவரம் வளர்ந்து படர்ந்து அதனுடைய நீரோட்டத்தை தடுத்துள்ளது. பொதுப்பணித் துறையினர் ஆண்டுதோறும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற பல கோடி ரூபாய் செலவு செய்து அவை அழிந்தபாடில்லை. இந்நிலையில் ஆகாயத்தாமரைச் செடிகளை அப்புறப்படுத்தவும், கட்டுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையை தமிழக அரசு பொதுப்பணித் துறையினர் கையாண்டு குறைந்த செலவில் ஆகாயத் தாமரைகளைக் கட்டுப்படுத்தலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலும் படிக்க..

மின்வெட்டால் பாழாகும் தென்னை நார் உற்பத்தி

கோவை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டால் தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மூலப்பொருளான தேங்காய் மட்டை தோட்டங்களிலேயே தேக்கமடைந்துள்ளது. இதனால், இதன் விலை பல மடங்கு சரிந்து விட்டது. தமிழகத்தில், பருத்தியை ஆதாரமாக கொண்டு டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததை போன்று, தென்னை விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாகியுள்ளன. நார் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான தென்னை மட்டைகள் அதிகளவில் கிடைப்பதால் கோவை மாவட்டத்தில் நார் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தென்னை நாரில் இருந்து, மேலும் படிக்க..

ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க யோசனை

மானாவாரி பருவம் துவங்குவதால் முன் கூட்டியே ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேண்டும், என வேளாண்மை துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.கோபி வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு ஆசைத்தம்பி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பில் 50 சதவீதம் வானம் பார்த்த பூமியாகும். மானாவாரி பயிரிடப்படும் நிலங்களில் குறைந்த மகசூல் கிடைக்கிறது. இதற்கு காரணம் பருவம் தவறி மழை பெய்வதும், மழை அளவில் நிலையில்லாத தன்மை, குறைந்த கால மழை பருவம், அதிக அளவில் நீர் ஆவியாதல், மேலும் படிக்க..

மரவள்ளிப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் வழிகள்

மரவள்ளிப் பயிர்களை 3 விதமான பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது. அவற்றை முறையான வழிகளில் கட்டுப்படுத்தினால் அதிக மகசூலை பெற முடியும். மரவள்ளியின் கால அளவு 9 முதல் 10 மாதங்கள். புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மரவள்ளி பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் முள்ளுவாடி என்ற ரகமும், கேரள ரோஸ் ரகமும்தான் அதிகம் பயரிடப்படுகின்றன. தற்போதுள்ள அதிக வெப்பநிலை, காற்றில் அதிக ஈரப்பதம் ஆகிய காரணங்களால் பூச்சிகள் தாக்குகின்றன.இப் பயிரை தாக்கும் பூச்சிகளும் அதை கட்டுப்படுத்தும் மேலும் படிக்க..

நல்ல மகசூல் கொடுக்கும் எள்

எண்ணெய் வித்துப் பயிரான எள், வறட்சியை தாங்கி வளரும் இயல்புடையது. இது, செம்மண், வண்டல் மண் நிலங்களில் நன்கு வளரும். விதைத்ததில் இருந்து, மூன்று மாதத்தில் அறுவடைக்கு வருகிறது. வறண்ட கால நிலை நிலவும் கோடை காலம் எள் சாகுபடிக்கு ஏற்றது. விவசாயிகளுக்கு எந்தச் சூழ்நிலையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல், நல்ல வருமானம் தரக்கூடியது. பொங்கலூர் பகுதியில், கடந்த மார்கழி பட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, அறுவடை செய்யப்படு கிறது. இப்பகுதியில், பெரும்பாலான விவசாயிகள், மேலும் படிக்க..

எள் மகசூல் பெருக்கிட டிப்ஸ்

மாசிப்பட்டம் மடியில் பணம் என்பது எள் விவசாயத்திற்கான வழக்குச்சொல். ஆனால் இந்த ஆண்டில் தாளடி, பிந்திப்போனதால் பல இடங்களில் அறுவடைதற்போது தான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கோடையிலும் நெல் சாகுபடி செய்யலாமா?  என்று சிலர் சிந்திக்ககூடும். இது நடக்கக்கூடிய காரியமா?  மின் வெட்டு நம்மை நாளும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் குறைந்த நீரில் குறைந்த மகசூல், அதிக லாபமும் பெற என்ன செய்யலாம் என்பதே நம் எண்ணமாக இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் நம்முன்னே நல்ல மகசூல் மேலும் படிக்க..

உளுந்து பயிரில் புழு தாக்குதல் கட்டுபடுத்தும் முறைகள்

புரோட்டினியா புழு: பயிரிடப்பட்டுள்ள உளுந்து மற்றும் பச்சைப்பயறுகளில் புரோட்டினியா புழு தாக்குதல் காணப்படுகிறது. நெல் தரிசு உளுந்து பயிரில் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளில் புரோட்டினியா புகையிலைப்புழு முக்கியமானதாகும். இப்புழு முழு இலைகளையும், பூ மொட்டுகளையும், காய்களையும் தின்று சேதப்படுத்தும். இப்பூச்சியின் தாக்குதல் இரவு நேரங்களில் அதிகம் காணப்படும். புழுக்கள் பகல் நேரத்தில் மண் வெடிப்புகளிலும், சருகுகளின் அடியிலும் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரின் அடித்தூர்களிலும் பதுங்கி இருக்கும். அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்பு நிறமாகவும், வெள்ளை நிறக்கோடுகளுடன், பின் மேலும் படிக்க..

நிலக்கடலையில் விதை மேலாண்மை முறை

மணிலா சாகுபடி (நிலக்கடலை) செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற விதை மேலாண்மை முறைகளைப் கடைப்பிடிக்க வேண்டும்.  அதிக மகசூல் பெற சரியான பருவத்தில் விதைகளை விதைப்பது மிகச் சிறந்ததாகும். பூச்சி நோய்த் தாக்குதலைத் தவிர்க்க, வறட்சியைத் தவிர்க்க, அதிக மழையால் பயிர் பாதிக்காமல் இருக்க, பூக்காமல் இருப்பதை தவிர்க்க, அறுவடை சமயத்தில் மகசூல் அதிகரிக்க தகுந்த பருவம் மிக அவசியம் ஆகும். நல்ல வளமான செம்மண் பாங்கான காற்றோட்டமும், நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக மேலும் படிக்க..

சொட்டு நீர் பாசன சாகுபடியில் நீர் மற்றும் மின்சாரம் சேமிப்பு

திண்டிவனம் அடுத்த இறையானூர் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தில் சொட்டு நீர் பாசனம் குறித்த பயிற்சி நடந்தது. நீர், நிலவளத் திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சி முகாமிற்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் ராமமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது : தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை பயன்படுத்துவதன் மூலம் ஈடு செய்ய முடியும். விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சொட்டுநீர் பாசன முறையில் 50 ஏக்கரில் வாழையும், மேலும் படிக்க..

குதிரை மசால் சாகுபடி

குதிரை மசால் [மெடிக்காகோ சைட்டைவா] ‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற இதில் 20 சதவீதம் புரதச்சத்தும், 2.30 சதவீதம் சுண்ணாம்பு சத்து 0.23 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் உள்ளது. இதனை தினமும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் கொடுக்கவேண்டும். இதன் அளவு அதிகமானால் “வயிறு உப்பல்” ஏற்பட வாய்ப்புள்ளது. இது குளிர்கால இறவைப் பயிராகும். பருவம் : புரட்டாசி மாதம் ஏற்ற தருணம் நிலம் : வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலம் விதை : 8 கிலோ மேலும் படிக்க..

எளிமையான சொட்டு நீர் பாசனம்

இப்போதெல்லாம் நாம் எல்லா இடங்களிலும் கோக், பெப்சி பாட்டில்களை பார்க்கிறோம். குடித்த பின் இந்த லிட்டர் பாட்டில்களை தூக்கி போட்டு விடுகின்றனர். இந்த பாட்டில்களை வைத்து எளிமையான ஒரு சொட்டு நீர் பாசனம் வழி அமைத்து இருக்கிறார்கள்  நிகாரகுவா (Nicaragua) நாட்டில்.   ஒரு2 லிட்டர் பாட்டில் எடுத்து, கீழே ஒரு ஓட்டை போட வேண்டும். இந்த பாட்டிலை ஒரு குச்சியில் கட்டி வைக்க வேண்டும். கிழே பார்த்து இருக்கும் பாட்டில் மூடியை சரியாக திருப்பி வைக்க மேலும் படிக்க..

வறுமையை ஒழிக்கும் வழி இதுதானா?

நம் நாட்டின் பொருளாதார மேதை முதல்வரும், திட்ட கமிஷன் முனைவர் அவர்களும் எப்படி நம் நாட்டில் ஏழ்மை குறைந்து வருகிறது என்று பொய் கணக்கு சொல்கிறார்கள் என்பதை பற்றிய தினமணியில் அற்புதமான தலையங்கம். வறுமையை ஒழிக்கும் வழி இதுதானா? இந்தியப் பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்டு கடுமையான முடிவுகளை எடுக்கலாம் என்றால், கூட்டணி அரசாக இருப்பதால் ஏற்படும் நெருக்கடிகள் அந்தச் செயலையே மேலும் கடுமையாக்கி விடுகிறது. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் கருத்தொற்றுமை அடிப்படையில்தான் எட்ட வேண்டியிருக்கிறது – மேலும் படிக்க..

புகையிலை விதை எண்ணெய் சமையல் எண்ணெய்?

“புகையிலை தாவர விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சமையலுக்கு ஏற்றது என்பதால், அதன் உற்பத்தியை அதிகரிப்பது அவசியம்’, என, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி பேசினார். தமிழ்நாடு வேளாண் பல்கலை, மத்திய வேளாண் அமைச்சகத்தின் தேசிய எண்ணெய் வித்து மற்றும் தாவர எண்ணெய் வளர்ச்சி குழுமம் சார்பில், தென்மண்டல ஆய்வுக் கூட்டம், வேளாண் பல்கலையில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி, துவக்கி வைத்து பேசியதாவது:   சர்வதேச அளவில், எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் மேலும் படிக்க..

மரபணு மாற்றப்பட்ட கத்திரி பற்றி ஒரு ஆராய்ச்சி

மரபணு மாற்றப்பட்ட கத்திரி (Bt Brinjal) மீண்டும் செய்தியில் வந்து உள்ளது. நியூ சிலாந்து நாட்டை சேர்ந்த Jack A. Heinemann மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபியல் பேராசிரியர்  (Professor of molecular biology and genetics at the University of Canterbury, New Zealand). மரபணு மாற்றப்பட்ட கத்திரி இந்தியாவில் ஒப்புதல் கொடுக்க பட்ட ஆவணங்கள் ஆராய்ச்சி செய்து வெளியிட்டு உள்ளார். அவர் கூறும் குற்றச்சாட்டுகள்: – மரபணு கட்டுப்பாட்டாளர்கள் (Genetic Engineering Approval மேலும் படிக்க..

மாசிப்பட்டத்தில் குட்டைப்புடலை சாகுபடி

வயலின் நடுவே நேர் கால்வாய் எடுக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்த நிலத்தில் 144 குழிகள் வெட்ட வேண்டும். குழியில் மண், நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். குழியில் நட பிளாஸ்டிக் பை நாற்று தயார் செய்ய வேண்டும். விதையை ஒரு பகல் பூராவும் தண்ணீரில் நன்கு ஊறவைத்து இரவு அதை வெளியே எடுத்து வைத்துவிட்டு மீண்டும் மறுநாள் காலையில் ஊறப்போட்டு ஆறு மணி நேரம் கழித்து பாலிதீன் பையில் விதைக்க வேண்டும். பாலிதீன் பையில் மேலும் படிக்க..

காய்கறி பயிர்களுக்கு பயிர் ஊக்கிகள்

பெங்களூருவிலுள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் காய்கறி பயிர்களுக்கென்றே ஒரு பயிர் ஊக்கி கலவையைத் தயாரித்துள்ளது. நுண்ணூட்டச் சத்துக்கள் பயிருக்கு கிடைப்பதில் அவை இடப்படும் முறை முக்கிய பங்காற்றுகிறது. சுண்ணாம்பு அதிகமுள்ள மண்ணில் இடப்படும் இரும்புச்சத்து செடிக்கு கிடைப்பதில்லை. மேலும் மண்ணின் கார அமிலத் தன்மையைப் பொறுத்து சத்துக்கள் பயிருக்கு கிடைக்கும் அளவு வேறுபடும். இந்த பிரச்னைகளைத் தவிர்க்க இலைவழியாகத் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த காய்கறி பயிர் ஊக்கி பயிரின் வளர்தன்மை தேவைக்கேற்ப அதன் அளவும் தெளிக்கப்பட மேலும் படிக்க..

வெண்டைப் பயிரை பாதுகாப்பது எப்படி?

தை பட்டம், ஆடி பட்டம் ஆகிய இரு பருவங்களில் வெண்டை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தை பட்டச் சாகுபடி நடந்து வருகிறது. தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக, சூரியனின் உஷ்ணம் பூமியில் படும்போது, மண் சூடாகிறது. இதில் பூச்சிகளின் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது. வெண்டை விதைத்த ஒரு மாதத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடங்கும்.இது குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு அதிகம் இல்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நஷ்டமடைய நேர்கிறது. வெண்டை பயிரைக் காப்பதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் மேலும் படிக்க..

இறவை எள் சாகுபடிக்கு ஆலோசனைகள்

மாசிப் பட்ட இறவை எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1.65 லட்சம் ஏக்கரில் இறவை மற்றும் மானாவாரி எள் சாகுபடி செய்யப்படுகிறது.  இறவை எள் சாகுபடிக்கு மாசிப் பட்டம் (ஏப்ரல்-மார்ச்) ஏற்றதாக சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாசிப் பட்டத்தில் இறவை எள் விதைப்புக்கு, டிஎம்வி 3, டிஎம்வி 4, டிஎம்வி 6, கோ1, விஆர்ஐ (எஸ்வி) 1 மற்றும் எஸ்விபிஆர் 1 போன்ற எள் ரகங்கள் ஏற்றவை. ஒரு ஏக்கருக்கு மேலும் படிக்க..

கருப்பட்டி தேவை அதிகரிப்பு – விலை உயர்வு

கோடை வெயில் காரணமாக கோபி மற்றும் நம்பியூர் பகுதியில் பனை கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புகையிலை சாகுபடி அதிகரிப்பால் கருப்பட்டி தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டதால், கருப்பட்டி உற்பத்தியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பனை மரங்களில் இருந்தும், ஜூன் முதல் அக்டோபர் வரை தென்னையில் இருந்தும் பதநீரை இறக்கி, கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. கோபி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. வானம் பார்த்த பூமியான மேலும் படிக்க..

களையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள்

விவசாயிகள் மத்தியில் களையெடுக்கும் கருவியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மாற்று வழிமுறைகளை விவசாயிகள் தேட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வரும் கருவி களையெடுக்கும் கருவி. இதன் விலை 22 ஆயிரம் ரூபாய். இதில் 50 சதவீதம் விவசாய பொறியியல் துறை மானியம் வழங்குகிறது. பல பணியாளர்கள் செய்யும் வேலையை ஒரு களையெடுக்கும் கருவி செய்து முடித்து விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு செலவு குறைவதோடு, மேலும் படிக்க..

கோடையில் அதிக மகசூல் தரும் 2 வகை காய்கறிகள்

கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளை கோடையில் பயிர் செய்தால், அதிக மகசூல் கிடைக்கும் என வேளாண் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, திருவூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் தேவநாதன், பேராசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது: ஒவ்வொரு பருவ காலத்திற்கேற்ற பயிர்களை பயிர் செய்தால், அதிக மகசூலை பெறலாம். தற்போது, கோடைக்காலம் துவங்கியுள்ளது. இக்காலத்தில் பயிர் செய்ய வெண்டையும், கத்தரியும் உகந்த காய்கறிகள் வீரிய ஒட்டு ரகங்கள் கத்தரியில் அர்கா நவ்ஜீத், அப்சரா, சாயா, சியாமல் மேலும் படிக்க..

மா செடிகளுக்கு பாட்டில் மூலம் சொட்டு நீர் பாசனம்

      கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி மா மரங்களுக்கு நீர் இட ஒரு நூதன வழியை கண்டு பிடித்து உள்ளார். Nenamanahalli ஊரில் உள்ள N.R. சந்திர சேகர் மா செடிகளுக்கு பாட்டில் மூலம் நீர் பாசனம் செய்கிறார். கோலார் மாவட்டம் நீர் குறைந்து வறட்சி உள்ள மாவட்டம். இதை சமாளிக்க அவருடைய நூதன முறை என்ன? ஒவொரு மா மரத்தின் அருகேயும் ஒரு Coke/Pepsi பெப்சி பாட்டில் மேலும் படிக்க..

சூரியகாந்தியில் விதைப்பிடிப்பை அதிகரிக்க வழிகள்

சூரியகாந்தி ஓர் அயல் மகரந்த சேர்க்கைப் பயிராகும்.  இந்த மகரந்த சேர்க்கையை ஊக்குவித்தால் நல்ல மகசூல் பெறலாம். 1.ஏக்கர் ஒன்றுக்கு 2 தேனீப் பெட்டிகள் வீதம் வைத்து தேனீக்களை வளர்ப்பதன் மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவித்து நல்ல மகசூல் பெறலாம். மேலும்  தேனீக்கள் மூலம் ஏக்கர் ஒன்ருக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.400/- உபரி வருமானமும் பெறலாம். 2.பூக்கும் தருணத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுமார் 5 முறை பூவின் மேல் பாகத்தை மெல்லிய துணியால் மெதுவாக ஒத்திக் மேலும் படிக்க..

அசோலா வளர்ப்பு டிப்ஸ்

அசோலா  தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது. பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். மிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும். பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். வேகமாக வளரும் தன்மை கொண்டவை. அசோலா உற்பத்தி மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும். செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மேலும் படிக்க..

கேழ்வரகை தாக்கும் குலைநோய்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்த கேழ்வரகு பயிரில் குலைநோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பகுதியில் மானாவாரி நிலத்தில் அதிக அளவில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பணிப்பொழிவுடன் கூடிய கடும் வெப்ப சீதோஷ்ணநிலை நிலவுகிறது. இதனால், கேழ்வரகு பயிரில் குலைநோயின் தாக்குதல் அதிகரித்துள்ளது. காற்றின் மூலம் பரவக்கூடிய இந்த நோய் கேழ்வரகை மட்டுமல்லாது கம்பு, கோதுமை, மக்காச்சோளம் போன்ற பயிர்களையும் தாக்கி மேலும் படிக்க..

இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் பாதிப்பு

“இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது’ என, 200க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் நேற்று நடந்தது. இதில் பொன்னேரி தாலுகா, பூங்குளம் ஊராட்சிக்குட்பட்ட ரெட்டிப்பாளையம் மக்கள், 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது, “”எங்கள் கிராமத்தைச் சுற்றி, 100க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இதனால், எங்கள் கிராமத்தில், நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி மேலும் படிக்க..

பாரம்பரிய தானியங்களில் சத்துக்கள் ஏராளம்

“”நமது பாரம்பரிய தானியங்களை பயிரிட வேண்டும்,’ என பயிலரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வனக்கல்லூரி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் சார்பில் முழுமையாக பயன்படுத்தாத பயிர்களை சாகுபடி செய்வது குறித்த ஒரு நாள் பயிலரங்கம் ஊட்டியில் நடந்தது. ஊட்டி தோட்ட கலைத்துறை வளாகத்தில் நடந்த பயிலரங்கத்துக்கு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினர் அர்ஜூணன் தலைமை வகித்து பேசுகையில், “” கூக்கல்தொரையில் 250 விவசாயிகள் பாரம்பரிய தானிய பயிர்களான ராகி, சம்பா, கோதுமை, சாமை, பாப்பரை மேலும் படிக்க..

கரும்பு தோகை கால்நடை தீவனம்

“கால்நடை தீவனங்களின் பற்றாக்குறையை, கரும்பு  தோகை  மூலம் குறைக்க முடியும்’ என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நிலவும் கால்நடை தீவனங்களின் பற்றாக்குறையினை, பசும் கரும்பு தோகையின் மூலம் குறைக்க முடியும். வேளாண் கழிவுகளாக உள்ள கரும்புதோகையை, உபயோகமுள்ளதாக மாற்றலாம் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி விரிவாக்கக் கல்வி இயக்குநர் கதிரேசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழகத்தில் 17வது கால்நடை கணக்கெடுப்பின் படி, சுமார் 91.41 லட்சம் மேலும் படிக்க..

இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் ” வானகம் “  பண்ணையில் வருகிற மார்ச் மாதம் 16.03.12 முதல் 20.03.12 முடிய ஐந்து நாட்கள்   ” இயற்கை வாழ்வியல் பயிற்சி “இலவசமாக கற்றுதரப் படுகிறது. இந்த களப்பயிற்சியை ” இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ”  அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.  கரூர், திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிடம், உணவு   இலவசம். முன்பதிவு  அவசியம் . மேலும் மேலும் படிக்க..

பச்சை மிளகாயை தாக்கும் பூச்சிகள்

மிளகாயைத் தாக்கும் பூச்சிகள் மிளகாயைத் தாக்கும் பூச்சிகளையும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்தும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியல் வல்லுநர் என்.விஜயகுமார் கூறியது: மிளகாயை இலைப் பேன், அசுஉணி, செஞ்சிலந்தி ஆகிய மூன்று விதமான பூச்சிகள் தாக்குகின்றன. இவைகளை முறையான மருந்துகள் தெளித்தும், பொறிகள் அமைத்தும் கட்டுப்படுத்த முடியும்.  இலைப்பேன்:  இது இலையில் உள்ள சாற்றை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் இலை மஞ்சள் நிறமாக மாறும். இப் பூச்சியின் தாக்குதல் காணப்பட்டால் ஒரு மேலும் படிக்க..

அசோலா உற்பத்தியில் லாபம் அடையலாம்

“அசோலா’ உற்பத்தி மூலம், கால்நடை வளர்ப்பை லாபம் மிக்கதாக மாற்ற முடியும்’ என, மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குனர் மற்றும் கால்நடை மருத்துவர் அசோகன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: நீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையை சார்ந்த தாவரம், “அசோலா‘. கால்நடைகளுக்கு மட்டுமின்றி கோழிகளுக்கும், தரமான தீவனமாக பயன்படுகிறது. கால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், விட்டமின்கள், பீட்டாகாரோடின் உட்பட 30 சதவீத புரதச்சத்துகள், இதில் உள்ளன. நிழல் உள்ள இடத்தில் 10 அடி நீளம், இரண்டு மேலும் படிக்க..

நெல்வயலில் ஒருங்கிணைந்த எலி மேலாண்மை

பயிர் செய்வதற்கு முன் வரப்பு களில் உள்ள எலி வளைகளை உடைத்து தாய் எலிகளையும் குட்டிகளையும் சேகரித்து அழிக்க வேண்டும். வரப்புகளைச் செதுக்கி குறுகலாக அமைப்பதால் எலிகள் வளைகளை அமைத்து இனப்பெருக்கம் செய்ய இயலாது. தேவையற்ற களைச் செடிகளைப் பிடுங்கி அழிப்பதால் எலிகள் அவற்றில் பதுங்குவதைத் தடுக்கலாம். அறுவடைக்குப் பிறகு சேரும் வைக்கோல் போர்களை வயல் களுக்கு அருகாமையில் வைக்காமல் விரைவில் காலி செய்துவிட வேண்டும். அதிக ஒளி வீசக்கூடிய விளக்குகளை வயல்வெளியில் சென்று காண்பித்து வழியில் மேலும் படிக்க..

நெல் சாகுபடி டிப்ஸ்

நெற்பயிருக்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர்ப்பாசனம் செய்யலாம். கதிர்கள் உருவாகும் தருணத்திலிருந்து அறுவடை நிலை வரை நான்கு முதல் ஐந்து செ.மீ. அளவிற்கு நீர் பாய்ச்சி, கட்டியநீர் ஆவியானவுடன் மீண்டும் நீர் கட்ட வேண்டும். சதுரமுறை நடவினை செய்துள்ளவர்கள் கோனோவீடர் கருவியை உபயோகிக்க வேண்டும். இப்பணியை பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம். பயிரின் ஆரம்ப கட்டத்தில் களைகளை கட்டுப் படுத்த பூட்டாகுளோர் என்ற களைக்கொல்லியை 2.5 லிட்டர்/ஏக்கர் என்ற அளவில் உபயோகித்து களைகளை மேலும் படிக்க..

பச்சை மிளகாய் பயிரில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி

பச்சை மிளகாய் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. பச்சை மிளகாயில் கோவில்பட்டி-1 (கே-1), கோவில்பட்டி-2 (கே-2), கோயம்புத்தூர்-1(சிஓ-1), கோயம்புத்தூர்-2 (சிஓ-2), கோயம்புத்தூர்-3 (சி.ஓ.3), கோயம்புத்தூர்-4 (சி.ஓ.-4) என்ற ரகங்களை பயிரிடுவது சிறந்தது. மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரி (தை மாதம்), ஜூன், ஜூலை (ஆடி), செப்டம்பர், அக்டோபர் (புரட்டாசி) ஆகிய மாதங்களில் பயிரிடப்படுகிறது. இவ்வாறு மிளகாய் செடியில் நன்றாக பூ எடுக்க பொட்டாசியம் சல்பேட் 10 கிராம் ஒரு லிட்டர் மேலும் படிக்க..

வீட்டிலேயே எளிதாக இயற்கை உரம் தயாரிப்பது எப்படி

நம் வீட்டில் சேருகிற குப்பைகள், காய்கறி கழிவுகளை வெளியே கொட்ட இப்போது இடமே இல்லை என்ற நிலைமை இருக்கு. அப்படியே இடம் இருந்தாலும், கொட்டிய குப்பைகள் அப்புற படுத்தாமல் சுற்றுபுறம் அசுத்தம் ஆகி வருவதையும் காண்கிறோம். இவற்றை தடுத்து, நம் வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது எப்படி என்று குமுதம் சிநேகிதி இதழில் வந்துள்ள ஒரு கட்டுரையில் இருந்து.. நம் வீட்டில் விழுகிற காய்கறி கழிவுகள், வாடி போன பூக்கள், இலைகள், தேங்காய் நார், போன்றவற்றை சேகரிக்கணும். மேலும் படிக்க..

தஞ்சையில் கொடமிளகாய் சாகுபடி

தஞ்சையில் கொட மிளகாய்  (Capsicum) சாகுபடி செய்ய ஆரம்பித்து உள்ளனர். ஈச்சன்கொட்டையில் உள்ள மணிவண்ணன் என்ற விவசாயி நிலத்தில் பசுமை குடில் போட்டு கொட மிளகாய் பயிர் இட்டு உள்ளார். இதன் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 100-150 கிலோ வரை விளைச்சல் கிடைக்கிறது. விதையில் இருந்து காய் வர 55 நாள் ஆகிறது. ஒவ்வொரு செடியும் 2 கிலோ கொடுக்கிறது. ஒரு கிலோ திருச்சியில் 33 ரூபாய் வரை போகிறது. ஆனால் பசுமை மேலும் படிக்க..

சிறுநீர் இருந்து உரம் பற்றி பெங்களூர் விவசாய பல்கலை கழகம் ஆராய்ச்சி

மனித சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பது பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். திருச்சி அருகே இது நடைமுறை படுத்துவது பற்றியும் படித்து உள்ளோம் இப்போது பெங்களூரில் உள்ள விவசாய பல்கலை கழகம் (University of Agricultural Sciences Hebbal) இதை விக்யான பூர்வமாக நிருபித்து உள்ளது. விரல் தினை (finger millets) , அரிசி, தக்காளி, வேண்டி , கத்தரிக்காய், காராமணி, செடி பீன், பிரஞ்சு பீன்ஸ் போன்ற பயிர்கள் சிறுநீர் உரம் மூலம் பயன் பெறுவதாக மேலும் படிக்க..

ஆமணக்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

அழகு சாதனங்கள் உற்பத்திக்கு பயன்படும் ஆமணக்கு (Castor) சாகுபடியில் கோபி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கோபி வட்டாரத்தில் வாய்க்கால் பாசனப்பகுதியை தவிர்த்து, கிணற்று பாசனம் மற்றும் மானாவாரி நிலங்கள் அதிகளவில் உள்ளன. மானாவாரியில் நிலக்கடலை, கொள்ளு, எள், சோளப்பயிர் போன்றவை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. கோபி, நம்பியூர், கொளப்பலூர், கெட்டிசெவியூர், பள்ளிபாளையம், சிறுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரியில் நிலக்கடலை, கொள்ளு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை, கொள்ளுச் செடியில் ஊடுபயிராகவும், கலப்பு பயிராகவும் ஆமணக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

இயற்கை முறை வெங்காய சாகுபடி டிப்ஸ்

“வழக்கமான முறையில் வெங்காயம் போடுறப்ப அதிகளவில் புண்ணாக்கு மேலுரமாக ஊட்டம் கொடுக்கணும். களை எடுப்புச் செலவும் அதிகமாகும். இரு படிப்பாத்தி அமைக்கிறப்போ செலவு குறைவதோடு வேலையும் குறைவு’ என்று கூறுகிறார் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவசண்முகம். இவர் வேளாண் பொறியியல் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிக்கொண்டே விவசாயத்தையும் செய்துவருகிறார். இவர் ஒரு இயற்கை விவசாய ஆர்வலர். அவருடைய 4 ஏக்கர் நிலத்தில் நெல் ஒரு ஏக்கர், சின்ன வெங்காயம் 2 ஏக்கர், மேலும் படிக்க..

வாழையில் மதிப்பூட்டுதல்

வாழைப்பழத்தில் இருந்து உலர் வாழைப்பழம், பொடி, இணை உணவு, சர்க்கரைக் கரைசலில் வாழைப்பழம், கூழ், தெளிந்த வாழைப்பழ பானம், ஸ்குவாஷ், கார்டியல் ஜாம், ஜெல்லி, சட்னி, கெட்சப், மிட்டாய், பார், ஒயின், கேண்டி, ஊறுகாய், அல்வா, பாயசம், சிரப், தேன் மற்றும் சீவல்; வாழைக்காயிலிருந்து மாவு, சாஸ், சிப்ஸ், ஊறுகாய் மற்றும் கார உருண்டை; வாழைப்பூவில்இருந்து தொக்கு, பக்கோடா, வடை; வாழைத் தண்டிலிருந்து ஜுஸ், இனிப்பு கேண்டி ஆகியவைகளை குறைந்த செலவில் தயாரித்து வீட்டளவில் சிறு தொழிலாக மேலும் படிக்க..

தானே புயலால் மஞ்சள் மகசூல் பாதிப்பு

“தானே’ புயலால் மஞ்சள் செடிகள் மண்ணில் சாய்ந்து அழுகி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலங்களில் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் மஞ்சள் சாகுபடி செய்வதில் குறிப்பிட்ட விவசாயிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டு பயிராக மஞ்சள் உள்ளதால் நிகர லாபம் ஈட்டி வந்தனர். மஞ்சள் சாகுபடி செய்ய நிலத்தை உழுது சாண எருவை இட்டு நிலம் பண்படுத்தபடுகிறது. அதில் சாணக் கரைசலில் ஊறவைத்த மஞ்சள் மேலும் படிக்க..

சுவை மிகுந்த குமரி புளி விலை உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதால் புளி விலை உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பண்டை காலங்களிலே பொதுமக்கள் ஆர்வமாக புளிய மரங்களை நட்டனர். புளியமரங்கள் ஏப்ரல் மாத இறுதியில் பூ பூக்க துவங்கும். பின் பூக்கள் காயாகி தை மாத குளிரில் பழுக்க துவங்கும். மாசி மாதம் பழமாகும். பின் புளியை பறித்து, வெளிப்பகுதியை பொதிந்திருக்கும் தோடை உடைத்து, கொட்டை அகற்றி, காய வைத்து பக்குவப்படுத்தி தரமான புளியாக கடைகளில் விற்பனை செய்து வந்தனர். கால சூழ்நிலை மாற மேலும் படிக்க..

மணிலா சாகுபடி உத்திகள்

இறவை மணிலா பயிரில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு ஊட்டச்சத்து கரைசல் தெளிக்கும் முறையை வேளாண் பல்கலைக்கழகம் தற்போது தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. கார்த்திகை பட்டத்தில் மானாவாரியில் 2.57 லட்சம் ஹெக்டேரிலும் இறவை பாசனத்தில் 1.56 லட்சம் ஹெக்டேரிலும் மணிலா பயிரிடப்பட்டு உள்ளது. மார்ச் மாதத்தில் மணிலா அறுவடைக்கு வரும்.  தற்போது உள்ள இறவை மணிலா பயிருக்கு ஊட்டச்சத்து கரைசல் தெளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்க முடியும், மணிலா பருப்பு திரட்சியாக உருவாகி விதைத் தரம் அதிகரிக்கும் என்றும் மேலும் படிக்க..

சாமந்தி பூ பயிரிட்டால் வருமானம்

கூடுதல் லாபம் பெற சாமந்தி பூவை பயிரிடலாம் என்று  விவசாயி கங்காதரன் தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கங்காதரன், கடந்த 3 ஆண்டுகளாக ஏரோடில் ரக சாமந்தி பூ (மேரி கோல்டு) பயிர் செய்து வருகிறார்.  இது குறித்து அவர் கூறியது: டிசம்பர், ஜனவரி மாதத்தில் குழித்தட்டு முறையில் நாற்றங்கால் அமைத்து, 15 முதல் 18 நாள்களில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 5 அடி இடைவெளியில் இரு வரிசைகளாக, மேலும் படிக்க..

மாமரத்தை தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் வழிகளும்

மாம்பழ ரகங்கள்: மாவில் நீலம், பெங்களூரா (தோத்தாப்புரி), அல்போன்சா, ரொமானி, பங்கனப்பள்ளி, பத்தர், செந்தூரா, மல்கோவா, மல்லிகா, சிந்து, ரத்னா உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் உள்ளன. மல்லிகா, சிந்து போன்ற ரகங்கள் விதையில்லாத ரகங்கள். அல்போன்ஸா, பங்கனப்பள்ளி, தோத்தாப்பூரி ஆகிய பழங்கள் புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. தானே புயல் காரணமாகவும், தட்டவெட்ப சூழ்நிலை மாற்றத்தாலும் மாமரத்தில் தற்போது இயல்பாகவே பூக்கள் குறைவாக உள்ளன.  பூக்கள் வருவதற்கு..: மாமரங்களில் மேலும் படிக்க..

நவீன கரும்பு சாகுபடியால் விளைச்சலை அதிகரிக்கலாம்

“நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையால், கரும்பு விளைச்சலை அதிகரிக்க முடியும்’ என, கரும்பு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலையில், “நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கான நாற்றாங்கால் தொழில்நுட்பங்கள்’ குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு, கரும்பு ஆலைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு நடந்தது. மாநிலம் முழுவதிலிருந்தும் 45 அலுவலர்கள் பங்கேற்றனர். பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி, பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தின் மொத்த கரும்பு சாகுபடி பரப்பு, 3.06 லட்சம் எக்டர். இதன் சராசரி மேலும் படிக்க..

புரதத்தை இழந்த உணவு வளர்ச்சி – II

இந்த பதிப்பின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம். கடந்த மாதம் “”ஹங்காமா” என்ற அறிக்கையை (ஹங்கர் – மால்நியூட்ரிஷன்) நந்தி அறக்கட்டளை இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை வழங்கியுள்ள தகவல்படி இந்தியக் குழந்தைகளில் (5 வயதுக்குள்பட்டோர்) 42 சதவிகிதம் புரதம், தாதுப்பு போன்ற போஷாக்கு இல்லாமல் எடை குறைந்தும், போதிய உயரம் இன்றியும், அதிகமான நோய்க் குறிகளுடனும் வளர்வதாகக் கூறப்பட்டுள்ள விஷயத்தைப் படித்த பாரதப் பிரதமர் “”வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்று வாய்திறந்து பேசியுள்ளார். சிறார் மேலும் படிக்க..

புரதத்தை இழந்த உணவு வளர்ச்சி

நம் நாட்டில் உணவு உற்பத்தியில் உள்ள பல குளறுபடிகளில் ஒன்று ஒரு சில தானியங்களை மட்டுமே முக்யத்துவம் கொடுப்பது. அரிசி, கோதுமை மட்டும் உயர்ந்தால் போடுமா? இதை பற்றி தினமணியில் வந்துள்ள ஒரு நல்ல ஆராய்ச்சி கட்டுரை புரதத்தை இழந்த உணவு வளர்ச்சி 2011-12 விவசாய ஆண்டு 2010-11ஐப் போலவே உணவு உற்பத்தியில் நல்ல சாதனை என்று வேளாண்மைச் செயலர் பி.கே. பாசு அனைத்திந்திய உணவு உற்பத்திப் புள்ளிவிவர மதிப்பீடுகளை 3-2-2012 அன்று வெளியிட்டுப் பேசியுள்ளார். ஒட்டுமொத்த மேலும் படிக்க..

வாடல் நோயால் அழியும் தென்னைகள்

கேரள வாடல் நோயால் மாவட்டத்தில்,தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென்னைகளை அழித்து விட்டு மாற்று விவசாயத்தை மேற்கொள்கின்றனர். கேரள வாடல் நோய் காற்றின் மூலம் பரவக்கூடியது. தென்னையில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டால் இலைகள் மஞ்சள் நிறமாகி படிப்படியாக தென்னை மரம் பட்டுப்போகும். இதற்கு விவசாயத்துறையினர் பரிந்துரை செய்த மருந்துகளால் பலன் இல்லை. சுமார் பத்தாயிரம் ஏக்கரில் தென்னைகள் அழிக்கப்பட்டு மாற்று விவசாயத்தை விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும், கூடலூர் பகுதிகளில் இந்நோய் தாக்கத்தால் மேலும் படிக்க..

மணிச்சத்து கிடைக்க பாஸ்போபாக்டீரியா உயிர்உரம்

பயிர்கள் செழித்து வளர தேவைப்படும் முக்கிய மூன்று சத்துக்கள் தழைச்சத்து,மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களாகும். இதில் தழைச்சத்துக்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது மணிச்சத்தாகும். பாஸ்போபாக்டீரியா உயிர்உரம் இடுவதன் மூலம் பயிருக்கு மணிச்சத்து எளிதாக கிடைக்க வழிவகை செய்து மகசூலை அதிகரிக்கலாம். தாவரங்களின் திசுக்கள், வேர்கள் செழித்து வளரவும் பயிர்களின் இனப்பெருக்கத்திற்கும், தரமான தானிய மகசூலுக்கும், தழைச்சத்தினை ஈர்க்கும் பணிக்கும் மணிச்சத்து மிகவும் இன்றியமையாததாகும்.பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிரானது பயிருக்கு கிட்டா நிலையிலும், மண்ணில் கரையா நிலையிலும் உள்ள மணிச்சத்தினை, மேலும் படிக்க..

கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல் எப்படி

கரும்புத் தோகை கழிவு உரம் தயாரிக்கும் முறை: நிழல் தரும் வசதியான இடத்தில் 15மீ நீளம், 3மீ அகலம், 1மீ ஆழம் உள்ள குழியை ஏற்படுத்த வேண்டும். இந்த குழியில் சுமார் 500கிலோ கரும்புத் தோகையைப் பரப்ப வேண்டும். இதன் மீது ஆலைக்கழிவினை 5செ.மீ அளவிற்கு பரப்ப வேண்டும். இதன் மீது காளான் வித்து,யூரியா,மாட்டுச்சாணம் இவைகளை நீரில் கரைத்து இந்தக் கரைசலை இதன் மீது ஒரே சீராகத் தெளிக்க வேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றி தோகை,பூஞ்சாணம், சக்கரை மேலும் படிக்க..

துவரையின் சாகுபடி, விதை நேர்த்தி முறைகள்

துவரை முக்கிய பயறு வகைகளில் ஒன்று. இதனை ஏழையின் மாமிசம் என்பார்கள்.இதில் 25-25 சதவீதம் புரதச்சத்து உள்ளது. துவரை வறட்சி தாங்கி, எல்லா மண்ணிலும் வளரக்கூடிய பயிர். இதன்வேர் முடிச்சுகள் காற்றில் உள்ள தழைச் சத்தை மண்ணில் நிலை நிறுத்தி, மண் வளத்தை பாதுகாக்கிறது. அறுவடைக்கு பிறகு இதன் தட்டைகள் எரிபொருளாகவும் பயன்படுகிறது. 150-180 நாட்கள் வரையுள்ள நீண்ட கால ரகம் (2வம்பன்,எஸ்ஏ-1,கோ6), 120-140 நாட்கள் வரையுள்ள மத்திய காலரகம் (கோ1,கோ2,கோ3,கோ4,கோ5), 100-110 நாட்கள் வரையுள்ள குறுகிய மேலும் படிக்க..

விதை மூலம் சின்ன வெங்காயம்

விதை மூலம் சாம்பார் வெங்காயம் நாற்று பாவி சாகுபடி செய்பவர்கள் கீழ்க்காணும் சிறப்பு விதிமுறைகளைக் கடைபிடித்து சிறப்பான மகசூல் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பசுந்தாள் உரப்பயிர்களும் வெங்காயமும்: பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து மடக்கிவிடும் தொழில்நுட்பத்தால் வெங்கா யத்தில் தரமான கிழங்குகளைப் பெறமுடியும். இதற்கு வெங்காய நாற்றுவிடுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே தக்கைப்பூண்டு அல்லது சணப்பு அல்லது சோயாபீன்ஸ் அல்லது கொத்தவரை விதைகளை ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதைத்து 50 நாட்களில் ரோட்டவேட்டர் கருவி கொண்டு இரண்டுமுறை மேலும் படிக்க..

கீரையில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு

இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி  கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். சிறுகீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னிகீரை, வெந்தையக்கீரை என அனைத்து வகை கீரையின் இலையும், தண்டும் நாம் உட்கொள்ளும் பகுதிகள். இவற்றின் மீது பூச்சிமருந்து தெளிக்கக் கூடாது. இலை உண்ணும் புழுக்கள் தோன்றும் போதே, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து மேலும் படிக்க..

பயறு சாகுபடி : கூடுதல் விலை பெற யோசனை

பயறு சாகுபடியிலில் அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி முறைகளைக் கையாண்டால் பருப்பு தரமாக இருப்பதுடன் விவசாயிகள் கூடுதல் விலையும் பெற முடியும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது. உளுந்து, பாசிப்பயறு, துவரை, தட்டைப்பயறு ஆகிய பயறு வகைகளில் கூடுதல் வருவாய் என்பது பருப்பு சதவீதத்தைப் பொருத்தே அமையும். 85 சதவீத பருப்பு அளவும், கூடுதல் விலையும் கிடைக்க அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி முறைகளை விவசாயிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பயறு வகை காய்கள் நெற்றுகளாக மாறியும், மேலும் படிக்க..

இயற்கை முறை கத்தரி சாகுபடி

இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கத்தரி சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். உடல் நலனை பாதிக்காத, சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு விவசாயிகளுக்கு இருக்கிறது. விஷத்தன்மையற்ற விளை பொருள்களை விளைவிப்பதன் மூலம், நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவை விஷமாகி, பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கக் கூடிய சூழல் மேலும் படிக்க..

மஞ்சளில் ஒருங்கியணைந்த பயிர் பாதுகாப்பு

 செதில் பூச்சி : இவை மஞ்சளின் கிழங்குப் பகுதியினைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும்.இதனால் கிழங்குகள் சுருங்கி, பின் காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து, கிழங்குகளை நடவு செய்யவேண்டும். செதில் பூச்சியால் பாதிக்கப்படும் சேனைக்கிழங்கு போன்ற பயிர்களை மஞ்சள் பயிரிடும் நிலத்தில் பயிர் செய்யக்கூடாது. நடவு செய்யப்பட்ட வயலில் செதில் பூச்சிகளை ஒழிக்க டைமீதோயேட் (ரோகார்) 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த வேர்ப்பாகம் மேலும் படிக்க..

நெல்லில் தண்டு துளைப்பான் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்

நெல் பயிரை தாக்கும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது. திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் ராமமூர்த்தி, உதவி பேராசிரியர்கள் அன்புமணி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல்லில் தண்டு துளைப் பான் நாற்று மற்றும் தூர்களின் குருத்துக்களை துளைத்து, நுனிக்குருத்து காய்ந்ததுபோல் தோற்றமளிக்கும். கதிர் உருவாகும் தருவாயில் நெற்பயிரை தாக்கினால் வெண்கதிர் அறிகுறிகள் நெல் வயலில் காணப்படும். குருத்தின் அடிப்பகுதியானது தண்டு துளைப்பான் புழுவால் பாதிக்கப்பட்டு மேலும் படிக்க..

அவரை சாகுபடி

அவரை  இரகங்கள் குற்றுச்செடி வகை : கோ 6, கோ 7, கோ 8, கோ 9, கோ 10, கோ 11, கோ 12, கோ 13, கோ (ஜிபி) 14, அர்கா ஜாய் மற்றும் அர்கா விஜய். பந்தல் வகை : கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ 5 மற்றும் பூசாஎர்லி. மண் : வடிகால் வசதியுள்ள இரும் பொறை மண் உகந்தது. மண்ணின் கார அமிலத்தன்மை மேலும் படிக்க..

கடலை சாகுபடியில் நவீனம்

தாடிக்கொம்பு மாரம்பாடி அருகே பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் டைட்டஸ். பி.இ., கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது, மிக குறைந்த செலவில், 12 மாதங்களும் கடலை சாகுபடி செய்து, மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார். அவர் கூறியது: கடலையில், பழைய முறையான பாத்தி கட்டி சாகுபடி செய்வதில், மூன்றில் கால்பங்கு வரப்பு மற்றும் பாத்திக்கே வீணாகிவிடும். ஆனால், புது முறையில் பாத்தி இல்லாத சமநிலத்தில் கடலை நடவு செய்வதால், நிலம் வீணாவது மேலும் படிக்க..

நெற்பயிரில் துத்தநாகக் குறைபாடு

நெற்பயிரில் ஆங்காங்கே பயிர் திட்டுதிட்டாக வளர்ச்சி குன்றியுள்ளதா, முதிர்ந்த இலைகள் முதலில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமடைந்து பின்னர் துருப்பிடித்ததுபோன்ற மங்கலான புள்ளிகளுடன் காய்ந்துவிடுகின்றதா என்று கவனியுங்கள். மேற்கண்ட அறிகுறிகள் உங்கள் நெற்பயிரில் காணப்பட்டால், துத்தநாகக் குறைபாடு தோன்றியுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். அதிக அளவு மணிச்சத்து மற்றும் தழைச்சத்து உரங்களை இடுதல். மக்கிய எரு போன்ற அங்கக உரங்களை அதாவது இயற்கை உரங்களை குறைவாக இடுதல் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது. மேலும் இரவு வெப்பநிலை 20 டிகிரி மேலும் படிக்க..

கூடுதல் மின்வெட்டால் சம்பா பயிர்கள் கருகும் அபாயம்

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக நிலவும் கூடுதல் மின்வெட்டு தொடர்ந்தால் சம்பா, தாளடிப் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சம்பா, தாளடிப் பயிர்கள் சுமார் 4.30 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டன. அறுவடைப் பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கி இப்போது கிட்டத்தட்ட 40 சதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளன. ஏறத்தாழ 60 சதப் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேட்டூர் அணை பிப்ரவரி 5-ம் தேதி மூடப்பட்டுவிட்டதால், மேலும் படிக்க..

இலுப்பை சாகுபடி

அறிவியல் பெயர்: ஃபேசியா லேட்டி ஃபோலியா பரவல்: இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக வளர்கிறது. பருவநிலை: வருட மழைப்பொழிவு 800 – மி.மீ முதல் 1800 மி.மீ வரை உள்ள பகுதிகளில் இம்மரங்கள் செழிப்பாக வளர்கின்றன. மண்: மணல் கலந்த மண்ணில் சிறப்பாக வளரும் வண்டல் மண்ணிலும் சிறப்பாக வளர்கிறது. நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்: சூன் மற்றும் சூலை மாதங்களில் பழுத்த பழங்கள் உள்ள கிளைகளை உறுக்குவதன் மேலும் படிக்க..

புயல் பாதித்த இடங்களில் தென்னை பயிர் பராமரிப்பு முறைகள்

கடலூர் தானே  புயலால் பாதிக்கப்பட்ட  தென்னைப் பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதிப்பால் 1.5 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டன. உயிருடன் நிற்கும் தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கானவை, ஒருசில மட்டைகளுடன், மொட்டை மரங்களாகக் காட்சி அளிக்கின்றன. புயலால் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தும், குருத்து ஒடிந்தும், மட்டைகள் ஒடிந்தும், குரும்பைகள், காய்கள் உதிர்ந்தும் காணப்படுகின்றன.  குருத்தும், மட்டைகளும் ஒடிந்த தென்னை மேலும் படிக்க..

மா பூத்தல்அதிகரிக்கும் முறைகள்

இப்போது  மா மரம் பூ பூத்து குலுங்கும் காலம். சில மரங்களில் நிறைய பூவோடும், சில மரங்களில் பூ குறைவாகவும் இருக்கும். இதுபோல் குறைவாக பூ பூத்து இருக்கும் மரங்களில் அதிகளவில் பூ பூப்பதற்கு சில முறைகளை கையாண்டு பார்க்கலாம். வயலுக்கு பயன்படுத்தப்படும் யூரியாவை ஐந்து கிராம் எடுத்து ஒரு லீட்டர் நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து கிராமுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அதிகமாக எடுத்துக் கொண்டால் இலை கருகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் மேலும் படிக்க..

புயல் பாதித்த இடங்களில் கரும்பு பயிர் பராமரிப்பு முறைகள்

கடலூர் தானே புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதிப்பால்  கரும்புப் பயிர்களும் பெருமளவில் சேதம் அடைந்து விட்டன.  எனவே பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னை மரங்களைப் பராமரிக்கும் முறைகளை, வேளாண் பல்கலைக்கழகத்தின் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் நசீர் அகமது தெரிவித்தது: புயலில் பாதிக்கப்பட்டவை இளம் கரும்பாயின், இலைகள் கிழிந்த மற்றும் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி, மேலும் படிக்க..

தென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு

பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. நெட்டை ரக தென்னை மரங்கள் வருடத்திற்கு 125 முதல் 150 காய்களும், குட்டை நெட்டை மற்றும் ஒட்டு ரகம் 300 முதல் 400 வரை தேங்காய்களையும் தருகின்றது. தென்னை மரங்கள் ஒரு நாளைக்கு 55 மேலும் படிக்க..

இயற்கை உரம் தயாரிக்க இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி வன விரிவாக்க அலுவலகத்தில் எழுதப்படிக்க தெரிந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இயற்கை உரம் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி நான்கு கட்டங்களாக நடக்கிறது. வனவியல் விரிவாக்க அலுவலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி வனவியல் விரிவாக்க மையத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த எழுதப்படிக்க தெரிந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் 200 பேருக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயர் தொழில் நுட்ப நாற்றங்கால்கள் உற்பத்தி போன்றவை குறித்து மேலும் படிக்க..

சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்

“தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யம் வழங்கப்படுகிறது’ என்று கரூர் கலெக்டர் ஷாபனா அறிவித்துள்ளார். நீர் பயன்பாட்டினை நிர்வகிக்கவும், நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகளிடையே விரிவாக்கம் செய்யவும், பாசன அளவில் உற்பத்தித் திறனை அதிகரிக்க சொட்டுநீர் பாசனத்தை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகைளில், மானியத்தை அதிகரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் அதன்படி, கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் மேலும் படிக்க..

பசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி

சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு மலைப் பிரதேசங்களில் பசுமைக்குடில்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பசுமைக் குடில்களில் பொதுவாக கொய்மலர்கள் எனப்படும் பூக்கள் விளைவிக்கப்படுவது வழக்கம். தென் மாவட்டங்களில் முதல் முறையாக சமதளப் பகுதியில் காய்கறிகளை விளைவிப்பதற்கான பசுமைக்குடில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம் வடமதுரை வட்டாரம் அய்யலூரை அடுத்த ஏ.கோம்பை கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2,100 சதுர மீட்டர் பரப்பில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் வகையில் திருப்பூரைச் சேர்ந்த சந்திரன் இந்த பசுமைக்குடிலை உருவாக்கியுள்ளார். பசுமைக்குடிலின் மூலம் மேலும் படிக்க..

மூங்கில் சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ. 2 லட்சம் வருமானம்

“ஓராண்டில் ஒரு ஏக்கரில் மூங்கில் சாகுபடி செய்து ரூ. 2 லட்சம் வருமானம் பெறலாம்” என, மூங்கில் சாகுபடி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் தோட்டக்கலைத் துறை சார்பில் மூங்கில் சாகுபடி கருத்தரங்கு நடந்தது. துணை இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். கலெக்டர் சகாயம் துவக்கி வைத்து பேசியதாவது: விவசாயிகள் நெல், கரும்பு சாகுபடி செய்வது போல, மூங்கிலையும் சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகளை கைவிட்டு, மாற்று விவசாயத்தை சிந்திக்க வேண்டும். மதுரையில் இந்த ஆண்டு மேலும் படிக்க..

சம்பாவுக்கு பின் உளுந்து பயிரிட வேளாண் துறையினர் அறிவுரை

புதுக்கோட் டை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைக்கு பின் அந்த நிலங்களில் உளுந்து சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதர பயிர்களை விட பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தண்ணீரும் குறைந்த அளவு போதுமானது. பயறுவகைகளுக்கு நுகர்வோர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதால் இவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, உளுந்து, தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, துவரை போன்ற மேலும் படிக்க..

தானே புயல் தாக்குதல்: பயிர்களுக்கான நிவாரண தொகை

தானே புயலால் பாதித்த பயிர்களுக்கான நிவாரண தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் மணிமேகலை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2011 டிச., 30ம் தேதி வீசிய தானே புயலால் வீடுகள், பயிர்கள், மரப்பயிர்கள் பாதித்தன. பயிர் பாதிப்பு குறித்து வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை துறை பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு நடந்தது. பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, காய்கறி மற்றும் மலர் மேலும் படிக்க..

திருத்திய நெல் சாகுபடியில் சாதனை

திருந்திய நெல் சாகுபடி (SRI) மூலம், சாதாரண முறையில் நெற்பயிரிட்டவர்களை காட்டிலும், அதிக மகசூலையும், லாபத்தையும் பெற்றுள்ளனர் குறைந்த விதை நெல், குறைந்த பணியாளர்கள், குறைந்த நீர் மற்றும் குறைந்த விதை நெல்லை பயன்படுத்தி, அதிக மகசூல் பெற கொண்டு வரப்பட்ட திருந்திய நெல் சாகுபடி திட்டம், விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.   குறைந்த செலவு; அதிக லாபம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ், 15 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அதிக மேலும் படிக்க..

பார்தேனியம் செடியை கட்டுபடுத்துவது எப்படி

பார்தேனியம் செடி விவசாயத்திற்கு மிக பெரும் பிரச்னையாக வளர்ந்து உள்ளது. இந்த களை செடியை பற்றி நாம் ஏற்கனவே படித்து உள்ளோம் விவசாயம் மற்றும் இல்லாமல், மக்களுக்கும் இந்த செடியால் ஆஸ்த்மா, தோல் விதிகள், ஒவ்வாமை போன்ற கோளாறுகள் வருகின்றன. இந்த களை செடியை கட்டுபடுத்துவது எப்படி? செடிகள் பூப்பதற்கு முன்பு கையில் கையுறை அணிந்து வேரோடு பிடுங்கி எரித்து விடவேண்டும் இவை அதிகம் வளரும் இடங்களில் வேறு சில பயிர்களாக அடர் ஆவாரை, ஆவாரை, துத்தி மேலும் படிக்க..

மாறி வரும் அறுவடை நடைமுறைகள்

சேலை முந்தானையை தலைக்கவசமாக கட்டி, பெண்கள் வரிசையாக நின்று, கேள்விக்குறி போல் வளைந்த அரிவாளுக்கு இணையாக, வளைந்து நெற்கதிர்களை அறுவடை செய்த காட்சி, இன்று அபூர்வமாகி விட்டது. இன்று வயலும், வாழ்க்கையுமான இயற்கை அழகு மறைந்து, இயந்திரத்தோடு இணைந்து விட்டது விவசாயம். இடுபொருள் விலை உயர்வுஉரம் விலை அதிகரிப்பு, நெல் விலை குறைவு, விவசாய பணிக்கான ஆட்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு மானியம் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டப் மேலும் படிக்க..

மரம் கொல்லி மருந்துபயன்படுத்தும் முறைகள்

மரம் கொல்லி மருந்தை பயன்படுத்தும் முறை குறித்து தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். “வீட்டு கூரையின் மேல் பகுதியில் முளைத்திருக்கும் மரங்கள், வீட்டு சுவரின் மேல் வளரும் மரங்கள், கால்வாயில் தேவையற்று இருக்கும் மரங்கள் மற்றும் பிற தேவையற்ற மரங்களை அழிப்பதும், வேண்டாமென்று வெட்டப்பட்ட மரங்கள் திரும்ப முளைப்பதை கட்டுப்படுத்துவதும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் சவாலாக உள்ளது. மரங்களை அழிப்பதற்கு களை கொல்லிகளை பயன்படுத்த வேண்டும். மரப்பட்டையை வெட்டி மருந்து பூசுதல்மரத்தில் அடிப்பகுதியை சுற்றிலும் மேலும் படிக்க..

ரோஜா சாகுபடிக்கான நவீன தொழில்நுட்ப பயிற்சி முகாம்

புதுக்கோட்டை: வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் ரோஜா சாகுபடிக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விவாசாயிகளுக்கான பயிற்சி முகாம் 24ம் தேதி நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், கீரமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா மலர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ரோஜா மலர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் துவக்கியுள்ளது. இதற்காக நவீன தொழில் நுட்பத்தின் மூலம் ரோஜா செடிகளை சாகுபடி செய்து குறைந்த மேலும் படிக்க..

மாவில் அடர் முறை நடவு

பால்காரன்கொட்டாய் கிராமம், கோவிந்தபுரம் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் மா சாகுபடியில் நல்ல அனுபவம் பெற்றவர். இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், பேரம்பட்டு கிராமத்தில் சுமார் 5 ஏக்கரில் ஆல்போன்சா ரக மரங் களை நட்டு விவசாயம் செய்து வருகிறார். தனது மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் வளமான செம்மண் உள்ளது. இந்த மண்ணின் ஆழம் சுமார் 6 அடியாகும். விவசாயி மரங்களை “அடர்வு’ முறையில் மேலும் படிக்க..

மண்ணை அறிந்தால் உரச் செலவை குறைக்கலாம்

விவசாயிகள் மண்ணின் தன்மையை அறிந்து உரமிட்டால், உரச் செலவு குறையும் என்றார் புதுதில்லியில் உள்ள இந்திய உரக் கூட்டமைப்பு மேலாளர் முனைவர் பி.சி. பிஸ்வாஸ். பெரம்பலூர் அருகேயுள்ள சத்திரமனை கிராமத்தில், ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம், இந்திய உரக் கூட்டமைப்பு சார்பில், சிறிய வெங்காய விவசாயிகளுக்கு மண் வள மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டோர் கூறியவை: தாவர வளர்ச்சிக்கு தழை, மணி, சாம்பல் சத்துகள் அதிகளவில் தேவைப்படுவதால், இவை மேலும் படிக்க..

நெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சி கட்டுப்படுத்தும் முறைகள்

நெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சியை கட்டும்படுத்தும் முறைகள் பற்றி வேளாண்மை அதிகாரி விளக்கியுள்ளார். “”தென்காசி வட்டாரத்தில் நடப்பு பிசான பருவத்தில் 3 ஆயிரத்து 500 எக்டர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூக்கும் பருவத்திலும், பால்பிடிக்கும் பருவத்திலும் நெற்பயிர் உள்ளது. இப்பருவத்தில் கதிர்நாவாய் பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அறிகுறிகள் இப்பூச்சியின் குஞ்சுகளானது பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். காலையிலும் மாலையிலும் இப்பூச்சிகள் அதிகளவில் நெல் மணிகளில் சாற்றை உறிஞ்சுகிறது. நெல் மணிகளில் இப்பூச்சியானது வாயுறுப்பை செலுத்தி மேலும் படிக்க..

வாழை சாகுபடிக்கான நிலத்தை தயார் படுத்துதல் எப்படி

வாழையின் நல்ல வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல வடிகால்தன்மை கொண்ட, நீர்ம பிடிப்புக் கொண்ட அதிக அளவில் கரிமப்பொருட்களுடைய வண்டல் மண், கார அமிலத்தன்மை(PH 6-8) மண்வகைகள் மிகவும் நல்லது. நிலத்தை தயார்ப்படுத்துதல்: நிலத்தை 3-4 முறை நன்றாக உழவு செய்தபின் ஹெக்டேருக்கு 10-15 டன்கள் நன்கு மக்கிய தொழுஉரத்தை நிலம் முழுவதும் இட்டு பின்பு மீண்டும் ஒருமுறை உழ வேண்டும். நிலமானது உவராக இருந்தால் பசுந்தாள் உரப் பயிரான தக்கைப்பூண்டு, சணப்பு ஆகியவற்றை வளர்த்து மேலும் படிக்க..

மண் புழு உரம் தயாரிப்பு – கேள்வி பதில்கள்

பொதுவாக மண் புழு உர படுக்கையில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டுமா? முதலில் 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் தெளித்து வரவேண்டும். பிறகு ஈரத்தின் அளவை பொருத்து மூன்று நாடகளுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவேண்டும் சாணக்கரைசல் குளோரின் கலந்த குடிநீரில் தயாரிக்கலாமா? குடிநீரில் குறைந்த அளவே குளோரின் இருப்பதனால் பயன்படுத்தலாம். மண் புழு உரம் பயன்படுத்தும் வயலில் பியூரிடான் குருனை பயன்படுத்தலாமா? இரசாயன உரம் பயன்படுத்தும் அதே வேளையில் பயன்படுத்த கூடாது. மண் புழு உர மேலும் படிக்க..

யூரியா விலை கட்டுப்பாடு

ஏற்கனவே யூரியா தவிர எல்லா ரசாயன உரங்களின் விலைகளையும் மதிய அரசு விலை கட்டுப்பாடு இருந்து எடுத்து விட்டது. இதனால், ரசாயன உரங்களின் விலைகள் தாறு மாறாக ஏறி விட்டன. யூரியா மட்டுமே விலை கட்டுப்பாடில் இருந்து வந்தது. அதையும் எடுக்க வேண்டும, பொருளாதார சந்தையில் அரசு எந்த விலை கட்டுப்பாடும் செய்ய கூடாது என்று பொருளாதார மேதைகள் (!) கூறி வந்தனர். இப்போது, மத்ய அரசிற்கு யூரியா விலை கட்டுப்பாடு நிறுத்த போவதில்லை என்றும் இப்போது மேலும் படிக்க..

விதை நெல் பராமரிக்க ஆலோசனைகள்

கடலூர் மாவட்டத்தில் தானே  புயலால் பாதிக்கப்பட்ட நெல் விதைப் பண்ணை வயல்களில் உள்ள நெல் மணிகளின் தரத்தைப் பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து கடலூர் மாவட்ட வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய புயல் காற்றில் நெல் விதைப் பண்ணை வயல்களில் பயிர்கள் சாயந்ததாலும், நெல் மணிகள் ஒன்றோடொன்று உராய்ந்ததாலும் மணிகளின் நிறம் பழுப்பாகிக் காணப்படுகிறது. வயல்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சாய்ந்திருந்தால் விதை நெல்லுக்கு ஏற்றுக் கொள்ள இயலாது. சம்ப மேலும் படிக்க..

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த பொங்கல் நல வாழ்த்துக்கள் இந்த வருடம் அனைவருக்கும் நன்மையையும், மகிழ்ச்சியும், வளமும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்  

நாட்டுக்கோழி பண்ணையாளருக்கு மாதம் தோறும் இலவச பயிற்சி

நாட்டுக்கோழி பண்ணையாளருக்கு, மாதம்தோறும் இலவச பயிற்சி வழங்கப்படும் என, கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் துரைசாமி தெரிவித்தார். சேலத்தில், கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி, ஆராய்ச்சி மையம், சுகுணா நிறுவனம் சார்பில் நாட்டுக் கோழி பண்ணையாளருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆராய்ச்சி மைய தலைவர் துரைசாமி பேசுகையில், “”சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 300 நாட்டுக்கோழி பண்ணையாளர்கள் உள்ளனர். இவர்கள், நேரடியாக வியாபாரிகளுக்கு கோழிகளை விற்க வேண்டும். அப்போதுதான் லாபம் கிடைக்கும். கடைகளில், ஒரு கிலோ கோழி, 200 மேலும் படிக்க..

தூத்துக்குடியில் விதை பரிசோதனை மையம்

தூத்துக்குடியில் உள்ள விதை பரிசோதனை மையத்தில் விதையின் தரத்தினை பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் நெடுஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது; ஒரு விதையின் ஈரப்பதம் என்பது மிக முக்கியமான காரணியாகும்.அது விதையின் தரத்தையும், அந்த விதையினை எத்தனை காலம் தரமாக சேமிக்க முடியும் என்பதையும் நிர்ணயம் செய்கிறது. விதையின் ஈரப்பதத்தினை அறிந்து கொள்ள தங்கள் விதைக்குவியலில் இருந்து அந்த குவியலை பிரதிபலிக்கின்ற வகையில் 100 மேலும் படிக்க..

தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் : வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு

காட்டுமன்னார்கோவில் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் வேளாண் துøறையினரையடுத்து தற்போது வருவாய் துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். “தானே’ புயலால் கடலூர் மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. இவற்றில் நெல் வயல்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் முற்றிலும் பாதிப்படைந்தன.காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம் பகுதியில் நெல் வயல்கள் 100 சதவீதம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். புயல் பாதிப்பிற்கு பின்பு வேளாண் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை கொடுத்துள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட விவசாய மேலும் படிக்க..

குறைந்த நீரில் காய்த்துக் குலுங்கும் மா மரங்கள்

வறட்சிக்கு இலக்கான சென்னிமலை வட்டாரத்தில், குறைந்த நீரில் மா பயிரிடும் பரப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, 70 ஹெக்டேரில் மா மரம் காய்ப்பு துவங்கியுள்ளது. சென்னிமலை வட்டாரம் வறட்சியின் பிடியில் ஒருபுறம் சிக்கித்தவிக்கும் நிலையில் ஒரு சில பகுதியில் விவசாயிகள் மா பயிர் செய்து வருமானம் பார்த்து, பசுமைபுரட்சியை அரங்கேற்றி வருகின்றனர். சென்னிமலை யூனியனில் தோட்டக்கலைத் துறை மூலம், “தேசிய தோட்டக்கலை இயக்கம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, மா, நெல்லி போன்ற மரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சென்னிமலை மேலும் படிக்க..

தென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் : பயிற்சி முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறை சார்பில் தென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் தலைப்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 31ம் தேதி நடைபெறும் பயிற்சி முகாமில் தென்னை உற்பத்தி தொழிலதிபர்கள், முன்னோடி விவசாயிகள், வேளாண் அறிஞர்கள் மற்றும் நுகர்வோர்கள் தென்னையில் உள்ள விற்பனை வாய்ப்புகள் பற்றி நேரடி விளக்கம் அளிக்க உள்ளனர். இம்முகாமில் பங்கேற்று பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயர், முகவரி, கல்வி தகுதி, புகைப்படம், மொபைல் எண் ஆகியவற்றை மேலும் படிக்க..

தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள்

தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள்  அ. தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்குமு் தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லிகள் (27 எண்ணிக்கை) ஆல்டிரின் பென்சீன் ஹெக்சாகுளோரைடு கால்சியம் சயனைடு கிளோர்டேன் காப்பர் அசிட்டோ ஆர்செனைட் சிப்ரோ மோகுளோரோ புரோபேன் என்டிரின் ஈதைல் மெர்குரி குளோரைடு ஈதைல் பாராத்தியான்  ஹெப்பாகுளோர் மெனாசோன் நைட்ரோஃபென் பேராகுவாட் டைமீத்தைல் சல்பேட் பென்டா குளோரா நைட்ரோ பென்சீன் பென்டாகுளோரோஃபீனால் ஃபினைல் மெர்குறி அசிட்டேட் சோடியம் மீத்தேன் ஆர்சனேட் டெட்ராடிஃபோன் டோக்சாஃபென் ஆல்டிகார்ப் குளோரோ பென்சிலேட் மேலும் படிக்க..

சம்பங்கி சாகுபடி

சம்பங்கி  ரகம் – கிழக்கு வீரிய ரகம்.பயிரிடும் நிலத்தின் அளவு – தோராயமாக 30 சென்ட். உழவு முறை வாரம் ஒரு உழவு போட்டு 15 நாட்களுக்கு நிலத்தை ஆறவைக்க, மீண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை விதமாக 2 உழவு போடவேண்டும். நன்கு ஆறிய பின் 8 யூனிட் அளவு (4 டிராக்டர்) நன்கு மக்கிய சாணமாக இடவேண்டும். இதை 15 நாட்களுக்கு ஆறவிட வேண்டும். பின் அதை நிலத்தில் நன்கு இறைத்துவிட வேண்டும். இறைத்த மேலும் படிக்க..

நெற்பயிரில் குருத்து பூச்சி

வருமுன் காக்கும் வழிகள் நாற்றங்காலில் பூச்சி நிர்வாகம் செய்வது அவசியம். நாற்றங்காலுக்கு அருகில் உள்ள மின் விளக்குகளை இரவு 7-11 மணிவரை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.  நாற்றங்காலுக்கு ப்யூரடான் குறுணை மருந்தினை ஒரு சென்ட் பரப்பளவிற்கு 120 கிராம் என்றளவில் மணலுடன்  கலந்து நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன் சீராக இட வேண்டும். நாற்றங்கால் தயார் செய்து விதைப்பதற்கு முன் வேப்பம் பிண்ணாக்கு 1 சென்டுக்கு 600 கிராம் என்றளவில் இட  வேண்டும். வந்த பின் கட்டுபடுத்தும் மேலும் படிக்க..

தென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி?

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 200 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சானக்கலவை 200 கிராம் வீதம் மக்கிய சாண எருவுடன் கலந்து ஒரு தென்னை மரத்திற்கு இடவேண்டும். தகவல் மூலம் : முனைவர் க.சித்ரா, உதவிப்பேராசிரியர், [பயிர் நோயியல் துறை], முனைவர். பா.சந்திரசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம், தஞ்சாவூர் 613 005. தகவல்  முருகன், திருவையாறு நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம்

வாழையில் வாடல்நோய்

திருநெல்வேலி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிரில் வாடல்நோய் காணப்படுகிறது. நோயின் அறிகுறிகள் இந்த நோயின் அறிகுறிகளை வாழையின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் காணலாம்.  ஆரம்பத்தில் அடி இலையின் ஓரங்கள் மஞ்சளாக காணப்படும். நாளடைவில் இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி அல்லது நடுநரம்புக்குப் பரவி, கடைசியில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுகிறது. பின்னர், இந்த மஞ்சள் நிறமானது அடி இலையிலிருந்து மேல் இலைகளுக்கும் பரவி வாழை மரத்திலுள்ள அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறும். பாதிக்கப்பட்ட மேலும் படிக்க..

உளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6

உளுந்து வம்பன்6 சிறப்பு இயல்புகள் சாயாத உதிராத ஒரு சேர பூக்கும் திறன் மஞ்சள், தேமல் மற்றும் சாம்பல் நோய் எதிர்ப்பு திறன் மானாவரி மற்றும் இரவைக்கு ஏற்றது புரத சாது -21.1% வயது: 65-70 நாட்கள் பருவம்: ஆடி பட்டம், புரட்டாசி பட்டம் மற்றும் தை பட்டம் மகசூல்:  சராசரி: 871கிலோ/எக்டேர் இரவை:890 கிலோ/எக்டேர் மாணவரி: 850 கிலோ/எக்டேர் பயிரிட உகந்த மாவட்டங்கள்: நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர எல்லா மாவட்டங்களுக்கும் உகந்தது நன்றி: தமிழ் மேலும் படிக்க..

சம்பா பயிரில் இலைகருகல் நோய்

வேதாரண்யம் வட்டாரத்தில் சம்பா பயிரில் ஏற்பட்டுள்ள இலைகருகல் நோயை சரிசெய்ய, வேதாரண்யம் வட்டார விவசாய உதவி இயக்குனர் மணிகண்டன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மாறுப்பட்ட தட்பவெப்ப நிலை காரணமாகவும், மழைக்காற்றின் சீற்றத்தாலும், வேதாரண்யம் வட்டாரத்தில், நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் ஏற்பட்டுள்ளது. சம்பா நெற்பயிரின் இலைகளில் இருஓரங்களிலும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற திட்டுக்கள் தோன்றி, கருகியதைபோன்ற தோற்றத்துடன் காணப்படும். இதைக்கட்டுப்படுத்த விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். தழைச்சத்து உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில், ஏக்கருக்கு 110 கிலோ வீதம் மேலும் படிக்க..

பயிறு சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

வீடுகளில் பருப்பு வகைகளை சேமிக்கும் போது தாங்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, சேமிப்பு கலனில் அடிப்பகுதியில் மிளகாய் வற்றலுடன் வேப்பிலையை போட்டு வைத்தால் போதும். தட்டைப்பயிறு சாறு உறிஞ்சும் பூச்சியான அசுவனியை கட்டுப்படுத்த, மஞ்சள் தூள், சாம்பல் இவற்றை 1 கிலோ எடுத்து 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். உளுந்து சாம்பல் நோய், பச்சை இலைத் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த 25 கிலோ வேப்பங்கொட்டை பருப்பை இடித்து 500 லிட்டர் தண்ணீரில் இட்டு 8 மணி நேரம் கழித்து மேலும் படிக்க..

தானே புயலால் டெல்டா பகுதியில் நெற்பயிர் பாதிப்பு

:”தானே’ புயல் தாக்கியதில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேட்டூரில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் தாலுகாக்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள்  காலத்தே பயிர் செய்திருந்தனர். அடுத்த சில நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் செழிப்பாக இருந்த நெல் மணிகள் தற்போது ஏற்பட்ட மேலும் படிக்க..

தானே புயலால் முந்திரி, கரும்பு, வாழை 80 சதவீதம் சேதம்

கடலூர் மாவட்டத்தின் பிரதான பணப்பயிர்களான முந்திரி, கரும்பு பயிர்கள் “தானே’ புயலின் ருத்ர தண்டவத்திற்கு, 80 சதவீதம் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம் தாலுகாக்களில், தோட்டக்கலை பயிர்களான முந்திரி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரிலும், பலா மரங்கள், 3,000 ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளன. பண்ருட்டி பகுதியிலிருந்து முந்திரிகள் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆண்டுதோறும் முந்திரிகள் தை மாதத்தில் பூ வைத்து, சித்திரை மாதம் முதல் அறுவடை செய்யப்படும். மேலும் படிக்க..

பயறு ஒன்டர் பூஸ்டர் பயன் படுத்தும் முறை

பயறுவகைகளில் பூக்கும் காலத்தில் மண்ணில் ஏற்படும் சில வேதியியல் மாற்றங்களால் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன. காய்களின் நீளமும் மணிகளின் திடமும் குறைந்துவிடுகின்றன. இந்த பாதிப்பை தடுப்பதற்காக 2 சதம் டி.ஏ.பி.யுடன் 40 சதம் / பி.பி.எம். என்.ஏ.ஏ.  45, 60வது நாட்களில் தெளிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பரிந்துரைத்து வந்தது. இந்த கலவையைத் தயாரித்து தெளிப்பதில் சில பிரச்னைகளும் ஏற்பட்டது. எனவே இதை மிகவும் எளிதாக கிடைக்கப்பெறும் வகையில் த.வே.பல்கலைக்கழகம் பயறு ஒண்டர் என்ற நுண்ணூட்டக்கலவையை அறிமுகப்படுத்தியது. இதனை மேலும் படிக்க..

தென்னையை தாக்கும் பூச்சிகளை பொறிகள் மூலம் காப்பது எப்படி

இயற்கையாக பூச்சிகள் வெளியிடக்கூடிய ஒருவகை மணமுள்ள வேதிப் பொருளால் அல்லது ஒரு குறிப்பிட்ட வண்ணத்தால், வெளிச்சத்தால் பூச்சிகள் கவரப்படுவது பொறிகள் எனப்படும். இவற்றை செயற்கை முறையில் அமைத்துப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். தென்னையை தாக்கும் பூச்சிகளை பொறி மூலம் அழிப்பது எப்படி என்று பார்க்கலாமா? தென்னை மட்டைப் பொறி: தென்னையின் பச்சை அடிமட்டையை 50 சென்டி மீட்டர் அளவுள்ள துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். புதிதாக இறக்கப்பட்ட மேலும் படிக்க..

மரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்

மரபணு மாற்ற படும் விதைகளுக்கு விஞானிகள் கூறும் ஒரு காரணம் என்ன தெரியுமா? உலகளவில் ஏற்பட்டு கொண்டு இருக்கும் புவி வெப்பமடைதல் (Global warming) காரணமாக மழை பெய்வது குறையும். அதனால்,  நீர் குறைந்து எடுத்து கொள்ளும் பண்பு உடைய (Drought resistant) பயிர்கள் தேவை இதன் முதன் படியாக, மொன்சாண்டோ நிறுவனம் இப்போது நீர் குறைந்து எடுத்து கொள்ளும், வறட்சியை தாங்கும் மக்கா சோளம் (Drought resistant genetically modified corn) உருவாக்கி உள்ளது. ஜெர்மனி மேலும் படிக்க..

10 ஜனவரி 2012 பசுமை விகடன கட்டுரைகள்

10 ஜனவரி 2012 பசுமை விகடன இதழின் சிறப்பு கட்டுரைகள்: களர் நிலத்தை விளைநிலமாக்கும் வாதநாராயண மரம் ஆண்டு முழுவதும் மாங்காய் மகசூல் பாதுகாப்பான உணவு… பெண்களின் கையில் ஒற்றை வைக்கோல் புரட்சி! அமோனியம்-சல்பேட், யூரியா, சூப்பர்-பாஸ்பேட் போன்ற ரசாயனங்களை மூட்டைக் கணக்கில் நிலத்தில் போட்டாலும், மிகக்குறைந்த அளவைத்தான் பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன. மீதி ரசாயனங்கள் எல்லாம் தண்ணீரில் கரைந்து, நிலத்தில் தேங்கி, ஓடை நீர், ஆற்று நீர், நிலத்தடி நீர் என அனைத்தையும் மாசுபடுத்தி, இறுதியில் மேலும் படிக்க..

கொய்யாவை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்

கொய்யா காய் துளைப்பான் சேதத்தின் அறிகுறி: புழுக்கள் காய்களில் துளையிட்டுச் சென்று உண்ணும், பின்பு காய்ந்து பழுக்கும் முன்னரே விழுந்துவிடும் பூச்சியின் விபரம்: புழு பழுப்பு நிற தலையையும், இளஞ்சிவப்பு உடலில் சிறு மெல்லிய உரோமங்களையும் பெற்றிருக்கும் தாய்ப்பூச்சி சிறியதாக மஞ்சள் நிற இறக்கையில் நிளைய கருப்புப் புள்ளிகளுடன் இருக்கும் ஆண்பூச்சி உம்பின் பின்பகுதி நுணியில் கருமையான முடிக்கொத்தும் காணப்படும் கட்டுப்படுத்தும் முறை: தாக்கப்பட்ட பழங்களை எழுத்து அழித்து விடவும் விளக்குப்பொறி 1 எக்டர் வைத்து தாய்ப்பூச்சியின் மேலும் படிக்க..

விவசாய நெருக்கடி பற்றி பாராளுமன்றத்தில் விவாதம்

டிசம்பர் 15 அன்று பாராளுமன்றத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விவசாய நெருக்கடி பற்றி விவாதம் செய்ய பட்டது இந்த விவாதத்தில் மணி ஷங்கர் ஐயர் மற்றும் சேர்ந்த வெங்கைய நாய்டு பங்கேற்று கொண்டனர். விவசாய மந்திரி பவர், விவசாய நெருக்கடி என்று ஒன்று இல்லை என்றே சாதித்தார். அவர் கூற்று படி இந்தியாவில் மொத்தம் 800 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டனராம். பாராளுமன்றத்தின் குளிர் கால தொடரின் கடைசி நாளன்று போனால் போதும் என்று எடுத்துக் கொள்ள மேலும் படிக்க..

செங்கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல்

கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இப்போது  பனமரத்துப்பட்டி பகுதியில், இடைக்கனு புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால், செங்கரும்பு நடவு செய்த விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். நடவு செய்த, ஒன்பது மாதத்தில் குறைந்தபட்சம் ஆறு அடி உயரத்திற்கு கரும்பு வளர்ச்சி இருக்கும். தற்போது, இடை கனு புழு தாக்கியதால், நான்கு அடி உயரம் மட்டுமே கரும்பு வளர்ந்துள்ளது. அடிபகுதியில் குண்டாக இருக்கும் கரும்பு மேல் பகுதி சிறிதாகி, குருத்து உடைந்து விடுகிறது. நோய் தாக்கியதால், ஏக்கருக்கு மேலும் படிக்க..

தென்னையில் கோகோ ஊடு பயிர் பயன்கள்

 தென்னந்தோப்புகளில் ” கோகோ‘ சாகுபடி செய்தால், தென்னை விளைச்சல் அதிகரிக்கிறது என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் ” கோகோ’ பயிரிடுவதற்கான தட்பவெப்ப நிலை, மண் வளம் மற்றும் நீர்வளம் ஏற்றதாக உள்ளது. தென்னையில் ” கோகோ’ ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம், தென்னை விளைச்சல் அதிகரிக்கிறது. ஆண்டுக்கு 800 கிலோ இலைகள் உதிர்வதால், மண்ணில் அங்கக சத்து உயர்கிறது. சிறந்த முறையில் களை கட்டுப்பாடு செய்யப்படுகிறது. மண் அரிமானமும், மண்ணின் ஈரப்பதமும் காக்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் “கோகோ’ மேலும் படிக்க..

மணிலாவுக்கு ஏற்ற மார்கழி பட்டம்

மார்கழி மாதப் பட்டத்தில் மணிலா (நிலக்கடலை) பயிரிட்டால் கூடுதல் மகசூல் பெற்று லாபம் அடையலாம் என திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குநர் பா.தேவநாதன், விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிலா விதைப்பு செய்ய ஏற்றப் பருவமான இந்த தருணத்தில் பின்வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மணிலா பயிரிட்டு கூடுதல் மகசூல் பெற்று லாபம் அடையலாம். தை மாதம் முதல் தேதிக்குள் மணிலா விதைப்பை செய்து முடித்திட வேண்டும். காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி உள்ள செம்மண் மற்றும் இருமண் மேலும் படிக்க..

திசு வாழையில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக திசு வாழையில் பூச்சி நோய் காணப்படுவதாக வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. அதற்கான தடுப்பு முறைகளையும் தெரிவித்துள்ளது. நோய் தாக்குதல் அறிகுறிகள்: எர்வினியா நோய் தாக்கப்பட்ட வாழையின் இலை சிறுத்து நரம்புகள் கடினமாகவும், இலை வெளிரிய நிறமாக காணப்படும். நோய் தீவிரமடையும் போது இலைகள் காய்ந்திருக்கும். புதிதாக வரும் குருத்துக்கள் சிறுத்து வளராமல் இலை விரிவடையாமல் காணப்படும். கூண் வண்டு தாக்குதலை தொடர்ந்து எர்வினியா என்ற பாக்டீரியா அழுகல் மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மையால் பொருட்களுக்கு மவுசு: சுபாஷ் பலேகர்

“”இயற்கை வேளாண் தொழிற்நுட்பத்தை கையாண்டால் தான், உலக சந்தையில், விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்,” என, ஜீரோ பட்ஜெட் வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பலேகர்  தெரிவித்தார். பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில், “ஜீரோ பட்ஜெட்‘ இயற்கை வேளாண் கருத்தரங்கு, பாலக்காடு சாலையிலுள்ள மின்னல் மகாலில் நேற்று துவங்கியது. மகாராஷ்டிர மாநில வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பலேக்கர் பேசியதாவது: பிரதமர் மன்மோகன்சிங், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, உணவு உற்பத்தியை அதிகரிக்க, நம்மிடம் எந்த தொழிற்நுட்பமும் இல்லை மேலும் படிக்க..

வாழையில் கிழங்கு துளைக்கும் கூன் வண்டு

கிழங்கு துளைக்கும் கூன் வண்டு  சேதத்தின் அறிகுறி: வண்டுகளும் புழுக்களும் மண்ணுக்கடியில் வாழைக் கிழங்குகளைத் துளைத்து சேதப்படுத்தியிருக்கும் கிழங்குகளில் சுரங்கப்பாதை போன்ற அறிகுறிகள் காணப்படும் தீவிர தாக்குதலாயின் மரமே வாடிப்போகும் பூச்சியின் விபரம்: முட்டைகள்: வெள்ளை நிறமாகவும், வண்டுகள் முட்டைகளை தனித்தனியாக இடும். முட்டைகள் கிழங்கின் மேற்பகுதியில் தோன்றும் புழுக்கள்: மஞ்சள் களந்த வெண்மை நிறமாகவும், சிவப்பு நிற தலைகளுடனும், கால்கள் இல்லாமலும் காணப்படும் கூட்டுப்புழு: வெள்ளை நிறமாகவும், கிழங்குக்கு உள்ளே காணப்படும் வண்டு: வண்டு சிறியதாக மேலும் படிக்க..

மாவில் பழ ஈ தாக்குதல் கட்டுபடுத்துவது எப்படி

மாவில் பழ ஈ தாக்குதலின் அறிகுறிகள் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியை தின்று அழிக்கும் தோலின் மேற்பரப்பில் பழுப்புநிறத்திட்டுக்கள் காணப்படும் சேதம் அதிகமாகும் நிலையில் பழங்கள் அழுகி பழுப்பு நிறத் திரவம் வெளிவரும் சேதமடைந்த பழங்கள் அழுகி கீழே விழுந்துவிடும் பூச்சியின் விபரம்: புழு – வெண்ணிற புழுக்கள், கால்கள் இல்லாமலும் தலை பகுதி அகன்றும் காணப்படும் பழ ஈ – ஈக்கள் ஆரஞ்சு அல்லது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற இறக்கைகளைக் மேலும் படிக்க..

இந்தியாவின் மிகவும் வெறுக்கப்படும் அரசியல் வாதி: சரத் பவார்

இந்திய டுடே பத்திரிக்கை இந்தியா முழுவதும்  ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இந்தியாவிலேய மிகவும் வெறுக்கப்பட்ட அரசியல் வாதி (India’s most hated politicians) யார் என்று. இந்த கருத்து கணிப்பில் முதலில் வந்து உள்ளவர், நம்முடைய விவசாய துறை மந்திரி சரத் பவர் தான். பழம் பெரும் ஊழல் பெருச்சாளியான அவர் மேல் எத்தனையோ குற்றச்சாட்டுகள். கிரிக்கெட், லாவசா மலை நகரம் அமைப்பு, மரபணு மாற்ற பட்ட விதை கம்பனிகளுடன் உறவு (மொன்சொண்டோ) என்று அவருக்கு மேலும் படிக்க..

சென்னை அருகே ராட்சச ஆப்ரிக்க நத்தைகள்

கேரளத்தை தாக்கி விவசாயத்தை பாதித்துள்ள ராட்சச ஆப்ரிக்க நத்தையை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இவை இப்போது தமிழ் நாட்டில், ஏன் சென்னைக்கு பக்கத்திலேயே வந்து விட்டன .. இதோ தினமலர் செய்தி ஆப்ரிக்க நத்தைகளின் படையெடுப்பால், தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர். மாடம்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ஏ.எல்.எஸ்., நகர், காந்தி நகர், பாஸ்வநாத் அவென்யூ ஆகிய பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சில மாதங்களாக, ஆப்ரிக்க நத்தைகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் படிக்க..

களை மேலாண்மை

களை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குறையும் (களை எடுக்கா பயிர் கால் பயிர்). வறண்ட நிலத்திற்கு களை எடுப்பு தேவையில்லை. களை எடுக்கா நிலத்தில் களைப் பயிர் வளர்ச்சியானது, இயற்கையாகக் குறைந்து, அது மண் ஈரத்தை காக்க உதவும். அடிக்கடி உழவுச் செய்தால், களை எண்ணிக்கை குறையும். அருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும். கரும்மண் நிலத்தில் அருகம்புல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த 3 வருடங்கள் வரை நிலத்தை அப்படியே போட்டுவிடவேண்டும். பசுந்தாள் மேலும் படிக்க..

மா தண்டு துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்

மா தண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்: புழுக்கள் மா மரத்தைக் குடைந்து உள்ளே சென்று சேதப்படுத்துகிறது துளைக்கப்பட்ட பகுதியின் கீழே மரத்தைச்சுற்றிலும் மரத்தூள்களும் புழுவின் கழிவுகளும் காணப்படும் புழுக்கள் மரத்தைக் குடைந்து சென்று உணவுக்கடத்தும் திகலை உண்பதால் மரக்கிளைகள் வாடிவிடும் சேதம் அதிகமாகும் நிலையில் முழுமரமும் அழிந்து போகும் பூச்சியின் விபரம்: புழு – வளர்ச்சியடைந்த புழு 10-15 செ.மீ நீளமுடையது, தலை பழுப்பு நிறத்தில் காணப்படும். புழுவின் முன்பகுதி அகன்றும் உடல்பகுதி சிறுத்தும் காணப்படும் வண்டு மேலும் படிக்க..

தக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்

தக்காளி  இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும். நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும். பூச்சியின் விபரம்                         புழு : பழுப்புநிற 2மிமீ நீளமுள்ள கால்கள் இல்லாத புழுக்கள். கூட்டுப்புழு : வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும். முதிர்பூச்சி : வெளிர் மஞ்சள் நிற ஈக்கள். கட்டுப்படுத்தும் முறைகள் துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம். வேப்பங்கோட்டை மேலும் படிக்க..

ரசாயன பூச்சி கொல்லி பயன் படுத்தும் முறைகள்

பூச்சிக் கட்டுப்பாடு செய்ய பூச்சிக்கொல்லி உபயோகிக்கும் போது, நீரின் தரம் பாதிப்படையாமல் பயன்படுத்தும் முறையைக் கையாளுவது மிகவும் முக்கியமாகும். பூச்சி மேலாண்மையில் சான்றிதழ் பெற்றவராகவும், புதிய யுத்திகளை அறிந்தவராகவும் இருக்கவேண்டும். பூச்சிக்கொல்லிகளை தகுந்த நேரத்தில் சிறந்த கட்டுப்பாட்டு திறன் கிடைக்கும் சமயத்தில் உபயோகிக்க வேண்டும். பூச்சியின் பருவ சுழற்சி வெப்பத்தினாலும், ஈரப்பதத்திலும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அநேக நேரங்களில், பூச்சிகள் நடமாட்டமில்லாத / செயலற்ற நிலையில் இருக்கும் போது பூச்சிக்கொல்லி உபயோகம் நல்ல பலன் தராது. நச்சுத்தன்மை குறைவாக மேலும் படிக்க..

கரும்பு சாகுபடியில் களை கட்டுப்பாடு

“கரும்பு பயிரில் காணப்படும் களையை கட்டுப்படுத்த சரியான களைக்கொல்லி நிர்வாகத்தை பயன்படுத்த வேண்டும்’ என, உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார். கரும்பில் முளைப்பு பூர்த்தியாக குறைந்தது 25 முதல் 30 நாட்களாகும். இந்த இடைவெளியில் களைகள் விரைவாக வளர்கின்றன. தனிப்பயிராக கரும்பு சாகுபடி செய்யும்போது, அகன்ற இலை அல்லது பூண்டு வகை களைகள் அதிகம் உள்ள இடங்களில் அட்ரசின் என்ற களைக்கொல்லியை தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற மேலும் படிக்க..

தென்னையில் ஊடுபயிர் சேனைக்கிழங்கு

தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும். ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 கிலோ கிழங்குகள் தேவைப்படும். 7.5×7.5மீ இடைவெளியுள்ள 2 தென்னை மரங்களுக்கு மத்தியில் 4 வரிசைகளில் சேனைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும். முதலில் 30×30செ.மீ அளவுள்ள குழிகள் எடுத்து 10 கிலோ தொழு உரத்தையும் மேல் மண்ணையும் இட்டு குழியினை நிரப்ப வேண்டும். மேலும் படிக்க..

பயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசணம்:

 பவேரிய பேசியானா பூசணம்  (Beauveria bassiana) எல்லா மண் வகைகளிலும் காணப்படுகிறது. பூசணத்தின் வித்துக்கள் பூச்சி, புழுக்களின் மேல் பட்டவுடன் சாதகமான சூழ்நிலையில் அவை முளைத்து பூசண இழைகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பூசணம் நொதிப் பொருட்களை உற்பத்தி செய்து மேற்புற தோலினை சிதைத்து பூச்சியின் உடலுக்குள் ஊடுருவிவிடுகிறது. அங்கு நச்சுப்பொருளை உற்பத்தி செய்து பூச்சியின் வயிற்றில் உள்ள பாக்டீரியாவை எளிதில் அழித்து, பூசணம் உடல் முழுவதும் வளர்ந்து பரவி பூச்சியைச் செயலிழக்கச் செய்து கொன்றுவிடுகிறது. இப்பூசணம் மக்காச்சோள பயிரில் மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டிகள்

பசுமை தமிழகத்தில் இயற்கை பூச்சி விரட்டிகள் பற்றி படித்து இருக்கிறோம். இதோ, மேலும் இரண்டு இயற்கை பூச்சி விரட்டிகள் நொச்சி இலை, வேம்பு தழை கரைசல் நொச்சித்தழை 5 கிலோ மற்றும் வேப்பந்தழை 5 கிலோ ஆகியவற்றை ஒரு பானை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.  அதனை கூழாக்கி ஒரு இரவு வைத்திருந்து பின்பு வடிகட்டி அதனை 100 லிட்டர் நீரில் கலந்து  ஒரு ஏக்கருக்கு தெளித்தால் நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு,  குருத்துப்புழு, கதிர்நாவாய்பூச்சி ஆகியவற்றை மேலும் படிக்க..

குருவை சாகுபடி: ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தின் டிப்ஸ்

“”தாளடி நடவு பயிர் மழையால் பாதிக்கப்படாமல் இருக்க இயற்கை முறை தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்,” என ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை முடிந்து தற்போது தாளடி சாகுபடி பணிகள் துவங்கி நடந்து வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. மேலும் படிக்க..

பருத்தியில் இலை கருகல் நோய்

பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மழைக்குப்பின் பருத்தியில் பூச்சி நோய் தாக்குதல் பற்றி வயல் ஆய்வு செய்யப்பட்டது. தற்சமயம் பருத்தி பயிர் காய்ப்பருவத்தில் உள்ளது. தண்ணீர் தேங்கிய மற்றும் ஈரம் அதிகமாக உள்ள வயல்களில் நுண்சத்து பற்றாக்குறை காணப்படுகிறது. நுண்சத்து பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் சிவப்பு நிறமாகவும், செடிகள் பசுமை தன்மை இழுந்தும் காணப்படும். இதனைக்கட்டுப்படுத்துவதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் 5 கிராம் சிங்சல்பேட் நுண்ணூட்ட உரத்தினை கலந்து மேலும் படிக்க..

கரும்பு சாகுபடி நிலம் தயார் செய்யும் முறை

கரும்பு விளைவிக்கப்படும் நிலங்களில் தொடர்ந்து கரும்பு மட்டுமே சாகுபடி செய்யக் கூடாது என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது. ஒரு முறை கரும்பு சாகுபடி செய்தவுடன் அதை வெட்டி எடுத்த பிறகு ஒரு முறை கட்டை கரும்புக்குப் பின் அந்த நிலத்தில் மாற்றுப் பயிர் ஒன்றை சாகுபடி செய்ய வேண்டும்.அதன் பின்னரே கரும்பை மீண்டும் பயிரிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல், வாழை, மஞ்சள், நிலக்கடலை, சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றை கரும்பு சாகுபடி செய்யும் நிலங்களில் சுழற்சி முறையில் பயிர்களை மேலும் படிக்க..

வர இருக்கும் போஸ்பேட் நெருக்கடி

போஸ்பேட் உரம் (Phosphate) இப்போது ஒரு முக்கியமான உரமாகும். பசுமை புரட்சியின் பொது இந்த உரம் பிரபலப்படுத்தப்பட்டது. இந்த உரத்தை நிலத்தில் பயன் படுத்தினால் விளைச்சல் நன்ற அதிகரிக்கும். மண்ணில் இருந்து எடுக்க படும் Rock Phosphate தாது மூலம் இது பிரிக்க படுகிறது. இந்த போஸ்பேட் உள்ள தாதுக்கள் உலகத்தில் 65 பில்லியன் டன்கள் உள்ளன. அவற்றில் 16 பில்லியன் டன்கள்  மட்டுமே நிலத்தில் இருந்து எடுக்க முடியும். இதில் பெரும் பகுதி ஆப்ரிக்காவில் உள்ள மேலும் படிக்க..

திராட்சையில் சாம்பல் நோய்

திராட்சையில் பரவி வரும் சாம்பல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது. பனிக்காலம் தொடங்கி உள்ளதாலும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகி உள்ளதாலும் திராட்சை தோட்டங்களில் அடிச்சாம்பல் மற்றும் மேல்சாம்பல் நோய் தாக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த நோய் இலைகளை தாக்கும். பூங்கொத்தும், பிஞ்சுகளும் கூட பாதிக்கப்படுகிறது. இலையின் அடிப்பாகத்தில் வெண்மை நிற பூஞ்சாண வளர்ச்சி காணப்படும். அதற்கு நேர் எதிர் இலையின் மேல் பகுதி மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும். நோயின் தன்மை தீவிரமடைந்த நிலையில் மேலும் படிக்க..

பயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ்

தர்மபுரியை அடுத்த சோலைக்கொட்டாயில் விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜன், வேளாண் உதவி இயக்குனர் (விதை சான்று) வெங்கடேசன், வட்டார வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் ஆகியோர் பேசினர்.வேளாண் இணை இயக்குனர் ராஜன் பேசியாதவது: பூக்கும் தருணத்தில் உள்ள பயிறு வகை பயிர்களுக்கு இரண்டு சதவீதம் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 5 கிலோ டி.ஏ.பி., உரத்தை 10 லிட்டர் நீரில் முதல் மேலும் படிக்க..

தேங்காய் நார் கயிறு இலவச தொழிற் பயிற்சி

மதுரை : மதுரை சிம்மக்கல் டேசட் பயிற்சி மையத்தில், சென்னை இட்காட் நிறுவனம் சார்பில், தேங்காய் நார், கயிறு தயாரித்தல் குறித்த இலவச தொழிற் பயிற்சி டிச 2011 .,8 – 10  வரை நடக்க உள்ளது. மண் அரிப்பை தடுக்கும் விரிப்புகள், கைத்தறி மிதியடி, ரப்பரில் பதிக்கப்பட்ட தேங்காய் நார் மிதியடி தயாரிக்கும் பயிற்சி, மூலப்பொருள் விவரங்கள் வழங்கப்படும். டேசட் மையத்தில் முன்பதிவு செய்யலாம். தகவல் பெற, 09487559345 ல் தொடர்பு கொள்ளலாம் நன்றி: தினமலர்

மழைக் காலத்தில் பருத்தி பயிர்களைப் பாதுகாக்கும் முறைகள்

மழைக் காலத்தில் பருத்தி பயிர்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். இரா. மாரிமுத்து கூறியது: தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அனைத்துப் பயிர்களின் வயல்களிலும் மழை நீர்த் தேங்கிக் காணப்படுகிறது. இதனால், பாக்டீரியம், பூஞ்சாணம் போன்றவற்றால் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, பருத்தியில் வெர்டிசீலியம் வாடல் நோய், வேர் அழுகல் நோய், ஆல்டர் நேரியா, இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோய், மேலும் படிக்க..

பாசனநீரை ஆய்வு செய்து உரச்செலவை குறைக்கலாம்

பாசனநீர் மற்றும் மண் ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால், சாகுபடியில் உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம்,என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் பாசன நீரைப் பெறுவதற்காக அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதில் ஆயிரம் அடிவரை கூட ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து, தரம் குறைந்த மிகக்குறைவான நீரையே பெறும் நிலையுள்ளது. இப்படி பலதரப்பட்ட பிரச்னையில் பெறும் தண்ணீரை, உரியமுறையில் ஆய்வு செய்து அதன் துணையோடு பயிர் செய்தால், பாதிப்புகளை குறைத்து அதிக மகசூல் பெறலாம். பாசன மேலும் படிக்க..

அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை

நிலவள ஊக்கி ஆன அமிர்த கரைசலை தயாரிக்கும் முறை: மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம், இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார். பயன் படுத்தும் முறை ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து மேலும் படிக்க..

வாழையில் கிழங்கு அழுகல் நோய் கட்டுபடுத்துவது எப்படி

வாழை சாகுபடியில் கன்று நடவில் இருந்து ஐந்து மாதங்கள் வரை கிழங்கு அழுகல் நோய் அதிகம் காணப்படும். அறிகுறிகள் நோய் தாக்கப்பட்ட கன்றின் இலைகள் மஞ்சளாகவும், இளம் குருத்து மிகவும் சிறுத்தும், இலைகள் வெளிவர முடியாமல் தண்டின் உள்ளேயே இருப்பது போல் காணப்படும். ஆரம்பத்தில் குருத்து இலைகள் காய்ந்தும் மற்ற இலைகள் பச்சையாகவும் இருக்கும். நாளடைவில் பச்சை இலைகளும் காய்ந்து விடும். அடித்தண்டு உப்பி பெருத்தும், தரைமட்டத்தில் தண்டில் கருப்பு நிற வளையமும், வெடிப்பும் காணப்படும். சில மேலும் படிக்க..

செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரிப்பது எப்படி?

செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரத்தைத் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் மண் வளத்தை அதிகப்படுத்துவதுடன், இடுபொருள் செலவையும் குறைக்கலாம். விவசாய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது உரம் ஆகும். நாளுக்கு நாள் உரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் கனிம உரங்களின் பயன்பாடு போதிய அளவில் இருந்த போதும் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இயற்கை உரங்களை நிலத்தில் இடாததும், உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்காததுமே ஆகும். தொழு உரம் தயாரிப்பு முறைகள் – மேலும் படிக்க..

"பை' முறை விவசாயம்

ஐரோப்பிய நாட்டில் பயணம் செய்யும்போது பார்த்த சீதோஷ்ண நிலை, சமன்படுத்தப் பட்ட காய்கறி தோட்ட தொழிற் சாலைகளை மனதில் கொண்டு திட்டமிடப் பட்டதுதான் இந்த வீட்டுக் குறுந்தோட்டமும், வீட்டு மாடித் தோட்டமும். தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் துகள்களை ஆதாரமாகக் கொண்டு அத்துடன் இயற்கைத் தாதுக் களையும், நுண்ணுயிர்களையும் கலந்து செடிகள் வளர்வதற்கான ஊடகத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களின் உதவியோடு உருவாக்கி உள்ளார். இந்த ஊடகத்தை ஆராய்ந்தவர்கள் இது இயற்கையான சத்துமிகுந்த ஊடகம் மட்டுமில்லாமல் மேலும் படிக்க..

துவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க வழிகள்

துவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க டிஏபி கரைசலை பயிரின் மீது தெளிக்கலாம்  துவரை பயிர் பூக்கும் தருவாயில் உள்ளது. தரமான மற்றும் அதிக மகசூல் பெறுவதற்கு கீழ்க்கண்ட தொழில்நுட்பத்தை விவசாயிகள் கையாளலாம். 12.5 கிலோ டிஏபி உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் ஊரவைக்க வேண்டும். இக்கரைசலை தெளிப்பதற்கு முன் வடிகட்டி, 600 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிரின் மீது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். மீண்டும் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். இவ்வாறு இருமுறை தெளிப்பதால் மேலும் படிக்க..

பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்

பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு தொழில் நுட்பங்கள் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ் தெரிவித்துள்ளார். மா மரம்: ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும். 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும். பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து மேலும் படிக்க..

BT பருத்தியை பற்றிய தினமணி கட்டுரை

பருத்தியை பற்றி தினமணியில்   வந்துள்ள நல்ல கட்டுரை : பி.ட்டி பருத்தியின் ஆதிக்கம் தொழில் – வணிக நாளிதழ்களில் இன்றைய விஷயம், பி.ட்டி பருத்தி விளைந்து விவசாயிகள் சிலர் குபேரர்களாகிவிட்டதாகச் சற்று மிகைப்படுத்தப்பட்ட நிஜக்கதைகள், உண்மைதான். வசதியான சில விவசாயிகளுக்கு மட்டும் கூடுதல் செலவில் நல்ல பலன்கள் கிடைத்தன. பருத்தி விளைச்சல் அதிகரித்ததும் பொய்யல்ல. ஏற்றுமதி தடையுற்றுப் பருத்தி விலை சரிந்துவிட்டதும் உண்மைதான். எனினும், உற்பத்தி உயர்வுக்கு வழங்கப்பட்ட விலை என்ன?நிஜமாகப் பருத்தி – பி.ட்டி மேலும் படிக்க..

மணிலா சாகுபடியில் ஊடு பயிராக கேழ்வரகு

தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய நடைமுறைச் சூழலில் கர்நாடக மாநில விவசாயிகள் புதிய வேளாண் ஊடுபயிர் முயற்சியாக மணிலாவுடன் கேழ்வரகு சாகுபடி செய்து அதிகளவு லாபம், கால்நடைத் தீவனம், மண்ணின் வளம் பெருக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலும் படிக்க..

வழிகாட்டும் மிதவை விவசாயம்

கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் காரணமாக தமிழக விவசாயிகள் அதிகளவு பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கடலோரப் பகுதி தமிழகத்திலும், காவிரி பாசனப் பகுதிகளிலும் வெள்ளத்தினால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். இதே சூழலில் வங்கதேசத்தில் அடிக்கடி ஏற்படும் கனமழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பயிர்கள் பாதுகாக்க அங்குள்ள விவசாயிகள் புதிய முறையான மிதவை விவசாயத்தை மேற்கொள்கின்றனர். இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் மேலும் படிக்க..

கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களை இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கட்டுப்படுத்துவது சரியான முறையாகும் கத்திரி சாகுபடி செய்யும் பகுதியில தண்டு துளைப்பான் மிகப்பெரும் சேதத்தை உண்டாக்கும் பூச்சியாக உள்ளது. புழு செடியின் நுனிக்குருத்து உள்ளே சென்று செடியின் மற்ற பாகங்களுக்கு செல்லும் தண்ணீர் கடத்தும் திசுக்களையும், காயையும் சேதப்படுத்தியும் விடுகிறது.அதனால், விவசாயிகள் மகசூல் இழப்பு பெரிய அளவில் ஏற்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகமான அளவில் ஊடுருவிப் பாயும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளித்து மேலும் படிக்க..

வேளாண் இயந்திரமயமாக்கல் குறித்து பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரமயமாக்கல் குறித்து ஒருவார பயிற்சி வழங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் மற்றும் கரும்பு பயிர்களுக்கு சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன கருவிகள் மூலமான நீர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் வேளாண் கருவிகளை கையாள்வது குறித்து ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் 40 வயதுகுட்பட்ட விவசாயிகள் பங்கேற்கலாம். பயிற்சியின் மேலும் படிக்க..

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை

 மரவள்ளி சாகுபடி நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழவு செய்து, கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் அல்லது இரண்டு டன் மண்புழு உரம் இட வேண்டும். டிரைகோடெர்மாவிரிடி இரண்டு கிலோ, அசோஸ்பைரில்லம் இரண்டு கிலோ, பாஸ்போ பாக்டீரியா இரண்டு கிலோ என்ற அளவில் இடவேண்டும். மேலும், ஒரு வாரம் கழித்து யூரியா 40 கிலோ, சூப்பர்பாஸ்பேட் 235 கிலோ, பொட்டாஷ், 80 கிலோ என்ற அளவில் இட்டு 90 செ.மீ.,க்கு 90 மேலும் படிக்க..

சொட்டு நீர் பாசனம் நன்மைகள்

குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு கூடுதல் மகசூல் பெற சொட்டு நீர்ப்பாசனம் முறையை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.  பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழப்பயிர்களின் நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் செயல்திறன் மிக்க வேர்கள் மண்ணின் மேல்மட்டத்திலிருந்து ஒரு அடி ஆழத்தில் உள்ளது. நீர்பாசனம் செய்யும் போது மண் ணின் மேற்பரப்பு ஈரமாகவும், சத்துகள் உள்ளவாறும் பராமரித்தால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும். சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தேவைப்படும் இடம் மற்றும் போதுமான அளவில் மேலும் படிக்க..

தென்னையை தாக்கும் புதிய எதிரி – கேரளா வாடல் நோய்

கேரளாவில் பெரும்பாலான தென்னை மரங்களை தாக்கி அழித்த “கேரள வாடல்’ நோய், இப்போது தமிழகத்திலும் தென்படத் துவங்கியுள்ளது. இது பற்றி, கோவையில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் எழுப்பியபிறகு விழித்துக்கொண்ட வேளாண் துறை அதிகாரிகள், ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர். தமிழகத்தில் தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் முதன்மையானது கோவை மாவட்டம். இங்குள்ள விவசாயிகளில் பலர், “ஈரியோபைடு‘ பாதிப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், இப்போது அடுத்த புதிய நோய் ஒன்றும், தென்னையை தாக்க மேலும் படிக்க..

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய தென்னை ரகங்கள்

“ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் வறட்சியை தாக்குப்பிடித்து, நோய் எதிர்ப்பு சக்தியுடன் அதிக மகசூல் கொடுக்கும் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என, ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜமாணிக்கம் கூறினார். தமிழகத்தில் 3.81 லட்சம் ஹெக்டரில் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. தென்னையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். தென்னையில் கோகோ, வாழை போன்றவை ஊடுபயிர் சாகுபடி செய்தால் கூடுதல் வருவாயும், தென்னைக்கு கூடுதல் உரச்சத்து கிடைக்கும். ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட மேலும் படிக்க..

விஜய் மல்லையாவும் 7000 கோடி புஷ்வானமும்

விஜய் மல்லையா என்று ஒரு பெரும் பணக்காரர் இருக்கிறார். போர்பஸ் பத்திரிகை கணக்கு படி அவருக்கு ஒரு பில்லியன் டாலர் (ஐயாயிரம் கோடி ருபாய்) சொத்து இருக்கிறது. இவரின் முதல் தொழில் பீர் தயாரிப்பது. இதை தவிர, F1 race கார்கள்,  IPL டீம், பணக்கார பெண்கள், கப்பல்கள் எல்லாம் உண்டு.அவர் கிங் பிஷேர் ஏர்லைன்ஸ் என்று ஏர்லைன்ஸ் வாங்கி நடத்த ஆரம்பிக்கிறார். என்ன, பசுமை தமிழகத்திற்கும், கோடிஸ்வர மல்லையா என்ன தொடர்பு என்று யோசிகின்றீர்களா? வருகிறேன் மேலும் படிக்க..

இயற்கை உரமனான அவுரி செடி

விவசாய நிலங்களில் நெல்சாகுபடி செய்வதற்கு வசதியாக மண்வளம் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கை உரம் தாவரமான அவுரி செடி வளர்ப்பு சாகுபடி அதிகரித்துள்ளது. கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்டவிவசாய நிலங்களில் திருந்திய நெல் சாகுபடி செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணிகளான மண் வளம் பாதுகாக்க இயற்கை உர தாவரமான அவுரி செடி வகை நிலங்களில் தெளிக்கப்பட்டு, அதனை நன்றாக வளர்ந்த பின், அடி உரமாக மண்ணுடன் உழவு செய்யப்படுகின்றது.   இதன்மூலம் நெல் சாகுபடி பயிருக்கு ரசாயனம் மேலும் படிக்க..

"இயற்கையை இழந்தால் வாழ்வில்லை'

“”இயற்கையை அழிக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டால், மனிதன் வாழவே முடி யாது,” என்று “குறிஞ்சி’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் கோவை சதாசிவம் பேசினார். அவிநாசியில் செயல்படும் “ஈரம்’ சமூக நல இயக்கம் சார்பில், வன விலங்கு வார விழா, துவக்கப்பள்ளியில் நடந்தது. “ஈரம்’ அமைப்பின் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் பழனிசாமி வரவேற்றார். “குறிஞ்சி’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் கோவை சதாசிவம் பேசியதாவது:வன விலங்கு வாரம் உள்ளதை பலரும் மறந்து விட்டனர். இயற்கையை தொடர்ந்து நாசப்படுத் மேலும் படிக்க..

திருந்திய நெல் சாகுபடியில் உர மேலாண்மை

திருந்திய நெல் சாகுபடி முறையில் குறைந்த இடுபொருட்களின் மூலம், அதிக மகசூல் பெறலாம். சாதாரண நெல்நடவில் மொத்த நீர்த்தேவை, 1200 மி.மீ., எனில் திருந்திய சாகுபடியில் பாதியளவு போதும். இலை வண்ண அட்டையை பயன்படுத்தி, தேவைக்கேற்ப தழைச்சத்து இடவேண்டும். வெள்ளைப் பொன்னிக்கு 3ம் எண், மற்ற ரகங்களுக்கு 4ம் எண்ணுடன் நிறத்தை ஒப்பிட வேண்டும். அட்டை எண் 4க்கு குறைவாக இருந்தால், ஒரு எக்டேருக்கு 30 கிலோ அளவில் தழைச்சத்தும், தண்டு உருளும் பருவத்தில் பாதியளவு சாம்பல் மேலும் படிக்க..

தொடர் காய்கறி சாகுபடி

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு காய்கறிகள் வகிக்கிறது. பெரியவர்களுக்கு 85 கிராம் பழமும், 300 கிராம் காய்கறிகளும் அன்றாடம் தேவை என ஆய்வுகள் கூறுகின்றன. தற்சமயம் உற்பத்தியாகும் காய்கறிகள் பெரியவர்களுக்கு சராசரியாக 220 கிராம் மட்டுமே கிடைக்கக் கூடியதாக உள்ளது. காய்கறிகள் சாகுபடி குறுகிய காலத்தில் அதிக மகசூல் மேலும் படிக்க..

காராமணி சாகுபடி

காராமணியை குளிர்காலம் மற்றும் கடும் மழை பெய்யும் காலம் இவைகளைத் தவிர்த்து இதர மாதங்களில் சாகுபடி செய்யலாம். காராமணி ஆடி-ஆவணிப் பட்டத்தில் மானாவாரி நிலங்களை மழையை நம்பி சாகுபடி செய்யப்படுகின்றது. சிறிய அளவில் சாகுபடி செய்ய குச்சி நட்டு அதன்மேல் படர விடலாம். பொதுவாக தரையில் வளரும்படியே இதனை சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி வகை காராமணியில் சாகுபடிக்கு ஏற்ற இரண்டு ரகங்கள் உள்ளன. என்.எஸ்.634 என்ற ரகம் நல்ல பசுமை நிறத்துடன் காணப்படும். இதன் காய்கள் ஒன்றரை மேலும் படிக்க..

தேங்காய் பறிக்க, Tractor Hoist இயந்திரம்

விவசாய வேலைகளுக்கு ஆட்கள் குறைந்து வரும் இந்நாட்களில் மரம் ஏறி பழம் பறிப்பது, தேங்காய் பறிப்பது, மரங்களுக்கு பூச்சி மருந்து அடிப்பது போன்றவை கஷ்டமாகி வருகின்றன. மரம் ஏற தெரிந்த வேலையாட்கள் குறைந்து வருவதும் அவர்கள் போவதும் இதற்கு காரணம். இந்த பண்ணை வேலைகளை செய்ய இப்போது திருச்சி அருகே உள்ள  கும்லூரில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் சார்ந்த வேளாண்மை பொறியயல் கல்லூரி Tractor மீது வைக்க பட்டு வேலை செய்யும் மேடையை மேலும் படிக்க..

வெள்ள எதிர்ப்பு நெல் அறிமுகம்

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் ஹெக்டேர்கள் சம்பா பருவத்தில் நெல் பயிரிட படுகிறது. இதில், ஒவ்வொரு ஆண்டும், 3-5 லட்சம் ஹெக்டேர்கள் வட கிழக்கு மழையால் நீரில் மூழ்கி போகிறது. டெல்டா பகுதிகளில் இந்த பிரச்னை அதிகம். வயலில் ஒரு வாரம் அதிகமாக நீர் நின்றால் பயிர்கள் அழுகி போகின்றன. இந்த குறையை தீர்க்க, தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் புதிதாக ஸ்வர்ணா சப்1 (Swarna Sub1)  என்ற ஒரு நெல் ரகத்தை மேலும் படிக்க..

உவர் மண்ணை சீர்படுத்தும் வழிகள்

உவர் மண்ணை சரி செய்யும் வழிமுறைகள் விதையைக் கடினப்படுத்துதல் (10 மில்லி  மோலார் சோடியம் குளோரைடு) ஜிப்சம் இடுதல் எக்டருக்கு 6.25 டன் அளவில் தக்கைப் பூண்டை வயலிலேயே மடக்கி உழுத பின்பு விதைத்தல் 0.5 பிபிஎம் பிராசினோலைடு வளர்ச்சி ஊக்கியைத் தெளித்தல் டீஏபி 2 சதவீதம் மற்றும் 1 சதவீத பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை முக்கியத் தருணங்களில் தெளிக்கவேண்டும். 100 பிபிஎம் சலிசிலிக் அமிலத்தை தெளித்தல் 40 பிபிஎம் என்ஏஏயை தெளிப்பதன் மூலம் பூக்கள், பழங்கள் மேலும் படிக்க..

பசுந்தாள் உரபயிர் சாகுபடி – சித்தகத்தி

பருவம் : அனைத்து பருவத்திற்கும் ஏற்றது. மார்ச் – ஏப்ரல் மிகசிறந்த பருவமாகும்                 மண் : அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது. விதையளவு   : பசுந்தாள் உரப்பயிர் 30 – 40 கிலோ / ஹெக்டர் விதைக்கு 15 கிலோ / ஹெக்டர் விதை நேர்த்தி : ரைசோபியத்துடன் ( 5 பொதி / ஹெக்டர்) விதை கலப்பு நடவு இடைவெளி : கை விதைப்பு, மேலும் படிக்க..

புதிய சோளம் பயிர் கோ 5

புதிய சோளம் பயிர் கோ 5 சிறப்பு இயல்புகள் குறைந்த வயது தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்ற இரகம் சாயாத தன்மை அதிக செரிமான தன்மை கொண்டதட்டு குருத்து ஈ மற்றும் கதிர் பூசன நோய்க்கு மிதமான எதிர்ப்பு தன்மை சற்றே விரிந்த கதிர்களுடன் வெண் முத்து தானியங்கள் உருவாகிய முறை: ஐ சி எஸ் எ /டி என் எஸ் வயது 95-100 நாட்கள் பருவம்: ஆடி புரட்டாசி மற்றும் தை பட்டம் மகசூல்: மானாவரி: மேலும் படிக்க..

தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்

தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம் சிறப்பு இயல்புகள்: குறைந்த விசை திறன் புற்கள் மற்றும் களைகளை மண் அமைப்பு மாறாமல் வெட்ட வல்லது அடி மரத்திலும் களை எடுக்க இயலும் கரடு முரடான இடங்களில் பயன் படுத்த முடியும் பார்த்தீநியத்தை களைய வல்லது பவர் டில்லருடன் புழுதி ஓட்ட பயன் படுத்த கூடியது குதிரை திறன்: டீசலால் இயங்கும், நீரால் குளிர் ஊட்டப்படும் 13BHP பவர் டில்லர் எரி  பொருள்  தேவை: 2லி/மணி வெறும் தட்டுகளின் எண்ணிக்கை மேலும் படிக்க..

புதிய நெல் ரகம் ஏ டி டீ 49 (ADT 49)

புதிய நெல் ரகம் ஏ டி டீ 49 (ADT 49) சிறப்பு இயல்புகள் மத்திம சன்ன வெள்ளை அரிசி 1000 மணிகளின் எடை 14 கிராம் முழு அரிசி காணும் திறன் 71.3% ஒட்டாத உதிரியான சுவையான சாதம் வயல்வெளி ஆய்வில் செம்புள்ளி நோய் மற்றும் இலை மடக்கு புழுவிற்கு நடுத்தர தாங்கும் திறன் உருவாக்கம் சி ஆர் 1009 /சீரக சம்பா வயது (நாட்கள்): 130- 137 நாட்கள் பருவம்: பின் சம்பா/தாளடி பட்டம் மேலும் படிக்க..

பப்பாளி சாகுபடி முறைகள்

பப்பாளியில் ஆண், பெண் என இருவகை உண்டு. இருபாலினமும் கொண்ட ரகங்களும் உண்டு. கோ.3, கோ.7 போன்ற ரகங்கள் ஆண் பூ மற்றும் பெண் பூவை ஒரே மரத்தில் கொண்டிருக்கும். இது எளிதில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். பப்பையின் எனப்படும் பப்பாளி பால் எடுப்பதற்கு கோ.2 கோ.5 மற்றும் கோ.6 ரகங்கள் ஏற்றவை. கோ.2, கோ.5 ரகங்கள் எக்டேருக்கு 200 முதல் 250 டன் மகசூல் தரும். கோ.3 ரகம் 120 டன் மேலும் படிக்க..

கரும்பில் சோகை உரிப்பதின் பயன்கள்

கரும்பு பயிரில் சோகை உரிப்பதின் பலன்கள் மற்றும் கரும்பு கத்தியை பயன்படுத்தி காய்ந்த சோகைகளை உரித்து ஆதாயம் பெறுவது குறித்து வேளாண் விஞ்ஞானி ஆலோசனை வழங்கியுள்ளார். கரும்பு பயிரின் இலை அல்லது சோகை ஒரு தொழிற்சாலை போல் செயல்பட்டு மாவுச்சத்தை தயாரிக்கிறது. ஆனால் வயதான பழுப்பு ஏறிய இலைகளால் ஒளிச்சேர்க்கை செய்ய இயலாது. இவை கரும்பில் சேகரிக்கப்பட்டுள்ள சத்துக்களை சுவாசம் மூலம் குறைப்பதுடன் தனிக்கரும்பின் எடையினையும் அதிலுள்ள சர்க்கரைச் சத்தின் அளவினையும் குறைத்து விடுகின்றன. எனவே கரும்பில் மேலும் படிக்க..

முருங்கையை தாக்கும் பூச்சிகள் கட்டுபடுத்துவது எப்படி

செடி முருங்கை சாகுபடியில் முருங்கைக்காய்களை தாம் முக்கிய பூச்சி பழ ஈக்கள் ஆகும். “ ட்ரோசொமிலா” என்ற சிறிய வகை பழ ஈக்கள் முருங்கைப் பிஞ்சுகளை தாக்கி சேதம் விளைவிக்கின்றன. மஞ்சள் நிறத்தில், சிவப்பு நிற கண்களை கொண்ட இந்த ஈக்கள், 1 மில்லி மீட்டர் முதல் 2 மில்லிமீட்டர் அளவுள்ள மிகச்சிறிய ஈக்கள் முருங்கை பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும்போது பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும் போது பிஞ்சுகளின் மெல்லிய தோல்களில் முட்டையிடும். இரண்டு, மூன்று மேலும் படிக்க..

Bt Cotton பற்றிய சில உண்மைகள்

மரபணு மாற்றப்பட்ட பருத்தி (BT cotton) பற்றி இரண்டு விதமான கருத்துகள் இருக்கின்றன. ஒரு பக்கம், இந்த பருத்தி வந்த பின்பு, எப்படி இந்திய உலக அளவில் இரண்டாவது பருத்தி தயாரிப்பிற்கு முன்னேரியிருகிறது, எப்படி விவசாயிகளின் பூச்சி மருந்து செலவு குறைந்து இருக்கிறது என்று வாதங்கள். இன்னொரு பக்கம், இந்த பருத்தி மூலம் பெரிதாக பூச்சி மருந்து செலவு குறையவில்லை, விதை ஒரு சில நிறுவனங்களின் (Monsanto-Mayhco) ஏகபோக உரிமை ஆகிறது, அதனால் அவர்கள் எப்படி விலையை மேலும் படிக்க..

மண்புழு உரம்

மண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே மண்புழு உரம். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சாணம், வயல்வெளிகளில் உள்ள களைகள், அனைத்து பண்ணைக் கழிவுகள், காடுகளில் இருந்து கிடைக்கும் இலை மற்றும் தழைகள், சந்தையில் இருந்து பெறப்படும் வேண்டாத சொத்தை காய்கறிகள், பழங்கள் மற்றும் இலைக் கழிவுகள், உணவு விடுதிகளில் இருந்து பெறப்படும் இலை, வீணாகும் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மண் புழுக்களுக்கு உணவாகக் கொடுத்து தரமான மண்புழு உரத்தை பெற முடியும்.  உரக்கூடம் அமைத்தல்: மண்புழு மேலும் படிக்க..

பார்த்தீனியம் கட்டுப்பாடு முறைகள்

பார்த்தீனியம் பற்றி நாம் ஏற்கனவே படித்துள்ளோம்.இதோ, மற்ற வழிகள் மூலம் பார்த்தீனியம் கட்டுப்பாடு: பார்த்தீனியம் விதைகள் முளைக்கும் முன்னும் முளைத்த செடிகள் பூ பூத்து விதை உண்டாவதற்கு முன்னும் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.இதனால் விதைகள் முற்றி மேற்கொண்டு இச்செடி பரவுவது தடுக்கப்படுகிறது. பார்த்தீனியம் விதைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்தும் முறை பார்த்தீனியம் நச்சுக்களை விதைகள் முளைப்பதை தடுக்க மழை காலத்தில் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்பொழுது அட்ராடாப் களைக்கொல்லியை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் சுமார் மேலும் படிக்க..

க்ரிஷி விக்யான் கேந்திராவில் இலவச பயிற்சிகள்

காஞ்சீவரம் மாவட்டத்தில் உள்ள காடுபாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் கீழ்கண்ட பயிற்சிகள் நடைபெறுகின்றன. இவை இலவசம். Oct 3-4 :காளான் வளர்ப்பு Oct 10: பசுந்தீவன உற்பத்தி தொழிற்நுட்பங்கள் Oct 12-13: கறவை மாடு வளர்ப்பு Oct 15: தேனீ வளர்ப்பு Oct 18: சொட்டு நீர் மூலம் காய்கறி பாசனம் முன் பதிவு செய்து கொள்ள இந்த தொலைபேசி எண்ணை அணுகவும்: 04427452371 முகவரி: Krishi Vigyan Kendra Kattupakkam – 603 203 Kattankolathur மேலும் படிக்க..

குறுவை நெல் விலை வீழ்ச்சி

வேறு எந்த வியாபாரத்திலும் இல்லாத முறையாக, உற்பத்தியாளர்களுக்கு 7 ரூபாய் கொடுத்து விட்டு, நுகர்வோருக்கு 30 ரூபாய் வரை விற்று இடை தரகர்கள்  லாபம் பெரும் ஒரே தொழில் விவசாயம் தான். இந்த அக்கிரமம் ஒழிய ஒரே வழி, விவசாயிகள் நேரடியாக தங்கள் உற்பத்தியை நுகர்வோருக்கு விற்பது தான். இந்த முறை மேற்கத்திய நாடுகளில் Local Farmer’s market என்று கூற பட்டு புகழ் பெற ஆரம்பித்து உள்ளது. இங்கும் இந்த முறை வந்தால் நல்லது. அது வரை, மேலும் படிக்க..

நெல் பயிரில் இலை சுருட்டு நோய் காப்பது எப்படி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாகுபடி செய்துள்ள நெல் பயிரில், இலை சுருட்டு புழு தாக்குதல் அதிகம் உள்ளதால், நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் நோய் தாக்கிய இலைகளின் இரு பகுதிகளையும் சுருட்டி மெல்லிய நூலிழையினால் பிணைத்துகொள்ளும். புழு இலையினுள்ளே இருந்து பச்சையத்தை சுரண்டி திண்ணும். நோய் தாக்கப்பட்ட பயிர்கள், வெண்மை நிறமாக மாறி பயிற் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. இலை சுருட்டு புழுக்களின் தாக்குதல் அதிகமாகும் போது கதிர்கள் வளராது. நோய் தாக்குதல் மற்றும் கட்டுப்பாடு மேலும் படிக்க..

உளுந்துக்கு உதவும் டி.ஏ.பி. கரைசல்

உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெற டி.ஏ.பி. கரைசல் தெளிக்கலாம்.உளுந்துப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு தற்போது 30-40 நாள்கள் பயிராக உள்ளது. டி.ஏ.பி. கரைசல் தெளிக்க இதுவே ஏற்ற தருணம். உளுந்துப் பயிரை நன்செய் தரிசில் சாகுபடி செய்வதால் அடி உரமிட வாய்ப்பில்லை. அதிக மகசூல் பெற இலைவழி உரம் அளித்தல் மிகவும் அவசியம்.  செடிகள் பூக்க ஆரம்பிக்கும்போது 2 சதவிகிதம் டி.ஏ.பி. கரைசல் தயார் செய்ய ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை மேலும் படிக்க..

மானாவாரியில் கொத்துமல்லி சாகுபடி

மல்லியை கீரைக்காக மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் தாண்டினாலோ, மிக அதிக மழை பெய்தாலோ செடியின் வளர்ச்சி குன்றும்.  விதைப்பு: நிலத்தை இரண்டுக்கும் மேற்பட்ட முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிருக்கு பாத்திகள் அமைத்தும், மானாவாரிப் பயிரை விதை விதைப்பான் மூலமும் வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 15 மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டிகள்

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும், பூச்சிகள் முழுமையாகக் மேலும் படிக்க..

ஐயோ பாவம் ராடன் டாடா

ஒரு வங்கியில் நீங்கள் போய் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு பாருங்கள்.. என்ன மரியாதை கிடைக்கும் என்று.ஆயிரத்தெட்டு  கேள்விகள் கேட்பார்கள், உத்திரவாதம் கொடுப்பவர் யார் என்று. 15% சதவீதம் குறைந்து கடன் கிடைக்காது. ஆனால், குஜராத்தின் நரேந்திர மோடி, டாடா கம்பனி குஜராத்தில் நானோ கார் தொழிற்சாலை ஆரம்பிக்க என்ன கொடுத்து இருக்கிறார் தெரியுமா? 9600 கோடி ரூபாய், 0.1% வட்டியில் ,  20 வருடம் கடன்! பாவம்  டாடாவிற்கு பணமே இல்லை இல்லையா! அதனால் தான், மக்களுடைய மேலும் படிக்க..

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யா பயன்படுத்த அறிவுரை

பயிர்களின் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பஞ்சகவ்யம் பயன்படுத்த வேண்டும்’ என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. உழவர் வயல்வெளி பள்ளி பாடத்திட்ட பயிற்சி துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நூற்பாலைகளுக்கு, 70 லட்சம் பேல்கள் பருத்தி தேவைப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த பருத்தியின் உற்பத்தி, 50 லட்சம் பேல்கள். தமிழகத்தில், பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகமும், தமிழ்நாடு வேளாண்மைத் துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து, விவசாயிகளுக்கு குளிர்கால இறவை பருத்தி பயிரிட, மேலும் படிக்க..

விதை நேர்த்தி செய்தால் விளைச்சலை அதிகரிக்கலாம்

சம்பா பருவத்தில் நெல் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைத்தால், அதிக விளைச்சல் பெறலாம் என மோகனூர் வேளாண் உதவி இயக்குநர் தங்கராஜூ தெரிவித்துள்ளார். நாற்று நடுவதற்கு முன், ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பூஞ்சாண கொல்லியை கலந்து, விதை நேர்த்தி செய்வதால், விதை மூலம் பரவக்கூடிய நோய்களான குலை நோய், இலைக் கருகல் ஆகியவற்றை தடுக்கலாம். ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதையுடன், 400 கிராம் அசோஸ்பைரில்லம் (நெல்), பாஸ்போ மேலும் படிக்க..

திருந்திய நெல் சாகுபடி முறைகள்

நெல் மகசூல் அதிகரிக்க, திருந்திய நெல் சாகுபடி முறையே சிறந்தது என்று தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கா.ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியது: உற்பத்தித் திறனை உயர்த்த திருந்திய நெல் சாகுபடி முறையே சிறந்த வழி.குறைந்த விதை, இளம் நாற்றுகள் நடவு செய்தல், அதிக இடைவெளியில் சதுர முறையில் நடவு, களைக் கருவி பயன்பாடு, நீர்மறைய நீர்ப் பாய்ச்சுதல் ஆகியவை இம்முறையின் சிறப்பு அம்சங்கள். நாற்றங்கால் பராமரிப்பு: சாதாரண முறையில் ஒரு ஏக்கர் நெல் நடவு மேலும் படிக்க..

அளவுக்கு அதிகமாக உரங்களை பயன் படுத்தியதால் சீனாவில் பிரச்னை

நம்மை போலவே சீனாவிலும் அதிகமான மக்கள் தொகை. அந்த அரசாங்கமும் மக்களுக்கு உணவு பிரச்சனை வராமல் இருக்க அதிக மகசூல் பெற வேண்டும் என்று விவசாயிகளை கட்டாய படுத்தினர். அதிகம் Nitrogen உள்ள உரங்களை அதிகம் பயன் படுத்த கட்டாய படுத்த பட்டனர். 1980 முதல் 2010 வரை மண்ணின் தன்மை இந்த அதிக உர பயன் பாட்டால் மிகவும் கெட்டு போய் விட்டது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. அமிலத்தன்மை அளவிடும் pH factor என்பது மேலும் படிக்க..

போலி பூச்சி மருந்து அக்கிரமம்

 நாட்டில் விற்பனை ஆகும் பூச்சி மருந்துகளில் நான்கில் ஒன்று போலியாம். இதை தவிர, காலாவதி ஆன பூச்சி மருந்துகள், தவறான மருந்துகள் என்று வேறே.. இதை பற்றி தினமலரில் வந்த செய்தி: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டில் போலி பூச்சி மருந்துகள் விற்பனை 2,000 கோடி ரூபாயை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டில், பூச்சி மருந்துகளுக்கான சந்தை மதிப்பு, 8,000 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இதில், போலி பூச்சி மருந்துகளின் மதிப்பு 2,000 கோடி ரூபாய் மேலும் படிக்க..

கோடைக்கு ஏற்ற துவரை சாகுபடி

கோடைப் பருவத்தில் துவரை சாகுபடி செய்து அதிக பலன் பெறலாம் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர். இப்பயிர் அதிக அளவில் மானாவாரி பயிராக பயிரிடப்படுவதால், இவ்வட்டாரத்தில் கோடை மழையை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று வருகின்றனர். ஏற்ற ரகம்: எல்ஆர்ஜி41, விபிஎன்2, விபிஎன்3, பிஆர்ஜி1 ஆகிய ரகங்கள் கோடை சாகுபடிக்கு ஏற்றவை. இந்த ரகங்களில் ஏதாவது ஒன்றை ஹெக்டேருக்கு 10 கிலோ அளவில் தனிப் பயிராக பயிரிடலாம். விதைக்கும் முறை: விதைக்கும் முன் 1 கிலோ மேலும் படிக்க..

மரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள்

மரவள்ளி இறவை சாகுபடியில் ஹெக்டேருக்கு 10 முதல் 11 டன் வரை மகசூல் கிடைக்கும்.மரவள்ளியில் சொட்டு நீர்பாசன முறையில் அதிக மகசூல் கிடைக்கும்.தற்போது 2 அல்லது மூன்றாம் பருவத்தில் பயிரில் தேமல் நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. தேமல் நோய் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும் நோய் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு வெள்ளை ஈக்கள் நோயை பரப்புகின்றன. ஈக்கள் இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் மஞ்சள் நிறம் அடைந்து வெள்ளை நிறமாக மாறிவிடுகிறது.  மகசூல் பாதிக்கும் மேலும் படிக்க..

கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்

கரும்பில் இடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்த 120 நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைக்கோரிராமா, ஒட்டுண்ணி முட்டை அட்டை கட்ட வேண்டும்  இப்புழு கணுக்களை பாதிப்பதால், கணுக்களின் இடைவெளி குறைந்துவிடும். கணுக்களின் உட்புறம் திசுக்கள் சிவந்து விடும். கணுக்களின் அருகே புழுக்களின் துளைகள் இருக்கும். அவை முழுமையாக பாதிக்கப்பட்டு மேலே சத்துகள் செல்லாததால், கரும்பின் வளர்ச்சி குன்றி, குருத்து இலைகள் காய்ந்துவிடும். அதனால் கரும்பின் எடை, மேலும் படிக்க..

நெற் பயிரில் படைப்புழு தாக்குதல்கட்டுப்படுத்தும் முறைகள்

நெற் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் ஐரிஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார். படைப்புழுவின் தாக்குதல் தீவிரமாகும் பட்சத்தில் பெரிய அளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். படைப்புழுவானத நெற் பயிர் தூர் கட்டும் பருவத்தில் தாக்கும் போது இலை யூனிகளியோ அல்லது இலையின் ஓரத்தையோ வெட்டி உணவாக உடற்கொள்கிறது. பெரும்பாலும் நடு நரம்பு தவிர பிற இலைப்பகுதி முழுவதையும் உண்டுவிடும். சில நேரத்தில் மேலும் படிக்க..

ஊசி போட்டு பயிர் வளர்க்கலாம்!

நோய் பாதித்தவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாய் வழியாகக் கொடுப்பதற்கும், ஊசி வழியாக அளிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.ஊசி வழியாக மருந்து கொடுத்தால் விரைவாக நரம்பு மண்டலத்தை அடைந்து நிவாரணம் உடனடியாகக் கிடைக்கும். இப்படி உரத்தைத் தாவரங்களுக்கு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான கருவியை உருவாக்கியுள்ளார் புதுச்சேரி செல்லஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி ஆர்.வெங்கடகிருஷ்ணன் (49). டிஏபி உள்ளிட்ட உரங்களை மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு ஸ்பிரே செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகள் அப்படி செய்யாமல் அந்த மேலும் படிக்க..

மஞ்சள் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம்

மஞ்சள் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து தர்மபுரி வேளாண் துணை இயக்குனர் (பொ) நாகராஜன் அறிவுரை வழங்கியுளார். மஞ்சள் நல்ல வருவாய் தரக்கூடிய பணப்பயிராகும் என்பதால் மஞ்சள் அறுவடைக்குப் பின் வேளாண் தொழில் நுட்ப நேர்த்திகளை கடைபிடிக்க வேண்டும். மஞ்சள் சுமார் ஒன்பது முதல் 10 மாதங்களில் அறுவடைக்கு வரும் பயிர். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, காய்ந்து விழும்போது பயிர் முதிர்ச்சியை தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் பயிரின் தண்டை 10 நாட்களுக்கு மேலும் படிக்க..

உழவர் சந்தை விலை நிலவரத்தை மொபைல் போனில் பெறுவது எப்படி?

தமிழ்நாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தின விலை நிலைமை இப்போது உங்கள் மொபைல் போனில் குறுஞ்செய்தியாக (SMS) வரும் வசதி கிடைத்துள்ளது. இதன் மூலம் உங்களுக்கு ஆர்வம் உள்ள காய்கறி அல்லது தானியங்களின் பெயரை இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால், தினமும் குறுஞ்செய்தியாக வரும். இந்த இணைய தளம் தமிழில் அமைக்க பட்டுள்ளது. நான் இந்த தளத்தில் தக்காளி விலை கேட்டு பதிவு செய்து கொண்டேன். தினமும் மாலை நேரத்தில் வருகிறது. இந்த தளத்தை உருவாகிய மேலும் படிக்க..

சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி

கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை சுற்றுவட்டார பகுதியில், சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மகாராஜகடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள், நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை சாகுபடி செய்துள்ளனர். ஒரு விதை எட்டு ரூபாய்க்கு வாங்கும் விவசாயிகள் ஒரு ஏக்கரில் ஆயிரம் செடிகளை நட்டு வைத்து வளர்க்கின்றனர். 6 மாதத்திற்கு பின், அறுவடைக்கு வரும் பப்பாளி காய்களை மொத்த வியாபாரிகள் மேலும் படிக்க..

மஞ்சள் பயிரில் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிகள்

மஞ்சள் நடவு செய்த, 30, 60, 90, 120 மற்றும் 150 நாட்களில் ஒவ்வொரு முறையும் தழைச்சத்து, 25 கிலோ தரக்கூடிய, 55 கிலோ யூரியாவை, ஒரு ஏக்கருக்கு மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம், 5 கிலோ மற்றும் பாஸ்போ பாக்டீரியா, 5 கிலோ நடவு செய்த ஒரு மாத்துக்கு பின் இடவேண்டும். நுண்ணூட்டங்களால் ஏற்படும் பற்றாக்குறையை போக்க, சூப்பர் பாஸ்பேட் 6 கிலோவை பத்து லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு மேலும் படிக்க..

சாம்பல் பூசணி சாகுபடி டிப்ஸ்

பருவம்: கொடிவகை காய்கறிப் பயிர்களுக்கு சிறந்த பருவம் ஆடி மற்றும் தைப்பட்டங்களே என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.அப்பருவங்களே சாம்பல் பூசணி விதை உற்பத்திக்கும் ஏற்ற பருவம்.அதாவது ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களாகும். விதைப்புக்கு தேர்ந்தெடுக்கும் விதைகள் வல்லுனர் விதைகள் அல்லது ஆதார நிலை விதைகளாக இருப்பது மிக முக்கியம். ஒரு ஏக்கருக்கு தேவையான 400 கிராம் விதைகளை “கேப்டான்’ அல்லது “பெவிஸ்டின்’ பூஞ்சாணக்கொல்லி மருந்துகொண்டு விதைநேர்த்தி செய்து கொள்ளவும். பின் குழிகளில் குழி ஒன்றுக்கு ஐந்து மேலும் படிக்க..

விவசாயிகளின் கடன் நிலைமையும் இயற்கை விவசாயமும்

இந்தியாவிலேயே தமிழக விவசாயிகள்  இரண்டாவது இடத்தில கடனாளிகளாக இருப்பதாக 12 கோடி சொத்து மதிப்பு அறிவித்துள்ள விவசாய மந்திரி சரத் பவர் கூறியுள்ளார். இப்படி விவசாயிகளை கடனாளிகளாக ஆகியது எது? இதற்கான முதல் காரணம், ஈடு பொருள்களின் விலை உயர்வே. ரசாயன உரங்கள், ரசாயன பூச்சி கொல்லிகள் எல்லாம் கச்சா எண்ணை இருந்து தயாரிக்க படுகின்றன. எப்போதெல்லாம் இதன் விலை ஏறுகிறதோ, ரசாயன உரங்களின் விலையும் ஏறுகிறது. பொடஷ் போன்ற கச்சா பொருட்கள் கிடைப்பதும் அரிதாக ஆகி மேலும் படிக்க..

விவசாயிகள் கடன் சுமை: தமிழகம் இரண்டாம் இடம்

புதுதில்லி, செப்.4 , 2011: நாட்டில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான விவசாயிகள் கடன் சுமையால் அவதிப்படுவதாக அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தமிழகத்தில் 74.5 சதவிகித விவசாயிகள் கடன் பளுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கடன் பிரச்னை குறித்து மத்திய அரசின் என்.எஸ்.எஸ்.ஓ NSSO எனப்படும் தேசிய கணக்கெடுப்பு நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இத்தகவல்களை மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறியது: மொத்தமுள்ள 8.93 கோடி விவசாயிகளில், 4.34 கோடி மேலும் படிக்க..

மரபணு மாற்றம் – இந்தியாவை மலடாக்கும் சதி

மரபணு மாற்றம் பற்றிய மசோதா (Biotechnology Regulatory Authority of India – BRAI bill) எந்த நேரத்திலும் மக்களவையில் வர இருக்கும் நேரம் இது. மன்மோகன் சிங்க் UPA அரசாங்கம் நம் நாடியே தாரை வாற்று கொடுத்து விட்டு தான் ஒழியும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இந்த மசோதாவை பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம். இதோ, தினமணியில் வந்துள்ள ஒரு கட்டுரை. மரபணு மாற்றம் – இந்தியாவை மலடாக்கும் சதி வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்த மேலும் படிக்க..

கேழ்வரகு ரகங்களும் சிறப்பியல்புகளும்

கேழ்வரகு ரகங்களும் சிறப்பியல்புகளும் கோ.9 வயது 100 நாட்கள். தானிய மகசூல் 4500 கிலோ/எக்டர். தட்டை விளைச்சல் 7000கிலோ/எக்டர். தானியம் வெள்ளை, மதிப்பூட்டம் பெறுவதற்கு ஏற்றது. மாவாகும் தன்மை அதிகம். அதிக புரதச்சத்து கொண்டது. கோ.13 வயது 105 நாட்கள். மகசூல் 3500 கிலோ/எக்டர். தட்டை விளைச்சல்.10,000 கிலோ/எக்டர். வறட்சியைத் தாங்க வல்லது. மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றது. கோ (ரா) 14 வயது 105-110 நாட்கள். மகசூல் 2774 கிலோ/எக்டர். தட்டை – 8428 கிலோ/எக்டர். மேலும் படிக்க..

மஞ்சள் பயிருக்கு மேலுரம்

மண்ணில் இலைகள், வெளிர் பச்சை, இளம் மஞ்சள் நிறத்துடன் காணபட்டால், போதிய அளவு சத்துக்கள் இல்லாமல், பற்றாக்குறையாக உள்ளதே காரணமாகும்.எனவே மஞ்சள் பயிருக்கு மேலுரம் இட வேண்டியது அவசியமாகும். மஞ்சள் பயிருக்கு நடவு செய்த ஒரு மாதத்தில் இருந்து ஐந்து மாதம் வரை ஒவ்வொறு மாத இடைவெளியிலும் மேலுரம் இட சிபாரிசு செய்யப்படுகிறது. மூன்று மாத பயிராக உள்ள மஞ்சள் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா உரத்துடன் 15 கிலோ பெட்டாஷ் உரத்தினை நன்கு கலந்து மேலும் படிக்க..

கரும்பில் குருத்தழுகல் நோய் தாக்குதல் தடுக்க வழிகள்

“கரும்பில் குருத்தழுகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, தடுப்பு முறைகளை கையாள வேண்டும்’ என, நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார். கரும்புப் பயிரை, 20 வகையான நோய்கள் தாக்கி விளைச்சளுக்கும், சர்க்கரைச் சத்துக்கும் சேதம் விளைவிக்கின்றது. அதில், முக்கியமான நோய் குருத்தழுகல் நோய். இது, மூன்று முதல் ஏழு மாத கரும்பில், அதிக அளவில் தோன்றுகிறது. நோயின் அறிகுறிகள் மஞ்சள் தேமல் நிலை, நுனி அழுகல் நிலை, கத்தி வெட்டு நிலை மேலும் படிக்க..

குறுவைப் பயிருக்கு உரமிடும் முறை

குறுவை நெல் பயிருக்கு உரமிடுவது குறித்து வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகணன் விளக்கமளித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 38,870 ஹெக்டேரில் குறுவை நெல் பயிரிடப்ப்டடு, தற்போது பயிர் தூர்கட்டும் பருவத்தில் மேலுரம் இடும் தருவாயில் உள்ளது. மேலும், இதுவரையில் 3,353 ஹெக்டேரில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். குறுவைப் பருவத்துக்கு மேலுரம் இடும் போது முதல் மேலுரம் நடவு செய்த 15-ம் நாள் 28 கிலோ யூரியா இட வேண்டும். 2-வது மேலும் படிக்க..

கத்தரிக்காய் சாகுபடியில் ஹெக்டேருக்கு 70 டன் மகசூல்

கத்தரியை பயிரிட்டு நன்கு பராமரித்தால் 150-160 நாள்கள் வரை ஹெக்டேருக்கு 70 டன் வரை மகசூல் பெறலாம் என்று சிவகங்கை தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். கத்தரி ரகங்கள் ரவையா, அர்கா நவநீத், பூசா அன்மமால், கோ.பி.எச் 1, அஸ்பாரா, என்.எஸ்.1720, சாயா, நவ்கிரான் சப்பால், சியாமல், விஜய் ஆங்கூர் ஆகிய ரகங்கள் பயிரிட ஏற்றவையாகும். பயிரிடும் முறை கத்தரி பயிரிட மே-ஜூன், அக்டோபர்-நவம்பர், ஜனவரி-பிப்ரவரி ஆகிய பருவங்கள் சிறந்தவை. ஒரு ஹெக்டேர் அளவில் பயிரிட 100 கிராம் மேலும் படிக்க..

கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை

கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான வழிமுறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். அறிகுறிகள்: இளம் பயிர்களில் புதிதாகத் தோன்றும் இலைகள் பற்றாக்குறை அறிகுறிகளைக் காட்டும் நரம்புப் பகுதிகள் கோடுபோல் இளம் பச்சை நிறத்திலும் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் நீண்ட பட்டைகளாக இலையின் அடி முதல் நுனி வரை பொன்நிற மஞ்சளாகத் தெரியும். பற்றாக்குறை அதிகமானால் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகிவிடும் .பச்சையம் குறைந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதால் பயிர் மேலும் படிக்க..