மரபணு வாய்பூட்டு சட்டத்தை பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த மழை கால பாராளுமன்ற தொடரில் இந்த மசோதாவை அவசர அவசரமாக கொண்டு வர முயற்சித்தார்கள். அண்ணா ஹஜாரே போராட்டத்தால் பாராளுமன்றம் முடக்க பட்டது.இப்போது இந்த மசோதா வர அதிக வாய்ப்பு உள்ளது.அவசர அவசரமாக இந்த UPA அரசாங்கம் இந்த மசோதாவை கொண்டு வர துடிக்கிறது. Monsanto போன்ற நிறுவனங்கள் பொறுமையோடு காத்து கொண்டு இருக்கின்றன. இந்த மசோதாவின் முக்கிய சாரம்சங்கள்: மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பாதுகாப்பு மேலும் படிக்க..
Author: gttaagri
குஜராத்தில் சாத்தியமானால் இங்கும் சாத்தியமே
நாட்டில் விவசாயம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. விவசாயம் செயதால் எதிர்காலம் இல்லை என்ற நிலை பல மாநிலங்களில் உள்ளது. ஆனால் குஜராத் மாநிலம் ஒரு விதிவிலக்கு. ஒரு வருடம் இல்லை, இரண்டு வருடம் இல்லை, 2001 முதல் 2011 வரை 10.97% சதவீதம் ஒவ்வொரு வருடமும் விவசாயம் அதிகரித்து உள்ளது. இந்தியாவிலேயே குஜராத் மட்டுமே இந்த சாதனையை படைத்து உள்ளது. இதே கால கட்டத்தில் அகில இந்தியாவில் விவசாயம் 3% சதவீதம் தான் உயர்ந்து மேலும் படிக்க..
மழை பாதித்த நெற்பயிர்கள் வளர வழிமுறை
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வளரச் செய்ய தேவையான வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் நடேசன் யோசனைகள் தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் தெடர்ந்து பெய்த கனமழையால் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பத்து நாட்களுக்கு மேலாக மழைநீரில் மூழ்கி இருந்தது. இதனால், நெற்பயிர்களின் வேர்களுக்கு போ திய ஆக்சிஜன் கிடைக்காததா ல் கருமை நிறமாக மாறி, நெற்பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பூமியில் இரு ந்து எடுத்து பிற பாகங்களுக்கு எடுத்துச் செல்ல வேர் திறனின்றி உள்ளது. இதனால், மேலும் படிக்க..
நிலகடலை சாகுபடி டிப்ஸ்
நிலக்கடலையில் தோன்றும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கையாள வேண்டும். எண்ணெய் வித்துப்பயிர்களில் முக்கியமான பயிரான நிலக்கடலை பயிர் கோடை பருவத்தில் ஜூன், ஜூலை மாதங்களிலும், கார்த்திகைப் பட்டத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பயிரிடப்படுகிறது. டி.எம்.வி.,7, வி.ஆர்.ஐ.,1, கோ 1 போன்ற ரகங்கள் பெரும்பாலும் இந்த பருவத்தில் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை பயிர் சாகுபடி செய்ய முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழவு செய்ய வேண்டும். நன்கு உழுது பண்படுத்திய மேலும் படிக்க..
தென்னையில் கோகோ ஊடுபயிர் பயன்கள்
தென்னந்தோப்புகளில் “கோகோ’ சாகுபடி செய்தால், தென்னை விளைச்சல் அதிகரிக்கும்’ என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. தென்னையில் ஊடுபயிராக “கோகோ’ பயிரிடுவதன் மூலம் தென்னை விளைச்சல் அதிகரிக்கிறது. ஆண்டுக்கு 800 கிலோ இலைகள் உதிர்வதால், மண்ணில் அங்கக சத்து உயர்கிறது. சிறந்த முறையில் களை கட்டுப்பாடு செய்யப்படுகிறது. மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் “கோகோ’ பயிரிடுவதற்கு 200 முதல் 220 நாற்றுகள் தேவைப்படும். ஆண்டுக்கு மரம் ஒன்றில் இருந்து இரண்டு கிலோ உலர் விதைகள் மேலும் படிக்க..
புளி சாகுபடி
புளி இரகங்கள் : பிகேஎம். 1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர். மண் மற்றும் தட்பவெப்பநிலை : மணல் கலந்த மண் இதன் வளர்ச்சிக்கு மிகவம் உகந்தது. வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும். சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது, மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும். பருவம் : ஜுன் – டிசம்பர் விதையும் விதைப்பும் இனப்பெருக்கம் : விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல். மேலும் படிக்க..
பெல்லாரி வெங்காயம் பயிரிடும் முறை
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெங்காயம் பயிரிட்டால் நல்ல மகசூல் பெறலாம் உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை பெற்றுத்தருவதால் பெரிய வெங்காயம் என்று அழைக்கப்படும் பெல்லாரி வெங்காயம் ஒரு முக்கியமான காய்கறி பயிராக உள்ளது. நமது நாட்டில் வெங்காயம் பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் பல்வேறு பருவங்களில் பயிரிடப்படுகிறது. நமது நாட்டில் தற்போதைய உற்பத்தி ஹெக்டேருக்கு 10 முதல் 12 டன்கள் மட்டுமே. வெங்காயத்தில் அதிக உற்பத்திக்கு நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் சிறந்த மேலும் படிக்க..
திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தில் வழிமுறைகள்
திருத்திய நெல் சாகுபடியில் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்று சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் என்.மாணிக்கம் தெரிவித்துள்ளார். நடவு வயலை துல்லியமாக சமன் செய்து, தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்த வேண்டும். 14 நாள்கள் ஆன நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 3 கிலோ விதைகளைக் கொண்டு ஒரு ஏக்கரில் நடவு செய்யலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 40 ச.மீ. நாற்றங்கால் தேவை. நாற்றங்காலின் மீது பாலித்தீன் மேலும் படிக்க..
மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள்
மா மர கவாத்து தொழிற்நுட்பங்கள் சிறிய அளவிலான குச்சிகள் மற்றும் நுனித்தண்டை வெட்டுவதற்கு வெட்டு கத்தரியையும், ஒன்று முதல் இரண்டு அங்குலம் வரை அகலமுள்ள கிளைகளை வெட்டுவதற்கு கவாத்து ரம்பத்தையும், இரண்டு முதல் இரண்டரை அங்குலம் அகலமுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு கிளை வெட்டும் கத்தியையும் பயன்படுத்தலாம். மா பெரிய மரக்கிளைகளை ரம்பம் மூலம் வெட்டும் போது அந்த கிளையின் அடிப்பகுதியில் இருந்து 20 முதல் 40 மி.மீ வரை மேல்நோக்கி வெட்ட வேண்டும். பிறகு மேலிருந்து வெட்ட மேலும் படிக்க..
பொன்னீம் கட்டுபடுத்தும் பூச்சிகள்
இயற்கை பூச்சி விரட்டி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். இந்த இயற்கை பூச்சி விரட்டி பயன் தரும் பயிர்களை பற்றி தினமலரில் செய்தி வந்துள்ளது: பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்: அசுவினி: இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும். காய்த்துளைப்பான்: தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் மிளகாய் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும். படைப்புழு: இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப்புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மேலும் படிக்க..
குறைந்த செலவு, நிறைந்த மகசூல்: செம்மைக் கரும்பு சாகுபடி
கரும்பு சாகுபடியில் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுவதற்கு புதிய முறையான, செம்மைக் கரும்பு சாகுபடி செய்யுமாறு வேளாண் துறை பரிந்துரைத்துள்ளது. குறைந்த விதை, குறைந்த நீர், தேவைக்கு ஏற்ப உரம், ஊடுபயிர் ஆகியவற்றால் அதிக மகசூல் பெறுவதற்கு, செம்மைக் கரும்பு சாகுடி என்ற புதிய தொழில்நுட்பம் உதவுகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் அளிக்கும் பரிந்துரைகள்: 2 முதல் 3 பருவுள்ள விதைக் கரணைகளை, நேரடியாக நிலத்தில் நடுவதற்குப் பதில், மேலும் படிக்க..
சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க யோசனை
சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்ப முறைகள: 60- 90 நாள்கள் வயதுடைய சூரியகாந்தி வறட்சியைத் தாங்கி வளரும். பொதுவாக சூரியகாந்தியில் மகசூல் குறைவுக்கு பிரதான காரணம் மகரந்தச் சேர்க்கை உண்டாகாமல் இருப்பதுதான். எனவே, புதிய உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து அதிக மகசூல் பெறலாம். சூரிய வெளிச்சம் இருக்கும் போது காலை 6.30- 7.30 மணிக்கு தொடங்கி 9.30- 11 மணிவரை தொடர்ந்து மகரந்தத் தூள் வெளி வரும். குறைந்த மேலும் படிக்க..
மஞ்சள் பயிரில் அதிக மகசூல் தொழிற்நுட்பங்கள்
மஞ்சள் பயிரில் மகசூல் அதிகரிக்க தொழில் நுட்ப முறைகள்: விதை மஞ்சள் விதைப்பதற்கு முன், கார்பன்டசிம் மருத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து, நீரில் இருபது நிமிடம் உலர வைத்து பின் நடவு செய்ய வேண்டும். விதை மஞ்சளை துண்டாக வெட்டாமல், முழு மஞசளாக பயன்படுத்த வேண்டும். நடவின் போது, ஏக்கருக்கு உயிர் பூஞ்சானக்கொல்லியான ட்ரைக்கோடெர்மா விரிடியை இரண்டு கிலோ என்ற அளவில் தொழு எருவுடன் கலந்து ஈரம் இருக்கும் போது, வயலில் மேலும் படிக்க..
ஆடி பட்டத்தில் அதிக மகசூல் பெற மக்காசோளம்
ஆடி பட்டத்தில் மக்காசோளம் பயிரிட்டு அதிக வருவாய் பெற விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆடிபட்டம் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பருவத்தில் குறைந்த தண்ணீர் மற்றும் குறைந்த செலவில் அதிக வருமானத்தை ஈட்ட விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடலாம். இதில் கோ.எச்.(எம்) 4 என்ற 94 நாட்கள் பயிர் மற்றும் கோ.1 என்ற 110 நாட்கள் பயிர் ரகங்கள் உள்ளன. ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதைகளை, ஒரு கிலோ விதைக்கு மேலும் படிக்க..
நெல் பயிரில் அந்துப்பூச்சி கட்டுபடுத்துதல் எப்படி
கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டு ள்ள நெல் பயிரில் அந்துப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. அந்து பூச்சிகள் மஞ்சள் நிறமாக இருக்கும். இலையின் நுனிப்பகுதியில்,மேற்பரப்பில் இளம் மஞ்சள் நிறமுடைய முட்டைகளை குவியல் குவியலாக இட்டு பழுப்பு நிற ரோமங்களால் மூடும். புழுக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மெல்லிய நூலிழையில் ஊசலாடுவதை காணலாம். தாக்கப்பட்ட தண்டுகளில் சிறு துவாரத்தையும், தண்டினுள்ளே புழுவையும் அதன் கழிவையும் காணமுடியும். நடவு வயலில் இதன் தாக்குலால் நடுக்குருத்து காய்ந்திருக்கும். தடுக்கும் முறைகள் வயல்களில் மேலும் படிக்க..
தசகாவ்யா தயாரிப்பு முறை
தசகாவ்யாஒரு அங்கக தயாரிப்பு. இதில் பத்து வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.“காவ்யா” என்பது மாட்டினுடைய பொருட்களைக் குறைக்கும். இதில் மாட்டு சாணம், மாட்டு சிறுநீர், மாட்டுப்பால், தயிர் மற்றும் நெய், இவைகள் உள்ளன. இதனை பக்குவமாகக் கலந்து செடிகளுக்கு இட்டால் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும். வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள செடிகளுக்கு தசகாவ்யாவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அவை வேம்பு(அசாடிரக்ட்டா இன்டிகா), எருக்கம் (கேலோடிராபிஸ்), கொலின்ஜி (டெப்ரோசியா பர்ப்யூரியா), நொச்சி (விட்டெக்ஸ் நெகுண்டோ), உமதை (டட்டுரா மிட்டல்), காட்டாமணக்கு (ஜட்ரோபா கர்கஸ்), அடத்தோடா மேலும் படிக்க..
கருவேப்பிலை சாகுபடி
இரகங்கள் : செண்காம்பு, தார்வாடு 1 , தார்வாடு 2. மண் மற்றும தட்பவெப்பநிலை : சிறந்த வடிகால் வசதியுடைய செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. வெப்பநிலை 26 முதல் 27 வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். பருவம் மற்றும் நடவு பருவம் : ஜூலை – ஆகஸ்ட் மாதம் விதைகளை பறித்த 3-4 நாட்களில் பாலித்தீன் பைகளில் விதைக்கவேண்டும். ஒரு வயதுடைய நாற்றுக்கள் நடவுக்கு உகந்தவை. நிலம் தயாரித்தல் நிலத்தினை நன்கு உழுது மேலும் படிக்க..
குறுவை நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் தனியார் இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜெயராமன் தெரிவித்துள்ளதாவது: குறுவை நெற்பயிரில் பல பகுதிகளில் பூச்சி தாக்கம் உள்ளது. குறிப்பாக நாற்று அழுகல் நோய் அஸ்வினி, இலைப்பேன், இலைசுருட்டு மற்றும் பல நோய் தாக்குதலும் பரவலாக உள்ளது. இதிலிருந்து பயிரை காப்பாற்ற வேப்பங்கொட்டை கரைசல் மிகுந்த பயன் தரும். வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை: ஒரு கிலோ வேப்பங்கொட்டையை நன்கு இடித்து தூள் செய்து மேலும் படிக்க..
மாம்பழ ஈக்களை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி
மாங்காய்கள் முற்றிய பருவத்தில் ஈ பூச்சியானது காய்களில் உட்கார்ந்து மெல்லிய துளையிட்டு ஆயிரக்கணக்கான முட்டைகள் இடும். இதனால் மாங்காய்களின் மேல்புறத்தில் தோல் பகுதியிலிருந்து பிசின் போன்ற திரவம் வடியும். தாக்கப்பட்ட பழங்களின் சதைப்பகுதியில் சிறிய புழுக்கள் தோன்றி பழத்தை அழுகச்செய்யும். கோடை மழை பெய்யும் போது மண்ணில் புழுவாக இருக்கும் இந்த பூச்சியானது மழை ஈரத்தை பயன்படுத்தி புழுவில் இருந்து வெளி வந்தவுடன் மாங்காய்கள் அல்லது பழங்களைத் தாக்கி அழுக செய்துவிடும்.இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க மேலும் படிக்க..
பயறு சாகுபடிக்கு பாஸ்போ பாக்டீரியா
நிலத்தில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைப்பதன் மூலம் தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மணிச்சத்தாகவும் மாற்றப் படுகிறது. பேசில்லஸ் மெகாதீசியம், பேசில்லஸ் பாலிமிக்ஸா, சூடோமோனாஸ், ஸ்ட்ரையேட்டா, மைக்ரோகாக்கஸ் ஸ்ட்ரெப்டோமைசின் என்னும் பாக்டீரியாக்கள் மண்ணிலுள்ள முக்கியமான பாஸ்போ பாக்டீரியாக்களாகும். பயறுவகைப் பயிர்களின் தழைச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் அவற்றின் வேர்முடிச்சுகளில் உள்ள “ரைசோபியம்’ என்னும் நுண்ணுயிர் பெரும் பங்கு வகிக்கின்றது. அதுபோல் அவற்றின் மணிச் சத்து தேவையைப் பூர்த்தி செய்ய நாம் ரசாயன உரங் களை இடுவது மட்டுமல்லாமல் மேலும் படிக்க..
மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணி இலவசம்
பல வகை பயிர்களை தாக்கும் மாவு பூச்சியை பற்றியும் அதனை கட்டுபடுத்தும் ஒட்டுண்ணி பற்றியும் ஏற்கனவே படித்துள்ளோம். பப்பாளி, மரவள்ளி மற்றும் களைச்செடிகளில் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த திண்டிவனம் எண்ணெய்வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ஒட்டுண்ணி இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இம்மாவுப்பூச்சியி 60-க்கும் மேற்பட்ட தாவரங்களை தாக்குகிறது.குறிப்பாக பப்பாளி,மரவள்ளி, காட்டாமணக்கு, பருத்தி, துவரை, மல்பெரி, செம்பருத்தி, காய்கறிப்பயிர்கள், மேலும் படிக்க..
பனை, தென்னை மரங்களை பாதுகாக்க பேரணி
“பனை, தென்னை மரங்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் பேரணி நடத்தப்படும்,’ என, தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது. சேலத்தில், தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பொருளாளர் பாலசுப்பிரமணியம், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, மாநில அமைப்பாளர் கதிரேசன் உள்பட பலர் பேசினர். பனை, தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்க கோரி, 2012 ஜனவரியில் பேரணி நடத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் பேரணி துவங்கி, சென்னையில் முடிவடையும். கள் இயக்க மேலும் படிக்க..
வேலிகாத்தான் – விவசாயத்தின் எதிரி
பார்த்தீனியம் செடியை அழிப்பதை ஓர் இயக்கமாக தமிழக அரசு ஏற்று செயல்படுத்தும் என அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, வேலிகாத்தான் முள் செடிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். பார்த்தீனியம் செடிகள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உடல்நலக் கேடுகளை விளைவிப்பவை என்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்த போது, அதை முற்றிலும் அழிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார் முதல்வர்.இந்த அறிவிப்பு விவசாயிகளிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதே நேரத்தில் வேலிகாத்தான் மேலும் படிக்க..
பி.டி. பருத்தியை அரசு ஊக்குவிக்காது: முதல்வர் ஜெயலலிதா
மரபணு மாற்றம் செய்யப்பட்ட (பி.டி.) பருத்தியை தமிழக அரசு எந்த வகையிலும் ஊக்குவிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தாமாக முன்வந்து 110-வது விதியின் கீழ் அவர் சமர்ப்பித்த அறிக்கை: சட்டப்பேரவையில் 4.8.2011-ல் தாக்கல் செய்த 2011-12-ம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவுத் திட்ட நிதி நிலை அறிக்கையில், “முன்னோடி தொழில்நுட்பங்களான திருந்திய நெல் சாகுபடி திட்டம், நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டம், துல்லிய பண்ணையம், பி.டி. பருத்தியை மேலும் படிக்க..
திருந்திய நெல் சாகுபடி தொழிற்நுட்பங்கள்
திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயத்துறை விளக்கம் அளித்துள்ளது. திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 2 கிலோ விதை, ஒரு சென்ட் நாற்றங்கால் தேவை. நாற்றாங்காலில் பாலித்தீன் விரிப்புகளை விரித்து சுற்றிலும் மரச்சட்டங்களை வைத்து உள்ளே மேட்டுப்பாத்திகள் அமைத்து, மண் மற்றும் தொழு உரம் நிரப்பி விதைக்க வேண்டும். 10 மேலும் படிக்க..
கரும்பில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்
கரும்பு பயிரிடும் விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மூலம் முறையாக பயிரை பராமரித்தால் நல்ல லாபமடையலாம் பொதுவாக துளைப்பான்கள் வகை பூச்சிக்களாக இளங்குருத்துப் புழு, இடைக்கணுப் புழு, நுனிக் குருத்துப் புழு, வேர்த்துளைப்பான் ஆகியவை கரும்புக்கு எதிரியானவை. மேலும் பைரில்லா இலை தத்துப்பூச்சி, செதில் பூச்சி, வெள்ளை ஈ, மாவுப்பூச்சிகள் ஆகியவை சாறு உண்ணும் பூச்சி வகைகள் மற்றும் வேர் பகுதியில் வாழும் பூச்சிக்களான கரையான் மற்றும் வெள்ளை வேர்ப்புழு ஆகியவை கரும்பு பயிரை சேதப்படுத்தி மேலும் படிக்க..
மரபணு மாற்ற சோளமும், களைகொல்லி மருந்தும்
வயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை பிடுங்கி எடுப்பது பரம்பரை பரம்பரையாக வந்த முறை. அமெரிக்காவில், எல்லாம் இயந்திர மயமாகபட்ட விவசாயத்தில், இதற்கு ஒரு வழி தேடினார்கள். மொன்சாண்டோ Monsanto நிறுவனம் இருக்கிறதே வழி கொடுக்க. glyphosate (Roundup) என்ற ஒரு களை கொல்லி கண்டு பிடித்தார்கள். ஆனால் இந்த ரசாயன களை கொல்லி வயலில் தெளித்தால், வயலில் உள்ள சோளம், சோயா போன்ற செடிகளும் பாதிக்க படுமே? உடனே, சோளத்தில் உள்ள மரபணுவை மேலும் படிக்க..
இஞ்சி சாகுபடி செய்தல் மண் வளம் பாதிக்க படுமா?
இஞ்சி சாகுபடி செய்தல் மண் வளம் பாதிக்க படுமா? ஹிந்து நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தியில் கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடிஊரப்பா அவர்கள் இப்படி கூறி உள்ளார். கேரளா மாவட்டத்தில், இஞ்சி சாகுபடி செய்ய கட்டுப்பாடு வந்துள்ளதாகவும் கூறி உள்ளார். இது உண்மையா? உங்கள் கருது என்ன?
வெங்காயத்தை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
வெங்காயத்தை தாக்கும் பூச்சிகள்: இலைப்பேன் பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள், இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுகளாகக் காணப்படும். இலைகள் நுனியிலிருந்து வாடும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி நடுவதையும் தவிர்க்கவேண்டும். வெங்காய ஈ சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள மேலும் படிக்க..
வெள்ளரி சாகுபடி
வெள்ளரி இரகங்கள் : கோ.1, ஜப்பானி லாங் கிரின், ஸ்ரோயிட் எய்ட், பாயின்செட்டி. மண் மற்றும் தட்பவெப்பநிலை : இதைக் களிமண்ணிலிருந்து மணல் கலந்த வண்டல் மண் வரை அனைத்து வகையான நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். மிதமான வெப்பமும், காற்றில் அதிக ஈரப்பதமும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருத்தல்வேண்டும். பருவம்: கோடைக்காலத்தில், பிப்ரவரி – மார்ச் மாதங்களில் மழைக்காலத்தில் ஜீலை மாதங்களிலும் பயிர் செய்யலாம். நிலம் தயாரித்தல் நிலத்தை நன்கு மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஆகஸ்ட் 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: ஆகஸ்ட் 12,13,14,25,26,27,29 . மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09442121473
தென்னையில் அதிக மகசூல் பெற வழிகள்
தென்னையில் மேல் இலைகள் பசுமையாகவும் அடிஓலைகளில் வெளிர்நிற புள்ளிகள் தோன்றி மஞ்சள் நிறமடைந்து பின்னர் பழுப்பு நிறமாக மாறும். ஓலைகள் கீழ்நோக்கி தொங்க தொடங்கி முதிர்ச்சி அடையாமலேயே உதிர்ந்து விடும். தேங்காய்கள் சிறுத்து எண்ணிக்கை மிகக் குறைந்தும் காணப்படும். நுண்சத்து பற்றாக்குறையுடைய தென்னை மரங்களின் ஓலைகளில் நடுநரம்பில் இருபக்கங்களள், நுனி ஓலை ஆகியவை மஞ்சள் நிறமாக மாறும். அடிப்பகுதி பச்சையாக இருக்கும். இளங்கன்றுகளில் ஓலை பிரியாமல் இருக்கும். குருத்து ஓலைகள் வளர்ச்சி இல்லாமலும் இருக்கும். பாளையில் இளம்பிஞ்சுகள் மேலும் படிக்க..
நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த யோசனை
நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த கடையம் வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கார்பருவத்தில் நெல் குருத்துப்பூச்சியினால் பெருத்த சேதம் ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது. நெல் குருத்துப்பூச்சியை பூச்சி மருந்துகள் தெளித்து முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொண்டால் குருத்துப்பூச்சியை ஒழிக்க முடியும். நெல் நடவு செய்தவுடன் ஒரு ஏக்கரில் 5 எண்ணம் நெல் குருத்துப்பூச்சிக்கான இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும். இப்பொறியிலுள்ள பெண் அந்துப்பூச்சியின் வாசனைக்கு ஆண் அந்துப்பூச்சிகள் கவர்ந்திழுக்கப்பட்டு அழிக்கப்படும். இதனால் மேலும் படிக்க..
வாழைப்பயிரில் இலைப்புள்ளி நோய்
கோபி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கோபி சுற்று வட்டாரத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்குட்பட்ட , நல்லகவுண்டன்பாளையம், கோபிபாளையம், வாணிப்புத்தூர், போடிசின்னாம்பாளையம், பங்களாபுதூர் உள்ளிட்ட இடங்களில், 2,000 ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதலும், சிறு இலை வைரஸ் நோய் தாக்குதலும் அதிகம் தென்படுகிறது. இலைப்புள்ளி நோய் தாக்கிய வாழையில், இலை கருகிய நிலையில் காணப்படுகிறது. படிப்படியாக இலை கருகி, வாழைக்கன்று அழிந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் படிக்க..
வேளாண்மையில் வேம்பு
விவசாயிகள் பொதுவாக பூச்சி நோய்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்துவதால் வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்படுகின்றது. மேலும், சுற்றுப்புற சூழலும் மாசுப்படுத்தப்படுகிறது. இதனை தவிர்க்க விவசாயிகள் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி/நோய்களை கட்டுப்படுத்தலாம். வேம்பின் அனைத்து பாகங்களும் விவசாயிகட்கு பயன்படுகிறது. தழையை உரமாகவும், மாடுகட்கு தீவனமாகவும், பூச்சிக் கொல்லியாகவும், வேப்பம் புண்ணாக்கை உரமாகவும் யூரியா போன்ற ரசயான உரத்துடன் கலந்து இட்டு யூரியாவின் பயனை மேலும் படிக்க..
கேரளத்தை தாக்கும் ஆப்ரிக்க ராட்சச நத்தை!
உலகமயமாக்கல் மூலம் வரும் ஒரு பக்க விளைவு, நாடுகளுக்கு இடையே அதிகமான வர்த்தகம். அதன் ஒரு பக்க விளைவு, ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பூச்சிகளும் களை வகை செடிகள் பரவுவது. ஏற்கனவே, நம் நாட்டில், பார்தேனியம் , மாவு பூச்சி போன்ற ராட்சச செடிகளும் பூச்சிகளும் வேறு நாட்டில் இருந்து வந்து இருக்கின்றன. இப்போது, ஆப்ரிக்க நாட்டில் இருந்து ராட்சச நத்தைகள் கேரளத்திற்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன. இவை எல்லா செடிகளையும் கபளீகரம் செய்து, மேலும் படிக்க..
கரும்பு பூஸ்டர் – கரும்பிற்கான வளர்ச்சி ஊக்கி
கரும்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர். பயன்கள் இடைக்கணுக்களின் நீளம் கூடும் கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும் விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும் சர்க்கரை கட்டுமானம் கூடும் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும் பயன்படுத்தும் முறை அளவு : ஏக்கருக்கு 2, 3 மற்றும் 4 கிலோ முறையே தெளிப்பு திரவம் : 200 லிட்டர் தெளிக்கும் பருவம் : கரும்பு நட்ட 45, 60 மற்றும் 75 ஆவது மேலும் படிக்க..
தர்மபுரியில் ஆட்டுகிடைகள் மூலம் மூலம் இயற்கை உரம் பெரும் விவசாயிகள்
தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பட்ட சாகுபடி பணிக்காக விவசாயிகள் வயல்வெளிகளில் இயற்கை உரங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வயல்வெளிகளில் கடந்த காலங்களை போல் ஆட்டு பட்டி அமைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். விவசாய நிலங்களில் அதிக அளவில் ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகள் அடிப்பதால், பூமியில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்பட்டு, மண் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் காற்று, நீர் ஆகியவை மாசு அடைகின்றன. இதனால், தாவரங்களில் நோய் எதிர்ப்பு திறனை இழந்து மேலும் படிக்க..
மண்புழு உரம் தயாரிப்பில் புதிய முறை
மண்புழு உரம் தயாரிக்கும் முறையில் புதிய யுத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்புதிய முறையில் சிமென்ட் தொட்டிகளுக்கு பதிலாக “வெர்மி பேக்’ (மண்புழு உரப்பை) தொட்டியாக பயன்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளை ‘எபிஜெஸ்’ புழுக்களின் உதவியுடன் மக்க வைத்து மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மண்புழுக்களுக்கு உகந்த கழிவுகளான பண்ணைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், இலைச்சருகுகள், விலங்கு கழிவுகள் மேலும் படிக்க..
மானாவாரி மணிலா சாகுபடி டிப்ஸ்
மானாவாரி மணிலா பயிரிட்டுள்ளவர்கள் மேலுரமாக ஜிப்சம் இட்டு மகசூலை அதிகரிக்கலாம் மானாவாரி மணிலா பயிர் இப்போது பூ பூக்கும் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் காய்கள் முதிர்ச்சி அடையும் பருவம் வரை சுண்ணாம்புச் சத்து 90 சதவீதத்துக்கும் அதிகமாகத் தேவை. இதனால் மணிலாவுக்கு ஜிப்சம் மேலுரமாக இடுவது அவசியம். சுண்ணாம்பு சத்தை மணிலா செடிகள் வேர் மூலம் மண்ணில் இருந்து உறிஞ்சி, இலை திசுக்களில் நிலை நிறுத்திக் கொள்கிறது. பின்னர் வளரும் காய்களுக்கு சத்தை விழுது மூலம் இறங்கிச் மேலும் படிக்க..
வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு
மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம். இத்தகைய சூழலில் மண்புழு உர தயாரிப்பினை பெரிய அளவில் செய்து வருவது வியாபார நோக்கமாகும். இதனால் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் அவரவர் இல்லங்களிலேயே சிறிய முதலீட்டில் தங்கள் வயலுக்கு தேவையான மண்புழு உரத்தினை தயாரிக்க சுலபமான முறைதான் சில்பாலின் தொழில் நுட்பம் இந்த உரத்தை நிழலான எந்த இடத்திலும் மேலும் படிக்க..
வளம் தரும் வாழை நார்!
வாழை மரங்களில் குலைகள் வெட்டிய பின், வாழை மட்டைகளை குப்பையாகக் கருதப்பட்டு வந்த காலம் ஒன்று. ஆனால் குப்பையாக்கப்படும் அந்த வாழை மட்டைகளை மூலப் பொருளாகக் கொண்டு, சிறந்த வருவாய் ஈட்டும் சிறு தொழிற்சாலையையே நடத்தலாம் என்று பரிந்துரைக்கிறது வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை. வாழை நார் எடுப்பது எப்படி? தமிழகத்தில் சுமார் 2.80 லட்சம் ஏக்கரில், வாழை மரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகிறது. அனைத்து ரக மேலும் படிக்க..
முருங்கையை தாக்கும் பழ ஈ கட்டுபடுத்துவது எப்படி?
செடி முருங்கை சாகுபடியில் முருங்கைக்காய்களை தாக்கும் முக்கிய பூச்சி பழ ஈக்கள் ஆகும். “ ட்ரோசொமிலா” என்ற சிறிய வகை பழ ஈக்கள் முருங்கைப் பிஞ்சுகளை தாக்கி சேதம் விளைவிக்கின்றன. மஞ்சள் நிறத்தில், சிவப்பு நிற கண்களை கொண்ட இந்த ஈக்கள், 1 மில்லி மீட்டர் முதல் 2 மில்லிமீட்டர் அளவுள்ள மிகச்சிறிய ஈக்கள் முருங்கை பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும்போது பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும் போது பிஞ்சுகளின் மெல்லிய தோல்களில் முட்டையிடும். இரண்டு, மூன்று மேலும் படிக்க..
அதிக லாபம் தரும் திசு வாழை சாகுபடி
திசு வாழை பயிரிட்டால் நிகரலாபம் அதிகம் பெறலாம் என்று இவ்வாழை ரகத்தை பயிரிட்டு பலன்பெற்ற விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சென்ற ஆண்டில் கோலியனூர் வட்டாரம், பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி அ. ராஜா தனது 0.5 ஏக்கர் நிலத்தில் 500 கன்றுகள் நடவு செய்து தற்சமயம் ஜி9 வாழை ஒவ்வொன்றும் சராசரியாக 35 கிலோ எடை வருமாறு உற்பத்தி செய்துள்ளார். இந்த 0.5 ஏக்கரிலிருந்து கிடைத்துள்ள இந்த தார்களை தற்சமயம் கோயம்பேடு சந்தை விலையான கிலோ ரூ.9.80-க்கு மேலும் படிக்க..
திருந்திய நெல் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கார் மற்றும் முன் சம்பா பட்டத்தில் நெல் நடவு பணி தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்து இரட்டிப்பு மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போது நெல் நடவு மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளும் திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்து இரட்டிப்பு மகசூல் பெறலாம். திருந்திய நெல் சாகுபடி முறை என்பது நடைமுறையில் இருந்து வரும் நெல் சாகுபடி முறைகளில் சில மாற்றங்களை கொண்ட புதிய முறையாகும். மேலும் படிக்க..
சாமை சாகுபடி
தர்மபுரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் சாமை பயிர் செய்ய வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது. மானாவாரிக்கேற்ற மகத்தான பயிரான சாமை குறுகிய காலத்தில், குறைவான இடு பொருள் செல்வில் மிகுந்த லாபத்துக்கு ஏற்ற பயிராகும்.இப்பயிருக்கான உற்பத்தி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து நடப்பு ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம். விவசாயிகள் இப்பருவத்துக்கு ஏற்ற வறட்சியை தாங்கி வளர்ந்து உயர் விளைச்சலை தரக்கூடிய சாமை ரகங்களான கோ 3, கோ (சாமை) 4, பையூர் 2 மற்றும் மேலும் படிக்க..
நெல் சாகுபடியில் உர மேலாண்மை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பு கார் மற்றும் முன் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நேரடி உரங்கள் மற்றும் கூட்டு உரங்களை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம், என்று வேளாண் இணை இயக்குனர் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். நெல் நடவின் போது நெல் பயிருக்கு மண் ஆய்வு முடிவு மண் வள அட்டை பரிந்துரை படி உரமிடவேண்டும். இதனால் உரச்செலவினங்கள் குறைவதுடன் தேவையற்ற கூடுதல் உரச்செலவினத்தையும் தவிர்க்கலாம். மண் ஆய்வு மேற்கொள்ளப்படாத பட்சத்தில் பொது பரிந்துரையாக ஏக்கருக்கு, மேலும் படிக்க..
பூண்டு கழிவுகள் இயற்கை உரம்
இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமாக மாறும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி விவசாயிகள் அதிகளவில் லாபம் பெறுகின்றனர். பெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள், உடனடி விளைச்சலுக்காக ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மண்ணின் வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர். பெரியகுளம் பகுதி மேலும் படிக்க..
தேனீ வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும் ஆக., 8ம் தேதி தேனீகளை வளர்க்கும் முறை குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாளான வரும் ஆக., 8ம் தேதி காலை 9.00 மணிக்குள் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் வேளாண் பூச்சியியல் துறைக்கு வந்து, 150 ரூபாய் பயிற்சி கட்டணம் செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, “பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகம், மருதமலை ரோடு, கோவை – 641 மேலும் படிக்க..
ஆடி, புரட்டாசி பட்டங்களுக்கு ஏற்ற கேழ்வரகு சாகுபடி
குறுதானியப் பயிர்களில் மிக முக்கியமானது ராகி எனப்படும் கேழ்வரகு; மாவு, புரதம், தாது, வைட்டமின், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் இதில் உள்ளன. பருவமழை அதிகமாகக் கிடைக்கக் கூடிய ஜூலை, ஆகஸ்ட் வரையிலான ஆடிப்பட்டம், செப்டம்பர், அக்டோபர் வரையிலான புரட்டாசிப் பட்டத்தில் கேழ்வரகு பயிரிடலாம். தமிழகத்தில் 94 ஆயிரம் ஹெக்டேரில் மானாவாரியாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 1.70 லட்சம் டன் கேழ்வரகு செய்யப்படுகிறது. ஹெக்டேருக்கு சராசரியாக 1,887 கிலோ தானிய விளைச்சல் கிடைக்கிறது. கேழ்வரகுக்கு ஏற்ற மண்வகை: மேலும் படிக்க..
வீணாகும் உணவும் விலைவாசி வீக்கமும்
தினமணியில் வந்துள்ள அற்புதமான தலைப்பு கட்டுரை: உலகப் புகழ்பெற்ற இயற்கை விவசாய ஆலோசகரும், ஆசிரியருமான தேவேந்திர சர்மா, ஒருமுறை ஓர் உலகப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்தபோது, “”இந்தியாவின் விவசாயக் கொள்கையை புதுதில்லி தீர்மானிப்பதில்லை, நியூயார்க் தீர்மானிக்கிறது…” என்று கூறியது பொய்யல்ல. ஏனெனில், அமெரிக்க அரசு விவசாயத் தொழில்நுட்ப ஒப்பந்த அடிப்படையில் மான்சண்டோவின் பி.ட்டி விதைகளை வாங்க இந்தியா நிர்பந்திக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை வெளியேற்றிவிட்டு கார்ப்பரேட்டுகளை நியமித்து அமெரிக்க பாணி விவசாயம் – அதாவது உணவுப் பயிர்களைத் தவிர்த்துவிட்டு ஏமாற்றும் மேலும் படிக்க..
தக்காளி விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை
தக்காளி நடவு செய்து வரும் விவசாயிகள் அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியை தெளிக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தக்காளி நாற்று நடவு செய்வதற்கு முன்பு, பாத்திகளில் உள்ள தக்காளி நாற்றுகளை எடுத்து, ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பேக்டீரியாவை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில், வேர்பகுதியை நனைத்து, பின்பு நடவு செய்யவேண்டும். அப்போது தக்காளிச்செடிக்கு தேவையான தளைச்சத்து மற்றும் மணிச்சத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் தக்காளிச் செடிக்கு மேலும் படிக்க..
கரும்பில் செம்மை சாகுபடி
கரும்பு சாகுபடியில் கணு பருக்கள் மூலம், செம்மை முறை சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் காலம் காலமாக, விதை கரும்பில் இருந்து, கரும்பு கணுக்களை அரை அடி உயரத்திற்கு வெட்டி நடவு செய்து வந்தனர். ஒரு ஏக்கருக்கு 4-5 டன் விதை கரும்பு தேவைப்பட்டதால், மூலதன செலவு கூடுதலாக இருந்தது. இம்முறைக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்பான “செம்மை கரும்பு’ சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செம்மை நெல் சாகுபடியை போல, குறைந்த அளவு “கணு பருக்களை’ மேலும் படிக்க..
வேளாண்மை செம்மல் விருது
கோவை : நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக அளவில் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்த, விவசாயிகள் ஐந்து பேருக்கு வேளாண்மை செம்மல் விருது வழங்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட நீர் நுட்பவியல் தொழில் நுட்பங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் அதிக விளைச்சல், மானாவாரி வேளாண்மை, பண்ணை இயந்திர பயன்பாடு ஆகிய துறைகளில் சாதனை செய்த விவசாயிகள் 5 பேருக்கு தழிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் இணைந்து, “வேளாண்மை செம்மல் விருது’ வழங்கின. தமிழகத்தில் மேலும் படிக்க..
பழ வகைகள் பத படுத்துதல் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பழம் பொருட்களை பதப்படுத்தும் ஒரு இரண்டு நாள் பயிற்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி ஜூலை 26 மற்றும் 27 நாட்களில் நடை பெறுகிறது. இந்த பயிற்சி சாக்லேட், ஸ்குவாஷ், பான, கலப்பு பழ ஜாம், முதலியன பழங்கள் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், ஊறுகாய் செய்முறை உள்ளடக்கும் ஆர்வம் Rs.1, 000 செலுத்தி பயிற்சி கலந்துகொள்ளலாம் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: அறுவடை தொழில்நுட்ப மையம்,(Post harvest technology center) தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், மேலும் படிக்க..
சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் நோய் தடுக்கும் திறன்
சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மண் மற்றும் இலை வழி மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்துகிறது, சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ், மண்ணின் மூலம் பரவும் நோய்களுக்கான வேரழுகல், வாடல் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. தவிர, இலை வழி மூலம் பரவும் பூசான நோய்களான குலைநோய், இலை உறை அழுகல் நோய், இலைப் புள்ளி நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கிறது. தவிர, பயிர்களை தாக்கும் மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பாக்டீரியம் மற்ற உயிர் எதிர் காரணிகளான டிரைக்கோடெர்மா மேலும் படிக்க..
கொய்யாவில் பூச்சி, நோய் தடுப்பு
கொய்யாவில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கும் முறை குறித்து வேளாண் அலுவலர்கள் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் தரக்கூடிய கொய்யா பயிர், பழ ஈ, கொய்யா தண்டு துளைப்பான், மாவு பூச்சிகளாலும், நோய்களில் வாடல் நோய், ஆந்தரக்நோஸ், நுனியில் இருந்து காய்தல், பழ அழுகல் போன்ற நோய்களின் தாக்குதலுக்கும் இலக்காக வாய்ப்புள்ளது. சிறந்த சாகுபடி முறைகளைக் கையாண்டு மேலாண்மை செய்வதால் மேற்கண்ட பூச்சி மறறும் நோய்களை மேலும் படிக்க..
வாழை தொழிற்நுட்ப பயிற்சி
வாழை தேசிய ஆராய்ச்சி மையம் (NRCB) வாழை, வாழை நார் பிரித்தெடுத்தல், கைவினை பொருட்கள் தயாரித்தல் மற்றும் பிந்திய அறுவடை கையாளுதல், பழுக்க வைக்கும் உத்திகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மீது பயிற்சி திட்டங்களை அளிக்க இருக்கிறது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றிய ஜூலை 11 முதல் 16 வரை நடக்கும் வாழை நார் பிரித்தெடுத்தல் மற்றும் தயாரித்தல் கைவினை பொருட்கள் மீது பயிற்சி ஜூலை 26 மற்றும் 28 ஜூலை இடையே நடக்கும். மேலும் படிக்க..
கோவையில் விவசாய விழா
கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் வரும் ஜூலை 22 முதல் 24 வரை தமிழ் நாடு விவசாயிகள் மாநாடு நடத்துகிறார்கள். இதில், தமிழ்நாடு வேளாண் அமைச்சர், KA செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு புது பயிர் வகைகள், கருவிகள் மற்றும் மேலாண்மை தொழில்நுட்பங்கள் வெளியிடுகிறார். இதை தவிர, பல்கலைக்கழகம், தமிழ்நாடின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்து விவசாயிகள் வருடாந்திர ‘வேளாண் செம்மல் ‘ பரிசும் வழங்க படுகிறது விவரங்களுக்கு, தொடர்புகொள்வீர்: ஆர்.விஜய ராகவன், மேலும் படிக்க..
மஞ்சள் பயிரில் நுண்சத்துக் குறைபாடு
மஞ்சள் பயிரில் நுண்சத்துக் குறைபாடு நிவர்த்தி செய்ய உரங்களை இலை மூலம் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 6 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். தெளிப்பதற்கு முதல் நாள் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலை தெளிந்த நீரை எடுத்து, மேலும் 90 லி தண்ணீர் சேர்த்து கரைசலைத் தயார் செய்யவேண்டும். அக்கரைசலில் 150 கிராம் பெர்ரஸ் சல்பேட், 150 கிராம் ஜிங்க் சல்பேட், 150 கிராம் போராக்ஸ், மேலும் படிக்க..
சலிப்பு தரும் நெல் விவசாயம்?
தொடர்ந்து நெல் விவசாயம் செய்ய வேண்டுமா என்ற சலிப்பு, தமிழக நெல் விவசாயிகளிடையே ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் பரப்பளவும் நெல் உற்பத்தியும், நெல் விவசாயத்துக்கான ஆர்வமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற நெல் விவசாயிகளுக்கு அரசு மேலும் சலுகைகளை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2010-11-ம் ஆண்டில் 21.5 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டு 20.71 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. 81.5 லட்சம் மேலும் படிக்க..
சின்ன வெங்காயம் -கோ.ஓ.என்.5
தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறையினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ.ஓ.என்.5 என்ற ரகம் விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. நாற்றங்கால் தயாரிப்பு: ஒரு எக்டர் நடவு செய்ய 7 கிலோ விதை தேவைப்படும். மேட்டுப்பாத்தியில் நாற்றங்கால்விட நிலத்தை நன்கு உழவு செய்து 3 அடி அகலம், அரை அடி உயரம், 10 அடி நீளம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைத்து 2 கிலோ டி.ஏ.பி., மக்கிய தொழு உரம் இட்டு எறும்பு முதலான பூச்சிகளிடமிருந்து விதைகளைக் காப்பாற்ற லின்டேன் பவுடரை மேலும் படிக்க..
நெல் தரிசில் சாம்பல் பூசணிக்காய் சாகுபடி
பத்தடிக்கு பத்தடி இடைவெளியில் இரண்டு முதல் இரண்டரை அடி விட்டமும், ஒன்பது அங்குலம் ஆழமுள்ள குழிகள் போடவேண்டும். மக்கிய தொழு உரம் குழிக்கு ஒரு கூடை வீதம் கொட்டி மண்ணோடு நன்றாக கலக்கும்படி கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கரில் நட 3,200 முதல் 3500 விதைகள் தேவைப்படும். விதையை ஆழமாக ஊன்றக்கூடாது. ஆழம் முக்கால் அங்குலத்திற்கு அதிகமாக போகக்கூடாது. ஒரு குழியில் நான்கு அல்லது ஐந்து செடிகள் வளரும்படி பணிகளை செய்துகொள்ள வேண்டும். உயிர் தண்ணீர் விட மேலும் படிக்க..
மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள்
மாவு பூச்சியை பற்றியும், அதனை கட்டுபடுத்த ஒட்டுண்ணி அறிமுக படுத்த பட்டதை பற்றியும் முன்பே படித்தோம். இந்த ஒட்டுண்ணி எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் மரவள்ளி, பப்பாளி, கொய்யா, கத்தரி, கோகோ, பழப்பயிர்கள், மலர்செடிகள், தேக்கு போன்ற பல்வேறு தோட்டக்கலை பயிர்களை பப்பாளி மாவுப்பூச்சி பெருமளவு தாக்கி சேதப்படுத்துகிறது. வெப்பம் அதிகரிக்கும்போது, மாவுப்பூச்சியால் சேதமும் அதிகரிக்கும். பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும், மாவுப்பூச்சியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. பப்பாளி மாவுப்பூச்சி குறுகிய வளர்ச்சி காலமும், மேலும் படிக்க..
மஞ்சள் பயிரில் நவீன தொழில்நுட்பம்
மஞ்சள் பயிரிடும் விவசாயிகள், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம். மஞ்சளில் அதிக லாபத்தை பெற நவீன தொழில் நுட்பங்களான சொட்டுநீர் பாசனத்தை அமைத்து, நீர்வழி உரமிட்டு முறையாக கடைபிடிக்க வேண்டும்.அதன் மூலம், மஞ்சளில் கூடுதல் மகசூல் பெறலாம். மேலும், களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. பயிர் வளர்ச்சி ஒரே சீராக இருப்பதுடன், குறைந்த அளவு தண்ணீர் கொண்டு அதிக அளவு பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்யலாம். தொடர்ந்து, மண் வளம், நீர்வளம், தட்பவெட்ப நிலை ஆகிய மேலும் படிக்க..
மாதுளை சாகுபடி செய்வது எப்படி
இரகங்கள் : ஜோதி, கணேஷ், கோ.1, ஏற்காடு , ருத்ரா, ரூபி, மற்றும் மிருதுளா. மண் மற்றும் தட்பவெப்பநிலை இது எல்லாவகை மண்களிலும் விளையும். வறட்சி, கார மற்றும் அமிலத் தன்மைக் கொண்ட நிலங்களிலும் ஓரளவு தாங்கி வளரும். இது மலைப் பகுதிகளில் 1800 மீட்டர் உயரம் வரை வளரும். சிறந்த வகை மாதுறை இரகங்களைப் பனிக்காலத்தில் குளிர் அதிகமாகுவம் கோடைக்கால்த்தில் உஷ்ணம் மிகுந்துள்ள பகுதிகளில் மட்டும் வளர்க்க முடியும். விதையும் விதைப்பும் நடவு செய்தல் மேலும் படிக்க..
பச்சை தங்கமாம் மூங்கில்
மூங்கில், இன்று விவசாயிகளின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பயிராக மாற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பன்னெடுங் காலமாக பயிரிடப்படுகிறது. வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்தியாவில் மூங்கில் உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.6,505 கோடி. மூங்கில் தேவை பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது. எனவே மூங்கிலை, தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை நடவடிக்கை மேலும் படிக்க..
குறுவை பருவ நெல் சாகுபடி தொழிற் நுட்பங்கள்
குறுவை பருவத்தில் மே-ஜூன் மாதத்தில் நெல் சாகுபடி துவங்கப்படுகிறது. குறுகியகால வயதுடைய 110 முதல் 125 நாட்கள் கொண்ட ரகங்களை ஆடுதுறை36, ஆடுதுறை 37, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடுதுறை 47, கோ.47 மற்றும் வீரிய ஒட்டு நெல் கோ.ஆர்.எச்.3 ஆகியவை ஏற்றவை. ஒற்றை நாற்றாக ஒரு எக்டர் நடவு செய்ய சுமார் 7 முதல் 8 கிலோ விதையளவு போதுமானது. ஒற்றை நாற்றுகள் சரிவராத தருணத்தில் இரண்டு நாற்றுக்களாக நடவுசெய்ய 12 முதல் 15 மேலும் படிக்க..
தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக வேலிமசால்
தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான “வேலிமசால்” பயிரிடலாம். கால்நடை தீவனமாக புல்வகையை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு கூவாப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. விதை விதைத்த நான்காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட்டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். கால்நடைகளுக்கான தீவனம் குறைந்து வரும் இவ்வேளையில் இதுபோன்ற செடிகள் நல்ல லாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகிறது. ஐந்தாண்டு வரை இந்த மேலும் படிக்க..
பூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்
வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படுவதுடன் காலங்காலமாக மருத்துவம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்று விளங்குவதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவாக, ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இலை களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள், தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை. இப்பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு மேலும் படிக்க..
கிருஷ்ணப்ப தாசப்பவின் ஜீரோ பட்ஜெட் விவசாய பண்ணை
ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை சுபாஷ் பலேகர் பிரபல படுத்தி வருகிறார். அவருடைய விவசாயத்தை பின்பற்றும் கர்நாடகாவில் மாண்ட்யவில் உள்ள திரு கிருஷ்ணப்ப தாசப்பவின் பன்னூர் பண்ணை மிகவும் புகழ் பெற்றது. இந்த பண்ணையை இது வரை மூன்று லட்சம் விவசாயிகள் பார்வை யிட்டுளார்கள் என்கிறார்கள்! இந்த பண்ணையை பார்வை இட்ட ஒருவர் புகை படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை இங்கே பாருங்கள்! உதாரணத்திற்கு ஜீரோ பட்ஜெட் மூலம் விளைந்த வாழை கிருஷ்ணப்ப தாசப்ப தொடர்பு கொள்ள வேண்டிய மேலும் படிக்க..
மானாவாரியில் காராமணி சாகுபடி
பயறு வகைகளில் அதிக சத்துகளைக் கொண்டது காராமணி. இதில் 23.4 சதவீதம் புரதம், 1.8 சதவீதம் கொழுப்பு, 60.3 சதவீதம் கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் இரும்புசத்து ஆகியவை உள்ளன. கால்நடைகளுக்கு ஏற்ற பயிராகவும் காராமணி உள்ளது. குதிரை மசாலை விடவும் மிகச் சிறந்தது. இதை தொடர்ந்து சாகுபடி செய்து பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்தலாம். இது மானாவாரிக்கு மிகவும் உகந்த பயிராகும். இதை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இருந்தாலும் மார்ச்-ஏப்ரல், ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் சாகுபடிக்கு மிகவும் சிறந்த பருவமாகும். மேலும் படிக்க..
ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற காய்கறி சாகுபடி
ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப காய்கறி பயிரிட இதுவே ஏற்ற தருணம். இப்பட்டத்தில் தோட்டப் பயிர்களான கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொடி வகைகளை விவசாயிகள் பயிரிடத் தொடங்கலாம் கத்தரி, தக்காளி, மிளகாய்கத்தரியில் பாலூர்-1 ரவைய்யா போன்றவையும், தக்காளியில் உயர் விளைச்சல் ரகமான பிகேஎம்-1 மற்றும் வீரிய ரகங்களான யுஎஸ் 618 லட்சுமி ஆகியனவும் இப்பகுதிக்கு ஏற்றவை. உயர் விளைச்சல் ரகங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 400 கிராம் விதை தேவை. வீரிய ரகங்களுக்கு மேலும் படிக்க..
சரத் பவர் விவசாய மந்திரி
சுற்று சூழல் மந்திரியாக இருந்த திரு ஜெய் ராம் ரமேஷ் அவர்கள் அந்த துறை யில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். இந்த துறையில் ஒரு பெரிய மாற்றம் கொண்டு வந்தார் அவர். மரபணு மாற்ற பட்ட விதைகளை கொண்டு வருவதற்கு தடை விதித்தார். காடுகளை அழித்து வரும் சுரங்க பண முதலைகளை எதிர்த்தார். இதற்கான விலையை கொடுத்து விட்டார். தெளிவான சிந்தனை, அயர்ச்சி இல்லாத ஓட்டம், தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று இல்லாமல் அடுத்தவர்களை கேட்டு தெரிந்து மேலும் படிக்க..
மனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ஆய்வு
மனித சிறுநீர் எப்படி பின்லாந்த் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உரமாக பயன் படுத்தி காய்கறிகள் பயிர் இடுகிறார்கள் என்றும் முசிறியில் சிறுநீரை பயன் படுத்தி Struvite என்ற உரம் தயாரிப்பது பற்றியும் ஏற்கனவே படித்துள்ளோம். Struvite உரம் செய்முறை எப்படி என்று சுவிட்சர்லாந்த் நாடு விஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இப்போது தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் இதை பற்றி ஒரு ஆராய்ச்சி மேற் கொள்ள போவதாக தினமலரில் செய்தி வந்துள்ளது: கடலூர் : பெருகி மேலும் படிக்க..
எள் சாகுபடியில் நல்ல மகசூல் பெற
எள் சாகுபடியில் சரியான தொழில் நுட்பங்களை முறையாகக் கடைபிடித்தால், ஹெக்டேருக்கு சராசரி 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். பாசன வசதி உள்ள பகுதிகளில் சித்திரைப் பட்டத்தில் எள் சாகுபடி செய்யலாம். சித்திரைப் பட்டத்துக்கு டிஎம்வி-3,4 கோ-1, விஆர்ஐ-1 மற்றும் எஸ்விபிஆர்-1 ஆகிய ரகங்கள் ஏற்றவை. அனைத்து ரகங்களும் ஒரு ஏக்கர் விதைப்புக்கு 2 கிலோ விதை போதும். 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து வயலில் சீராகத் தூவவேண்டும் விதை மற்றும் மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜூலை 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: ஜூலை 11, 13-15, 21, 25, 27-30. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408 கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி என்ற ஊரிலும் பயிற்சி நடை பெற உள்ளது. இதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி மேலும் படிக்க..
இன்னொரு இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்
இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல் தயாரிப்பது எப்படி? குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும். தயாரிக்கும் முறை: நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர மேலும் படிக்க..
இயற்கை முறை சின்ன வெங்காய சாகுபடி டிப்ஸ்
குறுகிய காலத்தில் கிடைக்கும் பணப் பயிர்களில் முக்கியமானது சிறிய வெங்காயம் வெங்காய சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானது பூச்சி நோய் மேலாண்மை மற்றும் சத்து பற்றாக்குறை. இயற்கை எதிர் உயிரிணி பூசனம் டிரைக்கோடெர்மா விரிடி, உள்பூசணம் மற்றும் ஆடோமோனாய் பசு சாணம் உள்ளிட்டவைகளைக் கொண்டு, விதை நேர்த்தி செய்து நடுவதால் தண்டு, வேர் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம். சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலை உண்ணும் புழுக்களைக் கட்டுப்படுத்த தாவரப்பூச்சி விரட்டிகளையும், நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்த மேலும் படிக்க..
மகசூலை அதிகரிக்கும் பசுந்தாள் உரப் பயிர்கள்
பயிர் சுழற்சியில் தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடுவதால் மண்ணில் குறிப்பிட்ட சத்துகள் உறிஞ்சப்பட்டு, பிற சத்துகள் தொடர்ந்து பயிருக்கு கிடைக்காத சூழல் உருவாகிறது. இக்குறையை செயற்கை உரம் மூலம் ஈடுகட்ட இயலாது. பசுந்தாள் உரப்பயிர்களை பயிர் செய்து மடக்கி உழுவதால் இது ஈடுசெய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பயறுவகை பசுந்தாள் உரப்பயிர்கள் இன்றியமையாதவை. ஏனெனில் காற்றில் உள்ள அபரிமிதமான (நைட்ரஜன்) தழைச் சத்துகளை வேர்முடிச்சுகள் மூலம் கிரகித்து தன்னுடைய வளர்ச்சிக்கு போக எஞ்சிய சத்துகளை தொடர்ந்து பயிர்களுக்கு மேலும் படிக்க..
மானாவாரி மணிலா சாகுபடி
ரகங்கள் மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்ற மணிலா ரகங்கள் டிஎம்வி 7, விஆர்ஐ 2, டிஎம்வி 2 ஆகும். விதையளவு டிஎம்வி 2, டிஎம்வி 7 ஹெக்டேருக்கு 125 கிலோ மற்றும் விஆர்ஐ 2 ஹெக்டேருக்கு 140 கிலோ விதைகள் பயன்படுத்த வேண்டும். விதை நேர்த்தி ஒரு கிலோ விதைக்கு திரம் 4 கிராம் அல்லது டிரைகோடர்மா விரிடி 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். பூஞ்சான விதை நேர்த்தி செய்த 24 மணி நேரம் மேலும் படிக்க..
பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை
பஞ்சகாவ்யா தெளிக்கும் முறை கரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் 3% கரைசல் மிகவும் பயன்பாடு உள்ளது. ஒவ்வொரு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை சேர்த்துப் பயன்படுத்தினால் அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது. 10 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் தெளிப்பிக்கு 300 மி.லி/நொடி அளவு தேவைப்படும். மின் தெளிப்பானில் தெளிக்கும் போது வண்டல்கள் கீழே தங்கிவிடும். கைகளால் இயக்கப்படும் தெளிப்பானில் பெரிய துளைமுனை உள்ள தெளிப்பானை பயன்படுத்தவும். பாய்வு முறை பஞ்சகாவ்யா மேலும் படிக்க..
இயற்கை முறை நிலகடலை சாகுபடி டிப்ஸ்
நிலக்கடலையோடு தட்டைப்பயிர் வகையை ஊடுப்பயிராக பயிரிட்டால், சிவப்பு கம்பளி புழுவை கவரும் செடியாக தட்டைப்பயிறு இருக்கும். உலர் களத்தில் நிலக்கடலையை காயவைத்து, அதை, மரக்கட்டைக் கொண்டு அடிப்பதால் கடலையை பிரிக்கலாம். மணல் கலந்த மண்ணோ நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில், அங்கு குறைந்த அளவே பருப்புகளை கடலை உருவாகும். மணல் கலந்த மண்ணே நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில் அங்கு குறைந்த அளவே பருப்பு இல்லா கடலை உருவாகும். வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், மேலும் படிக்க..
வாழை சாகுபடி டிப்ஸ் – II
பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும். விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும். இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே. 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்து கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6ம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும். மேலும் படிக்க..
நெற் பயிரில் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழி முறைகள்
நெற் பயிரை தாக்கும் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் ஐரிஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார். இப்பூச்சியின் அந்து பூச்சியானது இலையின் நுனியில் கொத்தாக முட்டையிட்டு தனது மஞ்சள் நிற ரோமத்தால் மூடிவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் தூர்களை தாக்குவதால் இளம் பயிர்களில் நடுக் குருத்து காய்ந்து விடும். கதிர் பருவ பயிர்களில் இப்புழு தாக்கினால் வெள்ளை கதிர் உருவாகும். காய்ந்த குருத்து மற்றும் வெள்ளை கதிர்கள் கையால் இழுப்பதால் எளிதாக மேலும் படிக்க..
சோள பயிரில் குருத்து ஈ தாக்குதல்
சோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். சோள பயிரில் குருத்து ஈ தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இப்பூச்சி ஒரு வகை ஈ ஆகும். இது பழுப்பு நிறமாக இருக்கும். தாய் ஈயானது சற்று நீண்ட, தட்டையான வெண்மை நிற முட்டைகளை தனித்தனியாக தோகையின் அடிப்புறத்தில் இடுகிறது. முட்டைகளில் இருந்து 2, 3 நாட்களில் கால்கள் அற்ற இளம் மஞ்சள் நிற புழுக்கள் வெளிப்படும். மேலும் படிக்க..
உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய், பூ துளைப்பான்கள், சிலந்திபேன், வேர் அழுகல் மற்றும் எலிகள் சேதமும், சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகளில் இலைகள் சுருங்கி நெளிந்து, மஞ்சள் தேமல் நோயுடன் காணப்படுகிறது. இதனால், வளர்ச்சி குன்றி காணப்பட்டு பூ மற்றும் பிஞ்சுகள் குறைந்து, இலை மற்றும் தண்டு பகுதிகளில் இருந்து சாறை உறிஞ்சுகிறது. மேலும், காய்ப்புழுக்கள், காய்களை துளைத்து அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சிலந்திப் பேனானது, மேலும் படிக்க..
கரும்பில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுததும் வழிகள்
பருவநிலை மாற்றத்தால் கரும்பைத் தின்னும் பூச்சிகள் அதிகமாகத் தென்படுகின்றன. இதனால் மகசூல் பாதிப்பு, சர்க்கரையின் அளவு குறையும் நிலை. இது குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது: இப்போது கரும்பில் 2 விதமான தண்டு துளைப்பான் நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இளம் குருத்துப் புழு. மற்றொன்று இடைக்கணு புழு.இந்த நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. மேலும் பரவலாக கரும்பில் வெண்கம்பள அசு உணி பூச்சியும் அதிகம் இருக்கிறது. மேலும் படிக்க..
கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் தாக்குதல்
நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்ய பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கு கரும்பு ரகங்களை தேர்வு செய்து நடமுடியாது. ஆலை நிர்வாகம் எந்த ரகத்தை நடவு செய்யச் சொல்கிறார்களோ அந்த ரகங்களை மட்டுமே விவசாயிகள் நடவு செய்ய வேண்டும். கோயமுத்தூர் விவசாய பல்கலைக் கழகம், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், இ.ஐ.டி., பாரி ஆலை ஆகியன கரும்பில் பல ரகங்களை அறிமுகப்படுத்துகின்றனர். நெல்லிக்குப்பம் ஆலை பகுதியில் கோக மேலும் படிக்க..
மானிய விலையில் தென்னை டானிக் விற்பனை
உடன்குடி வட்டார தென்னை விவசாயிகளுக்கு 25 சதவீத மானியத்தில் டானிக் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார். தென்னை மரங்களின் இலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குரும்பை உதிர்வதை தடுக்கவும், காய்கள் பெரிதாகி பருப்பின் எடை கூடவும், பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் தென்னை டானிக் பயன்படுத்தப்படுகிறது. இதில் தழைசத்து, மண்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், கந்தகம், இரும்பு, தாமிரம், போரான், மாலிப்டினம் ஆகிய சத்துகளும், ஆக்சிஜன், ஆஸ்கார்பிக் அமிலம் மற்றும் சாலிசிலிக் அமிலம் போன்ற மேலும் படிக்க..
கரும்பில் புல் தோகை நோய் தடுப்பது எப்படி?
அறிகுறிகள்: இந்நோய் தாக்கப்பட்ட கரும்புகளின் அடிப்பகுதியில் உள்ள மொட்டுகளிலிருந்து ஒல்லியான புல்போன்ற இலைகள் தழையும். இது தழைப்பருவத்தில் ஏற்படும் நோய். இவ்வாறு தழையும் இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதுபோன்று பாதிக்கப்பட்ட கரும்பின் தண்டு சரிவர வளராது. அவ்வாறே வளர்ந்தாலும் இடைக்கணுப் பகுதி மிக சிறியதாகக் காணப்படும். இந் நோயை உண்டாக்கும் நச்சுயிரி, தாவரச்சாறு மூலம் பரவுகிறது. கட்டைப்பயிர் வளர்த்தல் மூலமும் இந்நச்சுயிரி பரவுகிறது. அசுவினி பூச்சியின் மூலம் இந்நோய் பரவுகிறது. தடுப்பு முறைகள்: நோய்பட்ட கரும்புச் மேலும் படிக்க..
ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்
தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும். நன்றி: ஜீரோ பட்ஜெட் இனைய தளம் 1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88 2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர் 3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம், மேலும் படிக்க..
ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன?
ரசாயன விவசாயத்தினால் வரும் கேடுகளை எதிர் கொள்ள இயற்கை விவசாயம் ஒரு பதிலாக சொல்ல படுகிறது. ஆனால் மராத்தியத்தில் இருந்து வரும் திரு சுபாஷ் பலேகர் சுலபமான ஒரு பதிலை வைத்து இருக்கிறார். இதற்கு ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்று பெயர். விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் சேர்த்து அவர் இந்த தொழிற் நுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார். அவர் கூறுகிறார் “விவசாயத்திற்கு இடு பொருள் விலைகள் (உரங்கள், பூச்சி கொல்லிகள்) ஏறி கொண்டே போகின்றன. ஜீரோ பட்ஜெட் மேலும் படிக்க..
ஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு
ஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு அளிக்கும் என்று ஸ்ரீலங்கா வேளாண்மை அமைச்சர் மகிந்த யப்பா அபயவர்த்தனா கூறினார். இயற்கை வேளாண்மையால், விவசாயிகளுக்கு இடுபொருள் செலவு குறைகிறது, அதனால், அவர்கள் கையில் லாபம் அதிகம் ஆகிறது என்றார் அவர். இந்தியாவிற்கு வந்து ஸ்ரீலங்கா விவசாயிகள், ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பலேகர் அவர்களிடம் பயிற்சி எடுத்து சென்றார்கள் என்று பசுமை விகடனில் ஏற்கனவே படித்து உள்ளோம். இப்படியாக, ஒரு அரசாங்கமே இயற்கை விவசாயத்தை செய்வது முதல் தடவையாகும்.. இந்தியாவில், மேலும் படிக்க..
இயற்கை உரம் மூலம் தழைச்சத்து
தழைச்சத்து அதிகம் கிடைக்க இயற்கை உரங்களை விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தலாம் பயிர்களுக்கு அதிக தழைச்சத்து கிடைக்க விவசாயிகள் தக்கை பூன்கு என்ற இயற்கை உரத்தினை பயன்படுத்தலாம் தக்கை பூன்கு என்ற புல் வகைப் பயிரினை விவசாயிகள் தற்போது தங்கள் நிலத்தில் விதைக்கலாம். இந்த பயிர் விதையை லேசான ஈரமுள்ள நிலத்தை உழுது அதில் 35 முதல் 40 நாட்களுக்கு பின் அந்த பயிரை மீண்டும் ஒரு உழவு செய்து தங்கள் நிலத்தில் உள் மடிய செய்ய வேண்டும். மேலும் படிக்க..
நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகள் தடுக்க யோசனைகள்
நெல் பயிரில் கார் பருவத்தில் தாக்கிய குருத்துப் பூச்சிகள் பிசான பருவத்திலும் தாக்க வாய்ப்புள்ளது. ஆரம்பகட்ட நடவடிக்கையின் மூலம் இதன் பாதிப்பை குறைக்கலாம். அறுவடையின் போது அடித்தூரை அதிக உயரம் விடாமல் தரையோடு அறுவடை செய்ய வேண்டும். அறுவடை முடிந்தவுடன் உழவு செய்ய வேண்டும்.இதன் மூலம் குருத்துப்பூச்சி, துங்ரோ வைரஸ் நோயை பரப்பும் பச்சை தத்துப்பூச்சி ஆகியவற்றின் கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படுகின்றன. ஆனைக்கொம்பன் ஈ, இலை சுருட்டுப்புழு, கதிர்நாவாய்ப்பூச்சியின் வாழ்விடங்களான வரப்புகளை சுற்றியுள்ள களைகள், புல் பூண்டுகளை மேலும் படிக்க..
தென்னையை தாக்கும் கருத்தலை புழு
ஓசூர் தாலுகாவில் தென்னை மரங்களை கருந்தலை புழுக்கள் அதிகளவில் தாக்கி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த, வேளாண் அலுவலர்கள் கிராமங்களில் முகாமிட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று பாசனப்பகுதிகளிலும், படுகைகளிலும் அதிகளவு தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.ஓசூர், பாகலூர், தொரப்பள்ளி, ஒன்னல்வாடி, சூளகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் தென்ணை மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது, தென்னை மரங்களில் அதிகளவு கருந்தலை புழு தாக்குதல் காணப்படுகிறது. இந்த தாக்குதலால் தேங்காய் மகசூல் பாதிக்கப்படுவதோடு, அறுவடை மேலும் படிக்க..
மாம்பழங்களை பாதுகாக்க பயோகோட்டிங் முறை!
முக்கனிகளில் ஒன்று மா. இது கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இப்பழம் மதிப்பு கூட்டு தொழில்நுட்பத்தின்படி சாறாகவும், ஜாமாகவும் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. இப்பழங்கள் இயல்பாகப் பறித்த நாளில் இருந்து சுமார் 4-வது நாள்களுக்குப் பிறகு பழுக்கத் தொடங்குகிறது. சுமார் 12 நாள்கள் வரை சாப்பிடுவதற்கு நல்ல நிலையில் இருக்கிறது. அதன் பின்னர் சுருங்குதல் மற்றும் அழுகல் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 1.28 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 7 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேருக்கு மேலும் படிக்க..
மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்
குறைந்து வரும் கம்பு சாகுபடியை அதிகரிக்க மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து திருநாவலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இரவீந்திரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மானாவாரி பருவ விதைப்புக்கு முன்பு கோடை உழவு மிகவும் சிறந்தது. கோடை உழவின்போது நிலம் முழுவதும் சரிசமமாக இருக்கும்படி ஒரு ஏக்கருக்கு 5000 கிலோ வீதம் பண்ணை எருவினை தூவி, உழவு செய்வதால் ஒரு ஏக்கருக்கு 16 கிலோ தழைச்சத்து, 8 கிலோ மணிச்சத்து, 5 கிலோ நுண்ணுரம், மேலும் படிக்க..
கரும்பைத் தாக்கும் பூச்சிகளும், கட்டுப்படுத்தும் வழிகளும்
பூச்சி தாக்கும்போது கரும்பினை முறையாக பராமரிக்காவிட்டால் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. கரும்பை பொறுத்தவரை குருத்து துளைப்பான், வெள்ளை ஈ, வேர்புழு, இலை தத்துப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. குருத்து துளைப்பான்: இவ் வகையான தாக்குதலுக்கு ஆளாகும்போது கரும்பின் இளம் குருத்தை புழுக்கள் சாப்பிடும். இதனால் நடுக்குருத்து காய்ந்துவிடும். இப் புழுக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதனை தடுக்க தேவையான அளவு மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்து 6 வாரங்கள் கழித்து மேலும் படிக்க..
மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி
மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும் தற்போது மானாவாரி நிலங்களில் விதைப்பு துவங்கியுள்ளது. இவற்றில் நிலக்கடலை மற்றும் துவரை பயிர் சாகுபடியில் பூஞ்சாண விதை நேர்த்தி மற்றும் நுண்ணுயிர் உரவிதை நேர்த்தி செய்ய வேண்டும். பூஞ்சாண விதை நேர்த்தி செய்வதின் மூலம் விதைகள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தி பயிர் எண்ணிக்கையை பராமரிக்க ஏதுவாகிறது. நுண்ணுயிர் உரவிதை நேர்த்தி செய்வதின் மூலம் விதைகள் நன்கு முளைத்து நல்ல வேர் வளர்ச்சி மற்றும் தண்டு மேலும் படிக்க..
மானாவாரி சாகுபடியில் அங்கக வேளாண்மை
மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்கக வேளாண்மை முறை யை கையாண்டு நஞ்சில்லா சுத்தமான சுவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யலாம் இயற்கையாக கிடைக்கும் எந்தவொரு வேளாண் இடுபொருளையும் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்கா வண்ணமும் மண் வளத்தையும் நலத்தையும் பேணி மனித மற்றும் கால்நடை வளத்தையும் காக்கும் வண்ணமும் பயன்படுத்தி இயற்கை வளத்தினை பாதுகாத்து மேம்படுத்தி வேளாண்மை செய்வதே அங்கக வேளாண்மை ஆகும். பயிற் சுழற்சி, ஊடுபயிர், கவர்ச்சிப்பயிர், நீர் மேலாண்மை, சரியான விதைக்கும் மற்றும் அறுவடை செய்யும் பருவம் மேலும் படிக்க..
மானாவாரி மகசூலுக்கு கோடை உழவு அவசியம்
“”மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெற கோடை உழவு அவசியம்,” என ஒட்டன்சத்திரம் வோளண்மை உதவி இயக்குனர் முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரம் பகுதியில் 60 சதவீத வேளாண் மை நிலங்களில் மக்காச்சோளம், சோளம், பருத்தி, பயறு வகைகள் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகின்றன. மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு கோடை உழவும் முக்கிய தொழில் நுட்பமாக உள்ளது. ஏப்ரல், மே, ஜூன் ல் செய்யப்படும் கோடை உழவானது அடுத்து பெறப்படும் மழை நீரை ஈர்த்து சேமித்து, விதைக்கபடும் மேலும் படிக்க..
இயற்கை உரங்களை இடுவீர் – இணை இயக்குனர் அறிவுரை
“விவசாயத்தில் மண் வளத்தைப் பாதுகாத்து நல்ல மகசூல் பெற இயற்கை உரங்களை இட வேண்டும்.” என்று வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார். விவசாயிகள் மண் பரிசோதனை செய்து தேவைப்படும் ரசாயன உரங்களை அளவாக இடவேண்டும். இயற்கையான தொழு உரம், பசுந்தாள் உரம், மற்றும் தழை உரங்களை போதியளவு இடவேண்டும். காற்றில் உள்ள தழைச் சத்தை கிரகிக்கும் உயிர் உரங்களை இட வேண்டும். பாசன நீர் பரிசோதனை செய்தும், உரிய நீர் மேலாண்மை முறைகளை கடைபிடித்து மண்வளத்தை மேலும் படிக்க..
மண் வள அட்டை
” மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து, மண்வள அட்டை பெற்று, அதிகாரிகள் ஆலோசனைப்படி உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம்’ என, எலச்சிபாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் லோகநாதபிரகாசம் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன் மண்ணின் வளத்தை பொறுத்தே அமைகிறது. பயிர் சாகுபடி செய்வதால் ஏற்படும் சத்து குறைபாடுகளை சரியான உர நிர்வாகத்தின் மூலம் சரி செய்ய வேண்டியது அவசியம். சரியான உர நிர்வாகத்துக்கு முதலில் மண் பரிசோதனையே அடிப்படையாகும். சத்துக்களின் அளவு வேறுபடுவதாலும், சத்துகளின் தேவை மேலும் படிக்க..
அதிக லாபம் பெற புதினா சாகுபடி
அதிக லாபம் பெற புதினா சாகுபடி செய்யலாம் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக சமையலில் புதினாவிற்கு முக்கிய இடம் உண்டு. மருத்துவ குணங்கள் கொண்ட புதினா உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்குத் தேவையான புதினா பயிரிடப்படுகிறது. புதினாவை வணிக நோக்கில் பயிரிட்டால் நல்ல லாபம் கிடைக்கும். மித வெப்பப் பகுதிகளில் வடிகால் வசதியுள்ள இருபொறை மண், மேலும் படிக்க..
ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை பெற வழிகள்
வீரிய ஒட்டு ரக மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே நல்ல மகசூல் பெற முடியும். மேட்டுப்பாத்தி நாற்றங்கால்: பாத்திகளை ஓரளவு நிழல்படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும். அதன் அகலம் 1 மீட்டர், நீளம் 3 மீட்டர் வரை அமைக்கலாம். மண் மிருதுவாகவும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். இதற்காக மண்ணின் தன்மையைப் பொறுத்து குறுமண், மணல் ஆகியவற்றை கலக்க வேண்டும். நன்கு பண்படுத்திய மேலும் படிக்க..
மண் வளம் பெருக பசுந்தாள் உரங்கள்
நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் வேளாண் நிலங்கள் வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்படுவது வேகமாக நடந்து வருகிறது. இதனால் குறைந்த நிலத்தில் சாகுபடி செய்து, நிறைந்த மகசூலைப் பெற வேண்டிய கட்டாயம் தமிழகத்தில் உருவாகிக் கொண்டு வருகிறது. இதற்காக பசுமைப் புரட்சி என்ற பெயரில் அதிகப்படியான ரசாயன உரங்களையும், கடுமையான நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளையும், வேளாண் துறையின் பரிந்துரையின் பேரில், விவசாயிகள் பயன்படுத்தத் மேலும் படிக்க..
நிலக்கடலை சாகுபடி டிப்ஸ்
நிலக்கடலை சாகுபடியில் உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளை வேளாண் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாகுபடி முறைகளை பின்பற்றினால் அதிக மகசூலும், அதிக வருமானமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிலக்கடலை பயிர் சாகுபடிக்கு மணல் பாங்கான வண்டல், செம்மண் மற்றும் வண்டல் நிலங்கள் ஏற்றது. சட்டிக்கலப்பையை பயன்படுத்தி மூன்று அல்லது நான்கு இரும்பு கலப்பை அல்லது நாட்டு கலப்பையை கொண்டு மண் புழுதியாகும் வரை உழ வேண்டும். பொதுவாக டி.எம்.வி., 2, டி.எம்.வி., 7, ஜே.எல்., 24 ஆகிய மேலும் படிக்க..
அதிக மகசூல் தரும் தென்னங்கன்று விற்பனை
ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், உயர்ரக மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய இளம் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் முகமது யாசின் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், உயர்ரக மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய இளம் தென்னங்கன்றுகள்(நெட்டை ரகம், வெஸ்ட்கோஸ்ட் டால்) விற்பனைக்கு உள்ளன. ஒரு கன்றின் விலை 30 ரூபாய் மட்டுமே. தேவைப்படுவோர் “பேராசிரியர் மேலும் படிக்க..
வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் இலவச பயிற்சி
நாமக்கல்லில், வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 2011 ஜூன் 14-ம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் வாழை நாரின் முக்கியத்துவம், வாழை நார் பிரித்தெடுப்பதற்கு மட்டை தேர்வு செய்யும் முறை, இயந்திரம் மூலம் வாழை நார் பிரித்தெடுத்தல், வாழை நாரை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜூன் 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: 14-18, 23-25 ஜூன் 28-30. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408 மற்றும் 09442531699.
கொய்யா பயிர் இடும் முறை
கொய்யா இரகங்கள் அலகாபாத், லக்னோ – 46, லக்னோ – 49, அனகாபள்ளி, பனாரஸ்,ரெட் பிளஷ், அர்கா அமுல்யா, அர்கா மிருதுலா மற்றும் டிஆர்ஒய் (ஜி) 1. மண் மற்றும் தட்பவெப்பநிலை கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் உள்ள மலைப்பகுதிகளில் நன்கு வளரும். அனைத்து மண் வகைகளிலும் இப்பயிர் விளைந்தாலும் வடிகால் வசதி மிகவும் முக்கியம். ஆழமற்ற அடி பாறைகள் உள்ள மண்வகைகளிலும், களிமண் பூமியிலும் நன்கு வளரும். களர் மற்றதம் உவர் நிலங்களிலும், தாங்கி மேலும் படிக்க..
நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுபடுத்துவது எப்படி
நெற்பயிரை தாக்கி அழிக்கும் புகையான், வெண் புகையான் உள்ளிட்ட பூச்சிகளை இயற்கை எதிரி பூச்சிகளைப் பயன்படுத்தி அழிக்க வேண்டும். நெற்பயிரை தாக்கும் புகையான், வெண்முதுகு புகையான், குருத்தப் பூச்சி, இலை மடக்குப்புழு, பச்சை மற்றும் வெள்ளை தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை எதிரிகளைக் கொண்ட பூச்சிகளை பயன்படுத்த வேண்டும். எட்டுக்கால் சிலந்திகள் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு 10 முதல் 12 புகையான்கள் அல்லது வெண்முதுகுப் புகையான்கள் 3 முதல் 6, பச்சை மற்றும் வெள்ளை தத்துப்பூச்சிகள் இரண்டு குருத்துப் மேலும் படிக்க..
மரவள்ளியில் நுண்ணூட்ட மேலாண்மை
மரவள்ளியில் நுண்ணூட்ட கலவை தெளிப்பதால் துத்தநாகசத்து பற்றாக்குறை நீங்கி, செடிகளின் வளர்ச்சி நன்கு இருக்கும் நாமக்கல் வட்டாரத்தில், வளர்ச்சி நிலையில் உள்ள மரவள்ளியில் பல வயல்களில் இரும்பு மற்றும் துத்தநாகம் நுண்ணூட்டம் பற்றாக்குறை காணமுடிகிறது. அதனால், இலைகள் வெளுத்து இளம் மஞ்சளாகி, சிறுத்து மெலிந்து காணப்படுகிறது. தற்போது, வெப்பநிலை அதிகரித்துள்ளதால், வெப்பம் தாங்காமல் இலைகள் கருக ஆரம்பித்துவிடும். அதை தவிர்க்க, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம், பெரஸ்சல்பேட், 5 கிராம் ஜிங்க்சல்பேட் மற்றும், 5 கிராம் மேலும் படிக்க..
நெற் பயிரில் குருத்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிகள்
நெற் பயிரில் குருத்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வாசுதேவநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் விளக்கியுள்ளார். இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்தவும், குருத்து புழுவின் தாக்குதல் ஏற்படா வண்ணம் தடுக்கவும் ஒரு ஏக்கருக்கு புரபனோபாஸ் 400 மிலி அல்லது இன்டாக்சகார்ப் 80 மிலி மருந்தினை ஒட்டும் திரவமான சாண்டோவிட் அல்லது பைட்டோவிட் 200 மிலியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். பூச்சி கொல்லி மேலும் படிக்க..
மரவள்ளி சாகுபடியில் பூச்சி கட்டுப்பாடு முறைகள்
பருவ நிலை மாற்றம் காரணமாக அதிகமான உஷ்ணம் நிலவுகிறது. இந்நிலையில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் எத்தகைய பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் என்பதை விளக்குகிறார் புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார். மரவள்ளி நடும் முறைகள் மரவள்ளி நடும்போது நல்ல வளர்ச்சி அடைந்த குச்சியை நட வேண்டும். மரவள்ளிக் குச்சியில் டார்ச் அளவு 33 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் பூச்சி தாக்குதல் இருக்காது. மேலும் படிக்க..
எள் பயிரில் அறுவடைக்கு பின் நேர்த்தி
எள் பயிரில் நல்ல லாபம் பெற அறுவடைக்கு பின் நேர்த்தி தொழில் நுட்பங்களை பின்பற்ற வேண்டும் என கோட்ட வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார். ]எண்ணெய் வித்து பயிரான எள்ளில் எண்ணெய் அளவு குறையாமலும், தரம் கெடாமல் காத்திடவும், நல்ல நிலையில் விற்றிடவும் கீழ்கண்ட நேர்த்தி முறைகளை அறுவடைக்கு பின் செய்ய வேண்டும். எள் பயிர் அறுவடையின் போது செடியின் கீழ் பகுதியிலுள்ள இலைகளில் 25 சதவீதம் இலைகள் உதிர்ந்தும் மேலே உள்ள இலைகள் மற்றும் தண்டு பகுதிகள் மேலும் படிக்க..
இயற்கை விவசாயமும் காந்திய கோட்பாடும்
குஜராத், மராட்டியம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள் காந்திய வழியில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு அதிகளவில் லாபம் பெற்று வருகின்றனர். குறிப்பாக தற்போதைய செயற்கை உரங்கள், களைக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்களை கெடுக்காமல் பாதுகாத்து அதிகளவு உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் லாபம் வாயிலாக வளம் பெற்று வருகின்றனர். காந்திய சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு இயற்கை விவசாயத்தில் தேவையில்லாமல் நிலத்தை உழவியல் பணிகளுக்கு உட்படுத்துவது கிடையாது. நிலத்தின் தன்மைகேற்பவும், பயிரின் தேவையை கருத்தில் கொண்டும் சாகுபடிப் மேலும் படிக்க..
சாம்பல் நோயைக் கட்டு படுத்தும் வழிகள்
பயறுவகைப் பயிர்கள், எள், வெண்டை, கொத்தமல்லி, பூசணி வகைப்பயிர்கள் சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…. உங்கள் பயிரின் இலைகளின் மேல்பகுதியில் சாம்பல் போன்ற வெள்ளை நிற தூள் படிந்திருக்கிறதா என்றும் அந்த இலையின் அடிப்பகுதி பச்சையம் இழந்து மஞ்சள் நிறமாக மாறியுள்ளதா என்றும் கவனியுங்கள். அப்படிக் காணப்பட்டால் உங்கள் பயிர் சாம்பல் நோயினால் பாதிக்கப் பட்டிருக்கலாம். நோய்க்கு உகந்த காலம்: தற்போது நிலவும் காலை குளிர் மற்றும் பனி பெய்கின்ற சூழ்நிலை இந்த சாம்பல் நோய் பரவ ஏற்றதாகும். இது மேலும் படிக்க..
பார்தேனியம் அரக்கனை ஒழிப்பது எப்படி?
பார்தேனியம் அரக்கனை பற்றி ஏற்கனவே நாம் படித்துள்ளோம். பார்தேனியம் இப்போது சாலை ஓரங்களிலும் பொது இடங்கள் இருந்து மெதுவாக வயல்களுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனை அவ்வளவு எளிதாக கட்டுபடுத்துவது இயலாது. இதற்கு மெக்சிகோ வில் இருந்து ஒரு வகைக்கான வண்டு Mexican beetles (Zygogramma bicolorata) இயற்கை யான எதிரி. ஆனால் இந்த வண்டுகள் அவ்வளவு எளிதாக இங்கே கிடைப்பது இல்லை. இப்போது, இதற்கு இன்னொரு ஒரு தீர்வு கண்டு பிடிக்க பட்டு உள்ளது. மா மேலும் படிக்க..
கொய்யாவில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ மேலாண்மை
கொய்யாத்தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈயினை கட்டுப்படுத்தும் முறையினை லூதியானாவில் (பஞ்சாப் மாநிலம்) உள்ள மத்திய அறுவடைக்குப்பின் தொடர்பான பொறியியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIPHET) அறிமுக படுத்தி உள்ளது. எத்தனால் 6 பங்கு, மெத்தில் யூஜெனால் 4 பங்கு மற்றும் 1 பங்கு மேலத்தியான் (ethanol, methyl eugenol and malathion (6:4:1))கலந்த இனக்கவர்ச்சி திரவக்கரைசல் தயாரிக்கப்பட்டது. தண்ணீர் உறிஞ்சக்கூடிய 2″ X 2″ பிளைவுட் துண்டுகளை இக்கரைசலில் ஊறவைத்து, ஒரு மேலும் படிக்க..
இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி?
இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி? தற்போது இயற்கை விவசாயம் பெருமளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற்போது காண்போம். இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் என்பது இதன் பெயர். பூண்டு ஒரு கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். மேலும் படிக்க..
இனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சி கட்டுப்பாடு
இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் எதிர் பாலினத்தைக் கவர்ந்து உறவுகொள்ள ஒரு விதமான வாசனையுள்ள ஹார்மோனை வெளியிடும். இந்த வாசனையை நுகர்ந்து ஆண் அல்லது பெண் பூச்சிகள் தங்கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் கொண்டுதான் இனக்கவர்ச்சி பொறிகள் செயல்படுகின்றன. இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் பின்னர் அழிக்கப்படும். இதன்மூலம் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிறது. முட்டையிடுதல் தவிர்க்கப்படுவதால் புழுக்கள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்பட்டு பூச்சி மருந்தின் தேவையும் மேலும் படிக்க..
ராஜராஜன் 1000 சாகுபடி டிப்ஸ்
“ராஜராஜன் 1000” என்ற செம்மை நெல் சாகுபடி விவசாயிகளிடையே பரவி வருகிறது. * இந்த முறையில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது வயலை மேடு பள்ளம் இல்லாமல் தயார் செய்வதாகும். ஏனென்றால் விவசாயிகள் 14 நாட்கள் வயதுடைய இளம் நாற்றினை நட வேண்டிஉள்ளது. * ஒரு ஏக்கர் சாகுபடிக்கு மூன்று கிலோ விதை நெல் போதுமானது. * விதையினை உப்புக் கரைசல் நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். 100 கிராம் சமையல் உப்பினை 10 லிட்டர் நீரில் கலந்து, மேலும் படிக்க..
அசோலா..நெல் வயலில் ஒரு நிகரற்ற ஊடுபயிர்!
கூட்டுப் பயிர் மூலமாகக் கூடுதல் வருமானம் பெற முடியும் என்பதைப் புரிந்து கொண்ட விவசாயிகள் ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற ஒரு பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நெல் பயிருக்கு இடையில் அசோலாவை சாகுபடி செய்து வருகிறார் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன். இவர், இயற்கை வேளாண்மை இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். “தொட்டியில் அசோலாவை வளர்த்து, மாடுகளுக்குக் கொடுக்கறதை ஐந்து வருடமாக செய்து கொண்டிருக்கேன். அசோலாவை மாடுகளுக்குத் தீவனமாக கொடுக்கம் போது அதுங்களோட உடல் ஆரோக்கியமாக மேலும் படிக்க..
இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி
பசுமை தமிழகத்தில் பல வகை இயற்கை பூச்சி கொல்லிகளை படித்து இருக்கிறோம். இதோ, இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி.. இயற்கை விவசாயியான திரு ராம ரெட்டி அவர்கள் இரண்டு முறைகளில் இயற்கை பூச்சி கொல்லிகளை தயாரிக்கலாம் என்கிறார்: ஒரு கிலோ இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைக்கவும். இதனுடன், ஐந்து லிட்டர் கோ மூத்திரத்தை கலந்து ஒரு பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட் ஐந்து மில்லி எடுத்து ஒரு லிட்டர் நீருடன் கலந்து மேலும் படிக்க..
தமிழகம் கரும்பில் அதிக மகசூலுக்கு சொட்டுநீர்ப் பாசன முறை
கரும்புப் பயிருக்கு சொட்டுநீர் பாசனம் கடலூர் மாவட்டத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. பாரம்பரிய விவசாயத்தில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் மகசூல் கிடைக்கிறது. கரும்புப் பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்வதால் ஏக்கருக்கு கரும்பு மகசூல் 100 டன் வரை கிடைக்கும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள். தண்ணீர் தேவையும் உரத் தேவையும் குறைகிறது. உரம் தண்ணீரில் கரைத்து அளிக்கப்படுகிறது. கரும்புக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ள அரசு 65 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. டான்ஹோடா என்ற அமைப்பின் மூலமாகவும் மேலும் படிக்க..
வாழை சாகுபடிக்கான டிப்ஸ்!
வாழை சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தைப் பக்குவப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும். வாழை நட்டப் பிறகு சில பராமரிப்புப் பணிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் மகசூல் அதிகம் பெற முடியும். இதோ, வாழை சாகுபடிக்கான டிப்ஸ் கொடுக்கிறார், பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார்: வாழையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மண்வெட்டியால் கொத்தி மண் அணைக்க வேண்டும். பக்கக் கன்றுகளை மாதம் ஒரு முறை நீக்க மேலும் படிக்க..
தென்னையைத் தாக்கும் எரிபூச்சி
தென்னையைத் தாக்கும் முக்கிய பூச்சிகளில் ஒன்று கொன்தேலா ரோடுண்டா என்ற எரிபூச்சியாகும். இது அந்துப்பூச்சி இனத்தைச் சேர்ந்த உயிரினம் போன்ற உடலமைப்புடன் காணப்படும். இப்புழுக்களின் உடல்மீது, சிறு உரோமங்களும் அதன் நுனியில் வட்டமான சுரப்பிகளும் இருக்கும். இதிலிருந்து வெளிப்படும் திரவம் தோல் அரிப்பை ஏற்படுத்தும். இந்த வகை எரிபூச்சிகள் சில சமயங்களில் மட்டுமே தோன்றி சேதம் விளைவிக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென்மாவட்டங்களில் முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள திண்டுக்கல், தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் எரிபூச்சியின் மேலும் படிக்க..
கம்பு சாகுபடி செய்ய உதவும் கோடை மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்துவருவதால், விவசாயிகள் குறைந்த நாட்களில் அதிக லாபம் பெற கம்பு சாகுபடி செய்யுமாறு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் குறைந்த நீரை கொண்டு குறைந்த வயதில் அதாவது 80 லிருந்து 85 நாட்களில் மகசூல் தரக்கூடிய கம்பு பயிரை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். கம்பினை மானாவாரி பயிராகவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேலும் படிக்க..
குறுவை பருவத்தில் நெல் விதை நேர்த்தி
தற்போது குறுவை சாகுபடிக்கான நெல் நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நாற்றங்காலில் விதைக்கும் முன்பாக விதை நேர்த்தி செய்வது அவசியம். விதை நேர்த்தி செய்வதன் மூலம் நெல்லில் விதைகள் மூலம் பரவும் நோய்களை எளிதாகக் கட்டுப்படுத்த இயலும். நோய் எதிர் உயிரியான சூடோமோனாஸ் புளாரசன்ஸ் பாக்டீரியாவை ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஊறவைத்து விதைக்க வேண்டும். எட்டு செண்ட் நாற்றங்காலுக்கு மேலும் படிக்க..
பருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்கள்
பருவநிலை மாற்றத்தால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. வளி மண்டலத்தில் மாசு நிறைந்துள்ளது. இதனால் மழைக் காலத்திலும் குளிர்காலத்திலும் நெற் பயிரைத் தாக்கும் நோய்கள் இப்போது கோடைக்காலத்திலும் தாக்குகின்றன. இப்போது பரவலாக சொர்ணாவாரி நெல் பட்டத்தில் ஆடுதுறை 37, டிகேஎம் 9 ஆகிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப் பயிர்களைத் தாக்கும் நோய்கள் குறித்தும் அதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை நிபுணர் என். விஜயகுமார் கூறியது: மேலும் படிக்க..
இன்னும் சிறிது நாட்களில் எல்லாமே மரபணு மாற்றபட்டு விடும்!
மக்களின் கவனம் மரபணு மாற்றப்பட்ட கத்திரி (Bt Brinjal) மேல் இருக்கும் பொது, சத்தமே இல்லாமல், மதிய அரசாங்கம் எல்லா காய்கறி மற்றும் பழ வகைகளை மரபணு மாற்ற அனுமதி அளித்துள்ளது. 74 வகையான மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள், எல்லாம் அரசாங்கத்தின் அனுமதிக்காக ரெடி. இவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை: பழங்கள்: மாதுளை, வாழை, பப்பாளி, தர்பூசணி காய்கறிகள்: உருளை, தக்காளி, மிளகாய், காரட், கத்திரி, முருங்கை, வெண்டை வெங்காயம், அரிசி, கோதுமை, ஏன் துளசி மேலும் படிக்க..
தலைகீழாய் வளரும் தக்காளி
பொதுவாக தக்காளி செடியின் வேர் கீழ் நோக்கியும் தண்டு பகுதி புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கியும் வளர்வது வழக்கம். இதுவே தக்காளியை மேலிருந்து கீழ்நோக்கி வளர்த்தால் எப்படி இருக்கும்? இந்த முயற்சியைத்தான் “டாப்சி டர்வி’ என்ற நிறுவனம் முயற்சி செய்து பார்த்து, அவ்வாறு வளர்ப்பதற்கு தேவையான தொட்டியையும் வடிவமைத்து அமெரிக்க சந்தையில் விற்பனை செய்துவருகிறது. ஒரு செடி கீழிருந்து மேல்நோக்கி வளரும்போது அது நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சும் சத்துக்களை புவி ஈர்ப்பு விசையை மேலும் படிக்க..
திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழா
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவிலான நெல் திருவிழா மே 28, 29ம் தேதிகளில் நடக்கிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார். ஆண்டுதோறும் ஆதிரெங்கம் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவிலான நெல் திருவிழா கருத்தரங்கம், கண்காட்சி ஆகியவை நடக்கிறது. அதன்படி, இந்தாண்டு மே 28, 29ம் தேதிகளில் நடக்கும் கருத்தரங்கில் மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மை சட்டங்களும் – மேலும் படிக்க..
நாடு முழுவதும் எண்டோசல்பான் மருந்திற்கு இடைகால தடை
எண்டோசல்பான் பற்றி நாம் ஏற்கனவே படித்து உள்ளோம். கேரளா மற்றும் கர்நாடக அரசாங்கங்கள் இந்த பூச்சி கொல்லியை தடை செய்துள்ளனர். நம் மத்திய சர்காரோ, இந்த மருந்தை தடை செய்ய பத்து வருடம் கேட்டது. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டு இந்த மருந்திற்கு இடை கால தடை கிடைத்து உள்ளது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக இளைஞர் பேரவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- எண்டோசல்பான் மேலும் படிக்க..
மண் பரிசோதனை மூலம் உரச்செலவு குறையும்
“மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணில் ஏற்கனவே உள்ள சத்து எவை என அறிந்து, தேவையான அளவு உரமிட்டு, உரச் செலவை குறைக்க முடியும்’ என, வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார். மண்ணின் தன்மை அறிந்து பயிர் தேர்வு செய்ய மண் பரிசோதனை உதவுகிறது. மண்ணின் கார அமில தன்மையை அறிந்து பயிரிட கூடிய நிலமாக, மண்ணை சீரமைக்க மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண் பரிசோதனையின் மூலம் மண்ணில் ஏற்கனவே உள்ள சத்துக்கள் எவை மேலும் படிக்க..
இயற்கை விவசாயத்தில் மா சாகுபடி
திருவள்ளூர் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தில் மாங்காய்களை அதிகளவில் செழிக்க வைத்து சாகுபடி செய்துள்ள விவசாயி பாரதியிடம் இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். இவர் திருவாலங்காட்டை அடுத்த காவேரிராசபுரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாங்காய், சப்போட்டா, நெல்லிக்காய் என பல்வேறு வகையான மரங்களை பயிரிட்டு வருகிறார். இவர் அனைத்து வகையான பயிர்களும் இயற்கை விவசாயத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்துள்ளார். தற்போது சீசனுக்கு ஏற்றபடி இயற்கை விவசாயத்தில் அதிகளவு சாகுபடி செய்துள்ளார். மேலும் படிக்க..
காளான் பதனிடும் தொழில்நுட்பம்
காளான் மூலம் கிடைக்கும் புரதச்சத்து சிறந்த புரதச்சத்து உணவாக கருதப்படுகின்றது. மேலும் காளான்களின் புரதம் மாற்றும் திறன், புரதம் உற்பத்தித் திறன், தாவரப் பயிர் வகை புரதம் மற்றும் விலங்கு புரதத்தினைவிட சிறந்து காணப்படுகிறது. காளான் தொழில்நுட்பம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவர நோயியல் துறை பேராசிரியை முனைவர் உஷாராணி தெரிவித்தது: காளாண் என்பது பூஞ்சான வகையைச் சார்ந்தது. உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும் நச்சுத் மேலும் படிக்க..
மாவில் பறவைகண் நோயை கட்டுபடுத்துவது எப்படி?
உங்கள் மாமரத்தில் மாம்பிஞ்சு, காய்களில் கருப்பு நிற புள்ளிகள் ஏற்படுகின்றனவா? அப்படிப்பட்ட பிஞ்சுகள் பெருமளவில் உதிர்கின்றனவா? மாம்பழங்களில் கருப்புநிற வட்ட வடிவில் அழுகல் காணப்படுகின்றனவா? அப்படியானால் ஆந்த்ரக்னோஸ் எனப்படும் பூசண நோய் ஏற்பட்டிருக்கலாம். இந்நோய்க்கு “பறவைக்கண் நோய்’ என மற்றொரு பெயரும் உண்டு. இந்நோய் பிஞ்சு மற்றும் காய் பருவங்களில் தோன்றி, முதிர்ந்த மாங்காய்கள் பழுக்கும்பொழுது பெரிய ஒழுங்கற்ற கரும்புள்ளிகளாக மாறும். மேல் தோல்பகுதி கருமை நிறமாகிவிடும். பழத்தின் சதைப்பகுதி அழுகிவிடும். நோய் பரவும் விதம்: பூக்கும் மேலும் படிக்க..
வாழை தாரில் பழம் அழுகல் நோய் தடுப்பது எப்படி?
வாழை தாரில் பழுக்க வைக்கும் பொது, பழம் அழுகல் நோய் தாக்க கூடும். இதை கட்டுபடுத்த ஒரு கைப்பிடி துளசி இலையை பிழிந்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வாழைதாரில் காம்புகளில் நனைத்து வைத்தால், கண்டிப்பாக இந்த நோய் கட்டுப்படும். நன்றி: பசுமை விகடன், 10/5/11
கோவையில் இயற்கை விவசாயம் பயிற்சி
கோவையில் இயற்கை விவசாயம், உணவு மற்றும் நலவாழ்வு பற்றிய பயிலரங்கம். மே மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் நடை பெறுகிறது. இதில், இயற்கை விவசாயம், உணவு, மாற்று மருத்துவம், பற்றி வல்லுனர்கள் செயல் முறை விளக்கம் அளிக்கிறார்கள். நடக்கும் இடம்: AKA திருமண மண்டபம், சரஸ்வதி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே, சிந்தாமணி தோப்பு, சிந்தாமணி புத்தூர், கோவை பயிற்சி கட்டணம்: ரூ 300 மட்டும் (உணவு மற்றும் கை ஏடு உட்பட) தலைமை பேச்சாளர்: மேலும் படிக்க..
மாம்பழம் பழுக்க ரசாயன கல் பயன்பாடு தவிர்ப்பது எப்படி
மாம்பழம் விற்பனை துவங்கிய நிலையில் பழங்களை பழுக்க வியாபாரிகள் ரசாயனகற்களை பயன்படுத்துவதை சுகாதார துறையினர் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பல இடங்களில் வீசிய சூறாவளி காற்றால் மாங்காய்கள் உதிர்ந்து வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் சூறாவளி காற்று அதிகரிக்கும் என்பதால் மாங்காய்களை முன்கூட்டியே அறுவடை செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டி மேலும் படிக்க..
வாழையில் ஊடுபயிராக கொத்தவரை சாகுபடி
ஈங்கூர் பகுதியில் வாழை பயிருடன் ஊடு பயிராக கொத்தவரங்காய் சாகுபடி நடக்கிறது.ஈங்கூர் பகுதியில் கிணற்றுப் பாசனத்தில், அதிகளவு வாழை, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி நடக்கிறது. பதது மாதப் பயிரான வாழையில் ஊடு பயிராக விவசாயிகள் கொத்தவரங்காய், சிறிய வெங்காயம், கத்தரி போன்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர். 90 நாள் பயிரான கொத்தவரங்காயை ஊடுபயிராக அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். விதை நடவு செய்த 30வது நாளிலிருந்து காய்ப்பு பருவத்துக்கு வரும் 70 முதல் 90 நாள் மேலும் படிக்க..
நெற்பயிரில் குருத்துப்பூச்சி மேலாண்மை
சேத அறிகுறிகள்: பெரும்பாலான இடங்களில் இப்பூச்சியின் சேதம் நாற்றங்காலிலேயே துவங்குகின்றது. இப்பூச்சி நடவு செய்த இளம் பயிரிலும், கதிர் பிடிக்கும் பருவத்திலும் சேதங்களை உண்டாக்குகின்றது. அந்துப்பூச்சிகள் இலைகளின் மேல் பகுதியில் முட்டைகளைக் குவியலாக இடும். முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இளம்பயிரின் தண்டில் துளையிட்டு உட்சென்று அதன் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு உட்பகுதியைக் கடித்து உண்பதால் இளம்பயிரின் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும். சாதாரணமாக ஒரு தூருக்கு ஒரு புழு மட்டும் இருக்கும். இவ்வாறு தாக்கப்பட்ட பயிரின் மேலும் படிக்க..
இயற்கை முறையில் தக்காளியை தாக்கும் பூச்சி கட்டுப்பாடு
சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம். 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது. 25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும். பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை மேலும் படிக்க..
எலி கட்டுப்பாடு டிப்ஸ்!
எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது. நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது. தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது. நெல் வயலில் எலியைக் கட்டுப்படுத்த ‘சணப்பு’ பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்கு அங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பு வாடையினால் எலிகள் ஓடி விடும். பனை ஓலைகளை அருகில் ஆந்தை உட்கார குச்சியில் கட்டி வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஓசையினால் மேலும் படிக்க..
நெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
நெல் சாகுபடியில் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் பயன் படுத்தி வரும் பாரம்பரிய தொழிற் நுட்பங்களை பார்ப்போமா? நெல் பயிரில் இலை மடக்குப்புழு மற்றும் தண்டு துளைப்பான் கட்டுப்படுத்த 1 லிட்டர் மண்ணெண்ணெயை, சோப்பு, நீர் கலந்து தெளிக்கலாம். நெல் தோகை அழுகல், உளுந்து சாம்பல் நோய், பச்சை இலைத் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த 25 கிலோ வேப்பங்கொட்டை பருப்பை இடித்து 500 லிட்டர் தண்ணீரில் இட்டு 8 மணி நேரம் கழித்து எடுத்து தெளிக்கலாம். மேலும் படிக்க..
மா அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம்
மா முன்பருவ அறுவடை துவங்கியுள்ளதால் விவசாயிகள் போதிய தொழில்நுட்ப முறைகளை கடைபிடிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. அறுவடையின் போது மாங்காயின் காம்பு தளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும். மா தோலின் நிறம் கரும் பச்சையில் இருந்து லேசாக பச்சையாக மாறியும், சதைப்பற்று லேசாக மஞ்சள் நிறமாக மாறியிருக்கும் நிலையில் அறுடை பணிகள் துவக்கப்பட வேண்டும். அறுவடை செய்த மாவை தரம் பிரித்து பிளாஸ்டிக் கிரேட்களில் அடுக்கி சந்தைக்கு எடுத்து செல்ல வேண்டும். விற்பனைக்கு ஏற்ப பழம் பழுக்க வைக்கும் மேலும் படிக்க..
கோடையில் தென்னை பாதுகாப்பு
சுட்டு எரிக்கும் கோடையில் தென்னை மரங்கள் பாதிக்க படலாம். இதை எப்படி தவிர்ப்பது? ரோட்டவேட்டர் கருவியை பயன்படுத்தி, புல், பூண்டுகளை உழுதுவிடவும், ஆனால் ஆழமாக உழக்கூடாது. தென்னையின் வேர்கள் அறுபடக்கூடாது. தென்னை மர வேர்கள் தண்ணீர், உரம் தேடி 300 அடி நீளம் வரை செல்வதாக தமிழக வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அதனால் ஒரு விரல் அளவுள்ள வேர்கள் அறுபடாமல் மேலாக கீறி விடவும். ஆழம் உழக்கூடிய சட்டிகலப்பை, கல்டிவேட்டர்களை தென்னந்தோப்புகளில் பயன்படுத்தினால் வேர் அடுக்கு குலைந்துவிடும். மேலும் படிக்க..
குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு
தைப்பட்டத்துக்கான காய்கறி நாற்றுக்களை வழக்கமான முறையில் உற்பத்தி செய்யும்போது பருவநிலை காரணமாக சேதாரமடைய வாய்ப்புள்ளது. இதற்கு மாற்றாக விவசாயிகள் பாதுகாக்கப்பட்ட நிழல்வலை கூடாரங்களிலோ அல்லது சூரிய வெளிச்சத்துடன் கூடிய சிறிய நிழல் கொட்டகைகள் அமைத்தோ அவைகளில் குழித்தட்டு முறையில் நாற்றுக்களை பராமரித்து பருவநிலை காரணமாக நாற்றுக்களுக்கு ஏற்படும் சேதாரத்தை தவிர்த்து வாளிப்பான காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்து பயன் பெறலாம். நாற்றங்கால்களை குழித்தட்டு முறையில் பராமரிப்பது எப்படி குழித்தட்டுகளை தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு உரம், மணல் மேலும் படிக்க..
மஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்
இது ஒரு ராமராஜ் என்ற ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு. அவர் தன் பண்ணையில் உள்ள பவர் டில்லருடன் இணைக்கும் வகையில் மஞ்சள் அறுவடை இயந்திரத்தை தயார் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழககத்துடன் பண்ணை இயந்திரவியல் துறையில் ஆலோசனை பெற்றுள்ளார். இயந்திரத்தின் மூலம் ஒரு நாளில் 2 ஏக்கர் அறுவடை செய்ய முடியும் என்கிறார் விவசாயி. இவ்வியந்திரத்தின் அடக்கவிலை ரூ.5000/-. இதனை பயன்படுத்துவதன் மூலம் மஞ்சள் அறுவடைச் செலவு ரூ.7500 ஏக்கருக்கு என்ற அளவில் குறைகிறது என்று மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஏப்ரல் 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: 8,9,11,15,16,18,19,20-23, 26, 27. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408 மற்றும் 09442531699.
சிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை
கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேவியர் ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பு, ஒரு ஏக்கரில் மரவள்ளி சாகுபடி, 25 சென்டில் வாழை இவைகளோடு 4 சென்டில் சிவப்புக் கீரையையும் சாகுபடி செய்து வருகிறார். 4 சென்டில் மாதம் ரூ.4000 வரை வருமானம் கிடைப்பதாகக் கூறும் இவர் கடைபிடிக்கும் சாகுபடி நுட்பங்கள்: சிவப்புக்கீரைக்கு வண்டல்மண் ஏற்றது. கீரைகளுக்கு பட்டம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சாகுபடி செய்வார்கள். ஆனால் இவர் நாற்று பாவி சரியான இடைவெளியில் நடவுசெய்து நல்ல மேலும் படிக்க..
சப்போட்டா சாகுபடி செய்வது எப்படி?
மண்: சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது. ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது. பருவம்: ஜூலை – ஆகஸ்ட். ரகங்கள்: கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ-1, கோ-2, பெரியகுளம் 1, 2, 3. பயிர் பெருக்கம்: ஒட்டுக்கட்டிய செடிகள் பின்செய் நேர்த்தி: ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். மேலும் படிக்க..
ரோட்டாவேட்டர் எனும் சுழற்கலப்பை
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு, பவர்டில்லர் மற்றும் சாதாரண ஏர் கலப்பைகளைப் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. புதிதாக “ரோட்டாவேட்டர்’ என அழைக்கப்படும் சுழற்கலப்பையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். பெரும்பாலான விவசாயிகள் ஆண்டிற்கு மூன்று போகம் பயிரிடுகின்றனர். தண்ணீர் இல்லாத விவசாயிகள் பயறு விதைக்கின்றனர். இந்தாண்டு பருவ மழை காரணமாக ஏரிகள் நிரம்பியுள்ளன. விவசாயிகள் நவரைப் பட்டத்தில் நெல் பயிரிட உழவுப் பணிகளை துவக்கியுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் புதிய மேலும் படிக்க..
பஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள்
பஞ்சகாவ்யா மூலம் பயிரின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது என்று அறிவியல் பூர்வமாக நிருபித்து உள்ளார்கள் மதுரையில் உள்ள தியாகராஜர் கல்லூரியில் உள்ள உயிர்தொழில் நுட்பவியல் துறையை சேர்ந்த சந்தான மகாலிங்கம், சுரேஷ் குமார், ராஜன் பாபு என்ற மூன்று மாணவர்கள். இடுகை பொருட்கள் மூலமே விவசாயிகள் தற்சார்பை அடைய முடியும் என்கிறார்கள் “பஞ்சகவ்யாவில் உள்ள பக்டீரியா பிரித்து எடுத்து வளர்ப்பு ஊடகத்தில் வளர்த்து நீரில் கலந்து தாவரங்களுக்கு கொடுத்து வளர்ச்சியை பார்த்தோம். இவ்வாறு பிரித்து எடுக்க பட்ட மேலும் படிக்க..
வறட்சியை தாங்கும் விதைகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் உள்ள மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வறட்சியை தாங்கும் தானிய பயிர்கள் கண்டு பிடுக்க பட்டுள்ளன. இவை: நெல் (பையூர்1), சோளம்(பையூர்1, பையூர்2), கேழ்வரகு(பையூர்1,பையூர்2), சாமை(பையூர்1), தட்டைபயிறு(பையூர்1), பாசிபயிறு(பையூர்1), கொள்ளு(பையூர்1, பையூர்2), எள்(பையூர்1), பருத்தி(பையூர்1), தக்காளி(பையூர்1), மா (பையூர்1) ஆகியன. இவற்றை தவிர தானியங்களை பிரித்தெடுக்கும் கருவிகள், இரும்பு கலவைகள், பதர் நீக்கும் கருவிகளும் இங்கே உருவாக்க பட்டுள்ளன. மலிவான விலையில் மண்புழு உரம், தயாரிக்கும் முறைகளும் சொல்லி கொடுக்க படுகின்றன. இவ்வாறு மேலும் படிக்க..
தரிசுநிலத்தில் புளி சாகுபடி
ரகங்கள்: பிகேஎம்1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர் மண் மற்றும் தட்பவெப்பநிலை: மணல் கலந்த மண் இதன் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும். சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ. வரை போதுமானது. மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும். பருவம்: ஜூன் – டிசம்பர் இனப்பெருக்கம்: விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல நடவு: 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் மேலும் படிக்க..
பருத்தியில் மாவு பூச்சி கட்டுப்பாடு
மாவு பூச்சியை பற்றியும் அதனை கட்டு படுத்தும் வழிமுறைகளை பற்றியும் ஏற்கனவே படித்துள்ளோம். இதோ, பருத்தியில் மாவு பூச்சி பற்றி ஒரு கட்டுரை மாவுபூச்சியின் அறிகுறிகள் உங்கள் பருத்தியில் எறும்பு நடமாட்டம் உள்ளதா? நுனிக்கிளைகள் கொத்தாக உள்ளனவா? வெயில் நேரத்தில் இலைகள் பளபளப்பாக மின்னுகின்றனவா? பஞ்சுபோல் அடை, அடையாக நுனிக்குருத்து இலைகள், காய்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனவா? அப்படியென்றால் உங்கள் பருத்திப்பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் உள்ளது என தெரிந்துகொள்ளலாம். மாவுப்பூச்சி தாக்குதல் பொதுவாக மாவுப்பூச்சி தாக்குதல் துவக்கத்தில் இங்கும் மேலும் படிக்க..
வாழைக்கு tonic: வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல
வாழையில் சமச்சீராக உரமிடுவது அதிகமான விளைச்சலுக்கும், தரத்திற்கும், நோய் எதிர்ப்பு திறனுக்கும் மிக முக்கியமானதாகும். நிலங்களில் குறைவான அளவில் அங்ககச் சத்துக்கள் இருப்பது, அதிக அளவிற்கு பேரூட்ட ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது, உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிடுவது போன்ற காரணங்களினால் தற்போது நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடுகள் விவசாயத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மண்வளம் பாதிக்கப்படுவது, போதிய வேர் வளர்ச்சியின்மை, பாஸ்பரஸ் உரங்களை அதிகமாக பயன்படுத்துவது போன்ற காரணங் களினால் நுண்ணூட்டச் சத்தை மண்ணில் இட்டு நிவர்த்தி செய்வது மேலும் படிக்க..
சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி?
பசுமை தமிழகத்தில் ஏற்கனவே, சிறுநீர இட்டு வளர்க்க பட்ட வெள்ளரி காயை பற்றி படித்துள்ளோம். முசிறியில் சிறுநீரில் இருந்து உரம் தயாரிக்கும் முயற்சி பற்றியும் படித்தோம். இப்போது, அதை பற்றி மேலும் சில செய்திகள். சிறுநீரில் உள்ள போஸ்போரஸ் (Phosphorus) எளிதாக எடுத்து Struvite என்ற உரத்தை தயாரிக்கும் முறை பற்றி சுவிட்சர்லாந்தில் ஆராய்ச்சி செய்து இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். அதன் தமிழாக்கம் இதோ: Struvite என்றால் என்ன? சிறுநீரில் உள்ள போஸ்போரஸ் உடன் மக்னீ மேலும் படிக்க..
அக்னி அஸ்த்ரா செய்வது எப்படி?
1. ஒரு பானையை எடுத்து கொள்ளவும் 2. அதில் 10 லிட்டர் கோமூதிரத்தை விடவும் 3. ஒரு கிலோ புகை இலையை நெசுக்கி போடவும் 4. அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ பூண்டை அரைத்து சேர்க்கவும் 5. இதனுடன், ஐந்து கிலோ வேப்பனிலை அரைத்து சேர்க்கவும். 6. இந்த கரைசலை நன்றாக கொதிக்க வைக்கவும் 7. ஒரு நாள் முழுவதும் இந்த கரைசலை விட்டு வைக்கவும் 8. அடுத்த நாள், இந்த கரைசலை மேலும் படிக்க..
இயற்கை வழி வெள்ளரி விவசாயம்
‘சாம்பார் வெள்ளரி’ என்றாலே ரசாயன உரம், பூச்சிக்கொல் மருந்துகள் இல்லாமல் சாகுபடி செய்ய முடியாது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. சாம்பார் வெள்ளரிதான் என்றில்லை, மற்ற ரக வெள்ளரி என்றாலும் கூட ரசாயன முறைகளில் சாகுபடி செய்யப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது. இதற்கு நடுவே.. ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, பூண்டுக் கரைசல் என்று இயற்கை இடுபொருட்களைத் தெளித்து, வெள்ளரி சாகுபடி செய்து கொண்டிருக்கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், கிராமத்திமேடு விவசாயி ஆறுமுகம். கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை விவசாய மேலும் படிக்க..
நிலகடலையில் ஊடுபயிர்
நிலகடலையில் ஊடுபயிர் இட்டால், மகசூல் அதிகம் ஆவதுடன், பூச்சி தாக்குதலையும் கட்டு படுத்தலாம் நிலகடலையின் ஊடு பயிராக துவரை, ஆமணக்கு, காராமணி, கம்பு போன்றவற்றை பயிர் இடலாம். துவரை மற்றும் காராமணியை 6:1 என்ற விகிதத்தில் இடலாம். இது தழை சத்தை நிலை படுத்தும். ஆமணக்கு பயிரை வரப்பு பயிராகவோ கலந்தோ பயிர் இடலாம். பூச்சிகள் முதலில் இலைகள் அகலமாக இருக்கும் துவரை மற்றும் காராமணி பயிரை தான் முதலில் தாக்கும். இவற்றை பயிர் பாதுகாப்பு செய்து மேலும் படிக்க..
மஞ்சள் அறுவடையில் தொழில்நுட்பம்
மஞ்சள் அறுவடையின் போது, தொழில் நுட்பங்களை கடைபிடித்து விவசாயிகள் பயன்பெறலாம். தற்போது, மஞ்சள் பயிர் குறுகிய கால, மத்திய மற்றும் அதிக வயதுடைய ரகங்கள் அறுவடைக்கு வருகின்றன. இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது மற்றும் இலைகள் காய்ந்து விடுவது போன்ற அறிகுறிகள் மூலம் மஞ்சள் முதிர்ச்சியை அறியலாம். மஞ்சள் அறுவடை ஜனவரியில் துவங்கி மார்ச் வரை நீடிக்கிறது.அறுவடை செய்யும் பத்து நாட்களுக்கு முன், தரையின் மேல்மட்டத்தில் தண்டு பகுதியை அறுத்து விடவேண்டும். அவ்வாறு செய்தால், விரைவில் ஈரப்பதம் மேலும் படிக்க..
SMS மூலம் பாசனம்!
SMS மூலம் பயிர்களுக்கு மோட்டார் வேலை செய்ய உதவும் என்ற கருவியை நாம் முன்பே படித்துள்ளோம். இதோ, அதை போலவே இன்னொரு கருவி: இதன் பெயர் கிசான் ராஜா. இந்த நிறுவனம் பெங்களூரில் உள்ளது. Cisco போன்ற பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்த பொறி இயல் நிபுணர்கள் இந்த கருவியை டிசைன் செய்து உள்ளார்கள். இதன் மூலம், ஒரு விவசாயி போன் மூலம், பம்ப் இருக்கும் இடத்தில மின்சாரம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முடியும். ஒரு மேலும் படிக்க..
வேப்பங்கொட்டை கரைசல் (5% கரைசல்) தயாரித்தல் எப்படி?
தேவையான பொருட்கள் நூறு லிட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர் சோப்பு – 200 கிராம் மெல்லிய மஸ்லின் வகை துணி – வடிகட்டுவதற்காக செய்முறை தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் (5 கிலோ). நன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை கவனமாக அரைக்க வெண்டும். இரவு முழுவதும் அரைத்த கொட்டைகளை பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க மேலும் படிக்க..
"ஆரோக்கிய மகசூலுக்கு இயற்கை விவசாயம்'
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில், பி.ஏ.பி., பாசன விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வேளாண்மை குறித்த பயிற்சி முகாம், வெள்ளகோவிலில் நேற்று நடந்தது. பசுமை அறக்கட்டளை தலைவர் யோகநாதன் பேசியதாவது: இயற்கை விவசாயத்தை விடுத்து, ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண் வளம் குன்றி வருகிறது. மண் மலட்டு தன்மை ஏற்பட்டு, எதிர்பார்த்த அளவு மகசூல் பெற முடிவதில்லை. இயற்கை விவசாயம் குறித்து தெரிந்துகொண்டு, விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்துக்கு மாறுவது அவசியம். மண்ணை வளப்படுத்த, பல மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (மார்ச் 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: 13,14,15,28 மற்றும் 29. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408
நெல்லில் செம்பேன் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு
தற்போது பயிரிடப்பட்டுவரும் பல்வேறு ரக நெற்பயிர்களில் செம்பேன் தாக்குதல் அதிகம் தென்பட்டு வருகிறது. இச்செம்பேன்கள் கண்களுக்கு தெளிவாகப் புலப்படாது. ஒரு மி.மீ. அளவிற்கும் சிறியவை. சாதாரண கை உருப்பெருக்கிகள் கொண்டுதான் நன்றாக பார்க்க முடியும். எட்டுக்கால்களைக் கொண்ட சிலந்திவகையைச் சேர்ந்த இந்த நுண்ணிய செம்பேன்கள் நெற்பயிரில் இலைகளின் அடிப்புறத்தில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் மேற்பரப்பில் பழுப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும் மெல்லிய வரிகளும் ஏற்பட்டு நாளடைவில் இலைகள் வெளிறி கருகிவிடும். அதிக எண்ணிக்கையில் மேலும் படிக்க..
மாமரத்தில் பூவை பராமரித்து அதிக மகசூல் பெறுவது எப்படி?
இப்போது மா மரம் பூக்கத் தொடங்கி உள்ளது. சித்திரையில் பழம் கிடைக்கும். இப்போது மாம்பூவைச் சரியாகப் பராமரித்தால் மகசூல் அதிகரிக்கும். பூ பூக்கும் நேரத்தில் பூ பிணைக்கும் புழு தாக்குதல் காணப்படும். இந்தப் புழு பூ அருகே வலை போன்று உருவாக்கி பூவைச் சாப்பிடும். இதனால் மகரந்தச் சேர்க்கை நடக்காது. மகசூல் பாதிக்கும். பூ பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்த கியூரா கிரான் பூச்சி மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மி.லி. என்ற அளவில் கலந்து பூ மேலும் படிக்க..
நெற்பயிரில் குருத்துபூச்சி தாக்குதல் கட்டுபடுத்துவது எப்படி
சேரன்மகாதேவி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை தாக்கியுள்ள குருத்துபூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் உதவி இயககுநர் ஜெயசெல்வின் இன்பராஜ் விளக்கமளித்துள்ளார். குருத்துபூச்சி இளம்புழுக்கள் கடுக்குருத்தை தாக்கி சேதப்படுத்துவதால் நடுக்குருத்து காய்ந்து விடுகிறது. பயிரில் கதிர்தோன்றும் நிலையில் கருத்து பூச்சி தாக்குதலால் வெண்கதிர் தோன்றுகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்படுகிறது. இப்பூச்சிதாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒரு லிட்டர் தண்ணீரில் மானோகுரோட்டோபாஸ் 2.5 மிலி., அல்லது புரபனேபாஸ் 2 மிலி., அல்லது குளோர்பைரிடாஸ் 2.5 மில்லியுடன் ஒட்டு திரவத்தை கலந்து தெளித்து குருத்துபூச்சியை மேலும் படிக்க..
மா தத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிகள்
நோய்க்கான அறிகுறிகள் மா தற்போது பூத்து உள்ளதா? மா இலைகள் பகல் வெயிலில் பளபளவென்று எண்ணெய் தேய்த்துவிட்டது போல் மினுமினுப்பாக உள்ளதா? மினுமினுக்கும் இலைகளை தொட்டுப் பாருங்கள், தேன் தெளிக்கப்பட்டது போன்று பிசுபிசுப்பாக உள்ளதா? அப்படி இலைகள் மினுமினுப்புடன், பிசுபிசுப்பாகவும் காணப்பட்டால் இந்த இலைகளுக்கு மேலுள்ள பூங்கொத்துகளை மா தத்துப்பூச்சி தாக்கியுள்ளது. பூங்கொத்துக்களை உற்று நோக்கினால் சிறிய பழுப்பு நிறமுள்ள, பக்கவாட்டில் நகரக்கூடிய தத்துப்பூச்சிகளை காணலாம். மா தத்துப்பூச்சிகள் முட்டைகளை இளங்குருத்துக்கள், பூக்கொத்துகள், இலைகளில் துளைத்து வைக்கின்றன. மேலும் படிக்க..
அறுவடை பணி ஆட்கள் பற்றாக்குறை: நாமே உருவாகிய ஒரு பிரச்னை
ஏற்கனவே இருக்கும் இடுபொருள் விலை ஏற்றம், புதிய பூச்சிகள், நம்ப முடியாத சந்தை நிலவரம் போன்ற பல பிரச்னைகள் இருப்பது போதாதென்று, இப்போது விவசாய வேலை ஆட்கள் கிடைப்பது ஒரு பிரச்னை ஆகி விட்டது. இதோ, தினமலரில் வந்துள்ள ஒரு செய்தி, இதற்கான காரணங்களை தருகிறது. எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கும் கலாச்சாரத்தை ஏற்படுத்தி, சமூகத்தை கெடுத்து விடுவது என்பதில் கங்கணம் கட்டி கொண்டு உள்ளனர் நம் அரசியல் வாதிகள். நெல் அறுவடை மற்றும் கரும்பு வெட்ட தொழிலாளர் மேலும் படிக்க..
அதிக லாபம் தரும் கறிவேப்பிலை!
அதிக மருத்துவக் குணங்கள் கொண்ட கறிவேப்பிலை அதிக லாபமும் தரும்! கறிவேப்பிலை சாகுபடியில் ஒரே ஆண்டில் ஆறு முறை அறுவடை செய்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும். தென்னிந்திய சமையலில் அதிகளவில் இடம் பெறுவது கறிவேப்பிலை. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கொத்து 50 காசுக்கு விற்கப்பட்டு வந்த கறிவேப்பிலை தற்போது 2 ரூபாய் வரை விற்கப்படும் அளவிற்கு மவுசு கூடியுள்ளது. கறிவேப்பிலை வகைகள் செங்காம்பு, தார்வாட் 1, தார்வாட் 2 ஆகிய ரக மேலும் படிக்க..
கேழ்வரகு சாகுபடி செய்முறை
கேழ்வரகை எந்த பருவத்திலும் பயிரிடலாம். எல்லா வகை நிலங்களிலும் பயிரிடலாம். மண்ணின் கார, அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை. உழவு, நடவு: நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். இப்படி உழுவதால் மண் அரிப்பு தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், களைகளையும் ஓரளவு கட்டுப்படுத்தலாம் வறட்சியை தாங்கி வளர விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விண்ணிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து பயிர்களுக்கு அளிக்கலாம். நாற்றுவிட்டு நடவு மேலும் படிக்க..
ஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு
நீர் நிலைகளில் வேகமாக வளர்ந்து நீரை கெடுக்கும் ஆகாயத்தாமரை எப்படி மண்புழு கம்போஸ்ட் ஆக பயன் படுத்தலாம் என்று பார்த்தோம். இப்போது, ஆகாயத்தாமரை இயற்கை எரிவாயு ஆக மாற்றுவதை பற்றிய ஒரு செய்தி ஆகாய தாமரைக்கு நீரை ஆவியாக்கும் தன்மை உண்டு. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலம் தொடர்ந்து வேகமாக பரவுகிறது. மிக கனமாகவும், பசுமையான இலைகளை கொண்டிருக்கும் இந்த தாவரம் ஊதா நிறத்திலான பூக்களை கொண்டது. இதன் தண்டிலிருந்து புறப்படும் மேலும் படிக்க..
பருத்தியில் பூச்சி தாக்குதலை குறைக்கும் பஞ்சகய்வா
தர்மபுரி மாவட்டத்தில் பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பஞ்சகவ்யா பயன்படுத்த வேண்டும் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. பருத்தியில் தொழில் நுட்பங்கள், பூச்சிமருந்து மற்றும் ரசாயன உரங்களை குறைத்து, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யம் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் தொழுவத்திலும், பண்ணையிலும் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பயிர் ஊக்கியான பஞ்சகவ்யம் தயார் செய்யலாம். தயிர் ஊறல் ஊட்டமேற்றிய தொழுஉரத்தை பயிர்களுக்கு உபயோகிப்பதால், பூச்சிதாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். பஞ்கவ்யம் எல்லா பயிர்களுக்கும் பயிர் வளர்ச்சி மேலும் படிக்க..
பருத்தி பிளஸ்
பருத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் பயன்கள் பூ மற்றும் சப்பைகள் உதிர்வது குறையும் காய்கள் முழுமையாக வெடித்து, சீரான அறுவடைக்கு வழி வகுக்கிறது விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கும் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும் பயன்படுத்தும் முறை அளவு : ஏக்கருக்கு 2.5 கிலோ தெளிப்பு திரவம் : 200 லிட்டர் தெளிக்கும் பருவம் : பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம் தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும் மேலும் படிக்க..
என்டோசுல்பான் கர்நாடகத்தில் தடை
ரசாயன பூச்சி கொல்லியான என்டோசுல்பான் பற்றி ஏற்கனவே படித்துள்ளோம். இதனால் வரும் கேடுகள் பல. அண்டை மாநிலமான கேரளாவில், இந்த பூச்சி மருந்தால் நிறைய பேர் கை கால் ஊனம் அடைந்து உள்ளனர். எத்தனையோ தடவை மாநில அரசு கேட்டும், மத்ய அரசு என்டோசுல்பானை தடை செய்ய பிடிவாதம் செய்கிறது. காரணம், இவற்றை தயார் செய்யும் சில கம்பனிகள். இப்போது, இன்னொரு அண்டை மாநிலமான கர்நாடகாவும் இதை தடை செய்துள்ளது. தமிழ் நாடு அரசு என்ன செய்ய மேலும் படிக்க..
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு
அறிகுறிகள் நடுக்குருத்து வெட்டுப்பட்டிருக்கும் அல்லது ஒன்றாக சேர்ந்திருக்கும். நன்றாக வளர்ந்த ஓலைகள் வைரம் போன்ற வடிவில் வெட்டுக்கள் காணப்படும். நடுக்குருத்தின் அடிப்பகுதியில் உள்ள துளைகளில் உண்ணப்பட்ட நார்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். புழு: தடித்து, தட்டையாக, ‘C’ வடிவத்தில் மங்கிய பழுப்பு நிறத்திலையுடன் 5 -30 செ.மீ ஆழத்தில் காணப்படும். கூட்டுப்புழு : மண்கூடுகளில் 0.3-1 மீ ஆழத்தில் காணப்படும். வண்டு : தடித்து, பழுப்பு கலந்த கருப்ப அல்லது கருப்ப நிற தலையுடன் ஆண் வண்டுகளில் நீளமான மேலும் படிக்க..
ஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றிய தமிழ் புத்தகங்கள்
ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்வது எப்படி? நாடு பசு மகத்துவம் நம் நிலம் ஜீரோ பட்ஜெட் விவசாயம் – போஷன் சாஸ்திரா ஜீரோ பட்ஜெட் விவசாயம் – சஹாஜி வன சாஸ்திரா ஜீரோ பட்ஜெட் விவசாயம் – நான்காம் பாகம் ஜீரோ பட்ஜெட் விவசாயம் – தோட்ட பயிர்களை பயிர்டுவது எப்படி இந்த நூல்களை பெற இந்த முகவரியை அணுகவும்: திரு அமோல் சுபாஷ் பலேகர், 19, ஜெயா காலனி, டெலிகாம் காலனி அருகில் சாய் நகர் மேலும் படிக்க..
மஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு
மஞ்சள் பயிரை 25 வகையான பூச்சிகள் தாக்கி சேதப்படுத்துகின்றன. இதில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு பற்றி பார்ப்போம். கிழங்கு செதில் பூச்சி: இது மஞ்சளைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மஞ்சள் பயிரை வயல்களிலும் சேமிப்பு கிடங்குகளிலும் தாக்குகிறது. பயிரின் கிழங்குகளின் மேல் கூட்டம் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சி செடிகள் வாடி காய்ந்துவிட ஏதுவாகிறது. சேமிப்பு கிழங்குகளைத் தாக்கும்போது கிழங்கின் எடை குறைந்து முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தும் முறைகள்: பூச்சி தாக்கிய இலைகள், தண்டுகள் முதலியவற்றை மேலும் படிக்க..
முசிறியில் சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பு !
மனித சிறுநீர் உரமாக பின்லாந்த் ஸ்வீடன் போன்ற நாடுகளில் பயன் படுத்துவது பற்றி நாம் முன்பே படித்து இருக்கிறோம். சிறுநீர் 100% sterlie திரவம் ஆகும். இதன் மூலம் எந்த வியாதியும் பரவ வாய்ப்புகள் குறைவு. இப்போது, நம் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில், சிறுநீர் சேர்த்து அதில் இருந்து உரம் தயாரிக்க டெல்லியில் உள்ள இந்தியா தொழில் நுட்ப பல்கலைகழகமும் (IIT Delhi), Society for Community Organisation and People’s Education (SCOPE) மேலும் படிக்க..
பயோ ஆக்சி – இயற்கை பயிர் ஊக்கி
பயோ ஆக்சி என்றால் என்ன? இவை இயற்கையாக ஆக்சிஜன் வெளியிடும் கனிமங்கள். தொடர்ச்சியாக 6 மாதத்திற்கு ஆக்சிஜனை வெளியிட்டு உயிரற்ற ரசாயன மண்ணையும் உயிருள்ள இயற்கை நல மண்ணாக மாற்றும் அற்புத படைப்பு. 100% இயற்கையானது. சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது. பயோ ஆக்சியின் பயன்கள்: விதை முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. நாற்றின் வளர்ச்சியை ஊக்குவித்து, தரமான நாற்றாக மாற்றுகிறது. மண்ணில் காற்றோட்டம், இரு மண்துகள்களுக்கு இடையில் உள்ள இடைவெளி, நீர்பிடிப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இதன்மூலம் வேரின் சுவாசத்தையும், வளர்ச்சியையும் மேலும் படிக்க..
மக்காச்சோளம் தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்
தற்போது தமிழ்நாட்டில் உணவு மற்றும் தீவனத் தேவைக்காக பற்றாக்குறை உள்ளது. மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயிகள் நல்ல பயன் பெற முடியும். நல்ல மகசூல் கிடைக்க உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். மக்காச்சோளம் 90 முதல் 110 நாள்களிலேயே விளைந்து பலன் கொடுக்கும். மக்காச்சோளத்தை தாக்கும் நோய்கள் குருத்து காயும் நோய்: மக்காச்சோளத்தை தாக்கும் பூச்சிகளை பொறுத்தவரை ஒரு வகையான ஈ இலைகளில் முட்டையிடும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் மேலும் படிக்க..
பயறு ஒன்டர் – பயறுகளுக்கான ஒரு பூஸ்டர்
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழத்தின் தேசிய வேளாண் அறிவியல் மையத்தில், “பயறு ஒன்டர்’ என்ற புதிய நுண்ணூட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயறு சாகுபடியில் வறட்சியை தாங்கி, 20 சதவீதம் அதிக மகசூலைத் தரக்கூடியது. இது ஒரு பயிறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர். பயன்கள் பூக்கள் உதிர்வது குறையும் பயிறு விளைச்சல் 20 சதம் வரை கூடும் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும் பயன்படுத்தும் முறை அளவு: ஏக்கருக்கு 2.25 கிலோ மேலும் படிக்க..
சூரியகாந்தி காக்கும் முறை
சூரியகாந்தியை இலை வண்டுகள், புழுக்கள், தத்துப்பூச்சிகள் மற்றும் பூக்கும் பருவத்தில் பச்சைப் புழுக்களில் இருந்தும் பாதுகாக்க வேண்டியுள்ளது. கூடுமானவரை சூரியகாந்தியில் மகரந்த சேர்க்கைக்கு துணைபுரியும் தேனீக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாற, பூச்சி மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. முடிந்தவரை இப்பூச்சிகளை கையால் பொறுக்கி அழிக்கலாம். இனக்கவர்ச்சி பொறியை ஏக்கருக்கு ஐந்து வீதம் அமைத்து, அந்துப்பூச்சியை கண்காணிக்கவும், அழிக்கவும் முடியும். அவசியம் ஏற்பட்டால் ஏக்கருக்கு 10 கிலோ, என்டோசல்பான் (4 சதவீதம்) அல்லது பாசலோன் (4 சதவீதம்) தூளையோ, மாற்றாக மேலும் படிக்க..
மூங்கில் சாகுபடி செய்வது எப்படி
நமது நாட்டின் பொருளாதாரத்தில் மூங்கில் பெரும் பங்கு வகிக்கிறது. மனிதனின் அன்றாட தேவைக்கு மூங்கில் இன்றியமையாத பொருளாக பயன்பட்டு வருகிறது. கைவினை பொருட்கள் செய்யவும், கிராமிய தொழிற்சாலைகள் மற்றும் காகித ஆலைகளுக்கும் மூங்கில் ஏற்ற மூலப்பொருளாகும். தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவுநீரில் மூங்கிலை பயிர் செய்யலாம். சாயப்பட்டறையிலிருந்து வெளியேறும் கழி வு நீரினால் நிலத்தடிநீரின் தன்மை மாற்றுவதுடன் மேல்மட்ட மண்ணும் எந்த பயிரும் செய்ய உகந்ததற்காக மாறிவிடுகிறது. அந்த இடத்தில் மூங்கில் சாகுபடி செய்தால் சாயக்கழிவு நீரை மூங்கில் மேலும் படிக்க..
மாம்பழ டிப்ஸ்!!
நல்ல விலை கிடைக்கும் என்று பழுக்கத மாங்காயை அறுவடை செய்யாதீங்க. அப்படி செய்தால் அந்த காய்களை தண்டு அழுகல் நோய் தாக்கும். இப்படி தாக்குதல் ஆளான காய்களை மற்ற காய்களோடு சேர்த்து வைத்தால், அவையும் பாதிக்க படும்!! மாமரங்களை வௌவால்கள் இரவில் ஒரு கை பார்த்து விடும்! கொஞ்சமாக சாப்பிட்டாலும், கடித்து அதிக சேதம் செய்து விடும்! இதை தடுக்க மாந்தோப்பில் இரண்டு அல்லது மூன்று சிங்கப்பூர் செர்ரி மரத்தை நடவு செய்யுங்க! வௌவால்கள்களுக்கு இந்த பழம் மேலும் படிக்க..
பெருங்காயம் சமையலுக்கு மட்டும் அல்ல!
ஈரோடு அருகே உள்ள கொடுமுடி கிராமத்தில் உள்ள விவசாயி செல்லமுத்து பெருங்காயத்தை பயன் படுத்தி நல்ல மகசூல் பெற்றுள்ளார். அவர், பெருங்காயம் பூச்சிகளை கட்டு படுத்துவதாகவும் கூறுகிறார். ஒரு ஏகர் நிலத்திற்கு, அவர் ஒரு கிலோ பெருங்காயத்தை ஒரு சாக்கு பையில் போட்டு நீர் பாசனம் இருக்கும் கால்வாயில் விட்டு வைத்தார். நீரில் பெருங்காயம் கரைந்து செடிகளுக்கு செல்கிறது. இந்த முறையால், பயிர்கள் நன்றாக வளர்வது மட்டும் இல்லாமல், பூச்சிகளின் தாக்குதலும் குறைகிறது என்கிறார் இவர். இந்த மேலும் படிக்க..
இயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்முறை
இயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்யும் முறை: எருக்கு, வேம்பு, நொச்சி இந்த மூன்று மரங்களின் இலைகள் ஒவோவொன்றும் மூன்று கிலோ எடுத்து கொள்ளவும் இவற்றை மூன்று லிட்டர் பசு மூத்திரத்தில் இரண்டு லிட்டர் நீர் சேர்த்து ஊற விடவும். அடுத்த நாள் காலை , இந்த கரைசலை எடுத்து வடி கட்டி அதனுடன் அறுபது லிட்டர் நீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கவும் சிறிது காதி சோப்பு கரைசலுடன் சேர்த்து தெளிதல் நல்ல பலன் மேலும் படிக்க..
நெற்பயிரில் இலையழுகல் நோய் தடுப்பு முறைகள்
பிசான பருவத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரியில் இலையழுகல் நோய் பரவலாக காணப்படுகிறது. அறிகுறிகள் நெல் பயிரின் இலைகளின் அடிப்பாகமாகிய இலையுறைகளில் நீர் கோர்த்த புள்ளிகள் தோன்றும். இவை பெரிய புள்ளிகளாக மாறி இலையழுகி சிம்புகள் அழுகிவிடும். இதனால் சிம்புகள் கதிர்விடாமல் முழுமையாக அழுகிடும். மேலும் பனி, மேகமூட்டம், குளிர்ந்த காற்று, குறைந்த வெப்பநிலையுடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவுவதால் இந்நோய் அதிகம் பரவி மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கட்டுபடுத்தும் முறைகள் இந்நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிட் மேலும் படிக்க..
நெற்பயிரில் புகையான் பூச்சி கட்டுப்படுத்தும் முறைகள்
பிசான பருவத்தில் ஆடுதுறை 39 நெல் சாகுபடி செய்துள்ள பயிர்களில் புகையான் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் தென்படுகிறது. காரணங்கள் விவசாயிகள் தொடர்ந்து செயற்கை பைரித்திராய்டு மருந்துகளை சைபர் மெத்ரின், டெல்டாமெத்ரின் மருந்துகளை அதிகம் தெளித்தாலும், பயிரை நெருங்கி நடுவதாலும், தழைச்சத்து யூரியா அதிகம் இடுவதாலும், அடியுரமாக பொட்டாஷ் இட்டதாலும் புகையான் மற்றும் பச்சை சத்து பூச்சிகள் அதிகம் பெருகி சேதம் ஏற்படுத்துகிறது. அறிகுறிகள் புகையான் பூச்சிகள் இளம்பழுப்பு நிறம் உடையவை.சாம்பல் நிறத்துடனும் காணப்படும். நெல் மேலும் படிக்க..
களர் மற்றும் உவர் நிலங்களை சரி செய்ய மானியம்
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் களர் மற்றும் உவர் நிலங்களை அரசின் மானிய உதவியுடன் சீரமைக்கலாம் என வேலூர் வேளாண்மை உதவி இயக்குநர் சிவகுமார் சிங் தெரிவித்தார். சாகுபடி செய்யும் நிலங்களில் களர் மற்றும் உவர் நிலப் பிரச்னைகள் காணப்படுகின்றன. அதனால் பயிர் எண்ணிக்கை பராமரிக்க முடியாமலும், இடப்படும் எரு, உரங்கள் மற்றும் நீர் வேரினால் உறிஞ்ச முடியாத தன்மையாலும் பயிர் வளர்ச்சி குன்றியும், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் பெரும் மகசூல் இழப்பும் ஏற்படுகிறது. களர் மற்றும் மேலும் படிக்க..
விவசாயிகளுக்கு எதிராக தி.மு.க., செயல்படுகிறது: நம்மாழ்வார் காட்டம்
“”பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது,” என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம் குறித்த கருத்தரங்கம் திருச்சியில் நேற்று நடந்தது. “நமது நெல்லைக் காப்போம்’ இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வரவேற்றார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் மன்றச்சட்டத்தை நிரந்தரமாக தமிழக அரசு கைவிடவேண்டும். வேளாண்மையும், வேளாண் குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வி அறிவையும் பன்னாட்டு மேலும் படிக்க..
நாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம்
பசுமை புரட்சி ஆரம்பித்த இருவது ஆண்டுகளுக்கு முன், நாட்டு விதைகளை பயன் படுத்தி வந்த நம் விவசாயிகள் மெதுவாக வீரிய விதைகளை பயன் படுத்த ஆரம்பித்தனர். ஏறி கொண்டே போன நம் நாட்டின் மக்கள் தொகை காரணமாக எல்லோருக்கும் உணவு கிடைக்க வீரிய விதைகள் பயன் படுத்த ஆரம்பித்தோம். இப்போது, ஆண்டுகளுக்கு பின், இந்த பசுமை புரட்சி மூலம் வந்த Side effects எல்லோருக்கும் உரைக்க ஆரம்பித்து உள்ளது. திருநெல்வேலியின் உள்ள இயற்கை விவசாயி M.G.S. ஷங்கர் மேலும் படிக்க..
இயற்கை வழியில் நிலக்கடலை பயிர் இடுவது எப்படி?
ரசாயன உரங்களையே பயன்படுத்தி நிலக்கடலை உற்பத்தி செய்வதைவிட விவசாயிகள் இயற்கை வழி வேளாண் மூலம் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறமுடியும் என திரூர் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் கோ.வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். தற்போது இயற்கை வேளாண் வழியில் நிலக்கடலை உற்பத்தியில் அதிக மகசூல் பெறமுடியும் என திரூர் நெல் அறிவியல் நிலையத்தில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாகுபடி முறை: இதன் பருவகாலங்கள்: ஏப்ரல், மே, ஜூன், ஆகஸ்ட், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் இதன் பருவ மேலும் படிக்க..
தென்னையில் கருந்தலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்
கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் தற்பொழுது தென்னையில் கருந்தலை புழுத் தாக்குதல் அதிகம் உள்ளதால் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர். ஒசூர் கோட்டத்தில் ஒல்லன்வாடி கிராமத்தில் உள்ள தென்னை மரங்களை ஆய்வு செய்த வேளாண்மை இணை இயக்குநர் ராஜன், வேளாண் விஞ்ஞானிகள் டாக்டர் சுந்தரராஜன், ரமேஷ்பாபு, வேளாண் உதவி இயக்குநர் நாகராஜன் ஆகியோர் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிசானப்பள்ளி, கொல்லப்பள்ளி, தொரப்பள்ளி, ஒன்னல்வாடி, காரப்பள்ளி, வேப்பன்ப்பள்ளி, ஊத்தங்கரை, வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், மேலும் படிக்க..
நெற்பயிரில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு
“நெற்பயிரை அதிகளவில் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துவதால், நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகிறது’ என, வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்தார். நெல் சாகுபடியில் சில வகைப் பூச்சிகள் நெற்பயிரை அதிகளவில் சேதப்படுத்துகிறது. அதை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவில் கையாளுகின்றனர். அதனால் நன்மை செய்யக்கூடிய பூச்சிகளும் அழிந்துவிடுகிறது. அதற்காக சுற்றுச்சூழல் மாசுபடாமல் இயற்கையோடு இணைந்த பயிர் பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும். ஐப்பசி மாதத்தில் நெற்பயிரை இலை மேலும் படிக்க..
மணிலாவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்
மணிலா ஒரு பணப்பயிர் மட்டுமின்றி முக்கியமான எண்ணெய் வித்துப்பயிர். மணிலாவின் விதையில் எண்ணெய் சத்து மட்டுமின்றி புரதச்சத்தும் அதிகமாக இருக்கிறது. மணிலா பயிரை பொதுவாக கார்த்திகை – மார்கழி பட்டங்களிலும் சித்திரை – வைகாசி பட்டங்களில் விவசாயிகள் பயிரிடுகின்றனர். கார்த்திகை – மார்கழி மாத மணிலா இறவை பட்டம். சித்திரை – வைகாசி மானாவாரி பட்டம். இது புன்செய் பயிர். மணிலா பயிரிட இப்போது ஏற்ற தருணம். டிஎம்வி 7, ஜெஎல் 24, கோ 2, விஆர்ஐ மேலும் படிக்க..
எள் பயிரிடும் முறைகள்
விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதால் எள் பயிரில் சராசரியாக 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது’ என்கிறார் நெமிலி வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) ஒய்.எம்.முபாரக். எள் பயிரிடும் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த தொழில்நுட்பங்கள்: பருவம் மற்றும் ரகங்கள்: மானாவாரி வைகாசி மற்றும் ஆடிப் பட்டங்களில் டி.எம்.வி. 3, வி.ஆர்.ஐ. 1 மற்றும் கோ 1, கார்த்திகை பட்டங்களில் டி.எம்.வி. 3, வி.ஆர்.ஐ. 1, கோ 1 மற்றும் எஸ்.வி.பி.ஆர். 1, மேலும் படிக்க..
நெல் அறுவடைக்கு பின் நேர்த்தி தொழிற் நுட்பங்கள்
விவசாயிகள் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில் நுட்பங்களை கடைபிடித்து கூடுதல் வருவாய் பெறலாம். நெல் ரகங்களின் வயதிற்கேற்றவாறு பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். நெல் கதிர் மணிகள் 80 சதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலே அறுவடையை மேற்கொள்ளலாம். இதனால் மணிகள் உதிர்வதை தவிர்க்கலாம். அறுவடையின் போது 19 முதல் 23 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். அறுவடை செய்த நெல்லை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதிக சூரிய வெப்பத்தில் மேலும் படிக்க..
நெல் பயிரில் புகையான் பூச்சி கட்டுப்பாடு
நெல் பயிரில் புகையான் பூச்சி தாக்குதலை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் கட்டுப்படுத்தலாம்’ என, வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன் தெரிவித்துள்ளார். பள்ள்ளிபாளையம் வட்டாரத்தில் நெல் பயிர் தற்போது பூக்கும் நிலை முதல் பால் பிடிப்பு நிலை வரை உள்ளது. தற்போது நீர் தேங்கியுள்ள வடிகால் வசதி குறைவான வயல்களில் புகையான் பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. இப்பூச்சிகள் சாம்பல் நிறமாக தத்துப் பூச்சிகளாக இருக்கும். இவை நெல் பயிரிடுடன் தூர் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக இருந்து சாற்றினை மேலும் படிக்க..
நெற் பயிரில் லட்சுமி நோய் தாக்குதலை கட்டுப்படுத்திட முறை
நெற் பயிரில் லட்சுமி நோயை கட்டுப்படுத்த கையாள வேண்டிய வழிமுறைகளை வேளாண் அறிவியல் நிலையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நெற்பயிரில் லட்சுமி நோய் தாக்குதல் காணப்படுகிறது. அறிகுறிகள்: இதன் அறிகுறிகள் நெற் கதிரில்தான் புலப்படக்கூடியவை. இந்நோய்க்கு நெல்புழுநோய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. நோயுற்ற நெல்மணிகள் உருவில் பெரிதாக இருக்கும். கதிரில் உள்ள நெல்மணிகள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் பழுத்து துகள்களாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட நெல்மணிகளை கையால் தொடும்போது மாவுபோல் பூசணத்தின் வித்துக்கள் காணப்படும். இந்நோய் மேலும் படிக்க..
கரும்புச சோகை இயற்கை உரம்
கரும்பு வயலில் அறுவடை செய்யப்படும் கரும்பின் எடையில் 10-20 சதவீதம் கரும்பு சோகை கிடைக்கும். தமிழகத்தில் ஒரு வருடத்தில் 2.4 மில்லியன் டன்கள் அளவில் கரும்பு சோகை கிடைக்கிறது. பொதுவாக 100 டன்கள் கரும்பு விளையும் நிலத்திலிருந்து குறைந்தது 10 டன்களாவது கரும்பு சோகை கிடைக்கும். இதை மக்க வைத்து இயற்கை உரம் செய்ய முடியும் செய்முறை: 10 டன் கரும்பு சோகையை மக்கவைக்க கீழ்க்கண்ட பொருட்கள் அவசியம். கரும்பு ஆலைக்கழிவு அழுக்கு (பிரஸ் மட்) – மேலும் படிக்க..
இயற்கை முறையில் தென்னை ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு
இயற்கை முறையில் விவசாயம் செய்யும் கொழுமம் கிராமத்தைச் சேர்ந்த பிறைசூடிப் பித்தன் தன்னுடைய தென்னந்தோப்பில் அனுபவ பூர்வமாக கண்டு பிடித்த முறைகளை கூறுகிறார்: உழவு போட்டு நாலு வருஷமாகிறது. விஷச்செடிகள் தவிர மற்ற செடிகளை அகற்றுவதில்லை. பாசன நீருடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கலந்து போகும்படி பம்ப்செட் குழாயில் டேங்க் இணைத்து ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் என மாறி மாறி பாசன நீரில் சென்றுகொண்டே இருக்கும் என்று கூறுகிறார் விவசாயி. தென்னை மரத்தைச் சுற்றிலும் சோற்றுக்கற்றாழை பயிர் மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜனவரி 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: 14,15,17,29,3o மற்றும் 31. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408
இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்வது எப்படி?
செயற்கை உரங்களை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்வதைக் காட்டிலும், இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் கோ.வி.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இதுபோல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும் நாற்றங்கால் முறை மேலும் படிக்க..
நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…
தமிழகத்தில் விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிந்து வருகின்றன. இதன் விளைவாக மகரந்த சேர்க்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் சிக்கலை சந்திக்கிறது என சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில் நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கும் விவசாய முறை குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: பெரும்பாலும் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது பூக்களில் மகரந்த சேர்க்கை வழியில்தான். இந்த மகரந்தசேர்க்கையில் ஒரு பூவிலிருந்து மேலும் படிக்க..
BT பருத்தியை வென்ற Bollworm பூச்சி
மரபணு மாற்றப்பட்ட BT பருத்தி மூலம் பருத்தியை தாக்கி வந்த பூசிகள் கட்டு படுத்த பட்டன. மகசூலும் நன்றாக உயர்ந்தது. பருத்தியின் உயிரணுவை (DNA) மாற்றி, அமைக்க பட்ட இந்த செடி Bollworm பூச்சிக்கு விஷம் ஆக ஆகிறது. இந்த தொழிர்நுட்படிற்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இப்போது ஒரு புது செய்தியாக எந்த Bollworm பூச்சியை எதிர்த்து செயல்பட்டதோ, அந்த Bollworm பூச்சிக்கு BT பருத்தி எதிர்ப்பு சக்தி வந்து விட்டது! அதாவது, மேலும் படிக்க..
தென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
எலி மரத்தில் ஏறுவதைத் தடுக்க, பெரிய பனை ஓலையை நடுப்பாகத்தில் இரண்டாகப் பிளந்து, ஒரு பாகத்தை, மேல்மரத்தின் குலைக்கு அடியில் மரத்தை சுற்றி கட்டிவிடவேண்டும். இன்னொரு பாகத்தை முதலில் கட்டிய பகுதிக்கு எதிராக கட்டிவிடலாம். தென்னையில் பூ உதிர்தலை கட்டுப்படுத்த உப்பை பூ பகுதியிலும் வேர்ப்பகுதியிலும் இட்டு அதிக நீர் பாய்ச்சவேண்டும். தென்னை நடவு குழியில் கொழிஞ்சியை இட்டு, ஆறு மாதம் மட்க வைத்தபின் நடவு செய்யவேண்டும். தென்னை நடவுச் செய்வதற்கு முன்பு, வேரையெல்லாம் வெட்டி செய்தால், மேலும் படிக்க..
என்டோசுல்பான் தடை செய்ய கோரிக்கை
விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்டோ சல்பான் பூச்சி மருந்து பற்றியும், கேரளா அரசு இந்த மருந்தை தடை செய்தது பற்றியும் நாம் முன்பே படித்தோம். இப்போது, தமிழகத்தின் விவசாயிகளும் இந்த மருந்தை தடை செய்ய கோரிக்கை விடுத்து உள்ளனர். பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்ட என்டோ சல்பான் பூச்சிகொல்லி மருந்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலர் கே.எம். மேலும் படிக்க..
நெற்பழம் நோய் தடுப்பு
கும்பகோணம் அருகே சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் கோவிந்தன் நெற்பழம் நோய் தடுப்பு குறித்து யோசனை தெரிவித்தார். நெற்பழம் நோய் கோ 43 ரக நெல்லில் அதிகமாக தாக்கும். இந்நோய் கதிர் வெளிவந்த நிலையில் நெல்மணிகளில் மேல் பால்பிடிக்கும் தருணத்தில் ஒருவித பழம் போன்ற பூசணம் காணப்படும். இதனால், மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும். ஒரு கிலோ விதைக்கு சூடோமோனஸ் பத்து கிராம் அல்லது கார்பன்டாசிம் இரண்டு கிராம் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் மேலும் படிக்க..
நெற்பயிரில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
நெல் விதைகளை 12 மணி சாண எரிவாயு கலன் கழிவுகளில் நேர்த்தி செய்தால், நாற்றுக்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு உண்டாக்கும். கதிர் விடும் சமயத்தில் நெல் வயலில் ‘சைகஸ் சிர்சினாலிஸ்’ செடிமண் பூக்களை ஏக்கர் 4 இடங்களில் வைத்தால், அதிலிருந்து வரும் வாடை, கதிர் நாவாய் பூச்சியை விரட்டும். 30 கிலோ புளி விதையை ஒரு ஏக்கருக்கு நடவு நட்ட ஒரு நாள் பின்பு இட்டால் பயிர் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கும். நீர்த்த கோமியத்தில் மேலும் படிக்க..
யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம்
: “”யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரத்தின் விதைகள், விவசாயக் கல்லூரியில் விற்கப்படுகிறது,” என, மதுரை விவசாயக் கல்லூரி முதல்வர், பயிர் இனப்பெருக்கத் துறைத் தலைவர் இப்ராஹிம் தெரிவித்தனர். சணப்பூ, தக்கைப்பூண்டு வகை பசுந்தாள் உரங்களை விட, புதிய கொழிஞ்சி ரகம் சிறப்பாக உள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மண் வகைக்கும் ஏற்றது. எக்டேருக்கு 15 – 20 கிலோ விதை தேவைப்படும். களை நிர்வாகம், உரம் தேவையில்லை. நேரடியாக விதைக்கலாம். பூச்சிகள் அதிகம் மேலும் படிக்க..
இயற்கை முறை கத்திரி சாகுபடி
இயற்கை முறை கத்திரி சாகுபடி பற்றி ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இதோ, புதுவையில் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் இயற்கை முறை கத்திரி சாகுபடி பற்றி வெளியுட்டுள்ள செய்தி. தட்பவெப்பநிலை மாற்றம்தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக கத்தரி இலையில் எபிலாக்னா வண்டுகள் அதிகமாக இலைகளைக் கடித்து உண்பதால் இலைகளில் பச்சையம் பாதிக்கப்பட்டு ஒளிச்சேர்க்கை நடைபெறுவது தடைபடுகிறது மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி கத்தரியில் தண்டு துளைப்பான் மற்றும் காய் துளைப்பான் அதிகமாகக் காணப்படுகிறது. மாவுப் மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் விழுப்புரத்தில் பயிலரங்கம்
இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் “ஜீரோ பட்ஜெட்‘” இயற்கை விவசாயம் குறித்த நான்கு பயிற்சி முகாம் நடக்கிறது. விழுப்புரம் ஜெயசக்தி திருமண மண்டபத்தில் வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கும் இம்முகாமில் சுபாஷ் பாலேக்கர் கலந்து கொண்டு 30 ஆண்டு கால இயற்கை வழி விவசாய அனுபவம் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கிறார். இதில் மேலும் படிக்க..
மா விளைச்சல் அதிகரிக்க வழிகள்
மா விளைச்சலை அதிகரிக்க மரங்களுக்கு காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். மரங்களில் உள்ள காய்ந்த கிளைகள், பழைய கிளைகள், உயிரற்ற பாகங்கள் ஆகியவற்றை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். வெட்டிய பாகத்தில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு தடவ வேண்டும். மழை காலம் துவங்கும் முன், கவாத்து செய்ய வேண்டும். புதுத் தளிர் வரும் எண்ணிக்கையை பொறுத்தே பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும். பருவமழை துவங்கியுடன் உரங்கள் வைக்க வேண்டும். டிசம்பர், ஜனவரி மேலும் படிக்க..
தென்னையில் கோகோ ஊடுபயிர்
கோகோ பயிரின் சிறப்பு சாக்லேட் மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளாக கோகோ பயன்படுத்தப்படுகிறது. இதன் தேவை இந்திய உற்பத்தியை விட அதிக அளவில் உள்ளதால் வெளி நாடுகளில் இருந்து தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது. கோகோ பயிர் தென்னை மற்றும் பாக்கு தோட்டங்களில் சிறந்த ஊடுபயிராகவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டித்தரும் பயிராகவும் உள்ளது. தமிழகத்தில் 7,500 ஹெக்டேரில் கோகோ சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுக்கு 250 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தென்னைக்கேற்ற சிறந்த ஊடுபயிர் மேலும் படிக்க..
காய்கறி செடிகளில் அசுவுணி பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி
காய்கறி பயிர்களை தாக்கும் பல வகை சாறு உறிஞ்சும் பூச்சிகளில் மிக முக்கியமானது அஸ்வினி.பலவகை அசுவுணிகள் காய்கறி பயிர்களை பெரிதும் பாதிக்கச் செய்து வருகிறது. அசுவிணி பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் இலைகள் கூட்டம் கூட்டமாக குருத்துப் பகுதியிலும் இலைகளுக்கடியிலும் இருந்து சாற்றை உறிஞ்சி சேதத்தை ஏற்படுத்தும். மிகவும் பாதிக்கப்பட்ட செடிகளில் வளர்ச்சி குன்றி குருத்து இலைகள் சுருங்கி வாடி காய்ந்துவிடும். மேலும், இப்பூச்சிகளின் பனித்துளி போன்ற கரிமப்பொருள் இலைகளின் மீது விரிந்து அவற்றின் மீது ஒரு வகை மேலும் படிக்க..
நெல்லுக்கான பயிர்க் காப்பீடு
நெல் பயிரிடும் விவசாயிகளிடம் பயிர்க் காப்பீட்டுக்கான முழு பிரீமியத்தை வசூலிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பயிர்க் காப்பீடு செய்யும் நெல் விவசாயிகளிடம் முழு பிரீமியம் வாங்க மறுக்கும் கூட்டுறவு வங்கிகள் குறித்த செய்தி 10.12.2010 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியானது. இந்நிலையில் பயிர்க் காப்பீடு குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் முழு பயனையும் அடைந்திடும் வகையில், கூட்டுறவு மேலும் படிக்க..
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்…
நெற்பயிரை நடவு செய்தது முதல் வளர்ந்து கதிர் வருவதுவரை பல்வேறு பூச்சிகள் தாக்குகின்றன. இந் நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை சரியான அளவில் பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகித்து அழிக்க வேண்டும். நெற்பயிர்களில் இலைப்பேன் என்ற பூச்சி நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பூச்சிகள் இளம் இலைகளை சுரண்டி சாற்றை உறிஞ்சும். இந்த பூச்சிகளை பாஸ்போபிடான், மோனோகுரோட்டோபாஸ், எண்டோ சல்பான் ஆகிய மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்தலாம். தண்டுத் துளைப்பான் தாக்கும்போது நுணிக் குருத்து காய்ந்துவிடும். மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (டிசம்பர் 2010) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: 12,13,14, 15, 19, 23, 27 மற்றும் 31. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408
வெள்ள நீர் பதிப்பில் இருந்து நெல் பயிரை காப்பது எப்படி?
தமிழ் நாட்டில் எப்போதும் இல்லாத படி இந்த வருடம் மிக அதிகமாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. நெற்பயிர்கள் மற்றும் பல வித பயிர்கள் பாதிக்க படும் சூழ்நிலை. நீர் தேங்கியுள்ள பயிர்களைப் பாதுகாக்க வேளாண்துறை ஆலோசனை அளித்து உள்ளது. வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நெற்பயிர் பாதிக்கப்படலாம். மேலும் பூச்சி, பூஞ்சாணங்களால் நெற்பயிருக்கு பாதிப்பு உண்டாகலாம். நீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி மேலும் படிக்க..
கேரளா அரசின் முன்னேற்ற முடிவு
மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் பயிர்களையும், பன்னாட்டு நிறுவனங்களும் (Monsanto, Bayer) அவற்றின் இந்திய நிறுவனங்களும் (Mahyco) இந்தியாவில் கொண்டு வர பகீரதன் முயற்சி செய்து வருகின்றன. உலகத்திலேயே முதல் முறையாக கத்திரி செடியில் பக்டீரியா DNA சேர்த்து உருவாக்க பட்ட BT brinjal சிறிது காலம் நிறுத்தி வைக்க பட்டுள்ளது. IPL, Lavasa போன்றவற்றில் மட்டுமே நேரம் செலுத்தும் நம் அருமை விவசாய மந்திரி பவர் மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதிற்கு முழு ஆதரவு. இந்த நேரத்தில், மேலும் படிக்க..
மாவுப்பூச்சி கட்டு படுத்தும் பொறி வண்டுகள்
சாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிர்களின் இளம்பருவம் முதல் அறுவடை வரை சேதத்தினை ஏற்படுத்துகின்றன. இவற்றில் ஒன்றான மாவுப்பூச்சி மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இப்பூச்சியினைச் சுற்றி வெளிப்புறத்தில் வெண்மைநிற பஞ்சு போன்ற அமைப்பு காணப்படும். இப்பூச்சியினை போர்வை போன்று சுற்றி இருந்து பாதுகாக்கிறது. இதனால் இப்பூச்சியினை எவ்வளவு ரசாயன மருந்து அடித்தாலும் போகாது. மல்பெரி, பப்பாளி போன்றவற்றில் இதன் தாக்குதல் அதிகம் காணப் படுகிறது. இயற்கையில் மாவு பூச்சியை உண்ணும் பொறி வண்டுகள் இதற்கு ஒரு பதிலாகும. மேலும் படிக்க..
எலியும் பெருங்காயமும்!
இப்போது சொட்டு நீர் பாசனம் அதிகமாக பயன் படுத்த பட்டு வருகின்றது. ஆனால் அதில் ஒரு பிரச்னை. வயல்களில் உள்ள எலிகள் இந்த பைப்களை கடித்து விடுகின்றன. இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது? பசுமை விகடனில் இதற்கான பதில் கூறுகிறார் பெங்களூர் KP Drip irrigation நிறுவனத்தின் கோபலக்ரிஷ்ணன்: எலிகள் பொதுவாகவே புதிதாக எந்த பொருள் இருந்தாலும் கடித்து பார்க்கும். எலிகளில் சுபாவம் அது. ஆரம்பத்தில் கடித்து, அதில் ஒன்றும் இல்லை என்று தெரிந்தவுடன் விட்டுவிடும். இரண்டாவது மேலும் படிக்க..
நிலக்கடலை விதை நேர்த்தி
நிலக்கடலையில் உயிருள்ள விதைகளை எளிய முறையில் பிரித்தெடுத்தல் தேவையான பொருட்கள் விதைகளை ஊறவைக்க தேவையான பாத்திரம், ஈரமான சாக்குப்பை, கால்சியம் குளோரைடு என்ற உப்புக்கரைசல். செய்முறை நிலக்கடலை பருப்பில் நன்கு முற்றாத உடைந்த சுருங்கிய மற்றும் நோய் தாக்கிய சிறிய விதைகளை முதலில் பரித்தெடுக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 1/2 லிட்டர் என்ற அளவில் 0.5 சத கால்சியம் குளோரைடு உப்புக் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு ஏக்கர் விதைக்கு (50-55 மேலும் படிக்க..
உப்புநீர் கரைசல் மூலம் நெல்லின் விதைத்தரம் காண்பது எப்படி?
செய்முறை முதலில் 15 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு நல்ல கோழி முட்டையை போடவும் முட்டை நல்ல எடையுடன் இருப்பதால் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. பின்பு உப்பை சிறிது சிறிதாகப் போட்டு கரைக்க வேண்டும் (10 லிட்டர் தண்ணீருக்கு 2 கிலோ உப்பு) உப்பு கரைந்த நீரின் அடர்த்தி அதிகமாவதால் முட்டை மேலே மிதந்து வருவதைக் காணலாம். முட்டையின் மேற்பகுதி 25 பைசா அளவு மேலும் படிக்க..
கழிவு பஞ்சு ஒரு இயற்கை உரம்!
பொங்கலூர் பகுதியில் கழிவுப் பஞ்சை உரமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் விவசாய வேலையை விரும்பாதது; மாடு மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைக் காதது போன்ற காரணங்களால் இயற்கை உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாட்டுச்சாணத்துக்கு மாற்றாக மில்களில் கழிவுப் பஞ்சுகளை வாங்கி வந்து அதிகம் பயன்படுத்துகின்றனர்.இது, மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மையை அதிகரித்து, மண் இறுகாமல் வைத் திருக்கிறது. இதன் மூலம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. ரசாயன உரங்களை போடுவதால், மண்புழுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இயற்கை மேலும் படிக்க..
நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரமிடல்
நெற்பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் எவ்வாறு முக்கியமோ அதுபோல் நுண்ணூட்ட சத்து மிகவும் முக்கியமாகும். நெல் நுண்ணூட்ட உரம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோவுடன் சமபங்கு மணல் கலந்து நடவுக்கு முன்பு தனியாக இட்டு பின்பு நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நுண்ணூட்ட உரமிட்டு நடவு செய்வதால் பயிருக்கு தேவையான இரும்புசத்து 0.3 சதம், மாங்கனீசு 0.3 சதம், துத்தநாகம் 3 சதம், தாமிரம் 0.4 சதம், போரான் 0.2 சதம், மக்னீசியம் 4 சதம் மேலும் படிக்க..
இயற்கை பூச்சி விரட்டியான வேப்பஞ்சாரை தயாரிப்பது எப்படி?
“இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள் விவசாயிகளிடையே பிரபலமானதற்கான முக்கிய காரணம், இதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய, குறைந்த முதலீட்டிலுடைய பொருட்களாகும். மேலும் இத்தயாரிப்புகள் நல்ல பயனுள்ளதாக இருக்கும் காரணத்தினால் ஆகும்” என்று கன்யாகுமாரியின், விவோகானந்தா(கேந்தரா) இயற்கை வளமேம்பாட்டுத் திட்ட நிலைய சமூக விஞ்ஞானியான திரு.எஸ். அரவிந்தன் கூறுகிறார். பசுமை தமிழகத்தில் பல வகையான இயற்கை பூச்சி விரட்டிகளை பார்த்து இருக்கிறோம். அரளி, வசம்பு போன்ற செடிகளை பயன் படுத்துபவை அவை. இதோ, வேப்ப மேலும் படிக்க..
என்டோசுல்பான் பயங்கரம்
பயிர்களுக்கு இடப்படும் எல்லா ரசாயன பூச்சி கொல்லிகளும் விஷங்கள் தான். இவை, நல்ல கேட்ட பூசிகள் என்று தரம் பார்த்து கொல்வதில்லை. இந்த பூச்சி கொல்லிகள் பயிர்களில் சிறு அளவில் இருந்தாலே நமக்கு கான்செர் போன்ற கொடிய வியாதிகள் வர வாய்ப்புகள் அதிகம். அதனால் தான், மேற்கத்திய நாடுகள் இந்த பூசிகொல்லிகளை ஜாக்கிரதையாக பயன் படுத்துகின்றன. நம் நாட்டில் கேட்கவே வேண்டாம். கேரளாவில், சில வருடங்கள் முன் வரை, முந்திரி தோட்டங்களில் என்டோசுல்பான் (endosulfan) மருந்தை இட்டு மேலும் படிக்க..
செடி முருங்கை பயிர் இடுவது எப்படி?
இரகங்கள் : பிகேஎம் 1. கேஎம் 1, பிகேஎம் 2 மண் மற்றும் தட்பவெப்பநிலை : செடி முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளரும். இருப்பினும் மணல் கலந்த செம்மண் பூமி அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது, மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும். பருவம் : ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர் விதையளவு : எக்டருக்கு 500 கிராம் விதைகள் நிலம் தயாரித்தல் நிலத்தை நன்கு உழுது மேலும் படிக்க..
ஆட்டு எரு – ஆழ்கூள முறை உர உற்பத்தி
ஆட்டு எருவில் மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும் சாம்பல்சத்தும் உள்ளது. ஒரு ஆடு ஒரு வருடத்திற்கு 500 கிலோவில்இருந்து 750 கிலோ வரை எரு உற்பத்தி செய்ய வல்லது. 100 ஆடுகள் உள்ள கிடை வைத்தால் ஒரு ஏக்கருக்கு வேண்டிய வளத்தைப் பெறலாம். ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து குறைந்த தீவனங்களை அளிக்கும்போது எருவில் தழைச்சத்து அளவு மேலும் படிக்க..
காளான் வளர்ப்பில் பூச்சி, நோய் நிர்வாகம்
சிப்பிக்காளான் படுக்கைகளில் பச்சைப்பூசணம், பாக்டீரியா அழுகல் நோய் ஆகியவை அதிக ஈரப்பதத்தின் காரணமாக தோன்றுகின்றன. தவிர போரிட் ஈ, சியரிட் ஈ, ஸ்பிரிங்டெயில் பூச்சிகளும் தோன்றி காளான் படுக்கைகளில் முட்டைகளை இடுகின்றன. ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகளை கடைபிடிப்பது இன்றியமையாததாகிறது. பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகள்: காளான் படுக்கைகளைத் தயார் செய்ய நோய்கள், பூச்சிகள் தாக்காத வைக்கோலைப் பயன்படுத்த வேண்டும். ஊறவைத்தபின் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வைக்கோல்களைப் படுக்கைகள் தயார் செய்ய பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும்போது மேலும் படிக்க..
விவசாய வேலையை எளிதாக்கும் புதிய எந்திரங்கள்
விவசாய வேலைகளை எளிமைப்படுத்தவதற்காகவே உருவாக்கப்பட்ட அந்த பொறியியல் கல்லூரி, திருச்சியிலிருந்து 37கி.மீ தொலைவில் உள்ள குமுளூரில் இயங்கி வருகிறது. பண்ணை எந்திரம் மற்றும் உயிர் சக்தி துறையின் இணைப் பேராசிரியர் ச.கணபதி இயந்திரங்களின் பயன்பாடுகள் பற்றி பேசுகையில் “விவசாயிகளின் வேலையைக் குறைக்க புதிய கருவிகளைக் கண்டுபிடித்து வருகிறோம். தமிழ்நாட்டுக்குத் தக்கப்படிதான் நாங்கள் கருவிகளை வடிவமைத்து வருகிறோம்” என்கிறார். இதோ இந்த கல்லூரியில் வடிவமைக்க பட்ட இயந்திரங்கள்: நேரடி நெல் விதைப்புக் கருவி: இந்தக் கருவியின் மூலம் நெல் மேலும் படிக்க..
தென்னையில் கரையானை கட்டு படுத்துவது எப்படி?
தென்னையை தாக்கும் கரையான் பூச்சியில் இருந்து, காப்பாற்ற மரங்களின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு பூசலாம்.. தென்னை மரங்களில் தென்னை ஓலை கருகல்நோய், தென்னை பிஞ்சு அழுகல் நோய் போன்றவை அதிகளவில் ஏற்படும். இது தவிர, தென்னை மரங்களை கரையான் பூச்சிகள் அதிகளவில் தாக்குகிறது. தென்னை மரத்தின் கீழ் பகுதியில் கரையான் பூச்சி அரிக்க துவங்கி, மேற்பகுதி வரை தாக்குவதால், மரம் ஒரு விதமான நோய் தாக்கியது போல் மாறும். கரையானை கட்டுப்படுத்த ஈரோடு விவசாயிகள், மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு மேலும் படிக்க..
தென்னையில் இளங்காய்கள் உதிர்தலை தடுப்பது எப்படி?
தென்மேற்கு பருவகாலங்களில் பைடோப் தோரா பாலிமிவோரர் பூசணம், இளங்காய்கள் உதிர்வதற்கு காரணமாகிறது. அறிகுறிகள்: காய்களின் மேல், அடிப்பகுதியில் வண்ணம் மாறுதல் (பழுப்பு) மற்றும் காய்களின் அரைப்பகுதி வரை பரவியிருத்தல். காய்களின் உட்திசுக்கள் மிக மிருதுவாக இருத்தல். அழுகிய பருப்புகளிலிருந்து துர்நாற்றம் வீசும். பொதுவாக காய் உதிர்வு ஜனவரி-பிப்ரவரி, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஏற்படுகிறது. சாறு உறிஞ்சும் பூச்சி வகை கள், எறும்புகள், பறவைகள் மற்றும் எலிகள் போன்ற இதர காரணங்களாலும் காய் உதிர்வு ஏற்படுகிறது. காய்உதிர்வு மேலாண்மை: ஒரு மேலும் படிக்க..
தேசிய வேளாண் காப்பீடு திட்டம்
இயற்கை இடர்பாடுகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடும் திட்டமான தேசிய வேளாண் காப்பீடு திட்டம் பற்றிய விவரங்கள் இதோ: இத்திட்டத்தின் கீழ் அனைத்து விதமான உணவு பயிர்கள் அதாவது தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் வருடாந்திர வணிக தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு செய்யப்படும். அனைத்து விதமான இயற்கை சீற்றங்களால் அதாவது வெள்ளம், வறட்சி, பூச்சி நோய்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு இத்திட்டம் காப்பீடு வழங்குகிறது. குத்தகைதாரர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும், மேலும் படிக்க..
பப்பாளி பயிரிடும் முறை
கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி. தமிழ்நாட்டில் திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, தருமபுரி மாவட்டங்களில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகின்றன. பயிரிடும் முறை: மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும். மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும். ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே மேலும் படிக்க..
மக்காச்சோளம் பயிரிடும் முறை
விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 90 முதல் 100 நாட்களில் மகத்தான மகசூல் கிடைக்கும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம். குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில் கோ 1, கங்கா, கோ ஹெச் (எம்) 4, கோ ஹெச் (எம்) 5 ஆகிய வீரிய ஒட்டு ரகங்களை பயிரிடலாம். விதைமூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்திட ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து 24 மணிநேரம் கழித்து தலா ஒரு மேலும் படிக்க..
ஜெட் வேக லாபத்துக்கு ஜீரோ பட்ஜெட் சின்னவெங்காயம்
‘சாம்பார் வெங்காயம்’ என்றழைக்கப்படும் சின்னவெங்காயத்தை, ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து, சிறப்பான மகசூல் கண்டு வருகிறார்கள் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள எரசினம்பாளையம் விவசாயத் தம்பதியர் சுப்பிரமணியம் – வஞ்சிக்கொடி. வெங்காய அறுவடை மும்மரமாக நடந்து கொண்டிருக்க, நம்மிடம் பேச ஆரம்பித்தார் சுப்பிரமணியம். “ ஏற்கெனவே மூணு வருஷமா தென்னை, மா, செடி முருங்கைனு ஜீரோ பட்ஜெட்லதான் சாகுபடி செய்றோம். முதல் போகத்துல கொஞ்சம் மகசூல் குறைஞ்சாலும், போகப் போக ஏறுமுகம்தான்ங்கிறத கண்கூடாவே பார்த்துக்கிட்டிருக்கோம்’ என்று மேலும் படிக்க..
தழைச்சத்து உரத்திற்கு அசோலா
இயற்கை, உயிர், ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை உரிய காலத்தில் சமச்சீர் அளவில் அளிப்பதே ஒருங்கிணைந்த உர மேலாண்மையாகும். தாவர வகை தழைச்சத்து உரமான அசோலா பிற உயிரினங்களோடு சார்ந்து இயங்கும் பெரணி வகை தாவரம். அனாபீனா அசோலி என்ற நீலபச் சைப் பாசி அசோலாவின் உள்ளிருந்து வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. பயிருக்கு தழைச்சத்து அளித்து மண்ணிற்கு இயற்கை உரமாக மாறி மண் வளத்தை பெருக்குகிறது. விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ள வாய்க்கால் பகுதிகளிலும் மேலும் படிக்க..
நெல்வயல்களை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ
பருவமழை துவக்கம் காரணமாக நெல்வயல்களை ஆனைக்கொம்பன் ஈ தாக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள ஆலாம்பாளையம், களியனூர், எலந்தகுட்டை, தட்டாங்குட்டை, போன்ற பகுதிகளில் ஐஆர் 20 ரக நெல்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பூச்சியானது பொன்னி, பி.பி.டி., ஏ.டி.டி 45, 43 உள்ளிட்ட ரகங்களையும் பாதிக்கும். இந்த ரக நெல்லை அதிக அளவில் ஆனைக்கொம்பன் ஈக்கள் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். தற்போது துவங்கியுள்ள பருவமழையால் இந்த ஈக்கள் அதிகம் உற்பத்தியாகும் வாய்ப்பு மேலும் படிக்க..
சொட்டு நீர்ப்பாசனம் முறையின் மேன்மைகள்
குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு கூடுதல் மகசூல் பெற சொட்டு நீர்ப்பாசனம் முறையை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். விவசாயிகள் சாகுபடி செய்யும் பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழப்பயிர்களின் நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் செயல்திறன் மிக்க வேர்கள் மண்ணின் மேல்மட்டத்திலிருந்து ஒரு அடி ஆழத்தில் உள்ளது. நீர்பாசனம் செய்யும் போது மண் ணின் மேற்பரப்பு ஈரமாகவும், சத்துகள் உள்ளவாறும் பராமரித்தால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும். சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தேவைப்படும் இடம் மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (நவம்பர் 2010) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: 11,12,13 மற்றும் 17,18, 19. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408
தொல்லுயிரி கரைசல் தயாரிப்பது எப்படி?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு ஊர் கொம்புபள்ளம். இந்த ஊரில், தமிழக உழவர் தொழில் நுட்ப கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் திரு சுந்தர ராமன் அவர்கள். இயற்கை விவசாயம் என்பதை முழு மூச்சாக கொண்டு இயங்கி வரும் இந்த கழகத்திற்கு தமிழகம் மட்டும் அல்ல, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக போன்ற இடங்களில் இருந்து விவசாயிகள் படை எடுத்து வந்து பயிற்சி எடுத்து செல்கிறார்கள். சுந்தர் ராமனும் மற்ற விவசாயிகளை மேலும் படிக்க..
பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் தரும் டிஏபி கரைசல்
குறிப்பிட்ட அளவு டிஏபி கரைசலை தெளித்தால், பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறலாம் என ஆர்க்காடு வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்து உள்ளார். பயறு வகை பயிர்களுக்கு ஏன் டிஏபி கரைசல் அவசியம்? பயறு வகைகளில் 20 முதல் 24 சதவீத புரதச்சத்து உள்ளது. இச்சத்து உற்பத்தியாவதற்கு மணிச்சத்து அவசியம். மண்ணில் இருந்து கிடைப்பதை விட, தாவரங்களின் இலை வழியாக மணிச்சத்து எளிதாக கிடைக்கிறது. பூக்கும் பருவத்துக்குப் பிறகு பயிர்களின் வேர்களில் ஊட்டச்சத்து எடுக்கும் தன்மை மேலும் படிக்க..
சம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி
நெல் பயிரிடும் விவசாயிகள் விதை நேர்த்தி செய்து விதைக்கும்படி கருங்குளம் வேளாண்மை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார். சம்பா நெற்பயிர் சாகுபடியில் விதை நேர்த்தி செய்து வீரியமான விதைகளை தெரிவு செய்வதன் மூலம், விதை மூலம் பரவும் பூச்சி, நோய் தாக்குதலை குறைத்து அதிக மகசூல் பெறலாம். நெல்பயிரில் விதை நேர்த்தி முறை: சான்றிதழ் பெற்ற விதைகளை 1 கிலோ சமையல் உப்புடன் 10 லிட்டர் நீரில் கரைத்து ஏற்படும் கரைசலில் ஊறவைக்க வேண்டும். அப்போது கரைசலில் மிதக்கும் மேலும் படிக்க..
அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி
மகசூலை அதிகரிக்க அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தோட் டக்கலைத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா ஆண்டு முழுவதும் காய்க்கும் தன்மை உடையது. இது அனைத்து வகை மண் ணிலும் எளிதில் வளரும் தன்மை கொண்டது. ஆப்பிள் பழத்திற்கு நிகரான சக்தி கொண்ட கொய்யா பழத்தில் உள்ள அதிகப்படியான “சி’ வகை சத்து ஜலத்தோஷ நிவாரணியாகவும், மலச் சிக் கலை தீர்க்கக் கூடியதாகவும் உள்ளன. சாதாரண நடவு மேலும் படிக்க..
ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது எப்படி?
ஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காண படுகிறது. இந்த செடி வந்துவிட்டால், ஏரி முழுவதும் பரவி, நீரே தெரியாதவாறு மூடி விடும். நீரும் கெட்டு விடும். இந்த செடியும், பார்தேனியும் போன்று, கட்டுக்கு அடங்காமல் வளரும் தன்மை கொண்டது. இதுவும், வெளி நாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வந்த ஒரு அந்நிய தாவரம். நீர் நிலைகளை முழுவதும் மாற்றும் திறமை கொண்டது இது! நீரில் உள்ள ஆக்சிஜென குறைந்து, நீரில் உள்ள மீன்கள் மேலும் படிக்க..
இயற்கை பயிர் ஊக்கியான முட்டை ரசம் தயாரிப்பது எப்படி?
இயற்கை வேளாண்மை விஞானி நம்மாழ்வார் கூறுகிறார்: ” ஒரு சிறிய விவசாயி இரண்டு அல்லது மூன்று ஏகரில் விவசாயம் செய்து லாபம் செயபது என்பது மிகவும் கஷ்டமாகி விட்டது. இதற்கு மூலகாரணம், ரசாயன இடு பொருள்களின் விலைகள் தாறு மாறாக ஏறிவிட்டதே ஆகும். விவசாயம் சரியாக செய்தல், நிச்சயமாக லாபம் செய்ய முடியும். ஆனால் பல விவசாயிகள் கடன் வாங்கி திருப்பி தர முடியாமல், நிலங்களை விற்று விட்டு சென்று அவை வீட்டு நிலங்களாகும் அவலத்தை பார்க்கிறோம். மேலும் படிக்க..
பிசான பருவ நெல் விதை நேர்த்தி
மானூர் வட்டார பிசான பருவ நெல் சாகுபடியாளர்கள் மற்றும் புரட்டாசி பட்ட உளுந்து, பயறுவகை சாகுபடியாளர்கள் விதை நேர்த்தி செய்து விதைக்க வேளாண் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார். பிசான பருவ நெல்லில் குலைநோய் உட்பட பல்வேறு வகையான நோய்கள் தாக்கி மகசூலை பெருமளவில் பாதிக்கின்றன. இந்நோயினை பரப்பக்கூடிய நோய் காரணிகள் விதை மூலமாகவும், தண்ணீர், காற்று, மண் மூலமாகவும் செயல்படுவதால் வரும்முன் காக்கும் முறையினை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு 1 கிலோ விதைக்கு 2 கிராம் மேலும் படிக்க..
மானாவாரி பருத்தி தொழில்நுட்பங்கள்
மானாவாரி பருத்தி சாகுபடியாளர்கள் விதைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானி யோசனை தெரிவித்துள்ளனர். பருத்தியில் வேரழுகல் நோய், வாடல் நோய், இலைக் கருகல் நோய் என பல்வேறு நோய்கள் விதை மூலம் தாக்குகின்றன. பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம் தங்கியிருக்கின்றன. விதை முளைக்கும்போது பூசண வித்துகளும் முளைத்து நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன. தடுக்கும் முறைகள் விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க விதை நேர்த்தி செய்வது அவசியம். மேலும் படிக்க..
மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தடுப்பது எப்படி?
மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. மஞ்சள் பயிரில் பல பூசான நோய்கள் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றன. கிழங்கு அழுகல் நோய் மஞ்சள் சாகுபடி செய்யும் எல்லாப்பகுதியிலும் இழைப்பை ஏற்படுத்துகிறது. அறிகுறிகள் இந்நோய் தாக்குதலின் அறிகுறியாக, பாதிக்கப்பட்டு பயிரின் இலை ஓரங்கள் முதலில் சிறிது சிறிதாக காய்ந்து பின் முழுமையாக காய்ந்துவிடும். தண்டுப்பகுதியின் அடிப்பாகம் நீர் கோர்த்து மென்மையாக காணப்படும். வேர்ப்பகுதி மிகவும் குறைந்து அதன் திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்கும். நோய் முதிர்ந்த நிலையில் மேலும் படிக்க..
பாரம்பரிய காய்கறி விதை திருவிழா!
“”திருத்துறைப்பூண்டியில் மாநில பாரம்பரிய காய்கறி விதை திருவிழா நவம்பர் 11ம் தேதி நடக்கிறது,” என கிரியேட் பயிற்சி இயக்குனர் ஜெயராமன் அறிவித்து உள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கிரியேட் பண்ணையில் மாநில அளவிலான பாரம்பரிய காய்கறி விதை திருவிழா நவம்பர் 11ம் தேதி நடக்கிறது. திருத்துறைப்பூண்டி ஜேசீஸ் சங்கம், ஜி.டி. பவுண்டேஷன், பாலம் தொண்டு நிறுவனம், வேவ்ஸ் பவுண்டேஷன், ஒற்றுமை அறக்கட்டளை சார்பில் நடக்கும் மேலும் படிக்க..
வேளாண்மை பற்றிய வானொலி நிகழ்ச்சிகள்
வேளாண்மை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி ஏற்கனவே படித்தோம். இதோ, வேளாண்மை பற்றிய வானொலி நிகழ்ச்சிகள்: வானொலி நேரம் நிகழ்ச்சி தொலைபேசி எண் சென்னை (கிலோ ஹெட்ஸ்) 720 KHz 783 KHz 1017 KHz 4920 KHz 7160 KHz (மெகா ஹெட்ஸ்) 101.4 MHz 102.3 MHz காலை 6.30 – 6.45 மணி மாலை 6.45 – 7.00 மணி 7.25 – 8.00 மணி வேளாண் அறிக்கைகள் மண்ணும் மணமும் வீடும் மேலும் படிக்க..
பழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
நம் நாடு விவசாயிகள் பழ வகை பயிர்களில் காலம் காலமாக பயன் படுத்தி வந்த, பலன் கொடுத்து வந்த டிப்ஸ்கள் இதோ: மலை வாழைப்பழம் மலைப்பகுதியில் வாழையானது, வாழையடி வாழையாக தாய் மரத்திற்குப்பின் ஒரு சேய் மரத்தை மட்டும் விட்டு ஒவ்வொரு வருடமும் திரும்ப வாழைக்கட்டையை நடாமல் பயிரிடலாம். புதிய வேர்கள் விரைவாக விட்டு வளர வாழைக்கட்டைகளில், வேரை நடுவதற்கு முன் வெட்டி நடவு செய்யவேண்டும். ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் தொங்கும் வாழை இலையை அகற்றவேண்டும். மேலும் படிக்க..
நெல்பயிரில் இயற்கை முறையில் பூச்சி தாக்குதலைச் சமாளிப்பது எப்படி?
நெல் நடவு வயலில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் புழு, இலை பிணைக்கும் புழு, மஞ்சள் கம்பளிப் புழு, பச்சை கொம்பு புழு, படைப் புழு போன்றவை தாக்கலாம். இவற்றை ஒருங்கிணைந்த மேலாண்மை முறை யில் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் சார்ந்த முறை இதோ: ஓர் ஏக்கருக்கு ஓரு விளக்குப் பொறி, 5 இனக்கவர்ச்சி பொறி, 25 டி வடிவ குச்சிகள் ஆகியவற்றை ஓர் ஏக்கரில் வைக்க வேண்டும். 2 ஒட்டுண்ணி குளவி அட்டைகளை ஓர் ஏக்கருக்கு 2 மேலும் படிக்க..
சிவகங்கையில் புதிய விதை பரிசோதனை நிலையம்
தமிழ் நாட்டில் உள்ள விதை பரிசோதனை நிலையங்களை பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். மதுரை மாவட்டம் சிவகங்கையில் புதிதாக இன்னொரு விதை பரிசோதனை நிலையம் திறந்து உள்ளது. இதை பற்றியசெய்தி: சிவகங்கை: விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் உதயகுமார் கூறியதாவது: விவசாயிகளுக்காக சிவகங்கையில் விதை மாதிரி மையம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு பரிசோதனை செய்து, முளைப்புத்திறன் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதற்கு 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். விதைகளை துணிப்பையில் கட்டி, நெற்பயிருக்கு 400 கிராம், மேலும் படிக்க..
நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை
சம்பா பட்டத்தில் சாவித்திரி, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, தாபட்ளா, கே.ஆர். எச். 2, கோ.ஆர்.எச்.3, வெள்ளை பொன்னி போன்ற ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பட்டத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடித்தால் இயற்கையாக பூச்சிகளை கட்டு படுத்தலாம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை: ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் “டி’ வடிவம் கொண்ட ஐந்தடி குச்சிகளை 30 எண்களுக்கு குறையாமல் நட்டு பறவை குடில் அமைக்க வேண்டும். இதனால் பகலில் குச்சியின் மேல் இரட்டை வாள் மேலும் படிக்க..
தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு
தென்னை மரத்தின் பாளையை காண்டாமிருக வண்டுகளும், தண்டுப் பகுதியை சிகப்பு கூன் வண்டுகளும் சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. காண்டாமிருக வண்டு தாக்கப்பட்ட தென்னை இலைகள் முக்கோண வடிவில் வெட்டியது போல் காணப்படும். துளைக்கப்பட்ட தண்டுப் பகுதியின் துவாரத்திலிருந்து, மரச்சக்கைகள் வெளியே தள்ளப்பட்டிருக்கும். இவ்வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, எருக்குழியில் கார்பரில் தூள் இரண்டு கிராமில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தெளித்தால் முட்டை மற்றும் கூட்டுப் புழுக்கள் மேலும் படிக்க..
மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அறிமுகம்
மாவு பூச்சி என்ற புதிய வில்லனை நாம் ஏற்கனவே படித்து உள்ளோம். 56 வகை பயிர்களை தாக்கும் பலே பூச்சியான மாவு பூச்சியால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. வெளி நாட்டில் இருந்து வந்துள்ள இந்த பூச்சியை அடக்க இயறகையான எதிரிகள் இல்லாததே காரணம். இப்போது, விவசாய ஆராய்சியாளர்கள இந்த பூச்சியின் சொந்த ஊருக்கு சென்று மூன்று இயற்கை ஒட்டுண்ணிகளை கொண்டு வந்து உள்ளனர். இந்த பூச்சிகள் கட்டுப்படும் என்று நம்புவோம். இதோ அதை பற்றிய செய்தி: மேலும் படிக்க..
நெல் குருத்துப்பூச்சியை கட்டுபடுத்தும் வழிமுறைகள்
நெல் குருத்துப்பூச்சியை வழிமுறைகள் குறித்து கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்: கார்நெல் சாகுபடி செய்துள்ள ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், சிவசைலம் போன்ற பகுதிகளில் நெல் பயிர் கதிர் வரும் தருவாயில் உள்ளது. நெல் பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதல் தற்போது கதிர் வரும் பருவத்தில் உள்ள பயிர்களில் ஒன்று முதல் 2 சதம் வரை பாதிப்பு தென்படுகிறது. நெல் கதிர் பருவத்தில் குருத்துப்பூச்சி தாக்குதல் 2 சத வெண் கதிர்களுக்கு மேல் இருந்தால் பொருளாதார சேத மேலும் படிக்க..
நெல் சாகுபடியில் குலை நோய்
தற்போது நிலவி வரும் பருவநிலை காரணமாக நெல் பயிரில் குலை நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது. நோய்க்கான காரணங்கள் குறைவான இரவு வெப்ப நிலை, அதிகப்படியான ஈரப்பதம், மேகமூட்டத்துடன் லேசான தூறல், அதிக தழைச்சத்து, முந்தைய பருவத்தின் பயிர் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால், குலை நோய் தாக்கும். நெல் விதைகளை நாற்றங்கால் தயாரிப்பதற்கு முன்பு சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் உயர் பூஞ்சாண கொல்லியுடன் 10 கிராம் ஒரு கிலோ விதைக்கு என விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும் படிக்க..
செம்மை நெல் சாகுபடி பெயர் மாறியது!
செம்மை நெல் சாகுபடி பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து இதுவரை செம்மை நெல் சாகுபடி என்று அழைக்கப்பட்ட தொழில் நுட்பம் இனி “ராஜராஜன் 1000‘ என்று அழைக்கப்படுகிறது. எனவே, இனி வயல் வெளி விளம்பர பலகைகள், சுவர் விளம்பரங்களில் “ராஜராஜன் 1000’ என்று பெயரிட்டு மாற்றம் செய்யப்படும் நன்றி: தினமலர் நெல் பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்
மதுரையில் விவசாயக் கண்காட்சி
மதுரை தமிழ் லயன்ஸ் சங்கம், வேளாண்மை பல்கலை சார்பில் 4வது விவசாயக் கண்காட்சி மதுரை காந்தி மியூசியம் மைதானத்தில் அக்., 9 ல் துவங்குகிறது. 150 ஸ்டால்களில் விவசாயத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பங்கேற்கின்றன. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை விவசாயம் தொடர்பான கருத்தரங்கங்கள்நடைபெறுகிறது. சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் செயல்பாடுகளை, விவசாயிகள் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். விவசாய பல்கலை சார்பில் மண்பரிசோதனை இலவசமாக மேலும் படிக்க..
நெல் பழ நோய கட்டுபடுத்துவது எப்படி?
நெல் பழ நோய், நெல் பயிரைத் தாக்கும் பூஞ்சாள நோயாகும். இது பூக்கும், பால் பிடிக்கும் மற்றும் கதிர் முற்றும் தருணங்களில் நெல் பயிரைத் தாக்கி பெருமளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இந்த நோய் முதல் கட்டமாக நோய் தாக்கப்பட்ட விதைகள் மூலமாகவோ, மண்ணில் காணப்படும் பூஞ்சாள வித்துக்கள் மூலமாகவோ பரவும். இரண்டாம் கட்டமாக நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து காற்றின் மூலம் பரவும். பூக்கும் தருணங்களில் மேக மூட்டம், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருத்தல், இரவில் மேலும் படிக்க..
கொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி?
பரங்கி, பாகல், பீர்க்கு, புடலை, சுரை, வெள்ளரி போன்ற கொடிவகை காய்கறிகள். இது போன்ற கொடிவகை காய்கறிகளில் பூக்கள் பெருமளவு தோன்றினாலும், பூக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு காய்கள் உருவாவதில்லை. இதற்கு காரணம் அதிக அளவு ஆண் பூக்கள் உற்பத்தியாவதே ஆகும். பொதுவாக 15 முதல் 25 ஆண் பூக்களுக்கு ஒரு பெண் பூ என்ற விகிதத்திலேயே பூக்கள் தோன்றும். ஆண் பூக்கள் பூக்காம்பின் நுனியிலும், பெண் பூக்கள் பிஞ்சுகளின் நுனியிலும் தோன்றும். பெண் பூக்களின் எண்ணிக்கை யை மேலும் படிக்க..
விதைப் பரிசோதனையின் முக்கியத்துவம்
விதைப் பரிசோதனை செய்து சாகுபடி செய்வதன் மூலம் அதிக விளைச்சல் கிடைக்கும். குறைந்த முளைக்கும் திறன் உள்ள விதைகளை பயன்படுத்துவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுவதற்கு 80 சதவீத முளைப்புத் திறன் உள்ள விதைகளை கொண்டு பயிர் செய்ய வேண்டும். இதுபோன்ற விதைகளை அடையாளம் காண இப்போது விதை பரிசோதனை நிலையங்கள் உள்ளன. தங்களிடம் உள்ள விதைகளை விதை ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு செய்து பின்னர் பயிரிட வேண்டும். விதைகளை ஆய்வு மேலும் படிக்க..
உரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி?
திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி. ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் இவருடைய ரகசியம் உரகுழி. இதை பற்றி அவர் கூறுகிறார்: “ஒன்றரை ஏக்கர்ல உளுந்து விதைச்சுருக்கேன். மொத்தத்துக்கும் உரக்குழி தண்ணிதான் பாசனமாயிட்டிருக்கு. இந்த உளுந்துச் செடியில இலைகள் அடர்த்தியாகவும், அகலமாகவும் இருக்குறதுனால களைகளே இல்ல. ஒரு செடிக்கு சராசரியா 20 கிளைகளும், மொத்தம் 150 முதல் 200 காய்களும் பிடிச்சிருக்கு. கொஞ்சம்கூட பொக்கையே இல்லாம எல்லா காய்களுமே மேலும் படிக்க..
பொன்னாங்கண்ணிக் கீரை வளர்ப்பது எப்படி?
பொன்னாங்கண்ணிக் கீரையில் “தங்கசத்து’ உண்டு என்றும் இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதியடையும் உண்மை என்றும் கூறுவர். இதனை “பொன் ஆம் காண் நீ’ “இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய்’ என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது எனக்கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையைச் செம்மையாய் நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு கூட்டி, புளியை நீக்கி கற்ப முறைப்படி ஒரு மேலும் படிக்க..
மா மரத்தில் அதிக விளைச்சல் பெறுவது எப்படி?
மாமரத்தில் இனைப்படர்வு மேலாண்மை அல்லது கவாத்து ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்தபின் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தல், மா மரத்தில், அதிக விளைச்சலை பெற முடியும் கவாத்து செய்வதால் வரும் ஆண்டுக்கு தேவையான இளந்தளிர் உற்பத்தியை ஊக்குவித்து விளைச்சலை பெருக்க முடியும். ஆண்டுதோறும் கவாத்து செய்வதால் தோட்டத்தினை நன்குபராமரிக்க இயலும். மரத்தின் வயது இனைப்படர்வை பொறுத்து மா மரத் தோட்டங்களை 3 வகையாகப் பிரிக்கலாம். இளந்தோட்டம் – 5 முதல் 10 ஆண்டுகள் வரை நன்கு விளைச்சலைத் மேலும் படிக்க..
மண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ்
ஜீரோ பட்ஜெட் விவசாயம் பிரபல படுத்திய திரு சுரேஷ் பலேகர் அவர்களின் மண்புழு பற்றிய டிப்ஸ்: மண்புழுக்கள், அள்ள அள்ளக் குறையாமல் மண்ணில் பொதிந்து கிடக்கும் சத்துக்களை வெளியே கொண்டு வந்து பயிர்களுக்குக் கொடுக்கும். காசில்லாமல் வேலையைச் செய்யும் ஆட்கள் தான் இந்த மண்புழுக்கள். மண்புழுக்கள் இருட்டை விரும்பும். அதனால் தான் மண்ணின் அடி ஆழத்தில் சென்று வாழுகின்றன. மேல் மட்டத்தில் உணவும், வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலையும் இல்லாத போது அவை மண்ணுக்குள் புகுந்து விடுகின்றன. மண்புழுக்களை மேலும் படிக்க..
சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி
சில ஆண்டுகளாக செடி, கொடி, மரங்களை மாவு பூச்சிகள் தீவிரமாக தாக்குவதால் காய், கனி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. மாவு பூச்சிக்கு பயந்து தற்போது மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய தயங்குகின்றனர். சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மா, வாழை, பருத்தி, கொய்யா, பப்பாளி, மரவள்ளிக் கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். சமீப காலமாக குறிப்பாக மழையளவு குறைந்த வறண்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பயிர்களையே மாவு பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. சூரிய உதயத்திற்கு மேலும் படிக்க..
டீசலோடு போட்டி போடும் புன்னை
அறிவிக்கப்படாத மின் வெட்டு.. தலை விரித்தாடும் டீசல் தட்டுப்பாடு, என்று கடந்த சில மாதங்களாக தமிழகமே திண்டாட்டத்தில் இருக்கிறது.பம்ப்செட்டை நம்பியிருக்கும் பயிர்கள் எல்லாம் தாகத்தில் தவிக்கின்றன. ‘இதே நிலை நீடித்தால் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லை’ என்றபடி விவசாயிகள் பலரும் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை… !” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம் மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (செப்டம்பர் 2010) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: 11, 13, 15, 16, 19, 20, 22 மற்றும் 26-30. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408
இயற்கை முறையில் தென்னை விவசாயம்
சுல்தான்பேட்டை வட்டாரத் தில் தென்னை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், ரசாயன உரங்களை கைவிட்டு, இயற்கை உரத்துக்கு மாறி வருகின்றனர். இயற்கை உரம் பயன் படுத்துவதால், 15 சதவீதம் மகசூல் அதிகரித்து வருகிறது. சுல்தான்பேட்டை வட்டாரத் தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் 10 லட்சத்துக்கும் மேலாக தென்னை மரங்கள் உள்ளன. தென்னையில் நல்ல மகசூல் கிடைப்பதற்காக, இப்பகுதி விவசாயிகள் பெரும் பாலானோர், யூரியா, பொட் டாஷ், காம்ப்ளக்ஸ் போன்ற ரசாயன உரங்களையும், சிறிது மேலும் படிக்க..
அவரை பயிர் இடுவது எப்படி?
அவரையில் இருவகைகள் உள்ளன. குத்து அவரை ரகங்களை ஆண்டு முழுவதும் (120 நாள்கள்) பயிரிடலாம். பந்தல் அவரை ரகத்தை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் (240 நாட்கள்) சாகுபடி செய்யலாம்.நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அவரை சாகுபடிக்கு ஏற்றது. குத்து அவரை நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ விதையும், பந்தல் அவரை நடவு செய்ய 5 கிலோ விதையும் போதுமானது. குத்து அவரையை 1 அடிக்கு 2 அடி வீதமும், பந்தல் அவரையை மேலும் படிக்க..
காளான் வளர்ப்பு முறை
காளானில் வைட்டமின் பீ அதிகமாக இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. போலிக் ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது. சிறந்த கண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளன. இவ்வாறு பல நற்குணங்களை கொண்ட சிப்பி காளானை வளர்க்கும் முறைகளை இங்கே காணலாம் வைக்கோல் தயாரிப்பு: காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும். மேலும் படிக்க..
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிகள்
“நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற மேலுரத்தை பிரித்து போட வேண்டும்’ என கோபி வேளாண்மை துறை உதவி இயக்குநர் ஆசைதம்பி தெரிவித்துள்ளார். ஒரே தடவையில் அதிக உரம் இடாமல், பல தடவை பிரித்து இடும் போது, அதிக மகசூல் கிடைக்கும். மேலுரத்தை மூன்று சம பாகங்களாக பிரித்து இட வேண்டும். நடவு செய்த 15, 30 மற்றும் 45 வது நாளில் 33 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். தூர் மேலும் படிக்க..
நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுபடுத்துவது எப்படி?
நவரை நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை துறை உதவி இயக்குனர் அசோகன் ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது பால் பருவத்திலுள்ள பின்பட்ட நவரை நெல்பயிரில் இலை சுருட்டு புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இலை சுருட்டுப் புழுவின் புழுக்கள் இலைகளை நீள வாட்டத்தில் மடித்து பச்சையத்தை சுரண்டி உண்பதால் பாதிக்கப் பட்ட இலைகள் திட்டு திட்டாக வெள்ளையாக இருக்கும். இலைகளின் பச்சையம் புழுக்களால் சுரண்டி உண்பதால் ஒளிசேர்க்கை குறைந்து பயிரில் வளர்ச்சி பாதிக்கப்படும். இப்பூச்சிகள் தாக்குதல் மேலும் படிக்க..
தென்னையை தாக்கும் புதிய எதிரி!
ஈரியோபைட் தாக்குதலில் தென்னை விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில், தற்போது தென்னையை புதிய பூச்சி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இதன் தாக்கம் இல்லையென்றாலும், இலங்கை, மாலத் தீவு வழியாக தென்னிந்தியாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். தென்னையின் குருத்து ஓலைகளைத் தாக்கும் இந்த தென்னை இலை வண்டின் தாக்குதல், இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மியான்மர், சீனா, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் மாலத் தீவிலும் மேலும் படிக்க..
தென்னை நார்க்கழிவிலிருந்து தொழு உரம்
தென்னை நார்க்கழிவிலிருந்து தயாரிக்கப்படும் தொழு உரத்தை பயன்படுத்துவதன் மூலம் பயிர்கள் வறட்சியை தாக்குபிடித்து அதிக மகசூலை தருவதாக நெல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்முறை சராசரியாக 10 ஆயிரம் தேங்காய் மட்டைகளில் இருந்து ஒரு டன் நார்க்கழிவு கிடைக்கும். இதனை மக்க வைக்க 5கிலோ யூரியா மற்றும் 5 புட்டிகள் புளுரோட்டஸ் காளான் வித்துக்கள் அவசியமாகும். நிழலில் 100கிலோ தென்னை நார்க்கழிவை சீராக பரப்பி அதன் மீது ஒரு புட்டி காளான் வித்தை மேலும் படிக்க..
காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி
ஆடிப்பட்ட காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டியதின் அவசியத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முருகேசன் விளக்கம் அளித்துள்ளார். காய்கறி விதைகளை விதைக்கும் முன்னர் விதைநேர்த்தி செய்வது அவசியம். குறிப்பாக தக்காளி, கத்தரி, மிளகாய் பயிரிட உள்ளவர்கள் விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். காய்கறி பயிர்களை வேரழுகல்நோய், வாடல் நோய், நாற்றழுகல் நோய், இலைப்புள்ளி நோய் என பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அவை விதைகள் மூலமாகவும் பரவுகின்றன. பூசண வித்துக்கள் மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய புதிய புத்தகங்கள்
பயிர் மேம்பாட்டில் பஞ்சகவ்யா விலை – Rs 35 கம்போஸ்ட் தயாரிக்கும் முறைகள் விலை – Rs 35 உங்கள் பிரதிகள் கிடைக்க அணுக வேண்டிய முகவரி: பேராசிரியர், சுற்று சூழல் துறை, தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோவை -641 003 தொலைபேசி:: 04226611252, ஈமெயில்:environment@tnau.ac.in ஆதாரம்: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
இயற்கை விவசாய கருத்தரங்கு
திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் நல்வாழ்வு ஆஸ்ரமத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி இயற்கை விவசாய கருத்தரங்கு நடைபெற உள்ளது. இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் கருத்து உரைக்கிறார். பயிற்சி கட்டணம் Rs 100. மதிய உணவு, குறிப்பேடு அளிக்க படும்.தொடர்புக்கு 09443043074 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
மல்பெரி பட்டுப்புழு கழிவுகளிலிருந்து இயற்கை உரம்
பட்டுப்புழு வளர்ப்பில் மல்பெரி உணவாக பயன்படுவதோடு உரமாகவும் பயன்படுகிறது.புழுக்களின் கழிவு மற்றும் எஞ்சிய இலைகள், தண்டு மற்றும் இதர கழிவுகளைக் கொண்டு அங்கக உரம் தயாரிக்கலாம். இந்த உரத்தில் மற்ற இயற்கை உரங்களைவிட அதிக அளவ சத்துக்கள் உள்ளன. நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் கந்தகச்சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளன. இந்த அங்கக உரமானது மல்பெரி பயிருக்கு மட்டுமல்லாது பிற பயிர்களுக்கும் பயன்படுகிறது. ஒரு ஏக்கர் மல்பெரி தோட்டத்தில் இருந்து இலை அறுவடை மேலும் படிக்க..
மாவுப்பூச்சி அழிப்பது எப்படி?
பப்பாளி, பருத்தி, கொய்யா மற்றும் பல விதமான பயிர்களை கபளீகரம் செய்யும் மாவுபூச்சி பற்றி ஏற்கனவே படித்தோம். தினமலரில், இந்த பூச்சியை இயற்கை முறையில் கட்டுபடுத்துவது பற்றி ஒரு செய்திவந்துள்ளது: வேளாண்மை உதவி இயக்குனர் பாஸ்கரன் அவர்களின் செய்தி குறிப்பு: வடமதுரை வட்டாரத்தில் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. தாக்குதலின் அறிகுறிகள் கிளைகள், தண்டுகள்,பழங்கள் பகுதிகளில் வெள்ளையாக அடைபோல் படர்ந்திருக்கும். சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் காணப்படும். ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும், மேலும் படிக்க..
இயற்கை முறை கத்திரி சாகுபடி
கத்திரி பயிரிக்குதான், எல்லா காய்கறி பயிர்களை விட அதிகமாக பூசிகள் வரும். அதனால், விவசாயிகள், அதிகமாக ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்துகின்றனர். மொன்சொண்டோ நிறுவனம் கூட, BT கத்திரியின் மிக பெரிய நன்மையாக, பூச்சி கொல்லிகள் குறையும் என்று கூறுகிறது. அனால், அவர்களோ, கத்திரி செடியின் மரபணு அடிப்படையே மாற்ற பார்க்கின்றனர். இந்த இரண்டு பக்கங்களுக்கு இடையே, இயற்கை விவசாயம் மூலம், கத்தரியை பயிரிட முடியும், ரசாயன பூசிகொல்லிகளை பயன் படுத்தாமல், பயிர் இட முடியும் மேலும் படிக்க..
நிலக்கடலை மகசூல் பெருக நிலக்கடலை ரிச்
தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், நிலக்கடலை மகசூல் அதிகரிக்க, “நிலக்கடலை ரிச்” என்ற ஒரு டானிக் உருவாக்கி இருக்கிறது. இது நிலக்கடலை தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் ஆகும். இதன் பயன்கள் அதிக பூ பிடிக்கும் திறன் குறைந்த பொக்கு கடலைகள் விளைச்சல் 15 சதம் வரை கூடும் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும் பயன்படுத்தும் முறை அளவு : ஏக்கருக்கு 2.20 கிலோ தெளிப்பு திரவம் : 200 லிட்டர் தெளிக்கும் மேலும் படிக்க..
வாழை மகசூல் பெருக “வாழை சக்தி”
தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (National Research Center for Banana – NRCB) திருச்சி அருகே உள்ள தயனுர் என்ற ஊரில் உள்ளது. இது, Indian Council of Agricultural Research நிறுவனத்தின் ஒரு பிரிவாகும். இந்த நிறுவனம், வாழைக்கு என நுண் சத்துக்கள் கொண்ட தாவர வளர்ச்சி ஊக்கி ஒன்றை கண்டு பிடுத்து உள்ளது. இதற்கு, “வாழை சக்தி” என்று பெயர். இந்த தாவர வளர்ச்சி ஊக்கியில் ஜின்க், இரும்பு, போரோன், செம்பு போன்ற மேலும் படிக்க..
வேகமாக பரவுகிறது மாவுப்பூச்சி, வேளாண் துறை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் பரவி வரும் மாவு பூச்சி பற்றியும், அதனால், எப்படி கொய்யா தோட்டங்கள் பாதிக்கபடுகின்றன என்றும் பார்த்தோம். பப்பாளி செடியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுபடுத்த வழிமுறைகள் பற்றி தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொறுப்பு) இக்னேஷியஸ் ரோச் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் பொங்கலூர், பல்லடம், குடிமங்கலம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில், பப்பாளி பூச்சி என்ற மாவுப்பூச்சி வேகமாக பரவி வருகிறது. நோய் மேலும் படிக்க..
உர மேலாண்மை டிப்ஸ்
விவசாயிகள் உர மேலாண்மையை கடைப்பிடிப்பதன் மூலம் அரசுக்கு ஏற்படும் உரமானிய செலவினத்திலும், தங்கள் செலவினத்திலும் ஓரளவு மிச்சப்படுத்த முடியும் என்று திருவண்ணாமலை வேளாண் உதவி இயக்குநர் ரமணன் யோசனை தெரிவித்தார். உர மேலாண்மை அவர் கூறும் யோசனைகள் மண்வள அட்டை கொண்டு உரமிடுதல்: தமிழகத்தில் உள்ள பலவகையான மண்களில் ஊட்டச்சத்து நிலை மாறுபடுகிறது. எனவே, அனைத்து வகை மண்ணுக்கும் ஓரே அளவு உரமிடுதல் அவசியமற்றது. தேவைக்கு அதிகமான உரத்தை பயன்படுத்தும்போது விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகமாகிறது. மண்ணின் மேலும் படிக்க..
சிறுநீர் உரம் ஆகுமா? – ஆம்!
பசு மாட்டின் சிறுநீர் பற்றி நாம் படித்து இருக்கிறோம். பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்கள் பசுவின் கோமூத்திரம் மூலம் தயாரிக்க படுகின்றன. மாடுகள் இல்லா விட்டால் என்ன பண்ணுவது? நாம் இருக்கிறோமே! ஏற்கனவே, நாம் இன்னொரு ஆராய்ச்சியில், சிறுநீரும், மர சாம்பலும் இணைத்து காய்கறி செடிகளுக்கு கொடுத்தால் செடிகள் நன்றாக காய்க்கும் என்பதைபார்த்தோம். இதோ, இன்னொரு செய்தி: பின்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மனித சிறுநீரை நேரடியாக உரமாக வெள்ளரிக்காயகளுக்கு பயன் படுத்தி அதன் மூலம் விளைந்த விளைச்சலை மேலும் படிக்க..
இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்
வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து, இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது. நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து மேலும் படிக்க..
புதிய ராட்சசன் – மாவுப்பூச்சி
பயிர்களுக்கும், விவசாயிகளுக்கும் புதிய தலை வலி கொடுக்க வந்துள்ள இந்த மாவுப்பூச்சியை பற்றி படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. இப்படியெல்லாம் ஒரு பூச்சி இருக்குமா என்று. சக்தி வாய்ந்த ரசாயன பூச்சிகொல்லிகள் சாதாரணமாக பயன் படுத்தியதால், இப்போது, இயற்கை, இப்படி எதிர்த்து செயல்படுகிறதோ என்னவோ?. பரிணாம வளர்ச்சியால் இப்படி புதிய ராட்சசன் முளைத்து இருக்கிறதோ என்னவோ? இதோ, சூப்பர் வில்லன் மாவு பூச்சியின் சிறப்பு இயல்புகள்: காற்று மற்றும் நீர் வழியாக பரவும் ஒன்றல்ல, இரண்டல்ல, 300 மேலும் படிக்க..
கொய்யா தோட்டங்களை அழிக்கும் மாவுப்பூச்சி
மனிதர்களுக்கு ஆண்டி பயோடிக் மருந்துகள் தாறு மாறாகவும், தேவை அற்ற நேரங்களில் கொடுத்ததின் விளைவு, இப்போது, எந்த மருந்தாலும் கொள்ள முடியாத புது பக்டீரியா NDM-1 உருவாகி உள்ளது. இந்த பக்டேரியாவினால் வரும் வியாதிகளுக்கு ஒரு மருந்தும் இல்லையாம். பயிர்களிலும் இதே கதி தான். சக்தி வாய்ந்த ரசாயன கொல்லிகள் எல்லாம் கடந்த 50 ஆண்டுகளில் பயன் படுத்தி, இப்போது, இயற்கையில் எல்லா பூச்சி கொல்லிகலாலும் கொல்ல முடியாத புதிய பூசிகள் வர ஆரம்பித்து விட்டன. இந்த மேலும் படிக்க..
இஞ்சி பூண்டு கரைசல் என்றால் என்ன?
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாய் திருமதி ராஜரீகா அவர்களின் இயற்கை பூச்சி கொல்லி கண்டுபிடிப்பு ஒன்றை ஏற்கனவே பார்த்துள்ளோம். இதோ, இன்னும்ஒன்று: இஞ்சி பூண்டு கரைசல் இந்த கரைசலை தயாரிப்பது எப்படி? ஒரு கிராம் இஞ்சி, ஒரு கிராம் பூண்டு , இரண்டு கிராம் பச்சை மிளகாய் எடுத்து கொள்ளவும். இவற்றை நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு பிளாஸ்டிக் கானில் ஐந்து லிட்டர் பசுவின் சிறுநீர் (கோமூத்திரம்) எடுத்துக்கொண்டு, அதில் இதை கரைக்கவும். பத்து நாட்கள் மேலும் படிக்க..
பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி?
பஞ்சகவ்யா இயற்கை உரமாகவும், பயிர்களுக்கு பூச்சி எதிர்ப்பு திறன் தருவது மட்டுமில்லாமல், விதை நேர்த்திக்கும் பயன் படுத்தலாம். பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி என்பதை ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை விவசாய பண்ணை பயிற்சி இயக்குனர் ஜெயராமன் விளக்குகிறார்: ஏக்கருக்கு தேவையான விதை நெல்லை தெளிப்புக்கு முன் நூறு லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவை கலந்து விதை நெல்லை சாக்குடன் போட்டு 12 மணி நேரம் ஊரவைக்க வேண்டும். பின் விதை நெல்லை எடுத்து மேலும் படிக்க..
நிலக் கடலையில் அதிக மகசூல் பெற உரமிடும் முறை
நிலக் கடலையில் அதிக மகசூல் பெற வேளாண் உதவி இயக்குநர் ப.சௌந்தரராஜன் அவர்களின் வழிமுறைகள்: மண் பரிசோதனை அடிப்படையில் தழைச் சத்து, மணிச் சத்து மற்றும் சாம்பல் சத்தை ஆய்வு செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால் ஏக்கர் ஒன்றுக்கு யூரியா மானாவாரியில் 9 கிலோவும், இறவையில் 15, சூப்பர் பாஸ்போட் மானாவாரியில் 25, இறவைக்கு 85, பொட்டாஷ் 3 கிலோவும், இறவையில் 36 கிலோ உரங்களை அடி உரமாக இட வேண்டும். இத்துடன் 5 கிலோ மேலும் படிக்க..
நிலையான வேளாண்மை என்றால் என்ன?
நமக்கு, அங்கக மற்றும் ரசாயன வேளாண்மை பற்றி தெரியும். நிலையான வேளாண்மை என்றால் என்ன? “இயற்கையில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து, மண் வளத்தையும், சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மகசூலை அதிகப்படுத்தும் முறை நிலையான வேளாண்மை என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை மூலம் இயற்கை வளம் மேம்படுத்தப்படுகிறது ” என்கிறார் திருநாவலூர் வேளாண்மை உதவி இயக்குநர் கே.ரவீந்திரன். நிலையான வேளாண்மைக்கு கீழ்க்கண்ட தொழில்நுட்பங்கள் உதவி புரிகின்றன தொழு உரம் மற்றும் பண்ணைக் கழிவு இடுதல்: சாணம், எரு போன்ற மேலும் படிக்க..
புதிய கரும்பு பயிர் SI7
புதிய கரும்பு பயிர் TNAU sugarcane SI7 சிறப்பு இயல்புகள்: அதிக மகசூல் அதிக சர்க்கரை சத்து எளிதாக தோகை உரியும் சுனை அட்ட்றது போகாத தன்மை பெற்றது வறட்சி மற்றும் அதிக நீர் தேக்கத்தை தாங்கும் செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் வயது:11 மாதம் பருவம்: முன் பட்டம் மகசூல்: நடவு பயிர்: கரும்பு: 154 டன்/ஹெக்டர்; சர்க்கரை: 20.5 டன்/ஹெக்டர் மருதாம்பு பயிர்: கரும்பு: 146 டன்/ஹெக்டர்; சர்க்கரை: 19.4 டன்/ஹெக்டர் அதிக மேலும் படிக்க..
புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1
புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1 (TNAU Chilli hybrid CO1) சிறப்பு இயல்புகள்: நன்கு படர்ந்து வளர கூடியது காய்கள் இளம்பச்சை நிறத்தில், நுனி கூர்மையுடன், 10-12 சென்டிமீட்டர் நீளம் பழ அழுகல் நோய்க்கு மித எதிர்ப்பு திறன் வயது195-205 நாட்கள் பருவம் – ஜூன் -ஜூலை, செப்டம்பர் அக்டோபர் மற்றும் ஜனவரி பெப்ரவரி மகசூல் 28 டன்/ஹெக்டர் மிளகாய் வத்தல் 6.74 டன்/ஹெக்டர் பயிர் வெளியீடு – 2010 நன்றி: மேலும் படிக்க..
மண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி
மண்ணில் இருந்து பயிர்களுக்கு வரும் பூஞ்சன்களால், பயிர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் உண்டாகின்றன. இதை தடுக்க, solarization of soil என்ற முறை கையான்றால், Fusarium Oxysporum, Macrophomina Phaseolina போன்ற பூஞ்சணங்கள் கட்டுபடுத்த முடியும். இந்த முறை படி, நிலத்தின் மீது, வெயில் உள்ளே போகும் படியான transparent polythene ஷீட்களை குறைந்தது 15 நாட்கள் நிலத்தின் மீது போட்டு வைக்க வேண்டும். கற்களை மேல் வைத்து ஷீட்கள் நகராமல் பார்த்து கொள்ள வேண்டும. இப்படி செய்தால் மேலும் படிக்க..
லேடி பர்ட் மூலம் இயற்கை பூச்சி கட்டுப்பாடு
லேடி பர்ட் (lady bird) எனப்படும் இந்த பூச்சி விவசாயிகளின் நண்பன். இந்த பூச்சியை நீங்கள் தோட்டங்களில் பார்த்திருக்கலாம். அழகாக, சிவப்பும் கருப்பு நிறமும் DMK கலர் கொண்டிருக்கும் இந்த பூச்சி செடிகளில் உள்ள சிறிய larva, measly bug, white fly, aphids போன்றவற்றை பிடித்து தின்னும். இலைகளை தாக்கும் புழுக்களையும் பிடித்து தின்னும் கொத்துமல்லி, பீன்ஸ், பூச்செடிகள் இருக்கும் இடங்களை இந்த பூச்சிகள் நாடுகின்றன. இந்த பூச்சிகள் தோட்டங்களில் இருந்தால், வீட்டு தோட்டங்களில் ரசாயன மேலும் படிக்க..
பஞ்சகவ்யா செய்முறை
இயற்கை உரமான பஞ்சகவ்யா செய்வது பற்றி ஹிந்து நாளிதழ் சிறப்பாக வெளியிட்டு உள்ளது. இதனை, இந்த இணையத்தளத்தில் காணலாம். இங்கே, தமிழில்: பஞ்சகவ்யவின் பார்முலாவும் தயாரிக்கும் வழியும். முதலில் 5 கிலோ பிரெஷ் பசுமாடு சாணம் எடுத்து கொள்ளவும் அதில், 3 லிட்டர் பசு மூத்திரம் சேர்க்கவும் அதில், 2 லிட்டர் பசும்பால் சேர்க்கவும் அரை கிலோ பசும் நெய் சேர்க்கவும் இந்த கூட்டில், மூன்று தேங்காய் இளநீர் சேர்க்கவும் ஒரு டசன் நல்ல பழுத்த, அல்லது மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விவசாயம் வல்லுநர் திரு நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு, இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறது. இதோ, இந்த மாதத்திற்கான பயிற்சிகள்: வேப்பன்காரன் பாளையம், ஈரோட் – 9 aug தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 09442531699 வானகம், கடவூர் – 16, 22, 23, 26, 31 august தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 09626092408
மானிய விலையில் விதைநெல்
கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தில் மானிய விலையில் விதைநெல் வழங்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு 2010-11-ம் ஆண்டுக்கு விவசாயிகளுக்குச் சான்று பெற்ற விதைநெல், கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படும். 10 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடியைக் குழுக்களாகச் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும். நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள, உழவர் வயல்வெளிப் பயிற்சிப் பள்ளிகள் நடத்தி ஒரு உழவருக்கு மேலும் படிக்க..
விதை நேர்த்தி செய்ய இலவச பஞ்சகவ்யா
“விதை நேர்த்தி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா இலவசமாக வழங்கப்படும்’ என ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை விவசாய பண்ணை பயிற்சி இயக்குனர் ஜெயராமன் தெரிவித்தார். சாகுபடியில் முதல் நிலை விதை நேர்த்தி மிகமுக்கியம். விதை நேர்த்தி செய்வதன் மூலம் பழுது இல்லாமல் விதை முளைக்கும். நோய் தாக்குதலை விதையிலேயே தடுக்க முடியும். பயிர் செழிப்பாக வளர ஊட்டச்சத்தாகும். எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் பூஞ்சானை இயற்கை விவசாய முறையில் எளிமையாக செய்வதுதான் பஞ்கவ்யா நேர்த்தி. இதற்காக மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பயிற்சி
மதுரை ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை பயிற்சி கூடம் மற்றும் நபார்டு வங்கி சார்பில், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் இன்று (03/08/2010) இலவச இயற்கை விவசாய பயிற்சி நடக்கிறது. மலர், நெல், காய்கறி சாகுபடியில் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு மருந்து தெளிப்பு உத்திகளும் அதன் செயல்முறைகளும் என்னும் தலைப்பில் விவசாயிகள் மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது. விபரங்களுக்கு ம்ரிட்ஸ்னா இயற்கை விவசாய பண்ணையை 04522456889 என்ற தொலைபேசி எண்ணிலல் தொடர்பு கொள்ளலாம். மேலும் படிக்க..
இயற்கை உரமான மீன் அமிலம் தயாரிப்பது எப்படி?
எளிய இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை: ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மேலும் படிக்க..
புதிய உயிரி பூச்சிக்கொல்லி அறிமுகம்
புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் புழுக்களின் மீது நோயை உருவாக்கி அழிக்கும் வகையிலான நவீன 2 புதிய உயிரி பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரித்துள்ளது. இவற்றில் “பெவேரியா பேசியானா’ (beauveria) என்ற பெயரில் தயாரிக்கப்படும் உயிரி பூச்சிக் கொல்லி மருந்து பவுடர் வடிவத்தில் இருக்கும்.இது ஒரு நன்மை தரும் வெண்மை பூஞ்சானம். நெல், தக்காளி, மணிலா, பருத்தி, பயறு வகைகள், சூரிய காந்தி,பச்சை மிளகாய், கனகாம்பரம், மேலும் படிக்க..
தென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர் பயன்கள்
தென்னை மரங்களுக்கு இடையே கோகோ மரம் ஊடு பயிர் பற்றிய இடவை ஏற்கனவே பார்த்தோம். மக்கள் டிவியில் தினமும் வரும் மலரும பூமி நிகழ்ச்சியில் இதனால் கிடைக்கும் பலன்களையும், பயன் படுத்தும் விவசாயிகளின் அனுபவங்களையும் காட்டுகிறார்கள். இதோ, இதை பற்றிய இன்னொரு செய்தி: தென்னையில் கோகோ ஊடுபயிராக சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டருக்கு ஆண்டுக்கு 1.65 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று ஆழியாறில் நடந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம், காட்பரி நிறுவனம் மேலும் படிக்க..
நெல் சாகுபடியில் ஒற்றை நாற்று நடவு செயல் முறைகள்
நெல் சாகுபடியில் புதிய ஒற்றை நாற்று நடவு மூலம் செம்மை நெல் சாகுபடி செய்து குறைந்த செலவில் அதிக விளைச்சல் ஏற்படுத்தி கூடுதல் லாபம் பெறமுடியும். இதன் செயல் முறைகள் பற்றி ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் கோபால் தெரிவித்து உள்ளாவது: செம்மை நெல் சாகுபடி செய்ய ஒரு ஏக்கர் நடவு செய்ய 3 கிலோ விதையை 30 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து ஒருநாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். முளைகட்டிய விதையை நாற்றாங்காலில் மேலும் படிக்க..
விகடன் பிரசுரத்தின் தரமான புத்தகங்கள்
விகடன் பிரசுரம் பதிப்பில் வெளி வந்துள்ள விவசாயம் பற்றிய தரமான நூல்கள்: பைசா செலவில்லாமல் பசுமை புரட்சி – தூரன் நம்பி – ரூ 70 மண்புழு மன்னாரு – பொன். செந்தில்குமார் – ரூ 50 இயற்கை வேளாண்மை – அ முதல் இக் வரை – பொன். செந்தில்குமார் – ரூ 60 உழவுக்கும் உண்டு வரலாறு – இயற்கை விஞானி நம்மாழ்வார் – ரூ 60 புத்தகங்கள் கிடைக்கும் விலாசம்: 757, அண்ணா சாலை, மேலும் படிக்க..
பொன்னீம் பூச்சிக்கொல்லி மூலம் கட்டு படுத்த முடியும் பூச்சிகள்
இயற்கை பூச்சி கொல்லி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். எளிமையாக தயாரிக்கப்படும் இந்த பூச்சி கொல்லி உபயோகம் செய்த விவசாயிகளின் கருத்துகளை தமிழ் நாடு விவசாய பல்கலை கழகம் வெளி இட்டுஉள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகேயுள்ள கொழுமண்ணிவாக்கம் கிராமம் முழுக்கவே ‘பொன்னீம்’ பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி பலன் கண்டு வருகிறது. கிராமத்தைச் சேர்ந்த ‘டான்வா பண்ணை மகளிர் குழு’ என்ற அமைப்பின் தலைவி உமாமகேஸ்வரி அதைப்பற்றி மகிழ்ச்சி பொங்க பேசினார். “நடவு நட்ட மேலும் படிக்க..
ஆட்டு ஊட்ட கரைசல் செய்வது எப்படி?
இயற்கை விவசாயத்தின் ஒரு தூணாகிய பஞ்சகவ்யா பற்றி படித்து இருக்கிறோம். மாடு இல்லாத விவசாயிகள், ஆடுகள் மூலமாகவும் அதே மாதிரியான கரைசலை தயார் செய்ய முடியும் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் முனைவர் தி.ராஜ்பிரவீன். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத ஆட்டு ஊட்டம் குறைந்த செலவில் அதிக லாபத்தை ஈட்ட வழிவகுக்கிறது என்கிறார் அவர். ஆட்டு ஊட்டம் தயாரிக்கும் முறை: ஆட்டூட்டம் தயார் செய்ய விவசாயிகள் மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனை பயன்படுத்தலாம். ஆட்டு மேலும் படிக்க..
மண் பரிசோதனை செய்வது எப்படி?
விவசாயிகள் அதிக அளவில் விளைச்சல் கிடைக்க பயிருக்கு, பேரூட்டச் சத்துகளான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் இயற்கையில் கிடைக்கும் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் சத்துகள், இரண்டாம் நிலை சத்துகளான கால்சியம், மக்னீசியம் சல்பர், நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான், மாங்கனீசு, மாலிப்டினம், குளோரின் போன்ற 16 வகையான சத்துகள் தேவை. இச்சத்துகளை முழுமையாக பயிர்களுக்கு வழங்கி தகுந்த நேரத்தில் பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கூடுதல் மகசூல் பெறலாம். மண் பிரசோதனையின் நன்மைகள்: மேலும் படிக்க..
பசுந்தாள் உரம் செய்வது எப்படி?
வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்க இயற்கை உரங்களில் மிக எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கூடியவை பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களை பயன்படுத்துமாறு வள்ளியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மார்சலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண் வளத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை இயற்கை உரங்களே ஆகும். இயற்கை உரங்களில் மிக எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்க கூடியவை பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களே ஆகும். பசுந்தாள் உரங்கள்:பசுந்தாள் உரம் என்பது ஒரு பயிரை பயிரிட்டு மேலும் படிக்க..
தென்னை மரங்களில் அதிக மகசூல் கிடைக்க வழி என்ன?
தென்னை மரத்தில் ஊடு பயிர் மூலம் அதிகம் மகசூல் பெரும் செய்தியை பார்த்தோம். காய்க்காமல் இருக்கும் மரங்களை காய்க்க வைக்கும் முறையை இப்போது பார்க்கலாம் இரண்டு கிலோ சூப்பர் பாச்பெட் (Super phosphate), ஒரு கிலோ உரியா (Urea) இருநூறு கிராம் போரக்ஸ் (Borax) கலந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மரத்தில் இருந்து மூன்று அடி தூரத்தில் ஒரு வட்ட குழி அமைத்து இட்டு வரவும். வழக்கம் போல் நீர் பாய்ச்சி வரவும். இதன் மூலம், மேலும் படிக்க..
கரும்பில் களை கட்டுப்படுத்துவது எப்படி?
“”கரும்பு பயிரில் ஏற்படும் களைகளை கட்டுப்படுத்த கரும்பு தோகை மக்க வைத்து உரமாக பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்,” என, மதுரை விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் காதிரி தெரிவித்துள்ளார். கரும்பு பயிரில் கொடிவகைகளை காணப்படும்போது, மகசூல் குறைவதுடன் கரும்பை வெட்டுவதற்கும் சிரமம் ஏற்படும், வெட்டுக் கூலியும் அதிகரிக்கும். இக்கொடிகளை கட்டுப்படுத்த, வரப்புகளை களையின்றி சுத்தமாக வைத்திருப்பதுடன், இக் கொடிகள் பூக்கும் பருவத்திற்கு முன்பே 2.4 டி அல்லது மெட்ரிபியூசின் களைக் மேலும் படிக்க..
நெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்
அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்திமுறைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் மற்றும் விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் அமுதா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நெல் ரகங்களின் வயதிற்கேற்றவாறு பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். நெல்கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலே அறுவடையை மேற்கொள்ளலாம். இதனால் மணிகள் உதிர்ந்து சேதமாவதைத் தடுக்கலாம். அறுவடையின்போது, ஈரப்பதம் 19 முதல் 23 சதவீதம் இருக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மேலும் படிக்க..
காளான் வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி முகாம்
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் ஆக. 3ஆம் தேதி காளான் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் காளான் வளர்ப்பு செய்வதற்கேற்ற ரகங்கள், தேவையான மூலப் பொருள்கள் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. எனவே, காளான் உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள அனைவரும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன் பெற லாம் என்று வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் தி. மேலும் படிக்க..
மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற யோசனைகளை
மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற உரங்கள் எவ்வளவு இட வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது மானாவாரியிலும், இறவையிலும் மக்காச் சோளம் அதிகப் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மற்ற பயிர்களைப் போல் அதிக அளவில் பூச்சி நோய் தாக்குதல் இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், சந்தையில் மக்காச் சோளத்துக்கு ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் கிடைத்து வரும் நிலையான கொள்முதல் விலைதான் என்பது காரணம். சாதாரணமாக விவசாயிகள் மேலும் படிக்க..
நிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி?
எண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுததி 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் கூறினார். விதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் (கடலை) 3 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா பாக்கெட்டை சூடு குறைந்த அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும். விதைப்புக்கு முன், ஒரு ஏக்கருக்கு 5 கிலோ கடலை மேலும் படிக்க..
வறட்சியைத் தாங்கும் சப்போட்டா
“வறட்சியைத் தாங்கி வளர்ந்து அதிக லாபம் தரும் பயிர் சப்போட்டா” என வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கின்றனர் இதன் சிறப்பு இயல்புகள்: வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது ஆண்டுக்கு 2 முறை அறுவடை செய்யக்கூடியது பராமரிப்பு செலவு மிகக் குறைவாகும். சாகுபடி காலங்களில் அதிகக் கூலியாள்களும் தேவையில்லை. முக்கியமாக, தண்ணீர் அதிகம் தேவைப்படாது. இதன் சாகுபடிக்கு சொட்டு நீர்பாசன முறை சிறப்பானது உரத் தேவையும் மிகக் குறைவு. நட்ட 3 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஏக்கருக்கு 65 செடிகள் வரை மேலும் படிக்க..
மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோய் கட்டுபடுத்துவது எப்படி?
மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் அதிகமாக இருப்பதால், அதைக்கட்டுப்படுத்தும் முறை குறித்து டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் நிலவும் மந்தமான தட்பவெட்பம், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோயின் தாக்கம் அதிகமாக தென்படுகிறது. அறிகுறிகள்: இந்நோய் தாக்கிய பயிரின் இலைகளின் மேல்புறத்தில் சிறு சிறு கண் வடிவப் புள்ளிகள் தோன்றிப் பழுப்பு நிற புள்ளிகளாக மாறும். நாளடைவில் நோய் தீவிரமடையும் போது புள்ளிகள் மேலும் படிக்க..
நெல் சாகுபடி பரப்பு 22 லட்சம் ஏக்கர் குறைவு!
உலகத்தில் எந்த சமுதாயமும் இப்படி எதிர் கொண்டிருக்கும் அழிவை அலட்சிய படுதியடில்லை. இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கும். ஒரு பக்கம் மக்கள் தொகை ஏறி கொண்டே போகிறது. இன்னும் முப்பது வருடங்களில், இந்திய சீனாவை மக்கள் தொகையில் பின் தள்ளி விடும். ஒரு பக்கம், இத்தனை மக்களுக்கும் உணவு எப்படி வரும் என்ற சிந்தனை மதிய அரசுக்கோ, மாநில அரசுக்கோ சுத்தமாக இல்லை. மும்பையில் மாடல் நடிகை தற்கொலை செய்து கொண்டால் பத்து நாட்கள் பொலம்பும் மேலும் படிக்க..
புதிய தக்காளி பயிர்
புதிய ரக தக்காளி – வீரிய ஒட்டு3 இந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எக்டருக்கு 96.2 டன் பழமகசூல் கொடுக்கக் கூடியது. இது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 129.5 டன் கொடுக்க வல்லது. வயது – 145-150 நாட்கள். பருவம் – பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், நவம்பர்-டிசம்பர். பயிரிட உகந்த மாவட்டங்கள்: கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, மேலும் படிக்க..
தென்னையில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்தல் செய்வது எப்படி?
விவசாயிகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்ப மிஷன் எனப்படும் திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்குகிறது தென்னை வளர்ச்சி வாரியம். மானியத்தோடு பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்கிறார்கள். அக்மார்க் தரத்தில் தேங்காய் எண்ணெய், தேங்காய் பவுடர் உற்பத்தி செய்வது, கொட்டாங்குச்சியை பயன்படுத்தி ஆக்டிவேட்டட் கார்பன் தயாரிப்பது, இளநீரில் வினிகர் தயாரிப்பது, இளநீரை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது, தேங்காய் உலர்த்தும் இயந்திரம் வாங்குவது என்று பல்வேறுவிதமான செயல்களுக்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது. அதிக பட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியமாக மேலும் படிக்க..
வருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை செடி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரு அழகர்சாமி என்பவர் வருடம் முழுவதும் காய்க்கும், வறட்சியை தாங்கும் முருங்கை செடி ஒன்றை கண்டு பிடுத்து இருக்கிறார். இந்த மரம் முளைத்து 5 மாதம் ஆன பின்பு காய்க்க ஆரம்பித்தும் அதன் பின்பு வருடம் முழுவதும் காய்கிரதாம். திரு அழகர்சாமி அவர்களை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: 6/39 தெற்கு தெரு, பள்ளபட்டி, நிலகோட்டை தாலுகா, திண்டுக்கல் மாவட்டம தமிழ் நாடு. மொபைல்: 09865345911 மற்றும் 09791774887 நன்றி: ஹிந்து நாளிதழ் மேலும் படிக்க..
புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1
புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1 சிறப்பு இயல்புகள்: அதிக மகசூல் இலை தண்டு பகுதிகளில் முட்கள் கொத்து கொத்து ஆக காய்க்கும் தன்மை காய்கள் முட்டை வடிவம் கொண்டன ஊதா நிற காய்களில் முனையில் சிறிது பச்சை நிறம் இலை புள்ளி, வாடல் நோய், எப்பிலாகின வண்டுகளில் தாக்குதல் எதிர்ப்பு வயது: 140 முதல் 150 நாட்கள் பருவம்: ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், கோடை மகசூல்: முதல் ஹெக்டர் பயிர் இட உகந்த மாவட்டங்கள்: மேலும் படிக்க..
புதிய தென்னை ரகம் : TNAU ALR 2
புதிய தென்னை : TNAU ALR 2 சிறப்பு இயல்புகள்: 5 – 5 1 /2 ஆண்டுகளில் காய்க்கும் திறன் சீரான மகசூல் கொடுக்கும் திறன் ஒரு வருடத்தில் 12 பாளைகள் காய்க்கு 135 கிராம் கொப்பரை ஹேக்கருக்கு 2 .57 டன் கொப்பரை; ஒரு டன் கொப்பரைக்கு 7400 கைகள் எண்ணை சத்து 65 % வறட்சியை தாங்கும திறன் காண்டாமிருக வண்டு, சிப்பு கூன் வண்டு இலை கருகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு மேலும் படிக்க..
கத்தரி பயிரில் பூச்சி கட்டுப்பாடு
கத்தரி பயிரில் பூச்சிகள் அதிகம் வரும். முறையாக பூச்சி மருந்துகளை பயன் படித்தினால், பூச்சிகளை கட்டு படுத்தலாம். இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுபடுத்தினால் இன்னும் நலம். இதோ, கத்தரி பயிரில் பூச்சிகளை கட்டுபடுத்தும் வழிமுறைகள்: தண்டு மற்றும் காய்த்துளைப்பான் நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச்செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து மேலும் படிக்க..
கத்தரி பயிர் இடுவது எப்படி?
மண் : நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் நிரம்பிய மண் வகைகள் உகந்தது. விதைப்பதற்கும் நடவிற்கும் ஏற்ற பருவம் : டிசம்பர் – ஜனவரி மற்றும் மே – ஜீன் விதை அளவு : 400 கிராம் ஒரு எக்டருக்கு. நாற்றாங்கால் அளவு: 100 சதுர மீட்டர் எக்டருக்கு. விதையும் விதைப்பும் ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது கேப்டான் அல்லது திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.மேலும் விதைகளை மேலும் படிக்க..
பயிர்களுக்கு உர டீ!
மனிதர்கள் டீ குடித்தால் உடல்நலத்துக்கு நல்லது என்று படித்து இருக்கிறோம். இப்போது, அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி. ராஜ்பிரவீன் அவர்கள் பயிர்களுக்கும் ஒரு டீ தயாரித்து இருக்கிறார். தமிழக விவசாயிகள் நடவு செய்யும் பயிரில், தோட்டங்களில் வாட்டம் காணப்பட்டால் தழைச்சத்து தரும் யூரியா உரங்களை அதிகளவு பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. இதனால், குறுகிய கால வளர்ச்சி பயிரில் காணப்பட்டாலும் பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதலால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி மற்றும் இழப்புகளை சந்திக்கின்றனர். மேலும் படிக்க..
விஷங்களாக மாறிவரும் காய்கறிகள்
“முட்டைகோஸ், பீட்ரூட், திராட்சை, கேரட் போன்ற சத்து மிக்க காய்கறிகள் நஞ்சாக மாறி வருகிறது,” என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார். பவானி நதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழா கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி கே.எம்.ஆர்., அரங்கத்தில் நடந்தது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது: “இந்தியாவில் ஆண்டுக்கு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டன் வரை விவசாய நிலங்களில் பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. பறவை இனங்கள் 200க்கும் அதிமாக உள்ளது. பூச்சிகள், சிலந்தி மேலும் படிக்க..
தென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர்
தென்னை மரங்களுக்கு இடையே கோகோ மரம் ஊடு பயிராக நடுவதால், நல்ல பயன் கிடைக்கிறது. இதனால், வருமானம கூடுகிறது. ஒரு ஹெக்டருக்கு ரூ 50000 வரை வருமானம் கிடைக்கிறது. கோகோ மர இலைகளால், மண் நல்ல பயன் அடைகிறது. களைகள் குறைந்து காணபடுகிறது. காட்புரி (Cadbury ) கம்பெனி விவசாயிகளுக்கு கன்று கொடுத்து, அவ்வபோது தேவையான அறிவுரைகளையும் கொடுகின்றனர். அவர்களே, கோகோ கொட்டைகளையும் வாங்கி கொள்கின்றனர். அரசாங்கமும் இதற்கு மானியம் கொடுகிறது. மேலும் விவரங்களுக்கு, மக்கள் டிவியில் மேலும் படிக்க..
இலவச வேளாண் வணிக பயிற்சி
மத்திய அரசின் நிதி உதவியுடன் இலவசமாக வழங்கப்படவுள்ள வேளாண் வணிக பயிற்சிக்கு வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்துடன் இணைந்து இப்பயிற்சியை அளிக்கும் மதுரை வாப்ஸ் பயிற்சி மையத்தின் தொடர்பு அலுவலர் எஸ்எ.அருள் தெரிவித்தது: படித்த வேலைவாய்பற்ற வேளாண்மை, கால்நடை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை, வனஇயல் மற்றும் மனைஇயல் பட்டாதாரிகள் சொந்தமாக வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனை தொழில் மையங்களை அமைத்துக்கொள்ளும் வகையில் இரண்டு மாதங்களுக்கு இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது. மதுரையில் மேலும் படிக்க..
பயிர் காப்பீட்டு திட்டம் – விவரங்கள்
பருவநிலை மாற்றங்களால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் மகசூல் இழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து விவசாயிகளும் “வானிலை சார்ந்த பயிர்க் காப்பீட்டு திட்டத்தில்‘ சேர்ந்து பயனடைய வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் தானியங்கி வானிலை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியுடன் பருவநிலை மாற்றங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுவதுடன், இந்த திட்டத்தில் சேர்ந்து பிரிமியம் செலுத்தும் விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை நேரடியாக கம்பெனி மூலம் காசோலையும் அனுப்பி வைக்கப்படும். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் வரியுடன் ஏக்கருக்கு மக்காச்சோளத்திற்கு மேலும் படிக்க..
தென்னை மரத்திற்கு இன்சூரன்ஸ் திட்டம் – விவரங்கள்
தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், தென்னை காப்பீட்டு திட்டத்தில் சேர்வதன் மூலம் வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து மீளலாம்.தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து விவசாயிகளுக்கு இந்த காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. திட்ட விவரங்கள்: தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வயல் வரப்புகளில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ தென்னை நடவு செய்திருந்தால் காப்பீடு செய்யலாம். குறைந்தபட்சம் 10 பலன் தரும் மரங்களாவது சாகுபடி செய்திருக்க மேலும் படிக்க..
வசம்பு – பூச்சிவிரட்டி
பசுமை தாயகத்தில் இயற்கை வழி பூச்சி விரட்டிகளை பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம். இதோ, இன்னொன்று பதிவு வசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர். நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10 கிலோ அளவில் தூவினால் மேலும் படிக்க..
இயற்கை வழி முறையில் பூச்சி கட்டுபாடு
மஞ்சள் கரைசல் சுமார் 20 கிராம் மஞ்சல் கிழங்கு சிறு சிறு தூண்டாக நறுக்கி 200 மில்லிலிட்டர் கோமியத்தில் ஒரு இரவு ஊற வரை வேண்டும். பிறகு அதை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் 2-3 லிட்டெர் வரை தண்ணிர் கலந்து நன்றாக வடிகட்டி செடிகளுக்கு தெளிக்கவேண்டும். கட்டுப்படும் பூச்சிகள் : கம்பளிபுழுக்கள் , அசுவுணிகள் , சிவப்பு சிலந்திகள் இஞ்சி கரைசல் 50 கிராம் இஞ்சிக்கிழங்கு நன்றாக அறைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 2-3 மேலும் படிக்க..
இயற்கையோடு விளையாடாதீர்கள் – இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை
புதுக்கோட்டை இயற்கைக்குப் புறம்பாகச் செயல்பட்டு, உலகை அழித்துவிடாதீர்கள் என்றார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார். புதுக்கோட்டை ரோஸ் தொண்டு நிறுவனம், இயற்கை விவசாயிகள் அமைப்பு ஆகியவை இணைந்து வாகைப்பட்டி இயற்கை விவசாயப் பண்ணையில் புதன்கிழமை நடத்திய பாரம்பரிய விவசாய மீட்பு மாநாட்டைத் தொடக்கிவைத்து மேலும் அவர் பேசியது: “விவசாயத்தில் பயன்படுத்தும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் விவசாய நிலங்கள் மட்டுமல்லாது கால்நடைகள், மனிதர்கள் என யாவும், யாவரும் விஷமாகிக்கொண்டிருக்கிறோம். ரசாயனம் கலந்த உணவால் இன்றைக்கு உலகே மேலும் படிக்க..
இயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி?
பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், அதிகளவு மகசூல் பெறவும் விதை நேர்த்தி முறையை வேளாண்துறை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் பரிந்துரையின்படி தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வேதியியல் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது பயிர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும், நிலமும் விஷத்தன்மை மற்றும் மாசு அடைவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் சுற்றுச்சூழலை மேலும் படிக்க..
வாழை சாகுபடி டிப்ஸ்
கற்பூரவல்லி வாழை ஏக்கருக்கு செலவு போக நிகர வருமானமாக 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்று கூறுகிறார் அனுபவ விவசாயி ஆசிரியர் பொன்னுராமன், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். களர் மற்றும் மணல் இல்லாத மண் வகைகள் ஏற்றது. ஏக்கருக்கு 900 கன்றுகள். ஏக்கருக்கு மண்புழு உரம் 3000 கிலோ, கடலை பிண்ணாக்கு 1200 கிலோ, அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் மற்றும் பஞ்சகவ்யா பயன்படுத்தி இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து பயன்பெற்றுள்ளார். மேலும் படிக்க..
இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி
இதுவரை நாம், இரண்டு வகையான இயற்கை பூச்சி கொல்லிகளை தெரிந்து கொண்டோம். போநீம் எனப்படும் பூச்சி கொல்லி, சென்னையில் உள்ள லயோலா காலேஜில் உள்ள பூச்சி ஆராய்ச்சி நிறுவனம் கண்டு பிடித்தது. இன்னொன்று, அரளி விதை மூலம் செய்ய படுவது. இப்போது, இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி என்ற ஊரில் உள்ள ராசி இயற்கை பார்மில் வேலை செய்யும் ராஜரீகா என்பவர் புதிதாக “ஐந்து இலை மருந்து” மேலும் படிக்க..
புதிய சூரிய காந்தி பயிர் – CO2
புதிய சூரியகாந்தி பயிர்: வீரிய ஒட்டு CO2 சிறப்பியல்புகள்: அதிக எண்ணை சத்து 40 % அதிக கொள்ளளவு எடை கொண்ட விதைகள்(48 கிராம்/ 100 மில்லி) வயது: 85-90 days பருவம்: ஆடி மற்றும் கார்த்திகை/மார்கழி பட்டம் மகசூல்: ஆடிப்பட்டம்: 1950 kg/hectare, கார்த்திகை பட்டம்: 2230 kg/hectare அதிக பட்ச மகசூல்: 3114 kg/hectare பயிர் இட உகந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் சூரிய காந்தி பயிரும் எல்லா இடங்களு நன்றி: தமிழ் நாடு வேளாண்மை மேலும் படிக்க..
புதிய நிலக்கடலை பயிர் – CO6
பெயர்: கோ 6 நிலகடலை சிறப்பியல்புகள்: வறட்சியை தாங்கும் தன்மை காய்கள் கொத்து கொத்து தன்மை உடைப்பு திறன்: 73% எண்ணை சத்து: 49% வயது: 125-130 days பருவம்: மானாவாரி (வைகாசி) மகசூல்: 1914 கிலோ/ஹெக்டர் பயிரிட உகந்த மாவட்டங்கள்: நாமக்கல்
சரத் பவரும் விவசாய துறையும்
மதிய வேளாண்மை துறை மந்திரி சரத் பவர் பிரதம மந்திரியிடம், தனக்கு அதிகமாக வேலை பளு அதிகம் இருபதாகவும் தனக்கு வேலை பளு குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது கடவுளாகவே கொடுத்துள்ள ஒரு சந்தர்பம். சரத் பவர்க்கு வேளாண்மை துறை என்பது ஒரு பொழுதுபோக்கு. (ஹாபி). அவருக்கு எந்தனையோ பணம் தரும் முக்கிய வேலைகள் உள்ளன. IPL கிரிக்கெட், இதற்கே பாவம் அவர்க்கு டைம் இல்லை. 800 மில்லியன் விவசாயிகளை கவனிப்பாரா, 800 மில்லியன் டாலர் புழங்கும் மேலும் படிக்க..
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி திரு நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி புதுகோட்டையில் ரோஸ் பௌண்டடின் ஜூலை 7 முதல் 9 வரை நடக்கிறது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி:: 09442531699
புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30
பெயர்: த வே ப க சோளம் கோ 30 சிறப்பியல்புகள்: தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்றது அதிக செரிமான தன்மை கொண்டது குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பான் மித எதிர்ப்பு தன்மை அடி சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு வயது: 100-105 பருவம்: மாணவரி (ஆடி பட்டம், புரட்டாசி மாடம்) இரவை – மாசி பட்டம் மகசூல்: மானாவரி: 2800 கிலோ/ஹெக்டர் இரவை: 3360கிலோ/ஹெக்டர் தீவன விளைச்சல்: மானாவாரி: 6990 கிலோ/ஹெக்டர் இரவை: 9220கிலோ/ஹெக்டர் உகந்த மேலும் படிக்க..
புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – ஆர் ஓய 3
பெயர்: த வே ப க டி ஆர் ஓய 3 (TRY 3) சிறப்பியல்புகள்: இட்லிக்கு ஏற்றது உவர் நிலங்களிலும் சாகுபடிக்கு உகந்தது அதிக அரவை திறன் (71%) அதிக முழு அரிசி காணும் திறன் (66 %) அதிக அவல் காணும் திறன் (82%) இலை சுருட்டி புழு, தண்டு துளைப்பான் மற்றும் புகையானுக்கு எதிர்ப்பு திறன் குலை நோய், இலை பழுப்பு புள்ளி இலை கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் வயது: 135 மேலும் படிக்க..
புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50
பெயர்: TNAU Rice CO 50 சிறப்பியல்கள்: சன்ன அரிசி நல்ல அரவை திறன் சமைபதற்கும் இட்லி தயரிப்பதர்க்கும் ஏற்றது குலை நோய், இல்லை உரை நோய், பழுப்பு புள்ளி நோய், பக்டீரியா இலை கருகல் ஆகிய நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. வயது: 130 முதல் 135 நாட்கள் பருவம்: பின் சம்பா, தாளடி மகசூல்: 6300 /கிலோ/ஹெக்டர் அதிகபட்ச மகசூல்: 10662 கிலோ/ஹெக்டர் நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் 2010 பயிர் மேலும் படிக்க..
கடலை செடிகளில் இருந்து பிரித்தெடுக்க ஒரு இயந்திரம்
நம் நாட்டில் கடலை ஒரு முக்கியமான எண்ணெய் வித்து பயிர். தமிழ்நாட்டில் பல இடங்களில் இது பயிர் இடபடுகிறது. ஆனால், கடலை செடியில் இருந்து கடலை பருப்புகளை எடுப்பது என்பது ஒரு கஷ்டமான வேலை. சாகுபடி செய்த செடிகளை, தரையில் அடித்தோ கல்லில் அடித்தோ, பிரித்து எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போதுஉள்ளே இருக்கும் கடலை பருப்பு உடைய வாய்புகள் அதிகம். அப்படிப்பட்ட கடலைகளை, எண்ணெய் எடுக்க பயன் படுத்த முடியாது. இதனால், விவசாய்கள் பாதிக்கபடுகின்றனர். இந்த மேலும் படிக்க..
வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற் றும் தொலைதூர கல்வி இயக்ககத் தின் மூலம் 21 சான்றிதழ் படிப் பிற் கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. பருத்தி மற்றும் மக்காசோளம் வீரிய ஒட்டு விதை உற்பத்தி, நவீன கரும்பு சாகுபடி, காய்கறி விதை உற்பத்தி, தோட்டக்கலை பயிர்களில் நாற்றங்கால் தொழில் நுட்பங்கள், காளான் வளர்ப்பு, பழங்கள், காய்கறிகளை பதப்படுத்துதல், தரிசு நில மேம்பாடு, தேனீ வளர்ப்பு, திடக்கழிவுகளும், மண்புழு உரம் தயாரித்தல், பண்ணை கருவிகள் இயந்திரங்கள் பழுது மேலும் படிக்க..
சொட்டு நீர் பாசனத்தால் முருங்கை மகசூல் அதிகரிப்பு
சொட்டுநீர் பாசன முறையை கையாண்ட முருங்கை தோட்டத்தில் மகசூல் மும்மடங்கு பெருகியுள்ளது. கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை வாடிப்பட்டி பகுதியில் பயிரிடப் பட்டுள்ள முருங்கை மரங்கள் இயல்பான முறையில் நீர் பாய்ச்சி, உரமிட்டு,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட 120 மரங்களில் மரம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 10கிலோ மகசூல் கிடைத்தது. மகசூல் குறைந்ததற்கு காரணம் பாசனநீர் மற்றும் உரம் ஆகியவை பெருமளவு வீண் ஆனதே காரணம். தற்போது சொட்டுநீர் பாசன முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் மேலும் படிக்க..
எள் சாகுபடி செய்வது எப்படி
எள் எல்லாவித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. இருப்பினும் வடிகால் வசதியுள்ள மணலும், வண்டலும் சமபங்கு கலந்தது. எள் பயிருக்கு ஏற்றது. செம்மண் மற்றும் கருவண்டல் மண் வகைகளும் சாகுபடிக்கு ஏற்றதே. கோடையில் டி.எம்.வி.4, டி.எம்.வி.3, கோ1, வி.ஆர்.ஐ.1 ரகங்களை சாகுபடி செய்யலாம். எள்ளினை விதைக்கும் முன் ஒரு கிலோ எள்ளிற்கு இரண்டு கிராம் கார்பன்டைசிம் மருந்தை ஒரு பாலிதீன் பையில் போட்டு குலுக்கி குறைந்தது விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும். மேலும் படிக்க..
திருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு
திருச்சியில் இரண்டு நாட்கள் நடக்கவுள்ள வேளாண் கண்காட்சியில் வட்டார விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி நவலூர் குட்டப்பட்டு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஜூலை மாதம் ஒன்று, இரண்டு தேதிகளில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை (ஆத்மா) திட்டத்தின் கீழ் வேளாண்மை கண்காட்சியும் கருத்தரங்கும் நடக்கிறது. வேளாண்மை துறையில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் இயந்திரங்கள், கால்நடை வளர்ப்பு, உள்நாட்டு மீன் வளர்ப்பு, பட்டு வளர்ப்பு குறித்து வேளாண்மை துறை பேராசிரியர்கள், மேலும் படிக்க..
கடற்கரையில் காய்கறி சாகுபடி!!
சென்னையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கறையில் திரு. T. K. வெங்கடராமன் அவர்களின் 2 கிராவுண்ட் நிலத்தை பார்த்தால் அனைவருக்கும் ஒரு மாறுதலான எண்ணம் தோன்றும். இவரது நிலம் கடற்கரையிலிருந்து 250 அடி தூரத்திலிருக்கிறது. முழுவதும் மணல் தான் இருந்தது. இங்கு தென்னை மற்றும் சவுக்கு மரங்களே வளர்க்க முடியும். நிலத்தை தயார் படுத்துதல் : நிலத்தை சரிசெய்யும் வேலையில் முதலாக செய்தது, நிலத்தை சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பினார். மேலும் படிக்க..
இயற்கை பூச்சி கொல்லி
30 கிராம் அரளி கொட்டைகளை எடுத்து அரைத்து, 10 அல்லது 12 லிட்டர் நீரில் கலக்கவும். அதனுடன், காதி சோப்பு பௌடரை கலக்கி, இரவில் ஊற விடவும். மறு நாள், இந்த நீரை செடிகளின் மீது தெளிக்கலாம். இது நிறைய பூசிகளை அழிக்கும் ஆற்றலைகொண்டது. ஆதாரம்: ஹிந்து
சிறுநீர் உரம் ஆகுமா?
நம்முடைய சிறுநீரில் nitrogen நிறைய இருக்கிறது. இந்த உண்மையை வைத்து கொண்டு, சுரேந்திர பிரதான் என்ற ஆராய்ச்சியாளர், சிறுநீரிலிருந்து நல்ல எரு தயாரிப்பது எப்படி என்று கண்டு பிடித்து உள்ளார். சிறுநீரும், மர சாம்பலும் இணைத்து காய்கறி செடிகளுக்கு கொடுத்தால் செடிகள் நன்றாக காய்கின்றன. எந்த விதமான வியாதிகளும் வருவதில்லை. சிறுநீர் என்பது 99 % கிருமிகள் இல்லாத ஒரு திரவம். இதனால், ஒருவர் இடமிருந்து கிருமிகள் பரவ வாய்ப்பே இல்லை! நம்ப முடிய வில்லையா? இதோ மேலும் படிக்க..
பழ வகைகளில் சீராக பழுக்க செய்யும் தொழில்நுட்பம்
மா, வாழை மற்றும் பப்பாளி போன்ற பழ வகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு, பின்பு பழுக்கவைக்கப்படுகின்றன. இயற்கையாக இவ்வகை பழங்கள் பழுக்கவைக்கப்படும் போது மெதுவாக பழுப்பதினால், அவற்றின் எடை குறைதல், உளர்ந்து போதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும். வியாபார ரீதியில் வளர்க்கப்படும் தைவான் ரெட் லேடி போன்ற பப்பாளி ரகங்களில், பழங்கள் முழுவதுமாக பழுக்காமல், நுனியிலும் அடியிலும் கெட்டியாகவும், மத்தியப்பகுதியில் மென்மையாகவும் இருக்கும். பொதுவாக பழவகைகளின் பழுக்கும் மேலும் படிக்க..
இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?
குறிஞ்சிப்பாடி : நவரை நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை துறை அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பால் பருவத்திலுள்ள பின்பட்ட நவரை நெல்பயிரில் இலை சுருட்டு புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இலை சுருட்டுப் புழுவின் புழுக்கள் இலைகளை நீள வாட்டத்தில் மடித்து பச்சையத்தை சுரண்டி உண்பதால் பாதிக்கப் பட்ட இலைகள் திட்டு திட்டாக வெள்ளையாக இருக்கும். இலைகளின் பச்சையம் புழுக்களால் சுரண்டி மேலும் படிக்க..
இந்திய தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கீரை வகைகள்
பெங்களூரில் உள்ள இந்திய பழ மற்றும் தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனம் ( Indian institute of horticultural research), புதிதாக இரண்டு வகை கீரைகளை அறிமுகம் படுத்தியுள்ளது. பலக் (Palak) மற்றும் அமரந் (amaranth)வகை கீரைகள் இவை. அற்கா சுகுணா அற்கா அருணிமா என்பவை அமரந் வகை கீரைகள். அர்க அனுபமா என்பது பலக் வகை கீரை. இவை, நல்ல வாசனை மற்றும் சுவையோடு இருக்கின்றன. இவற்றில், கால்சியம், வைட்டமின் A C அதிகம். நாட்டில் மேலும் படிக்க..
மண் புழு உரத்தினால், உப்பு நிலங்களைமாற்ற முடியும்!
மண் புழு உரத்தினால், உப்பு அதிகமான நிலங்களை திருத்தி, நல்ல நிலங்கள் மாற்ற முடியும் என்று கண்டு பிடித்து இருக்கிறார், Dr சுல்தான் அஹ்மத் இஸ்மாயில். அவர், சென்னையில் உள்ள நியூ காலேஜில் உள்ள மண் பற்றிய ஆராய்ச்சி நிறுவத்தின் (The Institute of Research in Soil Biology and Biotechnology (IRSBB)) தலைவராக இருந்தவர். அப்போது, அவர், உத்தர் பிரதேசத்தில் உள்ள பூமி சுதர் நிகம் என்ற அமைப்போடு சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடு பட்டார். மேலும் படிக்க..
இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி
இயற்கை விஞானி ஆன நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜூன்) 23 மற்றும் 28 தேதிகளில் இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும. 09442121473 ஜூன் 30 ஆம் தேதி, பெரம்பலூரில் பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியில் சேர, 09442531699என்ற தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளவும்.
முள்ளங்கி பயிரிடும் முறை
மலைப் பகுதிகளுக்கு இரகங்கள் : நீலகிரி சிகப்பு, ஒயிட்ஐசிக்கில், ஜப்பானிஸ் (நீர்) சமவெளிப் பகுதிகளுக்கு கோ 1, பூசாராஷ்மி, பூசாதேசி, ஜப்பானிஸ் ஒயிட், அர்கா நிஷாத். மண் மற்றும் தட்பவெப்பநிலை : அனைத்து வகையான மண்ணிலும் முள்ளங்கியை சாகுபடி செய்யலாம். அதிக விளைச்சல் பெற இயற்கையான எரு மிகுந்த இலேசான மணல் சார்ந்த கார அமில அளவு 5.5-6.8 கொண்ட வண்டல் நிலம் மிகவும் உகந்தது. பருவம் : முள்ளங்கியை வெப்பமண்டல சமவெளிப் பகுதி வெப்பம் குறைந்த மேலும் படிக்க..
பசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி?
விவசாயிகள் உரச் செலவைக் குறைக்க பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கா. ராஜன் கூறினார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: ரசாயன உரங்களின் பயன்பாட்டால் மண் வளம் ரசாயனக் குணங்களாக மாற்றப்பட்டு, வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது பருவ மழை பரவலாகப் பெய்து வருகிறது. அடுத்து வரும் சாகுபடி பயிர்களுக்கு ஏற்ற அங்கக சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்த பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிடுவதற்கு இதுவே தக்க தருணமாகும். இதற்காக மேலும் படிக்க..
கரும்புக்கு சொட்டு நீர் பாசனம்
கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் அவசியம் குறித்து வாசுதேவநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மழை இல்லாத காரணத்தால் கிணறுகளில் நீர் குறைவாக காணப்படுகிறது. எனவே குறைந்த நீரை கொண்டு சொட்டு நீர் பாசனம் மூலம் அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து வருமானத்தை பெருக்கலாம்.கரும்பு பயிருக்கு தேவையான நீரையும், உரங்களையும், பூச்சி மருந்துகளையும் தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக வேர் பகுதியின் மேலும் படிக்க..
மண் புழு உரம் தயாரிப்பில் புதுமை
திரு P.P சனல் குமார் கேரளாவை சேர்ந்தவர் அவர், மண் புழு உரம் தயாரிப்பில் ஒரு புதுமை கண்டு பிடுத்து இருக்கிறார். பொதுவாக, மண் புழு உரம் செய்ய, மண்ணில் பள்ளம் தோண்டி செய்வார்கள். இவர், அதற்கு பதிலாக, வேறு வழி பயன் படுத்துகிறார். துணி உணர்த்தும் கொடியில் சிறு சிறு polyethene பைகளை தொங்க விடுகிறார். அவற்றில், மண்ணையும், இல்லை தழைகளையும் நிரப்பி, 100 முதல் 200 மண் புழுக்களை விடுகிறார். மாட்டு சாணத்தையும் நன்றாக மேலும் படிக்க..
மட்கிய உரம் தயாரிப்பது எப்படி?
அங்கக கழிவுகள் மற்றும் அங்கக (organic) பொருட்கள், முழுவதமாக மட்கிய நிலையில் மட்கிய உரம் என்று அழைக்கப்படுகிறது. கரும்புச் சக்கை, வைக்கோல் புல், களை போன்றவற்றை கொண்டு மட்கிய உரம் தயாரிக்கலாம். சராசரியாக 0.5% தழைச்சத்தும், 0.15% மணிச்சத்தும், 0.5 % சாம்பல் சத்தும் இதில் இருக்கும். பண்ணை மற்றும் தோட்டங்களில் இருந்து வரும் உரம் – ஒரு டன்னுடன் (1000 கிலோ) 10-15 கிலோ ராக் பாஸ்பேட் அல்லது சூப்பர் பாஸ்பேட் கலப்பதன் மூலம், அதன் மேலும் படிக்க..
சாம்பல் பூசணி பயிரிடும் முறை
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல ஆழமான இருமண்பாட்டு நிலத்தில் நன்கு வளரும். மானாவாரியில் பயிர் செய்ய களிமண் கலந்த நிலம் சிறந்தது. சாம்பல் பூசணியின் வளர்ச்சிக்கு அதிக குளிரில்லாத ஓரளவு வெப்பமான பருவநிலை மிகவும் உகந்தது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத் தன்மை 6.5-7.5 இருத்தல்வேண்டும். பருவம் : ஜீலை மற்றும் ஜனவரி விதையும் விதைப்பும் விதையளவு : எக்டருக்கு 2.5 கிலோ விதைகள், விதைகளை விதைக்கும் முன்னர், ஒரு கிலோ விதைக்கு இரண்டு லிட்டர் மேலும் படிக்க..
சின்ன வெங்காயம் பயிரிடும் முறை
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. களர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண் நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம். வெப்பமான பருவ நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும். சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிலத்ததன்மை 6-7 இருத்தல்வேண்டும். பருவம் : ஏப்ரல் – மே மற்றும் அக்டோபர் – நவம்பர் நிலம் தயாரித்தல் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை மேலும் படிக்க..
தென்னை தோட்டத்தில் அதிக வருமானம் பெறுவது எப்படி?
தென்னை தோட்டத்தில், ஊடு பயிர்களாக காய்கறிகளும், பயறுகளும், வாழை, அன்னாசி போன்றவற்றை பயிர் செய்து அதிக மகசூல் பெற்றுள்ளார், கேரளாவில் உள்ள ஒரு விவசாயி. இந்த முறையை ஆதரிக்கிறார், காசரகோடில் உள்ள Central Plantation Crops Research Institute நிறுவனத்தின் இயக்குனர் ஆனா Dr வ. ராஜகோபால் அவர்கள். காய்கறிகளும், பயறு வகைகளும் சிறுகிய காலத்தில் பயன் அளிக்கும் என்றும, வாழை போன்றவை தென்னை தோட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் பயன் அளிக்கும் என்கிறார் அவர். தென்னை மரங்கள் மேலும் படிக்க..
நிலக்கடலைக்கு தேவை ஜிப்சம்
தென்காசி:நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இட வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிலங்களில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிருக்கு பூக்கும் சமயத்தில் ஜிப்சம் இட வேண்டும். ஏக்கருக்கு 80 கிலோ வீதம் செடியை சுற்றி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இதனால் மண் இலகுவாகி பூக்கள் திரட்சியான காய்களாக மாறும்விதைத்த 45ம் நாள் நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இட்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் மேலும் படிக்க..
சோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை சமாளிப்பது எப்படி?
தென்காசி : சோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோள பயிரில் குருத்து ஈ தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இப்பூச்சி ஒரு வகை ஈ ஆகும். இது பழுப்பு நிறமாக இருக்கும். தாய் ஈயானது சற்று நீண்ட, தட்டையான வெண்மை நிற முட்டைகளை தனித்தனியாக தோகையின் அடிப்புறத்தில் இடுகிறது. முட்டைகளில் இருந்து 2, 3 நாட்களில் மேலும் படிக்க..
தென்னையில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்
தென்காசி : தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கியுள்ளார். தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவ்வண்டு பெரியதாக கருப்பு நிறமாக 5 சென்டி மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும். அதன் தலையின் மேல் பாகத்தில் காண்டா மிருகத்தின் கொம்பு போன்று ஒரு பாகம் இருக்கும். இந்த கொம்பு பெண் வண்டில் சிறியதாகவும், ஆண் வண்டில் பெரியதாகவும் இருக்கும். தாய் வண்டு நீள் மேலும் படிக்க..
பலா மரத்தின் மகிமைகள்
– பழ வகையில் அதிக எடையும் மகசூல் திறனும் கொண்டது பலா. பண்ருட்டி பலா பழத்தில் அதிக சுவை உள்ளதால் இதற்கு தனிப் பெருமை உண்டு. – ஆரம்ப காலத்தில் வரப்பு ஓர பயிராகவும், வீட்டுத் தோட்டத்திலும், நிழல் தரும் மரமாகவும் அறை கலன்கள் மற்றும் இசைக் கருவிகள் செய்வதற்காகவும் வளர்க்கப்பட்டது. – பலா மரத்தின் சிறப்புகளையும், அதிக வருவாய் ஈட்டும் திறன், குறைந்த பராமரிப்புச் செலவுகளை உணர்ந்த விவசாயிகள் தற்போது ஏக்கர் கணக்கில் பயிரிட்டு பண்ருட்டிக்கு மேலும் படிக்க..
வெண்டைக்காய் விவசாயத்துக்கு மாறிவரும் விவசாயிகள்
உளுந்தூர்பேட்டை, ஜூன் 9: உளுந்தூர்பேட்டை வட்டம், விருத்தாசலம் வட்டம் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தோட்டப் பயிரான வெண்டைக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். இவ்விவசாயம் செய்வதற்கு முதலில் நிலத்தை புழுதிபட நன்கு உழுது கொள்ளவேண்டும். பின்னர் அதில் தொழு உரம் (மக்கிய குப்பை) இட்டு கான் பரித்து நீர்பாய்ச்சி 45 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். இப்பயிருக்கு அதிகம் நீர் தேவைப்படும். 15 நாளுக்கு ஒருமுறை மருந்து அடிக்க வேண்டும். இம்முறை மேலும் படிக்க..
நிலக்கடலை அதிகம் மகசூல் பெறுவது எப்படி?
நிலக்கடலை பயிருக்கு உரக்கலவை கரைசல் தெளித்தல் மற்றும் ஜிப்சம் இடுதல் குறித்து தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் விளக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிலக்கடலை பயிரில் அதிக விளைச்சல் பெற உரக்கலவை கரைசல் தெளித்து ஜிப்சம் இடுவது அவசியம். நிலக்கடலையில் வெற்று காய்கள் உருவாவது பெரிய பிரச்னையாக இருகுகிறது. கடலை திரட்சியாக உருவாக உரக்கலவை கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும். உரக்கலவை கரைசல் தயாரிக்க டி.ஏ.பி.10 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், போராக்ஸ் 200 மேலும் படிக்க..
பயறு அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்
பயறுபயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். – பயறு வகை பயிர்களில் இமிடாகுளோபிரிட் மருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்வதால் தண்டு ஈ தாக்குதலிலிருந்து பயிர்கள் பாதுகாக்கப்படும். – பயறு வகை பயிருக்கு ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா ஒரு பாக்கெட் கலந்து விதை நேர்த்தி செய்வதாலும் இதே பயன் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு: தினமலர்
நெல் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்
நெல்பயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.விதைகள் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கவும், ஊட்டச்சத்துகள் பயிருக்கு கிடைப்பதை எளிதாக்கவும் விதை நேர்த்தி செய்வது அவசியம். – டிரைகோடெர்மா விரிடி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் அல்லது சூடோமோனாஸ் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயன்படுத்துவதால் விதை மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்தலாம். நெல் விதைகளை இம்மருந்து கொண்டு மேலும் படிக்க..
ஆட்டுக்கிடைகள் மூலம் இயற்கை உரம்
செயற்கை உரங்களை தவிர்த்து, வயல்வெளிகளில் ஆட்டுக்கிடைகளை அமைத்து இயற்கை உரமேற்றி விவசாயம் செய்வது அதிகரித்து வருகிறது. நெல் விவசாயத்தில் உற்பத்தி செலவு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. உற்பத்தி செலவினங்களை குறைக்கும் வகையில், விவசாயிகள் இயற்கை தொழில் நுட்பங்களை கடைபிடிக்க முன்வந்துள்ளனர். தற்போது செயற்கை உர பயன்பாட்டை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதற்காக வயல்வெளிகளில் ஆட்டுக்கிடைகளை அமைத்து உரமேற்றுவதை விவசாயிகள் தீவிரமாக பின்பற்ற துவங்கியுள்ளனர். இரு போகம் விளையும் கம்பம் பள்ளத்தாக்கில் கிடைகள் அமைப்பது ஏப்ரல் மேலும் படிக்க..
வேளாண் தொலைநிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது என்று இதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் வழங்கப்படும் சான்றிதழ் படிப்புகளில், பருத்தி மற்றும் மக்காச்சோளம் வீரிய ஒட்டு விதை உற்பத்தி, நவீன கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், காய்கறி விதை உற்பத்தி, தோட்டக்கலை பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில் நுட்பங்களும், பயிர் பெருக்க முறைகளும், காளான் வளர்ப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துதல், தரிசு நில மேம்பாடு, தேனீ வளர்ப்பு, மேலும் படிக்க..
தென்னை மரத்துகான டானிக்
தென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த டானிக் பயன்கள் பச்சையம் அதிகரிக்கும் ஒளிச்சேர்க்கை திறன் கூடும் பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் குரும்பை கொட்டுதல் குறையும் காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும் விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும் பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி கூடும் பயன்படுத்தும் முறை ஒரு வருடத்திற்கு இரண்டு பாக்கெட் (200 மி.லி.) டானிக்கை 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் மேலும் படிக்க..
ராஜஸ்தான் தரும் பாடங்கள்
நமக்கெல்லாம் தெரியும், ராஜஸ்தான், ஒரு வரட்சியான மாநிலம் என்று. மாநிலத்தின் பெரிய பகுதிகள், தார் பாலைவனம். மிச்ச இடங்களில், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள் முன்பு பயிரிட பட்டு வந்தன. சில வருடங்களாக, அந்த மாநிலம், “வளர்ச்சி” வழியை நாடியது. எல்லா விதமான தொழிற்சாலைகளும் வரவேற்க பட்டன. இதனால் என்ன ஆயிற்று? நில நீர் வெகு வேகமாக உருஞ்சபட்டு, இப்போது மாநிலத்தில் நீர் பற்றாகுறை தலை விரித்து ஆடுகிறது. புகை வண்டி மூலம், நீர் கொண்டு, மேலும் படிக்க..
நீர் பாசனத்தின் சில கசப்பான உண்மைகள்
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வந்த ஒரு செய்தியின் தமிழாக்கம் இதோ. 1 இந்தியாவில் உள்ள 62 மில்லியன் ஹெக்டரில், 60 % நிலநீர் மூலம் பாசனம் படுகின்றன. கால்வைகலாலோ, பெரிய பாசன திட்டங்கள் மூலமோ இல்லை. இது, இந்தியாவின் பசுமை புரட்சி மாநிலங்களான பஞ்சாப், ஹர்யானா, UP ஆகியவற்றுக்கும் பொருந்தும். எத்தனையோ அணைகள் கட்டி, எத்தனையோ கால்வாய்கள் கட்டி சுதந்திரம் வந்து 60 வருடம் பின்பு இந்தநிலை. 2 . 1991 முதல் 2007 வரை மேலும் படிக்க..
பாரம்பரிய விவசாயத்தை காப்பற்ற போராட்டம்
திருத்துறைப்பூண்டி: “”இந்திய பாரம்பரிய விவசாயத்தை காக்க வலியுறுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நாடாளுமன்றம் முன் மண் கொட்டும் போராட்டம் நடத்தப்படும்,” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறிவித்தார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் மாநில அளவிலான நெல் திருவிழா நடந்தது. இதைதொடர்ந்து விவசாயிகள் பங்கேற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. வேதாரண்யம் பைபாஸ் ரோடு அருகே விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு இயக்க மேலும் படிக்க..
அளவுக்கு மீறினால் உரமும் விஷம்!
அதிகபடியான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் உபயோக படுத்தி, வளர்ந்த தீவனங்களால் மாடுகளுக்கு உடல் நல குறைவு ஏற்படும் என்று இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருகிரர்கள். பஞ்சாபில் உள்ள வேளாண்மை பல்கலை கழகத்தில் உள்ள Dr குப்தா மேற்கொண்ட ஆராய்ச்சியில், 183 தீவனங்கள் சோதனை செய்யப்பட்டதில், பல, அளவுக்கு மீறி நெயத்ராத் (nitrate ) இருப்பது தெரிய வந்துள்ளது. அளவுக்கு மீறி உரமும், பூச்சி மருந்துகளும் செடியில் போட்டால், செடிகள், அவற்றை பயன் படுத்த தெரியாமல் செடியிலேயே மேலும் படிக்க..
இயற்கை எரு தயாரிப்பது எப்படி?
ஹர்யாநாவில் உள்ள சௌதரி சரண் சிங் வேளாண்மை பல்கலை கழகம், இப்போது, வீட்டிலேயே எளிமையாக, இயற்கை எரு செய்வது பற்றி அறிவுரை சொல்லி இருகிறார்கள். வீட்டில் உண்டாகும் காய்கறி கழிவுகள், தோலிகள் போன்றவற்றை தோட்டத்தில் ஒரு மூலையில் போட்டு வரவும். அதன் மேலேயே ஆடு புழுக்கை, சாணம் போன்றவற்றையும் ஒரு குவியலாக போட்டு வரவும். அவ்வபோது, நீர் ஊற்றி, இந்த கலவையை ஈரமாக வைத்திருக்கவும். இந்த குவியல் மீது ஒரு கருப்பு நிற பொலித்தின் ஷீட் மூலம் மேலும் படிக்க..
தர்மபுரிக்கும் சவுதி அரேபியாவுக்கும் என்ன சம்பந்தம்?
தர்மபுரி மாவட்டத்து விவசாயிகள், சவுதி பாலைவனத்தில் வளரும் பேரிச்சை பழம் மரத்தை நட்டிருகிரார்கள். இந்த வருடம், 2000 ஏகர் நிலம் பேரிச்சை நட்டிருகிரார்கள். பேரிச்சை நடுவதற்கு அவர்கள் கூறும் காரணம் – அதன் நீர் தேவை மிகவும் குறைவு. பூச்சிகள் வருவதில்லை என்பதே. ஆமாம், பூச்சிகள் எப்படி வரும்? வேறு தேசத்து மரத்திற்கு, இங்கே, இயற்கையான எதிரிகள் இல்லையே? பத்து வருடம் முன்பு, 3250 ருபாய் கொடுத்து சவூதியிலிருந்து கன்றுகளை கொண்டு வந்தனர். இப்போது, இங்கேயே, கன்றுகள் மேலும் படிக்க..
ஒரு இயற்கை பூச்சி கொல்லி
விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோலா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீம் என்ற இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து அறிமுகப் படுத்தப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம் (Entomology research center) இயங்கி வருகிறது. பூச்சியியல் விஞ்ஞானி பாதிரியார் இன்னாசி முத்துவை இயக்குனராக கொண்டு செயல்படும் இந்த ஆய்வு மையத்தில் பூச்சியியல் சம்பந்தப்பட்ட ஏராளமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சுற்றுசூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையிலும் இயற்கை பூச்சிகொல்லி மருந்தை மேலும் படிக்க..
தமிழ் நாட்டில் அரிசி புதிய மகசூல் சாதனை
ஒரு பக்கம் விவசாயிகளின் பிரச்சினைகளான மின் தட்டுப்பாடு போன்ற செய்திகள் வந்து கொண்டிரிந்தாலும், சில நல்ல செய்திகளும் வந்து கொண்டு தன்இருக்கின்றன.. திருச்சி அருகே உள்ள முசிறி வட்டத்தில் உள்ள சின்னதுரை என்ற விவசாயி தமிழ் நாட்டில் மிக அதிகமாக, ஒரு ஹெக்டருக்கு 17 டன் அரிசி சாகுபடி செய்து ஒரு சாதனை படைத்துள்ளார். அவர் பெரிய கொடுந்துரை என்ற கிராமத்தை சேர்ந்தவர். சின்னதுரை, செம்மை நெல் சாகுபடி (SRI ) திட்டத்தை பயன் படுத்தி இந்த மேலும் படிக்க..
விவசாயிகளுக்கான கால் சென்டர் (call center)
மத்ய அரசாங்கமும், தமிழ் நாடு அரசாங்கமும் சேர்ந்து, விவசாயிகளுக்கான கால் சென்டர் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். உங்களுடைய சந்தேகளங்களை, 18001801551 என்ற நம்பருக்கு போன் பண்ணி கேட்கலாம். இந்த சேவை , காலை 6 மணி முதல், மாலை 10 மணி வரை வேலை செய்யுமாம். இந்த சேவைகாக, 150 விவசாய பட்டதாரிகள் நியமன படுத்தி இருகின்றனர். நீங்கள் இந்த சேவையை உபயோக படுத்தி இருக்கிறீர்களா? உங்கள் கருத்து என்ன?
பார்தேனியம் எனப்படும் அரக்கனை ஒழிப்பது எப்படி?
பார்தேனியம் என்ற செடியை நாம் எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ரயில்வே track ஓரமாய், பஸ் ஸ்டான்ட்களில், ஸ்கூல் விளையாட்டு திடல்களில் என்று, எல்லா இடங்களிலும் பார்தேனியம் இருக்கிறது. இந்த செடி, நம் நாட்டு செடியே இல்லை. 1960 வருடங்களில், நம் நாட்டில், உணவு பற்றாக்குறை தலை விரித்து ஆடியது. அப்போது, அமெரிக்க, PL480 என்ற வகையில், அமெரிக்கா நாட்டில் இருந்து, கோதுமை இறக்கு மதி ஆயிற்று. அந்த கப்பல்களில், இந்த செடியின் விதையும், நம் நாட்டுக்கு வந்து மேலும் படிக்க..
இயற்கை உரமான பஞ்சகாவ்யா செய்வது எப்படி?
பஞ்சகாவ்யா பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுப்பது மட்டும் இல்லாமல் பூச்சிகளில் இருந்து காப்பற்றவும் செய்கிறது. இதை எப்படி உங்கள் வீட்டிலேயே செய்வது? முதலில், கோசானம் 7 kg, கோநெய் 1 kg இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் பாத்ரம், concrete டான்க் அல்லது மண் பானையில் கலக்கவும். இந்த கரைசலை நன்றாக காலையிலும், மாலையிலும் கலக்கவும். மூன்று நாட்கள் ஆன பின், கோமூத்திரம் 10 லிட்டர், நீர் 10 லிட்டர் சேர்க்கவும். இந்த கரைசலை 15 நாட்கள் வெய்திருக்கவும். மேலும் படிக்க..
ஒரு ஏக்கரில் கீரை சாகுபடி செய்து 2 லட்சம் ருபாய் சம்பாதிப்பது எப்படி?
தஞ்சாவூர் மாவட்டம் போன்னவரை கிராமத்தை சேர்ந்த குமார் என்ற விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தில் ஏழு வகை ஆன கீரைகளை சாகுபடி செய்து 2 லட்சம் ருபாய் மகசூல் செய்த விவரங்களுக்கு: 25 மே பசுமை விகடன் படியுங்கள். தொடர்புக்கு: குமார்: 09361025406
கீரை சாகுபடி
மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும். உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம். கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் மேலும் படிக்க..
தக்காளி சாகுபடி
மண் மற்றும் தட்பவெப்பநிலை : தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவம் ஏற்றது. மண்ணின் கார தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்கவேண்டும். வெப்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். விதைக்கும் காலம் : ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச். நடும் பருவம் : அக்டோபர் – நவம்பர், பிப்ரவரி – மேலும் படிக்க..
பசுமைப்புரட்சியால் மண்வளம் பாதிக்க படுமா?
“பசுமைப் புரட்சி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயத்தில் மண் வளத்தையும் நீர் வளத்தையும் சீரழித்து விட்டார்கள். ஆகையால் விவசாயத்தை மீண்டும் சீரமைத்தால் மட்டுமே இந்தியாவில் உணவு பற்றாக்குறையை போக்க முடியும்” என்று கூறினார், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார். “பாலாறு வடிநில பகுதியில் சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வேளாண் மை’ என்ற தலைப்பில், தமிழ்நாடு நீர்வள, நிலவளத் திட்டம் சார்பில் ஒரு நாள் கரு த்தரங்கு நடைபெற்றது. உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு கிராமத்தில் மேலும் படிக்க..
செம்மை நெல் சாகுபடி
செம்மை நெல் சாகுபடி எனபடுவது அரிசி சாகுபடி செய்யும் ஒரு புது முறை ஆகும். ஆங்கிலத்தில், இதற்கு SRI என்று பெயர். ஆப்ரிக்காவில் உள்ள மடகஸ்கார் என்ற இடத்தில இது கண்டு பிடிக்க பட்டால், இதற்கு “மடகஸ்கார்” முறை என்றும் அழைக்க படுகிறது. தமிழ் நாட்டில் இதை “செம்மை நெல் சாகுபடி” என்று அழைக்கிறோம். இதோ, செம்மை நெல் சாகுபடி பற்றிய கேள்வி பதில்கள்: “செம்மை நெல் சாகுபடி முறை” என்றால் என்ன? நடைமுறை நெல் சாகுபடி மேலும் படிக்க..
தமிழ்நாட்டில் உள்ள விவசாய ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் விவரங்கள்
தமிழ்நாடு விற்பனை குழுக்களின் பட்டியல்: நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம் வ.எண் விற்பனைக்குழு தொலைபேசி எண் விற்பனைக் கூடத்தின் எண்ணிக்கை 1. காஞ்சிபுரம் 04112222811 14 2. வேலூர் 04162220713 12 3. திருவண்ணாமலை 04175252397 16 4. கடலூர் 041422230037 10 5. விழுப்புரம் 04146229944 17 6. சேலம் 04272477467 19 7. தருமபுரி 04342260971 16 8. கோயமுத்தூர் 04222312477 18 9. ஈரோடு 04242252702 24 10. திருச்சி 04312422167 மேலும் படிக்க..
வெண்டைக்காய் சாகுபடி
இரகங்கள் : கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார். மண் மற்றும் தட்பவெப்பநிலை : வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர் நீண்ட நேர வெப்ப நாட்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மேலும் படிக்க..
மரபணு வாய் பூட்டு சட்டம்!
மத்ய அரசாங்கம், ஒரு புதிய சட்டம் கொண்டு வர முயற்சிகிறது. BT கத்தரிக்காய் பயிர் இட அனுமதி வழங்குவதை எதிர்த்து நாடு முழுவதும் போரட்டங்கள் நடந்த பின், அதற்கு இடை கால தடை விதிக்க பட்டுள்ளது. இதை உடைத்து ஏறிய பின்னப்பட்ட சட்டமாக, புதிதாக, Biotechnology Regulatory Authority of India (BRAI ) என்று புதிய ஆணையம் உருவாக்க மத்ய அரசு மசோதா தயார் செய்துள்ளது. இந்த மசோதா படி: – மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மேலும் படிக்க..
2 -3 ஆண்டுகளில் மாமரம் காய் கைக வைப்பது எப்படி?
புதுமை விவசாயி குழந்தைவேலு எப்படி இதை சாதித்தார் – தெரிந்து கொள்ளுங்கள் – ஹிந்து நாளிதழின் சிறப்பு போட்காஸ்ட் MP3 மூலம்.
அரிசியை வேக வைக்காமல் சாதம் ஆக்க முடியுமா?
கட்டக் நகரில் உள்ள மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம், (Central Rice Research Institute ) ஒரு புது விதமான அரிசி கண்டு பிடுத்திருக்கிறது. இந்த அரிசியை, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்தால் போரும். நல்ல வேக வெய்த்த சாதம் போல அந்த அரிசி மாறி விடுகிறது. இந்த அரிசிக்கு அகோநிபோஹ்ரா என்ற பெயர் இட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த அரிசியில் amylose மிகவும் குறைந்து இருப்பதால், வேக வைக்க தேவை இல்லையாம். அரை மணி மேலும் படிக்க..
மாவில் இலை, பூ, பிஞ்சு கருகல், கட்டுபடுத்துவது எப்படி?
மாவில் இலை, பூ, பிஞ்சு கருகல், பழ அழுகல் நோயானது ஒரு வகை பூசணத்தின் (கோலிட்டோ டிரைகம் கிளியேஸ் போராய்ட்ஸ்) ஏற்படுகிறது. அறிகுறிகள்: இந்நோய் முதலில் இலைகளைத் தாக்கி வட்டவடிவ மரவண்ண புள்ளிகள் ஏற்பட்டு நாளடைவில் இலை முழுவதும் பரவி கருகி உதிர்ந்துவிடும். முதிர்ச்சியடைந்த கிளைகளும் நுனிகளும் காயங்கள் மூலம் தாக்கப்பட்டு கருகி இறந்துவிடும். இந்நோய் பூக்கள் உருவாகும்போது தாக்குவதால் பூக்கள் கருகி உதிர்ந்துவிடும். பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து அறுவடை செய்யப்பட்டபின் மாம்பழத்தில் ஒழுங்கற்ற கரும்புள்ளிகள் நிறைய தோன்றும். மேலும் படிக்க..
மாம்பழ பூச்சிகளைக் கட்டுபடுத்துவது எப்படி?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மாம்பழ பூச்சிகளைக் கட்டுப்படுத்த இலவச செயல் விளக்கம் நடத்தப்படும். டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம், தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் சார்பில் ஆத்மா திட்டம் ஆகியன இணைந்து மாம்பழ பூச்சி அழிக்கும் செயல் விளக்கத் துவக்க விழா மூங்கில்புதூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தத்துப்பூச்சி, பழ ஈ, மாவுப் பூச்சி, தண்டு துளைப்பான் பூச்சிகளால் மா பாதிக்கப்பட்டாலும், பழ ஈ முதிர் தருவாயில் உள்ள காய்களைத் தாக்கி ஊற்பத்தியை மேலும் படிக்க..
பீட்ரூட் எப்1 ஹைபிரிட்
ஈஸ்ட் வெஸ்ட் சீட்ஸ் இண்டர் நேஷனல் லிமிடெட் (East West Seeds International) வழங்கும் இந்த வீரிய ஒட்டுரகம் வெயில் காலத் திலும் வெடிப்பதில்லை என்று அனுபவ விவசாயி ப.வேலுச் சாமி தெரிவிக்கிறார். ஏக்கருக்கு தேவை 2 கிலோ விதை. விலை 400 கிராம் 530 ரூபாய். அக்டோபர்-நவம்பரில் நட்டால் ஏக்கருக்கு 14 மெட்ரிக் டன் விளைச்சல் நிச்சயம் என்கிறார் விவசாயி. ஜனவரி-பிப்ரவரி பயிருக்கு 14 மெ.டன் விளைச்சல், கோடைப்பயிருக்கு 6 மெ.டன் விளைச்சல் பெறலாம். ஜனவரி-பிப்ரவரி மேலும் படிக்க..
திருத்துறைப்பூண்டி இயற்கை விவசாயப் பண்ணையில் பாரம்பரிய நெல் திருவிழா
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாயப் பண்ணையில் வரும் 22ஆம் தேதி பாரம்பரிய நெல் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார். காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் என். மார்க்கண்டன், பாரம்பரிய நெல் பிரசார ஒருங்கிணைப்பாளர் உஷா, நாகை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் சிக்கல் அ. அம்பலவாணன், விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் சேரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விதை நெல் மேலும் படிக்க..
SMS மூலம் பயிர்களுக்கு நீர்!
உங்கள் பயிர்களுக்கு நீர் விட, நீங்கள், தினமும் வெயிலில் மூன்று நான்கு கிலோமீட்டர் நடந்து செல்கிறீர்களா? அப்படி நடந்து சென்றால், அங்கே, மின்சாரம் இல்லாமல் இருப்பதை பார்த்து, வெறுத்து போய் திரும்பி வந்ததுண்டா? இப்போது, இதற்கு ஓர் விடிவு கிடைத்திருகிறது. பூனாவில் உள்ள ஒரு கம்பெனி, மொபைல் போன் மூலமாக மோட்டார் பம்ப் போடவோ, அணைக்கவோ செய்ய முடியும் ஒரு இயந்தரத்தை கண்டு பிடித்திருகிறது. இதன் மூலம், ஒரு விவசாயி போன் மூலம், பம்ப் இருக்கும் மேலும் படிக்க..
வேளாண்மை பற்றிய டிவி நிகழ்ச்சிகள்
பொதிகை டிவி – காலை மற்றும் மாலை 6 முதல் 6 :30 மணி வரை: பொன் விளையும் பூமி மக்கள் டிவி – காலை மற்றும் மாலை 6 :30 முதல் 7 மணி வரை: மலரும் பூமி நன்றி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்
Hello world!
Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!