கத்திரி ஒரு பிரச்னையான பயிர் – நன்கு சொத்தை இல்லாமல் விளைவித்தால் நல்ல இலாபம் உண்டு. கத்திரியை பூச்சி தாக்குவது போல் வேறு எந்த பயிரையும் தாக்குவதில்லை. இதனைக் கட்டுப்படுத்த சூரியகாந்தி, உளுந்து, காராமணி, பாசிப்பயிர் ஊடுபயிராகச் செய்யலாம். 5 வரிசை கத்திரிக்கு இவற்றுள் ஒன்றை ஒரு வரிசையாக நடவேண்டும். பூச்சி தாக்குதல் குறையும்.பூச்சி மருந்து அடிப்பதும் குறையும் நன்றி: தினமலர்
Author: gttaagri
நெல்லி சாகுபடியில் நிலப்போர்வை
மானாவாரி பெருநெல்லி சாகுபடி முறையில் பழமரப்பயிரின் தண்டுப்பகுதியை நோண்டு அமைக்கப்பட்ட 5 சதம் சரிவுடன் கூடிய வட்டக் குழிகளில் 500 காஜ் தடிமனுடைய கருப்புநிற பாலிதீன் விரிப்புகளை நிலப்போர்வையாக அமைக்கும் பொழுது 32.2 சதம் கூடுதலாக மகசூல் கிடைத்துள்ளது. வறட்சியைத் தாங்கும் பயிர் வினையியல் காரணிகளான இலைநீரின் அளவு, பச்சையம் தாங்கும் திறன், புரோலின் புரதம் நைட்ரேட் ரிடக்டேஸ் நொதிகளின் செயல்பாடு ஆகியவை மூலம் அதிகரித்து காணப்பட்டது. பாலிதீன் விரிப்பின் விலை ரூ.160. மகசூல் – நிலப்போர்வை மேலும் படிக்க..
பாசனத்திற்கு உப்பு நீர்?
களரிப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் உதவிப் பேராசிரியர் வேல்முருகன் தெரிவிக்கும் நுட்பங்கள்: குறிப்பாக ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வரும் உப்புநீரை பாசனத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்று கேள்வி. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மழைநீரைச் சேகரிக்க பண்ணைக்குட்டை அல்லது மழைநீர் சேகரிப்பு, தொட்டிகள் அமைக்கலாம் என்கிறார் பேராசிரியர் வேல்முருகன். அதாவது ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 3 அடி நீளம் 2 1/2 அடி அகலம், 4 அடி ஆழத்துக்கு குழி எடுத்து அதில் 3 அடி உயரத்துக்கு ஜல்லி, ஜல்லிகற்களை மேலும் படிக்க..
சம்பா நெல்சாகுபடிக்கு மேலுரம்
சம்பா நெல் சாகுபடிக்கு மேலுரம் இடுவதற்கு இதுவே தகுந்த தருணம் என அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குனர் பொன்னையா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி மேட்டூர் பாசன பகுதிகளில் தற்பொழுது நல்ல மழை பெய்து வருகிறது. இதுவே முதல் மேலுரம் இடுவதற்கு தக்க தருணம் ஆகும். நெல் வளர்ச்சி பருவத்தில் தூர் கட்டும் நேரத்தில் தூர்கள் அதிகளவில் வெடிக்கவும் வேரின் வளர்ச்சி அதிகமாகவும் தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில போதுமான அளவு நெல் மேலும் படிக்க..
வேளாண் துறையில் மத்திய பிரதேசம் சாதனை
குஜராத் மாநிலத்தில் 2001 முதல் 2011 வரை 10.97% சதவீதம் ஒவ்வொரு வருடமும் விவசாயம் அதிகரித்து உள்ளது என்பதை படித்தோம். இப்போது மதிய பிரதேசமும் விவசாயத்தில் முன்னேறி வருகிறது. எல்லா அரசியல் வாதிகளும் தொழில்சாலைகள், IT வேலை வாய்ப்பு என்று பேசும் இந்நாளில் இது ஒரு நல்ல செய்திதான்.. இதோ அதை பற்றி ஹிந்துவில் வந்த ஒரு செய்தி பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம், இது வரை இல்லாத வகையில் வேளாண் துறையில் மேலும் படிக்க..
சிறையில் இயற்கை விவசாயம்
செழுமையான செம்மண் பூமி. சிவந்த பழங்களுடன் தக்காளித் தோட்டம், பருத்த கிழங்குகளுடன் அறுவடைக்குத் தயாராகப் பீட்ரூட், பளிச் என வெள்ளை நிறத்தில் சிரிக்கும் முள்ளங்கிகள். நெல் வயல்கள், செங்கரும்பு, மக்காச் சோளம், அவரை, கொத்தவரை, பீன்ஸ், கத்தரி, மிளகாய் என ஒவ்வொரு காய்கறி, தானிய வகைக்கும் தனித்தனித் தோட்டங்கள். இன்னும் நெல்லி மரங்கள், கறிவேப்பிலை மரங்கள், குட்டை ரகத் தென்னைகள் என 35 ஏக்கர் பரப்பளவில் பசுமைப் போர்வை போலப் படர்ந்திருக்கும் விதவிதமான தோட்டங்கள். அத்துடன் இரண்டு மேலும் படிக்க..
சிறு தானியங்கள் சாகுபடி அதிகரிக்க முயற்சி
இட்லி, தோசை, அரிசி சாதம்… என அரிசி உணவை மட்டுமே உண்பதால், மக்களிடம் நிலவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க சோளம், கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க, தேசிய சிறு தானிய இயக்கத்தின் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் பல விவசாயிகள் சிறு, குறு தானியப் பயிர்களை ஆர்வமுடன் பயிரிட்டுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேலும் படிக்க..
பாரம்பரிய நெல் நடவுத் திருவிழா
பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கும் நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கவும், அந்த நெல் விதைகளை விவசாயிகள் மத்தியில் பரவலாக்கவும் கிரியேட், தணல் போன்ற தன்னார்வ அமைப்புகள் ஏராளமான களப் பணிகளை செய்து வருகின்றன. குறிப்பாக இந்த அமைப்புகளால் தொடங்கப்பட்டுள்ள பாரம்பரிய நெல் விதை வங்கி மிகவும் சிறப்புக்குரியது. 60 நாட்கள் முதல் 180 நாட்கள் உடைய அரிய பாரம்பரிய 150-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இந்த அமைப்புகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் திருத்துறைப் பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் மேலும் படிக்க..
தென்னையில் உர மேலாண்மை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், உர மேலாண்மையை செயல்படுத்தி, அதிக மகசூல் பெறலாம்’ என்று, உழவர் பயிற்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: உரமும், நீரும் தென்னைக்கு தலையாய தேவைகளாகும். நீர் தேவையை பொறுத்தவரை, நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு, ஒரு நாளைக்கு, 100 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. பல இடங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், நீர் மேலாண்மை பின்பற்ற முடியாத நிலை உள்ளது. மேலும், தென்னை மரங்களுக்கு, சரியான அளவில், சரியான மேலும் படிக்க..
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல்
வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலானது பெங்களூரு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியில் உருவான தொழில்நுட்பமாகும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தயாரிக்கப்படுகிறது. பயன்கள் : நுண்ணூட்ட குறைபாடு உடனே நிவர்த்தியாகிறது. உரத்தின் பயன்பாடு குறைகிறது. பயிரின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. நல்ல தரமான பெரிய வாழை குலை கிடைக்கிறது. வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் உபயோகிக்கும் முறை: வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் 50 கிராம், ஒரு ஷாம்பு மேலும் படிக்க..
பெல்லாரி வெங்காயத்தில் அதிக விளைச்சல் பெற..
தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெல்லாரி வெங்காயம் சாகுபடியாகிறது. விதைக்கு ஏற்ற சரியான பருவம் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நாற்று விட்டுப் பயிர் செய்தால் சிறப்பாக இருக்கும். ஏற்ற இரகங்கள் அக்ரி பவுண்டு, கருஞ்சிவப்பு, அல்கா கல்யாண். மார்ச் – ஏப்ரல் நாற்று விடும்போது நாற்றங்காலில் நோய் தாக்கும். நாற்று அழுகல் நுனிக்கருகல் நோய்கள் போன்றவை. தண்ணீர் தேங்காத நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். 20 செ.மீ உயரத்தில் மேலும் படிக்க..
கீரையில் மாதம் ரூ.45 ஆயிரம்
முன்னோர்களிடம் கீரையை உணவில் அதிகம் சேர்க்கும் பழக்கம் இருந்தது. இதற்காக, வீட்டு தோட்டங்களிலேயே முருங்கை, அகத்தி, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளை பயிரிட்டனர். காலப்போக்கில், வீட்டு தோட்டங்கள் மறைந்து, உணவில் கீரை சேர்க்கும் பழக்கம் குறைந்தது. இதனால் உடலில் பாதிப்பு அதிகரித்தது. டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்றைக்கு “வாக்கிங்’ செல்வோர், வீட்டிற்கு திரும்பும் போது, “கீரை கட்டுகளை’ வாங்கிச் செல்கின்றனர்.அதற்கேற்றார் போல், சிவகங்கை அருகே மேலசாலூரை சேர்ந்த விவசாயி பி.போஸ், தனது நிலத்தில் முற்றிலும் கீரை பயரிட்டு, லாபம் மேலும் படிக்க..
வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு
வேப்பமரத்தில் இருந்து பல விதமான இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரிக்கலாம். வேப்பவிதைக் கரைசல்: இந்தக் கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு 3 முதல் 5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம் பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை என்றால் 5 கிலோவும் தேவை) வேப்பம் பருப்பைப் பொடியாக்க வேண்டும். இதை காடாத்துணியில் மூட்டையாக கட்டி சுமார் 10 மேலும் படிக்க..
கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி
மழை காலங்களில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய்தடுப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது. இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கறவைமாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய் தடுப்பு குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 2014 அக்டோபர் 14ம் தேதி, காலை, 9 மேலும் படிக்க..
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்
“நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் – மோகனூர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 2014 அக்டோபர் 16ம் தேதி, 9 மணிக்கு நடக்கிறது. இதில், பண்ணையாளர்கள் மேலும் படிக்க..
கவாத்து செய்த பழமரங்களில் போட்டோ பசை பூசுதல்
பழ மரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கவாத்து செய்வது முக்கியம். கவாத்து செய்த மரங்களை போட்டோ மிக்சர் என்ற பூசனக்கொல்லி மருந்தை பசைபோல் தயாரித்து கவாத்து செய்த இடங்களில் பூசுவதால் நோய் கிருமிகள் தாக்காமல் பழமரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. 10 சதவீத போட்டோ பசை தயாரிக்க 1 கிலோ காப்பர் சல்பேட் பவுடருடன் 1 கிலோ சுண்ணாம்பு பவுடரை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து கட்டியான பசைபோல் தயாரிக்க வேண்டும். இப்பசையைக் கவாத்து செய்தவுடன் காயம்பட்ட இடங்களில் பூச மேலும் படிக்க..
விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – II
மோனோக்ரோடோபோஸ் (Monochtorophos) என படும் ஒரு பூச்சி கொல்லி இந்தியாவில் அதிகமாக பயன் படுத்த படும் ஒரு பூச்சி கொல்லி. இது Organophosphates என படும் வகையை சார்ந்தது. விலை குறைவாக இது கிடைப்பதாலும் பல கம்பனிகள் உற்பத்தி செய்வதாலும் அதிகம் பயன் படுத்த படுகிறது ஆனால் இந்த பூச்சி மருந்து அதிக சக்தி வாய்ந்தது. ஒரு தடவை பயன் படுத்தினாலும் மிக அதிக நாட்கள் நிலத்திலும் நீரிலும் அப்படியே இருக்கும் திறன் கொண்டது (persistant organic மேலும் படிக்க..
விவசாயிகள் தற்கொலை காரணங்கள் – I
மகாராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி படித்து உள்ளோம் மழை பார்த்த வேளாண்மை, அதிகம் இடுபொருட்கள் தேவையால் செலவு அதிகமாக்கும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி சாகுபடி, எளிதாக கிடைக்காத கடன் போன்றவை காரணங்களாக சொல்ல படுகின்றன ஆனால் விவசாயிகள் தற்கொலை என்பது இந்தியாவில் மட்டும் இல்லை என்பது தான் நம்ப முடியாத உண்மை! பிரான்ஸ் நாட்டில் 2 நாட்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறாராம்! உலகத்திலேயே பணக்கார நாடான அமெரிக்காவில் கூட மேலும் படிக்க..
தென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி
தென்னையை தாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஈரியோபைட் சிலந்தி 7 முதல் 9 நாட்களை வாழ்க்கை சரிதமாக கொண்டவை. 4 கால்களை கொண்ட ஊசி போன்ற வாய் அமைப்பு உள்ளவை. பெண் சிலந்தி 30 முதல் 50 முட்டைகள் வரை இடும். இச்சிலந்தி இளங்குரும்பைகளின் தொட்டுகளுக்கு அடியில் இருந்து கொண்டு குரும்பையின் மென்மை யான திசுக்களில் இருந்து சாற்றை உறிஞ்சி குடித்து உயிர் வாழ்கிறது. பாதிக்கப்பட்ட மேலும் படிக்க..
காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த விவசாயிகள்
சாகுபடியில் காணாமல் போன விவசாயிகள் மறந்துவிட்ட பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட வறட்சியையும், நோய்த் தாக்குதலையும் தாக்குப்பிடிக்கக்கூடிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர். ஆயிரமாயிரம் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இயற்கையை அவற்றால் வெல்ல முடியாது என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ஒட்டு நெல் இரகங்களை உதாரணமாகக்கூறலாம். பெரும்பாலான ஒட்டு ரக நெல் வகைகள் நமது மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்றதாக இல்லை. “குறைந்த நாட்களில் அதிக மேலும் படிக்க..
மண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி
மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய ஒரு நாள் இலவசப் பயிற்சி, வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரை மேலூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் நடைபெற உள்ள இப்பயிற்சி குறித்து, வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் தி. ரங்கராஜ் மற்றும் உதவிப் பேராசிரியர் செல்வி ரமேஷ் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளதாவது: மக்கள் தொகைப் பெருக்கத்தால் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் புறங்களில் திடக் கழிவுகளின் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே மேலும் படிக்க..
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளில் ஒன்றான பட்டம் விட்டு நடவு செய்யும் முறையை அதாவது நெல் நாற்றுக்களை நடவு செய்யும்போது எட்டடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு நடவு செய்யும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புதுகை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஷாஜகான், குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் சாந்தி மற்றும் வேளாண் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பொது வாக நெற்பயிரில் மேலும் படிக்க..
திருந்திய நெல் சாகுபடி முறை
குறைவான தண்ணீ ரில், அதிக விளைச்சலை அள்ளும் நெல் சாகுபடி முறைகள் குறித்து கூறும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மண் மற்றும் நீர் ஆராய்ச்சி மைய தலைவர், முனைவர் வெ.ரவி: திருந்திய நெல் சாகுபடி முறை மூலமாக, குறைந்த அளவு நீர் மற்றும் குறைந்த அளவு நாற்றுகளைப் பயன்படுத்தி, அதிக அளவிலான மகசூல் பெறலாம். இந்த முறையில் ஒவ்வொரு நாற்றுக் கும், 25க்கு 25 செ.மீ., இடைவெளி இருக்கு மாறு, 15 நாட்கள் வளர்ச்சி அடைந்த நாற்றுகளை மேலும் படிக்க..
குறைந்த நீரில்அதிக விவசாயம்
காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் கொடுத்தால் தான் விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் எனக் கூறும், தமிழ்நாடு மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலைய நீர் மேலாண்மை வல்லுனர் முனைவர் பொற்பாவை: நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்குத் தகுந்த பயிர்களைத் தேர்வு செய்து, பயிர் செய்தால், நல்ல மகசூல் எடுக்க முடியும். உதாரணத்திற்கு, 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய தேவையான நீரை வைத்து, 3 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். இதுபோல கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப திட்டமிட்டு மேலும் படிக்க..
மக்காச்சோள விவசாயத்தில் மாநில சாதனை
வறட்சியிலும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, மக்காச்சோளம் சாகுபடியில் ஒரு எக்டேருக்கு 12 டன்கள் (120 மூட்டைகள்) வரை மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார் பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி எஸ்.ராமசாமி. மாநிலஅளவில் முதலிடம் பிடித்த இவருக்கு வேளாண்மைத்துறை மூலம் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தனது சாதனை குறித்து ராமசாமி கூறியதாவது: ஒரு எக்டேரில் சாகுபடி செய்வதற்கு உரம், வேலையாட்கள் கூலி, நீர் பாசனத்திற்காக ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்தேன். பொதுவாக ஒரு எக்டேருக்கு 8 மேலும் படிக்க..
செடிமுருங்கை சாகுபடி பயிற்சி
” செடிமுருங்கை சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், (கே.வி.கே.,) வரும், 2014 அக்டோபர் 9ம் தேதி நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், பருவமற்ற காலங்களில், செடி முருங்கை சாகுபடி செய்தல், ரகங்கள், நாற்று உற்பத்தி, சொட்டுநீர் பாசன மேலாண்மை, வளரியல்பு, பயிர் இடைவெளி, வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், களை நிர்வாகம், மேலும் படிக்க..
சிறுதானிய பயிர் சாகுபடி பயிற்சி
“மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், (கே.வி.கே.,) வரும், 2014 அக்டோபர் 7ம் தேதி நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்தல், வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், களை நிர்வாகம், மண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கும் தொழில்நுட்பம், ஊட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி மேலும் படிக்க..
மசானபு ஃபுகோகா
மசானபு ஃபுகோகா (Masanobu Fukuoka (1913-2008)) 1978-ம் ஆண்டு எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ (Single Straw Revolution) புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது, அவருடைய இயற்கை வேளாண் முறை தொடர்பாக உலகம் முழுவதும் கவனம் திரும்பியது. ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தினரால் 1991-ம் ஆண்டே ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. வேறு எந்தச் சுற்றுச்சூழல் – விவசாயம் சார்ந்த நூல்களைவிடவும் அதிகப் பதிப்புகளை இந்நூல் கண்டுள்ளது. அந்த நூலுக்குப் பிரபல அமெரிக்க ஆங்கில எழுத்தாளரும் சுற்றுச்சூழல் மேலும் படிக்க..
மண்வளம் பெறுக பசுந்தாள் உரம்
மண்வளம் பெருகவும், அதிக மகசூல் பெற சுந்தாள் உர பயிர் சாகுபடி செய்யலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அதிக மகசூல் பெற வேண்டும் என்றால் இயற்கை உரங்களை மண்ணில் இட வேண்டும். இதில் முக்கிய பங்குவகிப்பது பசுந்தாள் உரங்கள் மற்றும் பசுந்தழை உரங்களாகும். நடப்பு சம்பா சாகுபடிக்கு ஒருசில இடங்களில் பரவலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நாற்றுகள் விடப்பட்டு 20 முதல் 30 நாள் வயதுடைய பயிர்களாக உள்ளன. நாற்று விடப்பட்ட மேலும் படிக்க..
சீரான விதை நடவிற்காக உருண்டை வடிவ விதைகள் அறிமுகம்
‘‘சீரான விதை நடவிற்காக நீலப்பச்சைப் பாசிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் ஊட்டம் பெற்ற உருண்டை வடிவ விதைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன,’’ என, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார்.இதுகுறித்து, மதுரை விவசாயக் கல்லுாரியில் அவர் மேலும் கூறியதாவது: நீலப்பச்சை பாசிகள், 25 ஆண்டுகளாக விவசாயத்திற்கு பயன்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அவற்றின் பயன்பாடு குறைந்துள்ளது. விதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், இயந்திர நடவு என்பது சிலநேரங்களில் சாத்தியமில்லாதது. அதே நேரத்தில் தரமான விதைகள் என சான்றளிக்கப்பட்டாலும், மேலும் படிக்க..
மோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும்
UPA அரசாங்கத்தில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் Knowledge Initiative on Agriculture என்று ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இந்த திட்டத்தில் மொன்சாண்டோ, வால்மார்ட் போன்ற மிக பெரிய நிறுவனங்கள் உறுப்பினர்கள். இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் இந்தியாவில் மரபணு மாற்ற பட்ட பயிர்களை கொண்டு வருவதே. RTI சட்டத்தின் மூலம் இந்த திட்டத்தின் செயல்பாடு பற்றி தெரிந்ததில் மேலும் கவலை ஏற்படுகிறது. RTI மூலம் தெரிந்த உண்மைகள்: – இந்த திட்டம் இந்தியாவின் 60% மக்கள் மேலும் படிக்க..
வேலிமசால் பசுந்தீவன சாகுபடி
தமிழகத்தில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 4 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இவற்றுக்குத் தேவையான பசுந்தீவனம் கிடைக்கிறதா? என்றால் இல்லை.இதனால், பால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே அண்மை காலமாக பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் துறை உதவிப் பேராசிரியர் பெ. முருகன் கூறியது: பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்க, அதிக மகசூல் தரும் தீவனப் பயிர்களை இறவையில் பயிரிட்டு ஒரு மேலும் படிக்க..
களைகொல்லி மருந்தும் மரபணு மாற்றபட்ட விதைகளும்
வயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை பிடுங்கி எடுப்பது பரம்பரை பரம்பரையாக வந்த முறை. அமெரிக்காவில், எல்லாம் இயந்திர மயமாகபட்ட விவசாயத்தில், இதற்கு ஒரு வழி தேடினார்கள். மொன்சாண்டோ Monsanto நிறுவனம் glyphosate (Roundup) என்ற ஒரு களை கொல்லி கண்டு பிடித்தார்கள். ஆனால் இந்த ரசாயன களை கொல்லி வயலில் தெளித்தால், வயலில் உள்ள சோளம், சோயா போன்ற செடிகளும் பாதிக்க படுமே? உடனே, சோளத்தில் உள்ள மரபணுவை மாற்றி களை கொல்லி மேலும் படிக்க..
நெல் பயிரைத் தாக்கும் சிலந்தியை ஒழிப்பது எப்படி?
நெல் பயிரைத் தாக்கும் சிலந்தி இனங்களை அழிப்பது தொடர்பான முறைகளைக் கையாண்டு, தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் விவசாயிகள் பார்த்துக் கொள்வது அவசியம். பொதுவாக, நெல் பயிரை ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் “ஒலிகொநிகஸ்ஒரைசி’ எனப்படும் ஒரு வகையான சிலந்தி இனங்கள் தாக்கும்.இதன் தாக்குதல் காரணமாக, நெல் பயிர் அதிக சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.இந்த வகையான சிலந்தி தாக்குதலில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம். நெல் பயிரைச் மேலும் படிக்க..
லாபம் தரும் மரவள்ளி கிழங்கு சாகுபடி
ஜவ்வரிசி, சேமியா, நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருள்களுக்கான மூலப் பொருளாக மரவள்ளிக் கிழங்கு திகழ்கிறது. மேலும், தொழிற் சாலைகளில் உற்பத்தியாகும் பல பொருள்களுக்கும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச்சு பவுடர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மாத்திரைகளின் மேல்புறத்தில் உள்ள வெண்மை நிற கோட்டிங் மரவள்ளிக் கிழங்கின் ஸ்டார்ச்சு பவுடரைக் கொண்டே தயாரிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் எம்.செந்தில்குமார் மேலும் படிக்க..
தென்னை மர வண்டுகளை ஒழிக்க வழிமுறை
தென்னை, பாக்கு மரங்களை அழிக்கும் வண்டுகளை ஒழிக்கும் வழி முறைகளை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தென்னை, பாக்கு மரங்களை சிவப்பு கூண் வண்டு, காண்டாமிருக வண்டு போன்றவை தாக்கி அழித்து வருகின்றன. இவற்றை இனக்கவர்ச்சிப் பொறிகள் உதவியால் எளிதில் அழிக்கலாம். `லூர்`எனப்படும் பொன்வண்டுகளின் உடலில் இருந்து வெளிவரும் ஒருவித ஹார்மோன் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு குப்பிகளில் தரப்படுகிறது. அதை வாங்கி இனக்கவர்ச்சிப் மேலும் படிக்க..
பருத்தியில் இலைவழி உரம்
பருத்தி செடி முளைத்து சுமார் 30 நாட்களான இளம் பருவத்திலும், காய் முதிர்ந்த நிலையிலும் செம்பட்டை எனப்படும் சிவப்பு இலைகள் தோன்றக்கூடும். இது மக்னீசியம் பற்றாக்குறையினால் ஏற்படுகிறது. வயலில் தண்ணீர் தேங்குவதாலும், மண்ணில் சாம்பல் சத்து அளவு அதிகரிக்கும் போதும் இக்குறைபாடு ஏற்படுகிறது. மேலும் இலைகளில் நரம்புகள் பசுமை நிறத்துடனும், நரம்புகளுக்கு இடையிலுள்ள பகுதிகள் செந்நிறமாகவும் காணப்படும். முற்றிய நிலையில் இலைக்காம்பு தண்டு சிவப்பாக காணப்படும். இதனால் பருத்தியின் வளர்ச்சி குன்றி விளைச்சலும் குறைகிறது. இதனை நீக்க மேலும் படிக்க..
மரவள்ளியில் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி
ராசிபுரம் பகுதியில் மரவள்ளியைத் தாக்கும் பப்பாளி மாவுப்பூச்சியை ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்தலாம் என ராசிபுரம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் வி.மோகன் விஜயகுமார் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி பயிர் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. ராசிபுரம் வட்டாரத்தில் சுமார் 750 ஏக்கர் பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் மரவள்ளியில் பப்பாளி மாவுப் பூச்சிகள் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பூச்சிகள் தாக்குதலுக்குள்ளான இலைகள் உருமாறி சிறுத்துக் காணப்படும். இந்தப் பூச்சிகள் மேலும் படிக்க..
கோமாரி நோயைக்கு மூலிகை மசால் உருண்டைகள்
கோமாரி நோய் உள்பட பல்வேறு நோய்களில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்க மூலிகை மசால் உருண்டைகளை வழங்கலாம் என்று கால்நடைகள் ஆராய்ச்சியாளரும், ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளைத் தலைவருமான கே.வி.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் புதன்கிழமை கூறியதாவது: கால்நடைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது மூலிகை மசால் உருண்டை. ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி, கோமாரி, தொண்டை மேலும் படிக்க..
கத்திரி, தக்காளி, மிளகாய் சாகுபடி பயிற்சி
“கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2014 செப்டம்பர் 23ம் தேதி நடக்கிறது’ என, அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், கத்திரி, தக்காளி, மிளகாய் ஆகியவற்றில் உள்ள வீரிய ஒட்டு ரகங்கள், குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி, இரட்டை வரிசை நடவு முறை, சொட்டு நீர்பாசனம் அமைத்தல், நீர்வழி உரமிடல், மேலும் படிக்க..
சம்பா நெல் சாகுபடியில் பூச்சி, நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த பயிற்சி
புதுக் கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் ஆலங்குடி அடுத்த வம்பனில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் மையத்தில் 2014 செப்டம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளதாக அதன் தலைவர் ஞானமலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை மற்றும் ஆலங்குடி வட்டாரங்களில் பரவலாக சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது. நெல்லில் மகசூல் மேலும் படிக்க..
ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் வழி
தமிழ்நாட்டில் ஏரிகளிலும் குட்டைகளிலும் அதிகமாக பரவி இருக்கும் தாவரம் ஆகாய தாமரை இந்த தாவரம் நம் நாட்டு தாவரமே அல்ல. இதற்கு இயற்கை எதிரிகள் இல்லாததால் அதிகமாக பரவி வருகிறது இந்த தாவரம் வந்தால் ஒரு ஏரியை காப்பாற்றுவது மிக கடினம். இந்த தாவரத்தை பற்றியும் இதனால் ஏற்படும் தீங்குகளை பற்றியும் ஏற்கனவே படித்து உள்ளோம் இது வரை ஆகாய தாமரையை கட்டுபடுத்த வேதியியல் முறை தான் பயன் படுத்த பட்டது .2, 4-D, glyphosate மற்றும் மேலும் படிக்க..
நீடித்த நவீன கரும்பு சாகுபடி வீடியோ
நீடித்த நவீன கரும்பு சாகுபடி பற்றிய ஒரு வீடியோ நன்றி: தமிழ் வேளாண் பல்கலை கழகம்
தென்னையும் சோற்று கற்றாழையும்
தென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை பற்றியும் அதை கட்டுபடுத்த சோற்று கற்றாழை பயன் படுத்தும் ஒரு விவசாயின் அனுபவத்தையும் படித்துள்ளோம். அதை பற்றிய ஒரு வீடியோ நன்றி: RSGA கன்னிவாடி Youtube
தென்னை நார்க்கழிவில் கம்போஸ்ட் உரம்
பட்டுக்கோட்டை, திருவோணம் வட்டார சாலையோரங்களில் ஆங்காங்கே கிடக்கும் தென்னை நார்கழிவுகளை பயன்படுத்தி கம்போஸ்ட் உரம் தயாரிக்கலாம் என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் மதியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பட்டுக்கோட்டை, திருவோணம் வட்டாரங்களில் சாலையோரங்களில் ஆங்காங்கே தென்னை நார்கழிவுகள் பயன்பாடின்றி குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதை மக்க செய்து கம்போஸ்ட் உரங்களாக பயன்படுத்தலாம். இதற்கு தென்னை நார்கழிவு 1 டன், புளூரோட்டஸ் காளான்வித்து 1 கிலோ, யூரியா 5 கிலோ வேண்டும். முதலில் மேலும் படிக்க..
வெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற வழி
வெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற, நுண்ணுயிர்க்காரணி தெளிக்க வேண்டுமென வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அழகிரிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வட்டாரங்களில் மக்காச்சோளம் தற்போது 30 முதல் 35 நாட்கள் பயிர்களாக உள்ளது. இந்நிலையில் கடந்த 10, 12 நாட்களுக்கும் மேலாக மழை ஏதும் இல்லாததால் மக்காச்சோளம் பயிர்கள், குறிப்பாக சரளை மண் நிலப்பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது. மண்ணில் ஈரப்பதம் மேலும் படிக்க..
கரும்பு சாகுபடியின் கசப்பான உண்மைகள்
கரும்பின் இனிப்பை சுவைக்காதவர் யாரும் இருக்க முடியாது. சுவைப்பவருக்கு இனிப்பை தரும் கரும்பு, விளைவிப்போருக்கு கசப்பை தருகிறது. கரும்பு மற்றும் சர்க்கரையின் தாயகம் இந்தியா என ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. கி.மு., 3000 ஆண்டிலிருந்து இந்தியாவில் கரும்பு உற்பத்தி செய்யப்படுவதாகவும், கி.பி., 5 மற்றும் 6ம் நுாற்றாண்டில் இந்திய சர்க்கரை (மொலாசஸ் நீக்கப்படாத நாட்டுச்சர்க்கரை, வெல்லம்) பாரசீகத்திற்கு ஏற்றுமதியானதாகவும் வரலாற்று ஆவணங்களிலிருந்து தெரிய வருகின்றன. தமிழகத்தில் முதல் ஆலை: லண்டனில் 1584ல் இரு சர்க்கரை ஆலைகள் நிறுவப்பட்டன. மேலும் படிக்க..
முள் இல்லா மூங்கில் சாகுபடிக்கு மானியம்
உடுமலைப்பேட்டையில் தேசிய மூங்கில் இயக்கத் திட்டத்தின் கீழ் முள் இல்லா மூங்கில் சாகுபடியை ஊக்குவித்து மானிய உதவிகள் வரப்பெற்றுள்ளது. ஒரு எக்டேருக்கு ரூ.8000/- மான்யமாக தரும் உன்னத மூங்கில் திட்டம் மூலம் இயற்கை வேளாண் உத்தியான காற்று தடுப்பான் மற்றும் உயிர்வேலி மூலம் உபரி வருமானம் உயிர்க்குலங்கள் பல்கிப் பெருகிட கீழே விடும் மூங்கில் இலைகள் மூலம் வாய்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கு பெரும் உதவி, மண்ணின் பௌதிகத்தன்மை, நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிப்பு போன்ற ஏராளமான நன்மைக்கு மேலும் படிக்க..
எரிபொருளாக பயன்படும் தாவர எண்ணெய்
டீசல் மோட்டர்களில் எரிபொருளாக பயன்படும் தாவர எண்ணெய்யை மிக குறைந்த செலவில் தயாரித்து விவசாயிகளுக்கு காந்திகிராம பல்கலை வழங்குகிறது. இலுப்பை, காட்டாமணக்கு, புங்கம், புண்ணை போன்ற தாவரங்களின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் தாவர எண்ணெய் டீசலுடன் கலந்து எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதனை பம்புசெட் டீசல் மோட்டார்களில் பயன்படுத்தலாம். இதில் டீசல் 80 சதவீதமும், தாவர எண்ணெய் 20 சதவீதமும் கலந்து பயன்படுத்தவேண்டும். இவ்வாறு பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்காது. விவசாயிகளுக்கு தாவர விதைகள் எளிதில் கிடைத்தாலும் அவற்றை அரைப்பதற்கான மேலும் படிக்க..
CFL விளக்கு சுற்றுச்சூழல் நண்பனா?
குண்டு பல்புகள் என்று அழைக்கப்படும் ஒளி உமிழ் விளக்குகள் (Incandescent lamps) மின்சாரத்தை அதிக அளவில் வீணடிப்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதும், புவி வெப்பமடைதல் (global warming) பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பதும் நாம் அறிந்ததுதான். அதற்கு மாற்றாக சி.எஃப்.எல். (Compact Fluorescent Lamps) விளக்குகளைப் பயன்படுத்தலாம் என்று அரசே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ததால், மக்கள் மத்தியில் இந்த வகை மின்விளக்குகள் பிரபலமடைந்துள்ளன. அரசு ஆதரவு ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி ஒரு படி மேலும் படிக்க..
சென்னையின் நுரையீரலுக்கு ஆபத்து
ஒரு காலத்தில் ஐந்து சதுரக் கிலோமீட்டருக்கு முழுமையான காடாக, ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கு வேட்டைக் களமாக இருந்த காட்டுப் பகுதி, ஒரு மாநகர வளர்ச்சிக்குப் பலியாகி, துண்டாடப்பட்டு, மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஒரு மாநகரின் மையத்தில் உள்ள ஒரே தேசியப் பூங்காவாகவும், இந்தியாவின் மிகச் சிறிய தேசியப் பூங்காக்களுள் ஒன்றுமான அது, கிண்டி தேசியப் பூங்காதான். பெயர்தான் பூங்காவே தவிர, அரிய வகைத் தாவரங்களும் உயிரினங்களும் செழித்துள்ள ஒரு சரணாலயம். அதன் எதிர்காலம் இன்றைக்குக் கேள்விக்குறியாகிவிட்டது. சென்னை மேலும் படிக்க..
கரையாத விநாயகர் சிலைகளால் குறையாத ஆபத்து
ஆரவாரத்துடன் தொடங்கும் விநாயகர் சதுர்த்திதிருநாள், பல வண்ண விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதுடன் நிறைவடைகிறது. பண்டிகை நிறைவுபெறுகிற இந்த முடிவுப் புள்ளியே சுற்றுச்சூழல் சீர்கேட்டுக் கான தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுகிறது. பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுகிற அதே வேளையில், நம் செயல்களால் நிகழ்கிற பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இயற்கை வழி பக்தி அந்தக் காலத்தில் முழுவதுமே களிமண்ணால் விநாயகர் சிலை செய்து வழிபட்டார்கள். அவற்றுக்கு நிறமூட்ட எந்தச் செயற்கை சாயங்களும் பயன்படுத்தப்பட்டதில்லை. தவிர அவை அளவில் சிறியதாக மேலும் படிக்க..
ஜவ்வரிசி விலை உயர்வு: ரசாயன கலப்படம் இல்லாததால் நல்ல வரவேற்பு
ஜவ்வரிசி மாவில், மக்காச்சோள மாவு மற்றும் ரசாயனம் கலப்படம் செய்வதை தவிர்த்து, இயற்கை முறையில் (ஆர்கானிக் சேகோ) தயார் செய்வதால், வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாக, தற்போது மரவள்ளி கிழங்கு மற்றும் ஜவ்வரிசி ஆகியவற்றின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. அரசின் உரிமை பெறாமல்.. மரவள்ளி கிழங்கு மூலம், ஜவ்வரிசி, மாவு உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலுார், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், சேகோ, ஸ்டார்ச் ஆலைகள் மேலும் படிக்க..
இயந்திர நடவு முறையில் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம்
செலவு குறைவு, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பயன்களால், இயந்திர நடவு முறையில், நாற்று நட நெல் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 200 கிராமங்களில், விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பணியாட்கள் பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு, உரிய நேரத்தில் உரம் கிடைக்காமை, பருவ காலத்தில மழை பொய்த்து போதல் என, பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். நடவு பணிக்கு… மேற்கண்ட மேலும் படிக்க..
இயந்திர நடவு அறிவுரை
விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாதாரண முறையில் நெல் நடவு செய்வதை விட இயந்திரம் மூலம் நடவு செய்யலாம். இதற்கு குறைந்த அளவு விதையே போதுமானது. 15 நாள் வயதுடைய நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்தலாம். நடவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு நெல் நுண்ணுரம் 5 கிலோவை தேவையான மணலுடன் கலந்து வயலில் இட வேண்டும். பயிருக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்து மேலும் படிக்க..
விவசாயத்தில் முன்னேறும் மத்தியப் பிரதேசம்!
குஜராத்தில் விவசாயம் வருடா வருடம் முன்னேறி வருவதை முன்பு படித்தோம். இப்போது, மதிய பிரதேசமும் விவசாயத்தில் வருடா வருடம் முன்னேறி வருவதை படிப்போமா? நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயம் நாளுக்கு நாள் கீழே சென்றுகொண்டிருக்கும் நிலையில், மத்தியப் பிரதேசம் முன்னோக்கிப் பாய்ந்து எல்லோருடைய கவனத்தையும் கோருகிறது. வேளாண் உற்பத்தியில் 25% வளர்ச்சியை மத்தியப் பிரதேசம் கண்டிருக்கிறது. 2012-13-ல் மாநிலத்தின் வேளாண் துறையில் 20.16% வளர்ச்சி ஏற்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு 2011-12-ல் அது 19.85% ஆக இருந்தது. மேலும் படிக்க..
திருப்பூரில் புதிய சாகுபடி முறை
திருப்பூரில், ஊடுபயிர், தொடர் பயிர் என வழக்கமான சாகுபடி முறையை பின்பற்றாமல், நீர், பயிர் காலம் உள்ளிட்டவற்றை சேமிக்கும் வகையில், புது மாதிரியான சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கயம், அவிநாசி, பொங்கலுார், ஊத்துக்குளி வட்டாரத்தில், மஞ்சள் பயிரோடு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. மஞ்சளுக்கு ஓராண்டு ஆகும் நிலையில், இடைப்பட்ட காலத்தில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும். சின்ன வெங்காயம் விதைத்து, 90 சதவீதம் நன்கு வளர்ச்சியடைந்து, 20 நாட்களில் அறுவடை மேலும் படிக்க..
டி.என்.ஏ.யு. பருத்தி பிளஸ்
பருத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர். பயன்படுத்தும் முறை : ஏக்கருக்கு 2.5 கிலோ, தெளிப்பு திரவம் 200 லிட்டர், தெளிக்கும் பருவம் – பூக்கும் மற்றும் காய்ப்பிடிக்கும் பருவம், தேவையான அளவு ஒட்டு திரவம் சேர்க்கலாம். பயன்கள் : பூவும், சப்பைகளும் உதிர்வது குறையும். காய்கள் முழுமையாக வெடித்து, சீரான அறுவடைக்கு வழிவகுக்கிறது. விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கும். வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கும். செலவு : ரூ.300/- ஏக்கருக்கு மேலும் படிக்க..
களையை கட்டுப்படுத்த நிழற்போர்வை
தர்மபுரி மாவட்டத்தில், நிலங்களில் களையை கட்டுப்படுத்த, விவசாயிகள் நிழற்போர்வை அமைக்க, ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, தக்காளி, மா, கரும்பு, துவரை, பருத்தி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், காய்கறி பயிர்கள் மற்றும் மலர் சாகுபடி முக்கிய பங்கு வகித்து வருகிறது.பட்டன் ரோஸ், சாமந்தி, சம்மங்கி, கோழிக்கொண்டை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்கள் குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மலர் சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு போதிய வருவாய் மேலும் படிக்க..
நிலக்கடலை மேல் ஓடு உரிக்கும் இயந்திரம்
நிலக்கடலை தமிழ்நாட்டில் அதிகம் பயிரிட படும் ஒரு பயிர். 120-150 நாட்களில் சாகுபடி செய்யலாம். இந்த பயிரில் ஒரு பெரிய வேலை என்ன என்றால் வேரோடு எடுக்க பட்ட நிலக்கடலையில் இருந்து மேல் ஓடு பிரித்து எடுத்து கடலையை வெளியில் எடுப்பது, இந்த வேலை அதிக பேரையும் நேரத்தையும் எடுத்து கொள்ளும் ஒரு வேலை. ஒரு ஏக்கருக்கு 20-30 வேலை ஆட்கள் தேவை. வேலைஆட்கள் பற்றாக்குறை உள்ள இந்த நாட்களில் இது ஒரு பிரச்னையாக உரு எடுத்து மேலும் படிக்க..
தஞ்சை மாவட்டத்தில் புதிய நெல் ரகம்
தமிழ் நாட்டின் நெல் களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் இப்போது சிகப்பி என்ற நெல் ரகம் பயிரிட படுகிறது. அண்ணாமலை பல்கலைகழத்தில் உண்டாக்கப்பட்ட இந்த ரகம் 150-154 நாட்கள் கொண்டது சம்பா பட்டத்திற்கு சிறந்தது இதை பற்றி கூறும் அண்ணாமலை பல்கலை கழக பேராசிரியர் Dr கதிரேசன் ” இந்த ரகம் மழை, புயல் பாதிப்பு இருக்காது. வட கிழக்கு பருவத்தில் வரும் புயல் இருந்தால், நீர் அதிகம் நின்றாலும் பயிர்கள் அழுகாது. ஒரு ஹெக்டேருக்கு 3.4 டன் மேலும் படிக்க..
தென்னையில் குரும்பை உதிர்தல் காரணங்கள்
தென்னையில் குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம். அதிக கார அல்லது அமில நிலை வடிகால் வசதி இல்லாமை கடும் வறட்சி மரபியல் காரணங்கள் ஊட்டச்சத்து குறைபாடு மகரந்தச் சேர்க்கை இல்லாமை உறார்மேன் குறைபாடு பூச்சிகள் நோய்கள் அ) மண்ணின் கார அமிலத்தன்மையை சரிசெய்தல் மண்ணின் அதிகப்படியான கார அல்லது அமிலத்தன்மை குரும்பை உதிர்வதற்கான காரணமாக இருக்கலாம். மண்ணின் கார அமில நிலை 5.5க்கும் குறைவாக இருப்பது அதிக அமில மேலும் படிக்க..
பப்பாளி சாகுபடி
பழவகை மரச் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக பப்பாளி உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார் இளம் விவசாயி பாலமுருகன். திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஆண்டில் பப்பாளி சாகுபடி செய்து, தனது உழைப்பின் மூலம் நல்ல லாபத்தையும் பெற்று வருகிறார். பப்பாளி சாகுபடியில் தனது அனுபவங்கள் பற்றி பாலமுருகன் கூறியதாவது: “எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனம்தான். ஏற்கனவே நெல், மேலும் படிக்க..
வறட்சியிலும் தாக்குப்பிடிக்கும் ஈத்தாமொழி நெட்டை தென்னை
“பிள்ளையை பெற்றால் கண்ணீரு.. தென்னையை நட்டால் இளநீரு” என்று கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வர். தேங்காய், இளநீர், தேங்காய் பால், தென்னை மடல் என அதன் பல்வேறு உப பொருள்களுக்கும் சத்தான சந்தை வாய்ப்பு இருப்பதுதான் அதற்கு காரணம். தமிழக அளவில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. தொடக்க காலங்களில் கன்னியா குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மேலும் படிக்க..
வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வமா?
கோவையில் நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வாழும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டுக் கொள்ள, தமிழக அரசு நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம், தற்போது, கோவை மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ளது. காய்கறிகளை எளிய முறையில், வீட்டின் மேல்தளத்தில் வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.வீட்டின் மேல்தளத்தில் தோட்டம் அமைப்பதற்காக இடுபொருள் மற்றும் தொழில்நுட்ப கையேடு மேலும் படிக்க..
மீண்டும் பரவும் "ஈரியோஃபைட்"
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னையில் மீண்டும் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், அதனை கட்டுப்படுத்தும், “அசாடிராக் சின்’ மருந்தை தென்னை விவசாயிகளுக்கு, தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளான காவேரிப்பட்டணம், மாதேப்பட்டி, நெடுங்கல், அரசம்பட்டி ஆகிய பகுதிகளில், அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும், மொத்தம், 20 லட்சத்துக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளது. கடந்த, 15 ஆண்டுக்கு முன், மாவட்டத்தில் உள்ள மேலும் படிக்க..
தென்னை, பனை மரங்களில் ஏற உதவும் கருவி
தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னை, பனை, பாக்கு உள்பட கிளையில்லாத அனைத்து உயரமான மரங்களிலும் ஏறுவதற்கான கருவி தற்போது சந்தைகளில் விலைக்குக் கிடைக்கிறது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த டி.என். வெங்கட் (என்கிற) ரெங்கநாதன் வடிவமைத்த கருவி உயரமான மரங்களில் ஏறுவதை மிகவும் மேலும் படிக்க..
தென்னை நார் கழிவுகள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி
வேண்டாத கழிவுகளாக கருதப்பட்ட தென்னை நார் கழிவுகள் தற்போது அரபுநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. தேனி மாவட்டத்தில் தென்னை நார் கயிறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இவற்றில் இருந்து கிடைக்கும் நார் கழிவுகள் வேண்டாத பொருளாக கருதப்பட்டதால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மொத்தமாக காலியிடத்தில் கொட்டி எரித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தென்னை நார்க் கழிவுகள் அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது. இதனால், தற்போது மதிப்பு மிகுந்த பொருளாக கருதப்படுகிறது. தென்னை மட்டையில் இருந்து தயாராகும் மஞ்சு (தும்பு) (Cocopeat) மேலும் படிக்க..
நிலத்தடி நீருக்கு உலைவைக்கும் கருவேல மரங்கள்
வறட்சி நிலவும் ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்கு உலை வைக்கும், கருவேல முள்மரம், செடிகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக தொடர்மழை பெய்யவில்லை. இதனால் கண்மாய், கோடை கால நீர்தேக்கம் போன்றவற்றில் தண்ணீர் இல்லை. விவசாயம் மற்றும் குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். தென்னை விவசாயிகள் மாற்றுபயிர்களை நம்பி, காலம் தள்ளுகின்றனர். நகராட்சி பகுதிகளில் மேலும் படிக்க..
மக்காச்சோளப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்
மக்காச்சோளப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கண்டறிந்து, தகுந்த தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம் மகசூல், வருவாய் இழப்பைத் தடுக்க முடியும். தமிழகத்தில் பயிரிடப்படும் பயிர்களில் மக்காச்சோளம் முக்கியமானது. இப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு வகை தடுப்பு மருந்துகளையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துகின்றனர். குருத்து ஈ: மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகளில் குருத்து ஈ எனப்படும் அதெரிகோனா ஓரியண்டாலிஸ் முக்கியமானது. இது வெள்ளை நிறத்தில் காணப்படும். முட்டையிலிருந்து வெளிவரும் காலற்ற புழுக்கள் இலையுறைக்கும், மேலும் படிக்க..
கால்நடைகளின் வரப்பிரசாதமான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்
விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு ஏற்ற சத்தான தீவனமாகவும், கால்நடை வளர்ப்பில் உப தொழிலாகவும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ-4 விளங்குகிறது. தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு என்பது உழவுத்தொழிலின் உப தொழிலாக உள்ளது. பொதுவாக, கால்நடைகளுக்கு வைக்கோல், சோளம், கம்பு, மக்காச்சோளத்தின் தட்டை, வேர்க்கடலைக் கொடி ஆகியவை முக்கிய உணவாக வழங்கப்படுகின்றன. ஆனால், கால்நடைகளின் உற்பத்தித் திறனைப் பெருக்க வேண்டும் என்றால் சத்தான தீவனம் அளிக்க வேண்டும். அந்த வகையில், கால்நடைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கம்பு நேப்பியர் மேலும் படிக்க..
நிலக்கடலை உர நிர்வாகம்
நுண்ணூட்டச் சத்துக்கள் அளித்தல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்உரக் கலவையை எக்டருக்கு 12.5 கிகி ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரம் சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் நிழலில் உலர்த்தவும். விதைத்த உடனே அளிக்க வேண்டும். நுண்உரக் கலவையை மண்ணில் இணைக்க வேண்டாம். நிலக்கடலையில் பூவை தக்க வைத்தல், நெற்று நிரப்புதல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்க விதைத்த 35-ம் நாள் (50 சதவிகத பூக்கும் மேலும் படிக்க..
பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்
கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை சுற்றுவட்டார பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம், பப்பாளி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. வெளி மாநில மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்க்கரை நோய் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ள பப்பாளி பழத்துக்கு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும்.தற்போது வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்ய துவங்கி உள்ளனர். ஒரு விதை, மேலும் படிக்க..
தென்னந்தோப்பில் மீன்வளர்க்கும் விவசாயி
மதுரை மாவட்டத்தில் புதுமையாக தேனுார் கட்டப்புலி கிராமத்தில் தென்னந்தோப்பில் மீன்வளர்க்கும் விவசாயி கணேசன் கூறியதாவது: அரசின் நுாறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், டி.ஆர்.டி.ஏ., மூலம் நிலத்தில் ஐந்தடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைத்துத் தந்தனர். ஆனால் அங்கே தண்ணீர் நிற்கவில்லை. ஆனாலும் மீன்வளர்க்கும் எண்ணம் குறையவில்லை. நான்கு வரிசை மரங்கள் இருந்தன. அதில் ஒரு வரிசையை முழுவதுமாக வெட்டி விட்டேன். தென்னையைச் சுற்றியுள்ள இடத்தை பள்ளமாக்கினேன். அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால், மீன்வளர்ப்புத் துறை மேலும் படிக்க..
வானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி
வானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி முன்பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுவிட்டு மறுபடியும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். https://docs.google.com/forms/d/1UA3krwIYm8j-3dEDNDrRdO6_U_LIheuCZf44EhXN01g/viewform?usp=send_form வணக்கம், வருகிற 2014 செப்டம்பர் மாதம் 12,13 & 14 ஆகிய தேதிகளில் வானகம் பண்ணையில் மூன்று நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி 12 ஆம் தேதி காலை 10 மணிக்குத் துவங்கி 14 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நிறைவடையும். மேலும் படிக்க..
திருந்திய நெல் சாகுபடி முறையில் கூடுதல் மகசூல்
திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் மற்றும் குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலையத் துணை இயக்குநர் வ. சாந்தி ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர். திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றங்கால் அமைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதுமானது. இம்முறையில் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. திருந்திய நெல் சாகுபடி நாற்றங்காலை வயலின் மேலும் படிக்க..
ஏற்றுமதியாகும் பப்பாளி பால்: கூடுதல் லாபம்
தேனி மாவட்டத்தில் இருந்து பப்பாளி பால், மருந்து தயாரிப் புக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. தேனி மாவட்டம் தேவதானப் பட்டி, ஆண்டிபட்டி, கடமலைக் குண்டு, கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு வாழை சாகுபடி செய்யப் பட்டுவந்தது. ஆனால், போதிய மழை இல்லாத காரணத்தால் விவசாயத் தொழில் பெரிதும் பாதிப்பு அடைந்தது. இதையடுத்து, தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பயிர் களை சாகுபடி செய்ய முடிவு செய்து அவர்கள் பப்பாளி சாகுபடியில் இறங்கினர். சில மாதங்களுக்கு முன்பு மேலும் படிக்க..
களை மேலாண்மை டிப்ஸ்
களை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குறையும் (களை எடுக்கா பயிர் கால் பயிர் என்று வசனம் உண்டு). வறண்ட நிலத்திற்கு களை எடுப்பு தேவையில்லை. களை எடுக்கா நிலத்தில் களைப் பயிர் வளர்ச்சியானது, இயற்கையாகக் குறைந்து, அது மண் ஈரத்தை காக்க உதவும். அடிக்கடி உழவுச் செய்தால், களை எண்ணிக்கை குறையும். அருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும். கரும்மண் நிலத்தில் அருகம்புல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த 3 வருடங்கள் வரை நிலத்தை மேலும் படிக்க..
மக்கா சோளத்தில் உர நிர்வாகம்
இறவை மக்காச்சோளம் தொழு உரம் இடுதல் ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 10 பாக்கெட் (2000 கிராம் எக்டர்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும். உரமிடுதல் மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையான 135, 62.5, 50 கிலோ/ எக்டர் மேலும் படிக்க..
வாழைக்கு இலைவழி நுண்ணூட்டங்கள்
வாழையானது தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யும் பழப் பயிர்களில் மிக முக்கியமானது. உரங்களை சரியான தருணத்தில் அளித்த போதிலும் வாழையில் எதிர்பார்த்த தரம் மற்றும் மகசூல் பெற முடியாமல் பல விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வாழைக்கு தேவையான அளவுக்கு நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக் காததே இதற்கு காரணம். நுண்ணூட்டங்களான மக்னீசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் போரான் போன்றவை வாழையின் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. தண்டுகள் மெலிந்து காணப்படுதல், நுனி இலைகள் வெளுத்து காணப்படுதல், காய்கள் குட்டையாகவும் வளைந்தும் மேலும் படிக்க..
நிலவளம் காக்க தக்கைபூண்டு
நிலவளத்தை காக்க விவசாயிகள் தக்கை பூண்டு சாகுபடி செய்ய வேண்டும் என, மதுரையின் சாதனை விவசாயி சோலைமலை தெரிவித்தார். விவசாய சாகுபடியில் நிலவளமே இன்றியமையாதது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால், நிலவளம் குறைந்து போனது. தக்கைபூண்டு, சணப்பு, கொழிஞ்சி போன்றவை பயிரிட்டு, மடக்கி உழுதால், நிலவளம் மேம்பட்டு, மற்ற பயிர்கள் நல்ல மகசூலை அளிக்கும் என்கிறார், மதுரை அண்டமான் விவசாயி சோலைமலை. தக்கை பூண்டு இயற்கையான பசுந்தாள் உரம். மேலும் வேப்பஇலை, எருக்கஞ்செடியையும் பயன்படுத்தலாம். ஆனால் மேலும் படிக்க..
நிலக்கடலையில் சுருள்பூச்சி தாக்குதல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவாரி நிலக்கடலைப் பயிரைப் பாதிக்கும் சுருள் பூச்சிகள் தாக்குதலை தடுக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறண்ட வானிலையால் மானாவாரி நிலக்கடலைப் பயிரில் சுருள்பூச்சித் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் ஆரம்பத்திலேயே பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும். இலையை கடித்துண்ணும் பூச்சியான சுருள் பூச்சி குறித்த விவரங்களை விவசாயிகள் அறிந்து கொள்வது அவசியம். தாக்குதல் மேலும் படிக்க..
இயற்கை விவசாய உற்பத்தி – சந்தை மதிப்பு அதிகம்
இயற்கை விவசாயத்தைச் செய்துவரும் விவசாயிகள் சாகுபடி முறைகளை பதிவுசெய்து கொண்டால், விளைபொருளுக்கான சந்தை மதிப்பை முழுமையாகப் பெற முடியும் என மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் சி.சின்னுசாமி தெரிவித்தார். மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் இயற்கைவழி வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் சி.சின்னுசாமி பேசியதாவது: மண்ணில் அங்ககச் சத்துப் பொருள்கள் 0.5 சதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டதை தற்போது சரிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அங்ககச் சத்தை மேலும் படிக்க..
இயற்கை வேளாண்மையின் ஆதர்ச நாயகன்
உலகம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகளின் ஆதர்ச நாயகன் ஜப்பானிய வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகா. (Masanobu Fukouka) நவீன வேளாண்மையின் மோசமான பின்விளைவுகளுக்கு மாற்றாக, பலன் தரும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் இயற்கை வேளாண்மை திகழும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் ஃபுகோகா. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், வேதி உரங்கள், தொழில்நுட்பக் கருவிகள் சார்ந்த நவீன வேளாண்மை லட்சக்கணக்கான மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது என்னவோ உண்மைதான். ஆனால், ஊட்டச்சத்து குறைவு, உணவு சார்ந்த பல்வேறு மேலும் படிக்க..
மன்னர் சரபோஜியின் மழை நீர் சேகரிப்பு
தற்போது எல்லாரும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசி வருகிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரின் மன்னராக இருந்த இரண்டாம் சரபோஜி (1778 – 1832) ஒரு பிரம்மாண்டமான மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை உருவாக்கி மழை நீரைத் தேக்கி வைக்கப் பல குளங்களையும் அமைத்திருக்கிறார். எல்லாக் குளங்களும் கால்வாய்கள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. அவை நகர மக்கள் அனைவருக்கும் சுவையான குடிநீரை வழங்கின. தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள மோடி மொழியிலான ஆவணங்கள் அந்த மேலும் படிக்க..
சுறா ஆட்கொல்லி?
சுறாக்கள் என்றாலே கொடூரமானவை; மனிதரைப் பார்த்தவுடன் கடித்துத் தின்றுவிடும். படகுகளை, கட்டுமரங்களை மூர்க்கத்தனமாகத் தாக்கும் என்றெல்லாம் தகவல்கள் உலவுகின்றன. ஆனால், சுறாக்கள் மட்டுமல்ல… எந்த ஓர் உயிரினமும் கொடூரமானது அல்ல. ஓர் உயிரினம் விரும்பியோ, திட்டமிட்டோ, அடிக்கடியோ மனிதர்களைத் தாக்குவது, கொல்வது, உண்பது இல்லை. அதேநேரம் எந்த ஓர் உயிரினமும் எந்த நேரத்தில் என்ன செய்யும் என்பதையும் துல்லியமாகக் கணிக்க முடியாது. அவற்றின் பொதுவான குணாம்சங்களை மட்டுமே சொல்ல முடியும். சுறாக்களைப் பற்றி நிலவும் வதந்திகளுக்கான பதில்கள் மேலும் படிக்க..
குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் சூரியகாந்தி சாகுபடி
தொடரும் வறட்சி, குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குறைந்தளவு நீரைக் கொண்டு லாபம் ஈட்டக்கூடிய சூரியகாந்தி சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் திருச்சி மாவட்ட விவசாயிகள். திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, மண்ணச்சநல்லூர் ஒன்றியப் பகுதிகள், ஸ்ரீரங்கம் வட்டத்திலுள்ள இனாம்புலியூர், சிறுகமணி, பெருகமணி, முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 750 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்படும். குறைவான செலவில் வருவாய்: மற்றப் பயிர்கள் போல இல்லாமல் 90 மேலும் படிக்க..
உயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம்
படிக்கவேண்டும், படித்து முடித்து நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து செட்டிலாக வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் கனவு, குறிக்கோள் எல்லாமே. ஆனால் விவசாயத்தில் பட்டம் பெற்று சென்னையில் உலகத்தரமான தனியார் பள்ளியொன்றில் நல்ல ஊதியம் பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதையெல்லாம் ஒரேநாளில் உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு களமிறங்கி, அதிலும் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறார். அந்த சாதனை இளைஞரின் பெயர் கு.ஜெயக்குமார். மேலும் படிக்க..
மா மரத்தில் கவாத்து செய்ய புரூனர் கருவி
மாமரத்தில் கவாத்து செய்ய, புரூனர் (Pruner) கருவியை காந்தி கிராமம் பல்கலை வேளாண்மை அறிவியல் மையம் முதன்முதலாக தென் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கல்லாமணி, நீலம், பங்கனப்பள்ளி, செந்துாரா, காலப்பாடு போன்ற மா ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மகசூலை அதிகரிக்க, மா மரங்களில் பூ பூப்பதற்கு 3 மாதத்திற்கு முன், கவாத்து செய்யப்படுகிறது. கவாத்து மூலம் செடிகளில் காய்ந்துள்ள கிளைகள், நோய் தாக்கிய கிளைகள் மேலும் படிக்க..
மணிலா அதிக மகசூலுக்கு "டானிக்"
அதிக மகசூல் பெற இலை வழி ஊட்டச்சத்து கரைசல் மணிலா சாகுபடியில் தெளித்து விவசாயிகள் பயன் பெறலாம். மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பு: மணிலா சாகுபடியில் அதிக மகசூல் பெற இலை வழி ஊட்டசத்து கரைசலை தெளிக்கலாம். செடிகளில் உள்ள காய்களின் எண்ணிக்கை, பருப்புகளில் திரட்சியுமே மகசூலை நிர்ணயிக்கின்றன. இவை அதிகரித்து கூடுதல் மகசூல் பெற கரைசல் தெளிப்பிற்கு முதல் நாள் இரவு ஒரு கிலோ டிஏபி., உரத்தை 15 லிட்டர் மேலும் படிக்க..
நெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்
நெல் சாகுபடி செய்யும்போது உயிர் உரங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு குறைகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் ரசாயன இடுபொருள்களின் செலவுகள் அவற்றால் மண்ணிற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் மாற்று முறை விவசாயத்திற்கு குறிப்பாக, இயற்கை விவசாயத்திற்கு வழிகோலாக அமைகிறது. மேலும், ஊட்டச்சத்து மேலாண்மையில் ரசாயன உரங்களின் செலவைக் குறைத்து அதற்கு இணையான சத்துக்களை வழங்குவதில் பெரிதும் துணை நிற்பவை உயிர் உரங்களே. அத்தகைய உயிர் உரங்கள், நெல் பயிர் சாகுபடியில் ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்து மேலும் படிக்க..
மிளிரும் கொன்றை
கோடையின் கொடுமை பற்றிப் புலம்பிக்கொண்டேயிருப்பவர்களுக்கு, அப்பருவத்தில் தோன்றும் உன்னத அம்சங்கள் கண்ணில் படுவதில்லை. சுவையான மாம்பழமும் நுங்கும் வருவது கோடையில்தான். சித்திரை மாத நிலவு தோன்றி ஜொலிப்பதும் கோடையில்தான். மல்லிகையின் மலர்வு உச்சத்தை அடைவதும் சரக்கொன்றை மரம் இலைகளை முழுவதுமாக உதிர்த்து, ஒரு பெரிய பொன்னிறப் பூச்செண்டு போலப் பூத்துக் குலுங்குவதும் இந்தக் காலத்தில்தான். அண்மையில் பந்திப்பூர், முதுமலை காட்டினூடே பயணித்தபோது, அந்த வறண்ட கபில நிற நில விரிவில் ஆங்காங்கே தன்னந்தனியாகக் கொன்றை மரங்கள், மஞ்சள் மேலும் படிக்க..
பசுமை நோபல் அங்கீகாரம் கிடைத்த போராளி
இந்தியாவின் கனிம வளம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் உள்ள கரே கிராமத்தில் ஒவ்வொரு நாள் காலையும் அரை மணிநேரத்துக்கு நிலம் அதிர்ந்துகொண்டே இருக்கும். அது நிலநடுக்கம் அல்ல. தினசரி நிலம் நடுங்குவது எப்படி நிலநடுக்கமாக இருக்க முடியும்? அருகிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஜிண்டால் நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு முறை வெடி வைத்துத் தகர்க்கும்போதும் அரை மணி நேரத்துக்கு அதிர்ந்து பிறகு அமைதியாகிறது நிலம். தொடர்ந்து கரும் தூசுப்புகை மேல் எழுந்து சூரியனை மறைத்து வானமும் கறுத்துவிடுகிறது. மேலும் படிக்க..
சொட்டு நீர் பாசனத்தால் மா பாசனம்
வானத்தை பார்த்து வாழ்ந்து கொண்டே இருந்தால் மண் எப்போது மணம் வீசுவது? மண்வளம் பெற உயிர்நீர் தேவைதான். அந்த உயிர் நீரை சொட்டுநீர்ப்பாசனமாய் தந்ததால், அலங்காநல்லூர் கோடாங்கிபட்டி மகாராஜனின் ஆறுஏக்கர் தோட்டத்தில் மாமரங்கள் அணி அணியாய் காய்த்துத் தொங்குகின்றன. அடிக்கும் வெயிலில் இலைகள் தாக்கப்பிடிப்பதே அதிசயமாக இருப்பதால், இங்கு கொப்பும், கிளையுமாய் காய்கள் தான் கூட்டங்களாக காணப்படுவது, ஆச்சரியம் தருகிறது. காலாப்பாடு, கல்லாமை, காசாலட்டு, ருமேனியா, பாலாமணி, பங்கனபள்ளி, அல்போன்சா ரகங்களின் 120 மரங்கள், ஆங்காங்கே வரிசைகட்டி மேலும் படிக்க..
தென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழிகள்
கற்பக விருட்சம் என்றழைக்கப்படும் பல்லாண்டுப் பயிரான தென்னையைத் தாக்கும் பூச்சிகள், அதன் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் தெரிந்து கொண்டால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னையை காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, ஈரியோபைட் சிலந்திப் பூச்சிகள் தாக்குகின்றன. காண்டாமிருக வண்டு இளம், வளரும் கன்றுகளைத் தாக்கும். விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடிமட்டைகள், விரியாத பாளைகள் ஆகியவற்றில் சேதம் ஏற்படுத்தும். தாக்கப்பட்ட இலைகளின் குருத்துகள் மேலும் படிக்க..
லெமன்கிராஸ் சாகுபடி
நறுமணப் பயிராகவும், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள், திரவப் பொருள்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளாகவும் விளங்கும் “லெமன் கிராஸ்’ என்னும் எலுமிச்சைப் புல் சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. லெமன்கிராஸ்: புல், செடி, கொடிகள் இருந்தால் கொசுக்கள் வரும். ஆனால், எலுமிச்சைப் புல்லோ கொசுவை விரட்டும். இதன் மணம் எலுமிச்சையைப் போன்றே இருப்பதால், இந்தப் புல்லை வளர்த்தால், கொசுக்கள் வராது. இந்தப் புல்லிலிருந்து எடுக்கப்படும் லெமன் கிராஸ் எண்ணெய், துணி துவைக்கும் மேலும் படிக்க..
நாவல் மர மகிமை
பெரும்பாலும் விதை மூலம் வளரும் அல்லது ஒட்டுச்செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் நாவல் மரம் நட்ட 8 முதல் 10 ஆண்டுகளில் விளைச்சல் தரும். ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும் நாவல் மரம் மார்ச் – மே மாதம் பூப்பதும் அதன் பின் ஜூலை – ஆகஸ்டு – செப்டம்பர் மாதங்களில் பழங்களைத் தருவதும் வாடிக்கை. ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 12 மீட்டர் இடைவெளி விட்டு நடப்படும் நாவல் மேலும் படிக்க..
அவசரம் ஏன்?
மரபணு மாற்று பயிர்களுக்கு வயல்வெளி ஆய்வு நடத்துவதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ‘அடக்கி’ வாசிக்கும் நிலையில், இந்தியாவில் அதற்கு அவசரம் காட்டுவது ஏன்?’ என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: கடந்த ஆண்டு, மே மாதம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையில், மரபணு மாற்று கோதுமை கலந்திருப்பது கண்டறியப்பட்டு, அதை, ஜப்பான் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவில் இருந்து அதிகளவில், கோதுமை இறக்குமதி செய்யும் ஜப்பான், அதற்கான மேலும் படிக்க..
நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை
நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் – பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும்.பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும். கெட்டசதை போட்டிருக்க கூடாது. உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும். பால்மடி பஞ்சுபோல் இருக்க வேண்டும். தொட்டால் பால் வழிய வேண்டும். பால்மடி, பால் சுரக்கும் பால் கொடி கண், தொப்புள் வரை நீண்டு இருக்க வேண்டும். பாய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். இரண்டாம் ஈற்று மாடாக இருக்க வேண்டும். இரண்டாம் மேலும் படிக்க..
மரபணு மாற்றப்பட்ட பயிர் மூலம் வந்த களை ராட்சசன்
வயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை பிடுங்கி எடுப்பது பரம்பரை பரம்பரையாக வந்த முறை. அமெரிக்காவில், எல்லாம் இயந்திர மயமாகபட்ட விவசாயத்தில், இதற்கு ஒரு வழி தேடினார்கள். மொன்சாண்டோ Monsanto நிறுவனம் இருக்கிறதே வழி கொடுக்க. glyphosate (Roundup) என்ற ஒரு களை கொல்லி கண்டு பிடித்தார்கள். ஆனால் இந்த ரசாயன களை கொல்லி வயலில் தெளித்தால், வயலில் உள்ள சோளம், சோயா போன்ற செடிகளும் பாதிக்க படுமே? உடனே, சோளத்தில் உள்ள மரபணுவை மேலும் படிக்க..
மரபணு மாற்றப்பட்ட உயிர் தொழிற்நுட்பம்
மரபணு மாற்றபற்ற பயிர்களில் மற்றொரு உயிர் இனத்தில் இருந்து மரபணு (Genetic material) எடுத்து சேர்க்க படுகிறது. இப்படிப்பட்ட தொழிற்நுட்பம் கொஞ்ச நாளாகவே இருந்து வருகிறது. இப்படி செய்ய பட்டவை தான் BT காட்டன் எனப்படும் பருத்தி. ஆனால் விஞானிகள் எப்படிப்பட்ட வினோதமான உயிர் இனங்களை “உண்டாக்கி” இருக்கிறார்கள் தெரியுமா? இதோ – ஒரு சாம்பிள்: Dolion: இது நாயும் சிங்கமும் சேர்த்து உருவாக்க பட்ட ஒரு மிருகம். இந்த வகை Dolion பரிசோதனை சாலையில் 3 மேலும் படிக்க..
வறட்சியை சமாளிக்க குதிரைவாலி
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வறட்சியை சமாளிக்க குதிரைவாலி சிறுதானிய சாகுபடி செய்ய வேளாண்மைத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடி பணிகள் வடகிழக்கு பருவமழையை நம்பியே நடைபெறுகிறது. முக்கிய பயிரான நெல் சாகுபடி ஏறத்தாழ 1.30 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி பெரும்பாலும் முன் பருவ விதைப்பாக மழையை எதிர்பார்த்து விதைக்கப்படுகிறது. இதேபோன்று சிறுதானிய பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் குறுதானிய பயிரான குதிரைவாலி போன்ற பயிர்கள் செப்டம்பர் முதல் மேலும் படிக்க..
பயிர்களின் துரித வளர்ச்சிக்கு உதவும் வேர் உட்பூசணம்
வேர் உட்பூசணத்தின் மூலம் பயிர்களின் வளர்ச்சி துரிதமாவதோடு, மண்ணின் உயிர்த் தன்மையும் மேம்படுத்தப்படும் என ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் ச.சரவணக்குமார் கூறுகிறார். வேர் உட்பூசணம் என்பது வேர்களின் உள்ளே சென்று பயிர் வளர்ச்சியின் செயல்பாட்டுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பயிர்களுக்குத் தேவையான நீர் மற்றும் நுண்ணூட்டச் சத்துகளை (மணிச்சத்து, துத்தநாகம், தாமிரம்) எளிதாக பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகின்றன. இந்த வேர் உட்பூசணத்தை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு சோளம் அல்லது மேலும் படிக்க..
பாரம்பரிய நெல் சாகுபடி அனுபவ வீடியோ
பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் திருவாரூரை சேர்ந்த திரு கண்ணன் அவர்களின் அனுபவங்கள் ஒரு வீடியோ அவரை தொடர்பு கொள்ள: Cell: 09443222257 e mail: kannankumbakonam@gmail.com நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம்
தெளிப்பு நீர் பாசனம்
தெளிப்பு நீர் பாசன முறை பற்றி விவரிக்கும் விவசாயி ராஜேந்திரன்: விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பெரும்பாலும், சோளம், கம்பு, மணிலா போன்ற பயிர்களை தான் பயிரிடுவோம். கடந்த சில ஆண்டுகளாக, உரிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளும் வற்றின. அதனால், விவசாயம் செய்வதே, பெரும் சவாலாக இருந்தது. இச்சூழலில், குறைந்த நீரில் தெளிப்பு நீர்ப்பாசனத்தின் மூலம், பயிர்களை சாகுபடி செய்து லாபம் பெறலாம் என்பதை, திண்டிவனம் வேளாண் பொறியியல் துறையின் மேலும் படிக்க..
வெட்டி வேர் சாகுபடி
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் “வெட்டி வேரை‘ சாகுபடி செய்வது தமிழகத்தில் அரிதாகவே நடக்கிறது. இதற்கு மணல் கலந்த செம்மண் பொருத்தமானது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது குருவாடிப் பட்டி கிராமம். பி.காம்., பட்டதாரியான பாண்டியன், 40, சி.ஏ., படித்து வருவதோடு, ஏழு ஆண்டுகளாக, வெட்டி வேர் விவசாயமும் செய்து வருகிறார். பத்து ஏக்கரில் வெட்டி வேர் சாகுபடி செய்யும் இவர், சி.எம்.சூழல் மூலிகைப் பண்ணை வைத்து வெட்டி வேரை மூலப்பொருளாக வைத்து, அழகுசாதனப் பொருட்கள், மேலும் படிக்க..
மகசூலை அதிகரிக்கும் தென்னை டானிக்
தென்னை பயிரிடும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பயனளிக்கும் விதத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தென்னை டானிக் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து பாளையங்கோட்டையிலுள்ள பல்கலைக்கழகத்தின் வேளாண்மை உதவி மைய உதவி பேராசிரியர் முனைவர் சி. ராஜா பாபு கூறியதாவது: தென்னை டானிக் ஊட்டப்பட்ட மரங்களில் குரும்பை உதிர்வது குறைந்து காய்களின் எண்ணிக்கை அதிகரித்து, காய்களின் பருமனும் தரமும் அதிகரிக்கிறது. தென்னை டானிக்கில் நைட்ரஜன், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, மேலும் படிக்க..
இலவச மரக்கன்றுகள்: சாதிக்கும் ஆசிரியர்
நமது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் நேரில் பார்த்த பாரம்பரிய மரங்கள் எல்லாம், மழை வளம் இல்லாமல் அழிந்துவரும் அரிய வகை மரங்கள் பட்டியலில் இடம்பிடித்து வருவதாக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் அருகே மாணவர்களின் உதவியுடன் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார் ஒரு பள்ளி ஆசிரியர். அவரது முயற்சியைப் பாராட்டித் தமிழக அரசு ‘சுற்றுச்சூழல் செயல் வீரர்’, ‘சாதனையாளர்’ விருதுகளை வழங்கியுள்ளது. மத்திய அரசு ‘பசுமை மனிதர்’ என்ற விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. செலவில்லா மேலும் படிக்க..
ஒரு மரத்தின் மதிப்பு
ஒவ்வொரு மரமும் ஒரு வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.23 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. ஒரு மரத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது. ஆனால், அதன் உண்மையான மதிப்பை உணர்ந்துகொள்ளப் பொருளாதார ரீதியில் அதை மதிப்பிட வேண்டி யிருக்கிறது. இதை டெல்லி கிரீன்ஸ் அமைப்பு செய்திருக்கிறது. ஒரு வளர்ந்த ஆள் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். அதாவது, ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் மேலும் படிக்க..
வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்
கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது. இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலையிலான உரங்களை வாங்கி இடுவதற்குப் பதிலாக வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள். இயற்கை உரம் தயாரிப்பது எப்படி? நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். மேலும் படிக்க..
வறட்சியிலும் அதிக விளைச்சல் பாரம்பரிய நெல் கருடன் சம்பா சாதனை
புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியிலும் திரட்சியாக விளைந் துள்ள பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான கருடன் சம்பா சனிக்கிழமை அறுவடை செய்யப்பட்டது. இது ஏக்கருக்கு 3,150 கிலோ விளைச்சலை தந்து விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தியது. நபார்டு வங்கியின் புதுமைப் பண்ணைத் திட்டத்தின்கீழ் புதுக் கோட்டை ரோஸ் தொண்டு நிறுவனத்தினர் விவசாயிகள் மூலம் உடல் மற்றும் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த, அதேசமயம் அரிதாகிக் கொண்டிருக்கும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு வருகின்றனர். தங்கச்சம்பா, சொர்ண மேலும் படிக்க..
நாமக்கல்: கேரட், பீட்ரூட் இயற்கை உரம் மூலம் விளைச்சல்
கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் ஆகியவை ஓசூர், பெங்களூரு போன்ற குளிர் அதிகமுள்ள பகுதிகளில் விளையும் பயிர்கள். மற்ற பகுதிகளில் கத்திரி, வெண்டை காய்கறிகள் மட்டுமே விளையும். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள பச்சுடையாம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்து சாதனை படைத்துள்ளார். இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி, இவற்றை சாகுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விவசாயி சிவக்குமார் கூறியது: இரு மேலும் படிக்க..
வீட்டு தோட்டத்தை கோடையில் காப்பது எப்படி
கோடை காலம் ஆரம்பித்தாலே வீட்டுத் தோட்டப் பிரியர்கள் மத்தியில் ஒருவித கலக்கம் தோன்றும். வெப்ப அளவு, அனல் காற்று, குறைந்து வரும் கோடை மழை, தண்ணீர் பற்றாக்குறை, கோடை விடுமுறையில் குடும்பச் சுற்றுலா மற்றும் விசேஷங்கள் என்று நீண்டப் பட்டியல் இருக்கும். இவற்றை சமாளிப்பதற்குள் பாடுபட்டு சேகரித்த அரிய வகை செடிகளை எவ்வளவு இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்கும். சில முன்னேற்பாடுகள், செயல்முறைகள் கோடையை எளிதாக எதிர் கொள்ள உதவும் என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், மேலும் படிக்க..
மா மரங்களுக்கு கவாத்து செயல்முறை விளக்கம்
சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மா சாகுபடி விவசாயிகள், கவாத்து முறை செயல்விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்யலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மா மரங்களுக்கு சிறப்பான வடிவத்தையும், அதிக மகசூல் கிடைக்கவும் கவாத்து செய்வது அவசியம். மூன்று ஆண்டுகளுக்குள்பட்ட மா மரங்களில் தரையிலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் இருந்து மூன்று கிளைகள் அனுமதித்து ஒவ்வொரு கிளைகளிலும் 3 மேலும் படிக்க..
புதினா சாகுபடி
போளூரை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகளுக்கு புதினா பயிர் சாகுபடி குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)பழனிவேல் விவசாயிகளிடையே பேசுகையில் – புதினா பயிரானது மிக எளிதில் பயிர் செய்யக்கூடியது. இந்த புதினா பயிரானது முதல் அறுவடை 60 நாள்களுக்குள் சாகுபடி செய்து பயன்பெறலாம். மேலும் வருடத்துக்கு 5 முறை அறுவடை செய்ய வாய்ப்புள்ளது. இதனை தண்ணீர் தேங்காத இடங்களில் பயிர் செய்யலாம். மேலும் படிக்க..
கடலின் மழைக்காடுகள்
பவழத் திட்டுகள் (Coral Reef) உயிரற்றவை என்றும், அலங்காரத்துக்குப் பயன்படுபவை என்றும்தான் பெரும்பாலும் நினைக்கிறோம். ஆனால், கடலுக்கு அடியில் இருக்கும் பவழத் திட்டுகள் நமக்குப் பல்வேறு விலை மதிக்க முடியாத சேவைகளைச் செய்துவருகின்றன. அவை: கடலோரப் பாதுகாவலர்கள் கடற்கரைகளில் தடுப்பு போல் செயல்பட்டு அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பவழத்திட்டுகள் கடற்கரைகளைப் பாதுகாக்கின்றன. பகுதிக்கு வந்துசேரும்போது, பவழத் திட்டுகளின் மீது பட்டு உடைந்து சிதறுகின்றன. இதன் மூலம் அலைகள் தங்கள் சக்தியைப் பெருமளவு இழக்கின்றன. ஏற்கெனவே, நமது மேலும் படிக்க..
கோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி
ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பூமியின் வடக்குப் பகுதியில் கடும் குளிர் நிலவும் காலத்தில் பறவைகள் இரை தேடிப் பூமிப் பந்தின் தெற்குப் பகுதிகளை நோக்கி வருகின்றன. அந்த விருந்தாளிப் பறவைகள் (Migratory Birds) வெகுதூரம் பயணித்து, வழக்கமாகச் சென்றடையும் இடத்தைத் தொடும்முன் வழியில் சில இடங்களில் ஓரிரு நாட்கள் தங்கி இளைப்பாறும். பறவையியலாளர்கள் இதை Stop-over sites or Wintering grounds என்பர். ஒடிஸா மாநிலத்தில் உள்ள சிலிகா ஏரி, ஆந்திர-தமிழக எல்லையில் பரவியிருக்கும் பழவேற்காடு ஏரி, மேலும் படிக்க..
சம்பங்கி சாகுபடியில் சாதனை படைக்கும் இன்ஜினியர்
கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றியதில் கிடைக்காத வருமானம், மனநிம்மதி, சம்பங்கி சாகுபடியினால் நிறைவாக பெற்று வருவதாக சாதனை விவசாயி மருதமுத்து தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் தவசிமடையை சேர்ந்தவர் மருதமுத்து. மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் 1991 ல் பி.இ., முடித்தார். சென்னையில், பல்வேறு நிறுவனங்களில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். வறுமை, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் இவரது மனதை நெருடியது. தெளிவான திட்டமிடுதல், தொலை நோக்கு பார்வை, புதிய தொழில் நுட்பங்களை கடைபிடிக்காததுதான் விவசாயிகளின் பின்னடைவிற்கு மேலும் படிக்க..
கன்னியாகுமரி பெண் விவசாயியின் இயற்கை அன்னாசி
இயற்கை விவசாய முறையில் ரப்பர் மரங்களுக்கு இடையே அன்னாசியை ஊடுபயிராகப் பயிரிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் கன்னியாகுமரி பெண் விவசாயி. ரப்பருக்கான விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், இது வரவேற்கத் தகுந்த மாற்றமாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிரேஸ் ராணி. இந்த மாவட்டத்துக்கே உரிய ரப்பர் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். ஆனால், அதற்கிடை யில் ஊடுபயிராக அன்னாசி பயிரிட்டு, லாபம் பார்த்துள்ளார். “கன்னியாகுமரின்னாலே ரப்பர்தான். சாதாரணமா ரப்பர் சாகுபடிக்கு ரசாயன உரம் மேலும் படிக்க..
கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கரில் நடவு
ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 30 கிலோ விதை நெல் பயன்படுத்தும் காலத்தில் கால் கிலோ விதை நெல்லில் ஒரு ஏக்கர் நடவு செய்து சாதனை படைத்து வருகிறார் விவசாயி ஆர்.பெருமாள். ஒற்றை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்து வரும் பெருமாள் 50 செ.மீ. நீளம், 50 செ.மீ. அகலம் (50X50) என்ற அளவில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று மட்டுமே போதுமானது” என்கிறார். நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் உள்ள ஆலங்குடியைச் சேர்ந்தவர் மேலும் படிக்க..
சிறு தானிய உணவால் குழந்தைகளின் சத்துக் குறைபாட்டைப் போக்க முடியும்
சிறுதானிய உணவு மூலமாக குழந்தைகளின் சத்துக் குறைபாட்டைப் போக்க முடியும் என, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்தார். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தேசிய சிறுதானிய உற்பத்தி பெருக்கத்திற்கான கலந்தாலோசனை கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இதில், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி பேசியது: வளர்ச்சி என்ற பெயரில் நம் பாரம்பரிய அறிவையும், உணவுப் பழக்கத்தையும் தொலைத்து விட்டோம். காலதாமதமாக அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இழந்தவற்றை மீட்க போராடிக் கொண்டிருக்கிறோம். சிறு தானியங்களில் உடலுக்குத் மேலும் படிக்க..
காய்கறி சாகுபடியில் குழித்தட்டு நாற்றங்கால்
காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், காய்கறி பயிர்களில் அதிக மகசூல் பெற, குழித்தட்டு நாற்றங்கால் முறையில் நாற்றுவிட்டு நடவு செய்ய வேண்டும், தோகைமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன், தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது: கரூர் மாவட்டம், தோகைமலை பகுதி விவசாயிகள் காய்கறி பயிர்களில், அதிக மகசூல் பெறுவதற்கு, வீரிய ஒட்டு ரக விதைகளை பயன்படுத்த வேண்டும். சாதாரண நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் போது, பயிர் செய்யும் செலவு மிக அதிகமாகிறது. விதை அளவை குறைத்து, மேலும் படிக்க..
மரவள்ளி பயிருக்கு மேலுரம்
“மரவள்ளி பயிருக்கு மேலுரம் இட்டு, நுண்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கூடுதல் மகசூல் பெறலாம்’ என, மோகனூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 90 நாள் வயதுடைய மரவள்ளி பயிருக்கு மேலுரமாக, ஒரு ஏக்கருக்கு, 18 கிலோ தழைச்சத்து தரக்கூடிய, 39 கிலோ யூரியா மற்றும், 48 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய, 80 கிலோ பொட்டாஷ் உரத்தையும் இட்டு மண் அணைக்க வேண்டும். மேலும், நுண் சத்து பற்றாக்குறையால் இலைகள் மேலும் படிக்க..
நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு வீடியோ
நெற்பயிரில் இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு பற்றிய வீடியோ (4 நிமிடம் 18 வினாடிகள் முதல் ) நன்றி: தூர்தர்ஷன்
நெல் சாகுபடியில் சணப்பு பசுந்தாள் உரம்
நெல் பயிரில் சீரான குறைவில்லாத அதிக மகசூல் பெற தழை உரமிடுதல் அவசியம். இதனால் மண்ணில் (எருவில்) அங்ககத்தன்மை அதிகரிப்பதால் மண்ணின் வளம் பேணப்படுவதுடன் மண்ணின் அமைப்பும் மேன்மை அடைகிறது, மற்றும் இராசயன உரத்தின் செயல் திறனும் அதிகரிக்கிறது. இதனால் அடுத்து சாகுபடி செய்யும் குறுவை நெல் பயிரில் மகசூல் அதிகரிக்கிறது. எனவே கோடைமழையினை பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு சணப்பு விதை 20 கிலோ வீதம் விதைக்க வேண்டும். சரியாக விதைத்த 35-வது நாளில் 50 சதவீத மேலும் படிக்க..
உளுந்து சாகுபடி டிப்ஸ்
உளுந்து சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி வட்டார விவசாயிகள், நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் உளுந்து சாகுபடி செய்யலாம். செப்டம்பர்-அக்டோபர் காலங்களில் வம்பன் 2, 3, 4 மற்றும் ஏபிகே 1 ஆகிய ரகங்களை பயிரிடலாம். ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் டிஎம்வி 1 ரகத்தை பயிரிடலாம். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் வம்பன் 4 மற்றும் டிஎம்வி 1 ரகத்தை பயிரிடலாம். எக்டேருக்கு 20 கிலோ விதையை 30க்கு10 செ.மீ. இடைவெளியில் மேலும் படிக்க..
மரபணு மாற்று பயிர்களுக்கு தமிழகத்தில் அனுமதியில்லை!'
”தமிழகத்தில், மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இந்த விஷயத்தில், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலையடைய வேண்டாம்,” என, வேளாண் அமைச்சர், கிருஷ்ணமூர்த்தி கூறினார்.சட்டசபையில் நேற்று, வேளாண்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்: தே.மு.தி.க., சேகர்: அரிசி, கொண்டைக்கடலை, கடுகு உள்ளிட்ட, 15 வகை பயிர்களுக்கு மரபணு மாற்று வயல்வெளி ஆய்வுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே, இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கி, வணிக பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.இதற்கு, அனுமதி மேலும் படிக்க..
வெங்காய சாகுபடியில் நாற்றங்கால் முறை
வெங்காய சாகுபடியில், நாற்றங்கால் முறையாக அமைத்தால், மகசூல் அதிகரிக்கும் என தோட்டக்கலைத்துறை அட்வைஸ் வழங்கியுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் அறிக்கை: தோட்டக்கலைத்துறை சார்பில், ஒரே கொத்தில், 3 முதல் 5 காய் வரை நல்ல நிறமுடைய கோ. ஆன் 5., ரகம் அதிக மகசூலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. தொழில் நுட்பங்களை முறையாக பின்பற்றினால், வெங்காய சாகுபடியில், ஏக்கருக்கு 9 டன் வரை மகசூல் பெற வாய்ப்புள்ளது. டிச., மாதம் முதல் ஏப்., மாதம் வரை மேலும் படிக்க..
எலுமிச்சை சாகுபடி
எலுமிச்சை மரத்தின் கொழுந்து இலை, பூ, விதை, பிஞ்சுக்காய், கனி, கனிச்சாறு, கனியின் தோல், மரப்பட்டை, வேர், வேர்ப்பட்டை, எண்ணெய் இவை அனைத்துமே பயன்பாட்டில் உள்ளன. நா வறட்சி, அதிக தாகம், கண்நோய், காதுநோய், நகச்சுற்று, நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்போக்கு இத்தகைய எண்ணற்ற பிணிகளைப் போக்கவல்ல ஒரு தேசியப்பழம் என்றும் இது போற்றப்படுகிறது. வளமான குறுமண் நிலம், உரிய உகந்த மழை, தகுந்த ஈரப்பதம், சிறந்த சீதோஷ்ணம் ஆகியவை எலுமிச்சைத் தாவரம் செழிப்பாக வளர்ச்சி அடைவதற்குப் பேருதவியாக மேலும் படிக்க..
கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி
மார்க்கெட் சென்றால் எந்த காய்கறி எந்த விலை என்று பயந்து கொண்டே கேட்க வேண்டி இருக்கிறது! இந்த வாரம் தக்காளி விலை அதிகம் என்றால் போன வாரம் வெங்காயம் விலை அதிகம்! விளைப்பு குறைந்ததும், வெகு தூரத்தில் இருந்து காய்கறி கொண்டு வருவதால் அதிகரிக்கும் செலவும் காய்கறி விலை ஏற்றத்திற்கு காரணம்.. அபர்ட்மெண்ட் மொட்டை மாடிகளில் இந்த மாதிரி கூரை தோட்டம் போட்டு காய்கறி விளைவித்தால் நல்ல தரமான காய்கறி நமக்கு கிடைக்கும்.. இதோ கூரை தோட்டம் மேலும் படிக்க..
இயற்கை பூச்சி விரட்டிகள்
விவசாய பயிர்களை அழிக்கும் பூச்சிகளை ஒழிக்க ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறோம். இதனால் மக்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அதை தவிர்க்க மூலிகை தாவரங்களை பயன்படுத்தி பூச்சிகளை விரட்டலாம். நொச்சி இலை, சங்குப்பூ, எருக்கன் பூஇலை, சோற்றுக்கற்றாழை இலை, வேப்பஇலை, ஆடாதோடா இலை, கருவேலம் இலை, புங்கமர இலை மற்றும் விதை, அரளிப்பூ இலை மற்றும் விதை, காட்டாமணாக்கு இலை, ஊமத்தை இலை மற்றும் காய், பப்பாளி இலை, புகையிலையில் உலர்தூள், உண்ணிச்செடி இலைகள், விளாம்பழ மேலும் படிக்க..
குற்றாலத்தில் குளிக்கலாமா?
திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்ப கவிராயர் இந்த மலையின் வளத்தை வியந்து பாடியுள்ளார். “வானரங்கள் கனி கொடுத்து…” என்னும் வரிகளோடு தொடங்கும் அந்தப் பாடல் நீர்நிலைகள், பாறையிடுக்குகளில் பொதிந்திருக்கும் தேன்கூடுகள், புள்ளினங்கள், தாவரங்கள், விலங்குகள் என மலையில் காணும் இயற்கையின் பல்லுயிர்களையும், காலந்தோறும் தொடரும் இதமான சாரலையும் அதன் எழிலையும் பாடி… திருகூடமலை எங்கள் மலையே” என்று அவர் பெருமிதம் கொள்கிறார். மஞ்சள் கடம்பு, கரையான் அரிக்காத விடத்தேரை போன்ற மர வகைகளும், புலி, வரையாடு, சருகுமான் போன்ற மேலும் படிக்க..
மரபணு மாற்று பயிர்கள் குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை?
மரபணு மாற்றப்பட்ட பயிர் பற்றிய சர்ச்சைகள் முடிவே இல்லை! இதோ ஒரு புதிய திருப்பம்…. புதுடில்லி:மரபணு மாற்று பயிர்கள் குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என மத்திய சுற்றுபுறசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார். இந்தியாவில் 15 வகையான(சில குறிப்பிட்ட நெல், கத்தரி, பருத்தி உள்பட) மரபணு மாற்று பயிர்களை சோதனை முறையில் பயிர் செய்ய உயிரிதொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையமான மரபணு பொறியியல் அனுமதிக்குழு (Genetic Engineering Approval Committee) அனுமதி அளித்து மேலும் படிக்க..
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வலுக்கிறது எதிர்ப்பு
மரபணு மாற்று பயிர்களை, சோதனை முறையில் பயிர் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், இத்திட்டத்தை, மாநில முதல்வர்கள் மூலம் எதிர்க்க, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ‘மரபணு மாற்று பயிர்களை, பரிசோதனை முறையில் சாகுபடி செய்யலாம்’ என, மத்திய அரசு அனுமதி வழங்கிஉள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக விவசாயிகள் பலரும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மேலும் படிக்க..
கரும்புக்கு சொட்டு பாசனம்
சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள விவசாயிகளுக்கு மிக முக்கியத் தேவையாக உள்ளது தண்ணீர். தமிழ்நாட்டில் காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை என தண்ணீர் சார்ந்த பிரச்சினைகளே மாநிலத்தில் பிரதான பிரச்சினைகளாக உள்ளன. இந்த சூழலில் சொட்டு நீர் பாசன முறை தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த பெரும் உதவியாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி எம்.சதாசிவம். இவர் தற்போது சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்தி கரும்பு மேலும் படிக்க..
வாழைக்கு வருகிறது ஆபத்து?
எளிமையின் அடையாளம் வாழைப்பழம். ஏழைகள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கக்கூடிய பழம். நல்ல காரியம் எதுவானாலும் தட்டின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஞ்சள் கனி அது. உண்பதற்கு இனிப்பான பழங்களை மட்டுமல்லாமல் சமையலுக்குக் காயும் பூவும்; இட்டு உண்ண இலை; நல்ல செய்தி ஊருக்குத் தெரிய முழு மரம்; பித்தம் போக்கிட வேர் – என அடி முதல் நுனி வரை அனைத்துப் பாகங்களையும் நமது பயன்பாட்டுக்குத் தருவது வாழை. முக்கனிகளில் ஒன்றான இதில் மேலும் படிக்க..
சூரியஒளியில் நுண்நீர் பாசனம்
தமிழ்நாட்டில் நிரந்தரமாகி விட்ட மின்சார தடையினால், பல விவசாயிகள் பாதிக்க பட்டுள்ளனர். சிலர் டீசல் பம்ப் போட்டும் நீர் லாரி மூலம் வாங்கியும் பாசனம் செய்கின்றனர். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து பம்ப் இயக்கம் தொழிற்நுட்பம் முதலீடு அதிகம் என்றாலும் பின்னர் செலவே இல்லை. சில வருடங்களில் முதலீடு எடுத்து விடலாம் அது மட்டும் இல்லாமல் மின்சாரத்தில் இருந்தும் டீசல் செலவு இருந்தும் நிரந்தர விடுதலை பெறலாம் சூரிய ஒளி பம்ப் பொருளாதாரம் பற்றிய ஒரு மேலும் படிக்க..
எள் சாகுபடி டிப்ஸ்
புதுக்கோட்டை மாவட்டம், குலமங்கலம் அருகே விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட எள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனர். ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான ஆடிப்பட்டத்தில் 50% எண்ணெய்த்தன்மை கொண்ட எள் பயிரை சாகுபடி செய்து அதிக அளவில் மகசூல் பெறலாம். ஆடிப்பட்டத்தில் எள் பயிரிடுவதற்கு முன் நிலத்தை டிராக்டரில் ஆழ உழும் கலப்பையால் 2 அல்லது 3 முறை புழுதிபட உழுது, நிலத்தில் நீர் தேங்காத வகையில் சமமாகத் தயார் செய்ய வேண்டும். மேலும் படிக்க..
யானைகளைப் பலிவாங்கும் சீமை கருவேலம்?
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மட்டுமின்றி நாட்டின் மற்ற வனவிலங்கு சரணாலயங்களிலும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நிகழும் ஒரு வருந்தத்தக்க நிகழ்வு அது. கடும் வறட்சி காரணமாகக் காய்ந்து போன காட்டில், யானைகள் அடுத்தடுத்து இறந்துபோகும் நிகழ்வுகளையே குறிப்பிடுகிறேன். கடந்த மூன்று மாதங்களில் குறைந்தது 10லிருந்து 15 யானைகள் வரை பல்வேறு காடுகளில் இறந்திருக்கின்றன. ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை 4 முதல் 5 யானைகள் இறந்துபோயிருக்கின்றன. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. முந்தைய வருடங்களிலும் இறப்பு மேலும் படிக்க..
வேலையாட்கள் பற்றாக்குறையை போக்கும் பண்ணைக் கருவிகள்
நெல் சாகுபடியின்போது வேலையாட்கள் பற்றாக்குறையை போக்க பண்ணைக் கருவிகளை பயன்படுத்தலாம் என ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் ச.சரவணகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: நெல் பயிரிடும்போது நிலம் தயாரிப்பில் இருந்து அறுவடை வரை பல்வேறு உழவியல் பணிகளை மேற்கொள்வதற்கு வேலையாட்கள் பற்றாக்குறையின் காரணமாக விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஒரே சமயத்தில் நெல் சாகுபடி தொடங்குவதாலும், வேளாண் பணிகளை செவ்வனே செய்யவும் மட்டுமே மொத்த சாகுபடி செலவில் 60 சதவீதம் வரை மேலும் படிக்க..
வாழையில் கூன் வண்டை கட்டுப்படுத்துவது எப்படி?
வாழையைத் தாக்கும் தண்டு கூன் வண்டுகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் ச.சரவணகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார். வாழைப் பயிரை 30லிக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றுள் முக்கியமானது தண்டு கூன் வண்டு. இந்த வண்டுகளின் தாக்குதலானது 5 முதல் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. இயற்கையான முறையில் பூச்சி மேலாண்மையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். தாக்குதலின் அறிகுறிகள்: தண்டு கூன் வண்டின் புழுக்களானது மேலும் படிக்க..
பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்களே…
“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப் பூச்சிகளும் விவசாயிகளின் நண்பர்களே” என்கிறார் கோவில்பட்டியில் வேளாண்மை அலுவலராகப் பணியாற்றும் நீ.செல்வம். பூச்சிக்கொல்லி மருந்துகளின் கடுமையான தீமைகள் பற்றியும், வயல்களில் பூச்சிகளைக் கையாள்வதற்கான உத்திகள் பற்றியும் தமிழ்நாடெங்கும் விவசாயிகள் மத்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் செல்வம். அவருடன் நடத்திய உரையாடல்: பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? “வயல்களில் பயிரைத் தின்று மகசூல் இழப்பு ஏற்படுத்தும் மேலும் படிக்க..
சிறையில் பசுமைப் புரட்சி
பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் திறந்தவெளி தரிசு நிலமெல்லாம் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது. தென்னை, வாழை, காய்கறிகள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், கடலை வகைகள் என பல்வேறு பயிர்களை பயிரிட்டு, பொன்விளையும் பூமியாக இச்சிறை வளாகத்தை மாற்றியுள்ளனர் இங்குள்ள சிறைவாசிகள். பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் 20 ஏக்கருக்கு மேல் காலி நிலம் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை தரிசாக கிடந்த இந்நிலம் இப்போது விளைநிலமாக மாறி இருக்கிறது. மொத்தம் 17 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும் படிக்க..
தொடரும் மரபணு மாற்றப்பட்ட பயிர் சோதனைகள்
மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில்,UPA அரசு அவசரம் அவசரமாக மரபணு மற்ற பட்ட பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை செய்ய அனுமதி கொடுத்து உள்ளது. இப்போது புதிதாக பதவி ஏற்றுள்ள NDA அரசும் இதே வழியை பின்பற்றி 15 வகை பயிர்களுக்கு மேலும் படிக்க..
பிஞ்சுகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் நஞ்சு
இந்தப் பேரரசில் எஜமானர்கள் எல்லாம் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். தங்கள் அடிமைகளைவிடக் குறைந்த உடல்நலத்துடன் இருக்கிறார்கள். கிராமங்களில் வாழும் சாதாரண மக்கள் நகரத்தில் வாழும் செல்வந்தர்களைவிட பலசாலிகளாக இருக்கிறார்கள். சாதாரண உணவு சாப்பிடுபவர்கள், வசதி மிக்கவர்களைவிட நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் உயிர் வாழ்கிறார்கள்” என்று எழுதிச் சென்றுள்ளார் ரோமானியப் பேரரசின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்படும் காயூஸ் முசோனியூஸ் ரோபூஸ். கி.மு. முதலாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்தார். ரோமப் பேரரசின் ஆளும் வர்க்கத்துக்கு முடக்குவாதம், நீர்க்கட்டு, வலி மேலும் படிக்க..
சக்கரவர்த்தி பெங்குயின்
பறக்க முடியாத பறவை இனம் பெங்குயின். அவை தங்கள் சிறகுகளைத் துடுப்புகளாகத் தகவமைத்துக் கொண்டவை. நீரில் நீந்துவதற்கு துடுப்புகளைப் பயன்படுத்தும். பூமியின் தென் அரைக்கோளப் பகுதியிலும், வடக்கே கலப்பகோஸ் தீவுகளிலும் பெங்குயின்கள் அதிகமாக வாழ்கின்றன. உணவுக்காக பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிலி, அர்ஜெண்டினா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. பெங்குயின்களின் முக்கிய உணவு மீன்கள். பெங்குயின் வகைகளில் மிகப் பெரியது சக்கரவர்த்தி பெங்குயின் எனப்படும் ‘எம்பரர் பெங்குயின்’. ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரமும் 35 மேலும் படிக்க..
வெள்ளைப்பூண்டு சாகுபடி
இது ஒரு மணமூட்டும் பயிர். வணிக ரீதியில் நம் நாட்டில் பயிரிடப்படுகிறது. வைட்டமின் பி6, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, காப்பர், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. பச்சைப்பூண்டில் அஸ்கார்பிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் மலைப்பூண்டு பிரபலம். மேல்பழநி மலைப்பகுதிகளான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை பகுதிகளில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இரகங்கள் : ஊட்டி 1, சிங்கப்பூர் ரெட், மதராசி, ஆகிய பூண்டு இரகங்கள் தமிழ்நாட்டில் சாகுபடி மேலும் படிக்க..
குறைந்த செலவில் இயற்கை உரம் தயாரிப்பு
ரூ 800 செலவில் ஒரு பண்ணைக்கு தேவையான எல்லா இயற்கை உரம் தயாரிப்பதை பற்றிய ஒரு வீடியோ நன்றி: யூடுப், India Water Portal
எள் உற்பத்தியில்100 நாளில் ரூ.20 ஆயிரம் வருவாய்
கண்மாயில் தண்ணீர் இல்லாத போதும், ராஜபாளையம் விவசாயி ஒருவர் எள் பயிரிட்டு, 100 நாட்களில் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து சாதித்து உள்ளார் . கடந்த இருஆண்டுகளாக ராஜபாளையத்தில் பருவமழை பெய்யாததால், விவசாயிகள் பலவிதத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால், நெல் விவசாயமும் பாதித்தது. இதையெல்லாம் கணக்கிட்டு, எள் விவசாயத்தில் இறங்கி சாதித்து உள்ளார் விவசாயி மதுரை பாண்டி. ராஜபாளையம் பிரண்டைகுளம் கண்மாயில், 120 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடந்த நிலையில், தண்ணீர் இல்லாததால் பலர் மேலும் படிக்க..
சோளம் சாகுபடி
சோளம் சாகுபடி மேற்கொண்டால் 100 நாளில் ரூ. 60 ஆயிரம் வருமானம் ஈட்டலாமென்றார் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் கே. வைரவன். ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்காச்சோளம் சாகுபடி பயிற்சியைத் தொடக்கி வைத்து அவர் பேசியது: தானியங்களின் அரசியாக திகழும் மக்காச்சோளத்தில் சக்தி 349 கிராம், கலோரி, புரதம் 10.4 கிராம், கொழுப்பு 1.9 கிராம், மாவுச்சத்து 72.6 கிராம், கால்சியம் 25 மி.கி, இரும்பு 4.1 மி.கி. மற்றும் மேலும் படிக்க..
சிப்பி காளான் இலவச பயிற்சி முகாம்
“சிப்பி காளான் வளர்ப்பு குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் நடக்கிறது’ என, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். நாமக்கல்-திருச்சி சாலையில், அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், சிப்பி காளான் வளர்ப்பு குறித்த முழு விபரங்களுடன் கூடிய இலவச பயிற்சி, வரும், 2014 ஜூலை 22ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது. எனவே, ஆர்வம் உள்ளவர்கள் கூடுதல் தகவல்களுக்கு, 04286266 மேலும் படிக்க..
வெண்டை சாகுபடி
தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றான வெண்டை சாகுபடியில் ஒருங்கிணைந்த மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல மகசூல் மற்றும் சிறந்த வருமானம் பெறலாம். இரகங்கள்: கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார். மண் மற்றும் தட்பவெப்பநிலை: வெண்டை பயிரானது வெப்பத்தை விரும்பும் பயிராகும். நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்கு மேலும் படிக்க..
உரமாகப் பயன்படும் தக்கைப்பூண்டு சாகுபடி
திருப்புல்லாணி அருகே செடிகளைப் பயிரிட்டு ஆறடி உயரம் வரை வளர்த்து அதை உரமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பொக்கரனேந்தல் கிராமத்தில் வசிக்கும் விவசாயி சாத்தையா. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தக்கைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் அடுத்து சாகுபடி செய்வதற்காக போடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரம் போடத் தேவையில்லை. அதிகமான செலவும் இருக்காது. இதுகுறித்து விவசாயி சாத்தையா கூறியது: மேலும் படிக்க..
பப்பாளி கிராமம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திப்பட்டி கிராம விவசாயிகள் தங்களது தொழில் திறமையை விவசாயத்தில் புகுத்தி சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் இயற்கை உரத்தை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு விளைவிக்கப்படும் பயிர்கள் செழுமையாகவும், உயிர்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குவதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வத்திப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சி. ஆண்டிச்சாமி,65. இவர், தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் நிதிப்பிரிவு இணை செயலராக 34 ஆண்டுகள் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது மேலும் படிக்க..
தேனீ வளர்ப்பு பயிற்சி
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2014 ஜூலை 16-ல் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது இதுகுறித்து மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி.திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் பயிற்சியில், ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கேற்றுப் பயன் பெறலாம். பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள விவசாயிகள் மையத்தை (04328293592), அல்லது பயிர் பாதுகாப்பு தொழில் நுட்ப வல்லுநரை (09787620754) மேலும் படிக்க..
துவரையில் சாகுபடி டிப்ஸ்
துவரையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க நவீன சாகுபடித் தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு முறையை விவசாயிகள் பின்பற்றலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடையில் நிலத்தை 2 முதல் 3 முறை ஆழ உழவு செய்வதன் மூலம் துவரை சாகுபடியில் பூச்சி நோய் தாக்குதல் குறைவதுடன், களைக் கட்டுப்பாடும் ஏதுவாகிறது. ஆழமாக உழவு செய்வதால் பெய்யக்கூடிய மழை நீர் நிலத்திலிருந்து மேலும் படிக்க..
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
இன்று எங்கு பார்த்தாலும் பசுமைக்குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு, நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். அது பற்றி அறிவோம். 90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வருடம் முழுவதும் வளர்க்க முடியாது. ஆனால் பசுமைக் கூடாரம் அமைத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய இயலும். குளிர்பிரதேசங்களில் அதிகப்படியான குளிரில் இருந்து பயிர் களை தொடர்ந்து காப்பாற்றி, உயர் மதிப்புள்ள பயிர்களை வளர்க்க “”பசுமைக் கூடார தொழில்நுட்ப முறைகள்” மேலும் படிக்க..
தண்ணீர் தேடாத கிராமம்
வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மைக்கேல்பட்டிணத்தில் ஊரணியில் மழைநீர் சேமிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு 11 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடே ஏற்பட்டது இல்லை. மைக்கேல்பட்டிணம் கிராமத்தில் வீடுகள், அரசு அலுவலகங்களில், நூறு சதவீதம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து வெளியேறும் கூடுதல் மழைநீர், 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஊரணியில் அமைக்கப்பட்ட இரண்டு ராட்சத தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. ஊரணி எப்போதும் நிரம்பியே உள்ளது. இந்த தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச்செல்லும் மக்கள், மேலும் படிக்க..
புதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்
காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்களைப் பார்த்து பலரும் வியக்கின்றனர். அரிய வகை மரங்களைப் பார்வையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி உருவானது இந்த சுகவனம்? மக்கள் விவசாய பண்ணையின் நிறுவனர் மேலும் படிக்க..
வெப்பத்தைத் தடுக்கும் வெள்ளைப் பூச்சு
ஒரு காலத்தில் ஒரு தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுகளாகவே காணப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பொங்கல் திருநாள் நெருங்கினால், இல்லங்கள்தோறும் வெள்ளைப் பூச்சு பூசுவதைப் பார்க்க முடியும். இன்றோ இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. அடர் வண்ணங்களில் வண்ணம் பூசுவதுதான் தற்போதைய ஃபேஷன். ஆனால், வீடுகளில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நமக்கும் இந்த உலகிற்கும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அடர் வண்ணங்கள் வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும்தன்மையுடைது. வெப்பத்தைக் கிரகித்துக் கொள்வதன் மேலும் படிக்க..
வீட்டுத் தோட்டத்தைப் பாதுகாப்பது எப்படி?
வீட்டுத் தோட்டங்களைப் பராமரிப்பது என்பது தனிக் கலை. காலையில் எழுந்து செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் பராமரிப்பு அல்ல. செடிகள் காயாமலும் வதங்காமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். பூச்சு தொற்று ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். இதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. இதுபற்றி வழிகாட்டுகிறார் தோட்டக்கலை வல்லுனர் அந்தோணி ராஜ். தொற்று தவிர்க்க.. ‘’தோட்டத்தில் உள்ள செடிகளைக் குழந்தைகளைப் போலப் பராமரிக்க வேண்டும். அவற்றில் பூச்சி தொற்று ஏற்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து விட வேண்டும். குறிப்பாகப் மேலும் படிக்க..
பசுந்தீவன உற்பத்தித் திட்டம்
பசுந்தீவன உற்பத்தித் திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடைய விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனத்தை பெருக்கும் வகையில் மாநில பசுந்தீவன உற்பத்தித் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு நிகழாண்டில் (2014-15) செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பல்லாண்டு தீவனப் பயிர்களான கோ-3, கோ-4 ரகம் பயிரிடும் விவசாயிகளுக்கு கால் ஏக்கருக்கு நூறு சதவீத மானியமாக ரூ.2000ம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு மானியம் பெறலாம். குறைந்தபட்சம் மேலும் படிக்க..
மா பழுக்க வைக்கும் முறை
மாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய சுகாதார முறை குறித்து கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை அலுவலர் குமரேசன் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அனைத்து மக்களாலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் மாம்பழம் சிறந்து விளங்குகிறது. புதிய முறைப்படி மாம்பழங்களை பழுக்க வைக்க காற்றுப் புகாத அறைகளில் எத்திரல் என்ற வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து 5 இடங்களில் வைக்க வேண்டும். இந்த கலவையில் இருந்து மேலும் படிக்க..
இயற்கை வேளாண்மைக்கு செலவு குறைவு
பரவலாக பலவகைப் பயிர்களில் கையாளப்பட்டு இயற்கை வேளாண்மை உத்திகள் பற்றி பொய்யான கருத்தாக அதிக செலவு பிடிக் கும். உத்தி இது என்று பலரும் அறியாமையில் தெரிவித்து வருகிறார்கள். உண்மை யாதெனில் அதிக விலை கொண்ட இடுபொருட்களான இரசாயன உரங்களையும் பயிர் பாதுகாப்பு மருந்துகளையும் தவிர்த்து மேற்கொள்ளப்படும் இந்த உத்தியால் செலவு மிச்சம் தான் ஆகும். குறிப்பாக உரத்தின் பயன்பாட்டை உள்ளூரில் கிடைக்கும் பயிர்க்கழிவுகள், மண்புழு மற்றும் சாண எரு, பறவைக் கழிவு முதலியவற்றைக் கொண் டும் மேலும் படிக்க..
தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை
தென்னையின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சலுக்கும் பேரூட்டகங்கள் மற்றும் நுண்ணூட்டகங்கள் பெரிதும் உதவுகின்றன. தென்னையில் காணப்படும் ஒவ்வொரு சத்துக்களின் குறைகளும் அதன் நிவர்த்திகளைப் பற்றியும் காண்போம். தழைச்சத்து : தென்னை மரத்தின் வளர்ச் சியை ஊக்குவிக்கின்றது. பெண் பூக்கள் உற்பத்தியாவதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது. இதன் பற்றாக்குறையால் தென்னை மரத்தின் வளர்ச்சியை பாதித்து இளம் மற்றும் முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகின்றன. தென்னையில் 14வது இலையில் இதன் அளவு 1.8-2.0 மேலும் படிக்க..
வெங்காய சாகுபடியில் சாதனை படைக்கும் சிவில் இன்ஜினியர்
சிவில் இன்ஜினியராக இருந்து சாதிக்க முடியாததை, வெங்காய சாகுபடியில் சாதித்துள்ளார் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த வேல்ஆண்டவர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் வேல்ஆண்டவர். மதுரை தியாராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் 1987ல் சிவில் இன்ஜினியரிங் முடித்தார். இவ ருடன் படித்த பலரும் படிப்புக்கேற்ற வேலை, வருவாய் தேடி வெளியூர், வெளிநாடு சென்றபோது, இவர் மட்டும் விவசாயத்தில் நாட்டம் செலுத்தினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெங்காய சாகுபடியில் அதிக மேலும் படிக்க..
சொட்டுநீர் பாசன முறையில் எலுமிச்சை சாகுபடி!
சத்தி காளிதிம்பம் மலைக் கிராம மக்கள் வித்தியாசமான சொட்டுநீர் பாசன முறையில் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை வனச்சரகத்தில் உள்ளது காளிதிம்பம் மலைக் கிராமம். அடர்ந்த வன்ப் பகுதியில் உள்ள இக் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பருவமழையை நம்பித்தான் இங்கு விவசாயம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால், பயிர்சாகுபடி செய்ய முடியாமல் இங்குள்ள விளைநிலங்கள், தரிசு நிலங்களாக மாறிவிட்டன. வைகாசி முதல் வாரத்தில் நல்ல மேலும் படிக்க..
கறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி?
பால் பண்ணைத் தொழில் மீதான ஆர்வம் விவசாயிகள் மட்டுமன்றி, பலதரப்பட்ட மக்களிடமும் அதிகரித்து வருகிறது. அதனால், பால் பண்ணைகள் அமைத்து லாபகரமாக நடத்திட தரமான பசுக்களைத் தேர்வு செய்து வளர்ப்பது அவசியமாகும். தரமான பசுக்களைத் தேர்வு செய்வது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை இணைப் பேராசிரியர் த.ஆனந்த பிரகாஷ்சிங் கூறியது: ஒரு தனிப்பட்ட பசுவின் உற்பத்தித் திறனை மேலும் படிக்க..
கருவேப்பிலை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
சின்னசேலம் பகுதிகளில் கருவேப்பிலை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சின்னசேலம் தாலுகாவில் பாண்டியங்குப்பம், தகரை, கல்லாநத்தம் உள்ளிட்ட 85 கிராமங்கள் உள்ளது. கரும்பு, மரவள்ளி, மக்காசோளம், கருவேப்பிலை பயிரிடுகின்றனர். குறைந்த செலவு அதிக லாபம் உள்ளிட்ட காரணங்களால் கருவேப்பிலை பயிரிடுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். கருவேப்பிலை ஒரு முறை நடவு செய்தால் 10 ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம். மரமாக வளர 2 முதல் 5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். குத்தாக பயிரிடுவதற்கு மேலும் படிக்க..
இயற்கை உரத்தில் நெல் சாகுபடி
சம்பா பட்டத்தில், இயற்கைஉரங்களான, அவுரி, சணப்பை, தக்கை பூண்டு ஆகியவற்றை பயன்படுத்தி, பயிர் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய தாலுகாவில், பாலாற்று நீர் மற்றும் கிணற்று நீரை பயன்படுத்தி, சாகுபடி செய்யும் விவசாயிகள், தற்போது, சம்பா பட்டத்தில், பயிர் செய்ய தயாராகி வருகின்றனர். இயற்கை உரம் செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், நாற்று விட்ட, 18 நாட்களில், நடவு செய்வதற்காக, நிலங்களை தயார் மேலும் படிக்க..
பொட்டாஷ் பாக்டீரியா
பொட்டாசியம் எனப்படும் சாம்பல்சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளாய் பயிர்களுக்கு அளிக்கிறது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகிறது. வேர் உறிஞ்சி சேர்க்கும் நீர், தாது உப்புக்கள் இலை பாகங்களில் சென்று சேருவதற்கும் மேலும் இலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் செடிகளின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும்பங்கு வகிக்கிறது. பொட்டாசியத்தை கரைக்கவல்ல பாக்டீரியாக்கள் “சிலிகோ பாக்டீரியா’ எனப்படுகின்றன. அதன் ஆற்றலானது களிமண்ணோடு இணைந்து காணப்படுகிறது. சிலிக்கா, அலுமினியம், பொட்டாசியம் ஆகிய அயன்களின் கூட்டுக் கலவைகளிலிருந்து சிலிக்காவை மேலும் படிக்க..
வெங்காய சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்க..
வெங்காயம் சாகுபடியில் விளைச்சல் பெருகுவதற்கான ஆலோசனைகளை சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சின்ன வெங்காயம்: இதை ஏப்ரல், மே மாதங்களில் பயிரிடலாம். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது. வெப்பமான பருவநிலை, போதுமான மண் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும். சின்ன வெங்காயத்தில் கோ 1 முதல் 5 வரை உள்ள ரகங்கள் மற்றும் மதுரை 1, பஞ்சமுகி ஆகிய ரகங்கள் மேலும் படிக்க..
பூசணி சாகுபடி
தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளில் பயன்படுத்தப்படும் காய்கனிகளில் பூசணி வகைகளுக்கு தனியிடம் உண்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும் ஹோட்டல்கள் போன்ற அதிகளவில் உணவு தயாரிக்கும் இடங்களில் பூசணி வகைகளைப் புறந்தள்ள முடியாது. சாம்பல் பூசணி சாகுபடிகுறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாம்பல் பூசணியில் கோ 1, கோ 2 ஆகிய ரகங்கள் உள்ளன. நல்ல ஆழமான இருமண்பாட்டு நிலத்தில் சாம்பல் பூசணி நன்கு வளரும். மானாவாரியில் பயிரிட களிமண் கலந்த நிலம் சிறந்தது. மேலும் படிக்க..
மானாவாரி பருத்தி சாகுபடிக்கு சட்டிக் கலப்பை உழவு அவசியம்
பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் சட்டிக் கலப்பை உழவு அவசியம் என்றார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ப. விஜயலட்சுமி. இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி முறையில் பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலான மழை பெய்ததால் விவசாயிகள் உழவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மானாவாரி பருத்திச் சாகுபடிக்கு கரிசல் மண் பகுதிகளில் சட்டிக் கலப்பை கொண்டு மேலும் படிக்க..
நாவல் சாகுபடியில் ரூ. 6 லட்சம்
அவ்வை பாட்டிக்கு கிடைத்த ஞானத்தை போல, நாவல் பழத்தின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மெட்டூர் விவசாயி ஜெயக்குமார். இவரது, பண்ணையில் 1.5 ஏக்கரில் குட்டை ரக நாவல் மரங்களையும், மீதி இடத்தில் நெல்லியும் வளர்க்கிறார். தனது நர்சரிக்காக, ஆந்திராவிற்கு செடிகள் வாங்கப் போன போது, பெரிய நாவல் கனியை பார்த்து சாகுபடி செய்ய ஆவல் கொண்டார். ஒன்றரை ஏக்கரில் 80 செடிகளை 22 அடி இடைவெளியில் நட்டு, சொட்டு நீர் பாசனம் அமைத்தார்; மேலும் படிக்க..
கோடையில் பலன் தரும் எள் சாகுபடி
எள் எல்லாவித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. தமிழ்நாட்டில் அதிகப் பரப்பளவில் எள் சாகுபடி செய்ய முடியும். எள் அடுமனை (பேக்கரி) பொருட்கள் தயாரிப்பில் வாசனை மற்றும் அழகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு எள் விதையை மணலுடன் கலந்து சீராக தூவி விதைத்தால் ஒரு கிலோ விதை போதுமானதாக இருக்கும். மதுரையைச் சேர்ந்த எ.எஸ்.தர்மராஜன் விவசாயிகள் விவசாயிகளின் தந்தை என்று சொல்வார்கள். தர்மராஜன் பசுமைக்குடில்களில் என்ன பயிர் சாகுபடி செய்வது என்பது பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறி மேலும் படிக்க..
வாழையில் எர்வினியா கிழங்கு அழுகல்நோய்
நுண்ணுயிர் கிருமியான பாக்டீரியா (எர்வினியா கரட்டோவோரா) வாழையில் கிழங்கு அழுகல் நோய் ஏற்படுவதற்கு முக்கிய நோய்க்காரணியாக உள்ளது. இந்த நோயின் தாக்கம் திசுவளர்ப்பு வாழையில் (ஜி 9 ) அதிகமாக காணப்படுகிறது. கிழங்கு அழுகல் தாக்கப்பட்ட வாழையின் நடுக்குருத்து அழுகி வளர்ச்சி குறையும். அதற்கு சற்று முன்னால் தோன்றிய இலை தண்டு பகுதியினுள் சொருகியது போன்று காணப்படும். நோய் தாக்கப்பட்ட மரத்தினை காய்த்த தண்டுப்பகுதி கிழங்கிலிருந்து பிரிந்து கீழே விழும். கிழங்கு மட்டும் மண்ணிலேயே இருக்கும். கிழங்கானது மேலும் படிக்க..
புதிய நெல் ரகம் "திருப்பதி சாரம் 5"
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த நெல் இரகம் கார் பிந்தய பாசனப் பருவங்களில் பயிரிட ஏற்றது. இந்த இரகம் ஒரு எக்டருக்கு சராசரியாக 6300 கிலோ விளைச்சலைத் தருகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்டு பயன்பாட்டில் உள்ள அம்பை 16 இரகத்தை விட 14 விழுக்காடு அதிக விளைச்சலைத் தரும். விதைத்த 118 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த இரகம் தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு புகையான் ஆகிய பூச்சிகளுக்கு மிதமாக எதிர்ப்புத்திறன் கொண்டது. இந்த மேலும் படிக்க..
இயற்கை உரமாகும் தென்னை நார்க்கழிவு
தென்னை நார் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம், விளைநிலத்தின் ஈரப்பதத்தைக் காக்கும் என்று கயிறு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த வகையில் இயற்கை உரம் தயாரிப்போருக்கு கயிறு வாரியம் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. இது குறித்து கயிறு வாரியம் தெரிவித்துள்ளதாவது: தென்னை மரத்திலிருந்து விளைபொருளாகக் கிடைக்கும் தேங்காய், மனித வாழ்வில் பல விதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேங்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தேங்காய் மட்டைகளோ முழுவதுமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், தென்னை நாரை பிரித்தெடுக்கும்போது உபரியாகக் கிடைக்கும் நார் கழிவுகளைப் மேலும் படிக்க..
பப்பாளி உற்பத்தியில் சாதனை!
பப்பாளி சாகுபடியில் இதுவரை ஒரு மரத்தில் 80 கிலோ உற்பத்தி தான் அதிகபட்சமாக இருந்து வந்த நிலையில், இயற்கை முறை வேளாண் உற்பத்தி மூலமாக தங்கள் பண்ணை மரத்தில் 130 கிலோ பப்பாளியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது, மேட்டுப்பாளையம் ஈடன் நர்சரி கார்டன்ஸ். இந்த சாகுபடி குறித்து ஈடன் நர்சரி கார்டன்ஸ் உரிமையாளர் எஸ்.ராஜரத்தினம் கூறியது: 1998-இல் துவக்கப்பட்ட இப் பண்ணையில் பல்வேறு வகையான மலர், மர, பழ நாற்றுக்களும் உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் மேலும் படிக்க..
கரும்புகளுக்கு இடையே தக்கைப் பூண்டு
கரும்பு பயிருக்கு தழைச்சத்து கிடைக்க வேண்டி, தக்கைப் பூண்டு விதைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெண்ணாடம் அடுத்த வடகரை, நந்திமங்கலம், கோனூர், தாழநல்லூர், முருகன்குடி, துறையூர், அரியராவி, பெ.பூவனூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் பயிரிட்ட கரும்புகளுக்கு இடையே தக்கைப்பூண்டு விதைப்பு செய்தனர். அவை, செழிப்பாக வளர்ந்துள்ள நிலையில், அதனை பிடுங்கி கரும்புகளின் அடிப்பகுதியில் வைத்து, மண் அணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அரியராவி விவசாயி மேலும் படிக்க..
நிலகடலையில் அதிக லாபம் பெற
“நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவதன் மூலம், தரமான மகசூலை பெறலாம்’ என, எருமப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல்அடுத்த, எருமப்பட்டி வட்டாரத்தில், தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, சோளம் ஆகிய பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யத் துவங்கி உள்ளனர். நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவதால், காய் தரமாக கிடைக்கிறது. மேலும், அதில் உள்ள கால்சியம், சல்பர் சத்தினால், ஓடுகள் கெட்டியாவதுடன், எண்ணெய் சதவீதமும் மேலும் படிக்க..
பாரம்பரிய நெல் விதை விழா 2014
மே மாதம் 29-30 அன்று திருத்துறைபூண்டி தாலுகா ஆதிரங்கம் இடத்தில உள்ள CREATE டிரஸ்ட் பாரம்பரிய நெல் விதைகள் விழா நடத்தியது. இந்த ஆண்டு 4500 விவசாயிகள் கலந்து கொண்டனர். ஒவ்வருவரும் 4 கிலோ நெல் கொடுத்து 2 கிலோ நெல் விதை எடுத்து எடுத்து சென்றனர். 2007 வருடம் 15 வகை நெல் விதைகள் மட்டுமே ஆரம்பித்து இந்த வருடம் 151 வகை பாரம்பரிய நெல் விதைகள் இந்த விழாவில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டன இந்த விழாவில் மேலும் படிக்க..
கொடைக்கானல் வனப் பகுதிகளில் குப்பை அகற்றும் முகாம்
கோடை விடுமுறை வந்தால் போதும். எல்லோரும் மலை பகுதி பார்த்து ஓடுகின்றோம். நம்மில் எவ்வளவு பேர் மலை பகுதிகளிலும் காடுகளிலும் குப்பையை போடாமல் அழகு கெடாமல் சென்று வருகிறோம்? தினமணியில் வந்துள்ள ஒரு செய்தி – கொடைக்கானலில் சுற்றுலா சீசன் முடிந்தவுடன் அங்கே உள்ள குப்பை பற்றி.. கொடைக்கானல் வனப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் முகாமில் பள்ளி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக சீசன் நிலவி வந்த வேளையில் மேலும் படிக்க..
இந்திய மிளகாய் இறக்குமதி தடை
சிறிது நாட்கள் முன்பு இந்தியாவின் புகழ் பெற்ற அல்பான்சோ மாம்பழங்கள் இறக்குமதி செய்ய ஐரோப்பா தடை செய்தது. அளவுக்கு அதிகம் பூச்சி மருந்துகளை படுத்துவதால் இந்த தடை. இந்தியாவில் தான் உலகத்தில் தடை செய்ய எத்தனையோ பூச்சி மருந்துகள் எளிதாக கிடைக்கிறதே! இப்போது சவுதி அரேபியா நாடு இந்தியாவில் இருந்து மிளகாய் இறக்குமதி செய்ய தடை செய்து உள்ளது.. தினமலரில் இருந்து செய்தி கொச்சி:இந்திய பச்சை மிளகாய் இறக்குமதிக்கு, சவுதி அரேபிய அரசு, தடை விதித்துள்ளது.வேளாண் சாகுபடியை மேலும் படிக்க..
நெல்லுக்கு மேல் உரமாக இயற்கை உரங்கள
இரண்டுமுறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தோடு 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு, ஒருகிலோ அசோபாஸ் அல்லது தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் வைத்திருந்து தூவ வேண்டும். மேல் உரம் கொடுத்து 10 முதல் 15 நாட்களுக்கு பிறகு, வேளாண்மைத்துறை வெளியிட்டிருக்கும் “பச்சைவண்ண அட்டையைப் (லீப் கார்டு) பயன்படுத்தி இலைகளின் நிறத்தைப் பார்க்க வேண்டும். அதில் மூன்றாம் எண்ணுக்கு மேலும் படிக்க..
முறையான பால் கறக்கும் முறைகள்
பொதுவாக கறவை மாடுகளில் பால் கறப்பதற்கு அனைத்து விரல்களையும் பயன்படுத்தி பால் கறத்தல், கட்டை விரலினை உட்புறமாக மடக்கி கறத்தல், கட்டை விரல், ஆள்காட்டி விரல்களை மட்டும் பயன்படுத்தி கறத்தல் ஆகியமுறைகளில் பால் கறக்கப்படுகிறது. பிற முறைகளை ஒப்பிடும் போது அனைத்து விரல்களையும் பயன்படுத்தி கறக்கும்முறை மிகவும் சிறந்ததாகும். இம்முறையில் பால்காம்புகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. மடிநோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இறுதியாக பால் கறப்பதின் மூலம் பிற கால்நடைகளுக்கு நோய் பரவுவதை தடுக்க முடியும். பால் கறவைக்கு மேலும் படிக்க..
கோவைக்காய் சிறப்புகள்
கோவை காய்கள் பச்சையாகவும் பழம் சிவப்பாகவும் இருக்கும். சிவப்பு நிறத்தின் சிறப்பினைச் சொல்ல கோவைப்பழம் உதவுகிறது. பெண் செடியின் கிளைத்துண்டுகள் விதைகளாகப் பயனாகின்றன. வேர்க்கிழங்குகளையும் விதைக்கப் பயன்படுத்தலாம். கோவைக்காய் தமிழகத்தில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிக முறையில் உற்பத்தியாகின்றது. ஜூன்- ஜூலையில் 15 செ.மீ நீள பெண் கொடித்தண்டுகளை நடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. 10% ஆண் கொடித்தண்டுகளையும் நடுதல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். சாகுபடியாகும் இது 6 மாதங்களில் அறுவடைக்கு வரும். ஆனால் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலும் மேலும் படிக்க..
வீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை
வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் வீரிய வெள்ளரி சாகுபடியில் செஞ்சி விவசாயிகள் சாதனை படைத்து வருகின்றனர். செம்மண் பூமியாக உள்ள மேல்மாம்பட்டு, தொரப்பாடி, ஈயகுணம், எய்யில், தாதங்குப்பம், தாயனூர், கண்டமநல்லூர், மேல் அருங்குணம், புத்தகரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங் களில் வெளிநாடுகளுக்கு ஊறுகாய் தயாரித்து ஏற்றுமதி செய்யும் வீரிய வெள் ளரியை (மாத்திரை காய் ) சாகுபடி செய்கின்றனர். குறைந்த இடம் வீரிய வெள்ளரியை 20 சென்ட் முதல் 1 ஏக்கர் வரை ஆடி, கார்த்திகை, சித்திரை என மேலும் படிக்க..
முந்திரி ஒட்டுச் செடிகள் விற்பனை
விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், 3 லட்சம் முந்திரி ஒட்டுச் செடிகள் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டது. கடந்த 2011 டிசம்பர் 30ம் தேதி வீசிய “தானே’ புயலில் ஒரு கோடிக்கும் அதிகமான முந்திரி மரங்கள் வேருடன் சாய்ந்தன. அதைத் தொடர்ந்து “தானே’ புயல் மறுவாழ்வு திட்டத்தில், புயலால் பாதித்த விவசாயிகளுக்கு விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம், மேலும் படிக்க..
நெற்பயிரில் துத்தநாக குறைபாடு
குத்தாலம் வட்டாரத்தில் தற்போது நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அடியுரமாக தழைச்சத்து, மணிச்சத்து, சம்பல்சத்து ஆகிய பேரூட்ட சத்துக்கள் இடுவதோடு, நெல் பயிருக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் நுண்ணூட்டச் சத்தான துத்தநாகச் சத்தையும் இடவேண்டும். துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்பட்டால், நெற்பயிர் வளர்ச்சி குன்றி கட்டையாகவும், சமமற்ற உயரமுள்ள பயிராகவும், தூர் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும். அடி இலைகளின் நரம்பு பகுதிக்கு இடைப்பட்ட பகுதி வெளுத்து காணப்படும். இலைகளில் பழுப்பு மேலும் படிக்க..
பருத்தியில் பூச்சி கட்டுப்பாடு
பருத்திப் பயிரில் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுவதன் மூலம் மகசூல் இழப்பைத் தவிர்த்து கூடுதல் லாபம் பெறலாம். இளம்பருவம் (விதைத்த 50 நாள்கள் வரை): இப் பருவத்தில் தத்துப்பூச்சி, அசுவினி தாக்குதல் தென்படும். தத்துப்பூச்சி தாக்குதலால் பருத்தி இலைகள் மஞ்சள் நிறமாகி, ஓரங்கள் மடிவதுடன் இலைகள் உதிரும். அசுவினி தாக்கப்பட்ட பயிர்களின் தளிர் இலைகள் சிறிதாக தோன்றுவதுடன் இலைகள் கிண்ணம்போலக் குவியும். தத்துப்பூச்சி, மேலும் படிக்க..
மானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற…
ஊட்டமேற்றிய தொழு உரங்களைத் தயாரித்து மானாவாரி நிலங்களில் பயன்படுத்தினால் அதிக மகசூல் பெறலாம். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் கே.மோகன் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் 60 சதவிகித செம்மண் உள்ளன. இவ்வகை நிலங்களில் மணிச்சத்து பற்றாக்குறை அதிகளவில் காணப்படுகிறது. இதை நிவர்த்தி செய்து, மணிச்சத்தை எளிதில் பயிருக்கு கிடைக்கச் செய்வதற்கும், மானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற மணிச்சத்தை தொழு உரத்துடன் ஊட்டமேற்றி பயிர்களுக்கு இடுவது அவசியமாகும். இவ்வாறு இடப்படும் தொழு உரம் ஊட்டமேற்றிய தொழு உரமாகும். மேலும் படிக்க..
புதிய அரசும் விவசாயமும் – III
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வயல் அளவில் வயல்வெளிச் சோதனைகளை அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று கொண்டிருகிறது. மக்களவை பொது தேர்தல் காரணமாக உச்ச நீதி மன்றம் வழக்கை ஜூலை 2014 வரை தள்ளி போட்டு இருக்கிறது இந்த வழக்கில் புதிய NDA அரசு எந்த நிலை எடுக்க போகிறது என்பது முக்கியம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஆதரிக்கும் விஞானிகள் கொடுக்கும் ஒரு முக்கிய காரணம்: இந்தியாவின் ஜனத்தொகை பெருகி கொண்டே மேலும் படிக்க..
புதிய அரசும் விவசாயமும் – II
குஜராத் முதல்வர் இப்போது இந்திய பிரதமர். இவர் குஜராத் முதல் மந்திரி இருந்த போது அங்கே, விவசாயம் நன்கு வளர்ந்தது. ஒரு வருடம் இரு வருடம் இல்லை, 10 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் கிட்ட தட்ட 10% வருடம் வளர்ந்து உள்ளது. இதை பற்றி 2 ஆண்டுகள் முன்பு இப்படி எழுதினோம்: நாட்டில் விவசாயம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. விவசாயம் செயதால் எதிர்காலம் இல்லை என்ற நிலை பல மாநிலங்களில் உள்ளது. ஆனால் குஜராத் மேலும் படிக்க..
அவுரி செடி சிறப்புகள்
திண்டிவனம்:திண்டிவனம் பகுதியில் அவுரி செடி பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின் றனர். திண்டிவனம் அடுத்த கிளியனூர், கொங்கரப்பட்டு, உப்புவேலூர், முருக்கேரி, வடநெற்குணம், ஆலங்குப்பம், பிரம்மதேசம் உள்பட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் தர்பூசணி, மணிலா, நெல், கேழ்வரகு, கம்பு பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தனர்.வெயில் மற்றும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டதால் சில மாதங்களாக விவசாயிகள் பயிர் செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை. தற்போது பல விவசாயிகள் அவுரி செடி பயிர் செய்ய மேலும் படிக்க..
நிலக்கடலை/மணிலா சாகுபடி டிப்ஸ்
நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறும் வழிமுறைகளை வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெண்ணந்தூர் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் கு.சீனிவாசன் தெரிவித்துள்ளது: நிலக்கடலை பயிர் நடப்பு பருவத்தில் வெண்ணந்தூர் வட்டாரத்தில் சுமார் 2,000 ஏக்கரில் மானாவாரியாக பயிர் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற ஜிப்சம் மற்றும் ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க வேண்டும். ஜிப்சத்தை பயிருக்கு இடுவது மிகவும் அவசியமானதாகும். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்து 24 சதவீதமும், கந்தகச்சத்து 18 சதவீதமும் உள்ளது. மேலும் படிக்க..
கரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளி
கரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளி சாகுபடி செய்ய சத்தியமங்கலம் வட்டாரப் பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்குள்ள கரும்பு விவசாயிகள் கிணற்று மற்றும் ஆற்று நீர் பாசனம் மூலம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யத் துவங்கிவிட்டனர் . 10 மாதகால பயிரான மரவள்ளிக்கிழங்கு நடவு செய்யப்பட்டு 3 மாதங்கள் வரை 10 நாள்களுக்கு ஒரு முறையும், அதன்பிறகு 15 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சப்படுகிறது. உழவுக்கூலி, களைவெட்டுதல், உரமிடுதல் உள்ளிட்ட செலவினங்கள் உள்பட ஒரு ஏக்கருக்கு மேலும் படிக்க..
புதிய அரசும் விவசாயமும்
நரேந்திர மோடி அவர்கள் இந்திய தேர்தல் வரலாற்றில் ராஜீவ் காந்திக்கு பின் அதிக அளவு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகள் நடந்த UPA அரசால் விவசாயம் மிகவும் மாறி விட்டது. 100 நாட்கள் திட்டத்தால் கிராம புறங்களில் வேலை செய்பவர்கள் இப்போது இல்லை. ஆட்கள் தட்டுபாடு மூலம் வேளாண்மை இயந்திர மயம் ஆகி வருகிறது. டீசல் விலை ஏற்றம் மற்றும் மின் பற்றாக்குறை மூலம் விவசாயம் செய்வது லாபம் அற்ற ஒரு தொழில் ஆகி வருகிறது. மேலும் படிக்க..
குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி
கோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை தருவது வெள்ளரி சாகுபடி ஆகும். இந்தப் பயிர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த விவசாயிகளுக்கு அதிக நிலப்பரப்பு இருக்காது. இவர்கள் வெள்ளரி சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர் தான் செய்ய இயலும். கிணற்றுப் பாசனம் இருந்தால் டீசல் இன்ஜின் கொண்டு பாசனம் செய்யும் வசதி தான் இருக்கும். கிணற்றில் தண்ணீர் இல்லை என்றால் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயப் பணிகளை தொடரலாம். வெள்ளரி சாகுபடி மேலும் படிக்க..
காய்கறி, பழப்பொருள்களை தயாரிக்க பயிற்சி
வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருள்கள் தயாரித்தல் குறித்த இரு நாள் பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2014 மே 28 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,000 செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரை பதிவு செய்துகொள்ள இயலாதவர்கள் தலைவர், அறுவடை மேலும் படிக்க..
பல அடுக்கு தென்னை சாகுபடி
‘தென்னை சாகுபடியில், பல அடுக்குகளாக தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்’ என, தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. கிணற்றுப்பாசனத்தின் மூலம், தென்னை மரம் வளர்க்கும் விவசாயிகள், பல அடுக்குகளாக தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சாகுபடியால், மண் வளம் அதிகரிப்பதுடன், வருவாயும் பல மடங்கு உயரும். இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: தென்னந்தோப்புகளில், மரங்களுக்கு இடையில் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி, பல்வேறு மேலும் படிக்க..
வாழையை தாக்கும் நோயை கட்டுப்படுத்த..
“கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வாழையை தாக்கும் நோயை கட்டுப்படுத்த, “பஞ்சகாவ்யா, தசக்காவ்யா’ மருந்தை பயன்படுத்த வேண்டும்’ என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தி உள்ளது. கூடலூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமீபத்தில் எதிர்பாராத வகையில் காற்றுடன் பெய்த மழையில் வாழை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனை கட்டுப்படுத்த இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட “பஞ்சகாவ்யா மற்றும் தசகாவ்யா‘ ஆகியவற்றை தனித்தனியாக, 300 மில்லி லிட்டர் மேலும் படிக்க..
நிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை வீடியோ
நிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை – ஒரு வீடியோ நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்
பால் காளான் உற்பத்தி இலவச பயிற்சி
பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், பால் காளான் உற்பத்தி தொடர்பான இலவச பயிற்சி வகுப்பு 2014 மே 20-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி. வெங்கடேசன். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் காளான் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. இதனால் சிப்பிக் காளான் பெருமளவில் உற்பத்தி செய்து வருகின்றனர். பால் காளான் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு போதிய மேலும் படிக்க..
வேளாண் அறிவியல் நிலையத்தில்மா கன்றுகள், விதைகள் விற்பனை
மா கன்றுகள், சம்பங்கி விதை கிழங்கு ரகங்கள் ஆகியவை நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசந், பெங்களூரா, சேலம் பெங்களூரா, நீலம் போன்ற மா கன்று ரகங்கள் நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் விற்பனைக்கு தயாராக உள்ளன. தவிர, காய்கறி விதைகளான தக்காளி, புடலை, பாகல், பூசணி, பரங்கி, சிறுகீரை, தண்டுக்கீரை, செடிமுருங்கை, செடி அவரை மேலும் படிக்க..
பாகற்காய் பந்தலில் சுரைக்காய் ஊடுபயிர்
விழுப்புரம் அருகே பாகற்காய் பந்தலின் கீழ், சுரைக்காய் ஊடு பயிர் செய்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுகின்றனர். தற்போது விவசாயப் பணியில் பல்வேறு புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, கூடுதல் லாபம் பெறுவதற்கான முயற்சியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மரவள்ளி, சவுக்கு மற்றும் கொய்யா போன்றவை நடவு செய்தவுடன், அதில் உளுந்து, மணிலா மற்றும் மிளகாய் ஊடுபயிர் செய்கின்றனர். இவ்வாறு ஊடுபயிர் செய்யும் போது, அதன் மூலம் கிடைக்கும் லாபம், நீண்ட கால பயிர்கள் நடவு செய்த செலவு கிடைத்து மேலும் படிக்க..
விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை இலவச பயிற்சி
மதுரை விநாயகபுரத்தில் உள்ள மாநில நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில், விவசாயிகளுக்கு தண்ணீர் சிக்கனம் குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மதுரையில் 2014 ஜூன் 3 முதல் 6 வரை, திண்டுக்கல்லில் 2014 ஜூலை 1 முதல் 4 வரை, தேனியில் 2014 ஜூலை 8 முதல் 11 வரை, ராமநாதபுரத்தில் 2014 அக்., 7 முதல் 10 வரை, சிவகங்கையில் 2014 டிச., 2 முதல் 5 வரை, விருதுநகரில் 2014 ஜூன் 24 மேலும் படிக்க..
உணவு காளான் உற்பத்தி பயிற்சி
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2014 மே 13-ம் தேதி உணவு காளான் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இதுகுறித்து நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் க. சோழன் புதன்கிழமை வெளிட்ட செய்திக்குறிப்பு: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2014 மே 13-ம் தேதி உணவு காளான் உற்பத்தி குறித்த ஒரு நாள் நிலையப் பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சியில் காளான் வகைகள், மருத்துவ குணங்கள், உற்பத்தி முறைகள், மதிப்பூட்டப்பட்ட மேலும் படிக்க..
கொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள்
மரங்களை வளைத்துக்கட்டுதல் : ஓரளவு வயதான கொய்யா மரங்களில் (சுமார் 10 முதல் 15 ஆண்டுகள்) கிளைகள் ஓங்கி, உயரமா வளர்ந்து, உற்பத்தியைக் குறைத்து விடும். இதனைச் சரிசெய்ய மேற்படி கிளைகளை வளைத்து அவற்றின் நுனி பாகத்தை மண்ணுக்குள் ஒரு அடி ஆழத்தில் பதித்து அதன்மேல் கல் ஒன்றை வைத்து அவை மேலே கிளர்ந்து வராமல் செய்யலாம். அல்லது முன்பே மண்ணில் கனமான குச்சிகளோடு சேர்த்துக் கட்டலாம். இதன் மூலம் கிளைகளின் அணுக்களில் உள்ள மொட்டுக்கள் தூண்டப்பட்டு மேலும் படிக்க..
கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில், ஐ.ஓ.பி., வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், இளைஞர்களுக்கு கறவை மாடுகள்வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், 18 வயதுக்கு மேல், 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கல்விசான்றிதழ், ரேஷன்கார்டு, ஃபோட்டோவுட ன் வரும், 8ம் தேதிக்குள் புதுக்கோட்டை டவுன் மேல 4ம் வீதியில் உள்ள ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்பெற விரும்புவோர், மேலும் படிக்க..
புதிய கத்திரி வகைகள்
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் 3 வகையான கத்திரிக்காய் சாகுபடி செய்து தற்போது அறுவடை நடக்கிறது. விவசாயிகள் நேரில் வந்து சாகுபடி குறித்து அறிந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் கடந்த ஓராண்டு காலமாக வெளிமாநிலத்தில் உள்ள நெல் வகைகள், காய்கனி வகைகள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, இதன் விளைச்சல், லாப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படுகிறது. இதன்படி தை மாதத்துக்கு பிறகு பயிரிட்ட பாலூர் -2 மற்றும் வி.ஆர்.எம்.-1, உஜாலா கோல்ட் ஆகிய மேலும் படிக்க..
வறட்சியிலிருந்து கரும்பைக் காப்பாற்றும் வழிகள்
கரும்புப் பயிருக்கு வறட்சி மேலாண்மை முறைகள் குறித்து ஆரணியை அடுத்த சேவூர், சிறுமூர், அக்ராபாளையம் கிராமங்களில் செயல்விளக்க வயல் விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சேவூர் கோட்ட கரும்பு அலுவலர் மு.வேலாயுதம் பேசியது: இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. இத்தருணத்தில் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு கரும்பு பயிரில் ஒரு ஏக்கருக்கு 2.5 சதவீதம் பொட்டாஷ் கரைசலை தெளிக்க வேண்டும். அதாவது 2 முதல் 3 மாத வயதுடைய பயிருக்கு 2.5 கிலோ யூரியாவுடன் 2.5 கிலோ பொட்டாஷ் மேலும் படிக்க..
உப்பு படிமானத்தால் செயலிழக்கும் சொட்டுநீர் பாசன அமைப்புகள்
தேனி மாவட்டத்தில், சொட்டுநீர் பாசன அமைப்புகள், உப்பு படிமானத்தால் செயல்இழந்து வருகின்றன. இதனை தடுக்க, தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பயிர்களுக்கு 25 ஆயிரம் எக்டேர் பரப்பில் சொட்டு நீர் பாசன அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, வெயில் அதிகம் உள்ளதால் சொட்டுநீர் பாசன அமைப்புகளில், உப்பு படிமானம் ஆகிறது. இந்த உப்பு படிமானம் காரணமாக, நீர் பாய்ச்சுவதில் பிரச்னை ஏற்பட்டு, அமைப்புகள் செயல் இழக்கின்றன. இப்பிரச்னையை தவிர்க்க, அமிலக்கரைசலை ஒரு நாள் இரவு மேலும் படிக்க..
எருக்கம் செடி இயற்கை உரம்
வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் விவசாய தேவைக்காக ‘எருக்கம் செடி’ அறுவரை தீவிரமாக தொடங்கியுள்ளது. விவசாயத்திற்கு பெயர் போன வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதியில் கடும் வறட்சிக்கு இடையேயும் விவசாய பணியை தொடங்கியுள்ளனர். செயற்கை உரங்கள் விவசாயத்தை ஆக்கிரமித்தாலும் அடிப்படையில் இயற்கை உரங்கள் தவிர்க்க முடியாததாகவே உள்ளன. அதற்கு ‘எருக்கம் செடி’ உரம் தான் விவசாயிகளின் பாரம்பரிய ‘சாய்ஸ்’. காசு செலவில்லை, பயணங்கள் தேவையில்லை, வயல்வெளிகளில் நடந்தால் வேண்டிய எருக்கம் செடி கிடைக்கும். தேவை அதிகம் என்பதால், அவற்றை சேகரிப்பதில் மேலும் படிக்க..
இயற்கை பூச்சி நோய் மேலாண்மை
”இயற்கை வேளாண்மையில், நான்கு முறைகளில், பூச்சி நோய் மேலாண்மை செய்ய வேண்டும்,” என, மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கோடை உழவு செய்தால், கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படும். நோயற்ற, சான்று பெற்ற, பூச்சிநோய் எதிர்ப்புத் தன்மையுள்ள விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களை, ஒரே நேரத்திலும், பயிர் சுழற்சி முறைகளை கையாள வேண்டும். பொறி பயிர், ஊடுபயிர் மற்றும் வரப்பு பயிர் சாகுபடி செய்ய மேலும் படிக்க..
அசோலா நன்மைகள்
“அசோலா தீவனம் அளிப்பதால், கால்நடைகளின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்’ என, பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தெரிவிக்கப்பட்டது. மத்திய சுற்றுப்புற அமைச்சகம் மற்றும் அமைதி அறக்கட்டளை சார்பில், பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கரூர் மாவட்டம் செவந்திபாளையம் புதூரில் நடந்தது. இதில், தொண்டு நிறுவன இயக்குனர் ராமஜெயம் பேசியதாவது: கால்நடைகள், விலங்குகள், பறவைகளுக்கு வி.கே., நார்டெப் முறையில் அசோலா பயிர் வளர்த்து தீவனத்தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் செயல்படுத்தலாம். காடுகள் வளர்ப்புத்திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உணவளித்துகொண்டிருந்த நிலங்களில் யூகலிப்டஸ் மேலும் படிக்க..
தேனீ வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் 2014 மே 6 ஆம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் பயிற்சி நாளன்று காலை 9 மணிக்குள்ளாக வேளாண் மேலும் படிக்க..
சிப்பி காளான் தயாரிப்பு பற்றிய வீடியோ
சிப்பி காளான் தயாரிப்பு பற்றிய ஒரு வீடியோ நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்
நீர் செலவை குறைக்கும் கோகோ பீட்
மண் கட்டியாகாமல் காத்து, வேர் நன்றாக வளர செய்து செடிகள் நன்றாக வளர செய்யும் வழி ஒன்று தெரிய வேண்டுமா? நம் வீட்டில் தேங்காய் பயன் படுத்திய பின் தூக்கி போடுகிறோமே தென்னை நார கழிவுதான் இந்த தென்னை நார் கழிவின் பயன்கள் என்ன? ஸ்பாஞ் Sponge போன்று மென்மையாகவும் எடை குறைவாக இருப்பதால், சட்டியின் எடை குறைகிறது மண்ணில் ஈரம் அதிக காலம் நிலைத்து இருக்க உதவுகிறது நீர் செலவு குறைகிறது பல இடங்களில் உள்ள மேலும் படிக்க..
கீரை சாகுபடி
கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும். நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம். பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம். கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும். இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது. எரு நன்கு மக்காமல் இருந்தால் மேலும் படிக்க..
பயிர் விளைச்சலை அதிகரிக்கும் "பாலித்தீன் நிலப்போர்வை"
விவசாயத்துறையில், விளைச்சலை அதிகரிக்கும் “பாலித்தீன் நிலப்போர்வை’ திட்டத்தில், சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வறட்சியின் பாதிப்பு அதிகரித்து, வெயில் அதிகமாக உள்ளதால், விவசாய மற்றும் தோட்டக்கலைத்துறையில் தற்போது புதிய தொழில்நுட்பம் கடைபிடிக்கப்படுகிறது. நிலம் முழுவதும் கருப்பு கலர் பாலித்தீன் பாய் விரித்து நிலத்தை முழுமையாக மூடி விட்டு, பயிர் சாகுபடிக்கு மட்டும் அதில் துளையிட்டு விதை, அல்லது செடி, கிழங்கு நடவு செய்யப்படுகிறது. செடி வளரும் இடம் தவிர, மற்ற இடம் முழுக்க பாலித்தீன் மேலும் படிக்க..
களைக்கொல்லியிலிருந்து பயிர்களை காத்திட பிளாஸ்டிக்
கச்சிராயபாளையம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயிர்களை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி களைக்கொல்லி மருந்து தெளிக்கும் புது உக்தியை விசாயிகள் கையாளுகின்றனர். தற்போது விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் ஆட்களின் கூலியும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வயல்களில் உள்ள களைகளை கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மரவள்ளி சாகுபடியில் ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் விசாயிகள் பல புதிய வழிமுறைகளை கையாளுகின்றனர். பிளாஸ்டிக் மேலும் படிக்க..
Happy Earth Day
எல்லோருக்கும் இனிய புவிதின வாழத்துக்கள்
வீட்டிலேயே இயற்கை விவசாயம்
சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில், தோட்டக்கலைத்துறை மூலம், நகர்ப்புற காய்கறி அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீட்டு மாடி, காலி இடங்களில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற திட்டத்தில் காய்கறி வளர்க்கலாம். இதற்கு 2,650 ரூபாய் செலவாகும். அதில், 50 சதவீதம் மானியம் போக, மீதமுள்ள தொகையை மக்கள் செலுத்தினால் போதும். பாலித்தீன் கவர் 20, தென்னை நார் கழிவு, விதை, இயற்கை உரம் என, 15 வகையான பொருட்கள் வழங்கப்படும். தென்னை நார் கழிவுடன், அசோஸ்பைரில்லம், பாஸ்போ மேலும் படிக்க..
மலை உச்சியிலும் இயற்கை வேளாண்மை
மாட்டுச்சாணம், சாம்பல் ஆகியவற்றையே பிரதான உரமாக பயன்படுத்தி, இயற்கை வேளாண் சாகுபடியில் சாதனை படைக்கின்றனர், வால்பாறை அருகே உள்ள வாகமலை விவசாயிகள்.கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்திலுள்ள வால்பாறைக்கு அழகு, அதனை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்கள்.வால்பாறையில் 80 சதவீதம் தேயிலை தோட்டம், 10 சதவீதம் காபி தோட்டம், மீதமுள்ள 10 சதவீத பரப்பில் மிளகு, ஏலம் சாகுபடி உள்ளது. தேயிலை தோட்ட வேலை நேரம் போக, மீதமுள்ள நேரத்தை பயனுள்ளதாக்கி, ரசாயன விவசாயத்துக்கு எதிராக, வெற்றிக்கொடி மேலும் படிக்க..
கிர்ணி பழ சாகுபடி
தற்போது நல்லாத்தூர் உட்பட பல பகுதிகளில் கிர்ணி பழம் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிர்ணி சாகுபடி செய்ய ஏக்கருக்கு 200 கிராம் விதையே போதுமானது. ஒரு கிலோ கிர்ணி பழ விதைகள் ரூ 13,500 ஆகும். 11 நாளான நாற்றுகளை 4 அடி அகலத்தில், 2 அடி இடைவெளியில் நடவு செய்யப் படுகிறது. நடவு செய்த 14ம் நாள் டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் ஆகியவை கலந்து உரமிட வேண்டும். 5 நாட்களுக்கு ஒரு மேலும் படிக்க..
அமிர்த கரைசல் செய்முறை விளக்கும் வீடியோ
இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் அவர்களின் அமிர்த கரைசல் செய்முறை விளக்கும் ஒரு வீடியோ நன்றி: கருப்புசாமி
அனுபவ பூர்வமான கத்திரி சாகுபடி வீடியோ
அனுபவ பூர்வமான கத்திரி சாகுபடி தொழிற்நுட்பம் பற்றிய ஒரு வீடியோ நன்றி: யூட்யூப்
வேர்க்கடலையில் பச்சைப்புழு
மங்கலம்பேட்டை பகுதியில் சாகுபடி செய்துள்ள வேர்க்கடலை செடிகளில் பச்சைப் புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சுப்ரமணியன் கூறியதாவது: கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த வேர்க்கடலை செடிகளை பச்சைப் புழுக்கள் (புரோடீனியா) அதிகமாக தாக்கும். இந்த புழுக்கள் பகல் நேரங்களில் மண்ணுக்குள் சென்று விடும். மாலை 4:00 மணிக்கு மேல் வெளியே வரும். அவற்றை கட்டுப்படுத்த குளோரோபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மி., கலந்து தெளிக்கலாம். அல்லது மேலும் படிக்க..
கால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம்
தீவனப் பற்றாக்குறையை போக்குவதற்கு விவசாயத்துறையும், கால்நடைத்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் சிவபிரகாசம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், கால்நடைகளுக்கு தீவனமாக பசும்புல் கொடுக்கின்றனர். தீவன புற்கள், ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியவை. இவைகளை மாடுகளுக்கு தீவனமாக தந்தால், புற்களை அப்படியே சாப்பிட சிரமப்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதற்காக, கோவையில் தயாரிக்கப்பட்ட பசும்புல் தீவனம் வெட்டும் இயந்திரம் சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டத்துக்கு இந்தாண்டுக்குள், 450 பசும்புல் தீவனம் மேலும் படிக்க..
மா மரத்தில் காவாத்து: வீடியோ
மா மரத்தில் காவாத்து விளக்கும் ஒரு வீடியோ இதோ நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்
சிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி
விவசாயம் செய்வதில் லாபம் இல்லை என்று பலர் முடிவு எடுக்கும் இந்நாளில், சிறிய அளவில் வைத்து கொண்டு லாபம் பெற முடியும் என்று நிருபித்து உள்ளார் தர்மபுரி சேர்ந்த முது என்ற விவசாயி. இவரின் வெற்றி ரகசியத்தை பார்ப்போமா? இவருக்கு 50 சென்ட் நிலம் உள்ளது. இதில், எலுமிச்சை மற்றும் மல்லிகை சாகுபடி செய்கிறார். நேரம் பார்த்து சாகுபடி செய்கிறார். எல்லோரும் போல் இல்லாமல் சரியான பயிரையும் நேரத்திலும் செய்கிறார். 25 எலுமிச்சை மரங்கள் கோடையில் காவாத்து மேலும் படிக்க..
நுண்ணுயிர் உரங்கள் – நீலப்பச்சை பாசி
இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது. நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய உரங்களையோ அல்லது நுண்ணுயிரோடு இயைந்து வாழும் உயிரினங்களையோ உரமாக இட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம். மணிச்சத்தை மண்ணில் இருந்து செடிகளுக்கு மேலும் படிக்க..
வெண்டை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
காய்த்துளைப்பான் வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ளவேண்டும். இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும். காய்ப்புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிடவேண்டும். எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும். கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் அல்லது எண்டோசல்பான் 1.5 மில்லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் மேலும் படிக்க..
வெண்டை பயிரில் தோன்றும் நோய்கள்
வெண்டை இலைப்புள்ளி : அறிகுறிகள்: இந்தியாவில் 2 வகைகள் இலைப்புள்ளி நோய்கள் இருக்கின்றன செ.மலாயன்ஸிஸ் பழுப்பு நிறத்தில், ஒழுங்கற்ற புள்ளிகளுடனும், செ. ஏபில்மோஸி கரும் புகை பூசணத்துடன், நீளவாக்கில் புள்ளிகளுடனும் காணப்படும் இரண்ட இலைப்புள்ளிகளும் இலை உதிரச் செய்யும். ஈரப்பதம் உள்ள பருவங்களில் பொதுவாகத் தோன்றும் கட்டுப்பாடு: மான்கோசெப் 0.25% தெளிக்க வேண்டும். 2.ப்யூசேரியம் வாடல் நோய் : அறிகுறிகள்: தனிப்பட்ட வாடல் நோய், மஞ்சளாதல் மற்றும் குட்டை வளர்ச்சி உடைய செடிகளுடன் ஆரம்பித்து, வாடலைத் தொடர்ந்து, மேலும் படிக்க..
பப்பாளி பழத்தில் இருந்து பால் எடுப்பது எப்படி
பப்பாளி பழத்தில் இருந்து பால் எடுப்பது எப்படி என்று விளக்கும் ஒரு வீடியோ நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் \
இலைக்கழிவுகளை மண்புழு மூலம் உரமாக்கும் நுட்பம்
மரப்பயிர் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின், ஆக்ஸின் பலவகை என்சைம்கள், கிரியா ஊக்கிகள், ஹார்மோன்கள், வைட்டமின் சத்துக்கள் ஆகியவை மண்புழு உரங்களில் உள்ளன. சில தேர்ந்தெடுக்கப்பட்ட கழிவுகளான காப்பி செடிகளின் பழத்தோல், தேக்கு, வாகை இலைகள், சொர்க்கமர விதையுரைகள், புங்கன் விதையுரைகள் ஆகியவற்றை மண்புழுவின் மூலம் மக்கும் செல்லாக மண்புழுக் கழிவுகளில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. இக்கழிவுகளில் மக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியவும், காட்டாமணக்கு, சவுக்கு நாற்றுகளில் மக்கிய உரத்தின் தாக்கத்தை கண்டறியவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் படிக்க..
பசுந்தாள் உரங்கள்
பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி ஆகியவை, காற்றில் உள்ள நைட்ரஜனை தன்னுள் நிலைநிறுத்தி, மண்ணின் வளத்தை மேம்படுத்தும். தக்கைப்பூண்டு மற்றும் கொழிஞ்சி பயிர்கள், நிலத்தின் அமில, காரத் தன்மையை நீக்கும் தன்மை கொண்டது. இவை மற்ற பயிர்களைப் போல, சான்று பெற்ற விதைகளாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண்வளம் கெடுகிறது.மேலும் யூரியா அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விலையும் அதிகரித்து வருகிறது. ஒரு போக, இருபோக நெல் சாகுபடிக்கு தழைச்சத்து அதிகம் மேலும் படிக்க..
நிலப்போர்வை அமைத்து விவசாயம்
கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலப்போர்வை எனப்படும் “மல்ச்சிங்’ முறையை விவசாயிகள் கடைபிடித்தால், அதிக மகசூல் பெற முடியும். கோடை காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படுவது இயற்கையே. மின்வெட்டு மற்றும் தண்ணீர் பிரச்னையை விவசாயிகள் கட்டாயம் சமாளித்தாக வேண்டும். சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் நிலப்போர்வை முறையில் தர்ப்பூசணி, மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர். சேலம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இன்பராஜ் கூறியதாவது: கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை மேலும் படிக்க..
புதிய உளுந்து பயிர் – மதுரை 1
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் நோயைத் தாங்கி வளரும் இயல்புடைய வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6, உளுந்து கோ 6 ஆகிய இரகங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. விளைச்சலில் சாதனை படைத்த உளுந்து கோ 6 இரகத்தை விட அதிக விளைச்சலைத் தரும் மதுரை-1 இரகத்தை இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்த புதிய உளுந்து இரகம், எக்டருக்கு 700 கிலோ விளைச்சலைத் தரும். மேலும் படிக்க..
பயறு பயிர்களுக்கு ஊட்டச்சத்துக் கரைசல்
பயறு வகைகளில் புரதச்சத்து (20-24 சதம்) இருக்கின்றது. புரதச்சத்தின் மாற்றத்திற்கு மணிச்சத்து அவசியம். மணிச்சத்து மண்ணிலிருந்து கிடைப்பதை விட இலை வழியாக எளிதாக கிடைக்கிறது. மேலும் பயிர்கள் பூக்கும் பருவத்திற்குப் பிறகு வேர்களில் ஊட்டச்சத்து எடுக்கும் தன்மை குறைந்து விடும். இத்தகைய நிலை நெல்தரிசு பயிர்களில் காணப்படுகிறது. ஆகையால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து கொண்ட டிஏபி கரைசலைத் தெளிப்பதன் மூலம் இலை வழியாக இவை உள்ளே சென்று பயனளிக்கிறது. பூக்கள் பூத்தபின் இலைகளில் உற்பத்தியாகும் மாவுச்சத்து விதையில் மேலும் படிக்க..
தென்னைக்கு நீர் மேலாண்மை
இன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. பலர் சரிவர உரம் போடாமல், மரங்களை பழுது பார்க்காமல், நீர் மேலாண்மை பற்றி அறியாமல் உள்ளனர். இதுவே மகசூல் குறைவுக்குக் காரணம். நீரின் அவசியமும், வேரின் அமைப்பும்: வேரின் அமைப்புக்களை நன்கு தெரிந்து கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். மர 90% வேர்கள் 2 மீட்டர் ஆர வட்ட பரப்பளவிற்குள் அதாவது 12.5 ச.மீ. உள்ளேயே காணப்படும். 15 மீ ஆழம் வரை 4000 முதல் 7000 வேர்கள் மேலும் படிக்க..
நுண்ணுயிர் உரங்கள் – ரைசோபியம்
எந்த ஒரு பயிரும் தனக்குத் தேவையான சத்துகளைத் தன்னைச் சுற்றியுள்ள சூழல்களிலிருந்தும், மண்ணிலிருந்தும் தானாகவே கிரகித்துக் கொள்கிறது. மண்ணில் தழைச்சத்தை நிலைப்படுத்தி ரசாயன உரங்களைத் தவிர்த்து அதிக மகசூல் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, டாக்டர் பெருமாள் அறிவியல் ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் கூறியது: பொதுவாக உயிர் உரங்கள் பெரும்பாலும், தழைச்சத்தையும், மணிச்சத்தையும் அளிக்கவல்லன. காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலைநிறுத்தியும், மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்தும் கொடுக்கக்கூடிய நுண்ணுயிர்கள் உயிரி உரங்களாக உபயோகப்படுத்தப்படுகின்றன. மேலும் படிக்க..
கோடைக்கு மக்காசோளம்
கோடையில் நெல்லிற்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யுமாறு நீடாமங்கலம் வேளாண் அதிகாரி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக வேளாண் கோட்ட உதவி இயக்குநர் ந. இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெல் அறுவடைக்குப் பிறகு வாய்ப்புள்ள இடங்களில் மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். நிலத்தடிநீரை சேமிக்க தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல் பயிரை தவிர்ப்பது நல்லது. கடந்த ஆண்டு வடுவூர் பகுதிகளில் மேலும் படிக்க..
பழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பசுமை தொழில் நுட்ப மையம் சார்பில் சூரியஒளி சக்தி உதவியுடன் பழங்கள், மீன், பருப்புகளை உலர்த்தும் கருவி (Solar Air Heater) வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பசுமை தொழில் நுட்ப மைய உதவிப் பேராசிரியர் டாக்டர் ஏ.ஸ்ரீகுமார் கூறியது: பல்கலைக்கழக மானியக் குழு திட்டத்தின்படி வேளாண்மை மற்றும் தொழில்துறைகளில் சோலார் ஏர் ஹீட்டர் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுவையில் மீன்பிடித் மேலும் படிக்க..
வறட்சியைத் தாங்கும் குதிரைவாலி
கோவை வேளாண் பல்கலை அறிவியல் மையம் கண்டுபிடித்துள்ள, குறுந்தானிய குதிரைவாலி கோ (கேவி2) ரகம், மதுரை மாவட்டத்திற்கு, ஏற்றதென, நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுரை விவசாயக் கல்லுாரியின் வேளாண் அறிவியல் மையம் சார்பில், 2011 முதல், மூன்றாண்டுகளாக விவசாயிகளின் நிலத்தில், பயிரிடப்பட்டு, அதிகபட்ச விளைச்சல் இலக்கை எட்டியுள்ளது. இதுகுறித்து, மைய உதவி பேராசிரியர் செல்வி கூறியதாவது: திருமங்கலம், சேடபட்டி, கள்ளிப்பட்டி, கள்ளிக்குடி, உசிலம்பட்டி ஒன்றியங்கள் மழையை நம்பி பயிர் செய்யப்படுகின்றன. இங்கு மானாவாரியில் விவசாயிகள் குறுந்தானியங்களை பயிரிட்டாலும், எக்டேருக்கு ஒன்றே மேலும் படிக்க..
கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி
“கோடை வெப்பத்தின் தாக்கத்தால், கோழிகள் மற்றும் கால்நடைகள் “வெப்ப அயர்வு’ நோயால் உயிரிழக்க அதிக வாய்ப்புள்ளது,” என, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் செல்வராஜ் கூறினார். அவர் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோழிகள் மற்றும் கால்நடைகள் “வெப்ப அயர்வு’ நோயால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது. உடலின் வெப்பத்தை வெளியேற்ற, மனிதர்களுக்கு வியர்வை சுரப்பி உள்ளது; கோழிகளுக்கு வியர்வை சுரப்பி இல்லை; வாயை திறந்து, உடல் வெப்பத்தை சிறிதளவே வெளியேற்ற முடியும். மேலும் படிக்க..
தேனீ வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்புப் பயிற்சி 2014 ஏப்.7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாள் காலை 9 மணிக்குள்ளாக வேளாண் பூச்சியியல் மேலும் படிக்க..
வறட்சியை தாங்கி வளரும் நெல்
மானாவாரி நிலங்களில் வறட்சியை தாங்கி வளரும், ‘அண்ணா-4’ என்ற புதிய ரக நெல்லில் நல்ல மகசூல் கிடைப்பதால், கோவை விவசாயிகள் பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை வேளாண் பல்கலையும், பரமக்குடி வேளாண் ஆராய்ச்சி மையமும் இணைந்து 2009ம் ஆண்டு, ‘அண்ணா-4’ என்ற புதிய மானாவாரி ரக நெல் அறிமுகம் செய்தது. வேளாண் பல்கலை வேளாண் – உயிரியல் தொழில்நுட்ப துறை இயக்குனர் சந்திரபாபு கூறியதாவது: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மானாவாரி நெல், ஒரு லட்சம் மேலும் படிக்க..
தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்
தக்காளி நாற்றழுகல்: அறிகுறிகள் : நாற்றழுகல் தக்காளியில் இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. அதாவது முளைக்குமுன் மற்றும் முளைத்தபின் ஏற்படுகிறது. முளைக்கும் முன் நிலையில் மண் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே நாற்று இறந்துவிடுகிறது. முளைக் குருத்து முற்றிலுமாக அழுகிவிடும். முளைத்த பின் நிலையில் இளம் திசுக்கள் நில மட்டத்திலேயே நோய்த் தொற்று ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட திசுக்கள் மென்மையாகவும், நீர்த் தோய்ந்தும் காணப்படும். நாற்று தலை கீழே வீழ்ந்து அல்லது உடைந்து விழுந்துவிடும். மேலாண்மை : உயர்த்தப்பட்ட நாற்றங்கால் மேலும் படிக்க..
இயற்கை முறை பருத்தி சாகுபடி வீடியோ
பருத்தி பயிர் பூச்சி கொல்லிகள் அதிகம் பயன் படுத்த படும் ஒரு பயிர். இந்த பயிரில் பூச்சி கொல்லி கட்டுபடுத்த என்று மரபணு மாற்ற பட்ட பருத்தி (Bt cotton) வந்தது. பருத்தி சாகுபடியில் பூச்சி கொல்லி செலவிலும், மரபணு மாற்றப்பட்ட விதை செலவிலும் கடனாளி ஆகி தற்கொலை செய்து கொண்ட விதர்பா விவசாயிகள் ஏராளம். இந்த நிலையில். இயற்கை விவசாயம் மூலம் பருத்தி சாகுபடி செய்ய முடியும் என்று உலகத்திற்கு நிருபணம் இங்கே தமிழகத்தில் ஆகி மேலும் படிக்க..
மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனை அனுமதி
மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் 2014 ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில்,எப்போது வீட்டுக்கு போவோம் என்று இருக்கும் மதிய UPA அரசு அவசரம் அவசரமாக மரபணு மற்ற பட்ட பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை செய்ய அனுமதி கொடுத்து உள்ளது. ஒன்று இரண்டு அல்ல! மேலும் படிக்க..
டீசலின் செலவை குறைக்க புன்னை எண்ணை
டீஸல் விலை நாள் ஏறிக்கொண்டே ,போகும் போது பாசனத்திற்கு டீஸல் பதிலாக புன்னை எண்ணை பயன் படுத்தி சாதனை செய்துள்ள ஒருவரை சந்திப்போமா? நாகை மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் இருப்பு என்ற ஊரில் உள்ள ராஜசேகரன் என்ற விவசாயி தன்னுடைய 5 ஏகர் நிலத்தில் பாசனத்திற்கு புன்னை எண்ணை மூலம் நீர் பம்ப் செய்கிறார். இவரின் நிலம் சுனாமி வந்த போது கேட்டு விட்டது. இப்போது 35 விதமான பழ மரங்கள் இருக்கின்றன. கொய்யா, மா,எலுமிச்சை, தேக்கு, மேலும் படிக்க..
நிழல் வலையில் சாகுபடி
வேளாண்மையில் நிழல்வலை அமைத்து தரமான பொருட்களை உற்பத்தி செய்ய விருத்தாசலம் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களிலிருந்தே விதைகளை நேர்த்தி செய்து, நாற்றுவிட்டு சாகுபடி செய்யும் முறையை மரபாக கொண்டுள்ளனர். உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால் நோய், பூச்சித் தாக்குதல் அதிகரிப்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. தரமான பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் தடையாக உள்ளன. இதனைத் தடுக்க வேளாண் விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டும் மேலும் படிக்க..
வறட்சியில் கை கொடுக்கும் கோழிக்கொண்டை பூ சாகுபடி
தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியை தாக்குபிடித்து பலன் தரும் கோழிக்கொண்டை பூ சாகுபடி மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர். பருவமழை கடந்த இரு ஆண்டுகளாக ஏமாற்றியதால் தியாகதுருகம் பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதித்து, நெல், கரும்பு சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை குறைந்ததால் அளவான தண்ணீரை கொண்டு மகசூல் கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது. இந்த வகையில் கோழி கொண்டை பூ சாகுபடி செய்து மேலும் படிக்க..
மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயம்
சின்னசேலம் பகுதியில் மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். சின்னசேலம் ஒன்றியத்தில் தொட்டியம், அனுமனந்தல், ஈரியூர், கருங்குழி உள்ளிட்ட 50 கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்கின்றனர். பருவ மழையின்றி கிணற்று நீரை பயன்படுத்தி மரவள்ளி, கரும்பு பயிரிட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் ஆண்டிற்கு ஒரு பருவம் மட்டும் தான் பயிர் செய்ய முடிகிறது. அதனால் விவசாயிகளுக்கு குறைவான லாபம் கிடைக்கிறது. எனவே பல விவசாயிகள் ஊடு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் படிக்க..
விவசாய வேலைகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரிப்பு
100 நாட்கள் வேலை உத்தரவாதம் தரும் மதிய அரசின் திட்டத்தால் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய வேலை ஆட்கள் விவசாய வேலையை விட்டு மற்ற வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். கடந்த 5 ஆண்டுகளில் இது வேகம் பிடித்து இப்போது, விவசாயம், மேலை நாடுகள் போல், இயந்திர மாயம் ஆகிவருகிறது! உலகத்திலேயே மக்கள் தொகை இரண்டாம் இடம் உள்ள இந்தியாவில் நிலை! விவசாய வேலைகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரிப்பு கச்சிராயபாளையம் பகுதியில் தற்போது விவசாய வேலைகளுக்கு முற்றிலும் இயந்திரங்களை பயன் மேலும் படிக்க..
வெள்ளரி சாகுபடி
உலகக் காய்கறி சாகுபடி பரப்பளவில் வெள்ளரி சாகுபடி 4 ஆவது இடத்தை வகிக்கிறது. மருத்துவப் பயன் கொண்ட வெள்ளரி சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம். இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட வெள்ளரி பண்டைக்காலம் முதல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து கிரேக்கர்கள், ரோமானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கு பரவிய வெள்ளரி, உலகம் முழுவதும் பரவி உலகக் காய்கறி சாகுபடி பரப்பளவில் மேலும் படிக்க..
செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீல நாக்கு நோய்
செம்மறி ஆடுகளைத் தாக்கக் கூடிய நோய்களில் மிகக் கொடியது நீல நாக்கு நோயாகும். இந்த நோய் தாக்குவதற்கான சூழல், நோயிலிருந்து ஆடுகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு தகவல்களை அளித்துள்ளது. இதுகுறித்து கல்லூரியின் கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை பேராசிரியர் த.ஆனந்த பிரகாஷ் சிங் கூறியது: நீல நாக்கு நோயானது ஆர்பி வைரஸ் குழுவைச் சேர்ந்த ஒரு வகை நச்சுயிரியின் பாதிப்பால் செம்மறி ஆடுகளிலும், மாடுகளிலும் ஏற்படக் கூடியதாகும். மேலும் படிக்க..
மறுதாம்பு கரும்பில் அதிக மகசூல்
நடவு கரும்பை விட மறுதாம்பு கரும்பில் செலவு குறவு. மேலும் அதிக மகசூலும் எடுக்க முடியும். கரும்பு வெட்டியவுடன் சோகையை தண்ணீர் பாய்ச்சும் வாய்க்காலில் ஒதுக்கியோ அல்லது வயல் முழுவதும் சமமாக பரப்பியோ எரிக்க வேண்டும். பின்பு வேலையாள்கள் மூலம் கூரிய கத்தி கொண்டு அனைத்து கரும்பு கட்டைகளையும் பூமி மட்டத்தில் பக்கவாட்டில் வெட்டிவிட வேண்டும். அப்படி செய்தால் முளைத்து வரக்கூடிய அனைத்துப் பயிர்களும் சமமாக இருக்கும். கங்கு அறுத்தல்: ஏக்கருக்கு 1 மூட்டை யூரியாவை கட்டையின் மேலும் படிக்க..
"வாடல் நோயில்' இருந்து பருத்தியை காக்க
பருத்தி பயிரை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானது “வெர்டிசில்லியம்’ என்னும் வாடல் நோய். இது பாதித்தால், செடிகளில் இலைகளின் நரம்புகள் பச்சையாகவும், மற்ற பகுதிகள் மஞ்சளாகவும் மாறும். மஞ்சள் நிறப்பகுதி வாடி கருகிவிடும். எனவே இலை புலிவரிக்கோடுகள் போல தோன்றும். பின் இலைகள் காய்ந்து உதிரும். படிப்படியாக செடிகள் காயும். பருத்தி விதைக்கு முன் ஆழமாக கோடை உழவு செய்து நோய்க்காரணிகளை சூரியனின் வெப்பத்திற்கு உட்படுத்தி அழிக்க வேண்டும். விதைக்கும் முன் எக்டேருக்கு 150 மேலும் படிக்க..
நெல் தரிசில் உளுந்து, பயறு தெளிப்பு
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தில் நெல் அறுவடை முடிந்த உடன் உளுந்து, பயறை விதை நேர்த்தி செய்து தெளிக்க தொடங்கி விட்டார்கள். விவசாயிகள் குறுகிய கால ரகங்களை தேர்ந்தெடுத்து சாகுபடியை தொடங்கி உள்ளார்கள். இனி உளுந்து, பயறு தெளிக்க உள்ள விவசாயிகள் பூமியை மெழுகு பதத்திற்கு கொண்டு வந்து விதையை விதைப்பது மிகவும் அவசியமாகும். உளுந்து, பயறு சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள்: உளுந்து ரகங்களான எடீடி, 2, மேலும் படிக்க..
மண்புழு உரம் சிறப்புகள்
மண்புழு உரம் நீர்சேகரிப்புத் தன்மை அதிகம். மண்ணில் ஈரப்பதத்தை பாதுகாத்து பயிர்களுக்கு அதிக நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்கிறது. நிலத்தில் மண்புழு உரம் தொடர்ந்து பயன்படுத்தும் போது நிலத்தின் அங்ககச் சத்துக்கள் அதிகரிக்கிறது. நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், உயிரினங்கள், மண்புழுவின் வளர்ச்சி ஆகியவைகளால் மண் இளக்கம் அடைந்து காற்றோட்ட வசதி மற்றும் மண்களின் கெட்டித் தன்மை மாற்றம் ஏற்பட்டு வடிகால் வசதி ஊக்குகிறது. பயிர்களுக்குத் தேவையான சமச்சீரான பேரூட்டச்சத்துக்கள் நுண்ணூட்டச் சத்துக்களை பயிர்களுக்கு எடுத்துச் செல்கிறது. ரசாயன மேலும் படிக்க..
நீர்வளத்தை கெடுக்கும் கருவேல் மரங்கள்
மதுரை மாநகரில் நீர்வளத்தை பாதுகாக்கவும், மாணவர்கள் வழிதவறிச் செல்வதை தவிர்க்கும் முகமாக, கோடை விடுமுறையை பயன்படுத்தி 100 மாணவர்கள் அடங்கிய குழு மூலம், சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக, அமெரிக்கன் கல்லூரி செயலாளரும், முதல்வருமான ம.தவமணி கிறிஸ்டோபர் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது: மதுரை மாநகரில் நிலத்தடி நீர் அதள பாதளத்துக்குச் சென்று விட்டது. வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன. மாநகரின் சுற்றுச்சூழலும் சீர்கெட்டுள்ளது. இதற்கு மேலும் படிக்க..
வறட்சியால் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிகள்
பருவமழை 2 ஆண்டுகளாக பொய்த்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கரும்பு பயிரை காப்பாற்ற சொட்டுநீர் பாசன முறையை செயல்படுத்த விவசாயிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பருவமழை கடந்த 2 ஆண்டுகளாக ஏமாற்றியதால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் “கிடுகிடு’ வென குறைந்து வருகிறது. இது கிணற்று நீர்பாசனத்தை நம்பி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்ய, தொடர்ந்து தண்ணீர் தேவைப்படுகிறது. கிடைக்கும் நீரை சிக்கனமாக மேலும் படிக்க..
கறிவேப்பிலை சாகுபடி டிப்ஸ்
வெப்ப மண்டலப் பயிர்களில் கறிவேப்பிலையும் ஒன்றாகும். இதில் இரண்டு ரகங்கள் உள்ளன. நாட்டுக் கறிவேப்பிலை, காட்டுக் கறிவேப்பிலை என்பன அவை ஆகும். நாட்டுக் கறிவேப்பிலையே உணவுப் பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலை இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் கொண்டுள்ளது. காய்கறிகளோ, ரசமோ இதன் தாளிதம் இன்றி மணம் பெறுவதில்லை. விவசாய முறையில் கறிவேப்பிலைச் செடியை எளிதாக வீட்டுத் தோட்டங்களிலும் பயிரிடலாம். எந்த மண்ணிலும் இது வளமாக வளரக்கூடியது. தொடக்கத்தில் இது ஒரு செடி போன்று தோன்றினாலும், நாளாவட்டத்தில் ஒரு மேலும் படிக்க..
காளான குறித்த இலவசப் பயிற்சி
காளானிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி நாமக்கல்லில் 2014 மார்ச் 25-ஆம் தேதி அளிக்கப்பட உள்ளது. மோகனூர் சாலை வேளாண் அறிவியல் நிலையத்தில் அன்று காலை காலை 9 மணிக்கு நடத்தப்பட உள்ள இந்தப் பயிற்சியில், காளானிலுள்ள சத்துக்கள், அதிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்டப் பொருள்கள் குறித்து செயல் விளக்கங்கள் அளிக்கப்படும். இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர் பெருமளவில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேலும் படிக்க..
இலவச வேளாண் பயிற்சி
நாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கோவையில் 2 நாள் நடைபெறவுள்ள வேளாண்மை குறித்த இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் விஞ்ஞானி பரசுராமன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் இணைந்து 2014 மார் 29,30 ஆகிய இருநாள்களில் வேண்மை சார்ந்த இலவச பயிற்சியை இளைஞர்களுக்கு அளிக்கவுள்ளது. இதில் பருவத்துக்கேற்ற பயிர் ரகங்கள், நவீன தொழில்நுட்பம், மானியம் மற்றும் திட்டங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும். மேலும் படிக்க..
"இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்"
இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள் என்று பாரம்பரிய நெல் ஆய்வாளர் நெல் இரா.ஜெயராமன் கூறினார்: நவீன விவசாயத்துக்குச் செய்யப்படும் செலவில் பாதியைச் செலவிட்டாலே இயற்கை விவசாயம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் நிலத்தில் கொட்டப்படும் ரசாயன உரங்களால் மண் நஞ்சாகி, மலடாகிவிட்டது. இதனால் எந்தச் சாகுபடியும் முழு அளவில் மகசூல் தருவதில்லை. விளைபொருட்களும் விஷமாகிவிட்டன. தற்போது தமிழகம் முழுவதும் விவசாயிகள் பரவலாக இயற்கை விவசாயத்தை ஆர்வத்துடன் மேலும் படிக்க..
கொள்ளு, கொண்டைக்கடலை சாகுபடி
கொள்ளு, கொண்டைக்கடலை சாகுபடியில் விதைப் பண்ணை அமைப்பதன் மூலம் அதிக வருவாய் பெறலாம் என மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது. கொள்ளு, கொண்டைக் கடலையில் உற்பத்தியைப் பெருக்கி வருவாய் ஈட்ட தருமபுரி விதைச் சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் கூறும் வழிமுறைகள்: சாகுபடி முறை : கொள்ளு பயிருக்கு ஏக்கருக்கு 8 கிலோ விதையும், கொண்டைக் கடலைக்கு ஏக்கருக்கு 30 கிலோ விதையும் தேவைப்படுகிறது. கொள்ளு, கொண்டைக் கடலை மேலும் படிக்க..
ஆடுகளைத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்…
ஆடு வளர்ப்பது ஆதாயம் தரும் தொழில் என்பதால், ஆடுகளுக்கு வரும் நோய்கள், தடுக்கும் முறைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மற்ற கால்நடைகளுக்கு தனியாக கலப்பு தீவனம் தரப்படுவது போல் செம்மறி ஆடுகளுக்கு கலப்பு தீவனங்கள் தரப்பட வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக புல்வெளியில் பச்சை மேலும் படிக்க..
பருத்தி செடிகள் வாடுவதை தடுக்கும் முறைகள்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குறிப்பாக கோவில்பட்டி வட்டாரப் பகுதியில் பருத்தி சாகுபடி மானாவாரிப் பயிராகவும், இறவைப் பயிராகவும் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பூக்கும் பருவத்தில் உள்ள செடிகள் திடீரென வாடிக் காய்ந்துவிடுகின்றன. இதனால் செடிகளின் எண்ணிக்கை குறைந்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பருத்தியைத் தாக்கும் தண்டு கூன்வண்டு ஆகும். சேத அறிகுறிகள்: தண்டு கூன் மேலும் படிக்க..
வாழையை தாக்கும் நூற்புழு
தற்போது மழைப் பொழிந்து வெப்பம் குறையும் சூழ்நிலையில் நூற்புழுக்கள் அதிகம் உற்பத்தியாகி வாழையை தாக்குகின்றன. கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் இந்த நூற்புழுக்களை சரியான நிர்வாக முறைகளைக் கையாண்டு கட்டுப்படுத்தலாம். இந்த நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பூச்சியியல் வல்லுனர் நி. விஜயகுமார் கூறியது: வாழையை 70-வகையான நூற்புழுக்கள் தாக்கினாலும், ஐந்து வகையான நூற்புழுக்கள்தான் அதிக சேதம் விளைக்கின்றன. அவை தற்போதுள்ள சீதோஷ்ண நிலையில் அதிகம் தாக்குகின்றன. அவை, வேர்துளைக்கும் மேலும் படிக்க..
அபூர்வ ஆமைக்குஞ்சுகள் கடலில் விடும் பணி தீவிரம்
வேதாரண்யம்: அழியும் நிலையில் உள்ள அபூர்வ இன, ‘ஆலிவ்ரெட்லி’ ஆமைக்குஞ்சுகளை, கோடியக்கரை கடலில், வனத்துறையினர் பாதுகாப்பாக விடத்துவங்கி உள்ளனர். நாகை மாவட்டம், கோடியக்கரையில், வனத்துறை சார்பில், ஆமைக்குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை, ஆழ்கடல் பகுதியில் இருந்து, நாகை மாவட்ட கடற்கரை பகுதிக்கு வரும், ஆலிவ்ரெட்லி ஆமைகள், முட்டை இடுகின்றன. இவற்றை, இந்த மையம் சேமித்து பாதுகாக்கிறது. இந்த ஆண்டு, இதுவரை, 8,000 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை, 45 முதல் 55 மேலும் படிக்க..
தென்னங்கன்றுகளை தேர்வு செய்வதில் கவனம் தேவை
“தென்னை விவசாயிகள் தங்களின் நீர் வசதிக்கு ஏற்ற ரகங்களையும், அதிக காய்ப்பு தன்மையுள்ள செயற்கை முறையில் ஒட்டு உற்பத்தி செய்யப்பட்ட ரகங்களை பயிரிட்டு பலனடைய வேண்டும்,” என ஆனைமலை விதை ஆய்வு துணை இயக்குனர் நடேசன் கூறினார். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு , உடுமலை தாலுகாக்கள் மற்றும் ஆனைமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடக்கிறது. இதில் தமிழகத்தின் தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், மேலும் படிக்க..
பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்
கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, ஒட்டடையான், மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, நவரா, கல்லுண்டை, கருடன் சம்பா. இப்படி ஒவ்வொரு பெயரும் வித்தியாசமாக இருக்கும் அனைத்தும், நம் பாரம்பரிய நெல் வகைகளின் பெயர்கள். இதுபோல இந்தியா முழுவதும் ஒரு லட்சம் நெல் வகைகள் இருந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பாரம்பரிய நெல் வகைகளை நம் முன்னோர் பயிரிட்டுள்ளனர். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கூடிய நவீன வேளாண்மையின் வரவு ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் வகைகளை நம் மேலும் படிக்க..
கோபுர கலசங்களில் நவதானியங்கள் ஏன்?
கும்பாபிேஷகத்தின் போது கோபுரகலசங்களில் கட்டப்படும் நவதானியங்கள் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் இருப்பு விதைகளாக பயன்படுத்தப்பட்டது என வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் கூறினார். கோவில் கும்பாபிேஷகத்தின் போது நவதானியங்கள் (ஒன்பது வகை தானியங்கள்) உள்ள முடிப் புகளை கோவிலில் உள்ள கோபுர கலசங்களில் கட்டி வைப்பது மிக முக்கிய சடங்காகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய வழக்கம் இன்றும் நடை முறையில் உள்ளது. பல தலைமுறைகளை கடந்த பின்பும் உள்ள இந்த பாரம்பரிய வழக்கம் குறித்து மேலும் படிக்க..
கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம்
”கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம் தயாரிப்பதன் மூலம், அவை வீணாகாமல் தவிர்க்கலாம்,” என, மதுரை நீர்மேலாண்மை நிலைய, துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: மண்வளத்தை பாதுகாக்க, வேளாண் கழிவுகளை, இயற்கை எருவாக மாற்றி பயன்படுத்தலாம். கரும்பு அறுவடையின் போது, அதன் எடையில் 20 சதவீதம் உள்ள தோகையை, எரித்து விடுகின்றனர். இதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. கந்தக, தழைச் சத்துக்கள் காற்றில் விரயமாகின்றன. மண்ணில் நன்மைதரும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் வெப்பத்தால் இறக்கின்றன. நிலத்தில் இரும்புச் சத்து மேலும் படிக்க..
கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
மயிலம் பகுதியில் கேழ்வரகு சாகுபடி செய்ய விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மயிலம் பகுதியில் இந்த ஆண்டு மழை குறைவாக பெய்ததால் ஏரி, குளங்களில் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் கிணறு, ஆழ் துளை கிணற்றில் நீர் மட்டம் குறைந்துள்ளது. மயிலம், வீடூர், கணபதிப்பட்டு, ரெட்டணை, தீவனூர், கள்ளகொளத்தூர், செண்டூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் குறைந்த நீர் பாசனம் செய்யக்கூடிய கேழ்வரகு, எள், உளுந்து சாகுபடியை செய்ய துவங்கிவிட்டனர். விவசாயிகள் கேழ்வரகு விதைகளை மேலும் படிக்க..
வனவிலங்குகளை விரட்ட ..
தேனி மாவட்ட மலைப்பகுதிகளில், விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்யும் வனவிலங்குகளை விரட்ட விவசாயிகள், தோட்டங்களில் ஸ்பீக்கர்களை கட்டி அலற விட்டு வருகின்றனர். தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கடலை, வாழை, வெண்டைக்காய், பீன்ஸ், கீரைவகைகள், புதினா, மல்லி, உட்பட தோட்டக்கலை பயிர்களை சொட்டு நீர் பாசனம் முறையில் அதிகம் சாகுபடி செய்கின்றனர். தற்போதைய வறட்சி காரணமாக வனத்திற்குள் எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் காட்டு மாடுகள், கேழையாடுகள், சிறுத்தைகள், யானைகள் உட்பட வனவிலங்குகள் விவசாய விளை நிலங்களுக்குள் மேலும் படிக்க..
வறட்சிக்கு உதவும் தென்னை நார்க் கழிவுத்துகள்
கடும் வறட்சி காரணமாக தென்னைநார்க் கழிவுத்துகள்களின் தேவை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து முதன்முறையாக ஆப்பிரிக்காவுக்கு இக்கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தென்னை நகரான பொள்ளாச்சிப் பகுதியில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைகள் பொய்த்து விட்டன. இதனால் பொள்ளாச்சிப் பகுதியில் மட்டும் 20 சதவீத தென்னை மரங்கள் முழுமையாகக் காய்ந்துவிட்டன. மேலும் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட மரங்கள் காய்க்கும் திறனை இழந்துவிட்டன. பொள்ளாச்சிப் பகுதியில் சில ஆண்டுகளாக மேலும் படிக்க..
இயற்கை எதிரிகளின் செயல்பாடு
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிச் செயல்படும் இயற்கை எதிரிகளின் செயல்பாடு குறித்த வயல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் பல ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தாங்கிச் செயலாற்றும் திறன் படைத்தது. ஒரு டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டையை 16 துண்டுகளாக வெட்டி, ஹெக்டேர் பயிருக்கு 48 துண்டுகளாக்கி இலையின் அடிபாகத்திலோ அல்லது குருத்திலோ வைக்க வேண்டும். இதைப் பயன்படுத்துவதால் நுண்கொல்லி மருந்துகளைத் தெளிப்பது 50 மேலும் படிக்க..
நிலக்கடலை சாகுபடிக்கு 50% மானியத்தில் ஜிப்சம்
“நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது’ என, நாமக்கல் கபிலர்மலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜூ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானிய விலையில், ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு அதிக பட்சமாக, எட்டு மூட்டை அதாவது, 400 கிலோ ஜிப்சம் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மானிய விலையில் பெற, நிலத்தின் சிட்டா மேலும் படிக்க..
"கால்நடைக்கு பீட்ரூட் தர வேண்டாம்"
“கால்நடை வளர்ப்போர், அதற்கு உணவு கொடுக்கும் போது, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை, அப்படியே கொடுக்க வேண்டாம். அவ்வாறு கொடுத்தால், மாடுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்’ என, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய சிகிச்சைத் துறை பேராசிரியர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் அடுத்த தளவாய்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர், தனது ஜெர்சி கலப்பின கறவை மாடு, வயிறு உப்பிசம், வாயில் உமிழ்நீர், கழுத்து வீக்கம் ஆகியவற்றால் மேலும் படிக்க..
தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரித்தல்
இந்த முறையில் 3 அடி அகலம் 11/2 அடி உயரம் 20 அடி நீளம் கொண்ட சிமென்ட் தொட்டிகளை கட்டிக் கொள்ள வேண்டும். இதுபோல அவரவர் வசதிக்கு ஏற்ப எத்தனை தொட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். தொட்டியின் அடிப்பாகத்தில் தண்ணீர் வெளியேற்றுவதற்காக 5 அடிக்கு ஒரு துவாரம் வீதம் இருக்கும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும். தொட்டியில் மண்புழு உரம் தயாரிக்க மழை மற்றும் வெய்யிலிலிருந்து பாதுகாக்க கீற்றுக் கொட்டகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். மக்கிய கால்நடைக் மேலும் படிக்க..
தைப் பட்டத்தில் வெண்டை சாகுபடி
சிறுவர் முதல் பெரியவர் வரையில் விரும்பும் காய்கறிகளில் ஒன்றான வெண்டை சாகுபடியில் தைப்பட்டத்தில் கூடுதல் லாபம் பெற தகுந்த ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவப் பண்புகள்: வெண்டைக்காயில் குறைவான கலோரிகளும், மிகுதியான ஏ, சி, தையமின், பி 6 விட்டமின், கால்சியம், துத்தநாகம் தாதுக்களும் உள்ளன. மேலும், பிபோபிளாவின், போலிக் அமிலம், நாரச்சத்துகள் கொண்டவை. வயது முதிர்வைக் குறைக்கும் பண்பை வெண்டை கொண்டிருப்பதால் அழகாககவும், இளமையாகவும் மேலும் படிக்க..
குலைநோய் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை காப்பது எப்படி?
குலைநோய் மற்றும் இலைஉறை அழுகல் நோய்களின் அறிகுறிகள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் அளித்துள்ள ஆலோசனைகள்: நெல் குலைநோய் அறிகுறிகள்: இலையின் மேற்பரப்பில் சிறிய செம்மை நிற கண் வடிவப் புள்ளிகள் தோன்றி அவை ஒன்றோடு ஒன்று இணைந்து இலை கருகிவிடும், கதிரின் கழுத்துப் பகுதியில் கருமை நிறை புள்ளிகள் தோன்றுவதால், கதிரிலுள்ள மணிகள் பதராகிவிடும். சில நேரங்களில் கதிர் ஒடிந்து கீழே விழுந்துவிடும். காற்றின் மூலம் பரவும் பைரிகுலேரியா ஒரைசா என்ற மேலும் படிக்க..
ஒரு எக்டேருக்கு 165 டன் வாழை விளைச்சல்
காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த வாழை விவசாயி வி.குருநாதன், ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைவித்து, உலகளவில் சாதனை படைத்துள்ளார். விவசாய கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் வி.குருநாதன்,75. 45 ஆண்டுகளுக்கு முன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்தார். இன்று ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளதால், உலகின் முதல் சாதனை வாழை விவசாயி என தோட்டக்கலைத்துறை அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளார். நாடு முழுவதும் இருந்து மேலும் படிக்க..
டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும்
பிணந்தின்னிக் கழுகுகள் (Vultures) சுற்று சூழலில் ஒரு முக்கிய பணி ஆற்றுகின்றன. இறந்து கிடக்கும் ஆடு மாடு ஆகியவற்றின் பிணங்களை இவை தின்று இவற்றின் மூலம் நோய்கள் பரவாது இருக்க உதவு கின்றன. இந்த கழுகுகளின் ஒரு சிறப்பம்சம் என்ன என்றால், இவை, பிணங்களில் உள்ள எந்த கிருமிகள், வைரஸ்கள் இந்த பறவைகளை ஒன்றும் செய்வதில்லை என்பதே! ஆனால், 1990 வருடம் பின்பு, இந்த பறவைகளின் எண்ணிக்கை 97% வரை குறைந்து விட்டது! இதன் காரணம் என்ன மேலும் படிக்க..
அழிவின் விளிம்பில் 15 இந்தியப் பறவைகள்
இந்தியாவில் உள்ள 15 பறவை வகைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அழியும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதுவரை அச்சுறுத்தல் இல்லாத பட்டியலில் இருந்த 3 பறவை வகைகள், முன்பைவிட அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் வெளியிட்டுள்ள புதிய சிவப்புப் பட்டியல் (International Union of Conservation of Nature’s (IUCN) red list) தெரிவிக்கிறது. “இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இமாலயக் காடையும் பிங் ஹெடட் வாத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன (critically endangered) என்று கூறப்பட்டாலும், மேலும் படிக்க..
நெல் பயிரில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற இலையா?
தமிழகத்தில் பயிரிடப்படும் உணவுப் பயிர்களில் நெல் பயிர் பிரதானமாக உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசானப் பருவத்தில் பரவலாக நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற தோன்றல்: இரு மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற தோன்றல் காணப்படுகிறது. இந்த நிறமானது அடி இலைகளில் தொடங்கி மேற்புரம் வரையில் பரவி காணப்படும். அறிகுறிகள்: முதலில் அடி இலைகள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் காணப்படும். பின்னர், இந்த மேலும் படிக்க..
நெல்லி சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெல்லி நீண்ட ஆயுளையும், நிறைவான இளமையும் தரவல்லது. தற்போது காய்ப்புப் பருவத்தில் உள்ள நெல்லியில் காணப்படும் பல்வேறு பூச்சி நோய்களை முறையாகக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம். பட்டைத் துளைப்பான்: போதிய பராமரிப்பு இல்லாத மரங்களை இப்பூச்சித் தாக்கும். ஏப்ரல் மாதத்தில் இதன் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தாய் அந்துப்பூச்சி மரப்பட்டையின் மேலும் படிக்க..
துவரை நடவு முறை
தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட வீரணம், வானாபுரம், மேல்முத்தானூர் ஆகிய கிராமங்களில் வேளாண்மைத்துறை சார்பாக துவரை நடவு முறை விவசாயிகளுக்கான பயிற்சி திருவண்ணாமலை மாவட்ட துணை வேளாண்மை (மத்தியதிட்டம்) இயக்குநர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது. தண்டராம்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.பாலா, வேளாண்மை அலுவலர் நடராஜன், துணை வேளாண்மை அலுவலர் அன்பழகன் ஆகியோர் கூறியதாவது: துவரை சாகுபடியில் விதை கடினப்படுத்துதல் நேர்த்தி, தாவர பூஞ்சான் விதைநேர்த்தி, உயிர் உரநேர்த்தி, பாலித்தீன் பையைக் கொண்டு மண், மணல், தொழுஉரம் ஆகியவற்றை மேலும் படிக்க..
பனிப்பொழிவு: சம்பா பயிரை காக்க யோசனைகள்
பனிப்பொழிவில் இருந்து சம்பா பயிரை காக்க கூடுதல் பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்க மீஞ்சூர் ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஒன்றியத்தில் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள விளை நிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதிய மழை இல்லாதது, இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக நீடித்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது. பயிர்களை காப்பது குறித்து மீஞ்சூர் மேலும் படிக்க..
அதிக மகசூல் தரும் நவீன கரும்பு சாகுபடி
நீடித்த நிலையான கரும்பு சாகுபடி (எஸ்.எஸ்.ஐ. SRI) எனப்படும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இரண்டரை மடங்கு மகசூல் கிடைக்கும் என விவசாயத் துறை அதிகாரிகள் யோசனை தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு மிக முக்கியமான பணப்பயிர்.மாவட்டத்தில் 7 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவை மட்டும் இல்லாமல் வெளி மாவட்டத்தில் உள்ள 6 சர்க்கரை ஆலைகளுக்கும் கரும்பு அனுப்பப்படுகிறது. கரும்புக்கான தேவை அதிகம் இருப்பதால் மேலும் படிக்க..
மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி
கோடைக்காலங்களில் மாடுகளை அதிகமான அளவில் உண்ணிகள் தாக்கும். இந்த உண்ணிகள் பெரும்பாலும் மாடுகளில் அவற்றின் காதுகளின் உள்ளேயும் பால்மடிப்பகுதியில் வாலுக்கு அடியிலும், உடலின் மேற்புறத்திலும் இருக்கும். இந்த உண்ணிகள் ரத்தத்தை குடிக்க கடிப்பதால் கொசுக்கள் மனிதர்களை கடித்து மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்புவதுபோல உண்ணிகளும் மாடுகளில் நிணநீர் கட்டிநோய் (தெய்லீரியோசிஸ்), ரத்த சிறுநீர் நோய் (பேபிசியோசிஸ்) போன்ற நோய்களை பரப்பும். இந்த தெய்லீரியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிகமான காய்ச்சல், ரத்தசோகை, தீவனம் எடுக்காமை, கண், மேலும் படிக்க..
"ஊடுபயிர்களால்'' கூடுதல் லாபம்
கூடுதல் லாபம் பெறுவதற்காக விவசாயிகள் மத்தியில் ஊடுபயிர் திட்டத்தை சேலம் வேளாண்மை துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டாரத்தில் செம்மை நெல் பயிரிட்ட விவசாயிகளிடம், வயலின் வரப்பில் உளுந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்று வேளாண் அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். நெல் நாற்று நடவு செய்யும் நேரத்தில் வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய வேண்டும். நெல்லுக்கு செல்லும் நீர் உளுந்து செடிகளுக்கும் கிடைக்கும். இதனால் உளுந்து செடிகளும் செழிப்பாக வளரும். ஒரு மேலும் படிக்க..
இயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர்
விருத்தாசலம் அருகே கம்மாபுரம் விவசாயி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக இயற்கை முறை விவசாயத்தில், நெல் பயிர் செய்து வருகிறார். கடந்த காலங்களில் செயற்கையான உரங்கள் வருகைக்கு முன்பு விவசாயம் என்றாலே இயற்கை உரங்கள் மூலம் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். காலப்போக்கில் செயற்கையான உரங்கள் ஏராளமாக வரத் துவங்கியதால் இயற்கை உரங்களை மறந்தனர். தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் செயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வரும் நிலையில், கம்மாபுரம் அடுத்த கீழப்பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேணுகோபால் என்பவர் மேலும் படிக்க..
காய்கறி பயிர்களுக்கு மூடாக்கு
விவசாயிகள் காய்கறி பயிர்களுக்கு மூடாக்கு அமைப்பதன் மூலம், குறைந்த நீர் பாசனம், குறைந்த களை உள்ளிட்ட பல நன்மைகளை அடையலாம் . பொள்ளாச்சி பகுதிகளில், மழையின்மை காரணமாக தென்னை விவசாயம் தொய்வடைந்து காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நிலவிய பாசனப்பற்றாக்குறை, தேங்காய் விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால், விவசாயிகள் மாற்றுப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதில், குறுகிய காலப்பயிர்களான, காய்கறி பயிர்கள் விவசாயிகளை அதிகம் கவர்ந்துள்ளது. இருக்கும் குறைந்த நீரைக்கொண்டு பாசனம் செய்து, அதிக மகசூல்; லாபம் மேலும் படிக்க..
வறட்சியை தாங்கி வளர உதவும் பாக்டீரியா கரைசல்
வறட்சியை தாங்கி வளர உதவும் பி.பி.எப்.எம். பாக்டீரியா கரைசலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மாவட்டத்தில் முதல் முறையாக வியாழக்கிழமை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. ராமநாதபுரம் அருகேயுள்ள ஆலங்குளத்தில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் வயல்விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் மாலங்குடி, ஆலங்குளம், கண்ணாங்குடி கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இவ்விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பான பி.பி.எப்.எம். பாக்டீரியா கரைசல் அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்து விவசாயிகளிடையே பேசிய வேளாண் மேலும் படிக்க..
விவசாயத்தில் குரல்வழி குறுஞ்செய்திகள்
விவசாயிகள் தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வரும் சூழ்நிலையில், அவற்றை சமாளிக்க பல்வேறு தகவல்களும், ஆலோசனைகளும் தேவைப்படுகிறது. அதை நிறைவு செய்யும் வகையில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் குரல்வழி குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தை தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. குரல்வழி செய்தி அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். குரல்வழி செய்தி மூலம் அனுப்பப்படும் வானிலை தகவல்கள் மற்றும் ஆலோசனைகள், மண் மற்றும் பாசனநீர் பரிசோதனை, விதைகள் மற்றும் ரகங்கள் தேர்வு, நவீன தொழில்நுட்பத் தகவல்கள், பயிர் பாதுகாப்பு தகவல்கள், மேலும் படிக்க..
வேளாண் இயந்திரமயமாக்கல் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் ஊரக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளில் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் 2014 பிப்.10 முதல் 15-ம் தேதி வரை ஒரு வாரகாலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. புன்செய் நில விவசாயத்திற்கான வேளாண்கருவிகள், நவீன வேளாண் கருவிகள் பராமரிப்பு, பழுது நீக்கம், நெல் சாகுபடி மற்றும் கரும்பு சாகுபடிக்குத் தேவையான வேளாண் கருவிகளின் தொகுப்பு ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பிற துறை அலுவலர்கள் மூலமும் பயிற்சி வகுப்பு அளிக்கப்படும். மேலும், உள்ளூர் மேலும் படிக்க..
மிளகாய் பயிரில் பூக்கள் உதிர்வதைத் தடுக்க..
மிளகாய் சாகுபடியில் பூக்கும் பருவத்தில் பூ மொட்டுகளும், பூக்களும் உதிர்வதை தடுக்க பிளானோபிக்ஸ் எனப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்தை பயன்படுத்த வேண்டும் என தோட்டக் கலை உதவி இயக்குநர் எஸ். ஆறுமுகம் புதன்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது: நயினார்கோவில் ஒன்றியத்தில் இந்த ஆண்டு 1,550 ஹெக்டர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மிளகாய் பயிர் பூக்கும் பருவத்தில் உள்ளது. இந்த சமயத்தில் பூ மொட்டுகளும், பூக்களும் சில இடங்களில் பிஞ்சுகளும் உதிர்வதால் மகசூல் மேலும் படிக்க..
நிலக்கடலை தோல் உரிக்க இயந்திரம்
நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரத்தை கண்டறிந்து, தேனி பட்டதாரி வாலிபர் சாதனை படைத்துள்ளார்.தேனி சுப்பன்செட்டி தெருவை சேர்ந்த எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி லோகநாதன்காமராஜ், 27. இவரது தந்தை காமராஜ், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்டோ மொபைல் தொழில் நடத்தி வருகிறார். படிப்பு முடித்ததும், அப்பாவுடன் சேர்ந்து தொழிலில் இறங்கிய லோகநாதன் காமராஜ், புதிதாக சாதனை படைக்க வேண்டும் என நினைத்தார். தேனியில் வறுத்த நிலக்கடலையை தோல் உரித்து, அதனை பாக்கெட் போட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இப்படி மேலும் படிக்க..
குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி
மஞ்சள் சாகுபடி செய்து வரும் வடிவேல் குழித்தட்டு முறை விளக்குகிறார். தக்காளி, கத்திரி நாற்றுகளுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் குழித்தட்டுகளை பயன்படுத்தலாம். 35 நாட்களில் நாற்றுகளை நடவு செய்யலாம். பொதுவாக ஏக்கருக்கு 1000 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும். குழித்தட்டு முறையில் ஏக்கருக்கு 170 கிலோ விதை மஞ்சள் போதுமானது. அதன்படி விதை மஞ்சளுக்கு ரூ.3400 மற்றும் குழித்தட்டுக்கள், இயற்கை உரம் போன்ற செலவுகளுக்கு 6000 ரூபாய் வரை தான் செலவு. ஆனால் நேரடி விதைப்பில் ரூ.20,000/- வரை செலவாகும். குழித்தட்டு மேலும் படிக்க..
இயற்கை முறையில் களைக்கொல்லி
கேரளாவில் ஒரு எளிமையான விவசாயி நரேந்திரநாத் என்பவர் அறிமுகப் படுத்தியுள்ளார். இக்கலவை களைகளைக் கொல்லும் எந்தப்பயிரிலும் இதைத்தெளித்தால் கருகிப்போகும். ஆனால் இது பயிர்களுடன் வளரும். செடிகள் மண்டிக் கிடக்கும் ஒரு நிலத்தை சுத்தம் செய்து அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைவரும் போது இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம். சுமார் ஒரு ஏக்கரில் இதனை பயன்படுத்த வேண்டுமானால் 250 லிட்டர் கரைசல் தேவைப்படும். 10 லிட்டர் கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள். சுண்ணாம்பு – 3 கிலோ, மேலும் படிக்க..
பாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம்
திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய முயற்சியாக, பாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நெல் ரகம் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தருமாறு, வேளாண் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்று, காட்டு யானம். ஏழு அடி உயரம் வளரக்கூடியது. ஒவ்வொரு கதிரிலும், நெல் மணிகள், கொத்து, கொத்தாக விளையும் ரகம். திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தில், ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில், விவசாயி பாரதி என்பவர், காட்டு யானம் மேலும் படிக்க..
பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை
”விவசாய நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதே சிறந்த முறையாகும்” என, கோவை வேளாண் பல்கலை பயிர் மேளாண்மை துறை இயக்குனர் வேலாயுதம் பேசினார். கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுனத்தில் மண் பரிசோதனை குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை துறை இயக்குனர் வேலாயுதம் பேசியதாவது: தமிழகத்தில் காலங்காலமாக இயற்கை முறை விவசாயத்தைதான் நம் விவசாயிகள் செய்து வந்தனர். 1950ம் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் மூலம் 50 மில்லியன் டன்கள் உணவு மேலும் படிக்க..
கொய்யாவில் அடர் நடவில் அசத்தும் விவசாயிகள்
கொய்யா கன்றுகளை அடர் நடவு முறையில் கவாத்து செய்து, கூடுதல் மகசூல் பெறும் முயற்சியில் விழுப்புரம் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஏழைகளின் ஆப்பிள், வெப்ப மண்டலங்களின் ஆப்பிள் என கொய்யாப் பழம் அழைக்கப்படுகிறது. ஆண்டிற்கு இரு முறை காய்க்கும் தன்மை கொய்யாவிற்கு உண்டு. மா, வாழை, ஆரஞ்சு மற்றும் ஆப்பிளுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கொய்யா உள்ளது. கொய்யாப் பழத்தில் மனிதர்களுக்கு தேவையான நார்சத்து அதிகம் உள்ளது. பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் லைக்கோபின் மேலும் படிக்க..
தென்னையில் ஊடுபயிர் சேனைக்கிழங்கு
தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும். ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 கிலோ கிழங்குகள் தேவைப்படும். 7.5×7.5மீ இடைவெளியுள்ள 2 தென்னை மரங்களுக்கு மத்தியில் 4 வரிசைகளில் சேனைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும். முதலில் 30×30செ.மீ அளவுள்ள குழிகள் எடுத்து 10 கிலோ தொழு உரத்தையும் மேல் மண்ணையும் இட்டு குழியினை நிரப்ப வேண்டும். மேலும் படிக்க..
நிலக்கடலையில் அதிக இலாபம் பெற வழிகள்
நிலக்கடலையில் அதிகம் இலாபம் பெற தருமபுரி விதைச்சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் கூறும் வழிமுறைகள்: இந்த பருவத்தில் டி.எம்.வி 7, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ 3, டிஎம்.வி.13 ஆகிய ரகங்களை சாகுபடி செய்யலாம். நிலக்கடலை பயிரில் பயிர் எண்ணிக்கை பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 80 கிலோ விதை காய்கள் தேவைப்படும். நிலக்கடலை விதைகளை 30 செ.மீ இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். முன்னதாக, மேலும் படிக்க..
மாடுகளில் கர்ப்பப் பை வெளியே தள்ளுதலும் தடுப்பு முறைகளும்
கர்ப்பப் பை வெளித் தள்ளுதல் மாடுகள் சினையாக உள்ளபோது அல்லது கன்றுகள் ஈன்ற உடன் கருப்பையின் பின்பகுதியும், புணர் உறுப்பின் ஒருபகுதியும் சேர்ந்து சில சமயங்களில் வெளியே வந்துவிடுகின்றன. இதையே உறுப்பு தள்ளுதல் அல்லது அடித் தள்ளுதல் என்றும் கூறுவர். வெளித் தள்ளிய கர்ப்பப் பையில் மண், தூசி, சாணம் முதலியவை ஒட்டிக் கொள்ளும். இதனால், கிருமிகள் உள்சென்று இனப்பெருக்க உறுப்புகளைப் பாதித்து, குறைப் பிரசவத்தையோ அல்லது கருச் சிதைவையோ ஏற்படுத்திவிடும். ஈன்ற மாடுகளில் வெளித் தள்ளிய மேலும் படிக்க..
பார்த்தீனியம் அழிக்கும் முறைகள்
ராவுத்தப்பேரியில் நடந்த முகாமில் பார்த்தீனியம் விஷசெடி ஒழிப்பு முறைகள் பற்றி வேளாண்மை இணை இயக்குநர் சவுந்திராஜ் விளக்கினார். ஹிஸ்டிரோ போராஸ் என்ற விஷத்தன்மை வாய்ந்த களை எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலையிலும் வளரக்கூடியது. இது நீண்ட காலத்துக்கு சுமார் 30 ண்டுகள் வரை முளைப்புத்திறன் கொண்ட விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்கிறது. இவை காற்றின் மூலம் மிக வேகமாக பரவக்கூடியவை. ஒரு ஆண்டு விதைப்பு ஏழு ஆண்டுகளுக்கு களையெடுப்பு என்ற கருத்து பார்த்தீனியத்தை பொறுத்தவரை உண்மையாக உள்ளது. ஒரு மேலும் படிக்க..
விதை மூட்டைகளை பாதுகாப்பது எப்படி
விதைகள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை கிரகிக்கும் தன்மையுடையவையாதலால், காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகாபைகளையே உபயோகிக்க வேண்டும். இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் நாராயண பிரசாத் கூறியதாவது: விதைகளை கிடங்குகளில் சேமித்து வைக்கும் போது சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்போது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம்.ஏனென்றால் மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூடையிலுள்ள மேலும் படிக்க..
தாகம் தணிக்கும் தர்ப்பூசணி சாகுபடி
தகிக்கும் வெயிலுக்கும், தவிக்கும் தாகத்திற்கும் அருமருந்தாக இருந்து இளைப்பாறுதல் தருவது தர்ப்பூசணி. நீர்சத்து நிறைந்த மருத்துவக் குணங்கள் கொண்ட தர்ப்பூசணி சாகுபடி செய்து பயன்பெறுமாறு தோட்டக்கலைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தர்ப்பூசணி நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது. இருதய நோய், சர்க்கரை நோய், குடல் புற்று நோய் ஆகியவற்றைத் தடுக்க தர்ப்பூசணி மேலும் படிக்க..
சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு வெள்ளை பொட்டாஷ் உரம் சப்ளை
தேனி மாவட்டத்தில், சொட்டுநீர் பாசனத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நீரில் கரையும் தன்மையுள்ள வெள்ளை பொட்டாஷ் உரம் சப்ளை செய்யப்படுகிறது. சிவப்பு நிறத்தில் உள்ள சாதாரண ரக பொட்டாஷ் உரங்கள் நீரில் உடனே கரையாது. இந்த உரத்தை பயன்படுத்தும் சொட்டுநீர் பாசன விவசாயிகள், முதலில் உரத்தை வேறு பாத்திரங்களில் கரைத்து அதன் பின் சொட்டுநீர் பாசன குழாய்களில் செலுத்தி பயன்படுத்த வேண்டும்.இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் மேலும் படிக்க..
வாழைகளை தாக்கும் வாடல் நோய்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, பர்கூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ஏலக்கி வாழை ரகத்தை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். கிருஷ்ணகிரியை அடுத்துள்ள மல்லிநாயனப் பள்ளியில் 1.5 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயி தேவேந்திரன் (48) கூறியது: கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாழைக் கன்றுகளை வாங்கி நடவு செய்து நன்றாக வளர்ந்துள்ளன. சில நாள்களாக வாழை இலைகள் மஞ்சள் நிறமாக மேலும் படிக்க..
கரும்பு தோகை இயற்கை உரம
கரும்பு அறுவடைக்கு பின்னர், கரும்புத் தோகையை வயல்களில் எரிக்காமல், தூளாக்கி மூடாக்கு செய்வதால் மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுவதோடு அடுத்த பயிருக்கு சிறந்த இயற்கை உரமாக அமைகிறது என்று வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் தெரிவித்துள்ளார். கரும்பு அறுவடை முடிந்தவுடன், டிராக்டரில் இயங்கும் இயந்திரத்தின் உதவியுடன் கரும்பு தோகையினை தூளாக்கி வயல்களில் பரப்பினால் சிறந்த மூடாக்காக செயல்பட்டு, மண்ணில் உள்ள ஈரம் ஆவியாகாமல் தடுக்கப்படும். மேலும், தூளாக்கப்பட்ட கரும்பு தோகை விரைவில் மக்கி இயற்கை உரமாக பயிருக்கும் மேலும் படிக்க..
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்
இயற்கை வேளாண் அறிஞரும் தமிழ் நாட்டில் இயற்கை விவசாயத்தை பரப்பிய Dr நம்மாழ்வார் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். Dr நம்மாழ்வார் அவர்கள் தமிழகத்தில் இட்டுள்ள இயற்கை விவசாயம் என்ற விதை நன்றாக செழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் என்று நம்புகிறோம். தினமலரின் வந்துள்ள செய்தி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை மேலும் படிக்க..
வாழையில் ஊட்டச்சத்து
சேரன்மகாதேவி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாழைக்கு வழங்கும் ஊட்டச்சத்துக்களை பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள் என இரு வகையாகப் பிரிக்கலாம். வாழைக்கு தழை, மணி, சாம்பல், சத்துக்கள் ஆகிய பேரூட்டங்களும், கால்சியம், மக்னீசியம், கந்தகம், மாங்கனீசஸ், துத்தநாகம், இரும்பு, தாமிரம், போரான் ஆகிய நுண்ணூட்டங்களும் தேவைப்படுகிறது. இதில் பேரூட்டங்கள் அதிகளவிலும், நுண்ணூட்டங்கள் குறைந்த அளவிலும் தேவைப்படுகின்றன தழைச்சத்து குறைபாடு அறிகுறிகள்: வாழைப் பயிரில் எல்லா இலைகளும் வெளிறிய பச்சை நிறத்தில் காணப்படும். இலையில் மேலும் படிக்க..
நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரம்
எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலையை தரத்துடன் பிரித்தெடுக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் தெரிவித்தார். தமிழகத்தில் நிலக்கடலையானது 25 சதம் மானாவாரியாகவும், 75 சதம் இறவையிலும் சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலையை அறுவடை செய்வதற்கு ஆள்கள் பற்றாக்குறையாலும், கிடைக்கும் ஆள்களுக்கு அதிக கூலி கொடுக்கும் நிலைக்கும் விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.இதனால் அவர்கள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளிடம் அறுவடை மேலும் படிக்க..
கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடி நோய்
தமிழகத்தில் ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டின் பிரிசியன் கலப்பின பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இத்தகைய மாடுகள் அதிக பால் கொடுக்கும். நாட்டு பசுக்களைக் காட்டிலும் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால், தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால், மாடு வளர்ப்போர் நஷ்டம் அடைகின்றனர். இவற்றுக்கு வரக்கூடிய நோய்களில் மிகவும் முக்கியமானது மடி நோயாகும். இந் நோயால் ஆண்டுக்கு சுமார் ரூ. 6,010 கோடி விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என அறியப்பட்டுள்ளது. இந் நோய் வராமல் மேலும் படிக்க..
எலுமிச்சை சாகுபடிக்கு ஏற்றமிகு காலம்
எலுமிச்சை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் தொடங்கினால் விளைச்சலிலும், வருமானத்திலும் ஏற்றம் பெறலாம். எலுமிச்சை சிறப்புகள்: எலுமிச்சையில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. உடலுக்கும், மனதுக்கும் ஒருங்கே புத்துணர்ச்சி தருகிறது. கோடையில் குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கவும், உணவுக்கு ருசி கூட்டும் ஊறுகாய் தயாரிக்கவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சை சாகுபடி: பி.கே.எம். 1 ரகத்தை தேர்வு செய்யலாம்.வடிகால் வசதியுள்ள வண்டல் மண் சிறந்தது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலும், ஜூன் மேலும் படிக்க..
பருத்தியில் மகசூல் இழப்பைத் தவிர்க்கும் வழிகள்
பருத்தியில் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பின்பற்றினால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம் என, தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 31,755 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குளிர்கால பருத்தி பயிர்கள் பூ, பிஞ்சு உருவாகும் பருவத்தில் உள்ளன. இளம்பருவம் (விதைத்த 50 நாள்கள் வரை): இந்தப் பருவத்தில் தத்துப்பூச்சி மற்றும் அசுவினி தாக்குதல் தென்படும். தத்துப்பூச்சி தாக்குவதால் பருத்தி மேலும் படிக்க..
தர்ப்பூசணி சாகுபடி
விவசாயிகள் தர்ப்பூசணி பயிரிட்டு, நவீன தொழில்நுட்ப முறைகள், பயிர் பாதுகாப்பு யுக்திகளைப் பின்பற்றினால், 4 மாதங்களில் அதிக விளைச்சலை பெற்று லாபம் சம்பாதிக்கலாம் என தோட்டக்கலைத் துறையில் துணை இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ச.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தர்ப்பூசணியை நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும், நிலப்போர்வை அமைப்புடன் நுண்நீர் பாசன சாகுபடி முறையிலும் பயிரிடலாம். இந்த தர்ப்பூசணி பயிரால் விவசாயிகள் அதிக வருவாய் பெற வாய்ப்பு உள்ளது. தர்ப்பூசணியில் சுகர் பேபி, சுகந்தி, விசால், கிரண், சிம்ரன், அபூர்வா, மிதுலா, மேலும் படிக்க..
பஞ்சகவ்யம் மூலம் தென்னை வாடல் நோய் கட்டுபடுத்தலாம்
தென்னை மரத்தை அழிக்க உருவாகியிருக்கும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி கே.கே.ஆர்.லெனின் பஞ்சகவ்யம் மற்றும் திறன் நுண்ணுயிரியை பயன்படுத்த முடியுமென கண்டறிந்துள்ளார். இது சாத்தியமானதுதான் என காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விரிவாக்கத்துறை இணைப் பேராசிரியர் எஸ்.ஆனந்த்குமார், கல்லூரி மாணவி வீ.ராஜாமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் ஆனந்த்குமார் கூறியது: ஒருவகை காளானால் ஏற்படும் இந்த வாடல் நோய், தென்னையை அடியோடு அழித்துவிடுகிறது. அடித்தண்டு அழுகும் நோய் மேலும் படிக்க..
எலுமிச்சை சாகுபடியில் உயர் மகசூல்
எலுமிச்சை சாகுபடியில் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால் உயர் மகசூல் பெற்று லாபம் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: எலுமிச்சை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இலைத் திசுத் துளைப் பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சிகள், பழம் உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் காரணமாக மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளது. இலைத் திசுத் துளைப் பூச்சி: இலையின் உள் அடுக்குகளுக்குள் புகுந்து சுரண்டி மேலும் படிக்க..
உயிரியல் கொல்லிகள் குறித்த இலவசப் பயிற்சி
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், உயிரியல் கொல்லிகள் குறித்த இலவச பயிற்சி வகுப்பு 2013 டிச. 17-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி. வெங்கடேசன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது சாகுபடி செய்யும் பயிர்களில் பூச்சிகள், நோய்கள், தாவர நூற்புழுக்கள் ஆகியவை அதிகமாக தாக்கி, பயிரின் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் ரசாயன பூச்சிக் கொல்லிகளை அதிகளவில் மேலும் படிக்க..
மரவள்ளியில் பூச்சி கட்டுப்பாடு
மரவள்ளிகளை தற்போதைய சூழ்நிலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. இவற்றை முறையான உயிர்ரக மருந்துகளை உபயோகித்து கட்டுப்படுத்தலாம். மரவள்ளியை பொறுத்தவரை, பொதுவாக விவசாயிகள் முள்ளுவாடி மற்றும் கேரளா ரோஸ் வகைகளையே பயிர் செய்கின்றனர். இந்த மரவள்ளி கிழங்கு வகைகள் சமைப்பதற்கு மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் ஜவ்வரிசி மற்றும் சேமியா தயாரிக்கவும் பயன்படுகிறது. மரவள்ளிப் பயிர்களில், தற்போது சாறு உறுஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, மாவுப் பூச்சி மற்றும் செஞ்சிலந்திகளின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.இந்தப் பூச்சிகள், இலை மற்றும் மேலும் படிக்க..
நெல் அறுவடைக்குப் பிந்தைய செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள்
நெல் அறுவடை வரையில் மட்டுமல்லாது, அறுவடைக்குப் பின்னரும் தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உற்பத்தியைப் பாதுகாத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் என வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது. நெல்லுக்கு கூடுதல் விலை கிடைப்பது அதில் உள்ள முழு அரிசியின் அடிப்படையில்தான் உள்ளது. நெல் மணிகள் அளவையில் 62 சதவீதம் முழு அரிசி கிடைத்திட, அறுவடைக்குப் பின்னர் செய் நேர்த்தி தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது. நெல் ரகங்களுக்கு ஏற்ற வகையில் பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேலும் படிக்க..
சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் பி.ஆனந்தி மற்றும் கு.கைல்ஸ்லியோ ஜஸ்டின் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சோளம் சுமார் 3.2 லட்சம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், தென் தமிழ்நாட்டில் 1.12 லட்சம் ஹெக்டரில் சோளம் 7 மாவட்டங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. சோளத்தைத் தாக்கக் கூடிய பூச்சிகளுள் குருத்து ஈ, தண்டுப் புழு, கதிர்நாவாய் பூச்சி, கதிர் ஈ மற்றும் மேலும் படிக்க..
திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்
திருந்திய நெல் சாகுபடி மூலம் அதிக மகசூல் பெறலாம் என கோபி வேளாண் உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார். திருந்திய நெல் சாகுபடி என்ற ஒற்றை நாற்று நடவு முறை, நெல் பயிரிடுதலில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன முறையாகும். இம் முறை குறித்து கோபி வேளாண் உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளது: ஈரோடு மாவட்டம், கோபி வட்டாரத்தில் அதிக அளவில் திருந்திய நெல் சாகுபடி முறையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த முறையில் இளம் நாற்று நடுவதால் மேலும் படிக்க..
ஆமணக்கு சாகுபடி
அழகு சாதனங்கள் உற்பத்திக்கு பயன்படும் ஆமணக்கு சாகுபடியில் கோபி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கோபி வட்டாரத்தில் வாய்க்கால் பாசனப்பகுதியை தவிர்த்து, கிணற்று பாசனம் மற்றும் மானாவாரி நிலங்கள் அதிகளவில் உள்ளன. மானாவாரியில் நிலக்கடலை, கொள்ளு, எள், சோளப்பயிர் போன்றவை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. கோபி, நம்பியூர், கொளப்பலூர், கெட்டிசெவியூர், பள்ளிபாளையம், சிறுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரியில் நிலக்கடலை, கொள்ளு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை, கொள்ளுச் செடியில் ஊடுபயிராகவும், கலப்பு பயிராகவும் ஆமணக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை, மேலும் படிக்க..
கால்நடைகளுக்கு கரும்புத்தோகை தீவனம்
கால்நடைகளுக்கு கரும்புத் தோகை தீவனம் வழங்கலாம் என விழுப்புரம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பேராசிரியர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கால்நடை பண்ணையின் உற்பத்தி மற்றும் பொரு ளாதாரம், கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தை பொறுத்து உள் ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மேய்ச்சலை மையமாக வைத்தே கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.இந்தாண்டு பருவமழை பொய்த்துள்ளதாலும், போதிய மேய்ச்சல் நிலப் பரப்பு குறைந்துள்ளதாலும், கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய, கால்நடைகளுக்கு கரும்புத் தோகைகளை தீவனமாக மேலும் படிக்க..
பாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி
மண்வளம் பாதிக்கப்படாமல் பாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி செய்து பயன் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.செல்வராஜீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பாதாவது: உப்புத் தன்மை மற்றும் கார்தன்மை உள்ள பாசன நீரை விவசாயிகள் தொடர்ந்து பயன்படுத்து வருதால் மண்வளம் பாதிப்பதோடு விளைச்சலும் குறைய வாய்ப்புள்ளது. மேலும், விவசாயிகள் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகளை பயன்படுத்தி வருவதால் உப்புத் தன்மையுள்ள நீரால் பாசன மேலும் படிக்க..
இயற்கை முறை விவசாயத்தில் நெல்லி
கம்மாபுரம் அருகே விவசாயி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக, இயற்கை முறை விவசாயம் மூலம் தோப்பு நெல்லி பயிரிட்டு, அறுவடை செய்து வருகிறார். கம்மாபுரம் அடுத்த கீழப்பாலையூரைச் சேர்ந்த விவசாயி வேணுகோபால் இயற்கை முறை விவசாயத்தில் 10 ஆண்டுகளாக கரும்பு, நெல், வாழை போன்றவற்றை பயிர் செய்து வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன், எட்டு ஏக்கரில் தோப்பு நெல்லிச் செடிகளை நடவு செய்தார். மூன்றாவது ஆண்டிலிருந்து காய்க்க துவங்கியது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூ பூத்து காய்க்கத் மேலும் படிக்க..
கத்தரியை தாக்கும் காய்துளைப்பான்
“கத்தரியை தாக்கும் காய் துளைப்பானை உரிய முறையில் கட்டுப்படுத்த வேண்டும்’ என குளித்தலை தோகைமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன் கூறினார்.அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கத்தரி சாகுபடி செய்யப்படும் அனைத்து இடங்களிலும் கத்தரி இளந்தண்டு காய் துளைப்பான் தாக்குதல் மிக அதிகமாக காணப்படும். இதன் காரணமாக கத்தரி நடவு செய்த 20 நாட்களில் இருந்து அறுவடை முடியும் வரை தொடர்ந்து பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் அதிகள வில் பயன்படுத்துகின்றனர். இதனால் சுற்றுப்புறச்சூழல் மாசு அடைகிறது. இந்த மேலும் படிக்க..
பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த வழிகள்
“பாப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேம்பு மருந்து தெளித்து பயன்பெறலாம்’ என, ராசிபுரம் வெண்ணந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வெண்ணந்தூர் வட்டாரத்தில், தற்போது பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்குதல் தொடங்கியுள்ளது. விவசாயிகள், பொருளாதார சேதாரத்திற்கு முன், இப்பூச்சியைக் கட்டுப்படுத்த, அசாடிராக்டின், மூன்று சதவீதம் (வேம்பு மருந்து) மருந்தை, 25 மி.லி., ஒரு வாளி நீரில் கலந்து, காலை அல்லது மாலையில், இலை, தழை, தண்டுப் பகுதிகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம். மேலும் படிக்க..
இலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி
கரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் “கால்நடைகளை தாக்கும் நோய்களும் தடுக்கும் முறைகளும்’ குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் 2013 டிசம்பர் 10ம் தேதி நடக்கிறது. முகாமில் கறவை மாடு ஆடுகளை தாக்கும் நோய்களான கோமாரி உள்ளிட்ட வைகள் பற்றிய விளக்கம் நோய்களை தடுக்கும் முறைகள் மரபுசாரா மருத்துவ முறைகள் குடற்புழு நீக்கம்ல தடுப்பூசி அளித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி மற்றும் களப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க விருப்பம் மேலும் படிக்க..
வறட்சியில் இருந்து நெற்பயிர்களை காக்கும் பிபிஎம்
நெற்பயிர்கள் வறட்சியினால் வாடுவதை தடுக்கவும், வெப்பத்திலிருந்தும் பாதுகாக்க கூடியதுமான நவீன பாக்டீரியா கரைசலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் புதன்கிழமை குளபதம் கிராமத்தில் அறிமுகம் செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மழையை நம்பி இருக்கும் மாவட்டம். வறட்சிக்கு இலக்காகும் மாவட்டம். இங்கு பெரும்பான்மையாக நெற்பயிர் 1.3 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யப்படும் சாகுபடியானது பயிர் முளைத்து தூர்கட்டும் பருவத்திலிருந்து வறட்சிக்கு உள்ளாகி இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து வந்தனர். இந்த மேலும் படிக்க..
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கவனத்திற்கு
தரமான கொப்பரை கிடைக்க 6 சதவீதத்திற்குள் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் தெரிவித்துள்ளது. தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான கொப்பரை கிடைக்க அறுவடைக்குப் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: தேங்காய்கள் நன்கு முற்றிய பிறகு பறித்த பின் ஹைபிரிட் ரக வகைகளுக்கு 45 முதல் 60 நாள்களுக்குள்ளும், நாட்டு ரகங்கள் 45 முதல் 70 நாள்களுக்குள்ளும் உலர வைத்து, பின் உடைத்து வெயிலில் மேலும் படிக்க..
கருகும் நெற்பயிரை காப்பாற்ற பிபிஎம் நுண்ணுயிர்
மேலூர் வட்டத்தில் ஒருபோகச் சாகுபடிப் பகுதிகளில் கருகிவரும் நெற்பயிரைக் காப்பாற்ற பிபிஎம் நுண்ணுயிர் கலவையை நெற்பயிரில் தெளிக்கும் செயல்விளக்கம், மேலூர் அருகே விநாயகபுரம் மாநில விதைப் பண்ணையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை வேளாண்மைக் கல்லூரிப் பேராசிரியர் எம். சுந்தரம் நுண்ணுயிர் செயல்பாடு குறித்து அளித்த விளக்கம்: பயிர்களில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அவற்றில் மெத்தைலோ பாக்டீரியம் பயிரின் இலைகள், வேர் பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன. இவை, பயிரில் மெத்தனால் கரிமத்தை உணவாகக் கொண்டு இலைகளின் மேலும் படிக்க..
ஆப்ரிக்க ராட்சச நத்தை கட்டுபடுத்தும் முறைகள்
ஆப்ரிக்க ராட்சச நத்தை பற்றி நாம் எற்கனவே படித்து உள்ளோம். இந்த நத்தையை கட்டுபடுத்தும் முறைகள் பற்றிய ஒரு செய்தி: இந்த நத்தை 19 சென்டிமீட்டர் வரை வளரும். மழை காலங்களில் பெருகும். வெண்டை, பப்பாளி, பீன்ஸ், என்று எல்லா காய்கரி செடிகளையும் விட்டு வைக்காது இந்த நத்தைகளை கட்டுபடுத்தும் வழிகள்: 1. இவை ஒளிந்து இருக்கும் இடங்களை கண்டு பிடித்து அழிக்க வேண்டும் 2. பப்பாளி செடியின் தண்டுகளை இவை தின்ன வரும் என்பதால், அவற்றை மேலும் படிக்க..
காசு அள்ளித் தரும் கடம்ப மர சாகுபடி
மருத்துவ குணம், பென்சில், தீக்குச்சி, காகிதம் தயாரிக்க பயன்படும் வெள்ளை கடம்ப மரத்தை மகசூல் செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆந்தோசெபாலஸ் கடம்பா’ என்ற தாவரவியல் பெயரை கொண்டது கடம்ப மரம். இம்மரத்தின் இலை மற்றும் பட்டைகளில் இருந்து காடமைன், ஐசோகாடமைன், கடம்பைன் போன்ற அல்கலாயிடுகள் தயாரிக்கப்படுகின்றன. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் குளோரா ஜெனிக் அமிலம் ஈரல் பாதுகாப்பு மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரத்தில் இருந்து மேலும் படிக்க..
செம்மை கரும்பு சாகுபடி
கரும்பு விளைச்சலை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கவும் செம்மை கரும்பு சாகுபடி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செம்மை கரும்பு சாகுபடியானது கரும்பு சாகுபடியில் புதிய அணுகுமுறை மற்றும் நீர்சேமிப்பு வழிகளில் புதிய முயற்சியாகும். இதில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்தியோடு தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி அதிகரிப்பதோடு நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உறுதுணையாய் இவை இருக்கும். இதுகுறித்து திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் மு.தேவநாதன், பேராசிரியை ம.நிர்மலாதேவி மேலும் படிக்க..
நேரடி விதைப்பில் களைகளைக் கட்டுப்படுத்த யோசனை
திருத்துறைப்பூண்டி வேளாண்மைக் கோட்டத்தில் சம்பா நேரடிவிதைப்பு செய்யப்பட்ட நிலங்களில் பயிர் முளைத்த வயல்களில் களைகளைக் கட்டுப்படுத்தி பயிரைப் பாதுகாக்க வேளாண்மைத்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். இதுகுறித்து வேளாண்மை உதவிஇயக்குநர் த. நடேசன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது: திருத்துறைப்பூண்டி வேளாண்மைக் கோட்டத்தில் இதுவரை 14ஆயிரத்து 72ஹெக்டேர் பரப்பில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரடிவிதைப்பு செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் நன்றாக முளைத்து உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் நிலத்தில் உள்ள ஈரத்தை பயன்படுத்தி,இனி மேலும் படிக்க..
திருந்திய நெல் சாகுபடி பயிற்சி முகாம்
புதுக்கோட்டை அருகே வம்பன் வேளாண் அலுவலத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி 2013 வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்: வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் வெள்ளிக்கிழமை 2013 நவ. 29 நடைபெறும் பயிற்சியை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 08098079625 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நன்றி: தினமணி
மா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகள்
மா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு, தோட்டக்கலை கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நவ, டிச, ஜன., மாதங்களில் மா பூக்கள் பூக்கும். மார்ச்சில் மா பிஞ்சாகவும், ஏப்ரல் மாதம் மாங்காய் வரும். மா மரங்களில் சில பகுதிகளில் தத்துப்பூச்சிகள் அதிகளவில் உள்ளது. இவைகளை கட்டுப்படுத்த பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் ஆலோசனை கூறியுள்ளது. மா மரத்தை தாக்கும் சாறு மேலும் படிக்க..
தென்னை கன்றுகள் விற்பனைக்குத் தயார்
மேற்குக் கடற்கரையிலுள்ள நெட்டை, செüகாட் இளநீர் ரக தென்னை மரக்கன்றுகள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் விற்பனைக்குத் தயாராக உள்ளன. இதுகுறித்து அந்த நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்குக் கடற்கரை நெட்டை தென்னைக் கன்றுகள் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை. கொப்பரைக்கு மிகவும் உகந்த இந்தக் காய்களில் 68 முதல் 71 சதம் எணணெய் உள்ளது. ஒரு டன் கொப்பரை எடுக்க சுமார் 5000 முதல் 7000 வரை காய்கள் மட்டுமே மேலும் படிக்க..
பழக்கன்றுகள் விற்பனைக்குத் தயார்
பல்வேறு ரகப் பழக்கன்றுகள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சாத்துக்கொடி, கமலா ஆரஞ்சு, நாரத்தை, எலுமிச்சை ஒட்டு ரகம், பலா (ரகம் – பாலூர் பலா), மாதுளை (ரகம் – கணேஷ், பகுவா), கொய்யா (ரகம் – லக்னெü 49), சீமை இலந்தை, அத்தி, மா (ரகங்கள் – அல்போன்சா, நீலம், சேலம், பெங்களூரா) மேலும் படிக்க..
மாடுகளுக்கு கோமாரி நோய் – எதிர்ப்பு உணவான "ராகி கூழ்'
கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு உணவாக, ராகி கூழை வழங்குகின்றனர். ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உட்பட பல மாவட்டங்களில் மாடுகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. தடுப்பூசி போடாத, உரிய சிகிச்சை அளிக்காத மாடுகள் உயிரிழக்கின்றன. நோய் பாதித்த மாடுகளுக்கு வாய், தொண்டையில் ஏற்படும் புண்ணால் திட, திரவ உணவுகளை உட்கொள்ள மறுக்கின்றன. இதனால் நாளடைவில் சோர்வடைகிறது. மாட்டின் உடலில் செலுத்தும் மருந்துகளால், பயன் ஏற்படாமல் போகிறது. நோய் பாதித்த மாடுகள், உடலில் சக்தியோடு இருப்பது அவசியம். மேலும் படிக்க..
கோமாரி நோயை மூலிகை மருத்துவ முறையில் கட்டுப்படுத்த யோசனை
கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மரபு சார்ந்த மூலிகை மருத்துவ முறை மூலம் கட்டுப்படுத்தலாம் என, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் யோசனை தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மாவட்டத்தில் 73 கால்நடைகள் இந்த நோயால் உயிரிழந்ததாகவும், 400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்நடைப் பராமரிப்புத் துறை தெரிவித்தது. இதைக் கட்டுப்படுத்த ஊத்தங்கரை பகுதியில் 20 மருத்துவக் குழு அமைக்கப்பட்டு மேலும் படிக்க..
வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி!
கோபி சுற்று வட்டாரத்தில் கிணற்று பாசனத்தில் வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது. கோபி பாசனப் பகுதிகள் வறண்டு காணப்படுவதால், தோட்டக்கலை பயிர்களான காய்கறிகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர். கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, பாகற்காய், காலிஃபிளவர், புடலை, சின்ன வெங்காயம், பூசணி வகைகள், முள்ளங்கி, கீரை, பூ வகைகளுக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், அளுக்குளி உள்ளிட்ட பகுதிகளில், வாழையில் ஊடுபயிராக செண்டு மல்லிகைப்பூ பயிரிடப்பட்டது. 90 நாள்கள் பிறகு தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மேலும் படிக்க..
விவசாயிகளின் நண்பன் ஆந்தை!
அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் நகர்ப்புறம் சார்ந்த மக்களால் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன். உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. நாம் வசிக்கும் இடங்களில் மூன்று வகை ஆந்தைகள் உள்ளன.புள்ளி ஆந்தை, கூகை என்ற வெண்ணாந்தை, கொம்பன் ஆந்தை. வெண்ணாந்தை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது என்ற தவறான கருத்து உள்ளது.இது நம் நாட்டுக்கே உரித்தான அழகான பறவை.அவற்றின் முகம் ஆப்பிள் அல்லது இதய வடிவில் இருக்கும். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், மேலும் படிக்க..
கோமாரி நோயும் அதனை தடுக்கும் முறைகளும்
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் வருவதற்கு முன்பு கால்நடைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றை பராமரிப்பது அவசியம் அகும். கால்நடைகளை பாதிக்கும் கோமாரி நோயை தடுக்கும் முறைகளை குறித்து கூறுகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் எஸ்.ராஜேந்திரன். கோமாரி நோய் கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. கால்கானை வாய்க்கானை என்றும் கால் மேலும் படிக்க..
நாற்று உற்பத்தி பயிற்சி
“பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குழித்தட்டுகள் மூலம் காய்கறி நாற்று உற்பத்தி பயிற்சி பெறலாம்’ என, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2013 நவ., 20ம் தேதி காலை 10 மணி முதல், 1 மணி வரை குழித்தட்டு மூலம் காய்கறி நாற்று உற்பத்தி குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடக்கிறது. பயிற்சியில், குழித்தட்டுகளில் விதைப்பு மற்றும் மேலும் படிக்க..
தென்னை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்
தூத்துக்குடி அருகே உள்ள வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில் தென்னை மரத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் மரம் ஏறும் கருவி கொண்டு மரம் ஏறும் பயிற்சியின் முதல் கட்ட 6 நாட்கள் இலவச பயிற்சி முகாம் நடந்தது. வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகுகண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் தென்னையில் பூச்சி நோய் தாக்குதல் மற்றும் அறுவடைக்கு ஆள் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் மேலும் படிக்க..
பலன் தரும் பப்பாளி சாகுபடி!
பழ மரங்களில் காத்திருந்துதான் கனியைப் பறிக்க முடியும். இதற்கு விதிவிலக்காக இருப்பது பப்பாளி. ஓராண்டுக்குள்ளேயே பலன் தரும் பழமரமாக பப்பாளி உள்ளது. சத்துகள்: பப்பாளியில் புரதம், நார்ப்பொருள், மாவுப் பொருள், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகளும், தையாமின், ரிபோபுளோவின், நியாஸின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியவையும் உள்ளன. வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளது. காய்களில் இருந்து எடுக்கப்படும் பப்பைனில் புதிய புரத வகைகளை உருவாக்கவல்ல புரோட்டினஸ் என்ற என்சைம் உள்ளது. ரகங்கள்: மேலும் படிக்க..
துவரை சாகுபடியில் ஏக்கருக்கு 800 கிலோ எடுக்க ஆலோசனை
சிவகங்கை மாவட்டத்தில்,துவரை சாகுபடி செய்து, ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் எடுக்கலாம்,” என, விவசாயத்துறை இணை இயக்குனர் செல்லத்துரை கூறினார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில்,பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில்,துவரை சாகுபடியில் விதைகளை நேரடியாக நிலத்தில் விதைப்பதை விட நாற்றுகளாக வளர்த்து நடவு செய்யும் புதிய தொழில் நுட்பம் செயல்படுத்தபடுகிறது. எக்டேருக்கு ரூ.7,500 மானியம் வீதம் 270 எக்டேரில்,துவரை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிக நாட்கள் வயதுடைய உயர் விளைச்சல் தரும் மலட்டு தேமல் நோய்க்கு எதிர்ப்பு மேலும் படிக்க..
மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
பெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2013 நவ. 15-ம் தேதி நடைபெறும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளுக்கு 2013 நவ. 15-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க..
மாடியில் தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்
வீட்டின் மாடியில் தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு சென்னையில் 2013 நவ.13-ஆம் தேதி பயிற்சி முகாம் நடைபெறுகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் முகாமில் காய்கறிகள், பழவகைகள், மூலிகை உள்ளிட்டவற்றை வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். முகாமில் கலந்து கொள்வோருக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். மேலும் இதுகுறித்த தகவல்கள் பெற 04426263484 மேலும் படிக்க..
பூச்சிகளை கட்டுப்படுத்தும் வேம்பு!
இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் ஆராய்ச்சி மையம் விளக்கம் அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகளான தட்டான், ஊசித் தட்டான், பொறி வண்டு, தரை வண்டு, சிலந்திகள், குளவிகள், மேலும் படிக்க..
மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள்
விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தூத்துக்குடி வேளாண்மைத் துறை சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒரு ஹெக்டருக்கு 12.5 டன் தொழுஉரத்துடன் அúஸாஸ்பைரில்லம் 10 பாக்கெட் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும். ஹெக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் நல்ல தரமான பூஞ்சாண விதை நேர்த்தி (டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் கிலோ விதை வீதம்) மேலும் படிக்க..
தென்னை நார்க்கழிவுகளை கழிவுகளை பணமாக்க..
சிப்பிக்காளான் பூசண வித்துக்களைக் கொண்டு, பண்ணைக் கழிவுகளை பயனுள்ள எருவாக மாற்ற முடியும். தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் போது கிடைக்கும் நார்க்கழிவு, விரைவில் மட்காத பண்ணைக் கழிவாகும். இவற்றை அப்புறப்படுத்த முடியாமல், சாலை ஓரங்களில் கொட்டுவதால், சுற்றுப்புற சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தேங்காய் நார்க்கழிவில், அதிகமான விகிதத்தில் அங்ககக் கரிமம் மற்றும் தழைச்சத்து இருப்பதால், இவற்றை நேரடி உரமாக பயன்படுத்த முடியாது. நார்க்கழிவுகளை, சிப்பிக்காளான் பூசணத்தைக் கொண்டு மட்கச் செய்தால், அதிலுள்ள “லிக்னின்’ எனும் மேலும் படிக்க..
பருத்தியில் மாவு பூச்சி
பருத்திப் பயிரில் எறும்புகள் நடமாட்டம் இருக்கிறதா? அப்படியென்றால் மாவுப்பூச்சி தாக்குதல் இருக்கிறதென தெரிந்து கொள்ளலாம். பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதல், ஆரம்பத்தில் இங்குமங்குமாக ஒரு சில செடிகளில் மட்டும் காணப்படும். நுனிக்குருத்து, இலைகள், காய்களில் இப்பூச்சி தோன்றி, சாறை உறிஞ்சும். செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி காய்ந்து விடும். சில சமயங்களில் இலைகள் காய்ந்து, உதிர்ந்து விடும். இவை, கூட்டமாக பஞ்சு போல் அடையாக, இலை மற்றும் தண்டுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும். பரவும் விதம்: மாவுப்பூச்சிகள் வெளியேற்றும் மேலும் படிக்க..
நடவு முறையில் துவரை சாகுபடி
சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நடவு முறையில் துவரை சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம் என்றும், ஹெக்டேருக்கு ரூ.7,500 மானியமாக வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் வகையில் துவரை சாகுபடியில் விதைகளை நேரடியாக நிலத்தில் விதைக்காமல், நாற்றுகளாக வளர்த்து நடவு செய்யும் புதிய தொழில் நுட்பத்தை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது. மேலும் படிக்க..
நெற்பயிரில் புகையான் பூச்சி கட்டுப்படுத்தும் முறை
நெற்பயிரில் புகையான் தாக்குதல் மற்றும் பாக்டீரியா இலக்கருகல் நோயை கட்டுப்பத்தும் வழிமுறைகள்: புகையான் பூச்சி: தற்போது நிலவும் காலநிலை காரணமாக குறுவை சாகுபடியில் புகையான் பூச்சிகளின் தாக்குதல் மற்றும் இலைக்கருகல் நோய் பரவலாக தென்படுகிறது. புகையான் பூச்சிகளின் தாக்குதல் அறிகுறிகளை தெரிந்துகொண்டு அவற்றை கட்டுப்படுத்தவேண்டும். புகையான் பூச்சிகள் நெற்பயிரின் அடிப்பாகத்தில் நீர்ப்பரப்பின் மேல் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இளம்பயிர்கள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும். கதிர் வந்த நிலையில் தாக்குதல் ஏற்பட்டால் மணிகள் பால் பிடிக்காமல் பதராகிவிடும். மேலும் படிக்க..
தென்னையில் ஊடு பயிராக சவுக்கை, பச்சை பயறு
விழுப்புரம், சிறுவந்தாடு கிராமத்தில், தென்னங்கன்றுகள் இடையே ஊடு பயிராக சவுக்கை, பச்சை பயறும் சாகுபடி பணியில் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் ஈடுபட்டுள்ளார். விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு கிராமம் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் சண்முகம். தனது 4 ஏக்கர் நிலத்தில் 2 மாதங்களுக்கு முன் தென்னங்கன்றுகள் நடவு செய்து, வனத்துறை மூலம் வழங்கிய சவுக்கை கன்றுகளையும் நடவு செய்து பராமரித்து வருகிறார். ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில், 25 அடி இடை வெளியில் மேலும் படிக்க..
பருத்தியில் உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி
பெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் சார்பில், வரும் 2013 நவம்பர் 11ம் தேதி காலை ,10 மணிக்கு பருத்திக்கான மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் உரமிடுதல், நீர் நிர்வாகம், நோய் மற்றும் பூச்சி நிர்வாகம் ஆகியவை குறித்து வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் செயல்விளக்கங்கள் மூலம் விளக்கம் அளிக்கப்படும். பயிற்சியில் மேலும் படிக்க..
அமெரிக்க பறக்கும் கொடைகானல் காய்கறிகள்
பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்து வந்த கொடைக்கானல் விவசாயிகள், உயர்ரக விவசாயம் மூலம் அமெரிக்காவிற்கு காய்கறி ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளனர். கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் வில்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை, மன்னவனூர், கீழான வயல், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, போலூர், கூக்கால், பழம்புத்தூர், புதுப்புத்தூர் என கிராமங்களில், கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வந்தனர். விளைந்த காய்கறிகளை, மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்புவர். இந்நிலையில், 2010 ல், “மேல்மலை கிராம பகுதியில், மேலும் படிக்க..
நெற்பயிரில் உர மேலாண்மை
நெல் பயிரில் உயர் விளைச்சல் பெறுவதற்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை நிர்வாகத்தை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ஜெயசுந்தர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நெல் விளைச்சலில் 40 விழுக்காடு உர நிர்வாகத்தைப் பொருத்தே அமைகிறது. இயற்கை எருக்களான பசுந்தாள் உரம், தொழு உரம், மண்புழு உரம், மக்கிய தென்னை நார்க் கழிவு, செயற்கை உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள், உயிரி உரங்களான பாஸ்போ பாக்டீரியா, மேலும் படிக்க..
செம்மை கரும்பு சாகுபடி
பெரம்பலூர் மாவட்டத்தில் செம்மை கரும்புச் சாகுபடியில் செயல் விளக்கம் அமைக்க 50 சத மானியத்தில் இடுபொருள்களும், நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சத மானியத்தில் உபகரணங்களும் பெற விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் வேளாண் உதவி இயக்குநர் சேகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எஸ்.எஸ்.ஐ. எனப்படும் செம்மைக் கரும்புச் சாகுபடியானது, கரும்பு சாகுபடியில் ஒரு புதிய அணுகுமுறையாகும். மேலும், நீர் சேமிப்பு வழிகளில் புதிய முயற்சியாகும். இந்த முறையில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்திகளோடு, தண்ணீர் சேமிப்பு மேலும் படிக்க..
கம்பு நேப்பியர் புல் விற்பனைக்குத் தயார்
கம்பு நேப்பியர் புல் (கோ-4) கரணைகள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பசுந்தீவனப் பயிர்களில் அதிக மகசூல் தரக் கூடிய இந்தக் கம்பு நேப்பியர் புல், அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரக் கூடியவையாகும். இந்தப் புதிய ரகத்தில் 3.5 சதம் சர்க்கரை சத்து உள்ளது. ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 150 டன் பசுந்தீவன மகசூல் பெற முடியும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 13000 கரணைகள் தேவைப்படும். நடவு செய்ய விருப்பமுள்ள மேலும் படிக்க..
தீவனப்பயிர்களில் விதை உற்பத்தி வழிமுறைகள் இலவச பயிற்சி
தீவனப் பயிர்களில் விதை உற்பத்தி மற்றும் விதைச்சான்று பெறும் வழிமுறைகள் குறித்த இலவச பயிற்சி நாமக்கலில் 2013 நவம்பர் 7-ம் தேதி அளிக்கப்பட உள்ளது. நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் அன்று காலை 9 மணிக்கு நடக்க உள்ள இந்த பயிற்சி முகாமில், கறவை மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்ற தீவனப்பயிர்கள், மண்ணின் தன்மைக்கேற்ற தீவனப்பயிர்கள், விதை உற்பத்தியில் புதிய ரகங்கள், விதை நேர்த்தி செய்யும் முறைகள், விதை அளவு, பயிர் இடைவெளி, பயிர் விலகு தூரம், மேலும் படிக்க..
ஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை
முறையான இயற்கை உரம் தந்து மரமுருங்கையை பராமரித்தால், தென்னையை விட கூடுதலாக, 50 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும். இயற்கை உரம் தந்து, காய், கீரைகளை பெறுவதோடு, முருங்கைக் கன்றுகள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறார், திண்டுக்கல் பள்ளப்பட்டியைச் சேர்ந்த முருங்கை விவசாயி கே.பி.எம்.சடையாண்டி. ரசாயன உரத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை. மண்புழு உரமும், பஞ்சகாவியம், இயற்கை பூச்சிகொல்லிகள்தான் மண்ணை பொன்னாக்கும். நல்ல காய்ப்புத் திறன் உள்ள மரத்தில்தான் “விண் பதியம்’ முறையில், கன்றுகள் உற்பத்தி செய்கிறேன். மேலும் படிக்க..
மானாவாரி நிலக்கடலைக்கு ஊட்டமேற்றிய தொழுஉரம்
நாமக்கல் மாவட்டத்தில் மானாவாரி பயிராக நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து பயன்படுத்துமாறு வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை உதவி இயக்குநர் இரா. சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி: மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ நன்கு மக்கிய மேலும் படிக்க..
சின்ன வெங்காயம் சாகுபடி டிப்ஸ்
ராசிபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் முறையான சாகுபடி முறைகளைக் கையாண்டால் அதிக மகசூல் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகன் விஜயகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராசிபுரம் வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இதனால், விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். சின்ன வெங்காயம் நடவு செய்திட ஏக்கருக்கு 1 கிலோ கோ 5, விதை தேவைப்படும். வளர்ச்சிக்கு ஏற்றவாறு 35 மேலும் படிக்க..
மாதுளை சாகுபடி
அறுசுவைகளில் துவர்ப்பு, இனிப்பு ஆகியவற்றை இரண்டறப் பெற்றுள்ள மருத்துவக் குணம் கொண்ட மாதுளை பயிர் சாகுபடி செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அறுசுவைகளில் அரிதான துவர்ப்புச் சுவையும், இனிப்புச் சுவையும் கலந்து உடல் நலனுக்கு உறுதுணையாக இருக்கும் மாதுளை, புனிகா கிரேனேடம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மாதுளை மருத்துவப்பயன்களைக் கொண்டது. மருத்துவப் பயன்: நோய் எதிர்ப்பு சக்தி மேலும் படிக்க..
விவசாயிகளுக்கு தீவன மேலாண்மைப் இலவசப் பயிற்சி
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், 2013 அக். 28-ம் தேதி அசோலா உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து, மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. வெங்கடேசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், அசோலா உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் 2013 அக். 28-ம் தேதி காலை 10 மணி மேலும் படிக்க..
சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி
சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்யும் பரப்பு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்துள்ளது. சர்க்கரை நோய் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குனம் உள்ள பப்பாளி பழத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக மகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை கடந்த, நான்கு ஆண்டுகளாக சாகுபடி செய்து மேலும் படிக்க..
தென்னையை தாக்கும் வண்டுப்பூச்சி
“தென்னையை தாக்கும் சிகப்பு கூன் வண்டு பூச்சிகளை கட்டுப்படுத்திட, விவசாயிகள் உரிய மருந்துகளை முறையாக பயன்படுத்தி வேண்டும்’ என, தோகைமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னை மரத்திலுள்ள ஓட்டைகளில் சிகப்பு கூன் வண்டு தாக்கியதால், பஞ்சு போன்ற கழிவுகள் காணப்படும். செம்பழுப்பு நிற திரவமும், இந்த ஓட்டைகள் மூலமாக கசிந்து கொண்டிருக்கும். தென்னை மரத்தில் காதை வைத்து கேட்டால், சிகப்பு கூன் வண்டு புழுக்களின் நடமாட்டத்தை நன்கு கேட்கலாம். பாதிக்கப்பட்ட மரத்தை தட்டினால், மேலும் படிக்க..
மஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடுபயிராக ஆமணக்கு
கள்ளக்குறிச்சியில் மஞ்சள் பயிரின் பாதுகாப்பிற்கு ஆமணக்கு செடிகளை ஊடுபயிராக பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதி கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். இவைகளை பாதுகாக்க நோய் தாக்குதலை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை கொண்ட ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் ஊடு பயிராக வளர்த்து வருகின்றனர். 10 மாத பயிரான மஞ்சள் செடிகளை விதைத்த மூன்றாவது மாதம் முதல் ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் நடுகின்றனர். இதன் மூலம் மஞ்சள் பயிரைத்தாக்கும் படைப்புழுவின் மேலும் படிக்க..
உரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) செ.மதியழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் எந்த இடுபொருள் வாங்கினாலும் வாங்கும் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கான ரசீது கேட்டு வாங்க வேண்டும். பொதுவாக உரத்துக்கு உர மூட்டைகளில் விற்பனை விலை அச்சிடப்பட்டு இருக்கும். அதனை விவசாயிகள் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். மேலும் படிக்க..
சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி பயிற்சி
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி 2013 அக். 23, 24-களில் நடைபெற உள்ளது. இதுகுறித்து வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருஙகிணைப்பாளர் பி. வெங்கடேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களான சின்ன வெங்காயம் மற்றும் எலுமிச்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பயிர்களில் பூச்சி, நோய் உள்ளிட்ட பல காரணிகளால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் மேலும் படிக்க..
அழிந்து வரும் பனை மரங்கள்
சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பனை மரங்கள் கருகி அழிந்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாக மழை இன்றி வறட்சியாலும், கடும் வெப்பத்தினாலும் கற்பகவிருட்சமான பனை மரங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. கற்பக விருட்சம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பதநீர், கருப்பட்டி தான். கற்பக விருட்சமான பனை மரம் மூலம் நமக்கு கருப்பட்டி, பதநீர், நுங்கு, பனங்கற்கண்டு, கிழங்கு ஆகிய உணவு பொருள்களும் விசிறி, ஓலை, பாய், ஓலைப்பெட்டி, நார்பெட்டி, மேலும் படிக்க..
துவரை சாகுபடி
பயறு வகை பயிர்களில் துவரை மிகவும் முக்கியமான பயிராகும். துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் துவரை உற்பத்தித் திறனைப் பெருக்கவும் வேளாண்மைத் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. துவரை சாகுபடியின் முக்கியத்துவம்: தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யும்போது சில சத்துக்கள் மண்ணில் பற்றாக்குறை ஏற்படும். துவரையின் வேர்கள் மண்ணில் ஆழத்துக்குச் சென்று மண்ணின் அடிப் பகுதியில் உள்ள சத்துக்களை பயன்படுத்துவதால், பிற பயிர்கள் பயிரிடும்போது மண்ணில் உள்ள ஊட்டசத்தை சிறந்த முறையில் மேலும் படிக்க..
நெற்பயிரில் குருத்துப்பூச்சி
திருநெல்வேலி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்களில் குருத்துப் பூச்சியின் தாக்குதல் ஆங்காங்கே பரவலாகக் காணப்படுகிறது. இந்தக் குருத்துப் பூச்சியானது தண்டு துளைப்பான் எனவும் அழைக்கப்படுகிறது. இப் பூச்சியின் புழுக்கள் தூர்களில் சிறு துவாரம் ஏற்படுத்தி தண்டுக்குள் சென்று தண்டுப்பகுதியை உணவாக உள்கொள்கிறது. தாக்குதல் அறிகுறிகள்: கதிர் வரும் தருணத்தில் வெண் கதிர் காணப்படும். சாதாரண நெல்மணிகள் நிறம் இல்லாமல், மணிகள் வெள்ளை நிறத்தில் காணப்படும். பூச்சித் தாக்கிய மணிகள் காய்ந்து விடும். இளம் பயிராக இருந்தால் பயிர் மேலும் படிக்க..
பலன் தரும் கறிவேப்பிலை சாகுபடி!
மருத்துவப் பயன்கள் பல கொண்ட கறிவேப்பிலை சாகுபடியிலும் கணிசமான வருவாய் பெறலாம். பெரும்பாலானோர் கறிவேப்பிலையை மணத்துக்காகப் பயன்படுóத்திவிட்டு உணவிலிருந்து அதை தூக்கி எறிகின்றனர். கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அறிந்தவர்கள் அதை தூக்கி எறிவதில்லை. சுவைத்தும், சவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து. கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள்: அனைத்து வகை சமையல்களிலும் தவறாது இடம் பெற்றிருக்கும் கறிவேப்பிலையில் 0.66 சத நீர்ச் சத்து உள்ளது. 6.1 சதவீத புரதம், 0.1 சதவீத கொழுப்பு, 0.16 சதவீத மாவுப் மேலும் படிக்க..
புதிய கரும்பு ரகம்
த.வே.ப.க. கரும்பு சி.8: நடு, பின் பட்டத்திற்கேற்ற சிறந்த ரகமாகும். அதிக சர்க்கரை சத்து 13 சதம். பருமனான நிமிர்ந்த கரும்பு. இக்கரும்பு சுனையற்றது. தோகை மிக எளிதில் உரிக்கலாம். இயந்திரம் மூலம் அறுவடைக்கும் உகந்த ரகமாகும். வறட்சி மற்றும் அதிக நீர்த்தேக்கத்தை தாங்கும் திறனுடையது. செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. களர்நிலத்தில் நன்றாக வளரக்கூடிய ஒரு சிறந்த கரும்பு ரகம். வயது 330 நாட்கள். பருவம் – நடு மற்றும் பின்பட்டம் (பிப்ரவரி முதல் மேலும் படிக்க..
புதிய காளான்
த.வே.ப.க. பால்காளான் கோ (டி.ஜி)3: சாதாரண சூழ்நிலையில் 3 நாள் வைத்து பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து5 முதல் 6 நாட்கள் பயன்படுத்தலாம். இக்காளானில் நார்ச்சத்து 20.71 சதம், புரதம் 32.9 சதம், மாவுச்சத்து 11.8 சதம், சாம்பல் சத்து 8.32 சதம் ஆகியவை அடங்கியுள்ளது. வயது 45 முதல் 50 நாட்கள். பருவம்: வருடம் முழுவதும். சராசரி ஒரு கிலோ உலர்ந்த வைக்கோலிலிருந்து 1.60 கிலோ காளான் கிடைக்கும். அதிக அளவு விளைச்சலாக ஒரு கிலோ மேலும் படிக்க..
புதிய தென்னை பயிர்
த.வே.ப.க. தென்னை ஏ.எல்.ஆர்.(சி.என்)3 இளநீருக்கு ஏற்ற சுவையுடையது. அதிக பொட்டாசியம் சத்து அடங்கிய புதிய தென்னை ரகம். ஈரியோபைட் சிலந்தியைத் தாங்கி வளரும் திறனுடையது. 3 ஆண்டுகளில் பூக்கம். நடவு செய்ய ஆனி – ஆடிப்பட்டம், மார்கழி-தைப் பட்டம் ஏற்ற பருவங்களாகும். சராசரி விளைச்சல். ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் 86 காய்கள் காய்க்கும். அதிக அளவு விளைச்சலாக ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் 121 காய்கள் காய்க்கும். தமிழகத்தில் பாசன வசதியுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது. மேலும் படிக்க..
தென்னைக்கு ஏற்ற இணைப்பயிர் பலா மரம்
செம்மண் நிலம், வண்டல், மணல் கலந்த நிலம், மணற்பாங்கான நிலம் ஆகியவற்றில் பலா நன்றாக வளரும். தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுடைய தென்னந்தோப்புக்களில் பலாவை இணைப்பயிராக சாகுபடி செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் அணவயல் போன்ற பல கிராமங்களில் தென்னந்தோப்பில் பலா சிறந்த பணம் கொழிக்கும் பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. பலா வெப்பமண்டலப் பயிர் மரமாகும். சதுர முறையில் 25 x 25 அடி இடைவெளியில் நடவு செய்யப்பட்டுள்ளன. இளம் தென்னந்தோப்பு அல்லது வளர்ந்த தோப்புகளிலும், பலாக்கன்றுகளை மேலும் படிக்க..
துவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்
துவரை சாகுபடி முறையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென விழுப்புரம் வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் விடுத்துள்ள அறிக்கை: பயறு வகை பயிர்களில் அதிக புரதச்சத்து நிறைந்தது துவரை. இப்பயிர் சாகுபடி நேரடி விதைப்பு செய்யும் முறை பல பகுதிகளில் உள்ளது. கோலியனூர் வட்டாரத்தில் கடந்தாண்டு பாலித்தீன் பைகளில் நாற்று விட்டு நடவு செய்யும் முறை துவங்கியது. இந்த நடவு முறையில் ஏக்கருக்கு மேலும் படிக்க..
வெள்ளாடு வளர்ப்புபயிற்சி
கரூர், பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும் 9ம் தேதி, ஒருங்கிணைந்த முறையில் பட்டுப்பூச்சி வளர்ப்புடன் கூடிய வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. பயிற்சியில் பட்டு பூச்சி வளர்ப்புடன், வெள்ளாடுகளை இணைத்து வளர்க்கும் முறை, அதற்கேற்ற வீட்டமைப்பு, இனப்பெருக்கம், தீவன பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் மற்றும் பண்ணை பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 2013 அக்டோபர் 9 ம் தேதி காலை 10 மணிக்கு மேலும் படிக்க..
வாழைத்தார் அறுவடை உத்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக வாழை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. வாழைக்காய்/ பழத்தின் விலை காய்களின் முதிர்ச்சி, பழத்தின் நிறம் இவைகளைப்பொறுத்தே அமைகிறது. முதிர்ச்சியடைந்த திரட்சியான காய்கள் நல்ல விலைக்கு விற்பதற்கு, அதன் தரம் சிறந்துவிளங்க, கீழ்க்கண்ட, அறுவடைக்குப்பின் செய்நேர்த்தி முறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேளாண் வணிகதுணை இயக்குநர் முத்துமுனியாண்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். வாழை பொதுவாக காயாக உபகோயப்படுத்தினாலும் அல்லது பழத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டாலும் முதிர்ச்சியமடைந்த பின்பே, அதன் குலைகளை அறுவடை செய்யவேண்டும். வாழைத்தாார்கள் அறுவடை செய்யும் காய்கள் மேலும் படிக்க..
பருத்தி செடிகளை பாதுகாக்க யோசனைகள்
பருத்தியை தாக்கி பாழ்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார். திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வட்டாரங்களில் அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி சாகுபடி செய்யப்பட்டு 20 முதல் 25 நாள் பயிர்களாக வளர்ந்துள்ளன. இப்பருவத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, இலைப்பேன், அசுவினி மற்றும் வெள்ளை ஈ பருத்தியை தாக்கி பாழ்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார். இந்த பூச்சிகளின் தாக்குதலினால் செடிகள் மஞ்சள் நிறமடைந்து பயிர் மேலும் படிக்க..
புரட்டாசி பட்டத்தில் பருத்தி பயிரிட வேண்டுகோள்
“புரட்டாசி பட்டத்தில் பருத்தி பயிரிட்டால் கூடுதல் விலை கிடைக்கும்,”என, வேளாண் வணிக துணை இயக்குநர் முத்துமுனியாண்டி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பருத்தி அதிகளவில் நுகரும் தமிழ்நாடு 2012-2103ல் 5 லட்சம் பொதிகள் பருத்தியை உற்பத்தி செய்தது. தமிழகத்தில் மாசி மற்றும் புரட்டாசி பட்டத்தில் பருத்தி பயிரிடப்படுகிறது. தற்போது, மாசியில் பரியிடப்பட்ட பருத்தி, விவசாயிகளால் இருப்பு வைத்து விற்பனைக்கு வந்துகொண்டுள்ளது. மேலும், மற்ற மாநிலங்களில் இருந்து மிகக்குறைந்த அளவில் வரத்துள்ளது. தற்போது பருத்தி குவிண்டாலுக்கு 4,800 ரூபாய் முதல் மேலும் படிக்க..
நெல் நடவு பணியில் புதுநுட்பம்
நெல் விளைச்சலை அதிகரிக்க “லேசர் லெவலர்’ என்ற, புதிய எந்திரத்தினை பயன்படுத்தி தேனி விவசாயிகள், நிலத்தை சமப்படுத்தி வருகின்றனர்.விவசாயத்துறையில் தற்போது, திருந்திய நெல் சாகுபடி, வரிசை நடவு போன்ற புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஒரு எக்டேருக்கு சாகுபடி 10.50 டன்னாக உள்ளது.மேலும், விளைச்சலை அதிகரிக்க, தற்போது “லேசர் லெவலர்’ என்ற எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. நிலத்தை, புழுதி உழவு செய்து மேல் மண் முழுக்க பவுடராக்கிய பின்னர்,”லேசர் லெவலர்’ எந்திரம் மூலம் சமப்படுத்த வேண்டும். இதன் மேலும் படிக்க..
நெற்பயிரில் இலைக்கீரல் நோய் கட்டுப்படுத்த யோசனை
கோபிசெட்டிபாளையம் டி.என்.பாளையம் பகுதியில் நெற்பயிரில், பாக்டீரியா இலைக்கீரல் நோய் தாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து, டி.என்.பாளையம் வேளாண்மை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அரக்கன்கோட்டை பாசனப்பகுதிகளான, பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, டி.என்.பாளையம், டி.ஜி.புதூர் உள்ளிட்ட பகுதியில், 2,200 எக்டேர் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. பாக்டீரியா இலைக்கீரல் நோய் தாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நோயை கட்டுப்படுத்தும் விதம் குறித்து, டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சிதம்பரம் கூறியதாவது: நெற்பயிர்களின் இலைகளின் நுனி மற்றும் ஓரங்களில் ஆரஞ்சு நிற கீரல்கள் மேலும் படிக்க..
மொந்தன் ரக கறிவாழை
மொந்தன் ரக கறி வாழை சாகுபடி பற்றி அனுபவங்களை திருவண்ணாமலை மாவட்டம் பண்ணைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை தெரிவிப்பது: அனைத்து பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். நிலத்தில் வடிகால் வசதி அவசியம். நிலத்தை நன்கு உழுது மண்ணைப் பொலபொலப்பாக மாற்றி, செடிக்கு செடி, வரிசைக்கு வரிசை ஏழரை அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழம், அகலம் குழிகள் எடுத்து 1 வாரம் வரை ஆறப்போட்டு 5 கிலோ தொழு உரத்துடன் மேல் மண்ணைக்கலந்து குழியை நிரப்ப வேண்டும். பின்னர் பாசனம் மேலும் படிக்க..
முருங்கை பழ ஈ
செடிமுருங்கைசாகுபடியில் முருங்கை காய்களைத் தாக்கும் முக்கிய பூச்சி இது. ட்ரோசொபிலா என்ற சிறிய வகையைச் சேர்ந்த இந்த பழ ஈக்கள் முருங்கை பிஞ்சுகளைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. பிஞ்சுகள் வளர ஆரம்பிக்கும்போது மெல்லிய தோல்களில் முட்டையிடுகின்றன. இரண்டு மூன்று நாட்களில் வெளிவரும் கால்கள் இல்லாத வெண்மை நிற புழுக்கள் திசுக்களைச் சாப்பிடும். பிஞ்சின் நுனிப்பகுதியில் இருந்து தொடங்கும். தாக்கிய பகுதிகளில் இருந்து காபி நிறத்தில் பிசின் போன்ற திரவம் வடிய தொடங்கி, நுனிப்பகுதியை மூடிவிடும். பிஞ்சுகள் சுருங்கி, மேலும் படிக்க..
நாட்டுக் கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி
கிருஷ்ணகிரியில் வருகிற 2013 செப்டம்பர் 30-ஆம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தலைவர் அன்னல்வில்லி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி 2-இல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு வருகிற 2013 செப்டம்பர்30-ஆம் தேதி காலை 9 மணிக்கு நாட்டுக் கோழி வளர்ப்பு மேலும் படிக்க..
வளம் தரும் சப்போட்டா சாகுபடி
சப்போட்டா சாகுபடியில் உயரிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் ஈட்டலாம் என திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சப்போட்டா பழத்தில் பரக்டோஸ், சுக்ரோஸ் ஆகிய எளிய சர்க்கரைகள் உள்ளதால் சாப்பிட்டவுடன் உடனடி ஆற்றலும், புத்துணர்ச்சியும் பெறலாம். 5.6 சதவீத நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கலைத் தடுக்கும். சப்போட்டாவில் உள்ள டானின் எனும் வேதிப் பொருள் நோய் மேலும் படிக்க..
சொட்டுநீர் பாசன பராமரிப்பு
சொட்டு நீர் பாசனம் அமைப்பது குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லை. முறையாக பராமரித்தால், ஒரு அமைப்பின் மூலம் 15 ஆண்டுகள் வரை பயனடைய முடியும், என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில், இதுவரை தோட்டக்கலைத்துறை மூலம் 35 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் சொந்தமாக சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர். இந்ந பாசன அமைப்புகளை விவசாயிகள் முறையாக பராமரிப்பது இல்லை. இதனால் மேலும் படிக்க..
வேம்பில் தயாராகும் பூச்சிக்கொல்லிகளுக்கு மவுசு
வேப்பிலை, வேப்பங் கொழுந்து, வேப்பம் பழம் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், அதன் பயன்பாடு, பெருகி வருகிறது. வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லி மருந்து துறையின் சந்தை மதிப்பு, 100 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறை, ஆண்டுக்கு, 7 – 9 சதவீதம் வளர்ச்சி கண்டு வருவதாக, Exim Bankஎக்சிம் பேங்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வேம்பின் விதைகள் மற்றும் இதர பாகங்களில் இருந்து மேலும் படிக்க..
வனவியல் விரிவாக்கம் மூலம் இலவச மரப் பயிர்கள்
கிருஷ்ணகிரி வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நீண்டகால மரப் பயிர்கள் மற்றும் குறுகிய கால மரப் பயிர் வகைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து வனவியல் விரிவாக்கக் கோட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனவியல் விரிவாக்க கோட்டத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு நிறைந்த பயன் தரக்கூடிய உயர் ரக மரக் கன்றுகளான தேக்கு, சில்வர் ஓக், மலை வேம்பு, பெருமரம், வேங்கை, குமிழ், மேலும் படிக்க..
இடைவெளிவிட்டு நடவு முறையில் கல்யாண பூசணி
கல்யாண பூசணியை இடைவெளி விட்டு நடவு செய்தால், நல்ல விளைச்சலை கொடுக்கிறது என்கின்றனர், காஞ்சிபுரம் மாமண்டூர் விவசாயிகள். காஞ்சிபுரம் அடுத்துள்ளது, துாசி மாமண்டூர். இங்கு, மேட்டுப்பகுதிகளில் உள்ள விளை நிலங்களில், விவசாயிகள் வெள்ளரி, அகத்தி கீரை, தர்பூசணி, கல்யாண பூசணி, அவரை, கத்திரி ஆகியவற்றை, சாகுபடி செய்கின்றனர். கல்யாண பூசணியை, 10 அடி அகலம், 8 அடி நீளத்திற்கு இடைவெளிவிட்டு நடவு செய்தால், நல்ல விளைச்சலை கொடுப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர் கல்யாண பூசணிக்காய், ஒவ்வொரு அமாவாசையின் போது, அதிகளவில் விற்பனையாகிறது. திருஷ்டி கழிக்க, மேலும் படிக்க..
நிலக் கடலையை தாக்கும் சுருள்பூச்சி
எலச்சிபாளையத்தில் மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள நிலக் கடலையில் சுருள்பூச்சி தாக்குதல் உள்ளதாக வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார். இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் சையத் முகம்மது நகீப் கூறியது: எலச்சிபாளையம் வட்டாரத்தில் 12,584 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரி நிலக் கடலை பூப்பூக்கும் தருணத்தில் உள்ளது. தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக நிலக் கடலையில் சுருள் பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம். இளம் புழுக்கள் இலையின் நடுப் பகுதியை உண்பதால் பழுப்பு நிற சிறிய மேலும் படிக்க..
தென்னையும் சொட்டுநீர் பாசனமும்
தென்னை சாகுபடியில், நீர் பாசன நிர்வாகத்தை முறையாக பின்பற்றினால், அதிக காய்களை அறுவடை செய்ய முடியும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது. உடுமலை வட்டாரத்தில், 14 ஆயிரம் எக்டர் பரப்பில், தென் னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடியில் நீர் பாசனம், உர மேலாண்மை செய்வது குறித்து வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுரைகளை தெரிவித்துள்ளது. தென்னையில் கொண்டைப்பகுதியிலுள்ள மட்டைகள், தென்னங்குலைகள், திரட்சியாக இருக்கவும், ரசாயன மாற்றங்கள், வெப்ப சமநிலை, ஒளிச்சேர்க்கை நடக்கவும், நீர் பாசனம் இன்றியமையாதது ஆகும். சாகுபடியில், தண்ணீர் பற்றாக்குறை மேலும் படிக்க..
அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம்
சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற, தொழில்நுட்பம் குறித்து, திருத்துறைப்பூண்டி கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு (2013) சம்பா சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும், இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி இயக்குனர் ஜெயராமன் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: திருவாரூர், நாகை மாவட்டங்களில், சம்பா சாகுபடி நேரடி விதைப்பு செய்து விதை முளைக்க, சரியான மேலும் படிக்க..
சின்ன வெங்காய சாகுபடி
ராசிபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் முறையான சாகுபடி முறைகளைக் கையாண்டால் அதிக மகசூல் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகன் விஜயகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சின்ன வெங்காயம் நடவு செய்திட ஏக்கருக்கு 1 கிலோ கோ 5, விதை தேவைப்படும். வளர்ச்சிக்கு ஏற்றவாறு 35 நாளில் இருந்து 40 நாள்களுக்குள் நாற்றுகளை பறித்து நடவு செய்யலாம். தேவைக்கேற்றவாறு நீளம், 1 மீட்டர் அகலம், 15 செ.மீ உயரமும் மேலும் படிக்க..
பயிர் வளர்ச்சிக்கு உதவும் பஞ்சகவ்யம்
இயற்கை வேளாண் முறையில் பயிர் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மாணவிகள் பஞ்சகவ்யம் என்னும் வளர்ச்சி ஊக்கி கரைசலின் பயன்பாடு, அதன் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை செய்முறை விளக்கம் அளித்தனர். கிருஷ்ணகிரியை அடுத்துள்ள கே.பூசாரிப்பட்டியில் உள்ள விவசாயி மணியின் நிலத்தில், ஆதிபராசக்தி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மாணவிகள் சாந்தி, வினோதினி, புனிதா, நந்தினி, மகாலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோர், பஞ்சகவ்யம் என்னும் வளர்ச்சி ஊக்கி கரைசலை விவசாயிகளுக்கு செய்து மேலும் படிக்க..
துவரை பயிரில் அதிக லாபம் பெறுவது எப்படி
துவரை பயிரிடுவதில், நடவு முறையை பின்பற்றினால் விளைச்சல் அதிகரித்து கூடுதல் லாபம் பெறலாம் என, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை கூறியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 8,000 எக்டேர் பரப்பளவுக்கு மேல் பயறு வகைகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.இதில், துவரைப் பயிர் மட்டும் ஆண்டுக்கு 1,814 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. துவரை பெரும்பாலும் ஊடு பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நேரடி விதைப்பாக சால்களில் விவசாயிகள் விதைக்கின்றனர்.ஆனால், துவரையை நாற்று விட்டு நடவு மேலும் படிக்க..
தீவனப்பயிர் சாகுபடிப் பயிற்சி
புதுக்கோட்டை அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் தீவனப்பயிர் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வரும் வெள்ளிக்கிழமை(2013 செப்.6ம்தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்: இன்றைய காலக்கட்டத்தில் விவசாய நிலங்கள் பரப்பளவு குறைந்து கொண்டு வருகிறது. அதனால் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் மற்றும் பசுந்தீவனப் புல் கிடைப்பது அரிதாக உள்ளது. மாவட்டத்தில் புல்வெளி சுமார் 5,400 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இந்நிலையில், கால்நடைகளுக்கு பசுந்தீவனத்திற்கு தீவனப்புல் பயிர்களான கம்பு மேலும் படிக்க..
இயற்கை உரம் மூலம் செவ்வாழை சாகுபடி
சென்னிமலை: சென்னிமலை அருகே இயற்கை உரங்களை பயன்படுத்தி, 12 சென்ட் நிலத்தில், 18 மாதத்தில் செவ்வாழை மூலம், 84 ஆயிரம் லாபம் அடைந்ததாக, விவசாயி பெருமிதம் தெரிவித்தார். சென்னிமலை யூனியன் வரப்பாளையம் பஞ்சாயத்து புளியம்பாளையத்தில் வசிப்பவர் சீனிவாசன்.இயற்கை உரங்கள், சொட்டு நீர் பாசன உதவியுடன், இவர் மாதுளை, மா, எலுமிச்சை என பயிரிட்டு, தற்போது செவ்வாழை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார். இவர், 12 சென்ட் நிலத்தில், 200 செவ்வாழை கன்றுகளை, கரூர் பகுதியில் இருந்து, கன்று மேலும் படிக்க..
உடல் நலம், மண்வளம் பாதுகாக்கும் இயற்கை விவசாயம்
மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி, வாடிப்பட்டி அருகே திருவாலவாயநல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இப்பகுதியில் ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இடையில் 8 ஆண்டுகளாக முற்றிலும் இயற்கை வழி விவசாயத்தை மேற்கொண்டுள்ள பார்த்தசாரதி, “ரசாயன உரங்களால் உடல்நலத்துக்கு கேடு விளைகிறது. எனவே இயற்கை உரங்களை பயன்படுத்துகிறேன்,’ என்கிறார். திருவாலவாயநல்லூரில், 25 ஏக்கரில் இவரது விவசாய நிலம் பரந்து விரிந்துள்ளது. பெரும்பாலும் தென்னை மரங்களே நிறைந்துள்ளன. அவர் தென்னையின் காய்களை மட்டுமே பறிக்கிறார். அடிமுதல் மேலும் படிக்க..
நெல் விதைப் பரிசோதனை
நெல் விதைகளைப் பரிசோதனை செய்து கொண்டு சம்பா பட்டத்தில் ஈடுபட்டால் அதிக மகசூல் பெறலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் சி.பெருமாள் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மத்திய கால நெல் ரகங்களான வெள்ளைப் பொன்னி, மே.வெ. பொன்னி, பாபட்லா – 5205, குறுகிய கால ரகங்களான ஏடிடி (ஆர்) 45, ஏடிடி – 36, ஏடிடி – 37, ஏடிடி மேலும் படிக்க..
சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்
சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் என்.நர்மதா, வே.உமா, மொ.சக்திவேல் ஆகியோர் கூறியது: கறவை மாடு வளர்ப்பில் சினைப் பசுக்களுக்கு உரிய பராமரிப்பு செய்யாவிட்டால், கன்று வீசுதல், குறைமாதக் கன்றை ஈனுதல், பால் உற்பத்திக் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டு நஷ்டத்தை உருவாக்கும். இந்தப் பாதிப்புகளைத் தடுக்க சினை மேலும் படிக்க..
ரோஜா சாகுபடி
ரோஜா சாகுபடியில் உயர்தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் ஈட்டலாம் என்று தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. ரகங்கள்: எட்வர்ட் ரோஜா, ஆந்திர சிவப்பு ரோஜா. மண்வகை: வடிகால் வசதியுள்ள மணற்சாரி வண்டல். இடைவெளி: வரிசைக்கு வரிசை 2 மீட்டர், செடிக்குச் செடி 1 மீட்டர் என்ற இடைவெளி அவசியம். ஒன்றரை அடி கன அளவுள்ள குழிகள் தேவை. நடுவதற்கு முன் குழிக்கு 10 கிலோ தொழு உரம், 20 கிராம் லிண்டேன் தூள் இட மேலும் படிக்க..
இயற்கை வேளாண்மைக்கு தயாராகலாமே!
இயற்கை வேளாண்மையில் விளைச்சல் குறைவாக இருந்தாலும், நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாரமாக அது அமையும் என முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல முதல்வர் முனைவர் ஜே.வசந்தகுமார் தெரிவித்த தகவல்கள்: இயற்கை முறை காய்கறி சாகுபடி குறிப்புகள் மற்றும் இயற்கை உரமிடுதல்: வேளாண் பயிர்க் கழிவுகளை மக்க வைத்து இயற்கை தொழு உரம் தயார் செய்துவிடலாம். பசுந்தாள் உரங்களை தக்கைப்பூண்டு, அகத்தி, சணப்பை, கொளிஞ்சி போன்றவற்றை பயிரிட்டு மக்க வைத்து பயன்படுத்தலாம். மேலும் படிக்க..
நாமே உருவாக்கினால் என்ன!
காய்கறிகளின் விலை உயர்வை சமாளிக்க, வீட்டிலேயே தோட்டம் அமைப்பதன் அவசியத்தை கூறும், சுல்தான் அகமது இஸ்மாயில்: நான், சென்னை புதுக் கல்லூரியின், முன்னாள் துணை முதல்வர். சுற்றுச்சூழல் மற்றும் மண்புழுக்களை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம். இதுதொடர்பாக உரையாற்ற, பயிற்சியளிக்க என, பல வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளேன். தற்போது, காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், வீட்டிலேயே தோட்டம் அமைக்க, சிலருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எல்லாருக்குமே, வீட்டு தோட்டம் அமைப்பதில், விழிப்புணர்வு தேவை. பெரிய பெரிய கட்டடங்களின் சுவர் வெடிப்புகளில், அரச மேலும் படிக்க..
தழைச்சத்து பயிராக சித்தகத்தி
செயற்கை உரங்களுக்கு மாற்றாக, இயற்கை உரங்களை பயிரிட விவசாயிகள் நாட்டம் காட்டுகின்றனர். இதற்காக, சதைப்பற்றுள்ள பயறு வகைகளை பயிரிட்டு வருகின்றனர். ரசாயன உரங்களின் விலை அதிகம் என்பது மட்டும் அல்லாது மண் வளத்தையும் பாதிக்கிறது. இதற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் பசுந்தாள் உரம். மண்ணில் அங்ககப் பொருட்களை அதிகரிப்பதற்காக பயிரிடப்படும் பயிர்கள், பசுந்தாள் உர பயிர்கள் ஆகும். தக்கை பூண்டு, கொளிஞ்சி, சணப்பு, கிளைரிசியா, அவரை, புங்கம், எருக்கு, சூரியகாந்தி உள்ளிட்டவை பசுந்தாள் உர பயிர்கள் ஆகும். மேலும் படிக்க..
பசுமை குடில்களில் கத்தரி நாற்று
பசுமை குடில்களில், குழிதட்டு முறையில் விளைவிக்கப்படும் நாற்றுக்களை பயன்படுத்தி, கத்தரி சாகுபடி செய்வதன் மூலம், சாதாரண மகசூலை விட மூன்று மடங்கு மகசூல் கிடைக்கும் என, கீழ்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயி பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: தோட்டக்கலை துறை அதிகாரிகள் வழங்கிய, சொட்டு நீர் பாசன முறையில், கத்தரி பயிரிட்டேன். இதற்காக, 75 சதவீத மானியத்தில், சொட்டு நீர் பாசன கருவிகளை பெற்றேன். எனது, 50 சென்ட் நிலத்தில், கத்தரி பயிரிட்டேன். 40 நாட்களில், காய்க்க மேலும் படிக்க..
மஞ்சளில் ஊடுபயிராக செங்கீரை
மஞ்சள் சாகுபடிக்கு உரம் வாங்க ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்து, ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில், ஈரோடு மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அதிகளவு மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். கடந்தாண்டில் இருந்தே மஞ்சள் விலை திடீரென கடும் விலைச்சரிவு ஏற்பட்டது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மஞ்சள் பயிருடன் ஊடுபயிரமாக பல்வேறு தானியங்களை சாகுபடி செய்து வருகின்றனர். வெள்ளோடு, கனகபுரம், டி. மேட்டுப்பாளையம் பகுதியில் மஞ்சளுடன் ஊடுபயிராக செங்கீரை மேலும் படிக்க..
மானிய விலையில் ஒட்டு ரக மா கன்றுகள்
காஞ்சிபுரம் மேல்கதிர்பூர் அரசு தோட்டக்கலை பண்ணையில், ஓட்டு ரக மா கன்றுகள், மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம் அடுத்த மேல்கதிர்பூர் கிராமத்தில், 130 ஏக்கர் பரப்பளவில், அரசு தோட்டக் கலை பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு, பூ மற்றும் பழ வகை செடிகள், விதைகள் ஆகியவை மானிய விலையில் விற்கப்படுகின்றன. தற்போது, பங்கனபள்ளி, அல்போன்சா, இமாபசந்து, பெங்களூரா ஆகிய ஒட்டு ரக மா கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து, தோட்டக் மேலும் படிக்க..
தென்னையை தாக்கும் நத்தை புழு
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் தென்னையை தாக்கி வரும் நத்தை புழுக்களை விவசாயிகள் உழவியல் முறை மற்றும் வேதியியல் முறைகளை கையாண்டு அழிக்கலாம். வேளாண் இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி, பெண்டரஅள்ளி, புலியூர், மஞ்சமேடு, பாரூர், கீழ்குப்பம், துரைப்பட்டி, பாப்பானூர், மோட்டுக்கரை , ஆட்டுகாரனூர் ஆகிய கிராமங்களில் உள்ள தென்னை மரங்களில் நத்தை புழுக்கள் எனப்படும் எரி பூச்சி தாக்குதல் தற்போது பரவலாக காணப்படுகிறது. தமிழகத்தில் முதன் மேலும் படிக்க..
பெரியார் மணியம்மை பல்கலை.யில் வேளாண் தொழில்நுட்ப விழா
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்நுட்பத் திருவிழா 2013 ஆக. 30-ம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது: பல்கலைக்கழக வளாகத்தில் ஆக. 30, 31-ம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த விழாவில் 12 தலைப்புகளில் அமர்வுகள் நடத்தி, விவாதிக்கப்படவுள்ளது. இவை தீர்மானங்களாகவும் இயற்றப்படவுள்ளன. ஒவ்வொரு அமர்விலும் வேளாண் அறிஞர் ஒருவரும், முன்னோடி விவசாயிகள் இருவரும் பேசவுள்ளனர். கேள்வி – பதில் மற்றும் தீர்மானங்கள் இயற்றுதல் ஆகியவற்றுடன், அந்த அமர்வை மேலும் படிக்க..
சாமந்தி பூ சாகுபடி
பாலுார் அருகே, அதிக லாபம் தரும் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்வதில், விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுார் ஊராட்சியில், மேலச்சேரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு, விவசாயிகள் அதிகம் வசிப்பதால், இப்பகுதியின் பிரதான தொழிலாக, விவசாயம் விளங்கி வருகிறது, இப்பகுதியில், உள்ள விவசாயிகள் அதிக லாபம் தரும், மலர் சாகுபடி செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, மேலச்சேரியை சேர்ந்த சுப்பிரமணி என்ற விவசாயி கூறியதாவது: மலர் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால், மேலும் படிக்க..
கருந்தலை புழுவை கட்டுப்படுத்தும் 'டெக்னீஸ்' ஒட்டுண்ணி பூச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் உள்ள தென்னை மரங்களில் கருந்தலை புழுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தென்னை மரங்களில் “டெக்னீஸ்’ என்ற ஒட்டுண்ணி பூச்சி விடப்பட்டுள்ளது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 12,000 ஹெக்டேரில் 16 லட்சம் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளான காவேரிப்பட்டணம், திம்மாபுரம், பெரியமுத்தூர், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், அகரம், மருதேரி, பாரூர், அரசம்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மேலும் படிக்க..
மஞ்சளில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு
வணிக ரீதியான பயிரில் மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் பயிரில் ஏற்படும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மஞ்சள் மகசூல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ம.சங்கீதா, மஞ்சள் பயிரில் ஏற்பட்டுள்ள நுண்ணூட்டச் சத்து குறைபாடு, அவற்றை நிவர்த்தி செய்வது குறித்து கூறியது: ஓர் ஏக்கரில் சராசரியாக 2 முதல் 2.5 டன் உலர் மஞ்சள் கிழங்கு மகசூல் கிடைக்கும். சரியான உர மேலாண்மை, பயிர் வளர்ச்சிப் மேலும் படிக்க..
50 சத மானிய விலையில் காய், கனி செடிகள்
தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 50 சத மானிய விலையில் காய்கறி, பழச் செடிகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதுகுறித்து கெங்கவல்லி ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குநர் ரங்கநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 சத மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க சிறிய வெங்காயம் சிஒஒஎன்5, பிகேஎம் 1 ரக விதைகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப பாக்கு, மா ஒட்டு மேலும் படிக்க..
கறவை மாடுகள் நோய் தடுப்பு இலவச பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாடுகளை தாக்கும் நோய்கள் குறித்து வருகிற 2013 ஆகஸ்ட் 29-ஆம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மருத்துவர் அனல்விழி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி 2-இல் மின் செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மேலும் படிக்க..
சம்பா பருவத்துக்கான புதிய நெல் ரகங்கள்
ஆழ்குழாய் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்துள்ள நிலையில், தாமத தென்மேற்குப் பருவமழை காரணமாக எதிர்பார்க்காத வேகத்தில் மேட்டூர் அணை நிரம்பி வீராணம் ஏரியும் பாசனத்துக்கு திறந்து விடப்படவுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் சம்பா பருவத்துக்கான ரகத்தை தேர்வு செய்வதற்காக புதிய சம்பா நெல் ரகங்கள் குறித்து பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் தெரிவித்தது: ஐந்து புதிய சம்பா ரகங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த சம்பா ரகங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம். சம்பா மசூரி: மேலும் படிக்க..
நெல் மாற்று நடவு இயந்திரத்தை வாடகைக்கு
டெல்டா விவசாயிகள், நெல் நாற்று நடவு இயந்திரத்தை வாடகைக்குப் பெற அணுக வேண்டிய கூட்டுறவுச் சங்க ங்களின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பி.ரேணுகாம்பாள் விடுத்துள்ள அறிக்கை: விவசாயத்தை இயந்திரமயமாக்கி நெல் சாகுபடியில் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், டெல்டா விவசாயிகளுக்கு நாற்று நடவு செய்யும் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விட கூட்டுறவுச் சங்கங்கள் தயாராக உள்ளன. இந்த இயந்திரங்களை வாடகைக்குப் பெற கீழ்கண்ட எண்களை விவசாயிகள் அணுகலாம். சங்கத்தின் பெயர் மேலும் படிக்க..
பூச்சி மருந்து தெளிப்பில் ஆலோசனைகள்
பூச்சி மருந்து தெளிக்கும் விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயிர்களில் பூச்சிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மருந்து தெளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் நன்மை செய்யும் பூச்சிகள் பாதிக்கப்படுவதுடன் மட்டுமில்லாமல், சுற்றுபுறச் சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. மேலும் அளவுக்கு அதிகமாக மருந்துகளைப் பயன்படுத்துவதால் நாம் உண்ணும் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளில் நச்சுத்தன்மைஅதிகமாகி மேலும் படிக்க..
அண்ணாமலை கத்தரி
மரபீனி கத்தரிக்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் மரபீனி கத்தரியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து விவசாயிகளின் தோட்டங்களில் சாகுபடி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறை உருவாக்கியுள்ள அதிக மகசூல் தரும் அண்ணாமலை கத்தரி, மரபீனி கத்தரிக்கு நல்ல மாற்றாக இருக்கும் என அண்ணாமலைப் பல்கலை. விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார். பாரம்பரிய மற்றும் இயற்கை சார்ந்த வேளாண்மை மேலும் படிக்க..
பண்ணை செழிக்க மண்ணைக் காப்போம்!
பண்ணை செழிக்க வேண்டுமானால் மண்ணைப் பாதுகாப்பது அவசியம். மண்ணின் வளமே மனித வளம். நாம் சாகுபடி செய்யும் மண், எண்ணற்ற நுண்ணுயிரிகளையும் நன்மை செய்யும் பல பாக்டீரியாக்களையும் கொண்ட உயிருட்டமுள்ளதாகும். உயிரூட்டப்பட்ட மண்ணில்தான் அதிக பயிர் மகசூல் பெற முடியும். நம் முன்னோர்கள் அதிக அளவு இயற்கை உரங்களான தொழு உரம், பசுந்தாள் உரம், போன்றவற்றைப்பயன்படுத்தினர். இதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரித்து அம் மண் உயிரோட்டமுள்ள மண்ணாக இருந்தது. ஆனால் இப்போது நாம் ஆடு, மேலும் படிக்க..
நெற்பயிரில் செந்தாளை நோய் பாதுகாப்பு
காளையார்கோவில் ஒன்றியத்தில் நெற்பயிரில் செந்தாளை, புகையான், இலைச்சுருட்டு நோய் தாக்கியுள்ளதால், மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு, பெய்து வரும் மழையினால் ஒன்றிய அளவில் கண்மாய் , குளங்களில் நீர் பெருகியுள்ளது. கண்மாய் நீரை நம்பி இங்கு, 10,500 எக்டேர் நில விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, நெற்பயிர் விளைந்துவரும் நிலையில், செந்தாளை நோய் தாக்கி இலைகள் செம்பழுப்பாக மாறி வருகிறது. புகையான் நோயால் இலைகள் வெளுத்துள்ளன. இலை சுருட்டு நோய் தாக்கமும் அதிகரித்துள்ளன. இதனால், மேலும் படிக்க..
கத்திரி சாகுபடி
நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் அடங்கிய மண்ணில், கத்தரியை சாகுபடி செய்யலாம். கோ-1, கோ-2, எம்.டி.யு-1, பி.கே.எம்.-1, பி.எல்.ஆர்-1, கே.கே.எம்-1, அண்ணாமலை ஆகிய ரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது. விதை நேர்த்தி: கத்தரியை சாகுபடி செய்ய ஏற்ற மாதங்கள் டிசம்பர், ஜனவரி, மே-ஜூன், ஒரு எக்டேருக்கு 400 கிராம் விதைகள் போதுமானது. 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். 400 கிராம் விதைகளுக்கு, 40 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் மேலும் படிக்க..
எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள்
தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன. இலையைக் குடையும் புழுவானது,இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது. அதிகம் தாக்கப்பட்ட இலைகள் பலவித நெளிவு, வளைவுகளுடன் மேலும் படிக்க..
பயிர் காப்பீடு
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கை இடர்பாடுகளான வறட்சி, புயல், அதிக வெப்பம், அதிகமழை, அதிவேக காற்று ஆகியவற்றால் வாழை, காய்கறிகள், மிளகாய், மலர்கள், மரவள்ளி, வெங்காயம் போன்ற தோட்டக்கலை பயிர்களில் பயிர் இழப்பும், மகசூல் இழப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய தருணங்களில் உதவிக்கு வருவதுதான் பயிர்க் காப்பீட்டுத் மேலும் படிக்க..
வெட்டிவேர் சாகுபடி
வெட்டிவேர் இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது: இது ஒரு லாபகரமானபயிர். இதற்கு அதிக ஆள் தேவையில்லை. அதிக தண்ணீர் தேவையில்லை. அதிக வெயில் தேவையில்லை. அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை. வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது. பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50,000 வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: மேலும் படிக்க..
மரபு சாரா தீவனங்கள்
கால்நடைகள் பெரும்பாலும் வைக்கோல், தட்டை போன்ற விவசாய உபபொருட்களை தீவனத்திற்காக நம்பியுள்ளன. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின்போது தீவன பொருட்கள் கிடைப்பது அரிதாகின்றது. இச்சூழ்நிலையில் மரபுசாரா தீவனப் பொருட்களைத் தீவனமாக பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும். உலர்ந்த புற்கள், காய்ந்த மரக்கிளைகள் போன்ற தீவனங்களின் மீது தண்ணீர் அல்லது உப்புக்கரைசல் (2 சதம்) தெளித்தபிறகு தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்கலாம். வெல்லம் அல்லது சர்க்கரைப் பாகு (மொலாசஸ்) போன்ற இனிப்பான பொருட்களை தீவனங்களின்மீது தெளித்தபின் கால்நடைகளுக்கு அளிக்கலாம். மேலும் படிக்க..
ஆடாதோடா உயிர்வேலி
ஆடாதோடா மூலிகையானது அகாந்தேசி என்ற தாவரவியல் குடும்பத்தில் ஜஸ்டிசியா ஆடாதோடா என்ற தாவரவியல் பெயரால் வழங்கப்படுகிறது. 4 மீட்டர் வரை வளரக்கூடியது. ஆடாதோடா முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டாலும் ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இதன்பங்கு அளப்பரியதாகும். குறிப்பாக சுவாச நோய்கள், சளி, இருமல், ஆஸ்துமா, தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுகிறது. இத்தாவரத்தில் காணப்படும் வாசிசின் என்ற மேலும் படிக்க..
மஞ்சளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி
மஞ்சள் விலை வீழ்ச்சியால், கோபி சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு மஞ்சள் பரப்பளவு குறைந்துள்ளது. பருவமழை ஏமாற்றம் மற்றும் மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைக்காததால், விவசாயிகள் மஞ்சளை பயிரிடாமல் இருந்தனர். மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டால், ஓரளவுக்கு லாபம் கிடைப்பதால், கோபி சுற்று வட்டாரத்தில் மஞ்சள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். தடப்பள்ளி பாசனப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கோபி சுற்று வட்டாரத்தில் அதிகளவில் கரும்பு, மஞ்சள், நெல் பயிரிடப்படுகிறது. சென்ற, 2009ம் ஆண்டில் ஏற்பட்ட மஞ்சள் மேலும் படிக்க..
மஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய்
மஞ்சளுக்கு ஊடுபயிராய் மிளகாய் பயிரிடுவதில் பவானிசாகர் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பவானிசாகர் பகுதியில் கொத்தமங்கலம், ராஜன் நகர், பசுவபாளையம், புங்கார், தொட்டம்பாளையம், எரங்காட்டூர் பகுதி விவசாயிகள் மஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய் பயிரிட்டுள்ளனர். மஞ்சள் பத்து மாதப்பயிர். வைகாசி மாதம் நடவை துவங்கி மாசி மாதம் அறுவடை முடியும். ஒரு ஏக்கருக்கு மஞ்சள் பயிரிட 750-800 கிலோ விதை மஞ்சள் தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதை மஞ்சள் 30-40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெட்டுக்கூலியோடு சேர்த்து மேலும் படிக்க..
வசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
மருத்துவத்திற்கு பயன் படக்கூடிய வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய கோலியாஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்றொரு பயிரான வசம்பும் சாகுபடி செய்யப்படுகிறது. வசம்பிற்கு பிள்ளை வளர்த்தி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஓராண்டு பயிரான இதன் வேர் மற்றும் தண்டு பகுதிகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. மருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, எடைபாடி பகுதியில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, கல்வராயன்மலை மேலும் படிக்க..
மரபணு மாற்றுப்பயிர்: வயல்வெளி சோதனைக்கு நிரந்தரத் தடை?
மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. இக்குழு ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இடைக்கால அறிக்கையில், “பத்தாண்டுக்கு இந்திய வயல்வெளிகளில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கான சோதனைகளை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. இந்நிலையில், தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில், கடந்த வாரம் இக்குழு தாக்கல் செய்தது. அதில், மரபணு மேலும் படிக்க..
வாழை சாகுபடி லாப கணக்கு
காட்டாகொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாவரம் ஊராட்சியில், விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள விவசாயிகள், காய்கறி பயிர்களுடன் தற்போது, குறைந்த செலவில் அதிக லாபம் தரும், வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி விவசாயி மனோகரன் கூறியதாவது: எனக்கு சொந்தமான, 2.88 ஏக்கர் நிலத்தில், கற்பூர வாழை சாகுபடி செய்துள்ளேன். இதற்காக, முதற்கட்டமாக, ஏக்கருக்கு, 5,000 ரூபாய் செலவில், தொழுஉரம் மற்றும் ரசாயன உரங்களை நிலத்தில் கொட்டி, நன்கு உழுது பக்குவபடுத்தினேன். பின்னர், ஒரு வாழைக் கன்று, மேலும் படிக்க..
நீடாமங்கலம் வேளாண் மையத்தில் விதைநெல் விற்பனை
நீடாமங்கலம் வேளாண் மை அறிவியல் நிலையத்தில் விதைநெல் விற்பனைக்கு உள்ளதாக நிலைய தலைவர் சோழன் தெரிவித்துள்ளார். திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சோழன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடப்பாண்டு காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கேற்ற நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதை தேவையுள்ள விவசாயிகள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். சி.ஆர்.1009, மற்றும் மேலும் படிக்க..
மழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்
மழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டும் உயரும். அதன் மூலம் இம்மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தீரும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி தலைவர்களுக்கான மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கூறினார். மழைநீர் சேகரிப்பு மிகவும் முக்கியமானதாகும். இதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்துக்கு முன்பெல்லாம் 50 அடி முதல் 100 அடி ஆழம் வரை போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்கப்பட்டது. இப்போது 200 முதல் 300 அடி ஆழம் வரை மேலும் படிக்க..
கத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள்
தற்போதைய சூழ்நிலையில் கத்தரி தோட்டங்களை தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதி மற்றும் தண்டுப் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும், செடிகளில் தோன்றும் காய்ப்புழுக்களை ஆள்கள் மூலம் சேகரித்து அழிக்கலாம். அந்த வேளையில் வயலில் விளக்குப் பொறிகள் அமைப்பதன் மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். உழவியல் முறைகள்: தொடர்ந்து கத்திரி சாகுபடி செய்வதை தவிர்ப்பதன் மூலம் இந்த பூச்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். குட்டையான மற்றும் நீளமான காய்கள் மேலும் படிக்க..
வாழை தரும் உபதொழில்கள்
வாழை விவசாயத்தில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் எக்டேரில் ஒரு கோடியே 70 லட்சம் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் எக் டேரில் வாழை விவசாயம் நடக்கிறது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில்தான் அதிக அளவில் வாழை விவசாயம் நடக்கிறது. அதனால்தான் நாடு முழுவதுக்குமான வாழை ஆராய்ச்சி நிலையத்தை திருச்சி பெற்றுள்ளது. ஜப்பான் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு நார்ச்சத்துடன் கூடிய வாழை ரகத்தை இங்கு பயிரிடுவது, வாழை நார் மேலும் படிக்க..
எளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல்
இயற்கை முறையில் பஞ்சகவ்யம், கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நாமே தயார் செய்துகொள்ளக்கூடிய ஒரு அடர் கலவை ஆகும். இதை பயன்படுத்தி குறைந்த செலவில் பயிர்களை ஊக்குவித்து, ரசாயன உரங்களை, பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் அதிகப்படியான மகசூலைப் பெறலாம். நிலம் செழிப்படையும். விளைச்சல் பெருகும். செலவு குறைக்கப்படும். பஞ்சகவ்யம் – நன்மைகள்: 1. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது முழுமையாக தவிர்க்கப்படுகிறது. 2. செடியின் வளர்ச்சியை தூண்டி நல்ல வளர்ச்சி அடையச் செய்கிறது. 3. நுண்ணூட்டக் மேலும் படிக்க..
வெண்டை சாகுபடி டிப்ஸ்
வெண்டை சாகுபடியில் சாதாரண ரகங்கள் அதாவது அர்க்க அனாமிகா மற்றும் அர்க்கா அபை உள்ளன. ஆனால் இவைகள் ஒட்டு வீரிய ரகங்கள் அல்ல. இருந்தாலும் விவசாயிகள் இவைகளை சாகுபடி செய்கிறார்கள். அடுத்து ஒட்டு வீரிய ரகங்களும் உள்ளன. குறிப்பாக மைக்கோ ரகங்கள் (நம்பர் 10, 11, 12) இவைகளையும் சாகுபடி செய்யலாம். இதில் ஒரு அனுகூலம் உள்ளது. விதை வாங்கும் இடத்தில் விதையை “கௌச்’ என்னும் மருந்துடன் கலந்து தருகிறார்கள். இது வியாதிவராமல் தடுக்கின்றது. வெண்டை சாகுபடி மேலும் படிக்க..
பசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம்
பசு மாடுகளுக்கு அசோலா தாவரத்தை தீவனமாக கொடுப்பதன் மூலம் கூடுதல் பால் உற்பத்தி கிடைப்பதாக காவனூர் விவசாயி தெரிவித்தார். சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ளது காவனூர் கிராமம். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரமான எரு கிடைக்கவும், பால் விற்பனை செய்யவும் மக்கள் பசுக்களை வளர்க்கின்றனர். பசுக்களுக்கு புண்ணாக்கு, மற்றும் தவிடு, பொட்டு ஆகியவற்றை வைக்கின்றனர். பசுக்களுக்கு வைக்கப்படும் புண்ணாக்கு அதிக விலைக்கு விற்பதால் புண்ணாக்கிற்கு பதிலாக கொழுப்பு சத்து மிகுந்த அசோலா மேலும் படிக்க..
மண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும்
விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் பயிர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட அளவே தழைச்சத்து தரும் யூரியா உரத்தினை இடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சவுந்திரராஜன் கூறியதாவது விவசாயத்திற்கு தேவையான முக்கிய இடுபொருளான, உரங்கள் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு 150 கோடி டான்பெட் நிறுவனத்திற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கியுள்ளது. இதனை கொண்டு டான்பெட் நிறுவனம் டி.ஏ.பி.,உரத்தினை கொள்முதல் செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் மூலம் மேலும் படிக்க..
மாடித் தோட்டம் அமைக்கப் பயிற்சி
மாடித் தோட்டம் மூலம் நமக்கு நாமே காய்கறிகள் மற்றும் மலர்கள் வளர்க்கலாம். இதற்கு வீட்டின் மொட்டை மாடி இடம் போதுமானது. மாடித் தோட்டத்தில் சின்னத் தொட்டிகள், மண்பாண்டங்கள், குடங்களின் அடிப்பாகம், பிளாஸ்டிக் தட்டுகள் ஆகியவற்றில் மண் நிரப்பி அதில் நமக்குத் தேவையான கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், தண்டங்கீரை, புதினா, கறிவேப்பிலை, பொரியல், தட்டை, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கன்னி, முளைக்கீரை, புடலை, பாகல், பீர்க்கன் போன்ற காய்கறிகளையும், செண்டு மல்லி, செம்பருத்தி, ரோஜா, கனகாம்பரம் போன்ற மலர்களையும் மேலும் படிக்க..
நெல் பயிரில் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த வழிகள்
நெல் சாகுபடியில் நோய் கட்டுப்பாடு மிகவும் அவசியம். நெல் பயிரைக் குலை நோய், இலைப்புள்ளி நோய், இலை உறை கருகல் நோய், கதிர் உறை அழுகல் நோய், நெல் மணி அழுகல் நோய் போன்ற பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இந்த நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையூர் மண்டல வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய நோயியில் துறை உதவிப் பேராசியர் கி.கல்பனா கூறியது: குலை நோய்: இந்த நோய் நாற்றங்காலில் தொடங்கி கதிர் விடும் மேலும் படிக்க..
நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற டிப்ஸ்
இறைவை நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண் துணை இயக்குநர் ந. மேகநாதன் கூறியது: கார்த்திகைப் பட்டத்தில் (நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை) இறவை நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு மிகவும் உகந்த பருவமாகும். இறவை நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீனத் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். நிலம், உழவு: மணல்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் மேலும் படிக்க..
மிளகாய் சாகுபடி
மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மிளகாய் முக்கியப் பயிராகும். மானாவாரி மிளகாய் சாகுபடியில் ஆரம்ப கால விதை முளைத்தல், இளம் செடிகளின் வளர்ச்சி ஆகியனவற்றில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் மானாவாரி நாற்றங்காலில் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவையும் முக்கியப் பிரச்னைகளாகும். ரகங்களைப் பொருத்தவரை கே1,கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இதன் பருவமாகும். மண் நல்ல வடிகால் வசதியுடன் மேலும் படிக்க..
வாழையில் வாடல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை
வெயில் காலத்தில் வாழையில் “பனாமா’ வாடல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது. பெரியகுளம் மற்றும் ஒன்றியப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் வாழையில் பனாமா வாடல் நோய் தாக்கத்தால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள மண்ணில் இந்த பூஞ்சாணம் அதிகமாகக் காணப்படும். இந்நோய் தாக்கப்பட்டால் முதலில் அடிப்பக்க இலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காம்பிலிருந்து ஒடிந்து விடும். இந்த பூஞ்சாணம் சைலம் திசுக்களில் உள்ள மேலும் படிக்க..
கடலோர பகுதிக்கேற்ற பழமரங்கள்
தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மண், வளம் குறைந்ததாகவும் களர் உவர் தன்மையின் பாதிப்பு உள்ளதாகவும் காணப்படுகிறது. இப்பகுதிகளில் கிடைக்கும் பாசனநீர் பெரும்பாலும் தரம் குறைந்ததாக, பலவித உப்புக்கள் கொண்டதாக, குறிப்பாக விவசாயப் பயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சோடியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, கார்பனேட், பைகார்பனேட், சல்பேட் கொண்டதாக இருக்கின்றன. இப்பகுதிகளில் பருவமழை பொய்த்துவிடும் காலத்தில் ஏற்படும் வறட்சியாலும் பயிர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. கடலோரப் பகுதிகளில் 40-45 சதவீதம் மானாவாரி நிலங்களாக உள்ளன. இப்பகுதிகளில் விவசாயிகள் பழமரங்களை மேலும் படிக்க..
லாபம் தரும் பயறு விதை உற்பத்தி
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி பாசிப் பயறு, தட்டைப் பயறு விதை உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பெறலாம் என்று விதைச் சான்று உதவி இயக்குநர் வே.ராஜதுரை, விவசாயிகளை கேட்டுக் கொண்டார். சேலம் மாவட்டத்தில் இந்த பருவத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப் பயறு, தட்டைப் பயறுகளில் விதைப் பண்ணை பதிவு செய்து, அதிக மகசூலையும் அதன் மூலம் லாபமும் பெறத் மேலும் படிக்க..
வெங்காயத்தை தாக்கும் அடித்தாள் அழுகல் நோய்
வெங்காயத்தைத் தாக்கும் அடித்தாள் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியை ந. ரஜினிமாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடல், இடைகால், பாவூர்சத்திரம் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதிகளில் வெங்காயமானது பயிரிடப்பட்டு உள்ளது. அவற்றில் அடித்தாள் அழுகல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. அறிகுறிகள் அடித்தாள் அழுகல் நோயை பூஞ்சாண கிருமியானது பரப்புகிறது. இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் மெதுவாகக் மேலும் படிக்க..
மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் வீட்டில் காய்கறித் தோட்டம் அமைப்பது தொடர்பான இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ஜெ. கதிரவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், மண் புழு உரம் தயாரிப்பது தொடர்பான இலவச பயிற்சி 2013 ஜூலை 9 ஆம் தேதியும், வீட்டுக் காய்கறி தோட்டம் மேலும் படிக்க..
அதிக விலை கிடைத்தும் கேழ்வரகு சாகுபடி புறக்கணிப்பு
:போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ், பூஸ்ட், புரோட்டினெக்ஸ் உள்ளிட்ட ஊக்க பானங்களில், புரதச் சத்து அதிகம். இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், கேழ்வரகை பயன்படுத்தியே, புரதச் சத்து கொண்ட ஊக்க பானங்களை தயாரித்து, விற்பனை செய்கின்றன. மேலும், பல உணவு பொருட்கள், கேழ்வரகையே அடிப்படை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், கேழ்வரகுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. ஆனால், கேழ்வரகு உற்பத்தி, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதிக விலை கிடைத்தும், கேழ்வரகை பயிரிடுவதில், விவசாயிகள் அதிகம் ஆர்வம் மேலும் படிக்க..
தென்னை மரம் ஏற பயிற்சி
கிருஷ்ணகிரி அருகே விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து எலுமிச்சங்கிரி டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னை வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து தென்னை மரம் ஏறும் 6 நாள் பயிற்சி வேளாண்மை அறிவியல் மையத்தில் வழங்கப்படவுள்ளது. 100 நபர்களுக்கு 5 குழுக்களாகப் பிரித்து பயிற்சி வழங்கப்படும். இதில் பங்கேற்பவர்களுக்கு வயது வரம்பு 45-க்குள்ளும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும். தகுதியுடைய பெண்களும் மேலும் படிக்க..
மாந்தோப்பில் ஊடுபயிராக மிளகாய்
ஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் சாலையில், செங்காடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 2,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, நீர் பற்றாக்குறை காரணமாக, இங்குள்ள விவசாயிகள், நெல் பயிருக்கு மாற்றுப் பயிராக, சவுக்கு, மா ஆகியவற்றை பயிரிட துவங்கியுள்ளனர். இந்நிலையில், தோட்டக் கலைத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மாந்தோட்டத்தில் ஊடுபயிராக மிளகாய், கத்திரிக்காய் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி விவசாயி சுந்தரவரதன் கூறியதாவது: எனக்கு மேலும் படிக்க..
தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம்
தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து தேசிய தோட்டக்கலை இயக்கம் என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இத் திட்டத்தின்கீழ் பழமரச் சாகுபடி, மலர்ச் சாகுபடி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. பழமரச் சாகுபடி: பல்லாண்டுப் பயிர்களான மா, எலுமிச்சை மற்றும் திசு வாழை மேலும் படிக்க..
கரும்பில் தாளை பூத்தலைக் கட்டுப்படுத்துவது எப்படி?
கரும்பில் நுண்ணூட்டப் பற்றாக்குறையால் ஏற்படும் பயிர் வெளுப்பை (தாளை பூத்தல்) கட்டுப்படுத்துவது குறித்த வழிமுறைகளை கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது: நிலங்களில் நுண்ணூட்டப் பற்றாக்குறை காணப்படுகிறது. துத்தநாகம், இரும்பு, மாங்கனீஸ், தாமிரச் சத்துகளின் குறைபாடு அதிகமாக உள்ளது. இந்தச் சத்துகள் பயிர்களுக்குக் குறைவான அளவே தேவைப்பட்டாலும், பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலில் பங்கு வகிக்கின்றன. இரும்புச் சத்துக் குறைபாடு: மண்ணிலுள்ள கால்சியத்தின் அளவைப் பொருத்து இரும்புச் சத்துக் குறைபாடு தென்படுகிறது. மேலும் படிக்க..
மண்புழு உரமே விவசாயிகளின் இன்றைய தேவை
சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும், பயிர்களின் சிறந்த வளர்ச்சிக்கும், மண்புழு உரமே விவசாயிகள் இன்றைய தேவை என வனக்கல்லூரி முதல்வர் துரைராசு பேசினார். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வனச்சூழல், சூழலியல் துறை மற்றும் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் மண்புழு உர உற்பத்தி குறித்த தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் துரைராசு பேசியது: மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப உணவு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படாமல் மேலும் படிக்க..
தென்னை ஊடு பயிராக கோகோ பயிர்டுவது எப்படி
தென்னை, பாக்கு தோட்டங்களில் கோகோ பயிர் ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம். உகந்த இடம்: பணப்பயிராக விளங்கும் கோகோ சாகுபடி செய்ய 50 சதம் நிழல் உள்ள பகுதிகளே தேவை. களிமண், கடலோர மணல் பகுதிகளில் சாகுபடி செய்ய முடியாது. தட்பவெப்ப நிலை: கோகோ பயிரானது வறட்சியைத் தாங்காது. எனவே, மண்ணில் அதிக அளவு ஈரத்தைப் பிடித்து வைக்கும் தன்மையுள்ள மண்ணாக இருக்க வேண்டும். நடவு: 1.5-க்கு 1.5-க்கு 1.5 என்ற மேலும் படிக்க..
பாகல் சாகுபடி
பாகற்காய் சாகுபடி பொதுவாக விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்தான். வியாபார ரீதியாக சாகுபடி செய்வதற்கு நீட்டு பாகற்காய் மிக சிறந்ததாகும். பாகல் சாகுபடிக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுகிறது. வேலை ஆட்கள் அதிகம் தேவை இல்லை. களை குறைவான பயிர். அதிக செலவு செய்து பந்தல்போட்டு பாகல் சாகுபடியை விவசாயிகள் செய்கிறார்கள். இந்த பந்தல்களை ஐந்து முறைகள் சாகுபடி செய்வதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் சாகுபடி செய்யலாம். பாகல் சாகுபடி மேலும் படிக்க..
தக்காளி ஒட்டு ரகங்கள்
தக்காளி ஒட்டு ரகங்கள்: கோ.டி.எச்2 – தக்காளி இலைச்சுருட்டை நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. கோ.டி.எச்3 – தக்காளி இலைச்சுருட்டை அல்லது நூற்புழு எதிர்ப்புத்திறன் கொண்டது. தரமான நாற்று உற்பத்திக்கான சமுதாய நாற்றங்கால் நிழல் வலைக்குடில்: வெண்கலன் (95 குழிகள் கொண்டது) 240 எண்ணிக்கை/எக்டர். வளர் ஊடகம் – தென்னை நார்க்கழிவு 300 கி + 5 கி வேப்பம்புண்ணாக்கு + நிலையில் / விதைத்த (அ) பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் (1கி) நாற்றங்கால் நிலையில்/ விதைத்த 15 மேலும் படிக்க..
மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 13,300 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 23,275 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், வைகாசிப் பட்டத்திலும் மற்றும் இறவைப் பயிராகக் கார்த்திகைப் பட்டத்திலும் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து கிருஷ்ணகிரி டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியில் ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி.சுந்தர் ராஜ் கூறியது: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திண்டிவனம் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியிடப்பட்ட டிஎம்வி 7, விருத்தாசலம் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியிடப்பட்ட மேலும் படிக்க..
சம்பங்கி சாகுபடி முறைகள்
விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டித்தரும் சம்பங்கி மலர் சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு அலங்காரங்கள், மாலைகள், பூங்கொத்துகளில் பயன்பட்டு, நல்ல லாபமும் தரும் சம்பங்கி மலர் சாகுபடி முறைகளை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும். மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வால், பியர்ள் டபுள், மேலும் படிக்க..
பயறு வகை சாகுபடி
பயறுவகைப் பயிர்களில் இருந்து மனித வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கிறது. இப் பயிர்களை எளிய முறையில், அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்யலாம். குறைந்த செலவில், அதிக மகசூலும் பயறுவகைப் பயிர்களிலிருந்து கிடைக்கின்றன. பயறுவகை உற்பத்தியை அதிகரிக்க, சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் மற்றும் வரப்போரத்திலும் பயிரிடலாம். உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்ய பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். ஒருங்கிணைந்த உரம், களை, நீர் நிர்வாகம் செய்து காலத்தே அறுவடை செய்ய வேண்டும். மேலும் படிக்க..
கரும்பு தோகையை பயன்படுத்தினால் இரட்டிப்பு மகசூல்
கரும்பு சீஸன் என்பதால், தோகைகளை பயன்படுத்தி இரட்டிப்பு பயன்களை பெறலாம், என கோபி வேளாண்மை துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். கோபி வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைத்தம்பி கூறியதாவது: கரும்பு உற்பத்தி திறனில் தமிழகம் ஏக்கருக்கு சராசரியாக, 42 டன் பெற்று முதலிடத்தில் உள்ளது. இருந்த போதிலும் கடந்த, 20 ஆண்டுகளாக கரும்பு உற்பத்தியில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை அடைய இயலவில்லை. பல்வேறு தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியும், விவசாயிகளின் பாரம்பரிய சாகுபடி முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியும், கரும்பு மகசூலை உயர்த்த மேலும் படிக்க..
நிலக்கடலை உயர் விளைச்சல் தொழில்நுட்பம்
தர்மபுரி மாவட்டத்தில், நிலக்கடலை பயிர் உயர் விளைச்சலுக்கான தொழில் நுட்பங்கள் குறித்து, வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது. உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் மேகநாதன் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்து பயிர் நிலக்கடலையாகும். இறவை நிலக்கடலையில், அதிக மகசூல் பெற, நவீன தொழில் நுட்பங்களை, விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை. மண்ணின் தன்மைக்கு மேலும் படிக்க..
திண்டுக்கல்லில் விவசாய கண்காட்சி
திண்டுக்கல்லில் நேற்று துவங்கிய விவசாய கண்காட்சி 2013 ஜூன் 9ம் தேதி வரை நடக்கிறது. திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தாக்கள் கல்யாண மண்டபத்தில் விவசாய கண்காட்சி நேற்று துவங்கியது. விதை முதல் விற்பனைவரையும், உழவு முதல் அறுவடை வரையும், விளைபொருட்களின் நேரடி சந்தை வாய்ப்பு, தொழில்நுட்ப இயந்திரங்களின் செயல்முறை, நிழல்வலை, நிலப்போர்வை, நீர்க்குட்டை விவசாயம், அரசு மானிய தகவல்கள் மற்றும் கருத்துரைகள் வழங்கப்படுகின்றன. நவீன டிராக்டர்கள், சோலார் மூலம் நீர்பாய்ச்சுதல், ரிமோட் மூலம் மோட்டார் இயக்கம், ஒட்டுரக தேங்காய், மேலும் படிக்க..
கயிறு தயாரிக்க பயிற்சி
பிள்ளையார்பட்டியில், மத்திய அரசின் கீழ் இயங்கும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் சார்பில் ஜூலை 1 முதல் ஆறுமாத கால கயிறு ஆர்டிசன் பயிற்சி நடக்கிறது. எழுத படிக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பங்கள் அனுப்பலாம். மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும், விடுதி வசதி உண்டு. விண்ணப்ப படிவங்களை நேரில் அல்லது கடிதம் மூலமாகவோ தஞ்சாவூர் வல்லம் வழியில், மண்டல விரிவாக்க மையத்தில் உள்ள கயிறு வாரிய அலுவலகத்தில் நேரில், கடிதம் மூலம் இலவசமாக மேலும் படிக்க..
மதுரை மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை மையம்
பல்வேறு நவீன வசதிகளுடன், மதுரை மாவட்டத்துக்கு புதிதாக நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி, மதுரை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று, அந்த கிராமங்களின் மண் வளத்தைக் கண்டறியும் பொருட்டு, ஆய்வு மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் பரிசோதனை மையத்தை, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். செல்லம்பட்டி வட்டாரம் கருமாத்தூர் கிராமத்தில் மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. நடமாடும் மண் மேலும் படிக்க..
பப்பாளி நாற்றுகள் கட்டிங் முறையில் உற்பத்தி
மேட்டுப்பாளையம் ஈடன் நர்சரி கார்டனில் பப்பாளி மற்றும் செண்பக நாற்றுகளை கட்டிங் முறையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர். கட்டிங் முறையில் நாற்று உற்பத்தி குறித்து இந்த நர்சரி நிர்வாகிகள் எஸ்.ராஜரத்தினம், ஏ.அப்துல் கபார் கூறியது: வழக்கமாக செண்பக நாற்றுகள் விதை மற்றும்ஒட்டு கட்டும் முறையிலும், பப்பாளி நாற்றுகள் விதைகள் மூலமாக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் நீண்ட நாள் ஆய்விற்கு பின்னர், இவ்விரு நாற்றுகளையும் கட்டிங் முறையில் உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். மேலும் படிக்க..
வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில்நுட்பங்கள்
வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக 25 முதல் 40 சதவீதம் வருவாய் பெறலாம் என்று வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்ட வாழைப் பழத்தை நீண்ட நாள் சேமித்து வைக்க அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்க வேண்டும். அத்தகைய தரம் கொண்ட வாழைப் பழத்தைத்தான் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்ல முடியும். வாழைப் பழங்களைப் பாதுகாக்க மற்ற மேலும் படிக்க..
சோலார் உலர் கலனை பயன்படுத்த தயங்கும் விவசாயிகள்
தேனி சின்னமனூரில் உள்ள “சோலார்’ உலர் கலனை (Solar Dryers) பயன்படுத்த, விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். சின்னமனூரில் கூட்டுறவுத் துறை சார்பில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் உலர் கலன் அமைக்கப்பட்டது. இதில் விவசாயிகள் தேங்காய்களை, கொப்பரை தேங்காய்களாக மாற்றுவது, கடலை, மிளகாய், எள், பாக்கு, மாட்டு தீவனம் உள்ளிட்ட விளை பொருட்களை பாதுகாப்பான முறையில் உலர்த்தி கொள்ளலாம். இம்முறையில் தூசி படியாது, பொருளின் நிறம் மாறாது. இதற்கு விவசாயிகளிடம் இருந்து, மேலும் படிக்க..
கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி
வரும் 2013 ஜூன், 15ம் தேதி, 21வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 50 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மா வகைகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மட்டுமன்றி வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள, 50க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மாங்கூழ் ஐரோப்பா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, 100 மேலும் படிக்க..
தேனீ வளர்க்க பயிற்சி
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2013 ஜூன். 5ம் தேதி இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ஜெ. கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி 2013 ஜூன். 5ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சி பெற மேலும் படிக்க..
பால் உற்பத்தியை அதிகரிக்கும் மக்காச்சோள கழிவு
மக்காச்சோள கழிவு, பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால், தம்மம்பட்டி பகுதியில், கறவைமாடு வளர்ப்பவர்கள், அதை, அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். வறட்சியால், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தவிடு, புண்ணாக்கு, தீவனத்தின் விலையும், கடுமையாக உயர்ந்துள்ளது. இது, கறவைமாடு வளர்ப்பவர்களுக்கு, பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், பால் உற்பத்தி வெகுவாக குறைந்தது. தீவன பற்றாக்குறையால், சமாளிக்க முடியாத விவசாயிகள், குறைந்த விலைக்கு, கறவை மாடுகளை விற்கும் பரிதாபமான நிலைக்கு ஆளாகினர். இந்நிலையில், குறைந்த விலையில் கிடைக்கும் மேலும் படிக்க..
வேளாண் பொருள்களை பதப்படுத்த இலவச பயிற்சி
சென்னை கொடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் பொருள்கள் பதப்படுத்துதல் குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வேளாண் பொருள்களைப் பதப்படுத்துல், சந்தைப்படுத்துதல் குறித்த இலவச பயிற்சி வரும் 2013 ஜூலை 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. பயிற்சியில் படித்த, படிக்காத இளைஞர்கள், விவசாயிகள், சுய உதவிக் குழுவினர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம். வயது வரம்பு, கல்வித் தகுதி இல்லை. பயிற்சியின்போது, மதிய உணவு, தங்குமிடம் மேலும் படிக்க..
பாரம்பரிய நெல் விதை நேர்த்தி
நெல் விவசாயி எ.எஸ். தர்மராஜன் நெல் விவசாயத்தில் பாரம்பரிய முறைகளை அனுசரிப்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர். தற்போது நெல் விதை நேர்த்தியை செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார். இவர் பல நெல் ரகங்களை சாகுபடி செய்து பயன் அடைந்து விவசாயிகளுக்கு சிபாரிசு செய்துள்ளார். அவர் விதை நேர்த்தியில் தனக்குத் தெரிந்த விஞ்ஞானத்தை விளக்கு கிறார். அதோடு அமாவாசை வேளையில் நெல் விதைப்பினை எப்படி செய்யலாம் என்று யோசனைகள் தெரிவிக்கின்றார். பாரம்பரிய நெல் விதை நேர்த்தி 30 மேலும் படிக்க..
வருமானம் தரும் களைகள்
பயனற்ற செடிகளே களைகள் என்று அழைக்கப்படுகிறது. ஓர் குறிப்பிட்ட பயிர்களிடையே காணப்படும் மற்ற தாவரங்களே களைகள் எனப்படும் இந்த களைகள் நாம் வளர்க்கும் பயிர்களுடன் மண்ணில் உள்ள சத்துக்கள், சூரிய ஒளி மற்றும் அமைவிடத்திற்காக போராடுகின்றன.மேலும் சில களைகள் தாவரம் மற்றும் விலங்குகளுக்கு ஒவ்வாத நச்சுப் பொருட்களை மண்ணுக்குள் கசியவிடுகின்றன. அது மட்டுமின்றி விவசாய உற்பத்தியின் அளவு மற்றும் தரத்தைக் குறைக்கின்றது. எனவே களைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் நீக்குவது முக்கியமாகும். ஆனால் நாம் பயன்படுத்தும் களைக்கொல்லி மேலும் படிக்க..
கோவைக்காய் சாகுபடி
துரிதமாக படர்ந்து வளரக்கூடிய காய்கறியான கோவைக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. சமையலுக்குத்தவிர பச்சைக்காய்கறியாக உண்பதற்கும் வற்றல் போடுவதற்கும் மிகவும் ஏற்றது. பல்லாண்டு பயிரான இது ஆண்டு முழுவதும் விளைச்சலைத் தரக்கூடியது. குளிர் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் 8-9 மாதங்களுக்கு விளையும். ரகங்கள்: வணிக ரீதியாக பிரபலமான ரகங்கள் இல்லை. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் ஆணைக்கட்டி என்ற இடத்திலுள்ள கோவைக் கொடியிலிருந்து மரபுவழி தேர்வு செய்யப்பட்ட ஒரு வளர்ப்பு ஆராய்ச்சியில் உள்ளது. இதன் காய் நீண்ட மேலும் படிக்க..
ஆதிரெங்கத்தில் 2013 மே 25, 26ல் நெல் திருவிழா
திருத்துறைப்பூண்டி அருகே, மாநில அளவில் நெல் திருவிழா வரும் 2013 மே 25,26ம் தேதிகளில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் நடக்கிறது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், நிபுணர்கள் பங்கேற்கின்றனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவில், நெல் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது. 25ம் தேதி முதல் நாளில் துவக்க விழாவில் வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார். இதுகுறித்து, “நமது மேலும் படிக்க..
தனியாரிடம் நெல்லை விற்கும் விவசாயிகள்
அறுவடையான நெல்லை, சுத்தப்படுத்தி தர வேண்டும் என்று நிபந்தனை இருப்பதால், அரசு கொள்முதல் மையங்களை புறக்கணிக்கும் விவசாயிகள், எந்த நிலையில் இருந்தாலும், வாங்கி கொள்ளும் மொத்த வியாபாரிகளிடம், நெல்லை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2012ம் ஆண்டில், 22 ஆயிரம் ஹெக்டரில் நெல் பயிரிடப்பட்டது. பருவ மழை பொய்த்ததால், கடந்த நவரை பருவத்தில் 18,000 ஹெக்டர் பரப்பளவில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டது. தவிர்ப்புஅறுவடை ஆகும் நெல்லை, விவசாயிகள், எளிதாக விற்பனை செய்வதற்காக, மேலும் படிக்க..
திருக்கழுக்குன்றத்தில் பூசணி விளைச்சல் அமோகம்
நெல்லுக்கு பதிலாக திருக்கழுக்குன்றம் விவசாயிகள் மாற்று பயிராக பூசணிக்காய் வகையை அதிக அளவில் பயிரிடுகின்றனர். திருக்கழுக்குன்றம் சுற்றியுள்ள கிராமங்களில் ஏரிகள் மற்றும் பாலாற்று படுகையால் நீர் வளம் மிகுந்தது. இங்கு நெல், கரும்பு, தர்பூசணி போன்ற பயிர்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது.இங்குள்ள விவசாயிகள் கோடைக்காலங்களில் மாற்று பயிர்களை ஆர்வமாக செய்து வருகின்றனர்.கோடை கால பயிர்கோடை கால தேவைக்காக, தர்பூசணி பயிரிட்டு அறுவடை செய்த விவசாயிகள், தற்போது பூசணிக்காய் பயிரிட்டுள்ளனர். பூசணிக்காய் சாகுபடி செய்தால், மூன்று மாதத்தில் அறுவடை செய்யலாம். மேலும் படிக்க..
வறட்சியை தாங்கும் தென்னை ரகங்கள்
“”வறட்சியை தாங்கி வளரும் தென்னை ரகங்கள் கண்டறியப்பட்டு, விவசாயிகள் தேவைக்காக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது,” என ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சீனிவாசன் பேசினார். உடுமலை அருகே பெரியகோட்டை கிராமத்தில், வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில் உழவர் பெருவிழா நடந்தது.ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சீனிவாசன் பேசியதாவது: ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தில், தென்னை விவசாயிகள் நலனுக்காக பல புதிய ரக தென்னை நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, வறட்சியை மேலும் படிக்க..
வேளாண் பொருள் பதப்படுத்த இலவச பயிற்சி
சென்னையில் உள்ள உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரியில், வேளாண் பொருள்களை பதப்படுத்துதல் குறித்த ஒரு மாத இலவச பயிற்சி 2013 மே 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சியின்போது மதிய உணவு, தங்கும் இடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். உணவு தொழில்நுட்ப மாணவர்கள், கேட்டரிங் படித்த மாணவர்கள், படித்துக் கொண்டிருக்கும் மற்றும் பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள், உணவு சம்பந்தமான தொழில் தொடங்க ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு முதல்வர், உணவு மற்றும் பால் மேலும் படிக்க..
புடலங்காய் சாகுபடி
புடலங்காய் சாகுபடியில், குறைந்த செலவில் நல்ல லாபம் பெறலாம் என, ஓணம்பாக்கம் விவசாயி தெரிவித்தார். சித்தாமூர் – செய்யூர் சாலையில் உள்ளது ஓணம்பாக்கம். இப்பகுதி மக்கள், தற்போது,தோட்டக்கலை பயிரான காய்கறி பயிரிடுவதில், ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில், புடலங்காய் பயிரிடுவதன் மூலம் குறைந்தளவு நீரில், மூன்று ஆண்டுகள் வரை லாபம் பெறலாம் என, அப்பகுதி விவசாயி கபாலி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: எனக்கு சொந்தமாக நிலம் ஏதும் இல்லை. 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பயிர் மேலும் படிக்க..